ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்!

2 posters

Go down

பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்! Empty பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்!

Post by சிவா Sat May 16, 2009 11:11 am

பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்! Azhagi10
‘‘வருகிற ஜுன் 22 ஆம் தேதி அன்று தமிழகத்தின் தலைப்பு செய்தியை முன்கூட்டி, இப்பவே தர்றேன். எழுதிக்கோங்க.’’ கம்பீரமாக வந்த ரகசிய தெனாலிக்கு ஒரு பொக்கேயை நீட்டினோம். ‘இன்னும் நியூஸே சொல்லலை. அதுக்குள்ள பொக்கேவா?’ என்று மிரண்டார்.

‘‘சொல்லப்போற நியூஸுக்கு இல்லை. ஏற்கனவே சொன்ன நியூஸுக்குதான் இந்த பூங்கொத்து. ‘ரத்தான கருணாநிதி--- - சோனியா காந்தி பிரச்சாரம் கூட்டம் மே 10ஆம் தேதி மீண்டும் அரங்கேறும்’ என்று நீங்க முதல்ல சொன்ன செய்திதான் இரண்டு நாள் கழித்து, தமிழகத்தில் தலைப்பு செய்தி. துல்லியமாகவும், துரிதமாகவும் செய்தி தர்ற ரகசிய தெனாலியை நிறைய வாசகர்கள் பாராட்டினாங்க. அதன் வெளிப்பாடுதான் இந்த பூங்கொத்து’ என்று சொன்னதும் பூரித்துப்போனார். ‘அது ஜுஜுபி மேட்டர். அதுக்கே இவ்வளவு பாராட்டு தர்றீங்க. இப்ப சொல்லப்போற மேட்டருக்கு நீங்க பார்ட்டியே வைக்க வேண்டி வரும்’ என்று தொண்டையைச் செருமி அதிரடியாக ஆரம்பித்தார்.


‘‘தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகன், விஜய்க்கு வருகிற ஜுன் 22 ஆம் தேதி 35--வது பிறந்தநாள். அன்று முறைப்படி புது கட்சி தொடங்குகிறார் இளைய தளபதி. ஆந்திராவில் சிரஞ்சீவி தன் கட்சிக்கு வைத்த பெயரான ‘பிரஜா ராஜ்ஜியம்’ போன்றே ஒரு பெயரைத் தேடும் படலம் நடந்து கொண்டிருக்கிறது. ‘தமிழக மக்கள் ராஜ்ஜியம், தமிழக மக்கள் அரசு, தமிழக மக்களாட்சி கழகம்’ ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பெயரோ, அல்லது ‘மக்கள்’ என்ற சொல்வரும்படியான ஒரு கட்சியின் பெயரையோ விஜய் தன் பிறந்த நாளன்று அறிவிப்பார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கினாலும், 2016&ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்தான் இளைய தளபதி மக்கள் தளபதியாக தேர்தல் களத்தில் குதிப்பார். காரசார பேட்டிகளுக்கு இப்போதே தயாராகி விடுங்கள்’ என்று திக்கு முக்காட வைத்த ரகசிய தெனாலியை வைத்த கண் வாங்காமல் பார்த்தோம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்! Empty Re: பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்!

Post by சிவா Sat May 16, 2009 11:12 am

பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்! Azhagiya-Tamilmagan-223
‘காதைத் திறந்து நியூஸ் கேளுங்கப்பா. வாயைத் திறந்து கேட்டா தூக்கம் வருதுன்னு அர்த்தம்’ என்று கலாய்த்தவரிடம், ‘தீடீர்னு இப்படி சொன்னா நம்ம முடியுமா?’ என்று ஆதாரங்களைக் கேட்டோம்.
‘‘பாராட்டி, பொக்கே கொடுத்துட்டு இப்ப சந்தேகப்படுறீங்களே. நம்பிக்கை யான, நடுநிலையான செய்திகளைத் தவிர தெனாலிக்கு வேறெதுவும் தெரியாது. ‘விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்’ என்று விஜய் அப்பா பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தார்.


ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று விஜய் ரசிகர்மன்றங்கள் களத்தில் இறங்கின. விஜய் ரசிகர்மன்றத்திற்கு என்று தனியாகக் கொடி வெளியிட்டார்கள். சமீபத்திய விஜய் படங்களில், ‘தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து, அகதியான மக்களுக்கு அமைதியான வாழ்வு வேணும்’னு எம்.ஜி.ஆர் கணக்கா ஓப்பனிங் பாட்டு வெச்சாங்க. ‘ரஜினி வழிதான் நம்ம வழினு சொல்லிட்டிருந்தவங்க, ‘வில்லு’ படத்தில் எம்.ஜி.ஆரை காட்டி, ‘தலைவர் வழிதான் இனிமே நம்ம வழி’னு பஞ்ச் டயலாக் பேசினாங்க. இவ்வளவுக்கு அப்புறமும் ‘திடீர் அரசியல்’னு சொன்னா எப்படி?

‘நடந்தது என்ன?’னு விஜய் ரசிகர் வட்டாரத்திலிருந்து வந்த செய்தியை அப்படியே தருகிறேன். நம்பினால் நம்புங்கள்’’ என்று செய்திக்கான பின்னணியை தெனாலி விவரிக்கத் தொடங்கியதும் அடுத்தமுறை அவருக்கு பூக்கடையையே வாங்கித் தரவேண்டும் என்று தோன்றியது.

‘‘கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் பிறந்த நாளை கொண்டாடும் விதம் பற்றி, விஜய்க்கு சொந்தமான கல்யாண மண்டபத்தில் ரசிகர் மன்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநிலம் முழுவதுமிருந்து விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர்தான் கூட்டத்திற்கு தலைமை. வரும்போதே ரசிகர்களில் நாலு பேர், வெள்ளை நிற கேனில் பெட்ரோலோடு வந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த ரசிகர் மன்ற நிர்வாகிகளும் வைத்த முதல் கோரிக்கை, ‘இந்த பிறந்த நாளில் தளபதி தனிக் கட்சி தொடங்கணும் என்பதுதான். அந்த அறிவிப்பை பெரிய விழா வெச்சு சொல்லணும்’ என்று ஆர்ப்பரித்திருக்கிறார்கள் ரசிகர்கள். ‘அவர் சொன்னா கேட்க மாட்டேங்கிறாரே?’ என்று எஸ்.ஏ.சி. சொன்னதும் வெள்ள நிற கேன் வைத்திருந்தவர்கள் பெட்ரோலை ஊற்றி இங்கேயே தீக்குளிப்போம் என்று பீதியைக் கிளப்ப, அடுத்த அரை மணிநேரத்தில் விஜய் அந்தக் கூட்டத்தில் ஆஜர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்! Empty Re: பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்!

Post by சிவா Sat May 16, 2009 11:13 am

பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்! Azhagiya-Tamilmagan-221

1992&ஆம் ஆண்டு தனது அப்பா எஸ்.ஏ.சி. இயக்கத்தில் ‘நாளைய தீர்ப்பு’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் விஜய். ‘பையனுக்கு டான்ஸ் நல்லா வருது’ என்று சொல்வதைத் தவிர ஆரம்பத்தில் விஜய்க்கு எந்த அடையாளமும் இல்லை. ‘ரசிகன்’ போன்ற படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றாலும் ஹீரோ இமேஜ் விஜய்க்கு வராமலேயே இருந்தது. இடையில் அஜீத் புகுந்து வெளுத்து வாங்க ஆரம்பித்தார். ‘பூவே உனக்காக...’ படத்தில் விஜய்யின் நடிப்பு மக்களிடம் வரவேற்பு பெற்றது.


எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் நடிகராக அடையாளம் கிடைத்தது. ‘திருமலை’ படத்தில் மசாலா கமர்ஷியல் அவதாரம் எடுத்துப் பார்த்த விஜய்க்கு கைமேல் பலன். ஹீரோவாக இருந்தவர் ‘கில்லி’ படத்திற்குப் பிறகு நம்பர்&ஒன் கமர்ஷியல் ஹீரோவானார். ‘திருப்பாச்சி, சிவகாசி’ என்று சென்டிமென்ட் கண்ணீரையும் ‘போக்கிரி’ போன்ற ஆக்ஷன் காரத்தையும் அள்ளி வீசியதும், ரசிகர் மன்றங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. அஜித் தொடர் சரிவைச் சந்தித்ததும் விஜய்க்கு பெரிய ப்ளஸ்.
திருப்பாச்சி படத்திற்கு முதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கட் கிடைக்கவில்லை என்று தீக்குளிக்கும் அளவு வெறித் தனமான ரசிகர்கள் உருவானார்கள். நடிகராக நம்பர்&ஒன் இடத்திற்கு கொண்டுவந்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு, பையனை அரசியலில் நம்பன்&ஒன் ஆக்கி முதல்வர் நாற்காலியில் உட்காரவைத்து அழகு பார்க்க ஆசை.

அப்பாவுக்கு ‘நோ’ சொல்லி, ஆரம்பத்தில் அரசியல் பிரவேசத்தைக் கடுமையாக மறுத்தார் விஜய். ‘அடிக்க அடிக்க அம்மியும் நகரும்’ என்று தெரிந்த எஸ்.ஏ.சி, விஜய் மனதை, ரசிகர்களின் தீவிரத்தை எடுத்துச் சொல்லிக் கரைத்தார். இரண்டு வாரத்திற்கு முன்பு அதற்கு உரிய பலன் கிடைத்தது.


ரசிகர் மன்றம் ஆரம்பித்து இதுவரையில் அரை மணி நேரம், ஒரு மணி நேரத்திற்கு மேல் ரசிகர்களைச் சந்திக்காத விஜய், அன்று ஏழு மணி நேரத்திற்கு மேல் ரசிகர்களின் கருத்தைக் கேட்டிருக்கிறார். ‘அரசியல் கட்சி ஆரம்பிச்சா மக்கள் ஏத்துக்குவாங்களா?’ என்று முதல் கேள்வியை வைத்தார் விஜய். ‘ஒத்துக்குவாங்க’ என்று கோரஸாக கத்தியிருக்கிறார்கள் ரசிகர்கள். ‘ரஜினி பின்னால பெரிய கூட்டமே இருந்துச்சு. அவர் அரசியலுக்கு இப்ப வர்றேன், அப்புறம் வர்றேன்னு சொல்லிகிட்டே இருந்ததார். மத்தவங்ககிட்ட அவர் ரசிகர்கள் அடிவாங்கிட்டே இருந்தாங்க. இன்னும் கொஞ்ச நாள் போனா எங்களுக்கும் அதேதான் நிலைமை. எம்.ஜி.ஆர்., ரஜினிக்கு பிறகு உங்க பின்னாலதான் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு. எம்.ஜி.ஆர். மாதிரி வெற்றி ரூட் எடுத்தே ஆகணும். அதுவும் இந்தப் பிறந்த நாளுக்கே ஆரம்பிச்சாகணும்’ என்று ரசிகர்கள் சொல்லச் சொல்ல, விஜய் அமைதியாய் கேட்க கேட்க... எஸ்.ஏ. சந்திரசேகர் முகத்தில் ஆயிரம்வாட்ஸ் வெளிச்சம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்! Empty Re: பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்!

Post by சிவா Sat May 16, 2009 11:14 am

பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்! Azhagiya-Tamilmagan-228

எதிர்ப்பார்த்ததைப் போலவே விஜய் ‘பச்சைகொடி’ காட்டிவிட்டு, ‘ஆகவேண்டியதைப் பாருங்க’ என்று சொல்லி பறந்துவிட்டார். சூடு ஆறாமல் முடிவுகளை எடுத்துவிடுவது என்று பரபரத்த எஸ்.ஏ.சி. அங்கேயே கட்சிகான பெயர், கொடி, நாள் முதலானவற்றை பேசி தீர்மானித்தார்.


2015 வரை விஜய் நடிப்பில் கவனம் செலுத்துவது என்றும், அதுவரை அவர் கட்சியின் நிறுவனராக இருப்பது என்றும், 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அவரை நிறுத்துவது என்றும் உடனடி முடிவுகள் எடுத்து அங்கிருந்தே தொலைபேசியில் விஜய்க்கு தெரிவித்தார் எஸ்.ஏ.சி. 2015வரை எஸ்.ஏ. சந்திரசேகரே கட்சியின் தலைவராக இருப்பார். கட்சியை கிராமங்களுக்கு எல்லாம் கொண்டு போய் சேர்க்கிற வேலையை அவரே முன் நின்று நடத்துவார். ‘ரசிகர்களுக்கு இளைய தளபதியாக இருந்தவர், இனி உங்களுக்கு மக்கள் தளபதியாக இருப்பார்’ என்று பகிரங்கமாக கட்சிப் பணிகளை ரசிகர் மன்றங்கள் மூலம் செய்யப் போகிறார்களாம். இப்போதிருப்பதுபோல பத்து மடங்கு உறுப்பினர்களை அதிகமாக சேர்ப்பது, 2016&இல் ஆட்சியைப் பிடிப்பதற்கான அஸ்திவாரங்களைப் போடுவது, இடைப்பட்ட காலத்தில் விஜய்யை அரசியலுக்கு ஏற்ற வகையில் பழக்குவது என்று அதிரடி டார்கெட்டுகளை முடிவு செய்திருக்கிறார்கள்.

மற்ற கட்சிகளில் இரண்டாம் இடத்தில், மூன்றாம் இடத்தில் முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிற அரசியல் கட்சி தலைவர்களை ஜுன் 22&ஆம் தேதியே விஜய் கட்சியில் சேர்ப்பது குறித்த பேச்சு வார்த்தைகளும் தொடங்கிவிட்டன. கட்சிப் பணிகளுக்கு ஆகும் மொத்த செலவுகளை ஏற்றுக்கொள்ள தமிழகத்தின் ஒரு நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் முன்வந்திருக்கிறார். இன்னொரு நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் போட்டியில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இரு பல்கலைக் கழகங்களுமே சென்னையை ஒட்டி இருக்கின்றன. அதில் ஒன்று கொஞ்ச நாளுக்கு முன்பு ‘டாக்டர்’ பட்டம் கொடுத்து அச்சாரம் போட்டது.



ரசிகர்கள் ரெடி... பணம் ரெடி... கட்சி ரெடி... கொடி ரெடி... கொள்கை? அதைத்தான் கூடி விவாதித்து வருகிறார்கள். ‘நிஜமான மக்களாட்சியை தருவதே நோக்கம்’ என்ற முழக்கத்தோடு முதல் நாளைத் தொடங்குவார்கள் என்று தெரிகிறது. சினிமாவில் இருந்த தளபதி விஜய், அரசியலில் தலைவராவதில் மற்ற அரசியல் கட்சிகளின் ரியாக்ஷன் என்னவென்பது அடுத்தடுத்த தெனாலியின், அதிரடி சரவெடி பேட்டிகளில் தெரிய வரலாம்’ என்று சுடச்சுட செய்தி பரிமாறி ரகசிய தெனாலிக்கு பெரிய சல்யூட் வைத்தோம்.



‘விஜய் மேட்டரைக் கேட்டதும் ரித்திஷ் கதையை கேட்க மறந்துட்டீங்களே? நீங்க மறந்தாலும் நான் மறக்கலை... எலெக்ஷன் ரிசல்ட் வர்றதுக்கு முன்னாலை நிச்சயம் சொல்லிடுறேன்’ என்று கண்ணுக்கு முன்னால் மறைந்துபோனார் தெனாலி.


http://தெனாலி.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்! Empty Re: பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்!

Post by ரூபன் Sat May 16, 2009 2:00 pm

ohhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

niyuma vijai கூடாது

appa thala éppa
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்! Empty Re: பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்!

Post by Guest Thu Jul 09, 2009 9:09 am

சூப்பர் அருமையான தகவல்
avatar
Guest
Guest


Back to top Go down

பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்! Empty Re: பிறந்த நாளில் கட்சி துவங்குகிறார் விஜய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum