ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 3:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:13 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:52 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:19 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:08 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 1:12 pm

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 11:10 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 11:38 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:16 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:36 pm

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:31 pm

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:30 pm

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:29 pm

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:26 pm

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:24 pm

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:23 pm

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:21 pm

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 1:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sat Oct 26, 2024 1:54 am

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Sat Oct 26, 2024 1:48 am

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 9:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 8:02 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:19 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:18 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:17 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:16 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:16 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:14 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 2:09 pm

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:49 pm

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:48 pm

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:48 pm

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:46 pm

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:45 pm

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:44 pm

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:43 pm

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:42 pm

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:41 pm

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:39 pm

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:38 pm

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:37 pm

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 1:36 pm

Top posting users this week
கண்ணன்
மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி??? Poll_c10மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி??? Poll_m10மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி??? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி???

Go down

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி??? Empty மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி???

Post by சம்சுதீன் Fri Feb 26, 2010 1:16 am

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
இயந்திரத்தனமான இன்றைய உலகில் ஓடி ஓடி பணம் சம்பாதிக்கும் அவதியில் எங்கள் நிம்மதி, மகிழ்ச்சி என்பவற்றை பெரும்பாலும் இழந்து தவிக்கிறோம். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வோசிங்டனின் மனைவி மார்த்தா வோசிங்டன், எங்கள் மகிழ்ச்சி நாங்கள் இருக்கும் சூழ்நிலையில் மிகவும் குறைந்த அளவிலேயே தங்கியிருப்பதாகவும் ஒவ்வொரு விடயத்தையும் நாம் எவ்வாறு எடுத்துக்கொள்கிறோம் என்பதில் அதாவது எங்கள் பார்வையில் தான் பெருமளவில் தங்கியிருப்பதாகவும் கூறிய பொன்மொழியொன்றை இணையத்தளத்தில் வாசித்த ஞாபகம்.என் அனுபவத்தில் கூட அவர் கூறியது மிகவும் உண்மை என்று அறிந்திருக்கிறேன்.அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள் நாங்கள் எங்களை வெற்றியாளர் என்று நினைத்தால் உண்மையிலேயே வெற்றியாளர் ஆகின்றோம் என்று.அதற்காக நினைத்தால் மட்டும் அப்படி ஆகிவிடமுடியுமா என்று நீங்கள் என்னிடம் கேட்கக்கூடும்.யார் அவ்வாறு திடமாக நம்புகிறார்கள்.உண்மையான ஊக்கம்,அர்ப்பணிப்பு,விடாமுயற்சி,தன்னம்பிக்கை உள்ள ஒருவனே அவ்வாறான ஒரு திட நம்பிக்கையைக்கொண்டிருப்பான். மற்றவர்கள் நான் இதில் வெற்றி பெறுவேனோ இல்லை தோற்றுவிடுவேனோ என்று சந்தேகத்துடனயே இருப்பார்கள்.வெற்றி மட்டுமல்ல எங்கள் மகிழ்ச்சியும் கூட எங்கள் எண்ணங்களில் தான் தங்கியிருக்கிறது.பிரச்சினையில் இருக்கும்போது கூட நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக எங்கள் மனது நம்பினால் உண்மையிலேயே மகிழ்ச்சியுள்ளவர்களாக மாறுவோம்.பிரச்சினைகளை யோசித்து எதுவும் நடக்கப்போவதில்லை என்ற சந்தர்ப்பத்தில் எதற்காக சோகத்தை வரவழைத்து சுயபச்சாதாபத்தையோ இல்லை மற்றையவர்களின் கழிவிரக்கத்தையோ தேடவேண்டும்.நண்பர் புல்லட்டின் பதிவு ஒன்றில் கூட இது சம்பந்தமாக ஒரு சம்பவத்திற்கான எங்கள் மனதின் மறுதாக்கம் பற்றி ஆராய்ந்திருந்தார்.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி??? Empty Re: மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி???

Post by சம்சுதீன் Fri Feb 26, 2010 1:17 am

"யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்........"என்ற பாடல் வரி தான் இங்கே என் ஞாபகத்துக்கு வருகிறது.எம்மில் பெரும்பாலோனோர் கொண்டிருக்கக்கூடிய தவறான எண்ணம் என்னவென்றால் கவலைகள்,கஸ்டங்கள் வரும்போது ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று ஏங்கித்தவிப்பதுதான்.தெருவில் படுத்துறங்கும் பிச்சைக்காரன் தொடக்கம் பங்களாவில் பஞ்சணையில் படுத்துறங்கும் கோடீசுவரன் வரைக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஏதோவொரு வகையில் வாழ்க்கையில் போராட்டம் இருக்கத்தான் செய்யும்.இதை நாம் முதலில் புரிந்துகொண்டாலே எமக்குள்ள கவலையில் பாதி குறைந்து விடும்.


எங்கள் வாழ்க்கையில் ஏதாவதொரு பிரச்சினையை எதிர்கொள்ள நேரும்போது "இவ்வாறு நடந்துவிட்டதே " என்று ஏங்கித்தவித்தே எங்கள் ஆயுளில் பாதியைக்கழித்துவிடுகிறோம்.நடந்ததை நினைத்து ஏங்குவதால் இனி நடக்கப்போகும் எதையும் எம்மால் மாற்றிவிடமுடியாது.எனவே எதற்காக இந்த ஏக்கம் தவிப்பு என்று நம்மை நாமே வருத்திக்கொள்ளவேண்டும்(இங்கு நான் சொல்வது பொதுவான விடயங்களை மட்டுமே.நெருங்கிய உறவொன்றின் பிரிவு,இழப்பு போன்ற உணர்வு சம்பந்தப்பட்ட விடயங்களை இந்த வகுப்புக்குள் அடக்கிவிடமுடியாது....அந்தக்காயங்களை ஆற்றுவதற்கு காலம் தான் சிறந்த மருந்து).நாவல் ஆசிரியர் ரமணி சந்திரன் அவர்களின் எழுத்துக்களில் கதைகளில் எனக்கு பிடித்த முக்கியமான விடயமே அவர் கதைகளில் வரும் எந்த கஸ்டம் வரும்போதும் சலித்துவிடாமல் வாழ்க்கையோடு போராடிவெற்றிபெறும் அவரின் நாயகிகள் தான்.முன்பெல்லாம் நான் கூட இதே தவறைத்தான் செய்துவந்திருக்கிறேன்.சிறிய கஸ்டம் வரும்போதும் மனமொடிந்து அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் சோர்ந்து உட்கார்ந்துவிடுவேன்.ஆனால் அனுபவப்பாடங்கள் மூலமாக என்னை நானே வெகுவாக மாற்றிக்கொண்டிருக்கிறேன்.


இவ்வாறு பலவாறு சொன்னாலும் நடைமுறைப்படுத்துவதென்பது அவ்வளவு இலகுவானதன்று.கஸ்டங்கள் கவலைகள் வரும்போது மனம் சோர்ந்துபோய்விடுவது தவிர்க்கமுடியாத ஒன்றே.எனவே முழுக்க முழுக்க அவற்றை மறந்துவிடமுடியாவிட்டாலும் குறைந்தபட்சம் கவலை என்னும் கறையான் எங்கள் மனப்புத்தகத்தை அரித்துவிடாமல் பார்க்கவேண்டியது எங்கள் பொறுப்பாகும்.அதற்காக பிரச்சினைகள் வரும்போது யாரையும் ஓடியொளியும்படி நான் சொல்லவில்லை.தைரியமாக எந்த சவாலையும் எதிர்கொள்ளுங்கள்.தீர்க்கக்கூடிய வழிவகைகளை ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்துங்கள்.அதற்கு அப்பால் அவற்றையெல்லாம் மனதில்போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி??? Empty Re: மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி???

Post by சம்சுதீன் Fri Feb 26, 2010 1:18 am






இவ்வளவு நேரமும் பிரச்சினைகளில் இருந்து அவற்றின் தாக்கங்களிலிருந்து எவ்வாறு விலகி இருக்கலாம் என்று பார்த்தோம்.இத்தனையையும் தாண்டி எங்கள் மனதைக்காயப்படுத்தக்கூடிய சம்பவங்கள் நிகழக்கூடும்.அவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பார்ப்போம்.


ஓய்வாக இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்று சொல்வார்கள்.ஆகவே மனதுக்கு சிறிதும் ஓய்வு கொடுக்காது எந்த நேரமும் ஏதாவது உங்களுக்குப்பிடித்த வேலையைச்செய்தவண்ணம் இருங்கள்.எழுத்துத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் நிறைய வாசிக்கலாம்.அது மட்டுமல்ல குடில்(blog)போன்றவற்றை அமைத்து உங்கள் உணர்வுகளை படைப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.மனதுக்கு ஆறுதல் தரக்கூடிய விடயங்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று இருக்கக்கூடும்.நானென்றால் மனதுக்குப்பிடித்த பாடல்களைக்கேட்பேன்.சில நேரங்களில் வாய்விட்டு பாடுவதும் உண்டு.(இந்த விசப்பரீட்சையை உங்கள் வீட்டில் செய்யமுன் அதற்குரிய சூழல் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.ஏனென்றால் ஒரு கிலோ பஞ்சு வாங்கி வீட்டுக்காரருக்கு கொடுத்து கழுதைகள் உள்ளே புகாத வண்ணம் குளியலறைக்கதவு,யன்னல்கள் பலமாக இருக்கின்றன என்பவற்றையெல்லாம் பரிசோதித்துவிட்டே நான் அதை செய்வேன்...ஹி..ஹி..ஹி... ).சில நேரங்களில் உணர்வுகளை கவிதையாக (கவிதை என்ற பெயரில் வரும் கிறுக்கல்கள் தான்) வடிப்பேன்....இப்போதெல்லாம் ஓய்வாக இருக்கும் நேரங்களில் என்னுடைய நினைப்பு முழுவதும் என்னுடைய குடிலில் அடுத்து என்ன எழுதலாம் என்பது பற்றி தான் சிலருக்கு சித்திரம் வரைவதில் ஆர்வம் இருக்கக்கூடும்.இன்னும் சிலருக்கு இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் இருக்கும்.எதுவாயிருந்தாலும் உங்கள் மனதுக்கு திருப்தி சந்தோசம் அளிக்கக்கூடிய விடயங்களை தேர்ந்தெடுத்து செய்யுங்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி??? Empty Re: மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum