ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பிச்சை

3 posters

Go down

காதல் பிச்சை Empty காதல் பிச்சை

Post by சிவா Tue Feb 23, 2010 12:45 am

காதல் பிச்சை Scan0005a

பிச்சைமுத்து தன் காதலிக்காக கோவில் வாசலில் காத்திருந்தான். `கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' இது முதுமொழி. ஆனால், பிரசித்தி பெற்ற கோவில் உள்ள ஊரில் குடியிருப்பதில் பல சங்கடங்கள். நேரடி அனுபவங்கள் கிடைக்காதவர்கள் இவற்றை உணரமுடியாது.

ஆனால் இடைïறுகளுக்கிடையே ஒரே ஒரு சவுகரியம்! காதலியைக் காதலன் கோவிலுக்கோ குளக்கரைக்கோ வரச் சொல்லிக் கூட்டத்தோடு கூட்டமாக யாருக்கும் தெரியாமல் உள்ளூரிலேயே சந்தித்துக் கொள்ளலாம்.

இதோ நமது பிச்சைமுத்துவும் கோவில் வாயிலருகே காதலி பிச்சையம்மாளுக்காகத்தான் காத்திருக்கிறான்.

பிச்சைமுத்து இளங்கலை படிக்கும் இளைஞன். ஒவ்வொருவருக்குக் காதல் ஒவ்வொரு காரணத்துக்காக வரும். உண்மைக்காரணம் ஒன்றே ஒன்றுதான். சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். வேண்டாம்!

பெரும்பாலும், பொதுவாகக் கண்களில் புதிதாகத் தோன்றும் ஒரு ஜொலிப்பே காதலுக்குக் காரணமாகும்.

அப்புறம் முகம், மூக்கு, முன்னழகு, பின்னழகு, சுருள்முடி, நீள்சடை இத்யாதி...

அன்பு, பண்பு, அறிவு, திறமை, வீரம், நெஞ்சின் ஈரம் இவை மிக அரிதாக உண்மைக் காதலின் காரணங்களாவதும் உண்டு.

ஆனால், பிச்சைமுத்துக்கோ, பிச்சையம்மாள் என்கிற அவள் பெயர்தான் காதல் தோன்றக் காரணம். அவனுக்கு முதலில் பிடிக்காத பிச்சை, இப்போது, பிடித்த பிச்சை ஆயிற்று.

அவன் பெற்றோர்க்கு எட்டு ஆண்டுகள் வரை குழந்தை பிறக்கவில்லை. பிறகு தான் அவன் பிறந்தான். பல கடவுள்களிடம் பிச்சை கேட்டுப் பிறந்ததால் பிச்சைமுத்து என்று பெயர் சூட்டினார்கள்.

பிச்சை என்னும் சொல்லின் பொருள் தெரிந்ததிலிருந்து அவனுக்குப் பெயர் பிடிக்கவில்லை. அவ்வளவு அழகான பெயர்கள் இருக்கின்றன? பிச்சைமுத்துவாம் பிச்சைமுத்து! எல்லோரும் `பிச்சை', என்று சுருக்கி வேறு கூப்பிடுகிறார்கள். கேவலமாயிருந்தது.

அவள் பெயருக்கு வேறு காரணம்.

ஒரு பெண் குழந்தைக்குத் தலைவாரிப் பூச்சூட்டிக் கண்ணுக்கு மை தீட்டி பட்டுப்பாவாடை கட்டிக் கால்களில் வெள்ளிக் கொலுசு மாட்டி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஐந்து ஆண்களைப் பெற்று கடைசியில், மாரியம்மனிடம் மடிப்பிச்சை ஏந்தி இவளைப் பெற்றதால் பிச்சையம்மாள் என்று பெயர் வைத்தார்கள்.

பிச்சையம்மாளுக்கும் பெயர் பிடிக்கவில்லை, அவள் வயசுக்கு வந்ததிலிருந்து.

பெண்களின் பெயர்கள் பெரும்பாலும்`ஆ' அல்லது `இ' ஒலியில் முடியும். அமலா, கவிதா, தமிழ்ச்செல்லி, மங்கையர்க்கரசி, சுகந்தி... இப்படி எவ்வளவோ பெயர்களிருக்க, பிச்சையம்மாளாம்! பிச்சையம்மாள்! ஒரு பிச்சைக்காரன் கூட இப்பெயரைக் கேட்டால் பெண் பார்க்க வரமாட்டான்.

அதிலும், இது போன்ற பெரிய ஸ்தலங்களிலுள்ள பிச்சைக்காரர்களை `உருவு கண்டு எள்ளாமை வேண்டும்'. அலட்சியமாக நினைக்க முடியாது.

இங்கே நல்ல வரும்படி. கூட்டுறவு முறைப்பிச்சை சங்கம், தலைவர், நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு எல்லாம் உண்டு. சுமார் நூறுபேர் உறுப்பினர்கள். தலைவர் கெட்டிக்காரர். அனைவரையும் ஒருங்கிணைத்து வழிநடத்துவார்.

வியாழன் நாகூர் தர்கா, வெள்ளி திருக்கடவூர், சனி இங்கே, ஞாயிறு வேளாங்கண்ணி மாதா கோவில் என்று குழுவாகவே செல்வார்கள். திங்கள், செவ்வாய், புதன் மூன்று நாட்களில் குழு, மூன்றாகப் பிரிந்து திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் செல்லும்.

பிச்சையெடுப்பதிலும் ஒரு புது முறையை உருவாக்கினார் தலைவர். தீர்த்தக் குளத்திலிருந்து கோவில் செல்லும் பாதை ஓரங்களில் பத்துப் பத்துப் பேராக இடைவெளி விட்டு உட்கார வைப்பார்.

தனித்தனியாகப் பிச்சை கேட்டால் பக்தர்கள் யாரோ ஒருவருக்கு ஐம்பது காசு போட்டுவிட்டுப் புண்ணியம் தேடிக்கொள்வார்கள்.

`நாங்க பத்துபேர் தனிங்க. எங்க எல்லோருக்கும் சேர்த்து ஒருத்தர்கிட்டே பிச்சைபோடுங்க! நாங்க பிரிச்சு எடுத்துக்கிறோம், என்றால், பத்து ரூபாயோ, இருபதோ, ஐம்பதோ, நூறோ பிச்சையிடுவார்கள். வரும்படி கூடுதலாகும்.

ஒரு வாரத்தில் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாயளவு கிடைக்கும்.

இப்படியுள்ள பிச்சைக்காரன் எவனாவது பிச்சையம்மாள் என்கிற பெயருள்ளவளைத் திரும்பிப் பார்ப்பானா?

ஒரு மாதத்துக்கு முன்பு..

நூல் நிலையத்தில் புத்தகம் எடுத்துக்கொண்டு, பிச்சைமுத்து என்று கையெழுத்திட்டவனை அவள் பார்த்தாள்.

அவள் பார்த்ததால், பெயர் தெரிந்து கொள்வதற்காக அவள் கையெழுத்துப் போடுவதை அவனும் பார்த்தான்.

``உங்க பேர் பிச்சையம்மாளா?''

``உங்க பேர் பிச்சைமுத்துவா?''

வெளியில் வந்து காத்திருந்து அவள் வந்ததும், ``உங்க பேர் நல்லாயிருக்குங்க!'' என்றான், துணிச்சலாக.

``உங்க பேரும் தான், என்றாள் அவள், அனிச்சையாக.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளக்கு வைக்கும் நேரத்தில் அவள் கோவிலுக்கு வருவாள். உள் பிரகாரம், வெளிப்பிரகாரங்களைச் சுற்றுவாள். கொடி மரத்தைச் சுற்றுவாள். நந்தவனத்திலிருக்கும் திருமணமான அரசையும் வேம்பையும் சுற்றுவாள்.

அவனும் சுற்றுவான் - அவளை

காதல் தீ பற்றிக்கொண்டது.

இதோ இப்போது கோவில் வாசலருகே பிச்சைக்காகப் பிச்சை காத்திருக்கிறான்.

நிஜப் பிச்சைக்காரி ஒருத்தி அவனருகே வந்து, ``பிச்சை சாமி!'' என்றாள். வயது இருபது இருபத்திரண்டு இருக்கும்.

``போ போ!'' முகஞ்சுளித்து விரட்டினான்.

அவளோ அவனிடம் பிச்சை வாங்காமல் போகக்கூடாது என்று நின்றாள்.

``பிச்சை போடுங்க! உங்களுக்கு நல்ல பொண்ணா கெடைக்கும்.''

அவனுக்குக் காதில் ஏறவில்லை.

ஆனால் காதலியாகக் கிடைத்திருக்கும் பிச்சையம்மாள் போன வெள்ளிக்கிழமை சொன்னது காதில் ஒலித்தது. `என்னைத்தவிர நீ எந்தப் பெண்கிட்டேயும் பேசக்கூடாது, பிச்சை!'

`சரி, பிச்சை!' என்று தான் வாக்குறுதி கொடுத்ததும் நினைவுக்கு வந்தது.

காதலி வரக்கூடிய நேரத்தில் பிச்சைக்காரி தொந்தரவு செய்கிறாளே! இளம் பெண் வேறு. கறுப்பி என்றாலும் குளிப்பாட்டி அழகுபடுத்தினால் நன்றாகவே இருப்பாள். இவளோடு பார்த்தால் காதலி சந்தேகப்படுவாள். ``போ! எங்காவது போய் வீட்டு வேலை செய்! பிச்சைஎடுக்காதே!'' என்று துரத்தப் பார்த்தான்.

அவளோ விடாக்கண்டியாக இருந்தாள். ``அய்ய..! உன் வீட்டிலே என்னை வேலைக்கு வெச்சுக்கிறியா? வர்றேன்'' என்றாள், பதிலுக்கு.

`விடமாட்டாள் போலிருக்கிறதே! அதோ, காதலி வருகிறாளே! இவளோடு பேசிக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் கோபிப்பாளே!' பிச்சைமுத்து உடனே காதலி வரும் திசையை நோக்கி நடந்தான். பிச்சைக்காரியும், ``பிச்சை சாமி'', என்றபடி அவனைத் தொடர்ந்தாள் நெருங்கி வந்த காதலி, ``என்னா பிச்சை? யாரிவ? இன்னொரு பிச்சையா?'' என்று கேட்டாள்.

அவன் தர்ம சங்கடத்துடன், ``ஆமாம், பிச்சை!'' என்றான். அடுத்த வார்த்தை இருவரும் பேசிக் கொள்வதற்குள் பிச்சைக்காரி வந்து விட்டாள். ``ஐயா! நான் சொன்னாப்பலே நல்ல பொண்ணு தேடி வந்துட்டு. பார்த்தியா?

தாராளமா பிச்சை போடு சாமி! நீயும் சொல்லு, தாயீ!''

பிச்சைமுத்துக்கு எரிச்சலான எரிச்சல்! கன்னாபின்னாவென்று அவளைத் திட்ட வேண்டும் போல் ஆத்திரம்! காத்திருந்து. கண்பூத்து காதலியைச் சந்தித்தும், பேசக்கூட விடாமல் தொந்தரவு செய்கிறாளே! `காதலி தவறாக நினைப்பாளே', என்று பல்லைக் கடித்துக் கொண்டான்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது எவ்வளவு மகிழ்ச்சியாயிருந்தான்! `இவளுக்கு ஏதாவது பிச்சைபோட்டு அனுப்பாத வரைக்கும் விடமாட்டாள் போலிருக்கிறதே என்று உணர்ந்து சட்டைப்பையில் கைவிரல்களை விட்டான். பகீரென்றது, அல்லது திகீரென்றது.

காதலி பார்க்கவேண்டும் என்பதற்காக மெல்லிய வெள்ளைச் சட்டையணிந்த, பையில், தெரிகிற மாதிரி நூறு ரூபாயை வைத்து, பை, காதலி முன் அசிங்கமாகத் தொங்கக்கூடாது என்பதற்காகச் சில்லறைக் காசுகளை வீட்டிலேயே வைத்து, காதலியுடன் பிரகாரம் சுற்றுவதற்காக வேட்டி கட்டிக்கொண்டு வந்திருந்தேன். நூறு ரூபாயைத் தவிர சில்லரை இல்லவே இல்லை அவனிடம்.

காதலியிடம் சில்லரை கேட்கலாமா? இது, முதல் பிச்சையாகுமே! வேறு வழியே தோன்றவில்லை பிச்சைமுத்துக்கு.

பையிலிருந்த நூறு ரூபாயை எடுத்துப் பிச்சைக்காரியிடம் கொடுத்தான்.. ``சந்தோஷமாக போ!'' என்றான், வயிற்றெரிச்சலுடன். வாங்கிக் கொண்ட பிச்சைக்காரி, எங்கே மனம் மாறித் திரும்பப் பிடுங்கிக்கொள்வானோ என்று அஞ்சி, உடனே நகர்ந்தாள் இடத்தை விட்டு சற்று தூரம் சென்று நின்று அவர்களைப் பார்த்தாள்.

காதலியிடம், ``எனக்கு இரக்க மனசு,'' என்றான் பெருமிதமாய்.

`இது காதல் பிச்சை. கல்யாணமானபின் இப்படிக்கொடுப்பானா? விடுவேனா?' என்று நினைத்தாள் காதலி பிச்சைம்யம்மாள்.

பிச்சைக்காரியோ, ``தண்ணியடிக்கிறவனும் பொண்ணுகளைச் சுத்துறவனும் அந்த நேரத்தில் தாராளமாத்தான் இருக்கிறானுங்கோ'', என்று சொல்லிக்கொண்டே நூறு ருபாய் பிச்சையோடு வேகம் பிடித்தாள்.

***
ப.திரிபுரசுந்தரி


காதல் பிச்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் பிச்சை Empty Re: காதல் பிச்சை

Post by kalaimoon70 Tue Feb 23, 2010 12:52 am

காதல் பிச்சை 677196 காதல் பிச்சை 677196 காதல் பிச்சை 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதல் பிச்சை Empty Re: காதல் பிச்சை

Post by வழிப்போக்கன் Tue Feb 23, 2010 1:06 am

ஹா... பிச்சை பிச்சைக்குப் பிச்சையிட்டகதை அருமை காதல் பிச்சை 677196
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

காதல் பிச்சை Empty Re: காதல் பிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum