புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_m10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10 
25 Posts - 69%
heezulia
வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_m10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_m10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_m10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10 
361 Posts - 78%
heezulia
வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_m10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_m10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_m10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_m10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_m10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_m10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_m10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_m10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_m10வாட்டர் தெரப்பி தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்டர் தெரப்பி தெரியுமா?


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Feb 22, 2010 12:44 pm

வாட்டர் தெரப்பி தெரியுமா?

வாட்டர் தெரப்பி தெரியுமா? Tu_6153உடல் இளைப்பது முதல்
புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது
தெரியுமா? அது தான் தண்ணீர். என்ன சிரிக்கிறீங்க? உண்மை தான். இந்த செலவே
இல்லாத தண்ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப்படுத்துவது தான்
வேதனையான வேடிக்கை.

செலவே இல்லாத தண்ணீரா? என்று திருப்பி கிண்டல்
அடிக்காதீர்கள். சென்னையில் உள்ளவர்கள் பெரும்பாலோர், ஏதோ தனியாரிடம்
வாங்கி சாப்பிடும் "கேன் வாட்டர்` தான் நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர்
என்று நினைக்கின்றனர். இப்போது மெட்ரோ வாட்டர் தண்ணீர் வர ஆரம்பித்து
விட்டது. அதை குடித்தாலே போதும், ஆனால், காய்ச்சிக் குடிக்க மறந்து
விடக்கூடாது.

அதென்ன "வாட்டர் தெரபி?.` நாம் சாப்பிடும், குடிக்கும்
எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல சத்துக்களை திரவமாகவும், திடமாகவும்
பிரித்து பிரித்து வெளியேற வேண்டிய சமாச்சாரங்களை வெளியேற்றி, சத்துக்களை,
திரவ வடிவில் ஏற்று உடலின் பாகங்கள் பிரித்துக் கொள்கின்றன. இப்படித் தான்
கால்சியம், இரும்பு, கார்போஹைட்ரேட் என்று எல்லாம் உடலில் சேர்கிறது.


தொண்டை
வரை காரமாகவோ, இனிப்பாகவோ இருக்கும் எதுவும் உடலில் சத்துக்களை
சேர்ப்பதில்லை. நாம் வாய் ருசிக்காக சாப்பிடும் பல வேண்டாத
சமாச்சாரங்களும், கழிவுப் பொருளாக நேரடியாக சிறுநீராகவும், மலமாகவும் தான்
வெளியேறுகின்றன.

நம் வீட்டில் எப்படி சமையல் அறை, படுக்கையறை,
ஹால்,பாத்ரூம், டாய்லெட் உள்ளதோ அது போல நம் உடலிலும் உள்ளது.
எல்லாவற்றையும் கழுவி, நல்லதை "டெட்டால்` ஊற்றி சுத்தம் செய்ய வேண்டாமா?
அப்போது தானே உடல் என்ற வீடு, நாறாமல் இருக்கும்.

அதற்காக தான்
அவ்வப்போது நாம் தண்ணீர், திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

முன்பு
இருந்த உணவு முறையில் இப்படி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வகுத்து
வைத்தனர். இப்போது "லைப் ஸ்டைல்` எவ்வளவோ மாறி விட்டது.

உடலை
எப்படியெல்லாம் பாதிக்க வைக்க வேண்டுமோ, அதற்கு நாமே தேவையான கெட்ட
சத்துக்கள் அனைத்தையும் நம் உணவுகளின் மூலம் தருகிறோம். கொழுப்பு, ஷûகர்,
ஆயில் என்று எல்லாவற்றையும் சேர்த்து, கடைசியில் ரத்த அழுத்தம், சர்க்கரை,
ஹார்ட் பிராப்ளம் என்று எல்லாவற்றையும் உடலில் ஏற்றி விடுகிறோம்.

இந்த
புது "லைப் ஸ்டைலில்` எதையும் யாரும் கேட்பதாக இல்லை. இந்த லைப் ஸ்டைல்
காரணமாக தான், இளைய வயதினர், குழந்தைகள் எல்லாரிடமும் பழங்கள் போன்ற திரவ
சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கமே போய்விட்டது. அதுவும்,
தண்ணீர் குடிப்பது என்பது அரிதாகி விட்டது. இது பெரும் தவறு.

ஏதோ
உணவு, சிற்றுண்டி சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது.
தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள்,
காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். பல ஆயிரக்கணக்கில் பணம் கறந்து
சொல்லித் தரப்படும் "வாட்டர் தெரபி` உட்பட மூலிகை தெரபிகளை நாம் ஏன்
இப்போதே ஆரம்பிக்கக் கூடாது? நீங்கள் ஆரம்பியுங்கள். உங்கள்
பிள்ளைகளுக்கும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.

இது
தான் "வாட்டர் தெரபி` பயிற்சி. இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல்
இருக்க மாட்டீர்களே? என்ன பாட்டிலை வாங்கி டேபிளில் தண்ணீருடன்
வைத்திருங்கள். வீட்டிலாகட்டும், ஆபீசிலாகட்டும் மணிக்கொருதரம் தண்ணீர்
குடிங்க, பாருங்க, உடல் "கும்ம்ம்`ன்னு இருக்கும்.

வெயிட் குறைய
தண்ணீர் முக்கியம்: என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக்
சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து
வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். உடல் எடையை
அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்டபடி
தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக்
காட்ட தண்ணீர் பயன் படாது. உண்மையில், அது உடலை பாதிக்கும். தினமும்
குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும்
என்பது தான் உண்மை.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து
தேவையல்ல, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில்
வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும்
சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி
சென்று கடைசியில் வெளியேறி விடுகிறது. இப்படி செய்வதால் தான் சிறுநீரக
பிரச்னை, குடல் பிரச்னை என்று எதுவும் வராமல் இருக்கிறது சிலருக்கு.

ஒரு
நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள்,
சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவீதம்
வரை தண்ணீர் சத்து தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக
சாப்பிட்டால் நல்லது. கண்ட கண்ட நொறுக்குத் தீனியை சாப்பிடுவதை விட,
பழங்கள் நல்லது.

"அப்பா விடட்டும் முதலில்; நான் அப்புறம் விடறேன்!`

இருபது
வயதில் ஆரம்பித்த உணவு, பழக்கவழக்கங்கள், நாற்பதுக்கு மேல், உடலில் தங்கள்
வேலையை செய்து, எல்லா வியாதிகளையும் வரவழைத்து விடுகிறது. அப்புறம்,
ஐம்பதில் தான் நமக்கு "விழிப்புணர்வே` வருகிறது. நம் பிள்ளைகளுக்கு தான்
"அட்வைஸ்` சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், மகனாவது கேட்கிறானா? "போப்பா,
நீ தானே ஓட்டலுக்கு அப்பப்போ அழைச்சிக்கிட்டு போய் ப்ரைடு ரைஸ் சாப்பிடு,
நுõடுல்ஸ் சாப்பிடு, பனீர் பட்டர்... அது இதுன்னு சாப்பிட வச்சே...` என்று
பிள்ளைகள் திருப்பி கேட்பார்கள் தானே.

அதனால், இன்றைய முப்பதில்
இருப்பவர்களா நீங்கள்? வேண்டாமே, இந்த உணவுப் பழக்கங்களில் தவறான
சமாச்சாரங்கள். நீங்க விட்டா தான், உங்க பிள்ளைகள் விடுவார்கள்.
இன்னிலேர்ந்து விட்டுவிடுங்கள், ப்ளீஸ்.

நீச்சல் பயிற்சி நல்லது:
நீச்சல் சேம்பியனாக வர வேண்டும் என்றால் தான் நீச்சல் பயிற்சி செய்ய
வேண்டுமா? உடல் பயிற்சியில் நீச்சல் பெரும்பங்கு வகிக்கிறது.

முன்பெல்லாம்
மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு நீச்சல் முக்கியம். கிராமங்களில்
பிறந்தவர்களுக்கு இதெல்லாம் இல்லாமல் இளமை வாழ்க்கை நகராது. நகரங்களில்
உள்ளவர்களை பற்றி கேட்கவே வேண்டாம். பாத்ரூம் குளியலில் கூட ஏதோ காக்காய்
குளியல் தான். இதனால் பலருக்கு தண்ணீர் அலர்ஜி கூட வரும். பெரும்பாலோர்
வெந்நீரில் குளிக்க இதுவும் காரணம். நல்ல குளிர்ந்த நீரில் குளித்துப்
பாருங்கள், அதன் மணமே, தன்மையே தனி. ரிலாக்ஸ் செய்ய, மருத்துவரீதியாக
தண்ணீரில் நிற்பதும் ஒன்று. அதனால், தான் பலரும் டென்ஷனாக, பிசியாக இருந்து
வீடு திரும்பினால், உடனே குளிக்கின்றனர். முடிந்தவரை டென்ஷனை போக்கும்
தன்மை, குளிர்ந்த நீருக்கு உண்டு.

பாதிக்கு பாதி தண்ணீர் வேணும்!:
நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? இது தான் பலரின் கேள்வி.

*
பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவு அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60
அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* இதை ஒரு நாளைக்கு எட்டு முதல்
10 டம்ளர் என்று பிரித்துக் கொண்டு தண்ணீர் சாப்பிடலாம்.

* ஒரு
பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே
இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

*
ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு,
மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில்
தண்ணீர் ஏறவே ஏறாது.

* தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே
மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.

*
வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ,
எலுமிச்சை பிழிந்தோ சாப்பிடலாம்.



வாட்டர் தெரப்பி தெரியுமா? Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 22, 2010 12:49 pm

வாட்டர் தெரப்பி தெரியுமா? 677196 வாட்டர் தெரப்பி தெரியுமா? 677196
ரிபாஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரிபாஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக