புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_m10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_m10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_m10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_m10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_m10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_m10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_m10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_m10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_m10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_m10தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 23, 2010 10:44 am

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் "குற்றாலம்"

அங்கே இங்கே குளிப்பதெல்லாம் குளியல் அல்ல. குற்றாலத்தில்
குளிப்பதுதான் அசல் குளியல்!


தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் Kuttralam5"சீசன்' நேரத்தில் ஒரே நாளில், எத்தனை முறை, எத்தனை அருவியில், எவ்வளவு நேரம்
குளித்தாலும் சளியோ
, காய்ச்சலோ எட்டிப் பார்க்காது. அதுதான் பொதிகை மலை
மூலிகையின் மவுசு.


தென் மேற்குப் பருவ மழைக் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து
ஆரியங்காவுக் கணவாய் வழியாகப் பாய்ந்து வரும் குளிர்ந்த காற்றைச் சிக்கெனப்
பிடித்து சாரல் மழையாகப் பிழிந்து தருகிறது குற்றால மலை.


இந்த மழை நீர், மலைகளில் தவழ்ந்து, மூலிகைகளைத் தழுவி, சில்லென்ற
குளிர்ச்சியுடன்
, வெள்ளியை உருக்கிவிட்டது போல அருவியாய்க் கொட்டுவதைப்
பார்ப்பதே ஓர் ஆனந்தம்.


இரண்டு முழத் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, உடல் முழுக்க நல்லெண்ணெய்யைத் தேய்த்துக்
கொண்டு
, அருவிக்கு கீழே மணப்பெண் மாதிரி தலையைக் கவிழ்ந்து நின்று குளிக்கும்போது ஏற்படும் சுகமே தனி. தலையில் கல்லைத் தூக்கிப் போடுவது போலத்தான் தெரியும். ஆனாலும் அதில் உள்ள சுகம் இருக்கே... அது சொன்னால் தெரியாது; குளித்து அனுபவித்தால்தான் புரியும்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் குற்றாலத்தில், ஓர் அருவி, இரண்டு அருவி
இல்லை
; மொத்தம் 8 அருவிகள் உள்ளன. பேரருவி, சிற்றருவி, செண்பகதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி என சுற்றிச் சுற்றி அருவிகள்தான்.



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 23, 2010 10:45 am

பேரருவி
குற்றாலம் சென்றதும் நம்மை பன்னீர் தெளித்து வரவேற்பது பேரருவி. பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த அருவி. சுமார் 1,200 அடி உயரத்திலிருந்து படிப்படியாக பொங்குமா கடலில் விழுந்து, தரைமட்டத்துக்கு வருகிறது. இதிலிருந்து கிளம்பும் நீர்த்துளிகள் காற்றில் கலந்து வந்து அனைவரையும் தொட்டு வரவேற்கும். இங்கு ஆண்களும் பெண்களும் குளிக்க தனித்தனி இடவசதி உண்டு.

சிற்றருவி

பேரருவியில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் வழியில் சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது சிற்றருவி. மலை உச்சியிலிருந்து பேரருவிக்கு செல்லும் நீரின் ஒரு பகுதி பிரிந்து சிற்றருவியாக உருமாறுகிறது. இதில் சிறுவர்களும் அச்சமின்றி குளிக்கலாம்.

செண்பகதேவி அருவி
குற்றால மலையில் சுமார் 600 அடி உயரத்தில் காணப்படுவது செண்பகதேவி அருவி. சிற்றருவி செல்லும் பாதை வழியாக மலை மீது ஏறிச் சென்றால்தான் இந்த அருவியில் நீராட முடியும். வழியில் அருள்மிகு
செண்பகதேவி அம்மன் கோவிலும் உள்ளது. மலை ஏற விரும்புவோருக்கு இது ஒரு நல்ல பயிற்சிக் களம்.


தேனருவி

செண்பகதேவி அருவியில் இருந்து ஒத்தையடிப் பாதையில் நடந்து சென்றால் தேனருவியை
அடையலாம். பொதிகை மலையின் உச்சியில் சுமார் ஆயிரம் அடிகளுக்கு மேல் பாலாறாகத் தோன்றி அருவியாக கொட்டுவதால் இது தேனருவியானது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் உள்ள இந்த அருவியில் குளிப்பது எதற்கும் ஈடாகாது.


ஐந்தருவி
குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது ஐந்தருவி. மலையில் இருந்து விழும் நீர், ஐந்து கிளைகளாக பிரிந்து கொட்டுவதால் இதற்கு இந்தப் பெயர். இதில் குளித்தால் ஐம்புலன்களுக்கும் உற்சாகம்
ஏற்படும். இரவு
, பகல் எந்நேரமும் இதில் குளித்துக் குதூகலிக்கலாம். இங்கும் இடஒதுக்கீடு முறை உண்டு. மூன்று கிளைகளில் ஆண்களும், இரண்டு கிளைகளில் பெண்களும் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பழத்தோட்ட அருவி
ஐந்தருவியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் மலை உச்சியில் அமைந்துள்ளது பழத்தோட்ட
அருவி. இயற்கை எழில் சூழ்ந்த பகுதிக்குள் உள்ள இந்த அருவியில் குளிப்பது பேரானந்த அனுபவம். குற்றாலம் சென்றவர்கள் பழத்தோட்ட அருவியில் குளித்தேன் என்று சொல்வதையே பெருமையாக நினைப்பதுண்டு. காரணம் இந்த அருவியில் எல்லோரும் குளித்துவிட முடியாது. எனவேதான் இதற்கு "வி.ஐ.பி. அருவி
' என்ற செல்லப் பெயரும் உண்டு.

இந்த அருவியை உரிமைக் கொண்டாடுவதில் அரசுத் துறைகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. எனவே, கடந்த 3 ஆண்டுகளாக இந்த அருவிக்கு செல்லும் பாதை மூடிக்கிடந்தது. இந்த ஆண்டுதான் திறக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் உள்ள வனத் துறையினரின் அனுமதி பெற்று இந்த அருவிக்குச் செல்லலாம்.


பழைய குற்றால அருவி
குற்றாலம் - கடையம் செல்லும் பாதையில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது பழைய குற்றால அருவி. சுமார் 600 அடி உயரத்திலிருந்து இந்த அருவி விழுகிறது. இங்கும் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே குளிக்க வசதி உள்ளது. பெண்கள் காசு கொடுத்து, துணி மாற்றும் அறைகளைப் பயன்படுத்துவது நல்லது. "ஜொள்ளு பார்ட்டி'களின் பார்வைகளைத் தவிர்க்கலாம்.

அருவியில் குளித்து முடித்த உடன் குளிர்ந்த உடம்புக்கு இதமான சூடேற்ற மிளகாய் பஜ்ஜி, வடை, டீ, காபி என ஏகப்பட்ட "ஐயிட்டங்கள்' உண்டு. மலைப் பழ வகைள் என குவியல், குவியலாக வைத்து விற்பார்கள். விவரத்துடன் கேட்டு வாங்க வேண்டும்.

குற்றாலத்தின் முக்கிய இடங்கள்
குற்றாலத்தில் அருவி மட்டும்தான் என எண்ணிவிடாதீர்கள். குற்றாலநாதர் திருக்கோவில், சித்திரசபை, படகு குழாம், பாம்புப் பண்ணை, சிறுவர் பூங்கா ஆகியவையும் உண்டு. குற்றாலத்தில் உள்ள குரங்குகள் வினோதமானவை. கையில் வைத்திருக்கும் பொருளை தைரியமாக வந்து பறித்துச் செல்லும்.

உச்சந்தலை உச்சியிலே...மூலிகை எண்ணெய் மசாஜ்
குற்றாலச் சிறப்புகளில் ஒன்று மூலிகை எண்ணெய் மசாஜ். சந்தனாதி தைலம், அரைக்கீரை தைலம், பொன்னாங்கன்னி தைலம் ஆகியவற்றில் விரும்பும் ஒன்றால் மசாஜ் செய்து குளிக்கலாம். இந்த
மூலிகை எண்ணெய்களில் "போலி
'களும் ஏராளம். எனவே, ஒரிஜினல் எண்ணெய்களை தெரிந்து வாங்க வேண்டும்.
குற்றாலநாதர் கோயிலில் தயாரிக்கும் மூலிகை எண்ணெய் சிறப்பானது. பால், பன்னீர், இளநீர், சந்தனம் மற்றும்
மூலிகைகளை சேர்த்து ஆகம முறைப்படி இந்த தைலம் தயாரிக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு தலைவலி என்ற ஐதீகத்தின் அடிப்படையில் தினந்தோறும் காலை அபிஷேகத்தின்போது இந்த மூலிகை எண்ணெய்யை சிரசில் வைத்து அபிஷேகம் செய்யப்படுகிறது.


இந்த எண்ணெய் 100 மி.லி. ரூ. 8 தான். ஆண்களுக்கு மசாஜ் செய்ய சுமார் 50 பேர் உள்ளனர். மூலிகை எண்ணெய்யை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து, உடலின் பாகங்களை அழுத்திப்பிடித்து மசாஜ்
செய்யும்போது நரம்புகளும்
, ரத்த ஓட்டமும் சீரடைகிறது. கொட்டும் அருவியில் குளிக்கும்போது உடலின் உஷ்ணம் தணிகிறது. உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. சுளுக்கு இருந்தாலும் பறந்துவிடும். கட்டணம் ரூ. 20 முதல் 30 வரை.

பெண்களுக்கான கேரள மசாஜ்
பெண்களுக்கு, "சீசன்' நேரத்தில் மட்டும் அங்குள்ள தமிழ்நாடு ஹோட்டலில் மசாஜ் செய்யப்படும். கேரளத்தைச் சேர்ந்த பெண்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

சாரல் திருவிழா
ஆண்டுதோறும் "சீசன்' காலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க அரசு சார்பில் ஒரு வார
காலம் பல்சுவை விழாவாக "சாரல் திருவிழா
' கொண்டாடப்படும்.
குற்றால சீசன்
தென் மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மூன்று மாதங்கள்தான் குற்றால
சீசன். அப்போதுதான் அருவிகளில் தண்ணீர் கொட்டும். மற்ற காலங்களில் மழை பெய்யும் வேளைகளில் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும்
, அதற்கு சீசன் மகத்துவம் கிடையாது.

போக்குவரத்து வசதி:
திருநெல்வேலியில் இருந்து 59 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்திலும் செல்லலாம். கட்டணம் ரூ.
19. ரயிலில் தென்காசி வரை சென்று (கட்டணம் ரூ. 16) அங்கிருந்து நகர்ப் பேருந்து மூலம்
குற்றாலம் செல்லலாம். பிரதான அருவியில் இருந்து ஐந்தருவி
, பழைய குற்றாலம்
ஆகியவற்றுக்கு நகர்ப் பேருந்து வசதி உண்டு.



தங்குமிட வசதி:
குற்றாலத்தில் தங்கும் வசதிகள் உள்ளன. சீசன் காலத்தில் சாதாரணமாக ரூ. 800-க்கு இரண்டு
படுக்கைகள் கொண்ட அறை கிடைக்கும். தனியான குடில்களும் உண்டு. வசதிக்கு
ஏற்பக் கட்டணம். உணவு விடுதிகளும் உள்ளன.


குற்றாலத்துக்கு அருகே...:
குற்றாலத்துக்கு அருகில் 52 கி.மீ., தொலைவுக்குள் பாபநாசம் அணை, முண்டந்துறை
புலிகள் சரணாலயம்
, பாணர்தீர்த்த அருவி, அகஸ்தியர் அருவியும், 50 கி.மீ., தொலைவில்
மணிமுத்தாறு அணை
, பூங்கா; 65 கி.மீ. தொலைவில் மாஞ்சோலைத் தேயிலைத்
தோட்டம்
, குதிரைகட்டித் தேரியும் உள்ளன.


நெல்லையில் முக்கியமான சுற்றுலா மையங்கள்

குற்றாலம் செல்ல திருநெல்வேலிக்கு வருவோர் இம்மாவட்டத்தில் உள்ள பிற முக்கியமான சுற்றுலா
மையங்களையும் கண்டுகளிக்கலாம்.


காந்திமதி-நெல்லையப்பர் கோவில்:
நகரின் மையப் பகுதியில் உள்ளது இந்தக் கோயில். இசை எழுப்பும் கல் தூண்கள், ஆயிரங்கால்
மண்டபம்
, பொற்றாமரைக் குளம், அபூர்வ நகை வகைகள் ஆகியவை இதன் சிறப்பு.

கதீட்ரல் ஆலயம்:
1826 - ம் ஆண்டு அருள்திரு ரேனியஸால் கட்டப்பட்ட தேவாலயம். நகரின் அடையாளச் சின்னம்.

கிருஷ்ணாபுரம் (11.கி.மீ):

கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்ட விஷ்ணு கோயில் உள்ளது. கலை நுணுக்கத்துடன்
செதுக்கப்பட்டுள்ள ஆள் உயர கற்சிற்பங்கள் சிறப்பு.


சங்கரன்கோவில் (56.கி.மீ.):
இங்குள்ள சங்கரநாராயணர் கோவிலில் சிவனும், விஷ்ணுவும் இணைந்திருப்பர். ஆண்டுதோறும்
மார்ச்
21 முதல் 7 நாள்களும், செப்டம்பர் 21 முதல் 7 நாள்களும் கர்ப்பக்கிரகத்தில் சூரிய ஒளி விழுவது ஓர் ஆச்சர்யம்.

பத்தமடை (30கி.மீ.):
கோரம்பாய்க்குப் பெயர் பெற்றது. விதவிதமான பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. சுவாமி சிவானந்தர்
பிறந்த ஊர் இது.


களக்காடு (47கி.மீ.):

சிங்கவால் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இயற்கைக் காட்சிகள் நிறைந்தது.

குற்றால அருவியில் குளிச்சது போல இருக்குதா........................


mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 23, 2010 10:46 am

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் 67637



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 23, 2010 10:46 am

நிர்மல் நீங்க போகும் பொது சொல்லுங்க நானும் வாறன் ஓகே

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 23, 2010 11:04 am

ரிபாஸ் wrote:நிர்மல் நீங்க போகும் பொது சொல்லுங்க நானும் வாறன் ஓகே

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் 359383 தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் 359383 தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் 359383

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 23, 2010 11:09 am

nirshan2007 wrote:
ரிபாஸ் wrote:நிர்மல் நீங்க போகும் பொது சொல்லுங்க நானும் வாறன் ஓகே

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் 359383 தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் 359383 தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் 359383

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் 359383 தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் 942

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 23, 2010 11:13 am

அண்ணா என்ன கூட்டிட்டு போகமாட்டீங்களா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 23, 2010 11:17 am

Manik wrote:அண்ணா என்ன கூட்டிட்டு போகமாட்டீங்களா

நான் போகும் பொது நீ இல்லாமலா அழுவாத நீயும் தான் ஓகே தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் 942

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 23, 2010 11:18 am

Manik wrote:அண்ணா என்ன கூட்டிட்டு போகமாட்டீங்களா

நமக்கு தான் பக்கம் தானே.
இந்த வருடம் கண்டிப்பாக ஊருக்கு வரும்போது போகலாம்.
எனக்கு பைக்கில் போனால் ஒன்றரை மணி நேரம் தான் குற்றாலம்.
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் 359383 தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் 359383

பார்வதி
பார்வதி
பண்பாளர்

பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Postபார்வதி Tue Feb 23, 2010 11:25 am

நமக்கு திரிஞ்ச இடம்தான் இதுவெல்லாம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக