ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோன் ஆஃப் ஆர்க்

Go down

ஜோன் ஆஃப் ஆர்க் Empty ஜோன் ஆஃப் ஆர்க்

Post by சிவா Sat May 09, 2009 11:55 am

ஜோன் ஆஃப் ஆர்க் Joanofarc
John Of Arc - ஜோன் ஆஃப் ஆர்க்



அமெரிக்கா கூடக் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில் ஐரோப்பா மட்டும்தான் நாகரிகமடைந்த கண்டம். எல்லா தேசங்களுமே புதிய நிலப்பரப்புகளைக் கண்டுபிடிக்கவும், பிடித்த பகுதிகளைத் தமதாக்கிக் கொள்ளவும் பெரிய அளவில் அப்போது யுத்தம் செய்து கொண்டிருந்தன. நமது இந்த வாரக் கதாநாயகியான ஜோன் வசித்து வந்த பிரான்ஸிலும் அப்படியொரு பங்காளிச் சண்டை முற்றி வெடித்திருந்தது அப்போது.

கி.பி.1412-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி கிழக்கு பிரான்ஸிலுள்ள டாம்ரெமி என்கிற எல்லையோர குக்கிராமத்தில் பிறந்தவள் ஜோன். பரம ஏழைக்குடும் பம். ஜோவின் பெற்றோர் ஜாகுவஸ்-இஸபெல் டி ஆர்க் இருவரும் நல்ல மேய்ப்பர்கள். அதாவது ஆடு மேய்ப் பவர்கள்.

ஆழ்ந்த மதப்பற்றும், இறை நம்பிக் கையும் கொண்ட பெற்றோருக்குப் பிறந்தவளான ஜோன் மிகச் சிறு வயதுகளிலேயே பக்தியில் கனியத் தொடங்கி விட்டாள். பன்னி ரெண்டாவது வயதில் அவளுக்கு ஓர் அபூர்வக் காட்சி யைக் காணும் வாய்ப்பு ஏற் பட்டது. புராதனமான கிறித் துவ மதத் துறவிகளான புனித அன்னை கேதரின், புனித அன்னை மார்க்க ரெட் ஆகியோர் அவ ளுக்குக் காட்சி கொடுத்தார்கள். காட்சி கொடுப்பதென்றால் ஏதோ ஒரு மடத்தில் உட்கார்ந்து இருக்கிற வாக்கில் காட்சி கொடுக்கிறவர்கள் இல்லை. புனித அன்னைகளான கேதரினும், மார்க்கரெட்டும் எப்போதோ அமர ரானவர்கள்! கர்த்தருடன் இரண்டறக் கலந்தவர்கள் என்று நம்பப்படுகிறவர்கள்.

சிறுமி ஜோன் அவர்களை புகைப்படமாக, ஓவியமாகக் கூட அதற்குமுன் பார்த்ததில்லை. ஆனால் ஒரு தரிசனமாக அவளுக்கு அவர்களைக் காணக் கிடைத்தது பற்றி அவள் விவரித்தபோது யாரும் நம்பத் தயாராக இல்லை.

அவளுக்கு தரிசனம் தந்து வழி நடத்திய புனிதர்கள், பிரான்சின் சிக்கல் மிகுந்த காலக்கட்டத் தில், ஒரு குடிமகளாக ஜோன் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி அவளுக்கு அடிக்கடி அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ராஜ வம்சத்துப் பங்காளிகளில் ஒரு சாரரான பர்கன்டி யன்கள், அப்போது எதற்கும் துணிந்தவர்களாக, இங்கி லாந்தைப் பிரான்சின் மீது படையெடுத்து வரச்சொல்லித் தூது அனுப்பிவிட்டு, அவர்களுடன் சேர்நது தாமும் போரிட்டு பிரான்சின் அப்போதைய மன்னரை ஒழித்துக்கட்டி ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டிருந்தார்கள்.

தேசத்தைக் காப்பாற்ற ராணுவ வீரர்கள் ஒரு பக்கம் பரேடு நடத்திக்கொண்டிருக்க, அந்த எல்லையோர கிராமத்துச் சின்னப் பெண்ணான ஜோன், என் தேசத்தை எதிரிகளிட மிருந்து நான் காப்பாற்றுவேன் புனித அன்னையர் எனக்கு இது விஷயத்தில் உதவி செய்வார்கள் என்று சொல்லிவிட்டு ஒரு சிறு படை திரட்ட ஆரம்பித்து விட்டாள்.

இதையெல்லாம் எந்த ஊர் அரசும், ராணுவமும் பார்த்துக் கொண்டு சிரிக்காமல் இருக்குமா? சின்னப்பெண் ஏதோ விளையாடுகிறாள். பொம்மை ராணுவம் தயார் செய்கிறாள் என்றெல்லாம் கேலி பேசிக் கொண்டிருந்தார்கள் ஜோனின் ஊர்க்காரர்கள்.

ஆனால், போரில் தான் படுவதாக முடிவு செய்த கணத்திலிருந்தே, தளபதியைப் பார்க்கிற முயற்சியை ஆரம் பித்து விட்டாள் ஜோன். எப்படியாவது தளபதி லார்ட் ராபர்ட்டைச் சந்திக்க வேண்டும். தெய்வ புருஷர்கள் தமக்கு இட்ட கட்டளையை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். குறைந்தபட்சப் போர்ப் பயிற்சியாவது பெற்று யுத்தத்தில் பங்கு பெற வேண்டும் என்று இரவு பகலாக நினைத்துக் கொண்டிருந்தாள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜோன் ஆஃப் ஆர்க் Empty Re: ஜோன் ஆஃப் ஆர்க்

Post by சிவா Sat May 09, 2009 11:56 am

படாதபாடு பட்டு டூரண்ட் லாஸோஸ் என்கிற உறவுக்காரர் ஒருத்தர் மூலம் கமாண்டரைச் சந்திக்க முடிந்தது. லார்ட் ராபர்ட்டும் அவரது பிரதான தளபதிகளும் அமர்ந்திருந்த அந்த ராணுவ சபை யில் சிறுமி ஜோன் தனக்கு ஏற்பட்ட தரிசனக் காட்சிகள் பற்றியும் யுத்தத்தில்தான் பங்கு பெற விரும்புவது பற்றியும் எடுத்துச் சொன்னாள். ஆனால், யாரும் அவள் சொன்னதையெல்லாம் நம்பத் தயாராக இல்லை.

1428 ஜூலை மாதம் உள்நாட்டு எதிரிகளான பர்கன்டியன்கள் பிரான்சின் எல்லையோர கிராமங்கள் ஒவ்வொன்றாக முற்றுகையிட்டுக் கைப்பற்றி அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர் களுக்குப் பின்னால் இங்கிலாந்து படைகள் அணி அணியாக வந்து கொண்டிருந்தன.

இதற்குள் இன்னும் சிலமுறை தளபதியைச் சந்தித்து தனக்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவாவது ஒரு வாய்ப்புக் கொடுக்கும்படி கேட்டிருந்தாள் ஜோன். ஒவ்வொரு முறையும் அவள் ராணுவக் கூடாரத்துக்கு வந்து கேட்பதும் தோல்வியுற்றுத் திரும்பிப் போவதும் வழக்க மாகியிருந்ததை நினைவு கூர்ந்தார் ராபர்ட்.

இந்தச் சிறுமி ஏன் திரும்பத் திரும்பத் தன்னிடம் வந்து பேசுகிறாள்? உண்மையிலேயே இறையருள் பெற்றவள்தானோ? ஒருவேளை இந்த நெருக் கடி சமயத்தில் பிரான்சை எதிரிகளிடமிருந்து காப்பாற்றப் போகிறவள் இவள்தானோ என்று அவருக்கும் லேசான சந்தேகம் உண்டானது. இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து ஜோனை அவள் கிராமத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்து வரும்படி சில வீரர்களுக்கு உத்தரவிட்டு விட்டார். எல்லை யோர கிராமங்கள் அனைத்தும் ஏற்கனவே எதிரிகளின் கையில் விழுந்திருந்த நிலையில் ஒரு பெண்ணை அதுவும் பன்னி ரெண்டு, பதிமூன்றே வயதான சிறுமியை அழைத்துப் போவ தில் ராணுவத்தினருக்குப் பிரச்சினை இருந்தது. எதிரிகள் கையில் அகப்பட்டால் நிச்சயம் கற்பழித்து விடுவார்கள். ஆகவே, ஜோனுக்கு ஆண் உடை அணிவித்து ஒரு பையன் மாதிரி தோற்றம் கொடுத்தே ராணுவ முகாமுக்கு அழைத்துப் போனார்கள்.

ராணுவ முகாமிலிருந்து பதினோரு நாட்கள் கால் நடை யாகவே பயணம் செய்து படாதபாடுகள் பட்டு ஜோன், சினானை அடைந்து மன்னரைச் சந்தித்தாள். ஏற்கனவே முக்கால் வாசி நிலப் பரப்பை இங்கிலாந்து படையிடம் இழந்திருந்த மன்னரைச் சந்தித்துப் பேசி, சம்மதிக்க வைத் தாள். BBநான், நானாக வரவில்லை. கடவுளின் பெயரால் என்னை வழிநடத்தும் புனித அன்னையர் என்னை உங்கள் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறாள். எனக்கொரு வாய்ப்புக் கொடுங்கள். எதிரிகளைப் போர்முனையில் சந்திக்க விருப்பம் என்று சொன்னாள், ஜோன். அவள் பேச்சிலிருந்த அழுத்தம்தான் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு சிறுமி பேசுகிற பேச்சா இது?

ஆகவே மன்னர் சம்மதித்தார். அதற்குமுன் அவரும் பல பாதிரியார்களைக் கொண்டு ஜோன் புருடா விடுகிறாளா, உண்மையிலேயே ஆசீர் வதிக்கப்பட்ட சிறுமிதானா என்று பரிசோதனை கள் செய்து பார்த்தார். பாதிரியார்கள் கேட்ட கேள்வி கள் அனைத்துக்கும் தயங்காமல் பதில் சொன்ன ஜோனின் துணிச்சல் கண்டு ராயல் கோர்ட் வியப் பில் ஆழ்ந்தது சரி, நம்மைக் காப்பாற்றப் போவது இந்தப் பெண்தான் என்று அவர்கள் முடிவே செய்து விட்டார்கள். ஜோனுக்கு ராணுவ உடைகளை அணிவித்து, அவளுக் குப் பின்னால் வீரர்களை அணி வகுக்கச் செய்தார்கள்!

அந்த யுத்தத்தில் ஜோன் காட்டிய வீரமும் அவளது வீரத்தைக் கண்டு பிரெஞ்சுப் படை அடைந்த எழுச்சியும் எதிரிகள் தரப்பில் ஏற்பட்ட இழப்பும் அவர்கள் அந்தச் சிறுமியின் வீரம் கண்டு அடைந்த வியப்பும் சரித்திரத்தில் இடம் பெற்று எத்தனையோ பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இன்றளவும் வீரப் பெண்மணி களின் பட்டியலில் ஜோன் ஆஃப் ஆர்க்குக்குத்தான் முதலிடம் தருகிறது சரித்திரம்.

தோல்வியின் விளிம்பில் எதிரிகளிடம் சிறைப்பட நேர்ந்தபோதும் ஜோன் அச்சப் படவில்லை அழவில்லை கலங்கவில்லை என்பது தான் இதில் முக்கியமானது. தன் னைக் கைது செய்து ராணுவ நீதிமன்றத் தில் நிறுத்திய பர்கன்டியன் தளபதியிடமே, நீங்கள் செய்வது தவறு. இது நம் நாடு. எதிரிகளுக்கு உதவ நீங்கள் முடிவெடுத்தது துரதிருஷடவசமானது என்று சொன்னாள் ஜோன். ஆனால் துரோகியாகி விட்டவர்கள் அத்தனை சுலபத்தில் மனம் மாறுவார்களா என்ன?

ஜோனை இங்கிலாந்துப் படைகளின் வசம் பிடித்துக் கொடுத்துவிட்டார்கள்.நான்கு மாதம் விசாரணை நடந்தது. அலுப்பூட்டுமளவுக்கு நீண்ட விசாரணைகள். இறுதியில் எல்லாரும் எதிர்பார்த்த மாதிரியே ஜோன் ஆஃப் ஆர்க்குக்கு மரண தண்டனை விதித்து, நிறைவேற்றினார்கள். இங்கிலாந்துக்கு அவள் மீது அப்படியொரு வெறுப்பு இருந்தது அப்போது. ஏனெனில் ஜோனின் வீரத்தின் விளைவாக அந்த யுத்தத்தில் இங்கிலாந்து அடைந்த இழப்புக்கு ஓர் அளவே இல்லை. பின்னாளில் அவர்களும் வருத்தப்பட்டார்கள். எப்பேர்ப்பட்ட வீராங் கனையைத் தாம் கொன்றிருக்கிறோம் என்று எண்ணி எண்ணி வேதனைப்பட்டார்கள்.

விசித்திரம் என்னவென்றால் எந்த பிரான்சைத் தனது எதிரியாகக் கருதி ஆக்கிரமிக்க முன்வந்து கோர யுத்தம் நடத்தியதோ, அதே பிரான்சுடன் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோழமை கொண்டு ஓரணியில் நின்றது இங்கிலாந்து. முதல் உலக யுத்தம் தொடங்கியபோது பிரெஞ்சுப் படையுடன் இணைந்து இங்கிலாந்து வீரர்களும் பிரான்சின் தன்னிகரற்ற வீராங்கனையான ஜோன் ஆஃப் ஆர்க்குக்கு அஞ்சலி செலுத்தி விட்டே போரைத் தொடங்கியது!

அப்போது அவள் வெறும் ஜோன் ஆஃப் ஆர்க்காக இல்லை. புனித ஜோன் ஆகியிருந்தாள்! ஆம். எப்படிச் சமீ பத்தில் அன்னை தெரசாவை புனிதராக அங்கீகரித்து வாடிகன் தலைமை விழாக் கொண்டாடியதோ, அப்படி அன்றைக்கு ஜோன் ஆஃப் ஆர்க்கின் தேசப்பணியை ஒரு தெய் வப் பணியாகவே அங்கீ கரித்து அவளைப் புனித அன்னையாக அங்கீகரித் திருந்தது கிறித்துவப் பெருஞ்சபை.வாலிபப் பருவம் அடையுமுன்பே மரண மடைய நேர்ந்தாலும் பிரான்ஸ் உள்ளவரை ஜோனின் பெயர் அந்நாட்டு சரித்திரத்தில் நிலைத்திருக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜோன் ஆப் ஆர்க் எனும் வீராங்கனை
» சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு}
» மைக்க ஆஃப் பண்ணுங்க... ஆஃப் பண்ணுங்க...: செய்தியாளர்களிடம் எகிறிய அன்புமணி
» பசு கோமியத்தில் இருந்து ஆர்க் ஜூஸ்!: இது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி!!!
» அமெக்க ஜனாதிபதிகளான ஆப்ரஹாம் லிங்கனுக்கும், ஜோன் எவ்.கென்னடிக்கும் உள்ள சில ஒற்றுமைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum