ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!

3 posters

Go down

உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! Empty உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!

Post by சபீர் Tue Feb 16, 2010 1:21 pm

இரத்த அழுத்தம் என்றால் என்ன...?

உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக
அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது...?

பொதுவாக உப்பில்லாப் பண்டம் குப்பையிலேஎன்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன.

இதில் இரண்டு வகை சொல்கிறார்களே (அதாவது ரீடிங்) அதுபற்றி விளக்கம்?

அதாவது சிஸ்டாலிக் பிரசர் இதயம் அழுத்திச் சுருங்கும் போது ஏற்படுவது டய்ஸ்டாலிக் பிரசர் என்பது இதயம் தளர்ந்து விரியும் போது ஏற்படுவது இதன் சராசரியான அளவுகள் 120/80 என்பதாகும்.

உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் யாவை?

இதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் வருவது. அதனால் தான் இதற்கு அமைதியான ஆட்கொல்லி என்று பெயர். இதன் தாக்கம் என்பது தலைசுற்றல், தலை வலி, நடக்கும்போது மூச்சு வாங்குதல் போல் தெரிதல், மயக்கம் போன்ற தொல்லைகள் ஏற்படலாம்.

இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் யாவை...?

உயர் இரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் மூளை, இருதயம், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு, மாரடைப்பு, பாரிச வாயு, நினைவிழத்தல், சிறுநீரகம் செயலிழப்பு, கண்பார்வை பாதிப்பு, கைகால் வீக்கம், மூக்கில் ரத்தம் வடிதல் போன்றவை ஏற்படும்

இதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் யாவை...?

நல்ல உணவுப் பழக்கம் முக்கியம். உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம், நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தினமும் 45 நிமிடம் கை வீசி நடக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இடந்தருதல் ஆகாது. உச்சி மீது வானிடிந்து வீழ்ந்தாலும் கலங்காமல் எதையும் எளிதாகக் கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்தால் என்ன செய்யப் போகிறது உயர் ரத்த அழுத்தம்?

இதற்கான முதல் உதவிகள் யாவை...?


முறையான உடற்பயிற்சி, மருத்துவரின் ஆலோசனை அடிக்கடி கேட்டல், மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ளல், பால், பலசரக்கு, பண்டிகைக்குப் பணம் ஒதுக்கல் போல் மருந்துக்கும் மாதம் 300 ரூபாய் ஒதுக்கி வைத்தல், புகை பிடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்தல், எப்போதும் முக மலர்ச்சியுடன் இருத்தல் போன்றவை.

பி.பி யே வராதவர்கள் அதனை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் உபாயங்கள் யாவை...?

பி.பி. வராதவர்கள் என்று யாருமே இருக்க வாய்ப்பில்லை. எல்லோருக்கும் வரலாம். காரணம் வயது ஏற...ஏற உடல் உறுப்புக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் நோய்கள் வருகிறது. எப்படி வயது காரணமாக கண்புரை நோய் சதைச் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறதோ அது போல் தான் இதுவும். ஆனால் சில பேருக்கு குறிப்பாக காட்டுவாசிகள் சிலரை பி.பி. அண்டுவதில்லை என்கிறார்கள். அப்படி ஒரு 10 சதவிகிதம் இருக்கலாம். ஆனாலும் சாத்தியம் இல்லை. காரணம் இது வயது சம்பந்தப்பட்டது. அப்படி உங்களில் யாருகேனும் வரவில்லை என்றால் நீங்கள் யோகக்காரர்கள். எல்லோருக்கும் அப்படி ஒரு யோகம் அடித்தால் நல்லதுதானே. சோம்பலை துரத்தி, முகமலர்ச்சி கூட்டி, மன உளைச்சல் நீக்கி வாழ்ந்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

இதுவரை உயர் ரத்த அழுத்தம் பற்றியே கூறினீர்கள். அழுத்தக் குறைவு (லோ பிரசர்) பற்றிக் கூறுங்களேன்...?

அழுத்தம் குறைந்த (அ) குறைந்த இரத்த அழுத்தம் பற்றிக் கவலையே வேண்டாம். அதனால் தொல்லைகள் இல்லை. அவர்கள் அளவாக உப்புச் சேர்க்கலாம். உணவு விஷயங்களில் கூட உயர் ரத்த அழுத்தக் காரர்களுக்குத்தான் கெடுபிடிகள். இவர்களுக்கில்லை. அதற்காக எப்படியும் சாப்பிடலாம் என்று இல்லை. அளவான நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள் போன்றவை எல்லோருக்கும் அவசியம் தானே?




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! Empty Re: உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!

Post by எஸ்.அஸ்லி Thu Sep 23, 2010 12:40 pm

இரத்த அழுத்தம்பற்றின சிறந்த ஒரு தொகுப்பு நன்றி


உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! Empty Re: உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!

Post by சபீர் Sat Sep 25, 2010 10:11 am

எஸ்.அஸ்லி wrote:இரத்த அழுத்தம்பற்றின சிறந்த ஒரு தொகுப்பு நன்றி
உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! 678642 உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! 678642 உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! 678642 உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! Empty Re: உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!

Post by balakarthik Sat Sep 25, 2010 10:12 am

மிகவும் பயனுள்ள தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு! Empty Re: உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum