ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
by T.N.Balasubramanian Today at 6:24 pm

» 3வது அலை தவிர்க்க முடியாதது: எய்ம்ஸ் இயக்குநர்
by T.N.Balasubramanian Today at 6:23 pm

» சாதனையாளர்கள் வாழ்வில்...
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» கால்நடை வளர்ப்பில் டெக்சாஸ் மாநிலம் (அமெரிக்கா)
by ayyasamy ram Today at 5:49 pm

» கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம்
by T.N.Balasubramanian Today at 5:49 pm

» அமெரிக்காவில் கல்விப் புரட்சி (1954)
by ayyasamy ram Today at 5:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 5:20 pm

» மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..
by மாணிக்கம் நடேசன் Today at 3:27 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (541)
by Dr.S.Soundarapandian Today at 11:42 am

» கொரோனாவை ஒழிக்க சிலைக்கு மாஸ்க்! – விநோதம் செய்யும் ஜப்பானியர்கள்!
by ayyasamy ram Today at 7:18 am

» திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு நாளை முதல் 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:32 am

» கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
by ayyasamy ram Today at 6:27 am

» மீம்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» கடமையில் உறுதியாக இருங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» இணையே என் உயிர் துணையே...!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» குலம் தழைக்க பெரியவா சொன்ன பரிகாரம்
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» புதிய நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 8:52 pm

» டிரைவிங் ஸ்கூல்ல ஆன்லைன் கிளாஸ்…!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» சில்வண்டு சாக்லேட்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஒரு குட்டிக் கதை!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» களை- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லூட்கேஸ் – இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» இயற்கையை காதலிக்கும் தனிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» பியூட்டி ஏஞ்சல் எமி ஜாக்சன்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இசைப்புயலின் ஹைடெக் மாஸ்க்!
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:42 pm

» கருவி இல்லா சமையல் வேண்டுவோர் பெண் இனத்திற்கு எதிரானவர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:38 pm

» தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 4:12 pm

» கேரளா புட்டும் கடலைக் கறியும்:
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» ராமர்,சீதை,ராவண தேசங்களும் பெட்ரோல் விலையும்!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» ஜீ தமிழ் சீரியல் வில்லி நடிகை மகன் திடீர் மரணம்: சோகத்தில் குடும்பம்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பணத்தால் மனத்தூய்மை குறைகிறது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கோபத்தை அறிவால் அடக்குங்கள்!
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» போரில் இறந்த மகனுக்கு தாயார் நாட்டிய நடுகல்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» `துர்காதேவி சரணம்’ - பாக்கியம் அருளும் பட்டீஸ்வரம் துர்கை மகிமைகள்!
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு - விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» ப்ரொட்டோகால் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:17 pm

» இளமையை காக்கும் வால்நட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:13 pm

» முல்லாவிடம்,தளபதியின் சமரசம்…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» எவ்வளவு ஆழம் வெட்டணும்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:09 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Yesterday at 11:43 am

» உனக்கு என வரம் வேண்டும்...!
by aanmeegam Yesterday at 11:38 am

» இதற்கு இது பதில் இல்லையே!
by aanmeegam Yesterday at 11:36 am

» முனைவர் செளந்தரபாண்டியன் அய்யா அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by aanmeegam Yesterday at 11:35 am

» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 am

» கோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 am

» இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் - ஜோ பைடன் பரிந்துரை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 am

» ’பஞ்ச்’சோதி பராக்!
by T.N.Balasubramanian Thu Jun 17, 2021 9:21 pm

» எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான்…!
by aanmeegam Thu Jun 17, 2021 5:05 pm

Admins Online

அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு

Go down

அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு Empty அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு

Post by சபீர் Tue Feb 16, 2010 10:59 amமறுவாசிப்பு, மறுவாசிப்பு அப்படீன்னு சொல்றாங்களே, முயல் ஆமையை ஓட்டப் பந்தயத்திற்கு அழைத்த நம்ம பாட்டி காலத்துக் கதையைக் கொஞ்சம் வேறு மாதிரி வாசிக்கலாம், வருகிறீர்களா?

வாட்ட சாட்டமான, வஸ்தாது உஸ்தாது வேகத் திரு' முயலார் அவர்கள் `சோகத் திரு' ஆமையை "என்னவே, ரன்னிங் ரேஸ் வச்சிக்குருவோம், வர்றீயளா" என்று தெனாவெட்டாகக் கேட்கிறார். அசராத ஆமையார் இப்படி பதில் கொடுக்கிறார்: "என்ன இப்படி கேட்டுப்புட்டியள், இப்பமே `ஸ்டார்ட்' சொல்லிரும், வந்துருதேன்" முயல் வகையறாக்களின் வேக பிரதாபங்களை, இணையதளத்தில் `கூகிள் சர்ச்'சில் பார்த்துப் பார்த்து அந்தப் பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு தீர்மானமான முடிவோடு `ஸ்போர்ட்ஸ் சர்ட்' மாட்டிக் கொண்டு வந்து நிற்கும் ஆமையார், பந்தயம் தொடங்கிய மாத்திரத்தில் எகிறிக் குதித்துப் பறந்து ஓட மகா முயற்சி எடுக்கலானார். பிறகென்ன, உடலுக்குத் தாங்காத அளவுக்கதிகமான அந்த செய்கையைத் (Exertion) தாள மாட்டாது ரத்தக் குழாய்கள் வெடித்துச் சிதற, சோகத்திரு தெய்வத் திரு' ஆகிவிடுகிறார்.


பதட்டம், கலக்கம், ஓயாத மன அழுத்தம் இன்றைய வாழ்க்கையின் இலவச இணைப்பாக வந்து குடியேறி விடுகிறது. ஹைபர் டென்ஷன்' நடுத்தர வர்கத்தின் விவாதப் பொருளாகி இருப்பது, ‘தி ஹிண்டு' நாளேடு அண்மையில் (20.08.2007) தலையங்கம் எழுதி எச்சரிக்கும் அளவிற்குப் போயிருக்கிறது.

சிறுநீரக உதவி அறக்கட்டளை (KHT) என்ற அமைப்பு மூலம் ஸ்ரீபெரும்புதூரில் தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளும், மருத்துவப் பணிகளும் உயர் ரத்த அழுத்த கேஸ்களை 10ரூ குறைத்திருப்பதாக டாக்டர் மணி கூறுகிறார். அவரது தலைமையிலான அந்தக் குழு உணவு வகைகள், வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்யாமல் டென்ஷனை'த் தவிர்க்க முடியாதென தெரிவிக்கின்றனர்.

இதைச் சொன்னதற்கே, ‘அதெப்படி சார் முடியும்', என்று டென்ஷனாகி விட்டார் நண்பர் ஒருவர். அவரைச் சொல்லிப் பயனில்லை. நமக்கு வழிகாட்டியாக நாம் புரிந்து வைத்திருக்கிற விவகாரங்கள் அப்படி. தொலைக்காட்சி விளம்பரங்கள் குழந்தைகளின் டிபன்பாக்சையும், வீட்டு ஃப்ரிஜ்களையும் ரொப்புகின்றன'. உயர் வெப்பத் தீயில் வாட்டி எடுத்துத் தயாராகும் உணவின் கொலஸ்ட்ரால் ஒரு பக்கம். சுவையூட்டி அஜினமாட்டோ வகையறாக்களின் கைவரிசை ஒரு பக்கம். எல்லா பிஸ்கட்டுகள், சிப்ஸ் தயாரிப்பிலும் 200ரூக்கு மேல் உப்பு அள்ளிக் கொட்டுகிறார்கள். ஓட்டல் சாம்பார்'களைக் கேட்க வேண்டியதில்லை. மாங்காய்த் துண்டு முதல் வேகவைத்த வேர்க்கடலை மிக்ஸ்' வரை நமக்கு உப்பு ருசி தேவையாய் இருக்கிறது. போதாததற்கு ரொம்ப நாள் வச்சுக்கலாம்' என்று டப்பா டப்பாவாக பதப்படுத்தப்பட்ட (Processed Items) உணவு சமாச்சாரங்கள்-வாங்கினீயா, இல்லையா என்று மிரட்டும் விளம்பரங்கள்.

இந்த விளம்பரங்களை எங்கே நாம் கவனிக்காது விட்டுவிவோமோ என்று, வேண்டுமென்றே அவற்றின் ஒலியின் அளவு கூட்டப்பட்டிருக்கிறது. மெகா சீரியல் நாயகி மிரட்டலை விட, தொடர்ந்து வரும் விளம்பரங்களின் அதட்டல் அதனால்தான் தலையில் இடியாய் வந்து இறங்குகிறது. இந்தப் பேரோசைகள் (Noise Pollution) மன அழுத்தத்தை மேலும் கூட்டுகின்றன.

பதட்டமான வாழ்க்கையை நாம் க்யூ'வில் நின்று ஏடிஎம்' கார்டு போட்டு அல்லவா வாங்கத் துடிக்கிறோம்.

கடந்த மாதம் சென்னை புறநகர் ரயில் பயணத்தில் கோடம்பாக்கத்திலிருந்து, கடற்கரை வரை மாறி மாறி யார் யாரிடமோ செல்'லில் பேசிக்கொண்டே வந்தார் ஒருவர். அவர் திருவண்ணாமலையை அடுத்த சிறு நகரத்திலிருந்து அவசர வேலையாக குடும்பத்தோடு சென்னை வந்திருக்கிறார். அவரது மகன் படிக்கும் பள்ளியில் ஆடி பதினெட்டுக்காக திடீரென்று ஒரு வாரம் லீவு விட்ட செய்தி இங்கே வந்த பிறகுதான் தெரிகிறது. பையன் என்ன ஆவான் என்பதுதான் பதட்டம். முழுமையும் சொன்னால்தானே உங்களுக்குப் புரியும்?

பையன் படிப்பது திருச்செங்கோட்டில் - போர்டிங் ஸ்கூல்! விடுதிக்கும் விடுப்பு. மூடிவிடுவார்கள். இரண்டு பஸ் மாறி பையன் சொந்த ஊர் வரவேண்டும் - வீட்டிலோ ஆள் யாரும் இல்லை. எல்லாம் சென்னையில்!


"
பையன் பிளஸ் டூ வா, சார்," என்று மெதுவாகப் புகுந்தேன் நான்.

"
இல்ல சார், ஏழாவது" என்றாரே பார்க்கணும்.

"
இந்த வயசுல எதுக்கு சார் ஹாஸ்டல்"- நான் விடுவதாயில்லை.

"
பையன் முரடா இருக்கறான் சார், அதான்டிஸிப்ளின்' வேணும்னுட்டு அங்கே சேத்திருக்கோம்..."-அவர்.

"
இன்னும் முரடா இல்ல சார் ஆவான். நீங்களும் இல்ல பதட்டப்பட்டுக்கிட்டே பொழுதை ஓட்டணும்", என்று நான் சொல்ல அவர் பதிலேதும் சொல்லவில்லை.

டிஸிப்ளின், போட்டி, முதல் ரேங்க், பெரிய படிப்பு... என லட்சிய மைல்கற்களை நோக்கிய பாதையில் குழந்தைகளைப் பதட்டப்படுத்தி நாமும் அழுத்தத்திற்கு ஆளாகிறோம்.

ரிலாக்ஸ் பண்ண டி.வி. பார்க்கிறேன் என்று கிரிக்கெட்' பார்க்கிற கூட்டம் எத்தனை பதட்டம் அடைகிறது? ‘உலகக் கோப்பை' பார்த்த ஆசாமி நாற்காலியிலேயே கதை முடித்துக் கொண்டார் அல்லவா? அவ்வளவு ஏன், சேனலை மாற்றப் போனால், ‘ஏய், மாத்தாதே' என்று WWF நமது ஹாலுக்குள்ளேயே நடக்க ஆரம்பித்து விடுகிறதே...

வேலை நேரம் அதிகரிப்பதும், பளு கூடுவதும் யோசிக்கக் கூட நேரமின்றிச் செய்கிறது பிறகு உறக்கத்திலிருந்து திருடப்படும் கொஞ்சம்ரிலாக்சேஷன்' எப்படி உண்மையான ஓய்வு' அளிக்கும் நேரமாக இருக்க முடியும்? வங்கி நிர்வாகம் ஒன்று அண்மையில், ஊழியர்கள் டென்ஷன் படக்கூடாது. வாக்கிங்' போக வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேலை நேரத்தை மகிழ்ச்சியாகக் கடக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்களாம். நல்ல விஷயம்! ஆனால், கெடுபிடி நிறைந்த பணிச்சூழல், எப்படி பதட்டமின்றி வாழ அனுமதிக்கும்?

8
மணி நேர வேலை என்பது மட்டுமல்ல 18ம் நூற்றாண்டின் போர்க்குரல்! 8 மணி நேர ஓய்வு, மீதி உறக்கம் என்பதும் சேர்த்தது அது! சிந்தனைக்கு, கேளிக்கைக்கு, உற்சாகத்திற்கு நேரம் வேண்டும் என்ற ஆன்மீக (Spiritual) தளத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை அது, இன்று ஐ.டி. துறையில், உழைப்போரிடையே எத்தனை மன இறுக்கம் வெடிக்கிறது பாருங்கள்! அதுதான் அங்குள்ள புத்திசாலி நிர்வாகங்கள், யோகா- வாழும் கலை-பிறந்தநாள் வாழ்த்து... அது, இது என்று எப்படியாவது கிடா மடக்கப்' பார்க்கிறார்கள்.


சமூகச் சூழலின் பாதிப்பை அவரவர் சொந்த பிரச்சினையாக நோக்கும் கணத்திலேயே மன அழுத்தம் கூடி விடுகிறது. தன் வரைக்கும் பார்த்துக் கொண்டால், தான் மட்டும் எப்படியாவது ஜெயித்து விட்டால் போதும் என்ற சிந்தனை பதட்டங்களை ஈவிரக்கமின்றிக் கூட்டுகிறது. மன அழுத்தம் ஏற்கனவே இருக்கிற நோய்களின் சுருதியை இன்னும் கூட்டவும், இல்லாத நோய்களுக்கு அழைப்பு மணியை இசைக்கவும் செய்கிறது. இதயம், சிறுநீரகம், செரிமான உறுப்புகள் என்று எந்த அறைக்குள்ளேயும் பதட்டம்' நுழைந்தால் சிக்கல் அதிகரிக்கிறது.

திறந்த மனது, பரந்த எண்ணம், விரிந்த உறவுகள், பகிரும் இன்பங்கள், துயரத்தில் தோழமை என்ற வாழ்க்கைமுறை அழுத்த தூசுகளைத் துடைத்து பளுவை இறக்கி வைக்கிறது. அப்போது ஒலிக்கிற பாடல்கள், ‘சும்மா அதிருதில்ல' என்று மிரட்டாமல் மெல்லோசையாய் வருடி விடுகிறது
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு Empty Re: அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு

Post by ரிபாஸ் Wed May 19, 2010 12:52 pm

நல்ல தகவல் தலைவா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு Empty Re: அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு

Post by சபீர் Sun May 23, 2010 2:58 pm

@ரிபாஸ் wrote:நல்ல தகவல் தலைவா

நன்றி மச்சி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு Empty Re: அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum