புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
79 Posts - 68%
heezulia
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
4 Posts - 3%
prajai
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
2 Posts - 2%
Barushree
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
1 Post - 1%
nahoor
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
133 Posts - 75%
heezulia
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
7 Posts - 4%
prajai
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
3 Posts - 2%
Barushree
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10கண்ணாடி இதயங்கள் (2) Poll_m10கண்ணாடி இதயங்கள் (2) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடி இதயங்கள் (2)


   
   
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun May 30, 2010 3:57 am

அத்தியாயம் இரண்டு: “பொஸ்சின்” நிபந்தனைகள்


அதிகாலை இறைவனை வேண்டி பள்ளிவாசலில்
தொழும் உன்னத புனித வார்த்தைகளினால் விடிந்துகொண்டிருக்க, குணாளன் கண்ணை மெதுவாகத்
திறந்தான். பக்கத்துப் படுக்கையில் படுத்திருந்த நீலன் எழுந்து விட்டான் என்பது
திண்ணமாகியது. சனிக்கிழமை வேலை இல்லையே பின்னர் எதற்காக இந்த விடியற்காலையில்
எழும்பினான் என்று குணாளனின் மனம் தன்னைத்தானே கேட்டுக் கொண்டது. அப்போது
சமையலறையில் இருந்து ஒலித்த பாத்திரங்களின் சத்தத்தால் படுக்கையில் இருந்து
எழும்பி சமையலறையை நோக்கிச் சென்றான்.



“நீலா...என்னடா இது உனக்குத்தான் வேலை
இல்லையே..பிறகு ஏன் சமையல்...?,



“சத்தம் போடாத...போய் சீக்கிரம்
வெளிக்கிடு இன்றைக்காவது உனக்கு நல்ல காலம் பிறக்கட்டும்...உனக்குப் பிடித்த
இடியப்பமும் மீன் குழம்பும் இன்னும் கொஞ்ச நேரத்தில ரெடி ஆகிடும்...”



“இதென்ன...பேசாம பிரட்டும் ஜாமும்
சாப்பிட்டுப் போறதுக்கு...ஏன் கஷ்டப்படுகிறாய்...” என்று கூரியவனை எரிக்கும்
கண்களால் பார்த்தான் நீலன். நீலனின் கோபம் பொல்லாதது என்று நன்கே தெரிந்த குணாளன்
அங்கிருந்து மெதுவாக நழுவினான். என்னதான் நடந்தாலும் நீலன் போன்ற நண்பன் கிடைத்ததை
உண்மையிலேயே தனது அதிர்ஷ்டம் என்று அடிக்கடி கூறிக்கொள்வான், இன்று கண்ணில்
இருந்து ஆனந்தமாய் கண்ணீர் கூட வந்தது அவனது செயலைக் கண்டு.



நீ இன்டர்வியூக்கு போக இருக்கும் கம்பனியின் பெயர் என்ன சொன்னாய்..?”
கேட்டுக்கொண்டே சமையலறையில் இருந்து வந்த நீலன், குணாளன் இறைவன் படத்தின் முன்னர்
நின்று கும்பிடுவதைக் கண்டதும் மௌனமாகினான்.



“அல் சகாரா வெயார்ஸ்...”


“பெயர் இப்படித்தான் இருக்கும் ஆனால்
அத வச்சு நடத்துறது கூடுதலாக இந்தியர் அல்லது பிலிப்பினோக்களாக
இருக்கும்...உனக்குத் தெரிஞ்சது தானே....கேக்குற கேள்விக்கெல்லாம் ஒழுங்காப் பதில்
சொல்லு பயப்படாத...இன்றைக்கு நிச்சயம் வெற்றி உண்டு உனக்கு..”



“ஏதோ சொல்லுற..நடக்குதா என்று
பார்ப்போம்...ம்ம்...இறைவா..”



நீலனின் கைபேசி காயத்திரி மந்திரத்தை
ஒலிக்கத் தொடங்கியது.



“ஹலோ ஹலோ யார் பேசுறிங்க...கிளியர்
இல்ல....கொஞ்சம் பொறுங்க...சிக்னல் வீக்கா இருக்கு...நான் பால்கனிக்கு போகிறன்...”
என்றவன் மீண்டும், “குணா உங்கட வீட்ட இருந்து போன்...பால்கனி போய்க் கத...இஞ்ச
சிக்னல் சரியா வராது...ஹ்ம்ம்...இந்த எட்டிசலாட் எங்களுக்கு மட்டும் ஏன் வஞ்சகம்
பண்றான்களோ..”



“ஹலோ யார் அம்மாவா...”


“ஓம் ராசா...உந்த...இன்டர்வி
இன்டைக்குத் தானே...?”



“ஓம் ஓம்...இன்றைக்கு தான்....இனித்தான்
போகப் போறன்...”



“அண்ணா...குட் லக்ணா....”


“நன்றிடா செல்லம்....”


அவனது வீட்டிலிருந்து முன் வாழ்த்து
தெரிவித்து நேர்முகத் தேர்வுக்கு செல்ல முதல் வரும் தொலைபேசி வரிசையில் இது
இருபதாவது. அவனது அம்மாவும் இரண்டு தங்கைகளும் இவனை நம்பியே உயிர் வாழ்கின்றார்கள்.
வீட்டில் மூத்தவனாகப் பிறந்த குணாளனுக்கு இரு தங்கைகளையும் கரைசேர்க்கவேண்டிய
மாபெரும் பொறுப்பு உள்ளதை அடிக்கடி நினைவில் வைத்துக்கொள்வான். தன்னைப்
படிப்பித்து முடித்து விட்டு நிம்மதியாக போய்ச சேர்ந்த தந்தையை நினைத்தால் நெஞ்சம்
கனக்க அழுதேவிடுவான்.



இன்று அவன் நினைப்பதெல்லாம் வாங்கிய
கடனை அடைத்து பின்னர் ஒரு வீடு கட்டவேண்டும் அங்கே தாயை இராணி போல வைத்து சேவகம்
புரியும் சேவகனாக தான் இருக்கவேண்டும், மேலும் இரு தங்கைகளையும்
படிப்பிக்கவேண்டும், திருமணம் செய்து வைக்க வேண்டும்...இன்னும் அடுக்கடுக்காய் அவனுக்குள்
சிந்தனை பெருக்கெடுக்கும்.



அவசரம் அவசரமாய் நீலனின் சமையலைப் பதம்
பார்த்துவிட்டு நேரத்தைப் பார்த்தான்.



“குணா..பஸ்சில் போனா உனக்கு நேரம்
போதாது, டாக்சி ஒன்றைப் பிடித்துக் கொண்டு செல்..இந்தா இருநூறு த்ராம்ஸ் கையில
வச்சுக் கொள் ஏதாவது அவசரத்துக்குத் தேவைப்படும்..”



“இல்லடா...என்னட்ட இருக்கு..”


“வேண்டுண்டா....” என்று அவன் அதட்ட
முன்னரே நீலனிடம் இருந்து பணத்தைப் பிடுங்கிய குணாளன் நீலனை ஒரு நன்றி கலந்த
பார்வையுடன் பார்த்துவிட்டுச் சென்றான்.



வீதியில் சென்று கொண்டிருந்த டாக்ஸியை
மறித்து உள்ளே ஏறிக்கொண்டான். வாகனத்தின் உள்ளே புன்முறுவலுடன் வரவேற்ற பங்களாதேஸ்
வாலிபன் ஹிந்தியில், “ஆப் கஹாங் தக் ஜாயங்கே?” என்று கேட்டதற்கு ஆங்கிலத்தில்
தனக்கு ஹிந்தி தெரியாது என்று பதிலளித்த குணாளனுடன் ஆங்கிலத்தில் உரையாடினான்.



“பர் துபாய்? எங்கே பர் துபாயில்...?”


“இந்தா...இந்த விசிடிங் கார்டில அட்ரஸ்
இருக்கு...”



“அச்சா ஜி....ஆப்....சாரி உங்களுக்கு
ஹிந்தி தெரியதுதானே...பட், இந்த கம்பனில வேலை செயோனும்னா ஹிந்தி
தெரிஞ்சிருக்கணும், மலையாளம் தெரிஞ்சுக்கணும்....அப்புறம் அரபிக் தெரிஞ்சா பிளஸ்
பாயிண்ட்.....”



“எப்படித் தெரியும் உனக்கு....? நீயோ
ஒரு டிரைவர்...” அவனை நோக்கி ஆச்சரியத்துடன் பார்த்தான் குணாளன்.



“சாப்...சுனியே....நான் ஒரு
கொம்பியூட்டர் பட்டதாரி, நான் இங்க வேலைக்கு அலையாத இடமே இல்லை...எல்லாரும்
என்னைக் கேட்டது எக்ஸ்பிரியன்ஸ் இருக்கா என்றுதான்...கடைசியில...இப்படி டாக்சி
ஓடுகின்றேன்...பெஸ்ட் ஒப் லக்..உங்களுக்கு எக்ஸ்பிரியன்ஸ் இருக்குத்தானே...?”



அவனது கேள்வியால் இதயமே சிதறுவதைப் போல
உணர்ந்த குணாளன் மௌனித்தான். தொடர்ந்து அந்த ஓட்டுனர் கதைத்தவற்றிற்கு மௌனமாய் இருந்துவிடவே
அந்த பங்களாதேசியோ “சாரி என் கேள்விக்கு மன்னிப்புக் கோருகிறேன்...” என்று தன்
தவறை தெரிவித்தான் அந்தப் பேச்சையும் கிரகிக்காத
குணாளனுக்குள் பல்லாயிரம் சோகப் பிசாசுகள் கும்மாளமிட்டன.



நேர்முகம் தொடங்கியது, அவனுக்குள்
பதட்டம், மனமோ இறைவனை வேண்டிக்கொண்டது.



“ ப்ளீஸ் டேக் யுவர் சீட்...”


“தேங்க்ஸ்”


கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பளிச்சென்று
பதிலளித்த குணாளனை நோக்கி,



“ வெல்...நல்லா தியோரெட்டிகல் அறிவு
உங்களுக்கு உண்டு...பட், எங்க உங்கட வேலைத் திறமைச் சான்றிதழ்? அடுத்தது நீங்க
ஸ்ரீலங்கன் என்று விளங்குது, இங்க ஹிந்தி தெரிஞ்சிருக்கோணும்...” என்று ஒருவர் கூற
மற்றவர், “ ஆனால் உங்களுக்கு குறைஞ்ச பட்சம் மூன்று வருட திறமை இருந்தால் நீங்க
ஹிந்தி தெரிஞ்சுக்காமலே இங்க வேலை புரியலாம், ஆனா ஒரு வருடத்துக்குள் ஹிந்தி
பழகவேண்டும் என்ற ஒப்பந்தத்தில்...” குணாளனின் மனமோ அழுது கொண்டிருக்க வேலையில்
தன் துன்பத்தைக் காட்டாது,



“சார் நான் சமீபத்தில்தான் படித்து முடித்தேன்..”
என்று மட்டும் கூறிக்கொண்டான், ஏனெனில் அவனைப் பற்றிய விபரங்கள் அனைத்துமே தனது
பயோ டேட்டாவில் அவர்களுக்கு அனுப்பி அதனைப் பார்த்தே நேர்முகத்திற்குக் கூப்பிட்டு
இருந்தார்கள், அதிலே அனுபவம் இல்லாதவன் என்று தெரியும்தானே..பின்னர் ஏன்
கூப்பிட்டு நம்பிக்கை கொடுத்துப் பின்னர் மனத்தைக் கலங்க வைப்பானேன்...உள்ளத்திலே
வந்த குமுறலை அடக்காமல் நச்சென்று கேள்வி கேட்க எண்ணியவனை,



“சாரி இந்த வேலை உங்களுக்குக்
கிடையாது...யூ கான் கோ...கோல் தே நெக்ஸ்ட்....” என்று உடல் பருத்து இருந்த
நேர்முகம் காணுபவர் கூறவே அடக்கி வைத்திருந்த சொற்களை எடுத்துவிட்டான்.



ஆசையுடன் வந்தவனுக்குக் கிடைத்தது
வேலையல்ல “கெட் அவுட்” என்ற ஒரு வார்த்தைதான்..அருகில் இருந்த டெலிபோன் பூத்திற்கு
செல்ல நினைத்தவனை உள்ளிருந்து வந்த ஒருவர்,



“நீங்க குணாளன்தானே..?”


“ஆம்....நீங்க...?”


“நான்...ரமணன்...மல்லிகாவின்
கணவன்....” என்று கையை நீட்டினான். மனம் உடைந்த நிலையில் இருந்த குணாளனுக்கு அவன்
வந்தது ஆறுதலாக இருந்தது.



“நீ..நீங்க எப்படி இங்க..மல்லிகாவுக்கு
எனக்கு இங்க இண்டர்வியூ என்று சொல்லவில்லையே..”



“உங்கட நண்பர்தான் எனக்கு போன்
பண்ணினார், அவர் நினைத்தது சரியாப் போச்சு...நீங்க கவலைப்படாதீங்க...இந்தக்
கொம்பனியிலதான் வேல செய்யவேண்டுமா என்ன...? என்ன இங்க நீங்க வேல பார்த்தா ஒரு
பத்தாயிரம் த்ராம்ஸ் மாதத்திற்கு கிடைக்கும்...பரவாயில்ல...என் கம்பனி இதுபோல
பெரிசு இல்ல...உங்களுக்கு சம்மதம் என்றால் மாதம் மூவாயிரம் த்ராம்ஸ் சம்பளத்துடன்
என்னட்ட வேலை செய்யலாம்..யோசிச்சு முடிவெடுங்கோ..கொன்றாக்ட் மூன்று
வருசத்திற்கு...சம்பளம் பிறகு வேணும்டா கம்பனியின் முன்னேற்றத்தைப் பொறுத்து
உயர்த்தித் தரலாம். வாங்க வந்து என் கார்ல இருங்கோ உங்களை ஷார்ஜா மட்டும் கொண்டு
வந்து விடுகின்றேன்...”



அவனது வார்த்தைகளால் குளிர்ந்த மனம் முதலில்
நீலனுக்கே நன்றி சொல்லிக்கொண்டது. காரில் ஏறிக்கொண்டவன் ஒன்றுமே இல்லை என்று இருப்பதைவிட
மூவாயிரம் த்ராம்ஸ் எவ்வளவோ மேல் என்று எண்ணிக்கொண்டான், ஆனால் மறுகணமே வீட்டு வாடகை,
சாப்பாட்டுச் செலவு போக வீட்டிற்கு அனுப்புவது மாதத்திற்கு எவ்வளவு தேறும் என்னும்
கணக்கில் இறங்கிவிட்டான், வட்டிக்கு வேண்டிய பணம், தங்கைகளின் படிப்புச் செலவு, அவர்களின்
வீட்டு வாடகைக் காசு, உணவுச் செலவு போன்றவற்றிக்கு நிச்சயமாக இந்தத் தொகை காணாது என்று
முடிவு செய்தான்.



“என்ன குணாளன் படு யோசனை...? நானும் இப்படித்தான்
ஒன்றுமேயில்லாமல் இங்க வந்தான் இப்ப பாருங்க...எனக்குக் கீழ பத்துப் பேர் வேல செய்யறாங்க..உண்மையைச்
சொன்னா...எனக்கு மேலும் ஒருவர் தேவையே இல்லை...உங்கள் நிலைமைய உங்கள் நண்பர் நீலன்
விளக்கியதாலும் மல்லிகாவுக்கு உங்களை தெரியும் என்டதாலும்தான் இதில நான் சம்மதிச்சேன்..பட்
ஒரு மிக மிக முக்கியமான கொண்டிஷன்...நீங்கள் என் தங்கச்சிய லவ் என்று சுத்தியதாக என்
காதுக்குள் விழுந்தது...அது அந்தக் காலத்துடனேயே போகட்டும்...என் தங்கச்சிக்கு அமெரிக்காவில
டொக்டர் வேல செய்ற மாமா மகன் என்று நாங்க தீர்மானிச்சு வச்சிருக்கோம், தங்கச்சிக்கும்
இதில உடந்தைதான்...ஏன் இதச் சொல்றன் என்றால்...”



“ஓகே ரமணன் எனக்கு வேலைதான் முக்கியம்...”


“இன்னுமொரு கொண்டிஷன்..நான் கூலாக் கதைக்கிறத
நினைச்சு ஏதோ நானும் உங்களுக்கு நண்பனாகிவிட்டதா நினைக்காதிங்க...இப்ப என்னை ரமணன்
என்று கூப்பிட்டாலும் நாளை வேலை கிடைச்ச பிறகு நான் உங்கட பொஸ் என்றத மறந்திடாதிங்க...”



குணாளனுக்கு இப்பொழுதுதான் இந்த உலகத்தில்
வசிக்கும் வேறுபட்ட மனிதர்களினைப் பற்றிப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. வேலை
கிடைக்காவிட்டால் வீட்டுக்கு திரும்பவேண்டும், அங்கு சென்றால் இதைவிட குறைவான சம்பளமே
கிடைக்கும், அத்துடன் வானதி தன்னைக் காதலிக்கின்றாளா என்பதும் தெரியாது எனவே இப்போதைக்கு
காதலைப் பணயம் வைத்து வேலையைப் புரிவதுதான் புத்திசாலித்தனம் என்று எண்ணிக் கொண்டான்.



“நெக்ஸ்ட் குணாளன்....நீலனை இனி எந்தக்
காரணத்திற்காகவும் எனக்கோ ஏன் வீட்டிற்கோ போன் செய்யவேண்டாம் என்று சொல்லுங்கள்...
உங்கள் சம்மதம் இன்றைக்கே எனக்கு சொல்லவேண்டும் ஓகே? அப்பாதான் உங்கட விசா அலுவல்களைப்
பார்க்கமுடியும்.. குட் பை...”



என்ன ஒரு கிறுக்கனாக இருப்பான் போலிருக்கே
எப்படி இவனிட்ட வேலை செய்வேனோ..அதுவும் மூன்று வருடம்...என்று நினைத்த குணாளன்,



“சார்...இல்ல பொஸ் எப்படி உங்கள கூப்பிடுறது....எனக்கு
உங்களிடம் வேலை செய்ய பரிபூரண சம்மதம்..”



“பொஸ் என்றுதான் என்னை எல்லோரும் அழைப்பார்கள்...சரி
திங்கள் கிழமை நீங்கள் ஒமானுக்கருகில் உள்ள தீவோன்றிற்குப் போய் வரவேண்டியிருக்கும்
பின்பு வேலைப் பெர்மிட்டுடன் இங்க வரலாம்...நான் எலா வேலையையும் ஞாயிறே முடித்துவிடுகின்றேன்...ரிமேம்பர்...இந்தக்
கொம்பனி ப்ரீ சோனில் இருப்பதால் எனக்கு உங்கள எந்த நேரத்திலும் நீக்க அதிகாரம் இருக்கு...கொண்டிஷன்
எல்லாம் நினவில இருக்கட்டும்...”

(தொடரும்.....)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக