புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
5 Posts - 3%
prajai
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
2 Posts - 1%
சிவா
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
435 Posts - 47%
heezulia
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
30 Posts - 3%
prajai
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 12:42 pm

வெண்பா

(சக்திபெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்(திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா)-அத்தனே!
(னின்)றனக்குக் காப்புரைப்பார்; நின்மீது செய்யும் நூல்
என்றிதற்கும் காப்புநீ யே.

கலித்துறை

நீயே சரணம்நின தருளே சரணஞ் சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்;
வாயே திறாவாத மெளனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே.

விருத்தம்

செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்
சீர்பெற் றிடநீ அருள்செய்வாய்,
வையந் தனையும் வளியினையும்
வானத் தியுமுன் படைத்தவனே!
ஐயா! நான்முகப் பிரமா
யானை முகனே! வாணிதனைக்
கையா லனைத்துக் காப்பவனே!
கமலா சனத்துக் கற்பகமே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 12:42 pm

அகவல்

கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன்,
இந்திர குரு, எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மிந்தன்
கணபதி தாளிக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்; கூறக் கேளீர்;
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஐயக்கொடி நாட்டலாம்;
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்;
அச்சந் தீரும், அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மையும் எய்தவும்
இங்குநாம் பெறலாம்; இஃதுணர் வீரே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 12:43 pm

வெண்பா

(உண)ர்வீர் உணர்வீர் உலகத்தீர்! இங்குப்
(புண)ர்வீ(ர்,அமரரு)றும் போக(ம்) - கண(ப)தி(யைப்)
(போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்
காதலுடன் கஞ்சமலர்க் கால்.)

கலித்துறை

காலை பிடித்தேன் கணபதி! நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பழு(தும்)
வேலைத் தவறு ந்கழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கே.

விருத்தம்

எனக்கு வேண்டும் வரந்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனதிற் சலன மில்லாமல்,
மதியில் இருளெ தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்,
கனக்குங் செல்வம், னூறுவயது;
இவையும் தரநீ கடவாயே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 12:43 pm

அகவல்

கடமை யாவன தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்,
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,
நாரா யணனாய், நதிச்சடை முடியனாய்,
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி,
அல்லா! யெஹோவா! எனத்தொழு தன்புறும்
தேவருந் தானாய், திருமகள், பாரதி,
உமையெனுந் தேவியர் உகந்தவான் பொருளாய்,
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்,
இந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும்
கடமை யெனப்படும்; பயனிதில் நான்காம்;
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே
தன்னை யாளுஞ் சமர்த்திரக் கருள்வாய்.
மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா!
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்,
அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம்
இன்புற் றிருக்க வேண்டி, நின் நிருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 12:44 pm

வெண்பா

களியுற்று நின்று, கடவுளே! இங்குப்
பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய்-ஒளிபெற்றுக்
கல்விபல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல்வினைக்கட் டெல்லாம் துறந்து

கலித்துறை

துறந்தார் திறமை பெரிததினும் பெரிதாகு மிங்குக்
குறைந்தாரைக் காத்தெளியார்க் குண வீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாளும் நாதனைப் போற்ரிடிந் தொண்டர் செயுந்தவமே

விருத்தம்

தவமே புரியும் வகையறியேன்,
சலியா துறநெஞ் சறியாது.
சிவமே நாடிப் பொழுதனைத்தும்
தியங்கித் தியங்கி நிற்பேனை,
நவமா மணிகள் புனந்தமுடி
நாதா! கருணா லயனே! தத்
துவமா கியதோர் பிரணவமே,
அஞ்சேல் என்று சொல்லுதியே.
சொல்லினுக் கரியனாய்ச் சூழ்ச்சிக் கரியனாய்ப்
பல்லுரு வாகிப் படர்ந்தவாகிப் படந்தவான் பொருளை,
உள்ளுயி ராகி உலகங் காக்கும்
சக்தியே தானந் தனிச்சிடர்ப் பொருளை,
சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப்
பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி,
ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியக் காக்கும் தந்திரம் பயின்று
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய்
வாழ்ந்திட விரும்பினேன்; மனமே! நீயிதை
ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பலமுறை
சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க் கெல்லாம்
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து
தேறித் தேறிநான் சித்திபெற் றிடவே,
நின்னா லியன்ற துணைபுரி வாயேல்,
பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன்;
மனமே! எனைநீ வாழ்வித் திடுவாய்!
வீணே யுழலுதல் வேண்டா,
சக்தி குமாரன் சரண்புகழ் வாயே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 12:44 pm

வெண்பா

புகழ்வோம் கணபதிநின் பொற்கழலை நாளும்
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே- இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யையெலாம்; ஈங்கிதுகாண்
வல்லபைகோன் தந்த வரம்.

கலித்துறை

வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
சுரவும் புலைமை விருப்பமும் ஐயமும் காய்ந்தெறிந்து
'சிரமீது எங்கள் கணபதி தாள்மலர் சேர்த்தெமக்குத்
தரமேகொல் வானவர்' என்றுளத் தேகளி சார்ந்ததுவே

விருத்தம்

சார்ந்து நிற்பாய் எனதுளமே.
சலமும் கரவும் சஞ்சலமும்
பேர்ந்து, பரம சிவாநந்தர்
பேற்றை நாடி, நாள்தோறும்
ஆர்ந்த வேதப் பொருல்ஆட்டும்
ஐயன், சக்தி தலைப்பிள்ளை,
கூர்ந்த இடர்கள் போக்கிடுநங்
கோமான் பாதக் குளிர்நிழலே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 12:45 pm

அகவல்

நிழலினும் வெயிலினும் நேர்ந்நற் றுணையாய்த்
தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்டு,
மண்ணினும் காற்றினும் வானினும் எனக்குப்
பகைமை யொன் றின்றிப் பயந்தவிர்த் தாள்வான்,
உள்ளத் தோங்க நோக்குறும் விழியும்,
மெளன் வாயும், வரந்தரு கையும்,
உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான்,
ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்.
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்
தானே யாகிய தனிமுதற் கடவுள்,
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூலவித் தாவான்,
சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்
நிதமும் போற்றும் நிர்மலக் கடவுள்,
ஏழையர்க் கெலாம் இரங்கும் பிள்ளை,
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 12:45 pm

வெண்பா

முறையே நடப்பாய், முழுமூட நெஞ்சே!
இறையேனும் வாடாய் இனிமேல், கறையுண்ட
கண்டன் மகன்வேத காரணன் சக்திமகன்
தொண்டருக் குண்டு துணை.

கலித்துறை

துணையே! எனதுயி ருள்ளே யிருந்து சுடர்விடுக்கும்
மணியே! எனதுயிர் மன்னவனே! என்றன் வாழ்வினுக்கோர்
அணியே! எனுள்ளதிதி லார முதே! என தற்புதமே!
இணையேதுனக்குரைப் பேன்கடை வானில்எழுஞ்சிடரே!

விருத்தம்

சுடரே போற்றி! கணத்தேவர்
துரையே போற்றி! எனக்கென்றும்
இடரே யின்றிக் காத்திடுவாய்,
எண்ணா யிரங்கால் முறையிட்டேன்;
படர்வான் வெளியிற் பலகோடி
கோடி கோடிப் பல்கோடி
இடரா தோடு மண்டலங்கள்
இசைத்தாய், வாழி இறையவனே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 12:46 pm

அகவல்

இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்
தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்
உள்ளொளி யாகி உலகெலாந் திகழும்
பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!
ஆதிமூலமே! அனைத்தையும் காக்கும்
தேவ தேவா! சிவனே! கண்ணா!
வேலா! சாத்தா! விநாயகா! மாடா!
இருளா! சூரியா! இந்துவே! சக்தியே!
வாணீ! காளீ! மாமக ளோயோ!
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே!
வேதச்சுடரே! மெய்யாங் கடவுளே!
அபயம் அபயம் அபயம்நான் கேட்டேன்;
நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்;
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்;
உடைமை வேண்டேன், உந்துணை வேண்டினேன்;
வேண்டா தனைத்தையும் நீக்கி
வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 12:46 pm

வெண்பா

கடமை தானேது கரிமுகனே! வையத்
திடம்நீ யருள்செய்தாய், எங்கள்-உடைமைகளும்
என்பங்களு மெல்லாம் ஈந்தாய்நீ யாங்களுனக்கு
என்புரிவோம் கைம்மா றியம்பு.

கலித்துறை

இயம்பு மொழிகள் புகழ்மறை யாகும்; எடுத்தவினை
பயன்படும்; தேவர் இருபோதும் வந்து பதந்தருவார்
அயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறும் மேன்மைகளே.

விருத்தம்

மேன்மைப் படுவாய் மனமே! கேள்
விண்ணின் இடிமுன் விழுந்தாலும்,
பான்மை தவறி நடுங்காதே.
பயத்தால் ஏதும் பயனில்லை;
யான்முன் உரைத்தேன் கோடிமுறை,
இன்னுங் கோடிமுறை சொல்வேன்,
ஆன்மா வான கணபதியின்
அருளுண்டு அச்சம் இல்லையே.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக