புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
156 Posts - 79%
heezulia
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
3 Posts - 2%
Pampu
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
prajai
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
321 Posts - 78%
heezulia
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_m10இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்


   
   
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 11, 2010 9:25 pm

தேனி மாவட்டம் பண்ணபுரத்தில் பிறந்த இசைஞானியின் இயற்பெயர் ஞானதேசிகன் என்கிற ராசையா. ஜூன் 2, 1943-ல் பிறந்தார். தனது மிக இளம் வயதிலேயே ஆர்மோனியத்தை வாழ்க்கைத் துணையாக ஏற்றவர், இன்றுவரை இசையை ஒரு தவமாகக் கருதி, அந்த இசை உலகிலேயே வாழ்கிறார், தன்னைப் பற்றிய எந்த விமர்சனம் குறித்தும் கவலைப்படாமல்! ராஜாவின் முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 33 வருடங்களாகிறது. இந்த 33 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிப் படங்களிலும் ராஜாவின் ஆர்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு. மலேஷியா வாசுதேவன் என்ற அற்புதமான பாடகர் தொடங்கி எத்தனையோ கலைஞர்களை, பாடலாசிரியர்களை உருவாக்கியவர் இளையராஜா. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு. ஒரு முறை இத்தாலியில் இளையராஜா நிகழ்த்திய இசை நிகழ்ச்சியில் அவர் வாசித்த 'ஒன் நோட்' இசைத் துணுக்கில் அடங்கியிருந்த நுட்பத்தைப் பார்த்து, பிரபல இசை விமர்சகர் டங்கன் கிளண்டே, "இந்த மனிதர் என்னமோ ஜாலம் செய்கிறார். அது என்னவென்றுதான் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னைப் போன்ற விமர்சகர்களின் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாததாக உள்ளது அந்த இசையின் நுட்பம்" என்று எழுதினார். இந்தியாவின் இசை விமர்சகரான சுப்புடு, "இளையராஜா வேலி தாண்டாத வெள்ளாடு மாதிரி... அவரால் இந்த இசை மரபு வேலியை ரொம்ப சேப்டியா, சுலபமா தாண்ட முடியும். பல சாகஸங்கள் செய்ய முடியும். ஆனா, இசை மரபுகளை மதிக்கிறதோட, அந்த மரபுக்குள்தான் அதிசயங்கள் நிகழ்த்தணும் என்ற வைராக்கியத்தோடு வாழும் உன்னத கலைஞர் அவர். சிந்து பைரவியில் 'மரிமரி நின்னே...'வை அவர் கொடுத்த அழகு, நம்ம இசை மரபு எந்த அளவு சோதனை முயற்சிகளுக்கு இடம் கொடுக்கிறது என்பதற்கான அடையாளம்" என்றார். சில ஆண்டுகளுக்கு முன் திருவாசகம் ஆரட்டோரியோ ஒலித் தட்டை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்க இளையராஜாவை அழைத்துச் சென்றார் வைகோ. அப்போது, 'சார்... இவர்தான் எங்களின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும் ஒலிப்பவர்!' என்று இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் வைகோ. அதற்கு பிரதமர் சொன்ன பதில்: "I Know...Mr. Vaiko". எந்த விருதையும் 'வாங்காத' அல்லது விருதுக்கு வணங்காத உயர்ந்த கர்வத்துக்கு சொந்தக்காரர் இசைஞானி. தனது இசையை சர்வதேச அரங்கில் லாபி பண்ண வேண்டும் என்ற 'திறமையை' வளர்த்துக் கொள்ள இன்றுவரை முயற்சித்தவரில்லை அவர். இருந்தும் மூன்று தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார் (சாகர சங்கமம், சிந்து பைரவி மற்றும் ருத்ர வீணை). ஆனால் ஆறு முறை அவருக்கு கிடைக்க வேண்டிய விருதுகள் இறுதி நேர 'ஜூரி ஆட்டத்தில்' கிடைக்காமல் போயிருக்கின்றன (மூன்றாம் பிறை, காதல் ஓவியம், நாயகன், தேவர் மகன், காலாபாணி மற்றும் ஹே ராம்). இந்திப் படவுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இளையராஜாவின் இசையை அப்பட்டமாகக் காப்பியடித்தே பிழைப்பை ஓட்டுகின்றனர் பல இசையமைப்பாளர்கள். பிரபல இசையமைப்பாளர் அனு மாலிக் தனது 'பேட்டா' (தக் தக் கர்னே லகா..., கோயல் சி தேரி போலி...), 'போல் ராதா போல்' (ஓ ப்யா ப்யா...) படங்களில் ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களை அப்படியே உல்டா செய்து பெயர் வாங்கினார். அனாரி (சின்னத்தம்பி), விராசட் (தேவர் மகன்) படங்களில் அப்படியே ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டனர் பாலிவுட்டில். இந்த லிஸ்ட் ரொ...ம்ம்ம்பப் பெரியது! இதுபற்றி ஒரு முறை ராஜாவிடம் கேட்டபோது, 'விடுங்கய்யா... இதுக்காக நான் சண்டை போட ஆரம்பிச்சா, இசை அமைக்க நேரம் இருக்காது. உருவாக்கிக் கொடுக்கறது என் சுபாவம்... திருடுவது அவர்கள் சுபாவம். எதில் யாருக்கு இன்பமோ அதைத் தொடர்கிறார்கள்!," என்றார் அமைதியாக. இன்றைக்கு புதிய படங்களில் இளையராஜாவின் பிரபலமான பின்னணி இசையைப் பயன்படுத்துவதே ட்ரெண்டாகி விட்டது. சுப்பிரமணியபுரம், பசங்க, சர்வம் என பல படங்களில் 'இசை - இளையராஜா' என்று போடும் அளவுக்கு ராஜாவின் முந்தைய இசைக் கோர்வைகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். ராஜா என்ற கலைஞனின் இசை காலத்தை வென்றது என்பதை உணர்த்தும் செயலாகவே இதை பலரும் பார்க்கிறார்கள். சர்வதேச அளவில் சிம்பனி மற்றும் ஆரட்டோரியோ ஆகிய இசைக் கோர்வைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய இசைமேதை இளையராஜாதான் என்பது பிரிட்டன் இசை நடத்துடன் ஜான் ஸ்காட்டின் கருத்து. ராஜா இசையமைத்த சிம்பனி இசை வெளிவராததில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவது உண்மையே. ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை ராஜா சொன்னால் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. இதுபற்றி ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'என்றைக்கு அந்த இசை வெளிவர வேண்டும் என்று விதி இருக்கிறதோ அன்றைக்கு வந்துவிட்டுப் போகட்டும்' என்றார். அந்த சிம்பனி இசை வெளியீட்டு உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான திருவாசம் இசைக் கோர்வை, ராஜாவின் ஆரட்டோரியோ வடிவம். "ஒருவன் ஒழுக்க சீலனாக, நல்ல எண்ணம் கொண்ட மனிதனாக மாற ராஜாவின் இந்த திருவாசகம் இசைத் தொகுப்பை தினமும் காலையில் கேட்டால் போதும்" என உளமாரச் சொன்னவர் இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி. இசை அன்பர்கள் பலருக்கும் அவரது 'ஹவ் டு நேம் இட்', 'நத்திங் பட் விண்ட்' பேன்ற வெகு சில ஆல்பங்கள்தான் தெரியும். ஆனால் உண்மையில் 30க்கும் ,சினிமா இசை தவிர்த்த ஆல்பங்களை உருவாக்கியுள்ளார் இளையராஜா. அவற்றையெல்லாம் முழுசாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியும் நடக்கிறது. 'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை!' என்பது ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல கவிஞர் குல்சாரின் கருத்து.

இசைஞானி இளையராஜா 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். இப்போது இவர் தனது 875 வது படத்துக்கு இசையமைக்கிறார் .
இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் ஜோ வரதராஜன் எழுதி இயக்கும் புதிய படம் “விளையாடு ராஜா விளையாடு’. இதில் “பிறப்பு’ படத்தில் நடித்த பிரபா கதாநாயகனாக நடிக்கிறார்.

* இளையராசாவின் இசைப்பயணத்தில், அவர் உதவியாளராக நெடுங்காலம் பணியாற்றியது யாரிடம் என்று தெரியும்மா..??

சி.கே.வி என்ற சி.கே.வெங்கடசு என்ற் இசையமைப்பாளரிடம் தான்.

சி.கே.வி தமிழ் மற்றும் கன்னடத்தில் பல படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றாராம்.

இளையராசா, சி.கே.வியுடன் சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு உதவி செய்திருக்கிறாராம்.

இசையுதவி என்றால், இசை கோர்பு, வாத்திய இசைத்தல், பாடகர்கள் தேர்வு, அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தல், என்று திரையிசையின் அனைத்து வேலைகளிலும் ஈடுப்பட்டியிருக்கின்றார்.

மேலும், மூகாம்பிகையின் தீவிர பக்த்ர் இளையராசா என்றால் மிகையாகாது. இசையுலகில் சற்று பிரபலம் ஆனப் பிறகு, மூகாம்பிகையின் பேரில், 4 கன்னட பாடல்களை இயற்றினாராம், இளையராசா. கேட்போர் எல்லாரையும் கரைய வைத்த பாடல்களாம் அவை.
அந்தப் பாடலைக் கேட்ட கன்னட பாடலாசிரியர் உதய சங்கர், "கன்னடர்களே பாடியிருந்தாலும், இதுப் போன்று இருந்திருக்காது" என்று பாராட்டினாராம்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது, இளையாராசாவின் கன்னட மொழியின் உச்சரிப்புகள் தவறாமல் வந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை என்று தோன்றுகிறது.




இளையராஜா. இந்தப் பெயர் புகுந்து வெளியேறாத தமிழ் உதடுகள் இருக்க முடியுமா? முடியும் என்று நீங்கள் சொன்னால், உங்கள் வயது பத்துக்குள்தான் இருக்க வேண்டுமென்று எளிதாகச் சொல்லி விடலாம். 70களில் தவழத் துவங்கிய இந்தத் தென்றல் துயர் வியர்வையை துடைக்கும் இசைச் சாமரமாக வீசிக் கொண்டிருக்கிறது இன்னும். இதுவரை எத்தனை ஆயிரம் பாடல்கள். பொங்கி வழிந்த எத்தனை இசைக்கோர்வைகள். ஒரு நொடி மெளனத்திற்குப் பின், திரையில் பல வயலின்களின் ஒலியோடு எத்தனைமுறை இசையாக வெடித்திருப்பார் இவர்; ஒரு சின்ன புல்லாங்குழலின் ஓசையில் எத்தனைமுறை நம் மனதை பிசைந்திருப்பார். இசையின் சர்வதேசக் கூறுகளை கரைத்துக் குடித்திருக்கும் விமர்சகப்புலிகள் இளையராஜாவை எப்படி வேண்டுமானாலும் உரசிப் பார்த்துக் கொள்ளட்டும். ஒரு தமிழக கிராமத்தில் ஜனித்து, உலக கிராமத்தின் பிரஜையாக பயணித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் தமிழர்களுக்கு அவர் தமிழ் அடையாளம்.

நம் மகிழ்ச்சியில், சோகத்தில், தனிமையில், காதலில் ஒரு ஓரமாக இளையராஜா எப்போதும் இருக்கவே செய்கிறார். சந்தனக்கடத்தல் வீரப்பன் நடமாடிய பில்லூர் அணைக்கட்டு காட்டுப்பகுதியில் "கேட்டேளா இங்கே" என்று சிறுவர்களாக குதித்திருந்ததும், "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" என சப்பாணியாக அலைந்திருந்ததும், "பூங்காற்று திரும்புமா" என்று உருகியிருந்ததும், "இஞ்சி இடுப்பழகி" என்று நெகிழ்ந்திருந்ததும், இளையராஜாவின் இசையால் சாத்தியமாகி இருக்கிறது.


பாடல்களின் இசைக் கோர்ப்பில் மிக முக்கியமானப் பாத்திரம்.

பாடலின் உயிர்நாடி போல இழையோடிக் கொண்டே வந்துகொண்டிருக்கும். ஆனால் இதன் இசை(குறியீடுகள்) நிறைய இடங்களில் எளிதாக காதில் விழாது. முக்கியமா பல்லவி, சரணம் போன்ற இடங்களில் பாடகர்களின்
குரலுக்கு இடையே ஒரு நாதம் பாடலின் ஆதார சுருதியாக பயணித்துக் கொண்டிருக்கும். கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கும். கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால்
அப்புறம் பாடல்கள் உங்களை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இன்னும் பரவசப் படுத்தும். ஆனந்த விகடனில் கொஞ்சம் வருடங்களுக்கு முன்பு வந்த முப்பரிமாண படங்களில் வரும் பொருள்களை கண்டுபிடிப்பது போல ஆரம்பத்தில் கடினமாகத் தெரியும்.

ராஜா அவர்கள் இதன் முக்கியத்துவம் அறிந்து ஓவ்வொரு பாடலிலும் ராஜமரியாதை கொடுத்திருப்பார்.

உதாரணமா நிறைய சொல்லலாம்(பெருவெள்ளத்தில் சிறு துளி).

மௌனராகம் படத்தில் வரும் "சின்ன சின்ன வண்ணக் குயில் பாடலை" எண்ணற்ற முறை கேட்டிருக்கிறோம். அடுத்த முறை கேட்க நேரிடும்பொது ஜானகியின் குரலோடு தொடர்ந்து பயணிக்கும் பேஸ் கிடாரை கேளுங்கள். ஜானகிக்கு பாராட்ட நினைப்பவர்கள் இந்த கிடாருக்கும் பாராட்ட வேண்டும். என்னைக் கேட்டால் இது சோலோ பாடல் இல்லை. ஜானகி - பேஸ் கிடார் சேர்ந்து பாடிய டூயட்.

மற்றும் சில.

1) மாலையில் யாரோ.
2) பொன்வானம் பன்னீர் தூவுது.
3) ராசத்தி உன்னை காணாத நெஞ்சு.
4) மன்றம் வந்த தென்றலுக்கு.


இசைஞானியின் திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள்

*****************************************************
இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
* "How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
* "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
* "India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.
* 1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.
* "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
* "இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
* ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
* "மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
* மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.







[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக