ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்!” சூப்பர் ஸ்டார் - ஜக்குபாய் பிரீமியர்

Go down

“வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்!” சூப்பர் ஸ்டார் - ஜக்குபாய் பிரீமியர் Empty “வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்!” சூப்பர் ஸ்டார் - ஜக்குபாய் பிரீமியர்

Post by mohan-தாஸ் Thu Feb 11, 2010 1:28 pm

‘ஜக்குபாய்’ படத்தின் பிரீமியரை மிகப் பிரமா(த)ண்டமாக கடந்த புதன் கிழமை இரவு சத்யம் திரையரங்கில் நடத்தினார்கள் சரத்குமார் - ராதிகா தம்பதியினர். இந்த விஷேஷ ப்ரீமியருக்கு திரையுலகின் முக்கிய நடிகர் நடிகையர் பெரும்பாலோனோர் வந்திருந்தனர்.
ப்ரீமியரின் ஹை-லைட்டே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்திருந்தது தான் என்று சொல்லவும் வேண்டுமா என்ன?
“வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்!” சூப்பர் ஸ்டார் - ஜக்குபாய் பிரீமியர் Dsc_0161
முன்னதாக திரையரங்கின் வாயிலில் நின்று அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருன்தனர் இந்த நட்சத்திர தம்பதியினர். சரத் சற்று பதட்டமாகவே இருந்தார். ஒவ்வொரு நட்சத்திரமாக ப்ரீமியருக்கு வர வர களை கட்டியது சத்யம் வளாகம். கமல் 9.45 மணிக்கு வந்தார். வந்தவர் நேரே மேலே (அரங்கிற்கு) சென்று உட்கார்ந்துவிட்டார். கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களும் வந்து சேர, அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்த சூப்பர் ஸ்டார் மட்டும் வரவில்லை.
வந்திருந்த அனைவரிடம் பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். சரியாக 10.10 மணிக்கு சத்யம் வளாகத்தில் ஒரு வித பரபரப்பு தொற்றிக்கொண்டது. (இது தாங்க தலைவர் ஒரு இடத்திற்கு வருவதற்கான அறிகுறி).
தலைவர் மின்னலென வர, தலைவா… சூப்பர் ஸ்டார் என்ற கோஷங்களால் அதிர்ந்தது சத்யம் வளாகம். சரத்துக்கும் ராதிகாவுக்கும் சொல்லவொண்ணா மகிழ்ச்சி. தலைவருடன் அவரது உதவியாளர் ஒருவரும் வந்திருந்தார்.
அதுவரை பிற மீடியா வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருந்த நட்சத்திரங்களின் முக்கியத்துவம் சூப்பர் ஸ்டாருக்கு ஷிஃப்ட் ஆனது. புகைப்படக்காரர்கள் சூப்பர் ஸ்டாரை FLASH மழையால் நனைக்கஆரம்பித்தனர்.
“வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்!” சூப்பர் ஸ்டார் - ஜக்குபாய் பிரீமியர் Dsc_0167-199x300“வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்” - ரஜினி
“மணி பத்துக்கு மேல ஆயிடுச்சு…. நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சேன் ரஜினி…. ரொம்ப தேங்க்ஸ் வந்ததுக்கு…” என்று ராதிகா நெகிழ்ச்சியுடன் சொல்ல, “நான் தான் வர்ரேன்னு சொன்னேனே… சொன்னா வந்துடுவேன். வர்ற வழியில சரியான ட்ராபிக்… அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு… டோன்ட் வொரி” என்று தலைவர் சொல்ல, ராதிகா ஒரு நிமிடம் மேலும் நெகிழ்ந்த்போய் சூப்பர் ஸ்டாரின் தோளில் சாய்ந்துவிட்டார். அவரை தேற்றிய சூப்பர் ஸ்டார், சரத்தை நோக்கி, “என்ன படம் ஸ்டார்ட் பண்ணிடலாமா?” என்று கேட்க, “நீங்க தான் வந்துட்டீங்கள்ல… உடனே ஸ்டார்ட் பண்ணிடுவோம்” என்று சிரித்தபடி சொல்ல, சூப்பர் ஸ்டார் மேல் தளம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
அதற்குள் சத்யம் வளாகத்தில் இருந்த ஆடியன்சுக்கு சூப்பர் ஸ்டார் வந்திருக்கும் விபரம் தெரியவர, அனைவரும் அந்த இடத்தை நோக்கி படையெடுக்க ஆர்மபித்தனர். ஆனால் அதற்குள் சூப்பர் ஸ்டார் மேல் தளத்திற்கு சென்றுவிட்டார். (என்னா ஸ்பீட் தெரியுமா? போட்டோ க்ராபர்சால அவர் கூட ஓடிப்போய் எடுக்க முடியலே… அந்தளவு மனுஷன் செம ஸ்பீடுப்பா!)
மேல் தளம் சென்றவர், சில நிமிடங்கள் அங்கிருந்து கீழே பார்த்து, தன்னை நோக்கி கோஷம் எழுப்பிய ரசிகர்களை நோக்கி கை காட்ட தவறவில்லை. (மேல் தளத்திலிருந்து கீழே பார்த்தால் GROUND FLOOR ல் நிற்கும் ஆடியன்ஸ் தெரிவார்கள்.)
“வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்!” சூப்பர் ஸ்டார் - ஜக்குபாய் பிரீமியர் Dsc_0170-680x1024
தலைவரை முழுக்க முழுக்க உடனிருந்து வரவேற்று, அவர் மேல் தளத்திற்கு வந்து இருக்கையில் அமர்வது வரை சரத்தும் அவர் குடும்பத்தினரும் உடன்வந்தார்கள்.
இதற்கிடையே, சூப்பர் ஸ்டார் நடந்து வரும்போது, உடன் வருவது போல ஒரு பணியாளருக்கு புகைப்படம் அமைந்துவிட, அவர் ஜென்ம சாபல்யம் பெற்றது போல, மகிழ்ச்சியடைந்தார். “இது போதும் தலைவா… இது போதும்….” என்று அங்கிருந்த போட்டோகிராபரின் கேமிராவின் மானிட்டரில் தனது புகைப்படத்தை பார்த்து பார்த்து சந்தோஷப்பட்டார்.“வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்!” சூப்பர் ஸ்டார் - ஜக்குபாய் பிரீமியர் Dsc_0290-680x1024

இது போதும் தலைவா... இதை விட வேற ஸ்டில் வேணுமா?

அவர் (ரஜினி) உள்ளே செல்வதற்குள், சத்யம் மல்டிப்ளெக்ஸ் பணியாளர்கள் மேலும் சிலர் ஓடி வந்து, “சார்… உங்க கூட ஒரு ஸ்டில் எடுக்கணும் சார்… ப்ளீஸ்” என்று கேட்க, “இப்போ… ஷோவுக்கு டயமாயிடுச்சு.. இன்டர்வெல்ல பார்த்துக்கலாம்மா” என்று கூறியபடி உள்ளே சென்றுவிட்டார். உள்ளே சென்ற தலைவர், நேரே சென்று கமலுக்கு அருகில் அமர்ந்துகொண்டார். நண்பர்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். அடுத்த சில நிமிடங்களில் ஷோ ஆரம்பித்துவிட்டது.
வெளியே….
வெளியே அந்த நடிகர் ப்ரீமியருக்கு வந்து சேர்ந்தார். அவர் சத்யம் வளாகத்திற்குள் வரும்போதே (கொஞ்சம் லேட்டா வந்தாருங்க அவரு) “உங்க தலைவர் வந்திருக்குறாரு… உங்கள் தலை வந்திருக்குறாரு” என்று அனைவரும் அவரை அலர்ட் செய்தனர் (பாதி கலாய்ப்பு). “அவரு வந்திருக்குறாரா? இருக்காதே…. ச்சு” என்று விசும்பியபடி சென்றார். மிகவும் ஆர்பாட்டமான அந்த இளம் நடிகர் (நமக்கெதுக்குப்பா வம்பு?) சூப்பர் ஸ்டார் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் கடைசி வரைக்கும் மிகவும் அடக்கி வாசித்தது கண்கொள்ளா காட்சி. (அது!)
(இதை பத்தி தனியா ஒரு பதிவே போடலாம் சாரே!)
“வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்!” சூப்பர் ஸ்டார் - ஜக்குபாய் பிரீமியர் Dsc_0283
இதற்கிடையே அனைவரையும் ரிசீவ் செய்து, உட்கார வைத்துவிட்டு, வெளியே வந்த சரத், போட்டோக்ராபர்ஸை பார்த்து, “எல்லோரும் கொஞ்ச வெயிட் பண்ணுங்க. படம் முடிஞ்சதும் ஒரு சின்ன EVENT இருக்கு. அதை கவர் செய்யனும்” என்று கீழே ஏற்பாடு செய்து வைத்திருந்த நிவாரண நிதி உண்டியலை காண்பிக்க, “படம் முடிஞ்சுதுமா? வேண்டாம் சார்… ஆடியன்ஸ் எல்லாரும் அப்போ வந்துடுவாங்க. கூட்டம் கண்ட்ரோல் பண்ண முடியாது. பேசாம இன்டர்வல்ல வெச்சுக்கலாம்” என்று போட்டோக்ராபர்ஸ் கூற, “இது நல்ல ஐடியா… சரி இண்டர்வெல்ல ஏற்பாடு செஞ்சிடலாம்!” என்று ஆமோதித்த சரத் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். உள்ளே படம் பார்த்துக்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு இந்த இடைவேளை நிகழ்ச்சி பற்றி எதுவும் தெரியாது.
சரியாக 11.40 க்கு இடைவேளை விட, உள்ளே சென்ற சரத், ஒரு சிறிய நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்ள, முதலமைச்சர் நிவாரண நிதி நிகழ்ச்சிக்காக வெளியே வந்தார்கள் நட்சத்திரங்கள்.
வெளியே வந்த நட்சத்திரங்கள் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். மனைவி ஐஸ்வர்யாவுடன் வந்திருந்த தனுஷ், தலைவரை பார்த்ததும் விஷ செய்ய, பதிலுக்கு விஷ் செய்தார் தலைவர். மகள் ஐஸ்வர்யா அப்பாவிடம் ஏதோபேசினார்.
சூப்பர் ஸ்டாரின் பாக்கெட்டுகளில்… ?
பெரும்பாலான நட்சித்திரங்கள் சூப்பர் ஸ்டாரை தேடி வந்து விஷ் செய்துவிட்டு சென்றனர். இதற்கிடையே உண்டியல் வைக்கப்பட, அனைவரும் உண்டியலில் பணம் போடுவதை கண்ட சூப்பர் ஸ்டார் “அட இது என்ன… புதுசா இருக்கே… தெரிஞ்சிருந்தா ஏதாவது கொண்டுவந்திருப்பேனே…த்சோ…த்சோ” என்று கூறியபடி தனது பாக்கெட்டுகளை துழாவ அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை. (இந்தியாவுலயே அதிக சம்பளம் வாங்குறவருங்க தலைவர்.) ம்ம்ம்ம்… நம் தலைவர் சரத்தை பார்த்தபடி கூற, “நீங்க சும்மா உண்டியல்ல பணம் போடுற மாதிரி போஸ் கொடுத்தாலே போதும் ரஜினி” என்று சரத் கூறினார். தலைவருக்கு இல்லாத பணமா? ஒரு சில வினாடிகளில் தலைவர் கையில் பணம் முளைத்தது. பணத்தை உண்டியலில் செலுத்தினார். அனைத்து நட்சத்திரங்களும் உண்டியலில் பணம் போட்ட பிறகு, மீண்டும் ஷோவுக்கு திரும்பலாயினர்.
“வரேன்னு சொன்னா நிச்சயம் வந்துடுவேன்!” சூப்பர் ஸ்டார் - ஜக்குபாய் பிரீமியர் Dsc_0323-680x1024
“நான் உங்க கூட இருப்பேன் சரத்”
அதற்குள் கமல், சரத்தை பார்த்து, “எனக்கொரு அவசர வேலை இருக்கு சரத்… நாம் கிளம்பறேன்” என்று சரத்திடமும் சூப்பர் ஸ்டாரிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார். கமல் சென்றவுடனே, “நீங்களும் கிளம்புறீங்களா ரஜினி?” என்று சரத் தலைவரை சற்று ஏமாற்றத்துடன் கேட்க, “நோ…. நோ…. நான் ஃபுல் மூவி பார்த்துட்டு தான் போவேன்… யூ கேரி ஆன் சரத்” என்று அவருக்கு தைரியமளித்துவிட்டு திரும்பினார்.
ஓடி வந்த பணியாளர்கள்…!
இருக்கைக்கு செல்லும் முன், அவருடன் புகைப்படமெடுக்க விரும்பிய பணியாளர்கள் அவரை நோக்கி, “தலைவா… தலைவா…” என்று கத்தியபடி ஓடிவர, திரும்பிப் பார்த்த சூப்பர் ஸ்டார், அவர்களிடம் “இரும்மா… ஒரு நிமிஷம் பாத்ரூம் போயிட்டு வந்துடுறேன்” என்று அவர்களிடம் ஜாலியாக கூறிவிட்டு, பாத்ரூமுக்குள் செல்ல, அடுத்த நொடி, வேறு யாரும் உள்ளே சென்றுவிடாத படி, செக்யூரிட்டிகள் காவலுக்கு வெளியே நின்றுகொண்டனர்.
“ஓகே… நான் போகலாமா… ஆர் யூ ஹாப்பி?”
தலைவர், சில நிமிடங்கழித்து, வெளியே வந்தவுடன் புகைப்படமெடுக்க விரும்பிய அனைத்து பணியாளர்களையும் அழைத்தார். அவர்கள் விரும்பியிபடி கட்டிபிடித்து, கைகுலுக்கி, தோள் மீது கைபோட்டு வித விதமாக் போஸ் கொடுத்தார். சொல்லவொணா மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் அந்த செக்யூரிட்டிகளும் ஊழியர்களும். (வாழ்த்துக்கள்!!). போட்டோ எடுத்து முடித்ததும் தலைவர் “ஓகே… நான் போகலாமா… ஆர் யூ ஹாப்பி?” என்று அவர்களிடம் கேட்டுவிட்டு, தனது உதவியாளரை நோக்கியோ, “எனக்கொரு COFFEE கிடைக்குமா?” என்று கேட்க, அவர் காபி ஷாப்புக்கு சென்றுவிட்டு, “சாரி சார்… COLD (ICE) COFFEE தான் இருக்கு என்று கூற “நோ ப்ராப்ளம்… கொண்டுவாங்க” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் தலைவருக்கு சூடான சாரி… ஜில்லென்ற காபி உள்ளே சென்றது.
இங்கே சூப்பர் ஸ்டாருடன் புகைப்படமெடுத்துக்கொண்ட ஊழியர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, கட்டிபிடித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். (இத நேர்ல பார்த்தாதான் அவங்க சந்தோஷத்தை உணரமுடியும்!)
படம் முடிந்தவுடன் வெளியே வந்தவர், அங்கு நின்றிருந்த ‘ஜீ’ தமிழ் தொலைகாட்சி மற்றும் SS Music தொலைகாட்சியினர் நின்றுகொண்டிருப்பதை பார்த்தார். தன்னை சந்தித்து சில வார்த்தைகளை பதிவு செய்ய அவர்கள் நெடு நேரம் காத்திருப்பதை புரிந்துகொண்டார். “ஓ…எஸ்.. கமான்… கமான்… பிரஸ் பீப்பிள்” என்று அவர்களை அழைத்தவர், படத்தை பற்றி சில வார்த்தைகள் சிலாகித்து பேசிவிட்டு, சரத்திடமும் ராதிகாவிடமும் விடைபெற்று கிளம்பிவிட்டார்.
மொத்தத்தில் ‘ஜக்குபாய்’ ப்ரீமியரில் நமது படையப்பா ஹீரோவாக இருந்தார் என்றால் மிகையாகாது.
நிகழ்ச்சியின் முழு புகைப்பட தொகுப்பு, (நமது தளத்தின் பிரத்யேகமானது - Our website’s exclusive stills) கீழே தரப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் அரங்கத்திற்குள் அமர்ந்திருப்பது மற்றும் வேறு சில பிரத்யேக புகைப்படங்களுக்கு,
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum