ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பக புற்று நோயை தடுக்க

4 posters

Go down

மார்பக புற்று நோயை தடுக்க Empty மார்பக புற்று நோயை தடுக்க

Post by ரிபாஸ் Tue Feb 09, 2010 10:22 am

மார்பக புற்று நோயை தடுக்க
மார்பக புற்று நோயை தடுக்க Yoga-10082300 பல
நூற்றாண்டு காலமாகப் புற்று நோய் என்பது மரணம் எனக் கருதப்பட்டதுமல்லாது
இந் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் காணப்படுவது இழுக்கு என்ற
மனப்பாங்கு காணப்பட்டது. மேலும் இது ஒரு பரம்பரை நோய் எனவும் நினைத்தனர்.
அறியாமை காரணமாக இந் நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுச் சிகிச்சை
அளிக்கப்படுவதில்லை. குணப்படுத்த முடியாத முற்றிய நிலையில்தான் அதிகமானோர்
சிகிச்சை பெறுகின்றனர். ஆரம்பத்தில் இந் நோயைக் கண்டு பிடித்து சிகிச்சை
அளித்தால் பூரணமாகக் குணப்படுத்த முடியும்.

தற்போது இந் நோய் பற்றிய போதிய அறிவும் விழிப்புணர்வும் இருப்பதால்
பெரும்பாலானோர் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டு பிடித்து உரிய சிகிச்சை
மேற்கொண்டு பெரும் பாதிப்புக்கு ஆளாகாமல் தப்பி விடுகின்றனர்.

நாடு, இனம், வயது வித்தியாசமின்றி எல்லோரையும் இந்நோய் தாக்குகிறது.
மிருகங்கள், மீன்கள், பூச்சி புழுக்கள் முதலியவற்றைத் தாக்குவதுமல்லாது
தாவரங்களைக் கூட இந்நோய் தாக்குகிறது.

உலகளாவிய ரீதியில் மிகத் தீவிரமாக அதிகரித்துக் கொண்டு வரும் இந்நோய்
2010ஆம் ஆண்டு உலக மக்கள் அனைவருக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்குமென
உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் உலக நோயாளர்களில்
பெரும்பாலானோருக்கு மரணத்தை ஏற்படுத்தும் முதல் தர நோயாக இந் நோய்
பரிமாணமடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகளாவிய ரீதியில் புற்று நோய் காரணமாக ஏழு மில்லியன் பேர்
இறப்பதாகவும் இத் தொகை 2020 ஆம் ஆண்டளவில் இருபது மில்லியனாக உயரும்
எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த வருடம் புற்று நோயால்
பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பன்னிரண்டு மில்லியனாக இருந்து ஏழு
மில்லியன் பேர் மரணமடைந்தனர்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 13 ஆயிரம் புதிய புற்று நோயாளர்கள் இனம்
காணப்பட்டு 8 ஆயிரம் பேர் இறக்கின்றனர். எண்பது சதவீதமான புற்று
நோயாளர்கள் கிராமப்புறங்களில் காணப்படுகின்றனர். இந் நோயை ஆரம்பத்தில்
கண்டு பிடித்து சிகிச்சை அளித்தால் 50 சதவீதமான மரணங்களைத் தவிர்க்க
முடியும்.

உடலின் உயிர்க் கலங்கள் இயற்கைக்கு மாறாக வேறுபட்ட வடிவங்களில் இயற்கைக்கு
மாறான வேகத்தில் பிரிவடைந்து வித்தியாசமான உயிர் கலங்களை உண்டாக்குவதே
புற்று நோயின் தோற்றமாகும். புற்று நோய் உயிர் கலங்கள் வேகமாக வளர்வதால்
அவ்விடத்தில் ஒரு வெளி வளர்ச்சி அல்லது கட்டி ஏற்படலாம். இது உடலின்
எந்தப் பாகத்திலும் ஏற்படலாம். இரத்தத்தில்கூட ஏற்படலாம்.
புற்று நோய் உயிர்கலங்களை அழிக்கும் சக்திவாய்ந்த லிம்போசயிட்ஸ்
(ஃதூட்ணீடணிஞிதூtஞுண்) போர் வீரர் போன்று யுத்தம் செய்து புற்று நோய்
உயிர்கலங்களை அழித்து விடுகின்றன. இந்த யுத்தத்தில் இவை தோல்வியுறும்
போதுதான் புற்று நோய் ஏற்படுகிறது.
புற்று நோய் உயிர் கலங்கள் இரத்தத்தில் கலந்து உடலின் வேறு பாகங்களுக்கும்
பரவும். இதனால்தான் இதை ஆங்கிலத்தில் கான்சர் (இச்ணஞிஞுணூ) என்பர். இது
ஒரு இலத்தீன் மொழிச் சொல்லாகும். இதன் அர்த்தம் நண்டு என்பதாகும். இந்நோய்
நண்டு போல் உடம்புக்குள் மிக வேகமாகப் பரவுவதால் தான் இப் பெயரைப் பெற்றது.

பெண்களைத் தாக்கும் புற்று நோய்களில் முக்கியமானது "மார்பகப் புற்று
நோயாகும். இந் நோய் ஆண்களையும் தாக்கும். ஒன்று முதல் இரண்டு சதவீதமான
ஆண்கள் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 22 சதவீதமான பெண்கள் மார்பகப் புற்றுநோயால்
தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அரைவாசிப் பேருக்கு இந் நோய் தங்களைப்
பீடித்துள்ளது என்று தெரியாது. ஒரு இலட்சம் பெண்களில் ஒருவர் இந் நோயால்
பீடிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு மூன்று நிமிடங்களிலும் ஒரு பெண்
மார்பகப் புற்று நோயால் பீடிக்கப்பட்டு ஒவ்வொரு முப்பது நிமிடங்களிலும்
ஒரு பெண் இந் நோய் காரணமாக மரணமடைகிறார்.
இது தடுக்கக்கூடிய நோயாகும். ஆரம்பத்தில் சிகிச்சை அளித்தால் பூரணமாகக்
குணப்படுத்தக் கூடியது.
இலங்கையில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களையே இந் நோய் அதிகமாகத்
தாக்குகிறது. இந் நோயாளர்களில் மூவரில் இருவர் நாற்பத்தைந்து வயதிற்கு
மேற்பட்டவர்களாகும்.

அதிக கொழுப்பு அடங்கிய உணவுகளை உட்கொள்ளல், இறுக்கமான உள்ளாடை அணிதல்,
தாய்ப்பாலூட்டுதலை நிறுத்துதல், பால் சுரப்பான (குஞுது ஸ்ரோஜன் அளவிற்கு
மீறிச் சுரத்தல், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கருத் தடை மாத்திரைகளை
உட்கொள்ளல், மாத விடாய் நின்ற பின் செயற்கை ஸ்ரோஜன் (ஏகீகூ) எடுத்தல்,
அதிகரித்த உடற்பருமன் பரம்பரை, உடற்பயிற்சியின்மை போன்றவை காரணமமாக
மார்பகப் புற்று நோய் ஏற்படுகிறது. வாரமொன்றுக்கு 2 1/2 மணித்தியாலயம்
நடைப்பயிற்சி மற்றும் யோகா செய்தால் மார்பகப் புற்று நோய் 18 சதவீதத்தால்
குறையும் என ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. வாரம் 10 மணித்தியாலயம்
செய்தால் இந்த விகிதாசாரம் மேலும் அதிகரிக்கும்.

நீடித்த இருமல் மற்றும் குரல் மாற்றம், குடலின் செயல்பாட்டில் மாற்றம்.
கட்டிகள் அல்லது வலியற்ற வீக்கங்கள், மச்சம் பெரிதாகுதல், அல்லது
வீங்குதல், மாதவிடாயின் போது வழமைக்கு மாறாக அதிக இரத்தப் போக்கு,
மார்பக்காம்பில் வெளிப்படையான மாற்றம், குணமாகாத புண், மார்பகத்தின் அளவு
அல்லது வடிவத்தில் மாற்றம், திடீரென மார்பகம் பெருத்தல், மார்பகத்தில்
பள்ளங்கள் ஏற்படுதல், முலைக் காம்பு உள்நோக்கி வளைந்து நிற்றல்,
முலைக்காம்பிலிருந்து இரத்தம் கலந்த திரவம் வெளிவரல், முலைக்காம்பிலும்
அதைச் சூழ்ந்த பகுதியிலும் சிரங்கு ஏற்படல், மார்பகத்தில் சொறி ஏற்படல்
போன்றவை மார்பகப் புற்று நோயின் அறிகுறிகளாகும்.

இரண்டு வகை மார்பகக் கட்டிகள் உள்ளன. தீங்கற்ற கட்டி. இது எவ்விதத்
தொந்தரவும் தராது. மற்றப் பாகங்களுக்கும் பரவாது. இக் கட்டி 40
வயதிற்குட்பட்ட பெண்களில் பத்துப் பேரில் ஒன்பது பேருக்கு ஏற்படலாம்.
தீங்கான (Mச்டூடிஞ்ணச்ணt) கட்டி வயோதிபப் பெண்களையே அதிகம் தாக்கும். இது
பல பிரச்சினைகளைக் கொடுக்கும். மற்றப் பாகங்களுக்கும் பரவும். இதற்கு
அறுவைச் சிகிச்சை (Mச்ண்tஞுஞிtணிட்தூ) ஒன்றே முடிவான தீர்வாகும்.
இக்கட்டிகளை ஆரம்பத்தில் கண்டு பிடித்துப் புற்று கட்டிதானா எனப்
பரிசோதனைகள் மூலம் உறுதி செய்த பின் உடனடியாக அகற்றி விட்டால் மேலும்
பரவுதலைத் தடுக்க முடியும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து கதிர்வீச்சு
சிகிச்சை (கீச்ஞீடிச்tடிணிண) மற்றும் மருந்துகள் (இடஞுட்ணிtடஞுணூச்ணீதூ)
போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

அடிக்கடி மார்பகத்தை சுய பரிசோதனைக்கு உட்படுத்துதல், ஆண்டு தோறும்
மார்பகப் பரிசோதனை செய்தல் போன்றனவற்றால் ஆரம்பத்திலேயே மார்பகக்
கட்டிகளைக் கண்டு பிடிக்க முடியும்.

உரிய காலத்தில் திருமணம் செய்து கொள்ளல், காலா காலத்தில் குழந்தை பெறல்,
பாலூட்டுதலை நிறுத்தாமை, தோலினால் செய்த உள்ளாடைகளை அணியாமை, திருமணமாகாத
பெண்கள் கொழுப்பு, கல்சியம் மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத்
தவிர்த்தல், இறுக்கமாக உள்ளாடை அணியாமை, மார்பகச் சுய பரிசோதனை
மேற்கொள்ளல், மார்பகப் பிரச்சினைகளை மறைக்காமல் வெளிப்படையாகக் கூறல்,
குடும்பத்தில் முன்னோருக்கு மார்பகப் புற்று நோய் ஏற்பட்டிருந்தால் ஆண்டு
தோறும் மார்பகப் பரிசோதனை மேற்கொள்ளல், உடற்பயிற்சி மற்றும் யோகாவில்
சிரமமாக ஈடுபடுதல், ஸ்ரோஜன் மாத்திரை பாவனையைத் தவிர்த்தல், கதிரியக்கம்
எக்ஸ்கதிர் (ஙீ கீச்தூ) நடைமுறைகளைத் தவிர்த்தல், ஹோர்மோன் அடங்கிய
உணவுகளைத் தவிர்த்தல், புகை மதுபாவனை விட்டு விடல், மாமிசத்தைத் தவிர்த்து
அதிக அளவு மரக்கறிகள், பழங்கள் உட்கொள்ளல் போன்றவை மூலம் மார்பகப் புற்று
நோய் ஏற்படாது தடுக்கலாம்.

புற்று நோய் ஏற்பட்டுள்ளது என அறிந்ததும் பயப்படக் கூடாது. நிதானமாக நோயை
அணுக வேண்டும். சிறப்பு மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெற வேண்டும். புற்று
நோய் தொற்றாத நோயாகும். குடும்பத்திலுள்ளோர் நோயாளிகளிடம் மனிதாபிமானமாக
நடந்து கொள்ள வேண்டும். நோயிலிருந்து விடுதலை பெறுவேன் என்ற நம்பிக்கையை
நோயாளர்கள் வளர்க்க வேண்டும்.

உணவுக்கும் புற்று நோய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. கொழுப்பைக்
குறைவாக உட்கொள்ள வேண்டும். விலங்குக் கொழுப்பைத் தவிர்க்க வேண்டும். தாவர
எண்ணெய் மாஜரின் பாவனையை விட்டு விட்டு வேர்ஜின் ஒலிவ் எண்ணெயைச்
(ஙடிணூஞ்டிண Oடூடிதிஞு Oடிடூ) சமையலுக்குப் பாவிக்க வேண்டும். பொரித்த,
வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மரக்கறி வகைகள் பழங்களை அதிகம்
உட்கொள்ள வேண்டும். சோயாவை அதிகம் சேர்க்க வேண்டும். இவற்றில் அபரிமிதமாக
அடங்கியுள்ள ஒட்சிடனெதிரிகள், விட்டமின்கள் இ,ஈ,உ, கரோடி நோயிட் செலினியம்
போன்ற ஊட்டச் சத்துக்கள் புற்று நோய் ஏற்படாது தடுக்கும் வல்லமை
கொண்டவையாகும். கரட், முள்ளங்கியில் உள்ளடங்கிய ஒட்சிடனெதிரிகள் புற்று
நோயின் வளர்ச்சியை ஐம்பது முதல் எண்பது சதவீதம் மந்தப்படுத்தும் என
சமீபத்தில நிரூபிக்கப்பட்டுள்ளது. மரக்கறிகள், பழங்களில் அபரிமிதமாக
அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் ஏற்படாது. தடுப்பதுமல்லாது
ஏற்பட்ட பின்பும் குணப்படுத்தும் வல்லமை கொண்டவையாகும். மரக்கறி வகைகள்,
பழங்களில் அபரிமிதமாக அடங்கியுள்ள ஒட்சிடனெதரிகள் புற்று நோயின்
வளர்ச்சியை மந்தமாக்கி விடுவதுடன் இருபது சதவீத புற்று நோய்க் கலங்களை
அழித்து விடும் வல்லமை கொண்டவை எனச் சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட
ஆய்வின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந் நோய்க்கு ஆங்கில வைத்திய முறை மூலம் அளிக்கப்படும் சத்திர
சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மருந்து செலுத்தும் முறை போன்றவை
உடலுக்குப் பெரும் தீங்கு ஏற்படுத்தக்கூடியவையாகும். சத்திர சிகிச்சை,
கதிர்வீச்சு சிகிச்சைகளின் போது புற்றுக் கட்டிகளுக்குப் பக்கத்தில் உள்ள
மில்லியன் கணக்கான ஆரோக்கியமான உயிர்க் கலங்கள் அழிந்து விடுகின்றன.
மேலும் இவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைச் சீரழித்து விடுகின்றன.
இதனால் நோயாளி நடைப் பிணம் போல் மாற்றி விடப்படுகிறான். ஆரோக்கியமான
உணவுடன் கூடிய யோகா பயிற்சியே இந்நோய்க்குச் சிறந்த சிகிச்சை முறையாகும்.

கரட் சாறு, தக்காளிச் சாறு, தோடம்பழச் சாறு, வெங்காயம், வெள்ளைப் பூண்டு
சில வகை மீன்கள், அப்பிள் போன்ற உணவுகள் புற்று நோய்கள் முக்கியமாக
மார்பகப் புற்று நோயைத் தடுக்கும் சக்தி வாய்ந்தவை என ஆய்வின் மூலம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முட்டைக் கோவா கோவா, கலிபுளோவர் போன்ற
உணவுகளில் அபரிமிதமாக அடங்கியுள்ள சில ஒட்சிடனெதிரிகள் சிதைந்த டி.என்.ஏ.
எனப்படும் மரபணுவை மிகத் துரிதமாகச் சீர்திருத்தி பற்று நோய் ஏற்படாது
தடுக்கின்றன.
.

ஜினிஸ்டீன் என்ற சோயாவில் அடங்கியுள்ள ஒட்சிடனெதிரியும் கப்சாசின்
(இச்ணீண்ச்ஞிடிண) என்ற கறிமிளகாயில் உள்ள ஒட்சிடனெதிரியும் குளூடோனைன்
என்ற ஏலக்காயில் காணப்படும் ஒட்சிடனெதிரியும் கறிவேப்பிலையில் அடங்கியுள்ள
சில ஒட்சிடனெதிரிகளும் இவ்வாறு செயல்பட்டு புற்று நோய் ஏற்படாது தடுக்கும்
ஆற்றல்கொண்டவைகளாகும்.
.

ஐசோதையோயனேட் என்ற முட்டைக் கோவா, கோவா, காலிபிளேவர் போன்ற மரக்கறிகளில்
அபரிமிதமாக அடங்கியுள்ள ஒட்சிடனெதிரி உயிர்க் கலங்களின் விருத்தியைக்
கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது எனச் சமீபத்தில் கலிபோர்னியாவில்
நடைபெற்ற ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. இதே உணவுகளில் அடங்கியுள்ள
சல்பொராபேன் என்ற ஒட்சிடனெதிரி புற்று நோயாளர்களுக்குக் கொடுக்கப்படும்
கூச்துணிடூ போன்ற மருந்துகள் போன்று செயல் பட்டு புற்று நோய் உயிர்
கலன்களின் பெருக்கத்தைத் தடை செய்யும் ஆற்றல் கொண்டதாகும்..
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மார்பக புற்று நோயை தடுக்க Empty Re: மார்பக புற்று நோயை தடுக்க

Post by snehiti Tue Feb 09, 2010 10:34 am

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல தகவல்கள் பதிந்தமைக்கு நன்றி.. மார்பக புற்று நோயை தடுக்க 154550 மார்பக புற்று நோயை தடுக்க 154550 மார்பக புற்று நோயை தடுக்க 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

மார்பக புற்று நோயை தடுக்க Empty Re: மார்பக புற்று நோயை தடுக்க

Post by சபீர் Tue Feb 09, 2010 10:37 am

அருமையாக உள்ளது றிபாஸ் உங்க வைத்திய முறை வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மார்பக புற்று நோயை தடுக்க Empty Re: மார்பக புற்று நோயை தடுக்க

Post by mohan-தாஸ் Tue Feb 09, 2010 10:50 am

ஐயோ அதில போடுர படத்தை பார்த்தே புற்று நோய் பறந்து விடுமே
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

மார்பக புற்று நோயை தடுக்க Empty Re: மார்பக புற்று நோயை தடுக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum