ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது

2 posters

Go down

இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது Empty இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது

Post by சிவா Sun Feb 07, 2010 1:29 pm

[You must be registered and logged in to see this image.] இன்னா நாற்பது
கபிலர் இயற்றியது (கி பி 50-125)
(பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று)

கடவுள் வாழ்த்து

முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை@ யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா% வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.
@பொற்பன வெள்ளியை %மன்றப்பின்னாது

நூல்

பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
தந்தையில் லாத புதல்வ னழகின்னா
அந்தண ரில்லிருந் தூணின்னா@ வாங்கின்னா
மந்திரம் வாயா விடின். 1
@ ஊணின்னாது

பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா
பாத்தில் புநடைவை யுடையின்னா@ வாங்கின்னா
காப்பாற்றா வேந்த னுலகு. 2
@உடையின்னாது

கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா
நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா
கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா
தடுமாறி வாழ்த லுயிர்க்கு. 3

எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க் கின்னா செயல். 4

சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர்@ பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச் செய்யும் வினை. 5
@புரைசேர்

அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா@
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா
கொடும்பா டுடையார்வாய்ச் சொல். 6
@ கடு மொழியின்னா

ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா
நாற்ற மிலாத மலரி னழகின்னா
தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா
மாற்ற மறியா னுரை. 7

பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா
நகையாய நண்பினார் நாரின்மை யின்னா
இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா
நயமின் மனத்தவர் நட்பு. 8

கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா
வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா
வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா
பண்ணில் புரவி பரிப்பு. 9

பொருளணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா
இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா
அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா
பொருளில்லார் வண்மை புரிவு. 10


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது Empty Re: இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது

Post by சிவா Sun Feb 07, 2010 1:29 pm

உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா@
இடனில் சிறியரோ டியர்த்தநண் பின்னா
இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா
கடனுடையார் காணப் புகல். 11
@மனைவி தொழி லின்னா

தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா
வலைசுமந் துண்பான் பெருமித மின்னா
புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா
முலையிள்ளாள் பெண்மை விழைவு. 12

மணியிலாக் குஞ்சரம் வேந் தூர்த லின்னா
துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா
பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா
பிணியன்னார் வாழு மனை. 13

வணரொலி@ யைம்பாலார் வஞ்சித்த லின்னா
துணர்தூங்கு மாவின் படுபழ மின்னா
புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா
உணர்வா ருணராக் கடை. 14
@வணரொளி

புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா
கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா
இல்லாதார் நல்ல விருப்பின்னா@ வாங்கின்னா
பல்லாரு ணாணப் படல். 15
@விழைவின்னா

உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா
கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா
எண்ணிலான் செய்யுங் கணக்கு. 16

ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல். 17

உரனுடையா னுள்ள மடிந்திருந்த லின்னா
மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா
சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா
மனவறி யாளர்@ தொடர்பு. 18
@அகம்வறியாளர்

குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா
நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா
நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா
கலத்தல் குலமில் வழி. 19

மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா
வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா
மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா
மூரி யெருத்தா லுழவு. 20


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது Empty Re: இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது

Post by சிவா Sun Feb 07, 2010 1:30 pm

ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா
மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
ஒத்திலாப் பார்ப்பா னுரை. 21

யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா
ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா
தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா
கான்யா@ றிடையிட்ட வூர். 22
@ கானாறு

சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா
துறையிருந் தாடை கழுவுத லின்னா
அறைபறை யன்னவர்@ சொல்லின்னா வின்னா
நிறையில்லான் கொண்ட தவம். 23
@அறைபறை யாயவர்

ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை யுடையா ரயிலிருந்த னன்கின்னா
காமமுதிரி னுயிர்க்கின்னா@ வாங்கின்னா
யாமென் பவரொடு நட்பு. 24
@உயிர்க்கின்னாது

நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா@
ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா%
கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா
நட்ட கவற்றினாற் சூது. 25
@ இடுக்க ணனிகண்டா னன்கின்னா
% கண்டாற் பெரிதின்னா

பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
அரியவை செய்து மெனவுரைத்த லின்னா
பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா
பெரியோர்க்குத் தீய செயல். 26

பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா
கிழமை யுடையார்க்@ களைந்திடுத லின்னா
வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா
இளமையுண் மூப்புப் புகல். 27
@கிழமை யுடையாரை

கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா
வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா
இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா
கல்லாதான் கோட்டி கொளல். 28

குறியறியான் மாநாக@ மாட்டுவித்த லின்னா
தறியறியா% னீரின் பாய்ந்தாட& லின்னா
அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா
செறிவிலான் கேட்ட மறை. 29
@மானாகம் %இன்னா தறிவறியான்
& கீழ்நீர்ப்பாய்ந்தாடுதல்

நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா@
கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா
ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா
கடும்புலி வாழு மதர். 30
@ நெடுமார்நீள் கோட்டுயர் பாஅய்த லின்னா


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது Empty Re: இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது

Post by சிவா Sun Feb 07, 2010 1:30 pm

பண்ணமையா யாழின்கீழப் பாடல் பெரிதின்னா
எண்ணறியா மாந்தர்@ ஒழுக்குநாட் கூற்றின்னா
மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
தண்மை யிலாளர்% பகை. 31
@ எண்ணறிய மாந்தர் %தன்மையிலாளர்

தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை யுடையார் கெடல். 32

கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா
முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா@
வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா
கள்ள மனத்தார் தொடர்பு. 33
@ நடக்கி னனியின்னா

ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த@ லின்னா
விழுத்தகு நூலும்% விழையாதார்க் கின்னா
இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா
கழிப்புவாய் மண்டிலங் கொட்பு. 34
@ ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல்
%விழித்தகுநூலும்

எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா
குழலி னினிய@ மரத் தோசைநன் கின்னா
குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா
அழகுடையான் பேதை யெனல். 35
@குழலினிய

பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா
வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா
கெடுமிடங் கைவிடுவார் நட்பு. 36

நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து@ போகுத லின்னா
அறியாண் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல். 37
@துறையறியா நீரிழிந்து

பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை. 38

கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்த விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப் பாடா விடல். 39

அடக்க முடையவன் மீளிமை யின்னா
துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா
அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா
அடக்க வடங்காதார் சொல். 40

இன்னா நாற்பது முற்றிற்று


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது Empty Re: இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது

Post by சிவா Fri May 24, 2013 2:34 pm

இன்னா நாற்பது - சாமி. சிதம்பரனார்


மக்களுக்குத் துன்பந்தருவன இவை என்று கூறும் நாற்பது வெண்பாக்கள் இந்நூலில் உண்டு. இதனாலேயே இதற்கு இன்னா நாற்பது என்று பெயர் வைத்தனர். இந்நூலில் வெண்பாக்கள் ஒவ்வொன்றிலும் இன்னா என்னும் சொல் திரும்பத் திரும்ப வருகின்றது. இன்னா-துன்பம்.

இன்று இந்நூலில் காணப்படும் செய்யுட்கள் 41. ஒரு செய்யுள் கடவுள் வாழ்த்து. அது சிவன், பலராமன், திருமால், முருகன் நால்வரையும் வணங்காதார் துன்பம் அடைவார் என்று கூறுகின்றது. இக்கடவுள் வாழ்த்துப் பாட்டு நூலாசிரியாரல் பாடியிருக்க முடியாது. இவ்வாழ்த்தும் நூலோடு பிறந்ததாயிருந்தால் ‘‘இன்னா நாற்பது’’ என்ற பெயர் வைத்திருக்கமாட்டார்கள்.

இந்நூலாசிரியர் கபிலர். இப்பெயர் படைத்த புலவர்கள் பலர். அவர்களுள் இந்நூலாசிரியர் எக்கபிலர் என்று துணிந்துகூற முடியவில்லை.


சங்கப் பாடல்களிலே கபிலரது பாட்டு என்றால் அதற்கொரு தனிச் சிறப்பு. பாட்டின் சிறப்புக்கு உதாரணமாகக் கபிலரது பாட்டை எடுத்துக் கூறுவது பழந்தமிழ்ப் புலவர்கள் வழக்கம். பத்துப் பாட்டிலே குறிஞ்சிப் பாட்டைப் பாடியவர் கபிலர். ஐங்குறு நூற்றிலே மூன்றாம் நூறு கபிலர் பாடியது. பதிற்றுப்பத்திலே 7-வது பத்து கபிலர் இயற்றியது.கலித்தொகையிலே குறிஞ்சிக்கலி கபிலர் செய்தது. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களிலும் இவருடைய பாடல்கள் பல உண்டு.

இக்கபிலர் அந்தணர், பாரியின் நண்பர். மாமிச உணவு உண்டவர். புறநானூற்றில் 14-வது பாடல் இவர் பாடியது. அதில் இவர் மாமிச உணவு உண்பவர் என்பதைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் அரசனைக் காணச் சென்றார் கபிலர். அவன் கபிலர்க்குக் கைகொடுத்து வரவேற்றான். கபிலர் கை, பூப்போல மென்மையாக, வழவழ வென்றிருந்ததை உணர்ந்தான் ஆதன். ‘‘என் கை மட்டும் கடினமாக இருக்கிறது. உன் கை மென்மையுடன் இருப்பது ஏன்?’’ என்றான் ஆதன். ‘‘உன் கை, குதிரையின் கடிவாளத்தைப் பிடிக்கும் கை; கணையை எடுத்து வில்லிலே தொடுத்துவிடும் கை; இரவலர்க்கு நல்ல அணிகலன்களை அள்ளி வழங்கும் கை; ஆகையால் காய்ச்சிப் போய்க் கரடு முரடாக இருக்கின்றது. என் கை நன்றாகச் சமைத்த ஊனையும் துவையலையும், கறியையும், சோற்றையும் அள்ளி அள்ளி உண்ணுகின்ற கை; உண்ட சோறு செரிமானம் ஆகவில்லையே என்று வருந்தி வயிற்றைத் தடவிக்கொண்டிருக்கும் கை. ஆகையால் உன் கை கடினம்; என் கை மென்மை’’ என்று கூறினார். இதனால் சங்ககாலக் கபிலர் புலால் உணவை வெறுத்தவர் அல்லர் என்று காணலாம்.

இன்னாநாற்பதில் புலால் உணவு வெறுக்கப்படுகின்றது.

‘‘புலைஉள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா

புலால் உணவை விரும்பி வாழ்வது மக்கள் உயிர்க்குத் துன்பம்
தருவதாகும்’’ (பா.13)

‘‘ஊனைத்தின்று ஊனைப்பெருக்குதல் முன்இன்னா

மற்றொரு உயிரின் ஊனைத் தின்று, தன் உடம்பை வளர்த்தல்
துன்பமாகும்’’ (பா.23)

என்பவை புலால் உணவைக் கடிந்து கூறும் பகுதிகள். ஆதலால் இவர்
பாரியின் நண்பராக வாழ்ந்த அந்தக் கபிலராக இருக்க முடியாது.

கபிலர் அகவல் என்னும் நூல் ஒன்று உண்டு. அது சாதி வேற்றுமையை வன்மையாகக் கண்டிப்பது. சங்க நூல்களின் கருத்துக்களுக்கு மாறாக, ஆரியர்களே, நால்வகைச் சாதிப் பிரிவினையை இந்நாட்டிலே புகுத்தியவர்கள் என்று கூறுகின்றது. அது பிற்காலத்திலே எழுந்த நூல். கபிலர் அகவல் பாடிய கபிலர், சாதி வேற்றுமையை ஒத்துக்கொள்ளாதவர். இன்னாநாற்பது பாடிய கபிலர் சாதி என்று சொல்லாவிட்டாலும் குடிப்பிறப்பில் உயர்வு தாழ்வு உண்டு என்று ஒத்துக் கொள்ளுகிறார்.

‘‘குலத்தில் பிறந்தவன் கல்லாமை இன்னா

உயர்ந்த குலத்திலே பிறந்தவன் கல்வி கற்காமல் இருப்பது அவனுக்குத் துன்பமாகும்”.

‘‘குலம் இல்வழிக் கலத்தல் இன்னா

நல்ல குலம் இல்லாத குடியிலே மணம் செய்து கொள்ளுதல் துன்பம் தரும்’’

இவைகள் இன்னாநாற்பதில் உள்ளவை. இவைகள் பிறப்பிலே உயர்வு தாழ்வு உண்டு என்பதை ஒத்துக் கொள்ளுகின்றன. ஆதலால் இக்கபிலர் சங்ககாலக் கபிலரும் அல்லர். கபிலர் அகவல் பாடிய கபிலரும் அல்லர், வேறு யாரோ ஒரு கபிலர். இவர் வரலாறு தெரியவில்லை.

செய்யத் தகாதவை

இன்னா நாற்பதில் கூறப்படும் நீதிகள் மிகவும் சிறந்தவை.

இக்காலத்திற்குப் பொருந்தாதவை சில காணப்படலாம். பெரும்பாலான கருத்துக்கள் மக்களுக்கு அறிவையும்,அறத்தையும் போதிப்பவை. அவைகளில் சிலவற்றைக் காண்போம்.

‘‘பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டுஉரைத்தல் இன்னா;
இருள்கூர் சிறுநெறி தாம்தனிப் போக்கு இன்னா;
அருள் இலார் தம்கண் செலவு இன்னா; இன்னா
பொருள் இலார் வண்மை புரிவு.

பாட்டின் பொருளை அறிந்து சுவைக்கும் அறிவுள்ளவர் இல்லாத
இடத்தில் செய்யுளைக் கூறுதல் துன்பம். இருள் நிறைந்த சிறிய வழியிலே
தனியே செல்லுதல் துன்பம். இரக்கமில்லாதவரிடம் சென்று ஒன்றைக்
கேட்பதுதுன்பந்தரும். செல்வம் இல்லாதவர் பிறருக்குப் பொருள்
கொடுக்கவிரும்புதல் துன்பந்தரும்’’ (பா.11)

‘‘பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னா;
அரியவை செய்தும் எனஉரைத்தல் இன்னா;
பரியார்க்குத் தாம்உற்ற கூற்றுஇன்னா; இன்னா
பெரியார்க்குத் தீய செயல்.

பெரியாரோடு கொண்ட நட்பை விடுவது துன்பம். தம்மால் செய்ய முடியாத காரியங்களைச் செய்து முடிப்போம் என்று கூறுவது துன்பமாகும். தம்மிடம் அன்பில்லாதவர்பால் தாம் அடைந்த துன்பத்தை உரைத்தல் துன்பமாகும். பெருமையுள்ளவர்க்குத் தீமை துன்பமாகும்’’ (பா.25)

இந்த இரண்டு பாடல்களில் உள்ள அறங்கள் சிறந்தவை; என்றும்மக்களால் பின்பற்றக்கூடியவை.

பழக்க வழக்கங்கள்

பண்டைத் தமிழகத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் இந்நூலிலே காணலாம். பண்டைத் தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றையும் காணலாம்.

‘‘பார்ப்பார் இல் கோழியும்நாயும் புகல்இன்னா

பார்ப்பார் வீட்டிலே கோழியும் நாயும் நுழைவது துன்பம் தரும்’’. (பா.3)

பார்ப்பார்கள் கோழியையும் நாயையும் அருவருத்தனர். இரண்டும் மலந்தின்பவை; ஆதலால் அவைகள் வீட்டில் நுழைந்தால் ஆசாரத்திற்குக் குறைவு என்று கருதினர்.

‘‘இன்னா ஒத்துஇலாப் பார்ப்பான் உரை.

வேதத்தை ஓதாத பார்ப்பான் அறிவில்லாதவன். ஆதலால் அவன் கூறுவதை நம்பினால் துன்பந்தான்’’.(பா.22)

இவைகள் பார்ப்பாரைப் பற்றி கூறப்பட்டிருப்பவை.

‘‘இன்னா காப்பாற்றா வேந்தன் உலகு

குடிகளைக் காப்பாற்றாத வேந்தன் உள்ள நாட்டிலே வாழ்வது துன்பந்தரும்’’ (பா.3)
‘‘கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தல் இன்னா

கொடுங்கோல் செலுத்தும், கொலைத் தொழிலையுடைய மன்னர்களின்

ஆட்சியின் கீழே வாழ்வது துன்பம்’’. (பா.4)

‘‘முறை யின்றிஆளும் அரசு இன்னா

நீதியில்லாமல் ஆளுகின்ற அரசாட்சியின் கீழ் வாழ்வது துனபந்தரும்’’. (பா.6) இவைகள் அரசு முறையைப் பற்றிக்கூறியவை.

திருவுடை யாரைச் செறல் இன்னா

செல்வம் உள்ளவரைப் பகைத்துக் கொள்வதனால் துன்பம்
வரும்’’ (பா.5)

அக்காலத்திலே செல்வர்களுக்கே சமுதாயத்தில் மதிப்பு மிகுதி.அவர்களைப் பகைத்துக்கொண்டால் அவர்களால் எந்தத் தீமையையும் செய்யமுடியும். ஆதலால் அவர்களுக்கு அடங்கியே வாழவேண்டும் என்று நம்பினர்.

‘‘குறி அறியான் மாநாகம் ஆட்டுவித்தல் இன்னா

பாம்பாட்டுவதற்குரிய மந்திரம் முதலியவற்றை அறியாதவன்
பெரியபாம்பை ஆட்டுவது துன்பந்தரும்’’ (பா.30)

பாம்புகளை மந்திரத்தால் ஆட்டுவிக்கலாம் என்ற நம்பிக்கை பண்டைக் காலத்திலும் இருந்தது என்பதைக் காட்டுகின்றது இது.

‘‘ஒடுங்கி அரவு உறையும்இல் இன்னா

பாம்பு பதுங்கியிருக்கின்ற வீட்டில் வசிப்பது துன்பந்தரும்’’. (பா.31)

சில கிராமங்களில் பழைய வீடுகளிலே பாம்பு உண்டு. அதை மனைப்பாம்பு என்பர்; அடிக்கக்கூடாது என்றும் கூறுவர். இது மூடநம்பிக்கை இந்த நம்பிக்கையைக் கண்டிக்கின்றது இது.

இவ்வாறு பல நீதிகளை இந்நூலிலே காணலாம். ஒவ்வொரு வெண்பாவிலும் நான்கு நான்கு நீதிகள் கூறப்பட்டிருக்கின்றன. இந் நீதிகளில் பல நெஞ்சில் நிலைத்திருக்க வேண்டியவை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது Empty Re: இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது

Post by mohu Fri May 24, 2013 8:43 pm

நல்ல விளக்கம் ,
நன்றி
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது Empty Re: இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum