ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷார்ட் கட் கீகள்

Go down

ஷார்ட் கட் கீகள் Empty ஷார்ட் கட் கீகள்

Post by kalaimoon70 Sat Feb 06, 2010 10:59 pm

எக்ஸெல்
எக்ஸெல் தொகுப்பில் செயல்படுகையில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட் கட் வழிகள் இங்கு தரப்படுகின்றன.


CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.


SHIFT+SPACEBAR கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL+HOME : ஒர்க் ஷீட்டின் தொடக்கத்திற்கு செல்ல
CTRL+END: ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல
SHIFT+F3 : : பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட
CTRL+A: பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்
CTRL+A: பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாத போது அனைத்தையும் தேர்ந்தெடுக்கும்.
CTRL+‘ (சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலாவை அடுத்தடுத்துக் காணலாம்.
F11 or ALT+F1: அப்போது உள்ள ரேஞ்ச் சார்ந்து சார்ட் தயார் செய்யப்படும்.
CTRL+; (செமிகோலன்) தேதியை இடைச் செருக
CTRL+: (கோலன்) நேரத்தை இடைச் செருக
CTRL+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட செல் ரேஞ்சில் அப்போதைய என்ட்ரி உருவாக்க
F5: Go To டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+1: Format Cells டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+C : காப்பி செய்தல், CTRL+V :ஒட்டுதல்
CTRL+Z : செயல்படுத்தியதை நீக்க
CTRL+S : சேவ் செய்திட
CTRL+P: பிரிண்ட் செய்திட
CTRL+O: புதிய பைல் திறக்க போல்டரைக் காட்டும்


பவர் பாயிண்ட்
பவர் பாயிண்ட் தொகுப்பில் நமக்குப் பயன்படுவதால் நாம் மனதில் வைத்திட வேண்டிய சில ஷார்ட் கட் கீகள் இங்கு தரப்படுகின்றன.
Ctrl + Shift + D: என்ற கீகள் அப்போது காட்டப்படும் ஸ்லைடின் டூப்ளிகேட் காப்பி ஒன்றை ஏற்படுத்தும்.
Ctrl + M: புதிய ஸ்லைட் ஒன்று செருகப் படும். ஸ்லைட் லே அவுட்டினைத் தேர்ந்தெடுக்க சந்தர்ப்பம் தரப்படும்.
Ctrl + K: ஆகிய கீகள் லிங்க் தொடர்பு ஒன்றை இடைச் செருக விண்டோ ஒன்று திறக்கப்படும்.
Page Up கீ உங்களை ஒரு ஸ்லைட் பின் நோக்கிக் கொண்டு செல்லும்.
Page Down கீ உங்களை ஒரு ஸ்லைட் முன் நோக்கிக் கொண்டு செல்லும்.
இயக்கிக் கொண்டிருக்கையில் கீழ்க்காணும் ஷார்ட் கட் கீகள் உங்களுக்கு உதவிடும்.
Enter �அல்லது Down Arrow அல்லது N உங்கள் ஸ்லைட் �ஷாவில் ஒரு படி முன்னோக்கி செல்லும்.
Backspace அல்லது Up Arrow அல்லது P உங்கள் ஸ்லைட் ஷாவில் ஒரு படி முன்னோக்கி செல்லும்.
Esc கீ உங்கள் ஸ்லைட் �ஷாவினை முடித்து வைக்கும்.



B கீ ஒரு கருப்பு திரையைக் காட்டும். அதே கீ கருப்பு திரையை விலக்கும்.
W கீ ஒரு வெள்ளை திரையைக் காட்டும். அதே கீ வெள்ளை திரையை விலக்கும்.
ஒரு எண்ணை அழுத்தி என்டர் தட்டினால் அந்த எண்ணுடைய ஸ்லைடுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இந்த ஷார்ட் கட் கீகள் கொஞ்சம் தான். ஸ்லைட் �ஷாவினை இயக்கிய பின் F1 கீயை அழுத்துங்கள். உங்கள் பயன்பாட்டிற்காக கீ போர்டு ஷார்ட் கட் கீகள் பட்டியல் உங்களுக்குக் கிடைக்கும்.


8.A. எக்ஸெல் சில பிட்ஸ் அன்ட் பைட்ஸ்
உங்களுக்குத் தெரியுமா? எக்ஸெல் செல் ஒன்றில் உள்ள டேட்டாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தனி பார்மட்டிங்கினை மேற்கொள்ளலாம். சில சொற்களை ஒரு செல்லில் அமைத்திருப்பீர்கள். அதில் ஒன்றிரண்டினை மட்டும் சாய்வாகவோ அல்லது போல்ட் டைப்பிலோ அமைக்கலாம். என்ன செய்கிறீர்கள்? முயற்சி செய்து பார்த்துவிட்டு விருப்பத்தை கைவிடுகிறீர்களா? அல்லது அப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்று வியக்கிறீர்களா?
எப்படி இதனை மேற்கொள்ளலாம் என்று பார்ப்போமா! நீங்கள் பார்க்க முயற்சிக்கையில் தான் அது எவ்வளவு எளிது என்று உணர்ந்து கொள்வீர்கள்.
செல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். பின் பார்மட்டிங்கில் சில மாற்றங்களை மேற்கொள்கிறீர்கள். அது அனைத்தையும் மாற்றுகிறது. அப்படியே விட்டுவிடலாமா!
செல்லுக்குள் கர்சரை நுழைக்க வேண்டும் என்றால் அதனுள் சென்று இருமுறை கிளிக் செய்திடவும். அல்லது அந்த செல்லைத் தேர்ந்தெடுத்த பின்னர் பார்முலா பாரில் கர்சரைக் கொண்டு சென்று எடிட் செய்திடவும். கர்சர் செல்லுக்குள் சென்றவுடன் நீங்கள் எந்த குறிப்பிட்ட சொற்களை புதுவித பார்மட்டில் தர விரும்புகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
செல்லில் உள்ளே இருப்பதில் பகுதியான சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வழக்கமான பார்மட்டிங் பணியை எப்போதும் போல மேற்கொள்ளவும். இதற்கு பார்மட் மெனு சென்று பார்மட் செல்ஸ் செல்லவும். இதனைப் பெற கண்ட்ரோல் + 1 அழுத்தலாம். இனி பார்மட்டிங் முடிந்த பின்னர் பார்த்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த சொல் பகுதி மட்டும் பார்மட் ஆகி இருக்கும்.
எக்ஸெல் தொகுப்பிலிருந்து டெக்ஸ்ட் இம்போர்ட்: எக்ஸெல் தொகுப்பிலிருந்து டெக்ஸ்ட்டை காப்பி செய்திடுகையில் மீண்டும் அதனைப் பெரும் அளவில் எடிட் செய்திட வேண்டியதிருப்பதாக வாசகர் ஒருவர் எழுதி இருந்தார். வழக்கமான காப்பி அண்ட் பேஸ்ட் இதில் பயனளிக்கவில்லை என்றும் டெக்ஸ்ட் பெரிதாக இருந்தால் பிரச்னையும் அதிகமாக உள்ளது என்றும் கூறி இருந்தார். இவருக்கான தீர்வை எல்லாரும் காணலாம். எக்ஸெல் டெக்ஸ்ட்டினை, அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் காப்பி செய்து கொள்ளுங்கள். பின் வேர்ட் பைலைத் திறந்திடுங்கள். எங்கு பேஸ்ட் செய்திட வேண்டுமோ அங்கு கர்சரைக் கொண்டு செல்லுங்கள். அதன் பின் வழக்கம்போல் பேஸ்ட் செய்தி டாமல் எடிட் மெனு செல்லுங்கள். விரியும் மெனுவில் Paste Special என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் பேஸ்ட் ஸ்பெஷல் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Microsoft Excel Worksheet Object என்பதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் டெக்ஸ்ட் அநாவசியச் சிக்கல் இன்றி ஒட்டப்படும். ஒட்டப்பட்ட டெக்ஸ்ட் பாக்ஸில் அதனை ரீசைஸ் செய்வதற்கான ஹேண்டில்களும் காணப்படும். இதனைப் பயன்படுத்தி டெக்ஸ்ட்டை உங்களுக்குத் தேவையான வகையில் மாற்றி அமைத்து ஒட்டி வைக்கலாம்.
பார்மட் இல்லாமல் டேட்டா மட்டும் காப்பி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் செல் ஒன்றில் உள்ள டேட்டாவை இன்னொரு செல்லுக்குக் காப்பி செய்திட எண்ணுகிறீர்கள். கண்ட்ரோல் + சி அல்லது கண்ட்ரோல் + எக்ஸ் பயன்படுத்தி டேட்டாவை நகர்த்தினால் அந்த செல்லில் உள்ள பார்மட்டிங் விஷயங்களும் சேர்ந்து நகர்கிறது. ஆனால் உங்களுக்கோ டேட்டா மட்டுமே மாற வேண்டும். சுற்றி இருக்கிற பார்டர் கோடு, தகவல் பார்மட்டிங், குறுக்குக் கோடு என எதுவும் வேண்டாம். இதற்கு எப்படி செட் செய்திடலாம்?
1. முதலில் செல்லைத் தேர்ந்தெடுங்கள். பின் F2 கீயை அழுத்துங்கள். இதை வைத்து நீங்கள் டேட்டாவை மாற்றப் போவதில்லை; ஆனால் அதனை அலாக்காகத் தூக்கி அமைக்க முதலில் அதைத் தனிமைப்படுத்த வேண்டும் அல்லவா! அதற்காகத்தான் இந்த வேலை. இனி டேட்டாவை கண்ட்ரோல் + சி அல்லது கண்ட்ரோல்+எக்ஸ் கொடுத்து எடுக்கவும். அதன் பின் எந்த செல்லில் இந்த டேட்டாவைப் பதிக்க வேண்டுமோ அந்த செல் சென்று கண்ட்ரோல் + வி அல்லது பேஸ்ட் கட்டளை கொடுத்தால் டேட்டா பதிவாகும்.
பைலை மறைக்கும் வழிகள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மிக முக்கிய ரகசியமான ஒர்க் புக் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது அதைப் பார்க்கக்கூடாத ஒருவர் உங்கள் அருகே வருகிறார். உடனே என்ன செய்வீர்கள்? பைலை மினிமைஸ் செய்வீர் களா? அவரும் எக்ஸெல் புரோகிராமில் பணியாற்ற முயன்றால் இந்த பைல் அங்கிருப்பது தெரிய வருமே. அப்படியானால் அவர் கண்களில் இருந்து எப்படி பைலை மறைப்பது? இதற்கு ஓர் எளிய வழி உள்ளது. உடனே மெனு பாரில் Window என்ற பகுதியில் தட்டி அதில் கிடைக்கும் மெனுவில் Hide என்பதனைக் கிளிக் செய்திடுங்கள். உடனே அந்த ஒர்க்புக் மற்றவர்களின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு விடும். சரி, அதன் பின்னர் நீங்கள் தனியாக இருக்கையில் அந்த பைல் வேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும். மீண்டும் விண்டோ மெனு பெற்று Unhide என்பதில் கிளிக் செய்திட வேண்டும். அப்போது ஒரு சிறிய விண்டோ திறக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கும் பைல்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். உங்களுக்கு வேண்டிய மறைக்கப்பட்ட பைல் எதிரே டிக் செய்து திறக்கப்பட்டு நீங்கள் பணியாற்றலாம்.
இப்போது உங்கள் மனதில் ஒரு சந்தேகம் தோன்றலாம். மறைத்து வைத்த பைலை மீண்டும் திறக்காமல் எக்ஸெல் புரோ கிராமையும் கம்ப்யூட்டரையும் மூடிவிடுகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் மறைக்கப்பட்ட பைல் என்னவாகும் என்றுதானே கேள்வி எழுகிறது? பைலைத் திறக்க கட்டளை கொடுத்தவுடன் அந்த பைல் திறக்கப்பட்டு உடனே மறைக்கப்படும். இந்நிலையில் மெனு பாரில் Window பெற்று Unhide என்பத னைக் கிளிக் செய்தால் மீண்டும் பைல் பணியாற்றக் கிடைக்கும்.


8.B..பிக்ஸெட் டெசிமல்


திடீரென என் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் எந்த எண்ணை ஒரு செல்லில் கொடுத்தாலும் அது டெசிமல் ஆகக் காட்டுகிறது என்று ஒரு வாசகர் தொலைபேசியில் தெரிவித்து எப்படி நேர்கிறது என்று கேட்டார். பொறுமையாக அவரிடம் அவர் என்ன என்ன செய்தார் என்று கேட்டும் பலனில்லை. பின் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறிவிட்டு சில மாற்றங்களை நானே செய்து பார்த்த போது அதே மாற்றம் என் ஒர்க்புக்கிலும் ஏற்பட்டது.
செல்லில் 5 என என்டர் செய்தால் அது 0.05 என வந்தது. எண் 5 மட்டும் அப்படியாக இருக்கலாம் என்று எண்ணி 7 அடித்தாலும் அது 0.07 ஆக இருந்தது. பின்பு தான் நான் மேற்கொண்ட மாற்றம் அவ்வாறு அதனை செட் செய்துள்ளது என்று தெரிய வந்தது.
Tools மெனு சென்று அங்கு Options பிரிவில் ஏற்படுத்திய மாற்றம் தான் இதற்குக் காரணம். எடிட் டேபைத் தட்டிப் பார்த்த போதுகிடைத்த விண்டோவில் "Fixed decimal" என்னும் ஆப்ஷன்ஸ் இருந்தது. அதில் ஏற்படுத்திய டிக் அடையாளத்தினை நீக்கிய பின்னர் மீண்டும் டெசிமல் அடையாளம் ஏற்படவில்லை.
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum