ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோமாலியா கடற்கொள்ளையர்கள்

5 posters

Go down

சோமாலியா கடற்கொள்ளையர்கள் Empty சோமாலியா கடற்கொள்ளையர்கள்

Post by kirupairajah Sat Feb 06, 2010 6:10 pm

சோமாலியா கடற்கொள்ளையர்கள் Pirates1
சமீபகாலமாக அரபிக் கடல் பகுதியில் ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவது அதிகரித்து விட்டது. சோமாலியா கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தான் சர்வதேச அளவில் இப்போது பரபரப்பான செய்தி. இந்திய கடற்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி, கடற் கொள்ளையர்களின் கப்பலை மூழ்கடித்த செய்தி வெளியான பின், அலுவலகம் முதல் டீ கடை வரை இதுபற்றிய விவாதங்கள் தான் சூடு பறக்கின்றன. கடற்கொள்ளை பற்றியும், அதன் பின்னணி குறித்தும் பல முக்கியமான தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வரத் துவங்கியுள்ளன.

நிலையான அரசு இல்லை:
கடற்கொள்ளையர்கள் வசிக்கும் சோமாலியாவில் கடந்த 1991ல் இருந்து முறையான தேசிய அரசு எதுவும் இல்லை. "தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள்' என்ற ரீதியில், ஆயுதம் வைத்திருப்பவர்களின் ராஜ்யம் தான் இங்கு கொடி கட்டி பறக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஏராளமான கும்பல்கள், கப்பல்களையும், ஆயுதங்களையும் வாங்கி குவித்துள்ளன. இதை வைத்துக் கொண்டு ஏடன் வளைகுடாவில் செல்லும் கப்பல்களை தாக்கி, மிரட்டி கடத்தி வருகின்றனர்.மிகப்பெரிய தொகையை பிணையத் தொகையாக பெற்று, சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். சோமாலியாவின் பிரதான தொழிலே கடற்கொள்ளை தான்.

பிசி'யான பகுதி:
கடற் கொள்ளையர்களுக்கு மற்றொரு சாதகமான விஷயமும் உள்ளது. ஏடன் வளைகுடா பகுதி தான், உலகிலேயே மிகவும் "பிசி'யான கப்பல் போக்குவரத்து நடக்கும் பகுதி. இந்திய பெருங்கடலையும், செங்கடலையும் இணைக்கும் பகுதி என்பதால், ஏராளமான சரக்கு கப்பல்கள், தினமும் இந்த பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். இந்தப் பகுதி வழியாக தினமும் குறைந்தது ஒரு இந்தியக் கப்பலாவது செல்வது வழக்கம். இவற்றில் பெரும்பாலானவை எண்ணெய் பொருட்களை ஏற்றிச் செல்பவை.

இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு ஏன்?:
கப்பல் கடத்தல் பற்றிய செய்திகள் வெளியாகும் போதெல்லாம் அதில் இந்தியர்கள் தான் அதிகம் பாதிப்பிற்குள்ளாவதாக தெரிய வருகிறது. இதற்கு காரணம், கப்பல் துறை பற்றிய பயிற்சி பெற்றுள்ள இந்தியர்களுக்கு சர்வதேச அளவில் அதிக கிராக்கி உள்ளது. அதிகமான சம்பளம் கிடைப்பதாலும், பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த சரக்கு கப்பல்களில் இந்தியர்களே அதிகம் பணி புரிகின்றனர். சர்வதேச அளவிலான கப்பல் போக்குவரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 27 ஆயிரம். இது தவிர, சரக்கு ஏற்றுபவர், சுத்தம் செய்பவர் என்று தொழிலாளர் மட்டத்தில் 55 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இதனால், கப்பல் கடத்தப்படும் போதெல்லாம், அதில் இந்தியர்கள் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "இந்தியாவில் கப்பல் போக்குவரத்து குறித்து பயிற்சி பெற்றவர்களுக்கும், அது தொடர் பான கல்வி கற்றோருக்கும் சர்வதேச அளவில் நல்ல மதிப்பு உள்ளது. இந்தியர்கள் திறமையாக பணியாற்றுவர் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால், கப்பல் போக்குவரத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது' என்றன.

கொள்ளையர்களை பிடிப்பதில் பிரச்னை:
சோமாலியா கடற் கொள்ளையர்களை பிடிப்பதற்கும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் ஏராளமான இடையூறுகள் உள்ளன. அனைத்து நாடுகளும் கடற் கொள்ளையர் ஒழிப்பு முயற்சியில் சாதாரணமாக இறங்கி விட முடியாது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், "சோமாலியாவில் அரசு மாற்றத்துக்கு உதவிய நாடுகளுக்கு மட்டுமே, அதன் கடல் பகுதிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல நாடுகள் கடற் கொள்ளை தடுப்புப் பணியில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி கடற் கொள்ளையர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக் கொண்டே செல்கின்றனர்.

ஆபத்துக்கு உதவுவதில் சிரமம்:
ஏடன் வளைகுடாவில் யேமன் கடல் எல்லையில் இருந்து, சோமாலியா வரை உள்ள 950 கி.மீ., தூர பகுதிகளில் தான் கடல் கொள்ளை ஜாம் ஜாம் என நடக்கிறது. இந்த பகுதியில் கப்பல் போக்குவரத்தை பாதுகாக்கும் பொறுப்பு, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த மேற்கத்திய கடல் கண்காணிப்பு குழுமத்திடம் உள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்த போர்க் கப்பல்கள் இங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இங்கு வேறுநாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் கடத்தப்படும் போது, மேற்கண்ட நாடுகளின் போர்க் கப்பல்களிடம் இருந்து உதவி பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது என்கிறார், இந்திய கப்பல் கழகத் தலைவர் ஹஜாரா.

மேலும் அவர் கூறியதாவது: இந்தியக் கப்பல்கள் கடத்தப் படும் சூழ்நிலை ஏற்படும்போது, கப்பலின் கேப்டன் உடனடியாக அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களுக்கு தகவல் தெரிவிப்பார். ஆனால், அவர்கள், "எந்த நாட்டு கப்பல், கப்பலில் என்ன சரக்கு இருக்கிறது, கப்பலில் இருப்பவர் கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்'என அடுக்கடுக்காக கேள்வி கேட்பர். இந்திய கப்பல் எனக் கூறினால், "உடனடியாக உங்களுக்கு உதவமுடியாது' என தெரிவித்து விடுவர். இந்த கால அவகாசத்தை பயன் படுத்தி கடற் கொள்ளையர்கள் கப்பலை கடத்திச் சென்று விடுவர். இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க, ஐ.நா., தலைமையில் அமைதிப்படை ஒன்று ஏற்படுத்தப் பட வேண்டும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படையினரை இதில் ஒருங்கிணைத்து கடற் கொள்ளையை தடுக்க வேண்டும். சர்வதேச கப்பல் போக்குவரத்து கழக கூட்டத்தில் இதுபற்றி இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு ஹஜாரா கூறினார்.

அமெரிக்காவும் வலியுறுத்தல்:
தொடரும் கடற் கொள்ளை விவகாரம் பற்றி அமெரிக் காவும் தனது கவலையை தெரிவித்துள் ளது. அமெரிக்க கடற்படை அதிகாரி மைக் முல்லேன் இதுபற்றி கூறுகையில், "சோமாலியா கடற் கொள்ளையர்களை பிடிக்கும் விவகாரத்தில் பல குழப்பமான சட்ட விதிமுறைகள் உள்ளன. எனவே, கடற் கொள்ளையை தடுத்து, கொள்ளையர்களை தண்டிக்க தேவையான சட்ட வரைமுறைகளை உருவாக்க வேண்டும். இதுகுறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா வலியுறுத்த உள்ளது. அனைத்து நாடுகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.

சவுதி கப்பலுக்கு நூறு கோடி:
கடற் கொள்ளையை தடுக்க சர்வதேச நாடுகள் எந்த அளவுக்கு தீவிரமாக களத்தில் இறங்கினாலும், கடற் கொள்ளையர்களின் அட்டூழியம் சிறிதளவும் குறையவில்லை. தொடர்ந்து தங்கள் வேலையை அவர்கள் செய்து கொண்டுள்ளனர். தற்போது கூட "சீரியஸ் ஸ்டார்' என்ற சவுதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் கப்பலை அவர்கள் கடத்தி, தங்கள் பிடியில் வைத்துள்ளனர். இந்த கப்பலில் 20 லட்சம் பேரல் எண்ணெய் உள்ளது. கப்பல் ஊழியர்களும் கொள்ளையர்களின் பிடியில் உள்ளனர். இந்த கப்பலை விடு விக்க வேண்டுமெனில், "நூறுகோடி ரூபாய் வேண்டும்' என கொள்ளையர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கடற் கொள்ளையர் களில் ஒருவராக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட ஒருவர், தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "சவுதியைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்திடம் பேச்சு நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை என்ற பெயரில் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. 10 நாட்களுக்குள் நூறு கோடி ரூபாய் தந்தால் கப்பலை விடுவிப்போம்' என கூறியுள்ளார்.

ஜப்பான் கப்பலுக்கு எவ்வளவு?:
கடந்த செப்டம்பர் மாதம் "ஸ்டால்ட் வாலோர்' என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பலை கடற் கொள்ளையர்கள் கடத்தினர். இதில் இருந்த ஊழியர்களில், கப்பல் கேப்டன் உட்பட 18 பேர் இந்தியர்கள். கப்பலையும், ஊழியர்களையும் விடுவிக்க ஜப்பான் நிறுவனத்தோடு, கடற் கொள்ளையர்கள் இரண்டு மாதங்களுக்கு மேல் பேச்சு நடத்தினர். கடந்த வாரம் பெரும் தொகை கைமாறியதைத் தொடர்ந்து, கப்பலையும், ஊழியர்களையும் கொள்ளையர்கள் விடுவித்தனர். கடற் கொள்ளையர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவம் வெளியாகவில்லை. கோடிக் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
*இந்திய கடற்படைக்கு சுதந்திரம்:* கடற் கொள்ளையர்களின் கப்பலை, இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ்., தபார், சமீபத்தில் அதிரடித் தாக்குதல் நடத்தி கடலுக்குள் மூழ்கடித்தது. இதையடுத்து, இந்திய கடற்படைக்கு, ஏடன் வளைகுடா பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு சிறிதளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய கடற்படை கப்பல் சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் மேலும் 12 கடல் மைல் தொலைவுக்கு தனது கண்காணிப்பு பணியை நீட்டிக்க முடியும்.

சோமாலியா கடற்கொள்ளையர்கள் Pirates2பிரச்னைக்கு தீர்வு என்ன?: சோமாலியா கடற் கொள்ளையர்களை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பாக, சமீபத்தில் தான் சர்வதேச நாடுகள் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளன. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து சர்வதேச கப்பல் போக்குவரத்து ஆர்வலர்கள் கூறியதாவது: சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் ஐ.நா., தலைமையில் பல்வேறு நாடுகளின் கடற்படையினர் அடங்கிய ஒருங்கிணைந்த படைப் பிரிவு, நிரந்தர பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். கூடுதல் போர்க் கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட வேண்டும். கடத்தப்படுவது எந்த நாட்டு கப்பலாக இருந்தாலும் சரி, உடனடியாக அதை மீட்கும் முயற்சியில் களம் இறங்க வேண்டும். சட்ட விதிமுறைகளை சுட்டிக் காட்டி, மீட்புப் பணியை தாமதப்படுத்துவது சரியாக இருக்காது. கடற் கொள்ளையர்களை பிடித்து, தண்டிக்க தேவையான சட்ட வரைமுறைகளை உருவாக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை ஐ.நா.,வும், சர்வதேச சமுதாயமும் உடனடியாக துவங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆச்சரியத்தில் திளைக்கும் சோமாலிய மக்கள்:
கடற் கொள்ளையர்களின் புண்ணியத்தில் சோமாலியாவின் சின்னஞ் சிறு கிராமங்களில் கூட சர்வ சாதாரணமாக கரன்சிகள் புழங்க துவங்கியுள்ளன. சிறிய நகரங்களில் கூட, காபி ஷாப், இன்டர்நெட் கபே, ஜவுளிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடத்தப்படும் கப்பல்களை விடுவிக்க கோடிக்கணக்கில் பணம் பெறுவதால், கொள்ளையர்கள் தங்களிடம் உள்ள பணத்தை வாரி இறைக்கின்றனர். பல ஆண்டுகளாக உள்நாட்டு கலவரத்தாலும், முறையான அரசும் இல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வரும் சோமாலியா மக்கள், இந்த காட்சிகளை ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் பார்க்கின்றனர்.

கொள்ளையர்களுக்கு செம வாழ்வு தான்:
கப்பல் நிறுவனங்களை மிரட்டி பறித்த பணத்தையெல்லாம், தங்கள் மனம் போன போக்கில் செலவழிக் கின்றனர் கடற்கொள்ளையர்கள். விலை உயர்ந்த கற்களால் கட்டப் பட்ட சொகுசு பங்களாக்களை கட்டுவது, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ஆடம்பர கார்கள் வாங்குவது ஆகியவை இவர்களது பொழுதுபோக்கு ஆகிவிட்டன. அழகான பெண்களை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியுடன்
வாழ்ந்து வரும் இவர்கள், சாப்பாட்டிலும் குறை வைக்கவில்லை. மேற்கத் திய உணவு வகைகளை சமைப்பதற்காக, பிரத்யேகமான சமையல்காரர்களையும் வேலைக்கு வைத்துள்ளனர். எல்லாம், பணம் படுத்தும் பாடு.

நன்றி தினமலர்.


சோமாலியா கடற்கொள்ளையர்கள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சோமாலியா கடற்கொள்ளையர்கள் Empty Re: சோமாலியா கடற்கொள்ளையர்கள்

Post by Manik Sat Feb 06, 2010 6:16 pm

இங்கள பிடிக்க வேறு வழியே இல்லையா ரொம்ப அட்டூலியம் பன்றாங்கப்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சோமாலியா கடற்கொள்ளையர்கள் Empty Re: சோமாலியா கடற்கொள்ளையர்கள்

Post by சாந்தன் Sat Feb 06, 2010 6:20 pm

Manik wrote:இங்கள பிடிக்க வேறு வழியே இல்லையா ரொம்ப அட்டூலியம் பன்றாங்கப்பா
நம்ம தமிழ்நாடு போலிச கொண்டு பொய் விட்டோம்னா சும்மா புகுந்து விலான்றுவாங்கள்ள சோமாலியா கடற்கொள்ளையர்கள் 677196 சோமாலியா கடற்கொள்ளையர்கள் 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சோமாலியா கடற்கொள்ளையர்கள் Empty Re: சோமாலியா கடற்கொள்ளையர்கள்

Post by Manik Sat Feb 06, 2010 6:23 pm

Manik wrote:இவங்கள பிடிக்க வேறு வழியே இல்லையா ரொம்ப அட்டூலியம் பன்றாங்கப்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சோமாலியா கடற்கொள்ளையர்கள் Empty Re: சோமாலியா கடற்கொள்ளையர்கள்

Post by Manik Sat Feb 06, 2010 6:24 pm

nirshan2007 wrote:
Manik wrote:இங்கள பிடிக்க வேறு வழியே இல்லையா ரொம்ப அட்டூலியம் பன்றாங்கப்பா
நம்ம தமிழ்நாடு போலிச கொண்டு பொய் விட்டோம்னா சும்மா புகுந்து விலான்றுவாங்கள்ள சோமாலியா கடற்கொள்ளையர்கள் 677196 சோமாலியா கடற்கொள்ளையர்கள் 677196

தமிழ்நாடு போலீஸ் பத்தாது அண்ணா உங்க காலேஜ்ல இருந்து ஒரு படையை உருவாக்குங்க ரமணா படம் மாதிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சோமாலியா கடற்கொள்ளையர்கள் Empty Re: சோமாலியா கடற்கொள்ளையர்கள்

Post by சாந்தன் Sat Feb 06, 2010 6:38 pm

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 68516
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சோமாலியா கடற்கொள்ளையர்கள் Empty Re: சோமாலியா கடற்கொள்ளையர்கள்

Post by vbharathan Sat Feb 06, 2010 10:02 pm

தமிழ்நாடு போலீஸ் avargalidamum lanjathai vaangi vittu viduvaargal. Lanjam vaanguvadhil eevu irakkamatravargal dhaan namadhu தமிழ்நாடு போலீஸ்.
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

சோமாலியா கடற்கொள்ளையர்கள் Empty Re: சோமாலியா கடற்கொள்ளையர்கள்

Post by அப்புகுட்டி Sun Feb 07, 2010 2:36 am

மாணிக் நம்ம கேப்டன் அவர்களை அனுப்புங்கள் எல்லாம் சரியகிடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சோமாலியா கடற்கொள்ளையர்கள் Empty Re: சோமாலியா கடற்கொள்ளையர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்ரிக்கநாடுகளான சோமாலியா, எத்தியோபியா ஆகிய நாடுகளில் கடும் பஞ்சம்,
» கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை
» சோமாலியா என்னதான் நடக்கிறது
» சோமாலியா கடல் கொள்ளையர்களிடம் சிக்கிய 100 இந்தியர்களில் 15 பேர் விடுவிப்பு!
» சோமாலியா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி: பசி, பட்டினியால் பலியாகும் அவலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum