Latest topics
» பொது அறிவு தகவல்கள்by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுப்ரியா சாந்திலால் கவிதைகள்
Page 1 of 1
சுப்ரியா சாந்திலால் கவிதைகள்
சுப்ரியா சாந்திலால்
நான் கவிஞன் இல்லை!
முதலாம் எழுத்து ஒன்றி வருதல் மோனை
இரண்டாம் எழுத்த ஒன்றி வருதல் எதுகை
யாப்பு அடிரொடை சீர்தளை பலவும்
இப்பவும் படிக்காமற் துருப்பிடித்ததென்னே!
பதினெண் கீழ்க்கணக்கும் பதினெண் மேற்கணக்கும்
கணிதத்தில் மட்டுமே உண்டென்றெண்ணிக் கற்றேன்!
அகநானூறும் புறநானூறும் இருந்திடலறியாது
அகத்தில் அழுக்காறும் புறத்தில் ஒப்பனையும் பெற்றேனே!
தாய்ப்பால் ஆட்டுப்பால் ஆவின்பால் எனும்
முப்பாலுக்கப்பால் எப்பாலும் அறியேனே!
எட்டுத்தொகை கலித்தொகை பதிற்றுப்பத்து
பட்டினப்பாலை எட்டா உயரக் கொய்யாக்கனிதானே!
அப்பர் சுந்தரர் மேகலைச் சாத்தனார்
கம்பர் ஒட்டக்கூத்தர் இளங்கோவடிகளார்
பார் அதிரப்பாடிய பாரதி யாரோ?
பாண்டியன் பரிசு தந்த பாரதிதாசன் எவரோ?
செத்துப் போனது சுண்டெலி தானென
நாத்தம் மோந்து கண்டுகொள்ளும் மூக்கன் நான்!
உணர்ச்சி உலையில் வார்த்தை ரவை கொட்டி
அகங் காரம் கலந்து உப்புமாக் கவி சமையற்காரன் தான்!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சுப்ரியா சாந்திலால் கவிதைகள்
சிவராத்திரி
சன் முதல் விண் வரை
மாத்தி மாத்தி மேய்ஞ்சாச்சி!
இருவத்தி நாலுமணி இடைவிடா எ·ப்.எம்.
கேட்டுக் கேட்டுப் புளிப்பாச்சி!
அரைகுறைக் கிறுக்கல் கவிதை
அடிச்சித் திருத்தி முடிச்சாச்சி!
விட்டுவிட்டுச் சொட்டும் குழாய்
கழுத்தைத் திருகி நெறிச்சாச்சி!
சும்மாச் சும்மா குரைக்கும் தெருநாய்
சன்னல் இழுத்து அடைச்சாச்சி!
காத்தில் படபடக்கும் புத்தகப்பம்
தூக்கிப் பரணில் எறிஞ்சாச்சி!
காதோரம் சுத்தும் ஒத்தைக் கொசு
வத்தி கொளுத்தி விரட்டியாச்சி!
மீந்துபோன சாம்பார் நாத்தம்
மூச்சடக்கி பாத்திரம் வெளக்கியாச்சி!
ஒண்ணுக்கு மேல் இன்ணொன்னு தலையணை
தலையை ஒசத்தி வச்சாச்சி!
இடமாய் வலமாய் மல்லாந்து குப்புற
மூச்சுத் திணறி எழுந்தாச்சி!
எதிர்த்த வீட்டு ரெண்டாம் தாரம்
கூட்டிப் பெருக்கி தெளிச்சாச்சி!
சைச்கிள் பையன் பின்சீட்டு தினசரி
வாசப்படியில் விழுந்தாச்சி!!
சன் முதல் விண் வரை
மாத்தி மாத்தி மேய்ஞ்சாச்சி!
இருவத்தி நாலுமணி இடைவிடா எ·ப்.எம்.
கேட்டுக் கேட்டுப் புளிப்பாச்சி!
அரைகுறைக் கிறுக்கல் கவிதை
அடிச்சித் திருத்தி முடிச்சாச்சி!
விட்டுவிட்டுச் சொட்டும் குழாய்
கழுத்தைத் திருகி நெறிச்சாச்சி!
சும்மாச் சும்மா குரைக்கும் தெருநாய்
சன்னல் இழுத்து அடைச்சாச்சி!
காத்தில் படபடக்கும் புத்தகப்பம்
தூக்கிப் பரணில் எறிஞ்சாச்சி!
காதோரம் சுத்தும் ஒத்தைக் கொசு
வத்தி கொளுத்தி விரட்டியாச்சி!
மீந்துபோன சாம்பார் நாத்தம்
மூச்சடக்கி பாத்திரம் வெளக்கியாச்சி!
ஒண்ணுக்கு மேல் இன்ணொன்னு தலையணை
தலையை ஒசத்தி வச்சாச்சி!
இடமாய் வலமாய் மல்லாந்து குப்புற
மூச்சுத் திணறி எழுந்தாச்சி!
எதிர்த்த வீட்டு ரெண்டாம் தாரம்
கூட்டிப் பெருக்கி தெளிச்சாச்சி!
சைச்கிள் பையன் பின்சீட்டு தினசரி
வாசப்படியில் விழுந்தாச்சி!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சுப்ரியா சாந்திலால் கவிதைகள்
ஆறு வாரச் சுதந்திரம்
மேலிருந்து கீழும் கீழிலிருந்து மேலும்
சோப்பு நுரையுடன் மூப்பு நரையை
வழித்து வழித்து வாஷ்பேசினில் கரைக்கும்
காலைநேரச் சடங்கு இல்லை!
பூச்சிக் கத்திரிக்காய் பச்சைத் தக்காளி
முற்றல் வெண்டைக்காய் முனை உடைத்து விலக்கி
கருவேப்பிலை கொத்துமல்லி கொசுறு கேட்டு...
சந்தைத் தொல்லை இப்போது இல்லை!
கறுப்பாக்கி இளமையூட்ட நரைமுடிக்கு 'டை' போட்டு
கழுத்தை இறுக்க சாரைப்பாம்பு 'டை' கட்டி
கரும்புகை கக்கும் வாகன வியூகத்தில் புகுந்து
வெளியேறும் இன்னல் இல்லை!
அலுவலக மேலதிகாரியின் அர்ச்சனை இல்லை!
அக்கம்பக்க வெட்டிப் பேச்சு அறுவை இல்லை!
'செய்வேலை சரியில்லை' - மனைவியின் திட்டில்லை!
சின்னத்திரை தொடர்நாடகச் சித்ரவதை இல்லை!
இடுப்பு முதல் பாதம்வரை மாவுக்கட்டு
படுத்த படுக்கையில் ஆனந்த சுதந்திரம்!
''அடுத்த வாரம் கட்டு பிரிப்போம்!''
''அதற்குள் என்ன டாக்டர் அவசரம்?''
மேலிருந்து கீழும் கீழிலிருந்து மேலும்
சோப்பு நுரையுடன் மூப்பு நரையை
வழித்து வழித்து வாஷ்பேசினில் கரைக்கும்
காலைநேரச் சடங்கு இல்லை!
பூச்சிக் கத்திரிக்காய் பச்சைத் தக்காளி
முற்றல் வெண்டைக்காய் முனை உடைத்து விலக்கி
கருவேப்பிலை கொத்துமல்லி கொசுறு கேட்டு...
சந்தைத் தொல்லை இப்போது இல்லை!
கறுப்பாக்கி இளமையூட்ட நரைமுடிக்கு 'டை' போட்டு
கழுத்தை இறுக்க சாரைப்பாம்பு 'டை' கட்டி
கரும்புகை கக்கும் வாகன வியூகத்தில் புகுந்து
வெளியேறும் இன்னல் இல்லை!
அலுவலக மேலதிகாரியின் அர்ச்சனை இல்லை!
அக்கம்பக்க வெட்டிப் பேச்சு அறுவை இல்லை!
'செய்வேலை சரியில்லை' - மனைவியின் திட்டில்லை!
சின்னத்திரை தொடர்நாடகச் சித்ரவதை இல்லை!
இடுப்பு முதல் பாதம்வரை மாவுக்கட்டு
படுத்த படுக்கையில் ஆனந்த சுதந்திரம்!
''அடுத்த வாரம் கட்டு பிரிப்போம்!''
''அதற்குள் என்ன டாக்டர் அவசரம்?''
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சுப்ரியா சாந்திலால் கவிதைகள்
துரிதம்
கருப்பைக்குள் தலைகீழாய் கரணம்!
எட்டே மாதத்தில் ஆயுத ஜனனம்!
பிறப்புச் சான்றிதழ் திருத்தம்!
இரண்டே வயதில் எல்.கே.ஜி.!
மூன்றாம் வகுப்பிலிருந்து டபுள் பிரமோஷன்!
முதுகலைப் பட்டம் டீன்-ஏஜ் முடிவில்!
ஒருவருட இந்தியச் சம்பளம்
ஒருமாத அமெரிக்க டாலராய்...
சாதம், சாம்பார், கூட்டுக்குப் பதிலாக...
பத்தே நிமிடத்தில இன்ஸ்டன்ட் ·பிரைட் ரைஸ்!
வான்வழி பறந்து...
தூக்கம் துறந்து...
கனவிலும் கடிகார முட்களின் விரட்டு!
காலன் பிரதிநிதி செல்லிடப்பேசி
அழைப்பு... அழைப்பு... ஓயா அழைப்பு...
முப்பதில் மாரடைப்பு!
அசையா சொத்துக்கள்
அசையும் சொந்தங்கள்
அனாதையாய்....!!
கருப்பைக்குள் தலைகீழாய் கரணம்!
எட்டே மாதத்தில் ஆயுத ஜனனம்!
பிறப்புச் சான்றிதழ் திருத்தம்!
இரண்டே வயதில் எல்.கே.ஜி.!
மூன்றாம் வகுப்பிலிருந்து டபுள் பிரமோஷன்!
முதுகலைப் பட்டம் டீன்-ஏஜ் முடிவில்!
ஒருவருட இந்தியச் சம்பளம்
ஒருமாத அமெரிக்க டாலராய்...
சாதம், சாம்பார், கூட்டுக்குப் பதிலாக...
பத்தே நிமிடத்தில இன்ஸ்டன்ட் ·பிரைட் ரைஸ்!
வான்வழி பறந்து...
தூக்கம் துறந்து...
கனவிலும் கடிகார முட்களின் விரட்டு!
காலன் பிரதிநிதி செல்லிடப்பேசி
அழைப்பு... அழைப்பு... ஓயா அழைப்பு...
முப்பதில் மாரடைப்பு!
அசையா சொத்துக்கள்
அசையும் சொந்தங்கள்
அனாதையாய்....!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சுப்ரியா சாந்திலால் கவிதைகள்
பாரதி என் தோழன்
அன்பு பாரதி! வாழிய நலம்!
உனைப் பார்த்து எண்பத்தெட்டு ஆண்டுகள்!
நீ நலமா? செல்லம்மா நலமா?
காக்கை குருவி கழுதை நலமா?
இங்கு நரி முதலை பச்சோந்தி நலம்!
மற்றும் நானும் குடும்பத்தினரும் நலம்!
தேர்தலுக்குத் தேர்தல் ஓரணியிலிருந்து மற்றொன்றுக்கு
வானரங்களாய்த் தாவும் கட்சிப்பிழைகள் நலம்1
வெந்ததைத் தின்று தந்ததைப் பெற்று
கோணலாய் முதுகு வளைந்த காட்சிப்பிழைகள் நலம்!
ஆட்சி மாறியும் அஞ்சி அஞ்சி
நீதிக்கூண்டில் கரணம் போடும் சாட்சிப்பிழைகள் நலம்!
இடிப்பாரை எல்லாம் ஏமரா மன்னன்
சிறைச்சாலை அனுப்பும் ஆட்சிப்பிழைகள் நலம்!
போலிப் பக்தர்கள் சுதேசிச் சாமியார்கள்
அரசியல் எத்தர்கள் தொலைக்காட்சிப் பித்தர்கள் நலம்!
புள்ளி ராஜாக்கள் கரும்புள்ளி மந்திரிகள்
'மில்லி' ராஜாக்கள் 'டாஸ்மாக்' கடைகள்!
ஆணுரு கொண்ட அலிகள் நலம்!
பெண்ணுரு கொண்ட பேய்கள் நலம்!
தமிழின எதிரிகள் இலங்கையில் நலம்!
தமிழினத் துரோகிகள் இங்கே மிகமிக நலம்!
சுருங்கக் கூறின்,
இங்கு அன்னைத் தமிழைத்தவிர அனைத்தும் நலம்!
இங்கு உன் நலமறிய ஆவல்!!
இப்படிக்கு,
உன் உயிர்த்தோழன்
சாந்திலால்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சுப்ரியா சாந்திலால் கவிதைகள்
மழை
தவளைக்குத் திருமணம்!
கழுதைக்குக் கல்யாணம்!
கன்னிப்பெண் நிர்வாணம்!
அம்மன்களுக்குக் கூழ்!
கோவில்களில் யாகம்!
குன்னக்குடியின் ராகம்!
கடைசியில்...
பெய்தே விட்டது அடைமழை
அமேசான் காட்டில்!!
தவளைக்குத் திருமணம்!
கழுதைக்குக் கல்யாணம்!
கன்னிப்பெண் நிர்வாணம்!
அம்மன்களுக்குக் கூழ்!
கோவில்களில் யாகம்!
குன்னக்குடியின் ராகம்!
கடைசியில்...
பெய்தே விட்டது அடைமழை
அமேசான் காட்டில்!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
» கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
» கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum