ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - உ

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

தமிழ் அகராதி - உ - Page 6 Empty தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:30 am

First topic message reminder :

உ - தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாம் உயிர் எழுத்து; இரண்டு என்ற எண்ணின் குறியீடு; ஒரு சுட்டெழுத்து (எ.கா - உது, உம் மனிதன்); ஒரு பெயர்ச்சொல் விகுதி (எ.கா - தரவு, இழவு); ஒரு வினையெச்ச விகுதி (எ.கா - செய்து)
உக்கா - புகைகுடிக்க உதவும் கருவி
உக்கிரம் - கோபம்; மிகுந்த ஊக்கம்; கொடுமை
உக்கிராணம் - சாமான் அறை
உகம் - யுகம்; ஊழிக்காலம்; பூமி; நுகம்; பாம்பு; தலைப்பாட்டு; ஒரு ஜோடி

உகிர் - நகம்
உகு - கீழே உதிர்; சிதறி விழு; சிதறி விழச் செய்; தேய்வுறு; அஸ்தமனம் அடை; பறத்தல் செய்; சொரியச் செய் [உகுதல், உகுத்தல்]
உகை - செலுத்து; எழுப்பு; உயர்ந்தெழு; குதித்தெழு; செலுத்தப் பட்டுச் சொல் [உகைத்தல், உகைதல்]
உங்கு - உவ்விடம்
உச்சம் - தலைக்கு நேரான வானமுகடு; சிறப்பு; உயரம்; ஒரு கிரகத்தின் மிகவுயர்ந்த நிலை; மிக உயர்ந்த எல்லை அளவு

உச்சரி - எழுத்துக்களை ஓசையுடன் பிறப்பி; மந்திரங்களைச் செபித்தல் செய்; [உச்சரித்தல், உச்சரிப்பு, உச்சாரணம்]
உச்சசாடனம் - பேயோட்டுதல்; பிசாசை ஏவுதல்
உச்சி - வான முகடு; உச்சந்தலை; தலை; சிகரம்; நடுப்பகல்; மேல் எல்லை; உண்ட உண்கலத்தில் மீதியுள்ளது
உச்சிட்டம் - ஒருவர் எச்சில்; எஞ்சியுள்ள பொருள்; சேடம்
உச்சிமோத்தல் - (குழந்தையின்) தலையில் உச்சியை மோந்து அன்பு காட்டுதல்

உசாத்துணை - நம்பகமான நண்பன்
உசாவு - ஆலோசனை செய்; விசாரணை செய் [உசாவுதல், உசாதல்]
உசிதம் - தகுதி; மேன்மை
உசுப்பு - வெருட்டு; எழுப்பு [உசுப்புதல்]
உஞற்று - முயற்சி செய்; செய்; தூண்டு [உஞற்றுதல்]

உட்கார் - அமர்ந்திரு [உட்கார்தல்]; பகைவர்
உட்கிடை - உள்கருத்து; பேரூரின் பகுதியான சிறு கிராமம்
உட்கு - அச்சம்; நாணம்; வலிமை; மிடுக்கு; மதிப்பு
உட்கொள் - உண்ணுதல் செய்; உள்ளிழு; உள்ளே கருது [உட்கொள்ளல்]
உடந்தை - சேர்க்கை; துணை; ஆதரவு

உடம்படு - ஒத்ததாகச் செய்; இசைதல் செய் [உடம்படுதல்]
உடம்பாடு - சம்மதம்; ஒற்றுமை
உடம்பிடி - வேல்
உடம்பு - சரீரம்; மெய்யெழுத்து
உடல் - சினங்கொள்; சச்சரவிடு; ஆசையால் வருந்து [உடலுதல், உடலல்]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழ் அகராதி - உ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:44 am

உவரோதம் - உப்புக்கடல் : இடையூறு.
உவர்க்கம் - கடற்கரை.
உவர்த்தல் - அருவருத்தல் : உப்புக் கரித்தல் : வெறுத்தல்.
உவர்நிலம் - உவர் சேர்ந்த நிலம்.
உவர்மண் - உப்புச் சேர்ந்த மண்.



உவலை - ஓட்டை : தழை : சருகு : இழிவு : பொய்.
உவல் - தழை : சருகு.
உவவனம் - உபவனம் : பூங்காவனம் : சோலை : உய்யானம்.
உவவு - உவப்பு : மதிநாள் : உவா : தவம்.
உவவேசம் - இருத்தல்.



உவளகம் - அந்தப்புரம் : இடைச்சேரி : சிறைச்சாலை : மதில் : ஒரு பக்கம் : அகழி :
உப்பளம் : பள்ளம் : குளம் : பிரித்தல் : வாயில்.
உவளம் - சோறு : யானைக்கவளம்.
உவளித்தல் - தூய்மை செய்தல்.
உவளு - தவளு.



உவளுதல் - துவளுதல் : நடுங்கல் : பரத்தல்.
உவள்தல் - கம்பித்தல் : துவளுதல்.
உவறுதல் - சுரத்தல் : ஊற்றுதல்.
உவற்றுதல் - சுரக்கச் செய்தல்.
உவனாயம் - துவைத்துக் கட்டுமருந்து.



உவனி - வாள்.
உவனித்தல் - வில்லை எய்யத் தொடங்கல் : தூய்மை செய்தல்.
உவனிப்பு - ஈரம்.
உவன் - பின்புறத்துள்ளவன் : முன் நிற்பவன்.
உவன்றி - நீர்நிலை.



உவாதி - எல்லை : கடுந்துன்பம்.
உவாதை - வேதனை.
உவாத்தி - கற்பிப்போன்.
உவாநாடி - கிரகணபரிசனநாடி : இளநாடி : உபநாடி.
உவாந்தம் - பௌர்ணிமை : அமாவாசை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:44 am

உவாந்தி - சக்தி.
உவாய் - ஒரு மரம்.
உவாளி - பூட்டை : அறுகு.
உவிதல் - சாதல் : நீர் வற்றியவிதல் : நெருக்கத்தினாலவிதல் : காற்றில்லாமற் புழுங்கல்.
உவித்தல் - அவித்தல்.



உவியல் - சமைத்த கறி.
உவைச்சன் - உவச்சன் : ஓச்சன் : கணக்கன்.
உவையம் - உபயம்.
உவ் - உவை.
உவ்வி - தலை : தலைவி.



உவ்விடம் - நடுவிடம்.
உவ்வு - தவம்.
உவ்வை - உப்பை.
உழ - பழக : முயல் : வேலை செய்ய : உழவுத் தொழில் நடத்த : வருந்த : உழவென்னேவல்.
உழக்கல் - உழக்குதல்.



உழக்கால் - உழவுகோல்.
உழக்குதல் - கலக்குதல் : உழுதல் : வெல்லல் : விளையாடுதல் : மிதித்தல்.
உழக்குருட்டுதல் - சூதாடுதல்.
உழக்கோல் - தாற்றுக்கோல் : உழவு கோல்.
உழச்சியர் - உழத்தியர்.




உழத்தல் - வெல்லுதல் : வருந்துதல் : துவைத்தல் : பழகுதல் : செய்தல் : முயலுதல் : புரளல் : பட்டனுபவித்தல்.
உழத்தொறும் - நுகருந்தோறும்.
உழத்திப்பாட்டு - நூல் வகைகளில் ஒன்று.
உழத்தியர் - மருத நிலப் பெண்கள்.



உழப்பல் - குழப்பிப் பேசல் : பழகல் : நட்டல்.
உழப்பாளி - முயற்சியுள்ளவன் : கள்ள நியாயம் பேசுவோன்.
உழப்புதல் - மழுப்புதல் : போலிவாதஞ் செய்தல் : காலங் கடத்துதல் : பழகுதல் : குழப்பிப் பேசுதல்.
உழமண் - அழுக்கெடுக்கும் மண்.
உழம்பு - ஒலி : குழம்பு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:44 am

உழம்புதல் - பல ஒலிகள் கலந்தொலித்தல் : குழம்புதல்.
உழலைமரம் - மாட்டின் கழுத்திற் கட்டுங் கட்டை.
உழலைவேலி - வழிநடைப்பட்டுப் போகிறவர்களுக்கு இடங் கொடுத்துப் பின் உழன்று கொண்டு
தன் நிலையில் நிற்கும் உழலைமரம் பொருந்திய வழியினையுடைய வேலி.
உழவடை - உழவு நிலத்தின் குடியுரிமை.
உழவர் - மருதநில மக்கள்.



உழவுகட்டல் - உழுதல்.
உழவுகுண்டை - உழவுமாடு : உழவெருது.
உழவுமழை - உழுதற்கு வேண்டிய மழை.
உழறுதல் - கலக்குதல் : கலங்குதல் : சுழலுதல் : உலாவல் : அளைதல் : மோதும்படி தள்ளுதல்.
உழற்சி - அலைகை : சுழற்சி : வருத்தம் : ஆடுகை : திரிதல் : சுற்றித் திரிகை.



உழற்றி - மிகுதாகம் : சுழற்சி.
உழற்றுதல் - உழலச் செய்தல் : அலையச் செய்தல் : சுழற்றுதல் : உடம்பு நோயாற் புரளுதல்.
உழன்றறுத்தல் - கடின வேலை செய்தல் : பழகித் தேர்தல்.
உழன்றி - மாட்டின் கழுத்திலிருந்து உழலும் கட்டை.
உழாநாஞ்சில் - நாஞ்சில் மலை.



உழால் - உழுதல் : கிண்டுதல்.
உழிஞை - எண்வகை மாலைகளில் ஒன்று : கொற்றான் : சிறுபூனை.
உழிதரல் - கழலல் : திரிதல்.
உழிதல் - அலைதல்.
உழுதல் - நிலத்தைக் கிளைத்தல் : கிண்டுதல்.



உழுதுண்போர் - வேளாளர்.
உழுதூண் - பயிர்த்தொழில் செய்து வாழ்தல்.
உழுத்தல் - பதனழிதல்.
உழுத்து - ஓர் அணி.
உழுநர் - உழவர்.



உழுபடை - கலப்பை.
உழுபடைச்சால் - சீதை.
உழுவம் - எறும்பு : பீலிகை.
உழுவல் - இடைவிடா அன்பு : முறை : குணம் : முறைமை : உழுவேன்.
உழைக்கண்ணாளன் - தோழன் : உடனிருப்போன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:44 am

உழைக்கலம் - பொன் : வெள்ளியாலான ஏனங்கள்.
உழைச்செல்வான் - நோய் தீர்த்தற் பொருட்டுச் செல்லும் மருத்துவனோடு உதவிக்குச் செல்பவன்.
உழைஞர் - ஏவலாளர்.
உழைதல் - துன்பமுறல் : இரைதல்.
உழைத்தல் - பாடுபடுதல் : வருந்துதல்.



உழைநின்றார் - ஏவல் செய்வார்.
உழைப்பறித்தல் - சேற்றிலுழலுதல் : வருந்தி முயலுதல்.
உழைப்பு - முயற்சி : ஈட்டம்.
உழைமை - வரிக்கூத்தில் ஒன்று.
உழையிருந்தான் - அமைச்சன் : உடனிருப்போன் : நோயாளிக்கு உதவி புரிபவன்.




உழையோர் - உழையர்.
உழைவு - யாழின் உள்ளோசை.
உளகர் - உள்ளானவர்.
உளகு - யாழின் தண்டு : கிராம ஒழுங்கு.
உளதாதல் - தோன்றியிருத்தல்.



உளது - மெய்ம்மை.
உளபடி - உள்ளபடி.
உளப்படுதல் - ஒப்புக் கொள்ளுதல் : இணங்குதல் : உட்படுத்துதல்.
உளப்படுத்தல் - உட்படுத்தல்.
உளப்பு - நடுக்கம்.



உளமிகுதி - மனச்செருக்கு.
உளமை - உண்மை.
உளம்புதல் - அலைத்தல் : ஓலமிகுதல்.
உளரு - உளர்.
உளர்செரு - எடுப்புஞ் சாய்ப்புமான போர்.



உளர்ச்சி - உளர்வு : உளர்தல் : சுழற்சி : உளர்ப்பு.
உளர்தல் - கோதுதல் : கிண்டுதல் : தலைமயிராற்றுதல் : அசைத்தல் : சிதறுதல் : பரப்புதல் : பூசல் : தடவுதல் : யாழ் முதலியன வாசித்தல் : தாமதித்தல் : சுழலுதல் : உறுதியற்றாடுதல்.
உளர்த்தல் - உணரச் செய்தல்.
உளர்ப்பு - அலைக்கை : உதிர்ப்பு : குரவை.
உளர்வு - அசைகை : யாழ் வாசிக்கை : சுழலுகை : ஈடாட்டம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:45 am

உளவன் - துப்பாள் : உளவுகாரன்.
உளவாடம் - முன் பணம் : அச்சாரம் : உறுதிப் பணம்.
உளறல், உளறுதல் - குழறுபடையான மொழி : தடுமாறிப் பேசுதல் : ஆரவாரித்தல்.
உளறுபடை - பேச்சிற் குழறுகை.
உளிஞை - கோபுரவாயில் படை.



உளித்தலைக்கோல் - இருப்புப் பாரை : உளிப்பாரை.
உளிநர் - எண்ணுபவர்.
உளு - அரிக்கும் புழு : உளுத்தது.
உளுக்காத்தல் - இருத்தல்.
உளுக்குதல் - நெளிதல் : மெருகிடுதல் : சுளுக்குதல்.



உளுத்தல் - மரம் முதலியன புழுவால் அரிக்கப்பட்டுக் கெடுதல்.
உளுவை - மீன்வகை.
உளைக்கால் - மயிர்க்கால்.
உளைச்சல் - உளைவு.
உளைதல் - மிகவருந்துதல் : குடைச்சல் : நோயடைதல் : விடுபடுதல் : சிதறிப் போதல் :
அழிதல் : தோற்றம் : ஊளையிடுதல்.



உளைத்தவர் - வெறுத்தவர்.
உளைத்தல் - வருத்துதல் : வெறுத்தல்.
உளைந்து பேசுதல் - மனம் நொந்து பேசுதல்.
உளைப்பறித்தல் - சேற்றிற் புரளல் : போராட்டப்படல்.
உளைப்பு - அழைப்பு : ஒலிப்பு : வருத்தம் : தேகக் குடைச்சல்.



உளைப்பு - விரிந்தபூ.
உளைமந்தை - கடுநோய்.
உளைமயிர் - பிடரிமயிர்.
உளைமான் - சிங்கம் : குதிரை.
உளைய - வெறுப்ப.



உளைவு - உடல் வருத்தம் : மனவருத்தம் : வலி : குடைவு : வலிப்பு : வயிற்றுளைவு.
உள்கல் - உள்குதல்.
உள்குதல் - உள்கல் : நினைத்தல் : உள்ளழிதல்.
உள்படுதல் - மனமொப்பி நடத்தல் : அறிதல்.
உள்வட்டம் - நாணயமாற்றிற் பெறும் ஊதியம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:45 am

உள் வணக்கம் - மன வணக்கம் : அந்தரங்க வழிபாடு.
உள்வரி - வேற்றுவடிவங் கொள்ளல்.
உள்வலிப்பு - ஒரு நோய்.
உள்வழக்கு - உள்ளதை உண்டென்பது.
உள்வழி கடந்தோன் - கடவுள்.



உள்வாசல் - முற்றம்.
உள்வாரம் - அந்தரங்கச் சார்பு : மேல்வாரம்.
உள்விழுதல் - உள்ளே போதல் : நட்புக் கூடுதல் : குறைதல் : காரியத்தின் பொருட்டு நட்புக் கொள்ளுதல் :
உள்ளாதல் : உள்வீழ்தல் : அடங்குதல்.
உள்வீழ்தல் - சுருங்குதல் : குறைதல்.
உள்ளகம் - நெஞ்சு.



உள்ளக்காட்சி - மானதக்காட்சி.
உள்ளடி - மறைவு : உள்ளங்கால் கட்டி : நெருங்கிய சுற்றம்.
உள்ளடிக்குள் - வீட்டில் உள்ளவர்களுக்குள்ளே.
உள்ளடியார் - உறவர்.
உள்ளது - உடையது : உண்மை : ஆன்மா.



உள்ளத்துறைவோன் - கடவுள்.
உள்ள நிகழ்ச்சி - மனக்கருத்து.
உள்ளந்தண்டு - கழுத்தெலும்பு.
உள்ளந்தாள் - உள்ளங்கால்.
உள்ளப்படிறு - மனவஞ்சகம்.



உள்ளப் புணர்ச்சி - தலைவனும் தலைவியும் உள்ளத்தாற் கூடும் கூட்டம்.
உள்ளமிகுதி - ஊக்கம் : உள்ளக்கிளர்ச்சி.
உள்ளரங்கம் - அந்தரங்கம்.
உள்ளரவம் - மனக்கலக்கம்.
உள்ளறிவு - விஞ்ஞானம்.



உள்ளவன் - பொருளுடையவன்.
உள்ளளவு - உண்டான மட்டும்.
உள்ளாங்கு - உள்ளபடி.
உள்ளார் - உடையவர் : வாழ்ந்திருப்போர் : நினையார் : பகைவர்.
உள்ளாளம் - இசைவகை : கூத்துவேறுபாடு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:45 am

உள்ளாள் - உள்ளாகப் பயிலும் ஆள்.
உள்ளாற்றுக்கவலை - ஆற்றிடைக் குறை.
உள்ளான் - ஒரு குருவி : பொருளுள்ளவன்.
உள்ளிடுதல் - உள்ளடக்குதல் : உட்படுதல் : தொகைக்குட்படுதல்.
உள்ளிடை - உள்ளிடம் : மறை : அந்தரங்கம் : உட்காரியம்.



உள்ளிட்டார் - கூட்டாளிகள் : முதலானவர்கள்.
உள்ளிந்திரியம் - மனம்.
உள்ளிப்பல் - பூண்டின் உரி.
உள்ளிருப்பு - வைப்புநிதி.
உள்ளுடை - கோவணம்.



உள்ளுடைதல் - மனங்கலங்குதல் : மனம் முறிதல்.
உள்ளுபு - நினைத்து : உள்ளி.
உள்ளுயிர் - கடவுள்.
உள்ளுதல் - நினைதல் : ஆராய்தல் : நன்குமதித்தல் : இடைவிடாது நினைத்தல்.
உள்ளுயிர்க்குன்று - நத்தை.



உள்ளுருகல் - மனங்கரைதல்.
உள்ளுவது - உளதாயிருப்பது : கருதுவது.
உள்ளுறுத்தல் - உட்செலுத்தல் : உட்கருதுதல் : உள்ளிடுதல்.
உள்ளுறையுவமம் - வெளிப்படையாகக் கூறாது கருப்பொருண்மேல் ஏற்றிக் கூறும் உவமம் தோன்றாமல் உவமித்தல்.
உள்ளூர் - ஊர்நடு : சொந்தவூர்.




உள்ளூன்றல் - கடுஞ்சொற் சொல்லல்.
உள்ளெரிச்சல் - பொறாமை.
உள்ளொற்றுதல் - உண்ணிகழ்ச்சியை உற்றறிதல்.
உள்ளோசை - அகவொலி : உள்ளொலி.
உள்ளோர் - உள்ளவர்.



உற - மிக : கிட்ட : உறவென்னேவல்.
உறக்கு - உறக்கம் : உறக்கென்னேவல்.
உறக்குதல் - தூங்கச் செய்தல் : இமையை மூடச் செய்தல் : நாசப்படுத்துதல் : கிள்ளியெடுத்தல்.
உறங்காப்புளி - இரவில் இலை குவியாத புளியமரம்.
உறங்கி - புளியமரம் : முழுச் சோம்பேறி : தூங்கி : மடிந்து.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:45 am

உறங்குதல் - தூங்குதல் : ஒடுங்குதல் : சோர்தல் : தங்குதல்.
உறட்டவன் - வறண்டவன்.
உறட்டுதல் - வறட்டுதல்.
உறட்டை - தீநாற்றம்.
உறண்டு - முரட்டுக் குணம்.



உறண்டை - உறண்டு.
உறத்தல் - கிள்ளியெடுத்தல் : பிளத்தல் : அழுத்துதல் : உறிஞ்சுதல் : சிறிதாதல் : செறிதல்.
உறந்தை - உறையூர்.
உறப்பு - செறிவு.
உறமுறை - உறவின் முறை.



உறவன் - உறவுடையவன்.
உறவாடுதல் - உறவுகொண்டாடுதல் : நட்புச் செய்தல்.
உறவாளி - உறவு கொண்டவன்.
உறவி - உயிர் : எறும்பு : உறவு : கிணறு : நீரூற்று : உலைக்களம் : பிரவிருத்தி :
பொருத்தம் : சுற்றம் : நட்பு : உறுகை : விருப்பம் : ஊறுபுனல் : ஒரு புழு : மலை முருங்கை.
உறவின் முறையார் - உறவர்.



உறவோர் - சுற்றத்தார் : நண்பர் : அடைந்தோர் : இனத்தார் : தக்கார் : நட்டோர் : தாயம்.
உறழ - ஓர் உவம உருபு [ ஒப்ப] : காலம் : பெருக்கல் : பொது : இடையீடு : உறழவென்னேவல்.
உறழல் - ஒத்தல் : எண்கூட்டிப் பெருக்கல்.
உறழ்கலி - கலிப்பா வகை.
உறழ்குறித்தல் - வாது செய்யக் கருதல்.



உறழ்ச்சி - மாறுபாடு : திரிகை : உறழ்வு : விகற்பம்.
உறழ்தல் - பெருக்குதல் : ஒத்தல் : எதிராதல் : மிகுதல் : செறிதல் : விகற்பித்தல் : வீணை நரம்பு தெறித்தல்.
உறழ்பொரு - உவமையினும் பொருளை மிகுத்துக் கூறும் ஒப்பு.
உறழ்பொருள் - ஒப்பு மாறுபடக் கூறுவது.
உறழ்ப்பு - காந்தார பஞ்சமம்.



உறன்முறை - உறவுமுறை.
உறாதவன் - நொதுமலன்.
உறாமுதல் - கிடைக்காத காரணம்.
உறாமை - நிந்தனைச் செயல்.
உறாவரை - முற்றூட்டு : பிறர் உள்ளே வராத எல்லையை உடைய நிலம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:46 am

உறாவுதல் - சோர்தல்.
உறான் - உறவினன் அல்லான் : பகைவன்.
உறிக்கா - இரு பக்கமும் உறிதொங்கும் காவடி.
உறிஞ்சுதல் - உள்ளிழுத்தல்.
உறிதல் - உறிஞ்சுதல்.



உறியடி - கண்ணன் பிள்ளைப் பருவத்தில் உறிவெண்ணெய் எடுத்ததைக் கொண்டாடுந் திருநாள்.
உறீஇ - அழுத்தி : உறுவித்து.
உறுகணாளன் - வறிஞன் : தீவினையாளன்.
உறுகை - உறுதல்.
உறுகோள் - பற்றுக்கோடு : நிகழ்ச்சி.





உறுக்கல் - உறுக்குதல் : அதட்டல் : கடத்தல் : சினத்தல் : அச்சுறுத்தல்.
உறுக்குதல் - அதட்டுதல் : சினத்தல் : தண்டித்தல் : தாண்டுதல்.
உறுசுவை - சாராலங்காரம்.
உறுசூது - பெருவஞ்சகம்.
உறுதல் - இருத்தல் : தங்குதல் : நேர்தல் : பொறுத்தல் : வருந்துதல் : பயன்படல் : நிகழ்தல் : பொருந்துதல் : மிகுதல் : சேர்தல் : தொடுதல் : ஒத்தல் : நினைத்தல்.



உறுதரல் - தீண்டல்.
உறுதிக்கட்டுரை - கழறல் : இடித்தல் : நெருங்கல்.
உறுதிச் சுற்றம் - உற்றதுணைவர் : நட்பாளர் : மறையவர் : மருத்துவர் : நிமித்திகப் புலவர்.
உறுதிப்பாடு - திடப்படுத்தல்.
உறுதிப் பொருள் - கடவுள் : அறிவு : உண்மைப்பொருள்.



உறுதுணை - உற்றதுணை.
உறுத்துதல் - உண்டாக்குதல் : அமைத்தல் : அடைவித்தல் : ஒற்றுதல் : பதித்தல் : அழுத்துதல் :
வருத்துதல் : மிகுத்தல் : விரித்தல் : செலுத்துதல் : உண்பித்தல் : சீறுதல் : நாட்டுதல்.
உறுத்தை - அணில்.
உறுநர் - சேர்ந்தவர்.
உறுந்தறுவாய் - தற்சமயம்.



உறுபடை - பெரும்படை.
உறுபு - பாலையாழ்த்திறம் : மிகுதி.
உறுபொருள் - உடையவன் இன்மையால் தானே வந்தடையும் பொருள்.
உறுப்படக்கி - ஆமை.
உறுப்பணங்கெட்டவன் - அங்க ஈனன் : மூடன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:46 am

உறுப்பறை - அங்கவீனன் : உறுப்புக் குறைத்தல்.
உறுப்பா - ஒரு மரம்.
உறுப்பில்பிண்டம் - உறுப்பற்ற தசைத்திரள்.
உறுப்பினகவல் - ஒரு பொருண் மேல் பத்திசைப்பது.
உறுப்புத்தோல் - பூணூலிற் கட்டிய மான்தோல்.



உறுப்பு நலன் அழிதல் - பிரிவால் துன்பப்படுவோருடைய உறுப்புகளின் அழகு கெடுதல்.
உறுப்புள்ளவன் - திறமுடையவன்.
உறுமல் - ஒரு பறை : தோற் கருவி.
உறுமாலை, உறுமால் - மேல் வேட்டி : உருமால்.
உறுமு - முறு முறு : உருமல்.



உறுமுதல் - உறுமென்று ஒலித்தல் : குமுறுதல் : எழும்புதல்.
உறும் - உறுதியுடைத்து.
உறும்பு - உலர்ந்த கரம்பை மண்ணின் கூரிய சிறுகட்டி.
உறுவது - வரற்பாலது : இலாபம் : ஒப்பது.
உறுவரர் - தேவர்.



உறுவர் - அடைந்தோர் : அருகக்கடவுள் : எதிர்ந்தவர் : முனிவர்.
உறுவலி - மிக்க வலியுடையோன்.
உறுவல் - துன்பம் : உறுவேன்.
உறுவன் - அருகன் : உறுவேன் : முனிவன்.
உறுவித்தல் - பொருத்துதல்.



உறுவை - ஔவை உடன் பிறந்தாள் : அடைவாய்.
உறூஉ - உறுத்தல்.
உறைகாலம் - மழைக்காலம் : வாணாள்.
உறைகுத்துதல் - பாலுக்குப் பிரை குத்துதல்.
உறைகோடல் - பெய்ய வேண்டுங் காலத்துப் பெய்யாமை.



உறைகோடுதல் - பருவ மழை கெடுதல்.
உறைக்கப்பார்த்தல் - உற்றுப் பார்த்தல்.
உறைக்கிணறு - சுடுமண் உறையிட்ட கிணறு.
உறைச்சாலை - மருத்தில் : மருத்தகம்.
உறைதல் - தோய்தல் : தங்குதல் : வசித்தல் : இறுகுதல் : ஒழுகுதல் : செறிதல் : உறுதியாதல்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum