ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - உ

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

தமிழ் அகராதி - உ - Page 5 Empty தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:30 am

First topic message reminder :

உ - தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாம் உயிர் எழுத்து; இரண்டு என்ற எண்ணின் குறியீடு; ஒரு சுட்டெழுத்து (எ.கா - உது, உம் மனிதன்); ஒரு பெயர்ச்சொல் விகுதி (எ.கா - தரவு, இழவு); ஒரு வினையெச்ச விகுதி (எ.கா - செய்து)
உக்கா - புகைகுடிக்க உதவும் கருவி
உக்கிரம் - கோபம்; மிகுந்த ஊக்கம்; கொடுமை
உக்கிராணம் - சாமான் அறை
உகம் - யுகம்; ஊழிக்காலம்; பூமி; நுகம்; பாம்பு; தலைப்பாட்டு; ஒரு ஜோடி

உகிர் - நகம்
உகு - கீழே உதிர்; சிதறி விழு; சிதறி விழச் செய்; தேய்வுறு; அஸ்தமனம் அடை; பறத்தல் செய்; சொரியச் செய் [உகுதல், உகுத்தல்]
உகை - செலுத்து; எழுப்பு; உயர்ந்தெழு; குதித்தெழு; செலுத்தப் பட்டுச் சொல் [உகைத்தல், உகைதல்]
உங்கு - உவ்விடம்
உச்சம் - தலைக்கு நேரான வானமுகடு; சிறப்பு; உயரம்; ஒரு கிரகத்தின் மிகவுயர்ந்த நிலை; மிக உயர்ந்த எல்லை அளவு

உச்சரி - எழுத்துக்களை ஓசையுடன் பிறப்பி; மந்திரங்களைச் செபித்தல் செய்; [உச்சரித்தல், உச்சரிப்பு, உச்சாரணம்]
உச்சசாடனம் - பேயோட்டுதல்; பிசாசை ஏவுதல்
உச்சி - வான முகடு; உச்சந்தலை; தலை; சிகரம்; நடுப்பகல்; மேல் எல்லை; உண்ட உண்கலத்தில் மீதியுள்ளது
உச்சிட்டம் - ஒருவர் எச்சில்; எஞ்சியுள்ள பொருள்; சேடம்
உச்சிமோத்தல் - (குழந்தையின்) தலையில் உச்சியை மோந்து அன்பு காட்டுதல்

உசாத்துணை - நம்பகமான நண்பன்
உசாவு - ஆலோசனை செய்; விசாரணை செய் [உசாவுதல், உசாதல்]
உசிதம் - தகுதி; மேன்மை
உசுப்பு - வெருட்டு; எழுப்பு [உசுப்புதல்]
உஞற்று - முயற்சி செய்; செய்; தூண்டு [உஞற்றுதல்]

உட்கார் - அமர்ந்திரு [உட்கார்தல்]; பகைவர்
உட்கிடை - உள்கருத்து; பேரூரின் பகுதியான சிறு கிராமம்
உட்கு - அச்சம்; நாணம்; வலிமை; மிடுக்கு; மதிப்பு
உட்கொள் - உண்ணுதல் செய்; உள்ளிழு; உள்ளே கருது [உட்கொள்ளல்]
உடந்தை - சேர்க்கை; துணை; ஆதரவு

உடம்படு - ஒத்ததாகச் செய்; இசைதல் செய் [உடம்படுதல்]
உடம்பாடு - சம்மதம்; ஒற்றுமை
உடம்பிடி - வேல்
உடம்பு - சரீரம்; மெய்யெழுத்து
உடல் - சினங்கொள்; சச்சரவிடு; ஆசையால் வருந்து [உடலுதல், உடலல்]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழ் அகராதி - உ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:41 am

உரிஞதல் - உரிஞ்சுதல்.
உரிஞ்சுதல் - தேய்த்தல் : வற்றச் செய்தல் : உராய்தல் : பூசுதல்.
உரிதல் - சுழலுதல் : கலைதல் : முளைத்தல் : சீலையைக் களைதல்.
உரித்தல் - கழற்றுதல்.
உரித்தாளி - உரித்தானவன் : சொத்துக்குரியவன்.



உரித்திரம் - மரமஞ்சள் : மஞ்சள்.
உரித்து வைத்தல் - வெளிப்படுத்தி வைத்தல் : நேரொப்பாதல்.
உரிப்பொருட்டலைவன் - கிளவித் தலைவன்.
உரிமைக்கட்டு - இனக்கட்டுப்பாடு.
உரிமைசெப்புதல் - மணம் பேசுதல்.



உரிமைப்பள்ளி - அந்தப்புரம்.
உரிமைப்பாடு - உரித்து : உரிய கடமை.
உரிமைப்பிள்ளை - சுவீகார புத்திரன்.
உரிமையிடம் - வீட்டில் மகளிர் உறையுமிடம்.
உரியர் - உரியவர்.



உரியவன் - கணவன் : தக்கவன் : தாயத்தான்.
உரியள் - உரிமையானவள்.
உரியார் - அறிவுடையார் : தாயத்தார் : உரிய மாட்டார் : தோல் விற்பவர்.
உரியியற் சொல் - இயற்சொல்லாய் வரும் உரிச்சொல்.
உரியோன் - உரியன்.



உரிஇ - உருவி.
உருகம் - பிறப்பு : தோற்றம்.
உருகுதல் - மனங்கரைதல் : இளகுதல் : ஒழுகுதல் : மெலிதல் : உருகல்.
உருகை - புல்லூரி : அறுகம்புல்.
உருக்காங்கல் - உருகிப் போன செங்கல்.



உருக்குதல் - இளகி விழச் செய்தல் : மன நெகிழ்த்துதல் : மெலியச் செய்தல் :
அழித்தல் : வருத்துதல்.
உருக்குத் தட்டார் - பொற்கொல்லர்.
உருக்குத்துதல் - அம்மை குத்துதல்.
உருக்குமம் - பொன்.
உருக்குருக்கு - கற்பூரம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:41 am

உருக்குலைதல் - முன்னுருவம் மாறுதல்.
உருங்குதல் - உண்ணுதல் : மெலிதல்.
உருசி - சுவை : இன்சுவை.
உருசிகாட்டல் - இனிப்புக் காட்டல்.
உருசு - அத்தாட்சி.



உருடி - முனி.
உருடை - வண்டி.
உருட்டல், உருட்டுதல் - உருளச் செய்தல் : வருத்துதல் : வெல்லுதல் : மருட்டுதல் : இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று : உருண்டை செய்தல் : கவறெறிதல் : தருக்கம் பேசிப் பிதற்றல் : புரட்டித் தள்ளல் : மத்தளத்தை விரைவாக அடித்தல்.
உருட்டிப்பார்த்தல் - சினத்துடன் பார்த்தல்.
உருட்டிப் போடுதல் - பேச்சால் மருட்டி வெல்லுதல் : அழித்து விடுதல்.



உருட்டுப்புரட்டு - வஞ்சகச் செயல்.
உருண்டுபோதல் - சாதல்.
உருத்தரித்தல் - வடிவங்கொள்ளல்.
உருத்தல் - கடுஞ்சினங் கொள்ளுதல் : வெப்பமுறச் செய்தல் : அழலுதல் : முதிர்தல் : ஒத்தல் : தோன்றுதல் : நினைத்தல் : அரத்தல்.
உருத்திதம் - அழுகை : உரிய பொருள் : தொழிலின் இலாபம் : வளர்ச்சி : முன்னேற்றம்.



உருத்திரகணம் - சிவகணம் : சிவனடியார்.
உருத்திரகணிகை - தேவடியாள் : சிவன் கோயில் தாசி.
உருத்திரகன்னியர் - உருத்திர கணத்தைச் சேர்ந்த மகளிர்.
உருத்திரசடை - திருநீற்றுப் பச்சை.
உருத்திரசாதனம் - உருத்திராக்கம்.





உருத்திரபஞ்சமம் - ஒரு பண்.
உருத்திரம் - பெருஞ்சினம் : அச்சுறுத்தல் : ஒருமறை : சுவையலங்கார வகைகளுள் ஒன்று : மஞ்சள்.
உருத்திரரோகம் - மாரடைப்பு.
உருத்திராகாரம் - பெருஞ்சினத்தோற்றம்.
உருத்திராணி - சத்தமாதரில் ஒருத்தி : உருத்திரை : சங்கரி : பரமேசுவரி.



உருத்திரி - ஒரு வீணை : பரமேசுவரி : பார்வதி : வடிவம் வேறுபாடு என்னும் ஏவல்.
உருத்திரிதல் - மாறுகோலங் கொள்ளல்.
உருபகதீவகம் - ஓர் அணி.
உருபு - உருவம் : வேற்றுமையுருபு முதலிய இடைச்சொல் : நிறம் : வடிவம்.
உருபுகம் - ஆமணக்கு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:42 am

உருபுத்தொகை - வேற்றுமையுருபுகள் தொக்கு நிற்றல்.
உருபு புணர்ச்சி - வேற்றுமையுருபுகள் புணர்ந்து நிற்பது.
உருபு மயக்கம் - ஒரு வேற்றுமையுருபு தன் பொருள் கொடாது வேறு உருபின் பொருளைத் தந்து நிற்றல்.
உருப்படல் - உருவமாதல் : சீர்படல்.
உருப்படியாதல் - உருவாதல்.



உருப்படுதல் - சீர்ப்படுதல் : உருவாதல் : உருவேறல் : சந்நதங் கொள்ளல்.
உருப்படுத்தல் - உருவாக்கல்.
உருப்பம் - வெப்பம் : சினம்.
உருப்பிடித்தல் - படம் பிடித்தல்.
உருப்பு - நிறைவு : மிகுதி : வெப்பம் : சினம் : கொடுமை.



உருமகாலம் - கோடைக்காலம்.
உருமணி - கருவிழி.
உருமம் - நடுப்பகல் : வெப்பம்.
உருமவிடுதி - நண்பகலில் நிறுத்துதல்.
உருமாறுதல் - கோலம்மாறுதல் : உடல்வேறுபடுதல் : வேற்றுருக் கொள்ளல்.



உருமித்தல் - வெப்பங்கொள்ளல்.
உருமிளை - நமன்மனைவி.
உருமுக்குரல் - இடியோசை.
உருமுதல் - கர்ச்சித்தல் : முறுமுறுத்தல்.
உருமுத்துவசன் - இந்திரன்.



உருமேனி - மெய், வாய், கண், மூக்குச் செவி என்னும் இவற்றையுடைய வடிவம்.
உருமை - சிக்கிரீவனுடைய மனைவி : உப்பு விளையும் பூமி.
உரும் - அச்சம் : இடி.
உரும்பரம் - பாம்பு : செப்பு : பெருங்காயம்.
உரும்பு - கொடுமை : கொதிப்பு.



உருவங்காட்டி - கண்ணாடி.
உருவசாத்திரம் - உறுப்பமைதி நூல் : அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று.
உருவரை - செழிப்புள்ள நிலம்.
உருவாணி - அச்சாணி : தேய்ந்து போனது : மெலிந்தவுடல்.
உருவாதல் - வடிவுறுதல் : சீர்ப்படுதல்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:42 am

உருவாரச்சம்மட்டி - வீழி.
உருவாரு - வெள்ளரிக் கொடி.
உருவாளர் - உருவம் உடையவர்.
உருவி - செம்முள்ளி : நாயுருவி : புல்லுருவி : முள்ளி : ரூபி : உருவுடையவள் :
உருவுடையது : அழகி : உறைகழித்து : தடவி : அவிழ்த்து : ஏங்கி.
உருவியழுதல் - விம்மியழுதல்.



உருவிலாளன், உருவிலாளி, உருவிலி - காமன்.
உருவிழுத்தல் - வடிவமிழத்தல்.
உருவினகோலம் - கதியற்ற நிலைமை.
உருவுதடம் - சுருக்குக் கயிறு.
உருவுதல் - உறைகழித்தல் : தடவி : விடுதல் : ஊடுருவுதல்.



உருவெளி,உருவெளிக்கட்சி, உருவெளித் தோற்றம்,உருவெளிப்பாடு - இடைவிடா நினைப்பினால் எதிரில் உள்ளது போல் தோன்றும் போலித் தோற்றம்.
உருவேறல் - தெய்வ ஆவேசம் ஏறல் : மந்திர எண்ணிக்கை மிகுதிப்படல்.
உருவை - சூரைச் செடி : முள்ளிப் பூண்டு.
உருவொளி - கண்ணாடி முதலியவற்றில் காணப்பெறும் நிழல்.
உருளரிசி - கொத்துமல்லி.



உருளல் - உருளுதல்.
உருளாயம் - சூதாட்டம் : சூதாட்ட ஆதாயம் : உருள்கவறு : உருளுங்கவற்றின் கட்டப்பட்ட வரவு.
உருளிப்பெயர்வு - எலும்புப் புரட்சி.
உருளிபேர்தல் - பொருத்து விலகுதல்.
உருளுதல் - அழிதல் : உருண்டையாகத் திரளுதல் : கீழ்மேலாக வருதல்.



உருளைக்காந்தம் - ஒருவகைக் கல்.
உருள் - தேருருள் : வண்டி : உரோகிணி : உருளென்னேவல்.
உரூடி - இடுகுறி : பகாப்பதம்.
உரூடியார்த்தம் - இயற்சொல்.
உரூபகாரம் - அத்தாட்சி : மேற்கோள்.



உரூபகாலங்காரம் - உருவக அணி.
உரூபம் - உருவம் : அடையாளம் : இனம் : சுபாவம்.
உரூபித்தல் - மெய்ப்பித்தல்.
உரூப்பியம் - அழகானது.
உரேந்திரன் - வீரன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:42 am

உரைகலங்குதல் - பேச்சுத் தடுமாறுதல்.
உரைகல் - பொன்னுரைக்குங் கல்.
உரைகட்டுதல் - நூலுக்கு உரை செய்தல்.
உரைகாரர் உரையாசிரியர் - வண்ணார்.
உரைகாரன் - உரையாசிரியன்.



உரைகோளாளன் - உரையை விரைவில் ஏற்கும் அறிவுடையோன்.
உரைக்கிழத்தி - கலைமகள்.
உரைக்கேன் - சொல்லுவேன் : சொல்லமாட்டேன்.
உரைக்கோள் - உரைகாரன் கருத்து.
உரைசல், உரைசுதல் - உரிஞ்சுதல் : தேய்தல் : தேய்த்தல்.



உரைச்செய்யுள் - கட்டுரை.
உரைஞ்சல் - உரிஞ்சுதல்.
உரைத்தல் - சொல்லுதல் : ஒலித்தல் : தடவல் : தேய்த்தல் : பூசுதல் :
மெருகிடுதல் : மாற்றறிய உரைத்தல்.
உரைத்தாம் என்றல் - நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று :
அஃதாவது முன்னே கூறியுள்ள ஒரு செய்தியைப் பின்னர்க் கூறாது விடுதல்.
உரைத்தீவார் - கூறுவார்.



உரைத்தைக்காண் - சொல்லிக் காண்.
உரைத்தழுத்தல் - பேச்சுத் தடுமாறல்.
உரைபெறு கட்டுரை - காவியங்களில் உரைநடையில் அமைந்த தொடர்.
உரைப்படல் - உரைக்கப்படல்.
உரைப்பாட்டு - கட்டுரை நடை.



உரைப்பு - தேய்ப்பு : உரைத்தல் : தேய்த்தல்.
உரைமானம் - தேய்ப்பு.
உரைமுடிவு - மறைத்தீர்ப்பு.
உரையசை - பெரும்பான்மை : ஆற்றலிழந்த இடைச்சொல்.
உரையல் - உரைத்தல் : சொல்லுகை.



உரையளவை - ஆகமப்பிரமாணம்.
உரையாடல் - பேசுதல்.
உரையிடல் - நூலுக்குரை செய்தல்.
உரையிற்கோடல் - மூலத்திற் சொல்லாதவற்றை உரையிற் சொல்லுதல்.
உரைவன்மை - பேச்சுவல்லமை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:42 am

உரோகதி - நாய்.
உரோகம் - நோய் : இறங்குதல் : உயர்தல் : எழும்புதல் : ஏறுதல் : பூவரும்பு : தளிர் : ஒளியின்மை.
உரோகி - நோயாளி.
உரோகிதம் - இந்திரதனு : சிவப்பு.
உரோசம் - சினம் : பெருமை : மானம் : முலை : வெட்கம்.



உரோசமானம் - முள்ளிலவு.
உரோசனை - கடுகு : கோரோசனை : செந்தாமரை.
உரோஞ்சல் - உரிஞ்சுதல்.
உரோடம் - சினம்.
உரோணி - உரோகிணி : ஒரு நோய்.



உரோதனம் - அழுகை கண்ணீர்.
உரோபணம் - இறங்குதல்.
உரோபம் - அம்பு : பாணம் : பகழி : கணை.
உரோமகூபம் - மயிர்ச்சிலிர்ப்பு : உரோமபுளகம்.
உரோமக்கிழங்கு - வசம்பு.



உரோமபூமி - தோல்.
உரோமரேகை - மயிரொழுக்கு.
உரோமலம்பம் - வண்டு.
உலகங்காத்தான் - அவுரிச் செடி : அரி : திருமால்.
உலகசயன் - புத்தன்.



உலகசீலம் - உலக நோன்பு.
உலகஞானம் - உலகத்தைப் பற்றிய அறிவு : கருவி நூலறிவு.
உலகத்தார் - உலகிலுள்ளார் : உயர்ந்தோர் : உலகப் பற்றுடையார் : மாந்தர் : மனிதர் : மக்கள்.
உலகபாரணன் - திருமால்.
உலகப்புரட்டன் - மிகுபுரளிக்காரன்.



உலகமலைவு - நூற்குற்றங்களுள் ஒன்று.
உலகமுண்டோன் - திருமால்.
உலக வழக்கம் - உலக நீதி உலகாசாரம் : உலகமுறை.
உலகவறவி - எல்லாச் சாதியாரும் வந்து தங்குதற்குரிய தருமசாலை.
உலகவிடைகழி - ஊர்வாயில்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:43 am

உலகவிருத்தம் - உலகவழக்கோடு மாறுபடுதல்.
உலகளந்தோன் - திருமால்.
உலகாசாரம் - உலக வழக்கம்.
உலகாயதம் - உலக இன்பமே மேலான தென்னும் நரீச்சுரவாதம்.
உலகாயிதம் - உலகாயதம்.



உலகிகம் - இலௌகீகம்.
உலகியற்கை - உலகியல்.
உலகுரை - உலகவாதம்.
உலகோர் - பெரியோர்.
உலக்கைக்கழுந்து - உலக்கைப் பிடி.



உலக்கைக்கொழுந்து - அறிவு குறைந்தவன்.
உலக்கைப்பாட்டு - வள்ளைப் பாட்டு.
உலக்கைத்திங்கள் - ஆவணி மாதம்.
உலக்கைப்பாலை - பாலை மரவகை.
உலக்கையாணி - பூட்டின் நடுவாணி.



உலங்கலம் - கற்பாத்திரம்.
உலங்கு - கொசுகு : திரண்ட கல் : உலம் : கீடம்.
உலண்டம், உலண்டு - கோற்புழு : பட்டு.
உலத்தல் - குறைதல் : நீங்குதல் : அழிதல் : வற்றுதல் : கெடுதல் : சாதல் : முடிதல்.
உலந்தவர் - அழிந்தவர்.




உலப்பேறி - திருத்தப்பட்ட நிலம்.
உலமரல் - அலமரல் : சுழற்சி : துன்பம் : வருத்தம் : அச்சம்.
உலம்புதல் - அலப்புதல் : முழங்கல் : இரைதல் : அஞ்சுதல்.
உலம்வரல் - சுழலல்.
உலரல் - காய்தல்.



உலர்தல் - அழிதல்.
உலர்ந்தபுல் - திரணம்.
உலர்ப்பெலி - ஓர் எலி.
உலவமரம் - இலவமரம்.
உலவாக்கிழி - எடுக்க எடுக்கக் குறைவுபடாத பொன் முடிப்பு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:43 am

உலவாநிற்றல் - பரத்தல்.
உலவுதல் - உலாவல்.
உலவை - தழை : கிளை : மரக் கொம்பு : உடைமரம் : கிலுகிலுப்பை : விலங்கின் கொம்பு : காற்று :
குடி : முல்லை நிலக் கான்யாறு.
உலவையான் - காற்றுக் கடவுள்.
உலறல் - கடுஞ்சினம் : வற்றல்.



உலறுதல் - உலருதல் : வற்றுதல் : சிதைதல் : பொலிவழிதல் : சினத்தல் : காய்தல் : சிலம்புதல் : உரைதடுமாறல்.
உலாத்துக்கட்டை - கதவு நின்றாடும் சுழியாணி.
உலாத்துதல் - உலாவுதல் : உலாவச் செய்தல் : பரவச் செய்தல்.
உலாமடல் - நூல் வகை.
உலாம் - ஓர் உவமச் சொல்.



உலாய் - இயங்கி : சூழ்ந்து.
உலாவரல் - உலாவுதல்.
உலாவுதல் - சஞ்சரித்தல் : பவனி வருதல் : இயங்குதல் : ஓடிப்பரவுதல் : சூழ்தல் : நிறைதல்.
உலு - தினை முதலியவற்றின் பதர்.
உலுக்கல் - உலுக்குதல்.



உலுக்குதல் - குலுக்குதல் : நடுங்குதல்.
உலுக்குமரம் - மிண்டிமரம் : நெம்பு கட்டை.
உலுண்டணம் - உருட்டுதல் : களவு செய்தல் : கொள்ளையிடுதல் : மருட்டல் : கூட்டுண்ணல்.
உலுத்தல் - உதிர்த்தல்.
உலுப்புதல் - உதிர்த்தல்.



உலுப்பை - அடைந்தோர்க்களிக்கும் ஊன் பண்டம் : காய் வருக்கம் : கோயில் முதலியவற்றிற்கு அனுப்புங் காணிக்கை : சாமான்பை : சிறு காய் : பெரியவர்களுக்கு அனுப்பும் ஊன் பண்டம்.
உலும்பினிவனம் - கௌதம புத்தர் பிறந்தவிடம்.
உலுவம் - வெந்தயம்.
உலுவா - பெருஞ்சீரகம்.
உலூகம் - கோட்டான் : ஒருவகைப் பரி : குங்கிலியம் : கூகை.



உலூகலம் - உரல்.
உலூகன் - இந்திரன் : சகுனி மகன்.
உலூகாரி - காக்கை.
உலூதம் - சிலந்திப் பூச்சி : உலுதைப் பூச்சி.
உலூபி - அருச்சுனனை மணந்த நாக கன்னிகை : ஒருவகை மீன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:43 am

உலைதல் - நிலைகுலைதல் : வருந்துதல் : அஞ்சுதல் : அழிதல் : அலைதல் : கலைந்து போதல் : கெடுதல் : சீரழிதல் : பலங்குறைதல் : மனங்கலங்கல் : வருந்தித் திரிதல்.
உலைத்தல் - கெடுத்தல் : கலைத்தல் : வருத்துதல் : முறியடித்தல் : அழித்தல் : மனங்கலங்கச் செய்தல் : அலைத்தல்.
உலைப்பு - அலைப்பு : அழித்தல் : வருந்துதல் : முறியடிக்கை.
உலைமுகம் - கொல்லன் உலை இடம்.
உலைமூக்கு - கொல்லன் உலையில் துருத்தி வைக்கும் துவாரம்.



உலோகதருமிணி - போககாமிகட்குச் செய்யப் படுவதான தீட்சை.
உலோகபாலர் - அரசர் : திக்குக்காவலர் : இந்திரன் : அக்கினி : இயமன் : நிருதி : வருணன் : வாயு : குபேரன் : ஈசானன்.
உலோகாதீதம் - உலகத்திற்கு எட்டாதது : மேற்பட்டது : எல்லாங் கடந்தது : கடவுள் மயம்.
உலோகராட்டு - கடவுள்.
உலோகிதம் - இரத்தம் : சிவப்பு : செவ்வாய் : மஞ்சள் : யுத்தம் : சந்தனம் : சூதாட்டம்.




உலோகிதன் - செவ்வாய்.
உலோசனம் - கண்.
உலோகிதம் - சந்தனமரம்.
உலோச்சுதல் - தன் தலைமயிரைத் தானே பறிக்கை.
உலோட்டம் - ஓடு : மண்கட்டி.



உலோத்திரம் - வெள்ளிலோத்திரமரம்.
உலோபத்துவம் - உலோபத்தன்மை.
உலோபம் - பேரவா : கடும்பற்றுள்ளம் : தானும் நுகராது பிறர்க்கும் ஈயாக்குணம் : அகப்பட்ட பொருளைக் கைவிடாமை :
அற்பம் : அவா : குறைவு.
உலோபர் - பேரவா உடையவர்.
உலோமம் - ஒழுங்கு : வால் : வால் நுனி : புறமயிர்.



உலோலம் - அசைவு : விருப்பம் : ஆசை : அவா.
உலோலன் - மிகுகாமி.
உல் - கழு : தேங்காயுரிக்குங் கருவி.
உல்பகம் - மறைப்பது.
உல்லங்கனம் - மீறுகை : அவமதிப்பு : கடக்கை : கலக்கம் : நிந்தை.



உல்லரி - தளிர்.
உல்லாடி - மெல்லிய ஆள்.
உல்லாப்பியம் - கயமை : வஞ்சகத் தன்மை : யானை.
உல்லி - ஒல்லி : மெல்லிய ஆள்.
உல்லிங்கனம் - அவமதிப்பு : கடக்கை : கலக்கம் : சண்டைமிகுதி : நிந்தை : அலட்சியம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:43 am

உல்லியம் - கிணறு.
உல்லியர் - கூபநூலோர்.
உல்லு - உல்.
உல்லுகம் - கொள்ளி.
உல்லோசம் - மேற்கட்டி : கூடாரம்.



உல்லோலம் - கடற்பெருந்திரை.
உவகுருவாணன் - இல்லறத்தையடையும் நிலையிலிருக்கும் பிரமசாரி.
உவகைப்பறை - மங்கலப் பறை.
உவக்காண் - உப்பொழுது : உங்கே : உவ்விடம்.
உவச்சர் - ஓச்சர்.



உவட்சி - தவளுகை : அசைப்பு.
உவட்டி - அருவருப்பு.
உவட்டுதல் - அருவருத்தல் : தெவிட்டுதல் : மிகுதல் : நீர்ப்பெருக்கு : குமட்டுகை.
உவட்டுரை - இகழ்ச்சிச் சொல்.
உவட்டுறல் - பெருகுதல் : தெவிட்டல்.



உவணர் - கருடர்.
உவணவூர்தி - திருமால்.
உவணி - வாட்படை.
உவணை - உவ்விடம் : தேவலோகம்.
உவதி - பதினாறாட்டைப்பெண்.



உவிதை - மலையின் வீழருவி.
உவத்தல் - மகிழ்தல் : அவாவல் : விரும்பல்.
உவமன் - ஊமன் : உவமை.
உவமானிலம் - சுவர்.
உவமேயம் - உபமேயம்.



உவமையுருபு - உவமை : அற்று : அனைய : அன்ன : இகல : இன்ன : என்ன : ஏய்ப்ப : ஒப்ப : கடுப்ப : கேள் :
செத்து : தூக்கு : நிகர : நேரபுரை : பொருவ : போல : மான் : ஒன்ற : ஒடுங்க : ஓட : ஆங்க : வென்ற : வியப்ப : எள்ள :
விழைய : நிகர்ப்ப : கள்ள : காய்ப்ப : மதிப்ப : திகைய : மருள : மாற்ற : மறுப்ப : வெல்ல : வீழ : நாட : நடுங்க முதலியன.
உவமையுருவகம் - ஓர் அணி : அஃது உருவகஞ் செய் பொருளைத் திரும்பவும் ஒரு சிறப்பினால் ஒன்றோடு ஒப்புமைப் படுத்துவது.
உவமைவிரி - ஓர் அணி : அஃது உவமைச் சொல் விரிந்து நிற்பது.
உவராகம் - கிரகணம்.
உவரிக்கெண்டை - ஒருவகை மீன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum