ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - உ

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

தமிழ் அகராதி - உ - Page 4 Empty தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:30 am

First topic message reminder :

உ - தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாம் உயிர் எழுத்து; இரண்டு என்ற எண்ணின் குறியீடு; ஒரு சுட்டெழுத்து (எ.கா - உது, உம் மனிதன்); ஒரு பெயர்ச்சொல் விகுதி (எ.கா - தரவு, இழவு); ஒரு வினையெச்ச விகுதி (எ.கா - செய்து)
உக்கா - புகைகுடிக்க உதவும் கருவி
உக்கிரம் - கோபம்; மிகுந்த ஊக்கம்; கொடுமை
உக்கிராணம் - சாமான் அறை
உகம் - யுகம்; ஊழிக்காலம்; பூமி; நுகம்; பாம்பு; தலைப்பாட்டு; ஒரு ஜோடி

உகிர் - நகம்
உகு - கீழே உதிர்; சிதறி விழு; சிதறி விழச் செய்; தேய்வுறு; அஸ்தமனம் அடை; பறத்தல் செய்; சொரியச் செய் [உகுதல், உகுத்தல்]
உகை - செலுத்து; எழுப்பு; உயர்ந்தெழு; குதித்தெழு; செலுத்தப் பட்டுச் சொல் [உகைத்தல், உகைதல்]
உங்கு - உவ்விடம்
உச்சம் - தலைக்கு நேரான வானமுகடு; சிறப்பு; உயரம்; ஒரு கிரகத்தின் மிகவுயர்ந்த நிலை; மிக உயர்ந்த எல்லை அளவு

உச்சரி - எழுத்துக்களை ஓசையுடன் பிறப்பி; மந்திரங்களைச் செபித்தல் செய்; [உச்சரித்தல், உச்சரிப்பு, உச்சாரணம்]
உச்சசாடனம் - பேயோட்டுதல்; பிசாசை ஏவுதல்
உச்சி - வான முகடு; உச்சந்தலை; தலை; சிகரம்; நடுப்பகல்; மேல் எல்லை; உண்ட உண்கலத்தில் மீதியுள்ளது
உச்சிட்டம் - ஒருவர் எச்சில்; எஞ்சியுள்ள பொருள்; சேடம்
உச்சிமோத்தல் - (குழந்தையின்) தலையில் உச்சியை மோந்து அன்பு காட்டுதல்

உசாத்துணை - நம்பகமான நண்பன்
உசாவு - ஆலோசனை செய்; விசாரணை செய் [உசாவுதல், உசாதல்]
உசிதம் - தகுதி; மேன்மை
உசுப்பு - வெருட்டு; எழுப்பு [உசுப்புதல்]
உஞற்று - முயற்சி செய்; செய்; தூண்டு [உஞற்றுதல்]

உட்கார் - அமர்ந்திரு [உட்கார்தல்]; பகைவர்
உட்கிடை - உள்கருத்து; பேரூரின் பகுதியான சிறு கிராமம்
உட்கு - அச்சம்; நாணம்; வலிமை; மிடுக்கு; மதிப்பு
உட்கொள் - உண்ணுதல் செய்; உள்ளிழு; உள்ளே கருது [உட்கொள்ளல்]
உடந்தை - சேர்க்கை; துணை; ஆதரவு

உடம்படு - ஒத்ததாகச் செய்; இசைதல் செய் [உடம்படுதல்]
உடம்பாடு - சம்மதம்; ஒற்றுமை
உடம்பிடி - வேல்
உடம்பு - சரீரம்; மெய்யெழுத்து
உடல் - சினங்கொள்; சச்சரவிடு; ஆசையால் வருந்து [உடலுதல், உடலல்]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழ் அகராதி - உ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:39 am

உபக்கிரகணம் - பிடித்தல் : மறைபயிலல்.
உபக்கிரகம் - பெருங்கிரகத்தைச் சுற்றியோடுஞ் சிறு கிரகம்.
உபக்கிரமணம் - தொடக்கம்.
உபக்கிரமணிகை - முகவுரை.
உபக்கிரமம் - காரியமுயற்சி செய்தல் : தொடக்கம்.



உபக்குரோசம் - நிந்தனை : இகழ்ச்சி : பழிப்பு.
உபசங்காரம் - அழித்தல் : அழிபு : ஒடுக்கம் : சுருக்கம் : திரட்டி முடிவுரை கூறல்.
உபசதனம் - அயல்வீடு : மாணவனாதல்.
உபசந்தானம் - தொடுக்கை : இணைத்தல்.
உபசமம் - சமாதானம்.



உபசம்பந்தந பதம் - துறவுநிலை நான்கனுள் ஒன்று.
உபசம்மாரம் - உபசங்காரம்.
உபசயம் - மிகுதி.
உபசரணை - உபசாரம் : வழிபாடு.
உபசரிதம் - உபசரணை.



உபசரித்தல் - வழிபாடு செய்தல்.
உபசரிப்பு - உபசரித்தல்.
உபசர்க்கம் - வடமொழி அடையுருபு பெயர் வினைகளுக்கு முன்வரும் அவ்வியயம் :
இடையூறு, உற்பாதம், சரக்குறி, சிவப்பு, சொன்மூலம், தளிர், மாரி முதலான நோய் : மாறுதல்.
உபசாகை - உட்பிரிவு : கிளையிலுள்ள கிளை.
உபசாந்தம் - மனவமைதி : தணிகை.



உபசாந்தி - உபசாந்தம்.
உபசாரகன் - உபசரணைக்காரன் : மரியாதை செய்வோன்.
உபசாரக்கை - இரண்டு கைகளையுங் குவித்து மார்போடணைத்து உபசாரம் மிகக் காட்டும் இணைக்கை வகை.
உபசாரம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றின் மேல் ஏற்றிக் கூறுவது :
முகமன் : மரியாதை : உபசார வழக்கு : ஊழியம் : வழிபாடு : வாழ்த்து.
உபசுந்தன் - ஓர் அசுரன்.



உபசேனம் - ஊழியம்.
உபஞ்ஞை - வாலஞானம் : இளமை ஞானம்.
உபதானம் - அடிப்படை : கடமை : தலையணை.
உபதிருட்டர் - உடனிருந்து பார்ப்பவர் : புரோகிதன்.
உபதாடிகன் - இழிக்கப்பட்டவன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:39 am

உபதாதை - தானங் கிடைக்கச் செய்பவன்.
உபதேசகலை - ஆகமப் பிரமாண வகை மூன்றனுள் ஒன்று.
உபதேசம் - மதபோதனை : மந்திர போதனை : கடவுளின் தன்மையைக் கூறுதல் :
நல்லறிவு கூறுதல் : போதித்தல் : மறையுணர்த்தல்.
உபதேசியார் - உபபோதகர்.
உபதேந்திரியம் - ஆண் பெண் குறிகள்.



உபதை - அமைச்சன் முதலியோரை ஏற்படுத்துவதற்கு முன் அரசன் செய்யும் ஆராய்ச்சி : காணிக்கை.
உபத்தம் - உபதேந்திரியம்.
உபத்தை - உலுப்பை.
உபநதி - பேராற்றில் வந்து விழும் சிற்றாறு.
உபநாயகன் - சோரநாயகன் : உபபதி.



உபநாயம் - துவைத்துக் கட்டு : மருந்து.
உபநிதி - கணக்கிடாமல் ஒழிக்கப்பட்ட பொருள்.
உபநியாசம் - சொற்பொழிவு.
உபபட்டணம் - பேட்டை.
உபபதம் - அற்பம் : பட்டப் பெயர்.



உபபத்தி - ஏது : ஒழிபு : ஓய்வு : தொடர்பு : காரியப்படுத்தல் : நேரிட்டது : செய்கை : சேவகம் : தகுதி : தியானம்.
உபபலம் - உதவி : துணைவலி.
உபபுரம் - புறநகரம்.
உபப்பிரும்மணம் - வேதப்பொருளை விளக்கும் இதிகாசப் புராணாதிகள்.
உபமலம் - மனமாசு.



உபமாநம் - யாதேனும் ஒரு பொருளுக்கு ஒப்புமை கூறுதல் : உவமை.
உபமிதம் - ஒப்பிடப்பட்டது.
உபமிதி - உபமாநப்பிரமாணத்தினால் வரும் அறிவு.
உபயத்தம் - சிலேடை.
உபயமம் - திருமணம்.



உபயவாதிகள் - வாதஞ் செய்யும் இருதிறத்தார்.
உபயர் - இருவர்.
உபயவிபூதி - லீலா விபூதி : நித்திய விபூதி.
உபயார்த்தம் - இருபொருள்.
உபயோகம் - விரும்பியதை முடித்தற்கு உதவியாக விருப்பது : உதவி : பயன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:39 am

உபரதம் - வெடியுப்பு.
உபரதி - ஒழிவு : வெறுத்துத் தள்ளுதல் : குடும்பப்பற்றின்மை.
உபரதித்தல் - வெறுத்துத் தள்ளுதல்.
உபராகம் - கிரகணம்.
உபராமம் - துறவு.



உபரோதகம் - உள்ளறை : உள் வீடு.
உபரோதம் - கட்டுதல் : சூழ்தல் : தடை : தற்காப்பு.
உபலங்கம் - அநுபவித்தல் : துய்த்தல்.
உபலத்தி - அறிவு : தேடுதல்.
உபலம் - கல் : பளிங்கு.



உபலம்பம் - தோற்றுகை.
உபவனம் - ஊர்சூழ் சோலை : பூங்கா : காஞ்சொறி : நந்தவனம்.
உபவாசம் - உணவொழிதல் : உண்ணாநோன்பு.
உபவாடிகை - அமைச்சன் வீட்டுத் தோட்டம் : விலைமகள் வீட்டுத் தோட்டம்.
உபவீதம் - பூணூல்.



உபவேட்டிதம் - கைவட்டணை நான்கனுள் ஒன்று.
உபாகர்மம் - புதுப்பூணூல் அணியுஞ் சடங்கு.
உபாகிதம் - உற்கை.
உபாகிதை - விண்வீழ் கொள்ளி : கடைக் கொள்ளி.
உபாக்கியாநம் - கிளைக்கதை : இதிகாசம் : இலக்கிய போதனை.



உபாங்கதாளம் - தாளவகை.
உபாங்கம் - ஒருவகைத் தோற்கருவி : வேதாகமங்களுக்கு அங்கமாயுள்ள நூல்.
உபாங்கராகம் - பண்வகை.
உபாசங்கம் - அம்பறாத்தூணி : அம்புப்புட்டில்.
உபாசனை - வழிபாடு.



உபாசிதம் - வணக்கம் : ஆசரணை : வழிபாடு.
உபாதானகாரணம் - முதற் காரணம் : துணைக்காரணம்.
உபாதாயம் - பற்றப்படுவது.
உபாதி - வேதனை : கடமை : நோய் : காரியம் : தடை : தியானம் : உடம்பு : தேகசம்பந்தங்களிலே ஐயம் வந்தால் அவற்றுள் மனஞ் செல்லாமல் நிறுத்தல் : பாதை : மாரீசம் : வருத்தம் : சாத்தியத்திலே வியாபித்துச் சாதனத்திலே வியாபக மில்லாதது : இடையூறு : துயர்.
உபாதேயம் - ஏற்றுக் கொள்ளத் தக்கது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:39 am

உபாத்தி - ஆசிரியன்.
உபாந்தியம் - ஒன்றுவிட்டயல்.
உபாய விலக்கு - ஓர் அணி.
உபாயி - சூழ்ச்சியுள்ளவன்.
உபாலம்பநம் - இகழ்தல்.



உபேட்சை - புறக்கணிப்பு : அசட்டை : அலட்சியம் : உதாசீனம்.
உபேந்திரன் - திருமால்.
உபோதகம் - போய்ப்பசலை.
உபோற்காதம் - பாயிரம் : நூன்முகம் : தொடக்கம்.
உப்பசம், உப்பிசம் - வீக்கம் : சுவாச காசநோய்.




உப்பரம் - வயிற்றுப் பொருமல்.
உப்பரவர் - குளம் முதலியன அகழுவோர்.
உப்பரிகை - உபரிகை : மேல்வீடு.
உப்பர் - உமணர்.
உப்பளவர் - உப்பு விளைப்போர்.



உப்பாணி - உப்புச் சுமப்பவன் : விளையாட்டில் தோல்வியடைந்து வென்றவனைச் சுமப்பவன்.
உப்பாரக்காரன் - சுண்ணாம்பு பூசும் வேலைக்காரன்.
உப்பாலை - உப்பால் : மறுமை : அப்பால் : மேல்.
உப்பாறு - காட்டாறு.
உப்பிலாப் பேச்சு - பயனற்ற பேச்சு.



உப்பிலிப்புழுக்கல் - உப்பில்லாத சோறு.
உப்புக்காகிதம் - மரங்களை மெருகெடுக்கும் ஒரு வகைத்தாள்.
உப்புக்கொள்ளல் - ஒரு விளையாட்டு.
உப்புச் சீடை - ஒரு பலகாரம்.
உப்புக்கோடு - கிளித்தட்டு விளையாட்டு.



உப்புசம் - வயிற்று வீக்கம் : வயிற்றுப் பொருமல் : வயிற்றில் வாயு நிரம்பல்.
உப்புடாலி - ஒரு செடி.
உப்புப்பாத்தி - உப்பு விளைதற்கிடமான பாத்தி.
உப்புதல் - பருத்தல் : பொங்குதல்.
உப்புத்திரி - மலங்கழிக்க ஏற்றுந்திரி.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:40 am

உப்புமாறுதல் - வஞ்சித்தல் : உப்பு விற்றல்.
உப்புவாடி - உப்புக்கொட்டும் மேடை.
உமட்டியர் - உப்புவிற்கும் மகளிர்.
உமட்டு - உவட்டு.
உமணத்தி - உமணப்பெண்.



உமணர் - உப்பமைப்போர் : உப்பு விற்கும் ஆடவர்.
உமண் - உமணர்.
உமண்சாத்து - உப்பு வாணிகர் கூட்டம்.
உமண் பகடு - உப்புவாணிகரது மூட்டை சுமந்து செல்லும் பகடு.
உமரி - நத்தை : பவளப் பூண்டு.



உமரிக்கீரை - கோழிப்பசலை.
உமலகம் - அரிதாரம்.
உமல் - ஓலைப்பை.
உமா - உமை : குன்றி.
உமாதம் - அறிவின்மை.



உமாபதி - சிவபெருமான்.
உமிச்சிரங்கு - சிறு சிரங்கு.
உமிதல் - கொப்புளித்து உமிழ்தல் : துப்புதல்.
உமித்தல் - பதராதல் : காரமறுதல் : கொப்புளங் கொள்ளுதல் : அமிதல்.
உமித்தேக்கு - பெருங்குமிழ்.



உமிரி - உமிரிப் பூண்டு : உமிரிச் செடி : நத்தை.
உமிவு, உமிழ்வு - உமிநீர் : உமிழ்நீர் : துப்புகை.
உமிழ்தல் - காறுதல் : கொப்புளித்தல் : சொரிதல் : தெவிட்டல் : வெளிப்படுதல்.
உமிழ்நீர் - வாய்நீர்.
உமிழ்வு - துப்புகை.



உமேசன் - சிவன்.
உமேதுவார் - சம்பளமின்றி வேலை பழகுவோன்.
உமைசுரநதி - கங்கை.
உமையவள், உமையாள் - சவுக்காரம் : பார்வதி : மயிலிறகு.
உமைத்தல் - தினவு தின்னுதல் : நிரம்புதல்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:40 am

உம் - ஓர் இடைச் சொல் : அசை நிலை.
உம்கொட்டுதல் - உடன்படல் : ஒப்புக் கொள்ளல்.
உம்பரார் - மேல் உலகினோர் : வானோர்.
உம்பரான் - உயர்ந்தோன் : காமதேனு.
உம்பர்கோன் - இந்திரன்.



உம்பளம் - உப்பளம் : மானிய நிலம் : முற்றூட்டு : உபகாரம் : வெகுமானம் : கொடை.
உம்பன் - கடவுள் : உயர்ந்தோன்.
உம்பிடிக்கோல் - நில அளவுகோல் வகை.
உம்பிளிக்கை - அரசனாற் கொடுக்கப்பட்ட நிலம் : மானியம் : இலவசப் பொருள்.
உம்மங்காய் - கொட்டையில்லாப் பனங்காய்.



உம்மச்சு - கம்பியிழுக்கும் சட்டம்.
உம்மிச்சம் - இரத்தினம் பதிக்க அமைத்த நகைக் கட்டிடம்.
உம்வரம் - மேல்வாயிற்படி.
உயக்குநரகு - பாழ்நரகு.
உயங்க - உயங்கென்னேவல்.



உயங்குதல் - வருந்துதல் : வாடுதல் : துவளுதல்.
உயப்போதல் - தப்பித்துச் செல்லுதல்.
உயரி - உயரமானது : உயர்ச்சி : உச்சம் : உயர்த்தி : உயர்வாய்.
உயரிய - உயர்ந்த : உயர்த்திய : உயர்வாய்.
உயர் - உயர்ச்சி : குன்று : மேலேறு : மேன்மையுறு : உயரென்னேவல்.



உயர்குடி - மேலான குலம்.
உயர்சிறப்பு - வீடுபேறு.
உயர்சொல் - மேன்மைப்படுத்துஞ் சொல்.
உயர்ச்சி - உயரம் : மேன்மை : ஏற்றம் : உயர்த்தி : உயர் : உயர்வு : மேல்.
உயர்தல் - மேலெழுதல் : உன்னதமாதல் : வளர்தல் : மேன்மையுறுதல் : நீங்குதல் :
நிமிர்தல் : இறுமாப்பு அடைதல்.



உயர்திணை - உயர்ந்த குணம் : மேற்குலம்.
உயர்த்தி - உயர்ச்சி : மேன்மை : உச்சம் : ஞெள்ளல் : உயரச் செய்தது : உயரம்.
உயர்த்துதல் - அதிகப்படுத்தல் : கிளர்த்தல் : சுமையெடுத்தல் : உயரச் செய்தல் : மேனிலைக்குக் கொண்டு வருதல் : கனப்படுத்துதல் : இசையெடுத்தல் : தூக்குதல் : மேலாகச் செய்தல்.
உயர்நிலம் - தேவலோகம்.
உயர்நிலை - உயர்நிலம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:40 am

உயர்ந்தவன் - சிறந்தவன் : நெடியோன் : காமன்.
உயர்மொழி - உயர்த்துக் கூறுங் கூற்று.
உயர்வு - உயர்ச்சி : மிகுதியாதல் : உயரம் : மேன்மை : வருத்தம் : உயர்வு நவிற்சியணி.
உயலுதல் - அசைதல்.
உயல் - தப்புதல் : உய்தல் : உயிர் வாழ்தல் : செய்யாதொழிதல் : உளதாகை.



உயவர் - வருந்தினவர்.
உயவல் - கலந்தெண்ணுதல் : நினைத்தல் : வருத்தம்.
உயவற்பெண்டிர் - கைம்பெண்கள்.
உயவுதல் - உசாவுதல் : வருந்துதல்.
உயவுத்துணை - உத்துணை.



உயவுநெய் - கீல் எண்ணெய் : வண்டிக்கு இடும் எண்ணெய்,
உயவை - காக்கணஞ் செடி : கான்யாறு : துன்பம் : முகில் : வெண்கரு விளை.
உயாவல் - உசாவல் : உசாவுதல் : விசாரித்தல்.
உயாவுத்துணை - உசாத்துணை.
உயிரடங்குதல் - மூச்சடங்குதல்.



உயிரச்சம் - உயிர்ப் பொருட்டால் வரும் அச்சம்.
உயிரவை - உயிர்த் தொகுதி.
உயிரலங்கி - உயிர்த்தீ.
உயிருண்ணுதல் - உயிர் போக்குதல் : பரவசப்படுத்துதல்.
உயிருதவி - பெருந்துன்பமடைந்த பொழுது செய்யும் உதவி.




உயிரொழிதல் - சாதல்.
உயிர்குடித்தல் - கொல்லல்.
உயிர்க்கட்டை - உடல் : உடம்பு.
உயிர்க்கணம் - உயிரெழுத்துக் கூட்டம்.
உயிர்க்கழு - கழுவில் ஒரு வகை.



உயிர்க்கிழவன் - கணவன்.
உயிர்க்குதல் - பிள்ளை பெறுதல் : உயிர்த்தெழும்புதல்.
உயிர்க்குலைத்தல் - கொல்லுதல்.
உயிர்கொளல் - உயிர் வாங்குதல்.
உயிர்ச்சூது - ஆடு, கோழி முதலியவற்றைப் போர் செய்யுமாறு விட்டுத்
தோல்வி வெற்றி பார்க்குதல்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:40 am

உயிர்தரும் மருந்து - மிருத சஞ்சீவினி.
உயிர்த்தல் - மூச்சு விடுதல் : விடுத்தல் : சொரிதல் : மோத்தல் :
இளைப்பாறல் : போக்குதல் : வீசுதல் : பிறத்தல் : பெருமூச்செறிதல் : உயிர்பெற்றெழுதல் : தொழிற்படுதல் : கூறுதல் : பெருக்குதல் : வெளிப்படுத்துதல்.
உயிர்த்தானம் - உயிர்நிலை : உயிர்ப்பிச்சை.
உயிர்த்துணை - இடுக்கணில் உதவுவோன் : கணவன் : மனைவி.
உயிர்த்துப்பு - உயிர்ப் பொருளாகிய உணவு.



உயிர்த்தொழுதல் - மூர்ச்சித்துப் போன உயிர் வரப் பெற்று எழுதல்.
உயிர்நிலை - உடம்பு : உட்கருத்து.
உயிர்ப்பலி - வீரன் தன் தலையைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி : உயிர்ப்பிச்சை : சீவ பலி.
உயிர்ப்பழி - உயிர்க்கொலை செய்த குற்றம் : கொலை செய்தவனைத் தொடரும் பழி.
உயிர்ப்பனவு - உயிரின் தன்மை.



உயிர்ப்பித்தல் - பிழைப்பித்தல்.
உயிர்ப்பிறப்பு - கரும் பிறப்பு : பசும் பிறப்பு முதலியன.
உயிர்ப்பு வீங்கல் - நெட்டுயிர்ப்பு : பெருமூச்சு விடுதல்.
உயிர்ப்புனல் - குருதி.
உயிர்ப்பொறை - உடம்பு.



உயிர்மருட்டல் - உயிருடையது போல மயங்குதல்.
உயிர் மருந்து - மிருத சஞ்சீவி என்னும் மருந்து : சோறு.
உயிர்விடுதல் - மிகப் பாடுபடுதல் : இறத்தல்.
உயிறு - இலாமிச்சம் புல்.
உயுத்தம் - போர்.



உயோகுதுயில் - யோக நித்திரை : அறிதுயில்.
உய்கை - இடுக்கண்களினின்றும் நீங்கு : உய்தி.
உய்க்கை - உய்த்தல்.
உய்ஞ்சனன் - உய்ந்தனன்.
உய்தக்கோர் - பிழைக்கும் வகையோர்.



உய்தடி - உண்டாகுந்தடி.
உய்தல் - உயிர் வாழ்தல் : ஈடேறுதல் : தப்பிப் பிழைத்தல் : நீங்குதல் :
கழிதல் : இடுக்கண்களினின்றும் நீங்குதல்.
உய்த்தர - செலுத்தலைச் செய்ய.
உய்த்தல் - செலுத்தல் : தாங்கிக் கொண்டு போதல் : அனுபவித்தல் :
கொடுத்தல் : அடைவித்தல் : அனுப்புதல் : நுகர்தல் : அறிவித்தல் : ஆணை செலுத்தல்.
உய்த்தலில் பொருண்மை - ஓர் அணி.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:41 am

உய்த்தன்று - கொடுத்தது.
உய்த்துக் கொண்டுணர்தல் - ஓர் உத்தி.
உய்த்துணர்தல் - ஆராய்ந்தறிதல்.
உய்த்துணரமைப்பு - முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று.
உய்ப்பு - உய்த்தல்.



உய்ம்மணல் - கருமணல்.
உய்ம்மார் - செலுத்துதற்கு.
உய்யக்கொண்டான் - எருமை : முல்லை : கொய்யாமரம்.
உய்யல் - ஏறுதல் : கேட்டல் : வாழ்தல்.
உய்வது - உய்யத்தக்க வழி.




உய்வனவு - ஈடேற்றம் : சீவனம் : தழைவு : வாழ்வு.
உய்விடம் - உயிர் கொண்டுபிழைப்பதோரிடம்.
உய்வித்தல் - உய்யச் செய்தல் : ஈடேற்றுதல் : பிழைப்பித்தல்.
உய்வை - காடு.
உரகடல் - கொந்தளிக்குங் கடல்.



உரகம், உரகதம் - பாம்பு.
உரககேது - துரியோதனன்.
உரகம் - நாகமல்லிகை : பாம்பு : உரங்கம் : உரகதம்.
உரகவல்லி - வெற்றிலைக் கொடி.
உரங்கர், உரங்கமம் - பாம்பு.



உரகாதிபன், உரகேந்திரன் - ஆதி சேடன்.
உரகாரி - கருடன் : மயில்.
உரங்காட்டல் - அன்பு பாராட்டல் : வலிகாட்டல்.
உரங்கொள்ளல் - கடினமுறல் : பலங் கொள்ளல் : வலியுண்டாகுதல் : உக்கிரமாதல் : கெட்டியாதல்.
உரசிதம், உரசிருகம் - மார்பிலுள்ளது : முலை : தனம் : கொங்கை : பயோதரம் : இயம் : கொம்மை : மார்பு.



உரசுதல் - உரிஞ்சல் : உராய்தல்.
உரஞ்சுதவ் - தேய்த்தல்.
உரணம் - ஆட்டுக்கடா : முகில்.
உரண்டம், உரண்டை - காக்கை கரடம் : அரட்டம் : கரும்பிள்ளை : கொடி : வாயசம்.
உரத்தல் - இறுகுதல் : முருடாதல் : வலுத்தல் : கொந்தளித்தல் : மிகுதல்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:41 am

உரந்தை - துன்பம் : இன்னல் : வருத்தம் : வலி.
உரப்பம் - பெருங்காயம்.
உரப்பல் - அடரொலி : திரட்டோசை.
உரப்பியடித்தல் - பேச்சால் வெல்லுதல்.
உரப்பிரம் - வெள்ளாடு.



உரப்புதல் - அதட்டுதல் : திரண்டொலித்தல் : அச்சுறுத்தல்.
உரமுண்டாக்கல் - வலிவுண்டாக்கல்.
உரம்புகுதல் - விசையொடு புகுதல்.
உரம் விழுதல் - குழந்தைகளுக்குச் சுளுக்குண்டாதல்.
உரலடி - யானை.



உரலாணி - உலக்கை : உரலின் அடிக்கிடும் மரத்துண்டு.
உரவக்காடு - மலைப்பயிர்.
உரவம் - வலிமை : அறிவு.
உரவன் - அருகில் அறிவுடையோன் : பலமுடையவன்.
உரவுதல் - பலனுறுதல் : உலாவுதல் : வலியுறுத்தல்.



உரவுநீர் - உப்பு நீர் : கடல் : யாறு.
உரவோர் - அறிஞர் : முனிவர்.
உரறல் - இடித்தல் : பெருஞ்சினங் கொள்ளல் : மிக மூர்க்கங் கொள்ளுதல் : முழங்குதல்.
உரறு - ஒலி : முழங்கு.
உரறுதல் - உரறல்.



உரற்களம் - அறிஞரவை.
உரற்றல் - ஒலித்தல் : பேரொலி.
உரற்றுதல் - முழுங்குதல் : உரற்றல்.
உரனர் - மனவலியுடையோர்.
உராய்தல் - உரிஞ்சுதல் : பெயர்தல்.



உராய்போதல் - உரைதல்.
உரால் - ஓடுகை : உலாவுதல்.
உராவல் - உலாவல்.
உராவுதல் - பரத்தல் : பெயர்தல் : செல்லுதல் : வலியடைதல்.
உரிசை - தீஞ்சுவை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - உ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum