ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - உ

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

தமிழ் அகராதி - உ Empty தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:30 am

உ - தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாம் உயிர் எழுத்து; இரண்டு என்ற எண்ணின் குறியீடு; ஒரு சுட்டெழுத்து (எ.கா - உது, உம் மனிதன்); ஒரு பெயர்ச்சொல் விகுதி (எ.கா - தரவு, இழவு); ஒரு வினையெச்ச விகுதி (எ.கா - செய்து)
உக்கா - புகைகுடிக்க உதவும் கருவி
உக்கிரம் - கோபம்; மிகுந்த ஊக்கம்; கொடுமை
உக்கிராணம் - சாமான் அறை
உகம் - யுகம்; ஊழிக்காலம்; பூமி; நுகம்; பாம்பு; தலைப்பாட்டு; ஒரு ஜோடி

உகிர் - நகம்
உகு - கீழே உதிர்; சிதறி விழு; சிதறி விழச் செய்; தேய்வுறு; அஸ்தமனம் அடை; பறத்தல் செய்; சொரியச் செய் [உகுதல், உகுத்தல்]
உகை - செலுத்து; எழுப்பு; உயர்ந்தெழு; குதித்தெழு; செலுத்தப் பட்டுச் சொல் [உகைத்தல், உகைதல்]
உங்கு - உவ்விடம்
உச்சம் - தலைக்கு நேரான வானமுகடு; சிறப்பு; உயரம்; ஒரு கிரகத்தின் மிகவுயர்ந்த நிலை; மிக உயர்ந்த எல்லை அளவு

உச்சரி - எழுத்துக்களை ஓசையுடன் பிறப்பி; மந்திரங்களைச் செபித்தல் செய்; [உச்சரித்தல், உச்சரிப்பு, உச்சாரணம்]
உச்சசாடனம் - பேயோட்டுதல்; பிசாசை ஏவுதல்
உச்சி - வான முகடு; உச்சந்தலை; தலை; சிகரம்; நடுப்பகல்; மேல் எல்லை; உண்ட உண்கலத்தில் மீதியுள்ளது
உச்சிட்டம் - ஒருவர் எச்சில்; எஞ்சியுள்ள பொருள்; சேடம்
உச்சிமோத்தல் - (குழந்தையின்) தலையில் உச்சியை மோந்து அன்பு காட்டுதல்

உசாத்துணை - நம்பகமான நண்பன்
உசாவு - ஆலோசனை செய்; விசாரணை செய் [உசாவுதல், உசாதல்]
உசிதம் - தகுதி; மேன்மை
உசுப்பு - வெருட்டு; எழுப்பு [உசுப்புதல்]
உஞற்று - முயற்சி செய்; செய்; தூண்டு [உஞற்றுதல்]

உட்கார் - அமர்ந்திரு [உட்கார்தல்]; பகைவர்
உட்கிடை - உள்கருத்து; பேரூரின் பகுதியான சிறு கிராமம்
உட்கு - அச்சம்; நாணம்; வலிமை; மிடுக்கு; மதிப்பு
உட்கொள் - உண்ணுதல் செய்; உள்ளிழு; உள்ளே கருது [உட்கொள்ளல்]
உடந்தை - சேர்க்கை; துணை; ஆதரவு

உடம்படு - ஒத்ததாகச் செய்; இசைதல் செய் [உடம்படுதல்]
உடம்பாடு - சம்மதம்; ஒற்றுமை
உடம்பிடி - வேல்
உடம்பு - சரீரம்; மெய்யெழுத்து
உடல் - சினங்கொள்; சச்சரவிடு; ஆசையால் வருந்து [உடலுதல், உடலல்]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:31 am

உடலுநர் - பகைவர்
உடற்சி - சினம்
உடற்று - சினமூட்டு; வருத்து; தீவிரமாக நடத்து; கெடுத்தல் செய்; தடுத்தல் செய் [உடற்றுதல்]
உடன் - ஒரு சேர; அப்பொழுதே; ஒரு வகுப்பைச் சேர்ந்த; மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு (எ.கா - வேலனுடன்)
உடன்கட்டை யேறுதல் - இறந்த கணவனது உடலுடன் மனைவியும் எரிபடல்.


உடன்படிக்கை - ஒப்பந்தம்
உடன்படு - இசைதல் செய்; ஒத்துக்கொள் [உடன்படுதல், உடன்பாடு, உடன்படுத்துதல்]
உடன்படுத்து - இணங்கச் செய்
உடன்பிறந்தார் - சகோதரர்
உடன்பிறப்பு - சகோதராயிருத்தல்


உடன்போக்கு - (அகம்) பெற்றோர் அறியாம்ல தலைவனுடன் தலைவி செல்லுதல்
உடனே - அக்கணமே; ஒரு சேர
உடு - ஆடை முதலியன அணிந்து கொள்; சூழ்ந்திரு [உடுத்தல்]; அம்பு; அம்பின் இறகு; வில்லின் நாணில் அம்பைப் பொருத்தும் இடம்; படகுத் துடுப்பு; அகழி; நட்சத்திரம்; ஆடு
உடுக்கை - ஆடை; உடை; ஒரு சிறு பறை
உடுப்பு - ஆடை; உடை


உடுபதி - சந்திரன்
உடும்பு - பல்லி இனப் பிராணி
உடை - தகர்ந்து போ; பிளந்து போ; முருக்கவிழ்; மலர்தல் செய்; பிளத்தல் செய்; வெளிப்படுத்து; அழித்தல் செய்; வருத்து [உடைதல், உடைத்தல்]; ஆடை; செல்வம்; வேலமரம்; சூரியனின் மனைவியான உஷை
உடைப்பு - நீர்க்கரை உடைதல்
உடைமை - உடையராம் தன்மை; உடைமைப் பொருள்; செல்வம்



உடையவர் - சுவாமி; தலைவர்; சொந்தப் பூசையில் பயன்படுத்தும் சிவலிங்கம்; வைணவ குருவான இராமானுசர்
உடையார் - சுவாமி; சில சாதியாரின் பட்டப்பெயர்; செல்வர்
உண் - புசித்தல் செய்; விழுங்கு; உட்கொள்; அனுபவி; பொருந்தியிரு; ஒத்திரு; கவர்தல் செய்; செயப்பாட்டு வினை உணர்த்தும் துணைவினை (எ.கா - மிதியுண்டான்) [உண்ணுதல்]
உண்டாக்கு - சிருட்டி செய்; அமைத்தல் செய்; விளைவி [உண்டாக்குதல்]
உண்டாட்டு - கள்ளுண்டு களித்தல்


உண்டி - உணவு; இரை; பண்மாற்றுச் சீட்டு
உண்டு - உளதாம் தன்மையை உணர்த்தும் ஒரு வினைமுற்று; ஓர் உவம உருபு
உண்டுபண்ணு - உண்டாக்கு [உண்டு பண்ணுதல்]
உண்ணா, உண்ணாக்கு - அண்ணத்திலிருந்து தொங்கும் சிறு நாக்கு
உண்ணாமுலை - திருவண்ணாமலைக் கோயிலில் வழிபடப்படும் பார்வதி தேவி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:31 am

உண்மை - உளதாதல்; தன்மை; மெய்ம்மை; ஊழ்
உணக்கம், உணக்கு - வாட்டம்; உலர்தல்
உணங்கல் - உலர்தல்; உலர்த்திய தானியம்; வற்றல்; சமைத்த உணவு
உணர் - அறிதல் செய்; கருது; மனத்திற்படு; துயிலெழு; ஊடியபின் கூடு [உணர்தல், உணர்ச்சி, உணர்வு]
உணர்த்து - அறியச் செய்; துயிலெழுப்பு; ஊடல் தீரச் செய் [உணர்த்துதல்]



உணர்வு - தெளிவு; அறிவு; ஆன்மா
உணராமை - அறியாமை; மயக்கம்
உணவு, உணா - ஆதாரம்; உணவுப் பொருள்
உத்தண்டம் - உக்கிரம்; வலிமை; பெருமை
உத்தமம் - மிகச் சிறந்த ஒன்று; நன்மை; மேன்மை



உத்தமன் - மிகச் சிறந்தவன் (பெண்பால் - உத்தமி)
உத்தரகிரியை - சாவுக்குப் பின் செய்யப்படும் சடங்கு
உத்தரம் - மறுமொழி; பின் நிகழ்வது; விட்டம்; வடக்கு; ஊழித்தீ; பன்னிரண்டாவது நட்சத்திரம்
உத்தரவாதம் - எதிர்வாதம்; பொறுப்பு; ஈடு
உத்தரவு - கட்டளை; அனுமதி



உத்தராயணம் - சூரியன் வடக்கு நோக்கி நகர்வதாகத் தோன்றும் ஆறுமாத காலம்
உத்தாரணம் - எடுத்து நிறுத்தல்; தீங்கிலிருந்து மீட்டல்
உத்தி - பேச்சு; சேர்க்கை; யுக்தி; இலக்கிய உத்தி; அணிகலத் தொங்கல்; இலக்குமி உருவங்கொண்ட ஒரு தலையணி; நல்ல பாம்பின் படப்பொறி; தேமல்
உத்தியானம், உத்தியானவனம் - மலர்ச் சோலை, அரசர் விளையாடுங் காவற் சோலை.
உத்தியோகம் - முயற்சி; தொழில்



உத்தேசம் - நோக்கம்; சுமாராக மதித்தல்; ஏறக்குறைய; சுமாராக
உத்தேசி - நோக்கமாகக் கொள்; மதிப்பிடு [உத்தேசித்தல்]
உதகம் - நீர் பூமி
உதடு - வாய் விளிம்பு; விளிம்பு
உததி - கடல்



உதயம் - தோற்றம்; சூரியன் முதலியன கீழ்வானில் தோன்றுதல்; பிறப்பு
உதரம் - வயிறு
உதவி - துணை செய்தல்; சகாயம்; கொடை
உதன் - ஆட்டுக்கடா; ஆடு
உதறு - பிடித்து உலுக்கு; விலகச் செய்; விலக்கு; நடுங்கு [உதறுதல், உதறல்]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:31 am

உதாசினம் - நித்தை ; அவமதிப்பு ; உதாசனம்; விருப்பு வெறுப்பின்மை.
உதாசீனம் - விருப்பு வெறுப்பு இன்மை; அலட்சியம்
உதாரணம் - எடுத்துக்காட்டு
உதாரம் - கொடைக்குணம்; மேம்பாடு [உதாரன், உதாரி]



உதானன் - உடம்பிலுள்ள பத்து வாயுக்களில் ஒன்று
உதி - தோன்று; பிறத்தல் செய்; உதயமாகு [உதித்தல்]
உதியன் - சேர அரசர் பட்டப்பெயர்
உதிர் - சிதறி விழு; நிலைகுலை; சிதறச் செய்; விழச் செய்; உதறு [உதிர்தல், உத்ரித்தல்]
உதிரம் - இரத்தம்




உதிரல் - உதர்ந்த பூ
உதிரி - உதிர்ந்த பொருள்; உதிர்ந்த நெல்; பெரியம்மை; சிறு கீரை; பிட்டு; செவ்வாழை
உதும்பரம் - எருக்கு; அத்திமரம்; வீட்டு வாயிற்படி; தாமிரம்
உதை - காலினால் எற்று; நன்றாக அழுத்து; அவமதிப்புச் செய் [உதைதல், உதைத்தல்]
உதைகால் - தாங்கும் முட்டுக்கால்



உதைகாலி - உதைக்கும் இயல்புள்ள பசு
உதைசுவர் - முட்டுச் சுவர்
உதைப்பு - மோதுதல்
உந்தி - வயிறு; கொப்பூழ்; நீ; நீர்ச் சுழி; யாற்றிடைக்குறை; கடல்; தேர்ச்சக்கரம்; தேர்த்தட்டு; மகளிர் விளையாட்டுக்களில் ஒன்று; யாழின் பத்தல்; நடுவிடம்
உந்திபறத்தல் - மகளிர் உந்தி விளையாடுதல்



உந்து - தள்ளு; செலுத்து; அனுப்பு; வெளிப்படுத்து; (யாழ் நரம்பை) அதிரச் செய்; காய்களை உருட்டு; பொங்கியெழு; செல்லு; நீங்கு [உந்துதல்]
உந்தை - உன் தந்தை
உப்பக்கம் - இடைப்பட்ட பக்கத்தில்; முதுகு
உப்பங்கழி - கடற்கழி; உப்பளம்
உப்பங்காற்று - கடற்காற்று



உப்பரிகை - மேல்மாடம்
உப்பளம் - உப்பு விளையும் நிலம்
உப்பால் - மேலிடம்; முதுகு
உப்பிலி - உப்பில்லாதது; ஒரு வகைச் செடி
உப்பு - சாதாரண உப்பு; அமிலமும் காரமும் கூடி உண்டாகும் பொருள்; உவர்ப்பு; (உவர்க்) கடல்; இனிமை; பருத்தல் செய்; பொங்கு [உப்புதல், உப்பல்]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:32 am

உப்புக்கரித்தல் - உவர்ப்புச் சுவைமிகுதல்
உப்புச் சுமத்தல் - ஒரு விளையாட்டில் வென்றவனைத் தோற்றவன் சுமத்தல்
உப்புப் பால் - சிசு பிறந்த பின் சுரக்கும் தாய்ப்பால்
உப்புப் பூத்தல் - உப்புப் படர்தல்
உப்புமா - ஒருவகைச் சிற்றுண்டி



உப்புறைத்தல் - உப்புக் கரித்தல்
உப்பெடுத்தல் - திருமணம் பேசுவதற்குச் செல்லும்பொழுது உப்பெடுத்துச் செல்லும் ஒரு சடங்கு
உப்பேரி - ஒருவகைக் கறி
உப - தலைமைக்கு அடுத்தபடியானதைக் குறிக்க உதவும் ஒரு சமஸ்கிருத உபசர்க்கம் (எ.கா - உபதலைவர்)
உபகரணம் - துணைப்பொருள்



உபகாரம் - உதவி; கொடை [உபகாரன், உபகாரி]
உபசரி - மரியாதை செய்; வழிபாடு செய் [உபசரித்தல், உபசாரம்]
உபசருக்கம் - ஒரு சொல்லுக்கு முன் சேர்க்கப்படும் ஓர் இடைச் சொல்
உபசார வழக்கு - ஒன்றின் தன்மையை மற்றொன்றின் மீது ஏற்றிச் சொல்லுவது
உபத்திரவம் - துன்பம்; தொந்தரை



உபதேசி - அறிவுரை கூறு; மந்திர உபதேசம் செய் [உபதேசித்தல், உபதேசம்]
உபநயனம் - பூணூல் அணியும் சடங்கு
உபநிடதம், உபநிடத்து - வேதத்தின் தத்துவப் பகுதி (ஞானகாண்டம்); வேதம்
உபநியாசம் - பிரசங்கம்; சொற்பொழிவு
உபம் - இரண்டு



உபமானம் - உவமை; ஒற்றுமை
உபமேயம் - உவமிக்கப்பட்ட பொருள்
உபயகவி - இரு மொழிகளில் கவிபாடும் திறமையுள்ளவன்
உபயகுலம் - தாய் வழியும் தந்தை வழியும்
உபயம் - இரண்டு, அறச்சாலை அல்லது கோயிலுக்கு அளிக்கும் கொடை



உபரி - மேல்; அதிகமாக; முகுதி; ஒரு மீன்; மேல் விருத்தி.
உபரிகை - மேல்மாடம்
உபலக்கணம், உபலட்சணம் - ஒரு மொழி தன்னினத்தையும் குறித்தல்
உபவாசி - உண்ணா நோன்பிரு [உபவாசித்தல், உபவாசம்]; உண்ணா நோன்பிருப்பவன்
உபாக்கியானம் - கிளைக்கதை


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:32 am

உபாசகன் - வழிபடுவோன்; பெளத்தரில் இல்லறத்தோன் (பெண்பால் - உபாசகை)
உபாசி - வழிபாடு [உபாசித்தல், உபாசனை, உபாசனம்]
உபாத்தியாயன் - கற்பிப்பவன்; ஆசாரியன் (பெண்பால் - உபாத்தியாயணி)
உபாதானம் - முதற்காரணம்; அரிசிப் பிச்சை
உபாயம் - சூழ்ச்சி; எதிரியை வெல்லும் சாதனம்; நான்கு; சிறிதளவு



உபேட்சி - புறக்கணித்தல் செய் [உபேட்சித்தல், உபேட்சை]
உம்பர் - மேலிடம்; உயர்ச்சி; ஆகாயம்; தேவருலகம்; தேவர்; உயரத்தில் மேலே; ஆங்கே
உம்பல் - ஆண் யானை; ஆட்டுக்கடா; யானை; வழித்தோன்றல்; வலிமை; எழுந்து தோன்றுதல்; ஒருவகைத் தேக்குமரம்
உம்பி - உன் தம்பி
உம்மை - உம் என்ற இடைச் சொல்; முற்பிறப்பு; வருபிறப்பு



உம்மைத்தொகை - (இலக்கணம்) 'உம்' இடைச்சொல் தொக்க தொகை (எ.கா - மரஞ்செடி - கொடி)
உமணன் - உப்பு அமைப்பவன்; உப்பு வாணிகன் (பெண்பால் - உமணத்தி, உமட்டி)
உமர் - உம்மவர்; குதிர்
உமி - பதராகு; கொப்புளங்கொள்; துப்புதல் செய்; கொப்பளி; உறிஞ்சு [உமித்தல், உமிதல்]
உமிழ் - துப்புதல் செய்; கொப்பளி; வாந்தி செய்; வெளிப்படுத்து; தெவிட்டு [உமிழ்தல்]



உமை, உமையாள் - பார்வதி தேவி
உய் - செலுத்து; அனுப்பு; சுமந்து செல்; அனுபவி; கொடு; வெளிப்படுத்து; ஆணை செலுத்து; பிழைக்கச் செய்; நீக்கு; வாழ்தல் செய்; தப்பிப் பிழை; துன்பத்தினின்று நீங்கு [உய்த்தல், உய்தல்]
உய்த்துணர்வு - ஆராய்ந்துணரும் அறிவு; ஞானம்
உய்தி, உய்கை - துன்பத்தினின்று விடுபடல்; பரிகாரம்
உய்யானம் - நந்தவனம்; சோலை



உய்வு - உயிர் தப்புதல்; பரிகாரம்
உயக்கம் - வருத்தம்
உயவு - வருத்தம்; உயிர் பிழைக்கச் செய்யும் சாதம்
உயா - வருத்தம்
உயிர் - ஆன்மா; சிவன்; உயிருள்ளது; உயிரெழுத்து; பிராணவாயு; காற்று; ஓசை



உயிர்ப்பு - உயிர் பெறுதல்; சுவாசம்; காற்று; பெருமூச்சு; நறுமணம்; இளைப்பாறுதல்
உயிர்மெய் - ஒற்றெழுத்தும் உயிரெழுத்தும் இணைந்தொலிக்கும் எழுத்து
உயிரளபு, உயிரளபெடை - தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் உயிரெழுத்து (எ.கா - மகடூஉ)
உயில் - மரணசாசனம்
உரகர் - நாகர் என்ற தேவசாதியார்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:32 am

உரசு - தேய்த்தல் செய் [உரசுதல்]
உரப்பு - அதட்டு; பேரொலி செய்; அச்சமுறச் செய்; உரத்து ஒலிக்கச் செய் [உரப்புதல்]
உரம் - வலிமை; திண்மை; மரவைரம்; எரு; மார்பு; ஊக்கம்; ஞானம்; அறிவுத் தெளிவு; சேனையின் முன்னனி
உரல் - மாவு முதலியன் இடிக்கும் உபகரணம்
உரவு - வலிமை; மனவுறுதி; அதிகரித்தல்; விஷம்



உரற்று, உரறு - பேரொலி செய்; முழங்கு [உரற்றுதல், உரறுதல்]
உரன் - மனவுறுதி; திண்மை; அறிவு; பற்றுக்கோடு; வெற்றி; உற்சாகம்; மார்பு
உராய், உராய்ஞ்சு - ஒன்றொடொன்று தே [உராய்தல், உராய்ஞ்சுதல், உராய்வு]
உரி - கழலு; களைதல் செய்; கழற்று [உரிதல், உரித்தல்]; தோல்; மரப்பட்டை; உரிச்சொல்; அரைப்படி; கொத்து மல்லி
உரிச்சொல் - தமிழ்மொழியிலுள்ள நால்வகைச் சொற்களில் ஒன்று



உரிஞ்சு, உரிஞு - உராய்; தேய்த்தல் செய்; பூசு [உரிஞ்சுதல், உரிஞ்சல், உரிஞுதல்]
உரித்து - உரியது; உரிமை
உரிபொருள் - (அகம்) ஐந்திணைகளுக்கு உரிய புணர்தல் முதலிய பொருள்களும் அவற்றின் நிமித்தங்களும்
உரிமை - பாத்தியதை; சொந்தமானது; மனைவி; அடிமை; கடமை; இயல்புக்குணம்; சுவாதீனம்
உரிவை - தோல்; உரிக்கும் தொழில், மரவுரி.



உரு - வடிவம்; வடிவழகு; உடம்பு; விக்கிரகம்; பல தடவை திரும்பச் சொல்லுதல்; அச்சம்; அட்டை; மான்
உருக்கம் - இரக்கம்; அன்பு
உருக்கு - இளகித் திரவமாகச் செய்; மன நெகிழ்வு செய்; மெலிவடையச் செய்; வருத்து [உருக்குதல்]
உருகு - வெப்பத்தால் இளகித் திரவமாகு; மன நெகிழ்வடை; மெலிவாகு [உருகுதல்]
உருட்சி - உருளுதல்; உருண்டை வடுவு




உருட்டு - உருளச் செய்; உருண்டையாகச் செய்; வருத்து; இசை நரம்பை வருடு; ஆடம்பரமான பேச்சினால் மருட்டு [உருட்டுதல்]
உருண்டை - பந்துபோன்ற உருவம்; கோளம்; உணவுக் கவளம்
உருத்திரபூமி - மயானம்
உருத்திரன் - சிவபிரான்; பதினொரு உருத்திரருள் ஒருவன்; சிவகணத்தோன்; அக்கினிதேவன்
உருத்திராக்கம் - உருத்திராக்க மரம்; உருத்திராக்க மரத்தின் கொட்டை



உருத்திராட்சபூனை - தவசி வேடமணிந்த வஞ்சகன்
உருத்திரை - பார்வதி தேவி
உருது - சேனை; பாசறை; வட இந்திய மொழிகளில் ஒன்று
உருப்படி - எண்ணிக் கணக்கிடத்தக்க பொருள்; இசைப்பாட்டு
உருப்படு - உருவாகு; சீர்ப்படு [உருப்படுதல்]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:33 am

உருமால், உருமாலை - மேலாடை; தலைப்பாகை
உருமு - பேரொலி செய்; இடியோசை செய்; முறுமுறுத்தல் செய் [உருமுதல்]; இடி மின்னல்
உருமேறு - பேரிடி
உருவ - முழுதும்; நன்றாக
உருவகம் - (இலக்கணம்) உவமேயத்தையும் உவமானத்தையும் வேறுபாடில்லாது கூறும் அணி



உருவம் - வடிவம்; பிரதிமை; உடல்; நிறம்; அழகு; மாறுவேடம்; சூதுக்காய்; மந்திரத்தைப் பல தடவை சொல்லுதல்
உருவு - உருவம்
உருள் - சுழலு; புரண்டுவிழு; உருண்டையாகு; அழிந்து போ; செல்லு; தேர்ச்சக்கரம்; வண்டி
உருளி - வண்டியின் சக்கரம்; வட்டம்
உருளை - சக்கரம்; உருளக்கூடிய பொருள்



உருளைக்கிழங்கு - ஒருவகைக் கிழங்கு
உரை - தேய்வு; மாற்று; பொன்; சொல்; சொல்லுதல்; எழுத்தொலி; வியாக்கியானம் சொற்பொருளும் விளக்கமும்; புகழ்; முழக்கம்
உரைதல் - பொன், வெள்ளிகளின் மாற்று அறிய உரைக்கும் கல்
உரைசு - தேய்ந்து போ; உராய்; தேய்த்தல் செய் [உரைசுதல்]
உரைநடை - வாசக நடை



உரையாடு - சொல்லு; பிறருடன் கலந்து பேசு [உரையாடுதல்]
உரையாணி - (பொன்) மாற்று அறிய உதவும் ஆணி
உரோமம் - புறமயிர்
உல்கு - சுங்கவரி
உல்லாசம் - உள்ளக் களிப்பு



உல்லாபம் - மழலை மொழி; திக்கிப் பேசுதல்
உலக்கை - தானியம் குற்றும் கருவி; பண்டைப் போர்க் கருவி; திருவோண நட்சத்திரம்; ஒருவகைக் கிழங்கு
உலகம் - பூமி; நிலப்பகுதி; திக்கு; மக்கள் தொகுதி; உயர்ந்தோர்; உயிரினங்கள்; உலக வழக்கம்
உலக வழக்கு - உலகத்தார் வழக்கம்; பேச்சு வழக்குச் சொல்
உலகியல் - உலக வழக்கம்; உலக நீதி



உலகு - உலகம்
உலம் - திரண்ட கல்; திரட்சி
உலமரம் - துன்பம்; அச்சம், வானம்.
உலர் - காய்ந்து போ; வாடிப் போ [உலர்த்தல், உலர்ச்சி]
உலர்த்துதல் - உலரச் செய்தல்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:33 am

உலவு - உலாவு
உலறு - நீர் வற்று; வாடிபோ; சிதைவுறு; சினங்கொள் [உலறுதல்]
உலா - பவனி வருதல்; பவனி வருதல் பற்றிய ஒரு பிரபந்தம்
உலாத்து - உலாவு; உலாவச் செய் [உலாத்துதல்]
உலாவு - அங்குமிங்கு அசை; பவனி வா; பரவு; சூழ்ந்திரு [உலாவுதல்]



உலுக்கு - குலுக்குதல் செய்; நடுங்கு [உலுக்குதல்]
உலுத்தன் - உலோபி
உலுப்பு - அசைத்து உதிரச் செய் [உலுப்புதல்]
உலை - அடுப்பு; கொல்லருலை; சமையலுக்குக் கொதிக்க வைக்கும் நீர்ப்பாண்டம்; மனக்குழப்பம்
உலைக்களம் - கொல்லருலைக் கூடம்



உலைவு - நடுக்கம்; தோல்வி; அழிவு; தொந்தரை; வறுமை; ஊக்கமின்மை
உலோகம் - பேராசை; பற்றுதல் மிக்க மனம்; குறைபாடு; (இலக்கணம்) புணர்ச்சியில் கெடுதல் விகாரம்
உலோபன், உலோபி - பேராசையுள்ளவன்
உவகை - மகிழ்ச்சி; அன்பு; காமம்; காதல் சுவை
உவச்சன் - கோயில் பூசாரி சாதியான்; பண்டைய அராபிய இனத்தைச் சார்ந்தவன் (சோனகன்)



உவட்டு - தெவிட்டு; வெறுப்புறு; மிகுதியாகு [உவட்டுதல், உவட்டிப்பு]
உவண் - மேலிடம்
உவணம் - கருடன்; கழுகு; உயர்ச்சி
உவப்பு - மகிழ்ச்சி; விருப்பு; உயரம்
உவமம் - உவமை



உவமானம் - உபமானம்
உவமித்தல் - ஒப்பிடுதல்
உவமை - ஒப்பு; ஒற்றுமை; உவமையணி
உவமைத் தொகை - உவகையுருபு தொக்க தொலை (எ.கா - பவளவாய்)
உவர் - உப்பச் சுவை; உப்பு; உவர் மண்; கடல்; இனிமை



உவர்ப்பு - உப்புச் சுவை; துவர்ப்பு; வெறுப்பு
உவரி - உப்பு நீர்; கடல்; சிறுநீர்
உவவு - உவப்பு; முழு நிலா; அமாவாசை
உவனகம் - அந்தப்புரம்; சிறை; மதில்சுவர்; அகழி; வாயில்; இடைச்சேரி; பள்ளம்; குளம்; ஏரி; பரந்த வெளியிடம்; உப்பளம்; பிரிதல்
உவா - பெளர்ணிமை; அமாவாசை; கடல்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ Empty Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா Thu Feb 04, 2010 1:33 am

உவாத்தியாயன் - ஆசாரியன்; கல்வி கற்பிப்போன் (பெண்பால் - உவாத்தியாயனி)
உவாமதி - முழுநிலா
உழக்கு - கலக்கு; மிதித்து நசுக்கு; பேரளவில் கொன்றழி; உழு; விளையாடு [உழக்குதல்]; இரண்டு ஆழாக்களவு; சூதாடு காய்களைப் போட்டு உருட்டும் பெட்டி
உழப்பு - வருத்தம்; துன்பம்; முயற்சி; பழக்கம்
உழல் - அசைதல் செய்; சுழலு; அலைதல் செய் [உழலுதல், உழற்சி]



உழலை - செக்கு அல்லது கரும்பாலையில் சுழலும் மரம்; குறுக்கு மரம்; மாட்டின் கழுத்துக் கட்டை
உழவன் - நிலத்தை உழுபவன்; மருத நில வாசிகளில் ஒருவன்; ஏர் மாடு
உழவாரம் - புற்செதுக்கும் கருவி
உழவு - உழுதல்; பயிர்த் தொழில்; உடலுழைப்பு
உழவுகோல் - தாற்றுக்கோல்; கசை



உழவுசால் - உழுத நிலத்தில் ஏற்படும் வரி
உழி - இடம்; பொழுது; ஏழாம் வேற்றுமை உருபு
உழிஞ்சில் - வாகைமரம்; உன்ன மரம்
உழு - உழுதல் செய்; கிளைத்தல் செய்; தோண்டுதல் செய் [உழுதல்]
உழுந்து - ஒருவகைத் தானியம்



உழுவலன்பு - ஏழு பிறப்புகளிலும் மாறாது தொடரும் சிறந்த அன்பு
உழுவை - புலி; ஒருவகை மீன்
உழை - வருந்தி முயற்சி செய்; வருந்து; வருமானம் பெற வேலை செய்; கலைமான், ஆண்மான், அண்மை, பக்கம், இடம், உவர்மண், ஏழிசைகளுள் ஒன்று, கதிரவன் மனைவியர்களில்
ஒருத்தி, யாழின் நரம்பு, விடியற்காலம். [உழைத்தல், உழைப்பு]
உழையர், உழையவர் - அருகிலுள்ளவர்; அமைச்சர்; ஏவலர்
உள் - உள்ளிடம்; அந்தரங்கமானது; மனம்; மனவெழுச்சி; இடம்; ஏழாம் வேற்றுமை உருபு



உள்கு - நினைத்தல் செய்; மனமழி [உள்குதல்]
உள்ள - இருக்கிற
உள்ளங்கால் - பாதத்தின் கீழ்ப்பக்கம்
உள்ளடக்கு - உட்படச் செய்; மறைத்தல் செய் [உள்ளடக்குதல்]
உள்ளது - இருக்கும் பொருள்; விதிக்கப்பட்டது; மெய்; ஆன்மா



உள்ளபடி - உண்மையாக; உண்மை
உள்ளம் - மனம்; கருத்து; ஊக்கம்; மனச்சாட்சி; ஆன்மா; ஒரு வகை மீன்
உள்ளல் - கருத்து; ஒருவகை மீன்
உள்ளி - வெங்காயம்; வெள்ளைப்பூண்டு
உள்ளீடு - உள்ளிருக்கும் சத்தான பகுதி; உட்கருத்து; இரகசியம்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - உ Empty Re: தமிழ் அகராதி - உ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum