ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்​தை​களை மதிக்க வேண்​டும்! -மணிமேகலை

3 posters

Go down

குழந்​தை​களை மதிக்க வேண்​டும்! -மணிமேகலை Empty குழந்​தை​களை மதிக்க வேண்​டும்! -மணிமேகலை

Post by யுவா Tue Feb 02, 2010 5:24 pm

"இப்​படி ஒரு புத்​த​கம் எழு​து​வேன் என்று இதற்கு முன்பு நான் நினைத்​துப் பார்த்​தது கூட இல்லை.​ எனக்​குச் சிறு வயது முதலே ஐஏ​எஸ் ஆக
வேண்​டும் என்ற கனவு இருந்​தது.​ பிறந்த ஊர் ஒட்​டன் சத்​தி​ரத்​துக்கு அரு​கில் உள்ள வெரி​யப்​பூர்.​ அப்பா முத்​து​சாமி அந்த நாளி​லேயே மிகப் பெரிய
சீர்​தி​ருத்​த​வாதி.​ அத​னால் எனக்கு எல்​லாச் சுதந்​தி​ரங்​க​ளும் கொடுத்து
வளர்த்​தார்.​ பெண்​கள் நிறை​யப் படிக்க வேண்​டும் என்று நினைத்​தார்.​

நான் என் பள்​ளிக் கல்​வியை மது​ரை​யில் முடித்​தேன்.​ சென்னை எத்​தி​ராஜ் கல்​லூ​ரி​யில் பி.எஸ்ஸி தாவ​ர​வி​யல் படித்​தேன்.​ அப்​பு​றம் சென்​னைப்
பல்​க​லைக் கழ​கத்​தில் எம்.ஏ.,​​ மானு​ட​வி​யல் படித்​தேன்.​ அப்​பு​றம் தில்​லி​யில் உள்ள ஜவ​ஹர்​லால் நேரு பல்​க​லைக்​க​ழ​கத்​தில் எம்​ஃ​பில் முடித்​தேன்.​
ஐஏ​எஸ் தேர்வு எழுதி மெயின் தேர்வு வரைக்​கும் போனேன்.​ அப்​பு​றம்
திரு​ம​ணம் ஆகி​விட்​டது.​

என் கண​வர் அப்​போது ஸ்பிக் நிறு​வ​னத்​தில் என்​ஜி​னீ​ய​ராக இருந்​தார்.​
பிஸி​யான வேலை அவ​ருக்கு.​ இரண்டு குழந்​தை​கள் பிறந்​து​விட்​ட​னர்.​
குடும்​பப் பொறுப்​பும் குழந்​தை​க​ளைப் பார்க்க வேண்​டிய பொறுப்பு வந்து சேர்ந்​தது.​ அத​னால் ஐஏ​எஸ் கனவு கன​வா​கவே நின்று போனது.​ இதில் எனது மாமி​யார் ராஜா​ம​ணிக்​கும்,​​ அம்மா ஞானத்​துக்​கும் ரொம்ப வருத்​தம்.​


குழந்​தை​களை மதிக்க வேண்​டும்! -மணிமேகலை 17ko1

2002 இலி​ருந்து நான்கு வரு​டங்​கள் மது​ரை​யில் இருந்​தோம்.​ மது​ரை​யில் ​ என் மகள்​கள் படிக்​கும் பள்​ளி​யில் ஆசி​ரி​யை​யாக அப்​போது நான் வேலை செய்​தேன்.​ அது​வும் ஐந்​தாம் வகுப்பு வரை மட்​டுமே ஆங்​கி​லப் பாடம்
நடத்​தி​னேன்.​

என் வகுப்பு பிற ஆசி​ரி​யை​க​ளின் வகுப்​பை​விட எப்​போ​தும் சத்​த​மாக
இருக்​கும்.​ அந்த அள​வுக்​குக் குழந்​தை​க​ளி​டம் ஃப​ரீ​யா​கப் பழ​கு​வேன்.​
குழந்​தை​கள் அவர்​கள் வீட்​டில் நடந்​ததை எல்​லாம் என்​னி​டம் சொல்​வார்​கள்.​ வீட்டில் அப்பா,​​ அம்மா சண்டை போட்​டதி​லி​ருந்து,​​ அவர்​கள் ​ தங்​களை
அடித்​தது வரை எல்​லா​வற்​றை​யும் என்​னி​டம் சொல்​லி​வி​டு​வார்​கள்.​ குழந்​தை​க​ளின் பெற்​றோ​ரும் என்​னி​டம் வந்து தங்​க​ளு​டைய குழந்​தை​க​ளைப் பற்​றிச் சொல்​வார்​கள்.​ சொல்​வ​தைக் குழந்​தை​கள் கேட்​க​மாட்​டேன் என்​கி​றார்​கள் என்று புகார் சொல்​வார்​கள்.​

ஆசி​ரி​யை​யாக வேலை செய்த இந்த நான்கு வரு​டங்​க​ளில் குழந்​தை​க​ளின் மன​நி​லையை நன்கு புரிந்து கொண்​டு​விட்​டேன்.​ என் மகள்​கள் இமயா,​​ இதயா இரு​வ​ரு​ட​னும் பழ​கிய அனு​ப​வ​மும் குழந்​தை​க​ளின் மன​நி​லையை நன்கு புரிந்து கொள்ள உத​வி​யது.​ ​

அதன்பின்பு சென்​னை​யில் டாக்​டர் எம்மா நடத்​தும் கல்​வி​நி​று​வ​னத்​தில் கவுன்சி​லிங் கோர்ஸ் படித்​தேன்.​ இவை எல்​லா​மும் சேர்ந்​து​தான் குழந்தை வளர்ப்பு தொடர்​பான புத்​த​கத்தை எழுத எனக்​குத் துணிச்​சல் கொடுத்​தது.​

பொது​வா​கப் பெரும்​பா​லான குடும்​பங்​க​ளில் குழந்​தை​கள் சொல்​வதை யாரும் கேட்​காத சூழ்​நி​லையே இருக்​கி​றது.​ குழந்​தை​கள் என்ன நினைக்​கி​றார்​கள் என்​ப​தைத் தெரிந்து கொள்​ளவே பல பெற்​றோர் விரும்​பு​வ​தில்லை.​ தான் சொல்​வ​தைக் கேட்டு நடக்​கவே குழந்​தை​கள் இருப்​ப​தாக அவர்​கள் நினைக்​கி​றார்​கள்.​

நிறை​யப் பெற்​றோர் தங்​க​ளு​டைய குழந்​தை​கள் தாங்​கள் சொல்​வ​தைக்
கேட்​ப​தில்லை என்று சொல்​கி​றார்​கள்.​ ஆனால் குழந்​தை​கள் சொல்​வதை நாம் கேட்​டால்​தான் நாம் சொல்​வ​தைக் குழந்​தை​கள் கேட்​பார்​கள் என்​பது இவர்​க​ளுக்​குத் தெரி​வ​தில்லை.​

இன்று நிலைமை மாறி​விட்​டது.​ பெற்​றோ​ரை​வி​டக் குழந்​தை​கள்
அறி​வா​ளி​க​ளாக இருக்​கி​றார்​கள்.​ பெற்​றோ​ருக்​குத் தெரி​யாத பல விஷ​யங்​கள் இப்​போது குழந்​தை​க​ளுக்​குத் தெரிந்​தி​ருக்​கின்​றன.​ எனவே குழந்​தை​க​ளைப் பெற்​றோர் மதித்து நடக்க வேண்​டும்.​


குழந்​தை​களை மதிக்க வேண்​டும்! -மணிமேகலை 17ko


பெற்​றோ​ருக்கு ஆயி​ரம் தேவை​கள் இருக்​க​லாம்.​ ஆனால் குழந்​தை​க​ளுக்கு ஒரே தேவை​தான் இருக்​கி​றது.​ நல்ல பெற்​றோர்​தாம் அவர்​க​ளுடைய ஒரே தேவை.​குழந்​தை​க​ளைக் கேள்வி கேட்க அனு​ம​திக்க வேண்​டும்.​ அப்​போ​து​தான் அவர்​க​ளு​டைய அறி​வுத்​தி​றன் வள​ரும்.​ கேள்வி கேட்​கும்
குழந்​தை​க​ளி​டம் கோப​மாக எரிந்​து​வி​ழுந்​தால் அவர்​கள் கேள்​வி​களே கேட்​க​மாட்​டார்​கள்.​ ஏதா​வது கேட்​டால் திட்​டு​வார்​கள் என்று பயந்து கொண்டே இருப்​பார்​கள்.​ இத​னால் அவர்​கள் பேச​மாட்​டார்​கள்.​ புதிய விஷ​யங்​க​ளைத் தெரிந்து கொள்ள முடி​யா​மல் போய்​வி​டும்.​

பெற்​றோர் குழந்​தை​களை அடிக்​கக் கூடாது.​ பெரி​ய​வர்​கள் தவறு செய்​தால் நாம் அவர்​களை அடிப்​ப​தில்லை.​ ஏனென்​றால் அவர்​கள் நம்​மைத் திருப்பி அடித்​து​வி​டு​வார்​கள்.​ ஆனால் குழந்​தை​கள் தவறு செய்​தால் அடித்து
விடு​கி​றோம்.​ ஆனால் யார் வேண்​டு​மா​னா​லும் தவறு செய்​ய​லாம்.​ எனவே குழந்​தை​கள் தவறு செய்​து​விட்​டது தெரிய வந்​தால்,​​ அந்த நேரத்​தில் ஒன்​றும் சொல்​லா​மல் இருந்​து​விட்டு,​​ பிறகு நிதா​ன​மாக அதைப் பற்றி அவர்​க​ளி​டம் பேச வேண்​டும்.​

சில குழந்​தை​கள் பள்​ளியி​லி​ருந்து பிற பிள்​ளை​க​ளின் பென்​சில்,​​ ரப்​பர் போன்​ற​வற்றை வீட்​டிற்கு எடுத்​துக் கொண்டு வந்​து​வி​டு​வார்​கள்.​ அதைப் பெரிய திருட்​டுக் குற்​றம் போல நினைத்து சில பெற்​றோர் கடு​மை​யா​கத் தண்​டித்​து​வி​டு​வார்​கள்.​ ஆனால் அப்​ப​டிச் செய்​யக் கூடாது.​ "உன்​னு​டைய பென்​சிலை உன்​னு​டன் படிக்​கும் வேறு யாரா​வது எடுத்​துக் கொண்​டால் நீ எப்​படி
வருத்​தப்​ப​டு​வாய்?​ அது​மா​தி​ரி​தானே அவர்​க​ளும் வருத்​துப்​ப​டு​வார்​கள்?​' என்று நிதா​ன​மா​கப் பேசிப் புரிய வைத்​தால் அவர்​கள் அதற்​குப் பின்பு ஒரு​நா​ளும் பிறர் பொருளை எடுத்​து​வ​ர​மாட்​டார்​கள்.​ ​

குழந்​தை​க​ளி​டம் எப்​போ​தும் அதைச் செய்​யக் கூடாது,​​ இதைச் செய்​யக் கூடாது என்று பெற்​றோர் சிலர் ஆணை​யிட்​டுக் கொண்​டே​யி​ருப்​பார்​கள்.​ ஆனால் அதே குழந்தை சிறப்​பான செயல் ஒன்​றைச் செய்​யும்​போது பாராட்​ட​மாட்​டார்​கள்.​

வேலை முடிந்து வீட்​டுக்கு வரும் அப்பா,​​ டிவி பார்த்​துக் கொண்​டி​ருக்​கும் குழந்​தை​யைப் பார்த்து,​​ டிவி பார்க்​கக் கூடாது என்​பார்.​ ஆனால் படித்​துக் கொண்​டி​ருக்​கும் குழந்​தை​யைப் பார்த்து ஒன்​றும் சொல்​லா​மல்
போய்​வி​டு​வார்.​ டிவி பார்ப்​ப​தைக் கூடாது என்று சொல்​லும்​போது படித்​துக் கொண்​டி​ருக்​கும் குழந்​தை​யைப் பாராட்​டும்​வி​த​மா​கப் பேச வேண்​டாமா?​ "படிக்​கி​றியா?​ குட் இன்​னும் நல்​லாப் படி' என்று சொன்​னால் குழந்​தை​க​ளின் மன​தில் மகிழ்ச்சி வந்​து​வி​டும்.​ இன்​னும் ஆர்​வத்து​டன் படிப்​பார்​கள்.​ ​

இப்​போது பள்​ளி​க​ளில் நிறை​யப் போட்​டி​கள் வைக்​கி​றார்​கள்.​ இந்​தப்
போட்​டி​க​ளில் கலந்து கொள்​ளும் எல்​லாக் குழந்​தை​க​ளுமே வெற்றி பெற்​று​விட முடி​யாது.​ தனது குழந்தை போட்​டி​யில் வெற்றி பெற​வில்லை
என்​ப​தற்​காக வெற்றி பெற்ற குழந்​தை​யு​டன் ஒப்​பிட்​டுத் திட்​டக் கூடாது.​
அப்​ப​டிச் செய்​தால் குழந்​தை​க​ளின் மனது பாதிக்​கப்​ப​டும்.​
தன்​னம்​பிக்கை குலைந்​து​போ​கும்.​

அதை​விட எவ்​வ​ளவோ பிள்​ளை​கள் போட்​டி​யில் பங்​கேற்​கப் பயப்​பட்​டுக் கொண்​டி​ருக்​கும்​போது தைரி​ய​மா​கப் போட்​டி​யில் பங்​கெ​டுத்​ததே பெரிய
விஷ​யம் என்​ப​தாக அவர்​க​ளி​டம் பேச வேண்​டும்.​ அப்​ப​டிப் பேசி​னால்​தான் அவர்​கள் அடுத்​து​வ​ரும் போட்​டி​க​ளில் உற்​சா​க​மா​கப் பங்​கெ​டுப்​பார்​கள்.​

நான் எழு​திய இந்​தப் புத்​த​கத்​தில் குழந்​தை​கள் பேசு​வ​தைக் காது கொடுத்​துக் கேட்க வேண்​டும் என்​ப​தற்கே அழுத்​தம் கொடுத்​தி​ருக்​கி​றேன்.​ இன்​னும் குழந்தை வளர்ப்பு தொடர்​பாக ஏரா​ள​மான விஷ​யங்​களை எழுத முடி​யும்.​ எழு​து​வேன்.​

இது​த​விர நாங்​கள் ஆரம்​பித்​துள்ள "வே.​ தங்​கப்​பாண்​டி​யன் அறக்​கட்​டளை' வேலை​க​ளி​லும் ஆர்​வ​மு​டன் ஈடு​பட்டு வரு​கி​றேன்.​ பள்ளி,​​ கல்​லூரி அள​வில் நன்​றா​கப் படிக்​கும் வச​தி​யில்​லாத மாணவ,​​ மாண​வி​க​ளுக்கு கல்​விக் கட்​ட​ணம் செலுத்​து​வது உட்​பட பல உத​வி​களை இதன்​மூ​லம் செய்து
வரு​கி​றோம்.​

என் அக்கா வளர்​மதி அமெ​ரிக்​கா​வில் இருக்​கி​றார்.​ அண்​ணன் ரவி ஐஜி​யாக இருக்​கி​றார்.​ இன்​னோர் அண்​ணன் செந்​த​மிழ்ச் செல்​வன் ​ கூட்​டு​ற​வுத்​து​றை​யில் கூடு​தல் பதி​வா​ள​ரா​கப் பணி​பு​ரிந்து வரு​கி​றார்'' என்​றார்.​

மணிமேகலையின் கண​வர், தமி​ழக பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர் தங்​கம் தென்​ன​ரசு !




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

குழந்​தை​களை மதிக்க வேண்​டும்! -மணிமேகலை Empty Re: குழந்​தை​களை மதிக்க வேண்​டும்! -மணிமேகலை

Post by Manik Thu Feb 04, 2010 8:49 pm

அருமையான கட்டுரை யுவா உங்களின் நிஜ கதை மாதிரியே இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

குழந்​தை​களை மதிக்க வேண்​டும்! -மணிமேகலை Empty Re: குழந்​தை​களை மதிக்க வேண்​டும்! -மணிமேகலை

Post by snehiti Thu Feb 04, 2010 8:58 pm

பெற்​றோ​ருக்கு ஆயி​ரம் தேவை​கள் இருக்​க​லாம்.​ ஆனால் குழந்​தை​க​ளுக்கு ஒரே தேவை​தான் இருக்​கி​றது.​ நல்ல பெற்​றோர்​தாம் அவர்​க​ளுடைய ஒரே தேவை.​

சிறந்த கட்டுரை பதிந்தமைக்கு நன்றி.யுவா.


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

குழந்​தை​களை மதிக்க வேண்​டும்! -மணிமேகலை Empty Re: குழந்​தை​களை மதிக்க வேண்​டும்! -மணிமேகலை

Post by Manik Fri Feb 05, 2010 2:33 pm

சிநேகிதிக்கும் தேவை போல அப்படியா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

குழந்​தை​களை மதிக்க வேண்​டும்! -மணிமேகலை Empty Re: குழந்​தை​களை மதிக்க வேண்​டும்! -மணிமேகலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum