புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_m10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_m10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_m10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10 
11 Posts - 4%
prajai
கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_m10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10 
9 Posts - 4%
Jenila
கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_m10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_m10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_m10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_m10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_m10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_m10கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'!


   
   
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Feb 02, 2010 11:26 am

கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! Goojje-logo

கூகுள் இணையதளம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள யுடியூப் ஆகியவற்றின் போலியான இணையதளங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது.

கூகுளின் போலி தளத்திற்கு கூஜி என பெயரிடப்பட்டுள்ளது. யுடியூப் இணையதளத்தின் போலிக்கு யுடியூப்சிஎன் என்று பெயரிட்டுள்ளனர்.

யுடியூப் இணையதளம் சீனாவில் கடந்த 2008ம் ஆண்டு தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

கூஜி இணையதளத்தில் கூகுள் நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

கூஜி என்றால் சீன மொழியில் சகோதரி என்று பொருளாம். கூஜி இணையதளத்தின் லோகோவுக்கு கீழ் இடம் பெற்றுள்ள 'பன்ச் டயலாக்'கில், 'சகோதரிக்காகத்தான் சகோதரன். சகோதரியை இன்னும் நேசிக்கும் சகோதரன்' என்று குத்தலாக குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது கூகுள் என்பதை சகோதரனாகவும், அவனால் நேசிக்கப்படும் சகோதரியாக கூஜியையும் காட்டுகிறார்களாம்.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் சீனாவில் பெரும் சிக்கலை சந்தித்தது. கூகுள் தளத்தை உளவு பார்க்கத் தொடங்கியது சீன அரசு. மேலும், கூகுள் இணையதளத்திற்கு சென்சாரும் விதித்தது. கூகுள் இணையதளத்திற்குள் வைரஸ்களையும் அனுப்பியதால் கடுப்பாகிப் போன கூகுள், தனது அலுவலகங்களை சீனாவிலிருந்து இடம் மாற்றப் போவதாக எச்சரித்தது.

இதையடுத்து சீன அரசு சற்று இறங்கி வந்தது.

இந் நிலையில், தற்போது கூகுளை அப்படியே காப்பி அடித்து போலி சர்ச் என்ஜின் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. கூகுள் இணையதளத்தின் லோகோ மற்றும் பக்கங்கள் அப்படியே டிட்டோவாக கூஜி தளத்தில் உள்ளன.ட

இதேபோல யுடியூபில் உள்ளதைப் போலவே அப்படியே காப்பி அடித்து, YouTubecn.com இணையதளம் வெளியாகியுள்ளது. ஒரிஜினல் யுடியூபில் உள்ள அத்தனையும் அப்படியே இதிலும் இடம் பெறுகிறது. மேலும், சீனாவில் தடை செய்யப்பட்ட யுடியூப் வீடியோக்களும் இதில் கிடைக்கின்றன.

இந்த இரண்டு இணையதளங்களுமே ஒரே நாளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கலிபோர்னியா- பெர்க்லி பல்கலைக்கழகத்தின் பெர்க்லி சீனா இன்டர்நெட் திட்ட இயக்குநர் ஜியாவோ குயிங் கூறுகையில், இது கூகுள் நிறுவனத்தின் சொத்துரிமைப் பிரச்சனை மற்றும் சீன தணிக்கை பிரசசினை சம்பந்தப்பட்டதாகும்.

இந்த இரண்டு சவால்களையும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கூஜி மற்றும் யுடியூப்சிஎன் ஆகியவை சந்தித்தாக வேண்டும். இதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள் என்று உறுதியாக கூற முடியாது. எனவே இந்த இரு தளங்களும் நீண்ட நாள் நீடிக்கும் என்பதையும் சொல்ல முடியாது என்றார்.

இந்த இரு இணையதளங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதுவரை இவற்றை தடை செய்யவோ, முடக்கவோ சீன அரசு நடவடிக்கை எதையும் எடுக்காமல் உள்ளது.

சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இணையதளங்கள் மீது சீனாவின் தேசிய காப்புரிமை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அப்படியே அப்பட்டமாக கூகுள் மற்றும் யுடியூபின் இணையதளங்களை காப்பி அடித்து வெளியாகியுள்ள கூஜி மற்றும் யுடியூப் சிஎன் ஆகியவை குறித்து அது மெளனமாக இருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜெசிகா பவல் கூறுகையில், அந்த இணையதளங்களுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்த போலி இணையதளங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீனாவின் நடவடிக்கை கவலை தருகிறது. இன்டர்நெட் சுதந்திரத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.கூகுள் மீதான சீனாவின் கட்டுப்பாடுகள், நெருக்குதல்கள் குறித்து சீன வெளியுறவு அமைச்சருடன் பேசியுள்ளேன். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. பிரச்சினை விரைவில் தீரும் என நம்புகிறேன் என்றார்.

போலி பொருட்களை படு அப்பட்டமாக வெளியிட்டு காசு பார்ப்பதில் சீனா பெரிய கில்லாடியாகும். ஏற்கனவே இந்தியாவின் 'பல்சர்' பைக்கை காப்பி அடித்து அப்படியே அதே மாடலில் வெளியிட்டு அதற்கு 'குல்சர்' என்று பெயரிட்டு விற்றவர்கள்தான் சீனாக்காரர்கள்.

ஆனால் உலக அளவில் முன்னோடியாக உள்ள கூகுளை அப்படியே காப்பி அடித்துள்ள அவர்களின் செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து அனேகமாக பேஸ்புக்கைக் காப்பி அடித்து ஒரு தளம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக