ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Today at 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Today at 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Today at 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Today at 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Today at 5:30 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by ayyasamy ram Today at 5:29 am

» தடுமாறிய யோகி!
by ayyasamy ram Today at 5:28 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Today at 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Today at 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Today at 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Today at 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 5:20 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by ayyasamy ram Today at 5:19 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Today at 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Today at 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Today at 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Today at 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Today at 5:14 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:11 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 9:50 pm

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by T.N.Balasubramanian Yesterday at 7:19 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 1:45 pm

» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 12:01 pm

» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 am

» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 6:51 am

» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm

» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm

» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm

» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm

» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm

» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm

» சுவாமி ஜாலியானந்தா
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:46 pm

» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm

» சுற்றுச்சூழல் காக்க காஜல் அறிவுரை
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:24 pm

» பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார்.
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:16 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(507)
by Dr.S.Soundarapandian Sat Apr 17, 2021 12:36 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Sat Apr 17, 2021 12:00 pm

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:52 am

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:50 am

» பூமியை மீட்ட பூவராகப் பெருமாள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:07 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:40 am

» முத்தம் : உதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:24 am

» 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:10 am

» ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை புற்றுநோயால் உயிரிழப்பு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:08 am

» ஒலியும் படைப்பும்..!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:52 pm

Admins Online

தமிழ் அகராதி - இ

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

தமிழ் அகராதி - இ - Page 6 Empty தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:08 am

First topic message reminder :

இ - தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; ஒரு சுட்டெழுத்து (எ.கா - இவன், இவ்வீடு); ஏவல்; வியங்கோள் ஒருமை வினைமுற்று விகுதி (எ.கா - செல்லுதி, வருதி); வினையெச்ச விகுதி (எ.கா - நாடிச் சென்றான்); பெண்பால் பெயர் விகுதி (எ.கா - மனைவி); தொழிற்பெயர் விகுதி (எ.கா - வெகுளி); பறவைகளுள் ஆந்தையைக் குறிப்பது; அண்மைச்சுட்டு.
இஃது - இது; அஃறிணை ஒருமைச்சுட்டு:அண்மைச்சுட்டு
இக்கட்டு - துன்பம்; நெருக்கடி; நிலை; இடுக்கண்; தடை; இடையூறு; வெல்லக்கட்டி
இக்கு - கரும்பு; சாராயபானம்; இடை: கரும்பு: .இடுக்கி: கள்: தேன்: சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு.
இக - தாண்டிச் செல்; கடந்து செல்; பிரிந்து செல்; நீங்கு; போ [இகத்தல்]

இகபரம் - இம்மையும் மறுமையும்
இகம் - இம்மை; இவ்வுலகம்
இகல் - பகை; விரோதம்; போர்; வலிமை; சிக்கல்; புலவி: அளவு
இகழ் - அவமதித்தல் செய்; மற; கவனக் குறைவகு [இகழ்தல், இகழ்ச்சி]; நிந்தை செய்
இகழ்வு - நிந்தை

இகுளை - தோழி; சுற்றம்; நட்பு; உறவு
இங்கண் - இவ்விடம்
இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு.
இங்கு - இவ்விடம்; இவ்விடத்தில்
இங்குலிகம் - (பாதரச -கந்தகக் கூட்டுப் பொருளான) சாதிலிங்கம்

இங்கே - இங்கு; இவ்விடத்தில்
இங்ஙன், இங்ஙனம் - இங்கு; இவ்வாறு
இச்சகம் - முகத்துதி; முகமன்: நேரில் புகழ்ந்துரைப்பது: பெறக் கருதிய தொகை.
இச்சாசத்தி (இச்சாசக்தி) - (சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி; விருப்பாற்றல்
இச்சை - விருப்பம்; ஆசை; தொண்டு; வினா: அறியாமை

இசி - ஒடித்தல்; உரித்தல்; சிரிப்பு; உரிக்கை: ஒடிக்கை
இசிப்பு - இழுத்தல்; நரம்பு; வலிப்பு; சிரிப்பு; இழுப்பு.
இசின் - செய்யுளில் வரும் ஓர் அசை நிலை; ஓர் இறந்தகால இடைநிலை; ஓர் அசைச் சொல்.
இசும்பு - ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கரடு முரடான வழி; செங்குத்துச் சரிவு
இசை - ஓசை; ஒலி; பாட்டு; புகழ்; சொல்; பொருத்தம்; இசைவு; இலாபம்; ஒலி செய்; பாட்டு பாடு; இசைக் கருவியை வாசி; சொல்லு; பேசு; பொருந்து; கிடைக்கப்பெறு; சக்திக்கு உட்பட்டிரு; உண்டுபண்ணு; போன்றிரு; தாராளமாக வழங்கு [இசைதல், இசைத்தல்]; பொன்: ஊதியம்: நரம்பில் பிறக்கும் ஓசை:இனிமை: இணக்கம்: பண்கூடி நிற்பது.

இசைகேடு - ஸ்வரத்தில் பிழை; அபகீர்த்தி; சீர்கேடான நிலை; இகழ்வு: பழியுண்டாதல்: இசை பாடுவதில் தவறு உண்டாதல்.
இசைத் தமிழ் - (முத்தமிழுள் ஒன்றான) பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப்பாட்டு
இசைவாணர் - பாடகர்; இசை வல்லோர்
இசைவு - பொருத்தம்; தகுதி; உடன்பாடு; பெருந்துகை; ஏற்றது
இஞ்சி - இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


தமிழ் அகராதி - இ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:36 am

இளம்படியார் _ இளம் பெண்கள் .
இளம் பதம் _ இளமை முற்றாத நிலை : உருகு பதம் : வேகாப்பதம்.
இளம் பருவம் _ இள வயது : மெல்லிய பதம்.
இளம் பாகம் _ உருகு பதம் : வேகாப்பதம்.
இளம்பிள்ளை வாதம் _ குழந்தைகளுக்கு வரும் ஒரு வகை நோய்.இளம் பிறை _ பிறைச்சந்திரன்.
இளம்புல் _ முதிராத புல் : அறுகு.
இளம் பெண் _ இளம் பருவத்துப் பெண் : கற்றாழை.
இளவட்டம் _ இளம் பருவத்தினர்.
இளவணி _ காலாட்படை.
இளவரசன் _ இராசகுமாரன் : பட்டத்திற்குரிய அரச குமாரன் .
இளவரசு _ பட்டத்திற்குறிய அரசகுமாரன் : இளமையான அரசமரம்.
இளவல் _ தம்பி : குமரன் : இளைஞன்.
இளவாடை _ வடக்கிலிருந்து வரும் மென் காற்று.
இளவாளிப்பு _ ஈரம்.இளவுச்சி _ உச்சிப் பொழுதுக்கு அணித்தான முற்பொழுது.
இளவுறை _ இளந்தயிர்.
இளவெயில் _ காலை வெயில் : முதிராத வெயில் .
இளவேனில் _ வசந்த காலம் : சித்திரை வைகாசி மாதங்கள்.
இளவிருதம் _ நன்னீர்க் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி.இளி _ இகழ்ச்சி : குற்றம் : சிரிப்பு :இகழ்ச்சிக் குறிப்பு : யாழின் நரம்புகளுள் ஒன்று : இழிவு.
இளிகண் _ பீளைக் கண்.
இளிச்சக கண்ணி _ காமக் குறிப்போடு பிறரை நோக்கும் தன்மையுடையவள்.
இளிச்சவாயன் _ எப்போதும் பல்லைக் காட்டுவோன்: எளிதில் ஏமாற்றுப்படுபவன்: நுட்ப புத்தியில்லாதவன்: ஏமாளி.
இளிதல் _ இகழப்படுதல் : எளியனாதல்.இளித்தல் _ பல்லைக்காட்டுதல் : கேலி செய்தல்.
இளிந்தகாய் _ இணுங்கின காய் : பாக்கு.
இளிப்படுதல் _ அகப்படுதல் : எளிமையாதல்.
இளிப்பு _ பல்லிளிக்கை : பல் காட்டுதல் : இழிவு : நிந்தை .
இளிம்பு _ திறமையின்மை .


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:38 am

இளிவரல் _ இழிவு : இழிப்புச் சுவை.
இளிவரவு _ இகழ்ச்சி : இழிதொழில் : சிறுமை.
இளிவு _ இழிவு : அருவருப்பு : நிந்தை.
இளை _ காவற்காடு : கட்டு வேலி : தலைக்காவல் : மேகம் : காவல் : இளமை : இளையாள் : தம்பி : தங்கை : நலிவு : பசு : திருமகள் : கோழை : புதன் மனைவி.
இளைச்சி _ தங்கை.இளைஞன் _ இளவல் : சிறுவன் : இளையோன்.
இளைது _ இளையது : முதிராதது .
இளைத்தல் _ சோர்தல் : தளர்தல் : மெலிதல் : இரங்கல் : பின்னிடுதல் : வளங்குன்றுதல்.
இளைத்தோர் _ எளியவர்.
இளைப்பாறுதல் _ களைப்பு நீங்குதல்: ஓய்திருத்தல் : இளைப்பு தீர்தல்.இளைப்பாற்றுதல் _ களைப்பைப் போக்குதல்.
இளைப்பு _ களைப்பு : சோர்வு : வருத்தம் : மெலிவு : தொய்வு.
இளையதம்பி _ இளையவனுக்கு இளையவன்.
இளைய பிள்ளையார் _ முருகக் கடவுள்.
இளைய பெருமாள் _ இலக்குமணன்.
இளையர் _ இளைஞர் : பணியாள் .
இளையவள் _ தங்கை : திருமகள் : இளைய மனைவி: இளமை யுடையவள்.
இளையவன் _ தம்பி : ஆண்டில் குறைந்தவன்.
இளையவர் _ பெண்கள்.
இளையள் _ திருமகள் :தங்கை : பின்பிறந்தவள்.இளையன் _ இளையவன் : தம்பி.
இளையாள் _ சிறியவள் : சீதேவி : இளையமனைவி.
இளையாழ்வார் _ இராமானுசர் : இலக்குமணன்.
இளையெள் _ முற்றாத எள்.
இளைவலி _ கரிக்காடு .


இற _ இறால் : அழிசெல் : நட: கட: மிகு: இற என் ஏவல்.
இறகர் _ சிறகு : பறவையிறகு.
இறகு பேனா _ இறகாலான எழுது கோல்.
இறக்கம் _ சரிவு : இறங்குகை : நிலை தவறுகை : இறப்பு : உணவு முதலியன உட் செல்லுகை.
இறக்கல் _ இறக்குதல் : இறங்கச்செய்தல் : கீழ்ப்படுத்தல் : தாழ்த்தல் : கெடுதல்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:38 am

இறக்குமதி _ சரக்குகளைத் துறைமுகத்திலிருந்து இறக்குதல்: வெளியிலிருந்து பொருளைத் தருவித்தல்.
இறக்கை _ சிறகு :இறத்தல் : கிணற்றின் இரு புறங்களில் உள்ளதுணைச்சுவர்.
இறங்கண்டம் _ ஒரு வகை அண்ட நோய்.
இறங்கர் _ குடம்.
இறங்கல் _ ஒரு வகை நெல்.இறங்குதல் _ தாழ்தல் : இழிதல்: சரிதல் :கீழ்ப்படுதல் : நிலைகுலைதல்.
இறங்குதுறை _ மக்கள் இயங்கிப் பயன் படுத்தும் நீர்த்துறை.
இறங்கு பொழுது _ பிற்பகல்.
இறங்கு முகம் _ தணியும் நிலைமை.
இறங்கொற்றி _ அனுபவ ஒற்றி.இறஞ்சி _ ஆடைவகை: அவுரி.
இறடி _ கருந்தினை : தினை.
இறட்டுதல் _ முகந்து வீசுதல்.
இறத்தல் _ சாதல் : மிகுதல் : கடத்தல் : கழிதல் : நெறி கடந்து செல்லுதல் : நீங்குதல்.
இறந்த காலம் _ கடந்த காலம் : சென்ற காலம்.
இறந்தது விலக்கல் _ நூல் செய்வோன் மறைந்து போய் வழக்கில் இல்லாதவற்றை நீக்குதல்.
இறந்தவழக்கு _ வழக்கில் இல்லாதது : வீழ்ந்த வழக்கு.
இறந்தன்று _ சிறந்தது : மிக்கது.
இறந்திரி _ இத்திமரம்.
இறந்து பாடு _ இறந்துபடுதல் : சாவு.
இறப்ப _ மேன்மேலும்: மிகவும்.
இறப்பு _ மிகைச்செய்கை : சாவு : அத்திக்கிரமம் : போக்கு : உலர்ந்த பொருள் :இறந்தகாலம்.
இறப்பை _ இமையிதழ்.
இறலி _ இத்திமரம் : மருதமரம் : கொன்றை மரம் : ஏழுதீவுள் ஒன்று.
இறல் _ ஒடிதல் : கெடுதி : இறுதி : கிளிஞ்சல்.
இறவம் _ இறால் : மீன்.
இறவாரம் _ தாழ்வாரம்.
இறவாணம் _ இறவானம் : தாழ்வாரத்துக்கூரையின் முன் பாகம் : தாழ்வாரம் : ஒரு தோற்கருவி.
இறவி_ சாவு : இறத்தல்.
இறவின்மை _ அழவின்மை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:39 am

இறவு _ சாவு: முடிவு : நீக்கம் : மிகுதி : இறால் :மீன் : தேன்கூடு: எல்லை.
இறவுள் _ குறிஞ்சி நிலம்.
இறவுளர் _ குறிஞ்சி நில மக்கள் .
இறவை _ ஏணி : இறை கூடை : விரற்புட்டில்.
இறாஞ்சுதல் _ பறவை பறந்து பாய்தல் : பறித்தல் : தட்டியெடுத்தல்.இறாட்டாணியம் _ இடுக்கண்: துன்பம் : வருத்தம்.
இறாட்டுதல் _ பகைத்தல் : உரைசுதல்.
இறாட்டுப் பிறாட்டு _ சச்சரவு .
இறாத்தல் _ ஒரு நிறையளவு : மீன் தீர்வைத்துறை.
இறாய்த்தல் _ பின் வாங்குதல்.
இறால் _ இறால் மீன் : இடப ராசி: எருது : கார்த்திகை நாள் : தேன்கூடு.
இறாவுதல் _ வதக்கி மயிர் போகச்சீவுதல் .
இறீய _ கெடுக .
இறு _ ஒடி : கெடு.
இறுகங்கியான் _ கரிசலாங்கண்ணி .இறுக நீக்குதல் _ கைவிடுதல்.
இறுகரை _ இடிகரை.
இறுகல் _ சுருங்குதல் : கடினமாதல் : பதமராக மணியின் குற்றங்களுள் ஒன்று .
இறுகால் _ ஊழிக்காற்று.
இறுகுதல் _ கெட்டியாதல் : அழுத்த மாதல் : உறைதல் : உறுதியாதல் : நிலைபெறுதல் : மரகதக் குற்றங்களுள் ஒன்று: மூர்ச்சித்தல்.
இறுக்கம் _ அழுத்தம் : நெருக்கம் : புழுக்கம் : தட்டுப்பாடு.
இறுக்கர் _ பாலை நிலத்தவர்.
இறுக்கன் _ ஈயாதவன் : உலோபி .
இறுக்கு _ இறுக்கிய முடிச்சு : ஒடுக்குகை.
இறுக்குதல் _ அழுந்தக் கட்டுதல் : இறுக உடுத்தல் : ஒடுக்குதல் :உள்ளழுத்துதல் : உறையச் செய்தல்.இறுக்குவாதம் _ உடலை வளைத்துக் கொள்ளும் ஒரு வகை வாத நோய்.
இறுங்கு _ காக்காய்ச் சோளம் : சோள வகை.
இறுதல் _ ஒடிதல் : முறிதல் : கெடுதல் : அழிதல் : முடிதல் : தளர்தல் : சாதல்.
இறுதி _ முடிவு : சாவு : வரையறை.
இறுதிக்காலம் _ இறப்புக்காலம் : ஊழிக்காலம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:39 am

இறுதி வேள்வி _ ஈமக் கடன் செய்கை:
இறுத்தல் _ சொல்லுதல் : தங்குதல் : ஒடித்தல் : வடித்தல் : விடைகூறுதல் : முடித்தல் : வெட்டுதல் : அழித்தல் : வீழ்த்துதல்: எறிதல் : வினாவுதல் : தைத்தல் .
இறுத்தருதல் _ வருதல்.
இறுநாகம் _ இலாமிச்சை.
இறுப்பு _ தங்குகை : குடியிறை : கடன் செலுத்துகை.இறும்பி _ எறும்பு.
இறும்பு _ குறுங்காடு : சிறுதூறு: சிறு மலை : தாமரைப்பூ : காந்தட் பூண்டு :வியப்பு.
இறும்பூது _ வியப்பு :பெருமை : மலை : தளிர் : சிறுதூறு : தாமரைப்பூ.
இறுமாத்தல் _ மிக மகிழ்தல்: பெருமை பாராட்டுதல் : செருக்கடைதல் : நிமிர்தல்.
இறுமாப்பு _ பெருமிதம் : பெருமை பாராட்டுகை : செருக்கு : நிமிர்ச்சி.இறுமுறி _ தீர்ந்து போன பத்திரம் : கிழிந்து போன பத்திரம்.
இறுவரை _ முடிவு : அழியுங்காலம் : பெரிய மலை : பக்க மலை : மலையின் அடிவாரம்.
இறுவரையம் _ எல்லை : தற்சமயம்.
இறுவாக _ இறுதியாக.
இறுவாய் _ முடிவு : இறப்பு : ஈறு.இறை _ உயரம் : தலை : கடவுள் : தலைவன் : அரசன் : உயர்ந்தோன் : மூத்தோன் : பெருமையிற் சிறந்தோன் : கணவன் : பறவை யிறகு : கடன் : மறு மொழி : மணிக்கட்டு : குடியிறை : சிறுமை : அற்பம் : கால அளவு : கால விரைவு : சிவபிரான் : பிரமன் : மாமரம் : இறைத்து விடு : தூவு : எறி : வீசு : தங்கு.
இறைகுடி _ வரி கொடுப்போன்.
இறை கூடுதல் _ அரசாளுதல்.
இறை கூர்தல் _ தங்குதல்.
இறைக் கட்டு _ வரி.இறைக்குத்து _ சாகும் தறுவாயில் கண் விழி அசைவற்றிருக்கை.
இறைசூதன் _ நான்முகன்.
இறைச்சி _ மாமிசம் : கருப்பொருள் : விருப்பமானது.
இறைச்சிப் பொருள் _ கருப் பொருளின் உள்ளே கொள்ளும் பொருள்.
இறைச்சிப் போர் _ உடம்பு .இறைஞ்சலர் , இறைஞ்சார் _ பகைவர்.
இறைஞ்சி _ மரவுரி.
இறைஞ்சு _ வளை : வணங்கு .
இறைஞ்சுதல் _ தாழ்தல் : வணங்குதல் : வளைதல்.
இறைதல் _ சிதறிப் போதல் : சிந்துதல்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:39 am

இறைதிரிதல் _ அரச நீதி திறம்பல்.
இறைத்தல் _ நீர் பாய்ச்சுதல் : நிறைத்தல் : சிதறுதல் : மிகுதியாகச் செலவிடுதல்.
இறைப்பிளவை _ கைவிரல் இடுக்கில் வரும் புண்.
இறைப்பு _ நீர் இறைக்கை.
இறை மகள் _ தலைவி : அரசன் மகள் : துர்க்கை.இறை மகன் _ அரசன் : அரசன் மகன் : தலைவன்.
இறைமரம் _ ஏற்ற மரம் : இறை கூடையைத்தாங்கி நீர் முகந்து இறைக்கும் மரம்.
இறைமாட்சி _ அரசனின் நற்குண நற்செயல் : அரசியல்.
இறைமை _ தலைமை : தெய்வத்தன்மை .
இறைமொழி _ வேதம் : மறுமொழி :இறைவன் அருளிய ஆகமம்.
இறையமன் _ யமனுக்கு மூத்தோன் : சனி.
இறையவன் _ கடவுள் : தேவர் தலைவன் : தலைவன்.
இறைமணி _ உருத்திராக்கம்.
இறைப்புப்பட்டரை _ கிணற்றுப்பாய்ச்சல் உள்ள நிலம்.
இறையிலி _ வரி நீக்கப்பட்ட நிலம்.இறையுணர்வு _ பதிஞானம் : இறைவனை உணரும் அறிவு.
இறையோன்_ கடவுள் : சிவன் : குரு : அரசன் : தலைவன்.
இறைவரை _ கணப்பொழுது.
இறைவன் _ தலைவன் : கடவுள் : சிவன் :குரு : திருமால் : பிரமன் : அரசன் : மூத்தோன் : கணவன் : சிவனார் வேம்பு.
இறைவி _ தலைவி : உமை.


இறைவை _ இறைகூடை : நீர் இறைக்கும் மரப்பத்தல் : ஏணி: புட்டில்.
இற்கிழத்தி _ மனைவி : இல்லக்கிழத்தி .
இற்செறிப்பு _ தலைவி வெளியே செல்லாது பாதுகாத்தல்.
இற்பரத்தை _ காமக் கிழத்தியாகக் கொண்ட பரத்தை.
இற்பாலர் _ நற்குடியிற் பிறந்தவர்.


இற்பிறப்பு _ உயர் குடிப்பிறப்பு.
இற்புலி _ பூனை.
இற்றி _ இத்தி.
இற்றிசை _ இல்லறம்.
இற்று _ இத்தன்மைத்து.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:39 am

இற்றுப்போதல் _ நைந்து போதல் : அழுகிப்போதல் : முரிந்து போதல்.
இற்றும் _ இன்னும் : மேலும்.
இற்றுவிழுதல் _ கெட்டுவிழுதல்: முரிதல்.
இற்றை _ இந்நாள் : இன்று : இன்றைக்கு .
இற்றைநாள் _ இன்று.இன _ இன்னவற்றை.
இனஎதுகை _ இன எழுத்தால் வரும் எதுகை : யாப்பு உறுப்பு.
இனக்கட்டு _ முறைமை பந்துக்கட்டு :உறவினர்களிடையே உள்ள நெருக்கம்.
இனங்காப்பார் _ ஆயர் : கோவலர்.
இனஞ்சனம் _ உற்றார் : உறவினர்.இனத்தான் _ உறவினன்.
இனமாற்றல் _ ஓரினக் கணக்கை மற்றோரினமாக மாற்றுதல்.
இனமுறை _ ஒத்த சாதி.
இனமோனை _ இன எழுத்தால் வரும் மோனை :யாப்பு உறுப்பு .
இனம் _ வகை : குலம் : சுற்றம் : சாதி : கூட்டம் : திரள் : உறுதிச்சுற்றம்.இனவழி _ மரபு வழி.
இனவழிக்கணக்கு _ பேரேடு.
இனவாரி _ இனம் இனமாய்.
இனன் _ சூரியன் : சுற்றம் : அரசன் : ஒத்தவன் : ஆசிரியன்.
இனா _ நகை : இகழ்ச்சி : வருத்தம் : துன்பம்.
இனாப்பித்தல் _ துன்ப முண்டாக்குதல்.
இனாம் _ நன்கொடை : பயன் நோக்காக் கொடை.
இனாம்தார் _ மானிய நிலத்துக்குரியவர்.
இனி _ இனிமேல் : இதுமுதல் : பின்பு .
இனிது _ நன்மை தருவது : நன்றாக : இனிமையுடையது.இனித்தல் _ இன்பமாதல் : தித்தித்தல்.
இனிப்பு _ மகிழ்ச்சி : தித்திப்பு.
இனிப்புக் காட்டுதல் _ அவா உண்டாக்குதல் : சுவையாதல் .
இனிமை _ இனிப்பு : இன்பம்.
இனியது _ இனிமையுடையது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:39 am

இனியர் _ இன்பம் தருபவர்: மகளிர்.
இனும் _ இன்னும் : மேலும்.
இனை _ இத்தனை : வருத்தம்.
இனைதல் _ வருந்துதல் : அஞ்சுதல் : இரங்குதல்.
இனைத்தல் _ வருத்துதல் : கெடுத்தல்.இனைத்து _ இத்தன்மைத்து.
இனைய _ இத்தன்மைய .
இனைவரல் _ இரங்குதல் : வருந்துதல்.
இனைவு _ இரக்கம் : வருத்தம்.
இன் _ இனிய :ஐந்தாம் வேற்றுமை உருபு :சாரியை :இறந்த கால இடைநிலை.இன் கண் _ இன்பம் : கண்ணோட்டம்.
இன்கவி _ மதுரகவி.
இன்சொல் _ இனிமை பயக்கும் சொல்.
இன்பச்செலவு _ சுற்றுலா: உல்லாசப்பயணம்.
இன்பம் _ மனமகிழ்ச்சி : இனிமை : சிற்றின்பம் : திருமணம் : நூற்பயன்களுள் ஒன்று.இன்பவுபதை _ அரசன் தன் அமைச்சரைத் தெரிந்து தெளியக் கொள்ளும் சோதனை.
இன்பன் _ கணவன்.
இன்பித்தல் _ மகிழ்ச்சியூட்டுதல்.
இன்பு _ இன்பம்.
இன்புறவு _ மகிழ்கை.
இன்மை வழக்கு _ இல் வழக்கு : இல்லதனை இல்லை என்கை.
இன்றி _ இல்லாமல்.
இன்றிய _ இல்லாத.
இன்றியமையாமை _ அவசியம்.
இன்று _ இந்த நாள் :இல்லை : இப்பொழுது .இன்ன _ இத்தன்மையான : இப்படிப்பட்டவை.
இன்னணம் _ இவ்விதம் : இவ்வாறு .
இன்னது _ இத்தன்மையது : இது.
இன்னம் _ இத்தன்மையுடையேம்: இன்னும் : இனிமேலும்.
இன்னயம் _ உபசாரமொழி.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:40 am

இன்னர் _ உற்பாதம் : இன்னல் : இத்தன்மையர்.
இன்னல் _ துன்பம் : தீமை :குற்றம்.
இன்னன் _ இத்தன்மையன்.
இன்னா _ துன்பம் : தீங்கு தருபவை: ஆகாது : கீழ்மையான : வெறுப்பு : இகழ்ச்சி.
இன்னாங்கு _ தீமை : கடுஞ்சொல் : துன்பம்.இன்னாது _ தீது : துன்பு.
இன்னாப்பு _ துன்பம்.
இன்னாமை _ தீமை :துயரம் : துன்பம்.
இன்னார் _ பகைவர்.
இன்னாரினியார் _ பகைவரும் நண்பரும்.இன்னாரினையார் _ இத்தன்மையுடையவர்.
இன்னாலை _ இலைக்கள்ளி மரம் .
இன்னான் _ துன்பம் செய்பவன்: இத்தன்மையன்.
இன்னிசை _ பண் :இன்ப ஓசை : இனிய பாட்டு.
இன்னிசை வெண்பா _ வெண்பாப் பாடல் வகை.இன்னியம் _ வாச்சியம் : இசைக்கருவிகள்.
இன்னியர் _ பாணர்.
இன்னிலை _ ஒரு நூல் : இனிய நிலை : இல்லறநிலை.
இன்னிளி _ இப்போதே.
இன்னும் _ மறுபடியும் : மேலும் : அன்றியும் .


இன்னுழி _ இன்ன இடத்து.
இன்னே _ இப்போதே.
இன்னோன் _ இப்படிப்பட்டவன்.


மூலம்: தமிழுலகம்.காம்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum