ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - இ

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

தமிழ் அகராதி - இ - Page 3 Empty தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:08 am

First topic message reminder :

இ - தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; ஒரு சுட்டெழுத்து (எ.கா - இவன், இவ்வீடு); ஏவல்; வியங்கோள் ஒருமை வினைமுற்று விகுதி (எ.கா - செல்லுதி, வருதி); வினையெச்ச விகுதி (எ.கா - நாடிச் சென்றான்); பெண்பால் பெயர் விகுதி (எ.கா - மனைவி); தொழிற்பெயர் விகுதி (எ.கா - வெகுளி); பறவைகளுள் ஆந்தையைக் குறிப்பது; அண்மைச்சுட்டு.
இஃது - இது; அஃறிணை ஒருமைச்சுட்டு:அண்மைச்சுட்டு
இக்கட்டு - துன்பம்; நெருக்கடி; நிலை; இடுக்கண்; தடை; இடையூறு; வெல்லக்கட்டி
இக்கு - கரும்பு; சாராயபானம்; இடை: கரும்பு: .இடுக்கி: கள்: தேன்: சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு.
இக - தாண்டிச் செல்; கடந்து செல்; பிரிந்து செல்; நீங்கு; போ [இகத்தல்]

இகபரம் - இம்மையும் மறுமையும்
இகம் - இம்மை; இவ்வுலகம்
இகல் - பகை; விரோதம்; போர்; வலிமை; சிக்கல்; புலவி: அளவு
இகழ் - அவமதித்தல் செய்; மற; கவனக் குறைவகு [இகழ்தல், இகழ்ச்சி]; நிந்தை செய்
இகழ்வு - நிந்தை

இகுளை - தோழி; சுற்றம்; நட்பு; உறவு
இங்கண் - இவ்விடம்
இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு.
இங்கு - இவ்விடம்; இவ்விடத்தில்
இங்குலிகம் - (பாதரச -கந்தகக் கூட்டுப் பொருளான) சாதிலிங்கம்

இங்கே - இங்கு; இவ்விடத்தில்
இங்ஙன், இங்ஙனம் - இங்கு; இவ்வாறு
இச்சகம் - முகத்துதி; முகமன்: நேரில் புகழ்ந்துரைப்பது: பெறக் கருதிய தொகை.
இச்சாசத்தி (இச்சாசக்தி) - (சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி; விருப்பாற்றல்
இச்சை - விருப்பம்; ஆசை; தொண்டு; வினா: அறியாமை

இசி - ஒடித்தல்; உரித்தல்; சிரிப்பு; உரிக்கை: ஒடிக்கை
இசிப்பு - இழுத்தல்; நரம்பு; வலிப்பு; சிரிப்பு; இழுப்பு.
இசின் - செய்யுளில் வரும் ஓர் அசை நிலை; ஓர் இறந்தகால இடைநிலை; ஓர் அசைச் சொல்.
இசும்பு - ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கரடு முரடான வழி; செங்குத்துச் சரிவு
இசை - ஓசை; ஒலி; பாட்டு; புகழ்; சொல்; பொருத்தம்; இசைவு; இலாபம்; ஒலி செய்; பாட்டு பாடு; இசைக் கருவியை வாசி; சொல்லு; பேசு; பொருந்து; கிடைக்கப்பெறு; சக்திக்கு உட்பட்டிரு; உண்டுபண்ணு; போன்றிரு; தாராளமாக வழங்கு [இசைதல், இசைத்தல்]; பொன்: ஊதியம்: நரம்பில் பிறக்கும் ஓசை:இனிமை: இணக்கம்: பண்கூடி நிற்பது.

இசைகேடு - ஸ்வரத்தில் பிழை; அபகீர்த்தி; சீர்கேடான நிலை; இகழ்வு: பழியுண்டாதல்: இசை பாடுவதில் தவறு உண்டாதல்.
இசைத் தமிழ் - (முத்தமிழுள் ஒன்றான) பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப்பாட்டு
இசைவாணர் - பாடகர்; இசை வல்லோர்
இசைவு - பொருத்தம்; தகுதி; உடன்பாடு; பெருந்துகை; ஏற்றது
இஞ்சி - இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழ் அகராதி - இ - Page 3 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:14 am

இடவகை_ வீடு: இடம்: இல்லம்.
இடவ மலை _ திருமாலிருஞ் சோலை மலை.
இடவம் _ உலகம்: நிலம்.
இடவயின் _ இடத்து.
இடவன் _ மண்ணாங்கட்டி: நுகத்தடியின் இடப்பக்கத்து மாடு.




இடவிய _ அகலமான: பரந்த : வேகமான.
இடவியது _ விரைவுடையது: அகலமுடையது.
இடவை _ வழி: செலவு: மார்க்கம்.
இடனறிதல் _ வினை செய்வதற்குரிய இடம்: காலம் முதலானவற்றை ஆராய்ந்து அறிதல்.
இடன் _ அகலம்: இடப்பக்கம்: இடம்: செல்வம்: தக்க சமயம்.




இடா _ அகலம்: இடப்பக்கம்: செல்வம்: தக்க சமயம்: இடம்.
இடா _ இறை கூடை: ஓர் அளவு : நீர்ப் பாய்ச்சும் ஒரு பொறி: இடமாட்டா: இட்டு: இடாத.
இடாகினி _ சுடுகாட்டில் பிணங்களைத்தின்னும் பேய்: காளிக்கு ஏவல் செய்வோள்.
இடாகு _ புள்ளி: குறி.




இடாகு போடுதல் _ கால் நடைகளுக்குச் சூடு போடுதல்.
இடாசுதல் _ நெருக்குதல் : மோதுதல்: இகழ்தல்.
இடாடிமம்_ தாது மாதுளை.
இடாதனம் _ யோகாசன வகை.
இடாப்பு _ அட்டவணை.




இடாப்புதல் _ காலை அகல வைத்தல்.
இடாமிடம் _ ஒழுங்கற்ற பேச்சு.
இடாம்பிகன் _ பகட்டுக்காரன்.
இடாயம் _ இசைத்துறை ஐந்துனுள் ஒன்று.
இடார் _ இறை கூடை: எலிப்பொறி.




இடால் _ கத்தி.
இடாவு _ இடை காலை.
இடாவேணி _ அளவிடப்படாத எல்லை.
இடிகம் _ பெரு மருந்து.
இடி கரை _ ஆறு முதலியவற்றின் அழிந்த கரை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 3 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:14 am

இடிக் கொடியோன் _ இந்திரன்.
இடிசல் _ நொறுங்கின தானியம்.
இடிசாமம் _ கேடு காலம்: நிந்தை.
இடிச்சக்கை _ பலாப்பிஞ்சு.
இடிச் சொல் _ உறுதிச் சொல்.



இடிஞ்சில் _ அகல் : விளக்குத் தகழி.
இடிதல் _ தகர்தல்: அழிதல்: முறிதல்: வருந்துதல்.
இடித்தடு _ பிட்டு.
இடித்தல் _ முழங்குதல்: இடியிடித்தல்: நோதல்: மோதுதல்: கோபித்தல்: தூளாக்குதல்: முட்டுதல்.
இடித்துக்கூறுதல் _ உறுதிச் சொல்லுரைத்தல்.



இடிபடுதல் _ துன்பப் படுதல்: தாக்கப்படுதல்: நொறுங்குதல்.
இடிபூரா _ வெள்ளைச் சருக்கரை.
இடிமரம் _ உலக்கை.
இடி மருந்து _ சூரண மருந்து.
இடிமை _ உலகம்: யானை விழி.



இடிம்பம் _ கைக்குழந்தை: பறவை முட்டை: பெருந்துன்பம்: ஆமணக்கு.
இடிம்பு _ அவமதிப்பு : இழிவு.
இடியல் _ பிட்டு.
இடியேறு _ பேரிடி.
இடிவு _ அழிவு: இடிந்து விழுகை.



இடு கடை _ கொடையாளியின் வீட்டு வாயில்.
இடுகளி _ அதிமதுரத் தழை முதலியவற்றை யானைக்கு இடுதலால் அதற்கு உண்டாகும் மதம்.
இடுகறல் _ விறகு.
இடுகால் _ பீர்க்கு.
இடு கிடை _ சிற்றிடை : சிறுவழி: நெருக்கம்: இடைஞ்சல்: இடுக்கண்.


இடுகுதல் _ சுருங்குதல் : ஒடுங்குதல்.
இடுகுறி மரபு _ இடுகுறியாகத் தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர்.
இடுகுறியாக்கம் _ இடுகுறியாக ஒருவர் கொடுத்த அல்லது புனைந்து கொண்ட பெயர்.
இடுகை _ ஈகை: கொடை.
இடுக்கடி _ துன்பம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 3 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:14 am

இடுக்கணி _ இடுக்கான இடம்.
இடுக்கண் _ துன்பம்: வறுமை.
இடுக்கம் _ நெருக்கம் : துன்பம்: வறுமை: ஒடுக்கம்.
இடுக்கல் _ சந்து.
இடுக்காஞ்சட்டி _ விளக்குத் தகழி.



இடுக்குதல் _ கவ்வுதல் : நெருக்குதல்.
இடுக்குப் பனை _ கள்ளும் பத நீரும் உண்டாக்கும் பனை.
இடுக்குப்பிள்ளை _ கைக்குழந்தை.
இடுக்கு மரம் _ கடவை மரம் : வேலித் திறப்பில் தாண்டிச் செல்லும் தடை மரம்: செக்கு வகை.
இடுக்கு வழி _ சந்து வழி: மிகக் குறுகலான பாதை.



இடுக்கு வாசல் _ திட்டி வாசல்: சிறு நுழை வாசல்.
இடுங்கலம் _ கொள்கலம்: குதிர்.
இடுங்கற்குன்றம் _ செய் குன்று.
இடுங்குதல் _ சுருங்குதல் : உள்ளொடுங்குதல்.
இடுதங்கம் _ புடமிட்ட தங்கம்:இழைப்புத் தங்கம்.



இடுதண்டம் - அபராதம்.
இடுதல் _ வைத்தல் : பரிமாறுதல் : கொடுத்தல்: சொரிதல் : குத்துதல்: குறியிடுதல்: புகைத்தல்: ஏற்றிச் சொல்லுதல்: செய்தல்.
இடுதி _ அம்புக்கூடு.
இடுதிரை _ திரைச்சீலை.
இடு தேளிடுதல் _ பொய்க் காரணம் கூறிக் கலங்கச் செய்தல்.



இடு நெறி _ புதிய நெறி.
இடுபலம் _ பேய்ப்புடல்.
இடுபு _ இட்டு.
இடுபெயர் _ இடுகுறிப்பெயர்.
இடுபொருள் _ பிறர் வழங்கிய பொருள்.


இடுப்புவலி _ இடுப்பு நோவு: மகப் பேற்றின் போது உண்டாகும் வலி.
இடுமம் _ குயவன் சக்கரத்தைப் பொருத்த இடும் மண் கட்டி.
இடுமயிர் _ சவுரிமயிர்.
இடு மருந்து _ வசிய மருந்து.
இடுமுள் _ வேலியாக இடும் முள்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 3 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:15 am

இடுமோலி _ ஒருவகை மரம்.
இடும்பர் _ ஒரு வகைச் சாதியார்: ஒரு வகை இராக்கதர்: செருக்குடையவர்: துயர் விளைப்போர்.
இடும்பன் _ செருக்குடையவன்: ஓர் அரக்கன்: முருகக் கடவுளின் கணத் தலைவன்.
இடும்பி _ செருக்குடையவள்: வீமனின் அரக்க மனைவி.
இடைகலை _ தச நாடிகளுள் ஒன்று: இட மூக்கால் வரும் மூச்சு: சந்திரகலை.



இடைக்கச்சு _ அரைக்கச்சை.
இடைக்கட்டு _ அரைக்கச்சு: ஓர் அணி கலன்: வீட்டின் நடுக்கட்டு: சமன் செய்வதற்குரிய நிறை.
இடைக்கணம் _இடையினம்.
இடைக்கருவி _ ஒரு வகைத் தோற்கருவி: சல்லி என்கிற தோற் கருவி.
இடைக்கலம் _ மட் பாண்டம்.



இடைக்கார் _ நெல்வகை.
இடைகாற்பீலி _ பரதவ மகளிர் அணியும் கால் விரல் அணிவகை.
இடைக்குழி _ இடை எலும்பு இரண்டுக்கும் உள்ள பள்ளம்.
இடைக்குறை _ செய்யுள் விகாரத்தள் ஒன்று.
இடைக் கொள்ளை _ கொள்ளை நோயால் வரும் அழிவு: நடுக் கொள்ளை.


இடை சுருங்கு பறை _ தடி: உடுக்கை.
இடை சூரி _ அரும்பு வளையம்: உருத்திராக்கம் முதலியவற்றின் இடையில் கோக்கும் மணி.
இடைச்சங்கம் _ இரண்டாம் தமிழ்ச்சங்கம்.
இடைச்சம்பவம் _ தற்செயல்.
இடைச்சரி _ தோள் வளை.


இடைச்சனி _ பூர நாள்.இடைச்சன் _ இரண்டாம் பிள்ளை: இடையிலே பிறந்தவன்.
இடைச்சியார் _ இடைச்சியின் மேல் காமம் பற்றிப் பாடும் கலம்பக உறுப்பு.
இடைச்சீலை _ திரைச்சீலை.
இடைச்சுரிகை _ உடைவாள்.


இடைச்சுவர் _ இரண்டு சுவர்களுக்கு இடையில் உள்ள சுவர்:இடையூறு.
இடைச்செறி _ குறங்கு செறி என்னும் அணி கலன். துணை மோதிரம்.
இடைச்சேரி _ இடையர் குடியிருப்பு.
இடைசொற்பகாப்பதம் _ நால்வகைப் பகாப்பதங்களுள் ஒன்று: மற்று, ஏ, ஓ என வருவது.
இடைச் சோழகம் _ தென்றல் வீசும் பருவத்தின் இடைக்காலம்.
இடைதல் _ பூமி சோர்தல்:மனந்தளர்தல்: விலகுதல்: பின்வாங்குதல்: தாழ்தல்: சீலை: பலம் குறைதல்: வருந்துதல்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 3 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:15 am

இடைத்தட்டு _ இடைக்கொள்ளை.
இடைத்தரம் _ நடுத்தரம்.
இடைத்தீனி _ சிற்றுண்டி.
இடைத் தொடர்க் குற்றுகரம் _ இடையின ஒற்றைத் தொடர்ந்து வரும் குற்றியலகரம்.
இடைநரை _ அங்கும் இங்கும் சிறிது மயிர் வெளுத்திருத்தல்.



இடை நாடி _ இடைகலை.
இடை நாழிகை _ கோயிலில் அர்த்த மண்டப மகா மண்டபங்களுக்கு இடைப்பட்ட இடம்.
இடைநிகராதல் _ நடுத்தரமான நிலையில் இருத்தல்.
இடை நிலைத் தீவகம் _ ஓர் அணி இலக்கண உறுப்பு.
இடை நிலைப்பாட்டு _ கலிப்பாவின் ஓர் உறுப்பு: தாழிசை.


இடைநிலை மெய்ம் மயக்கு _ சொல்லின் இடையில் மெய் எழுத்துக்கள் ஒன்றோடொன்று கூடும் நிலை.
இடை நிலை விளக்கு _ இடை நிலைத் தீவகம் என்னும் அணி.
இடை நேரம் _ ஒரு நிகழ்ச்சியில் விடப்படும் ஓய்வு நேரம்: தேநீர் கொள்ளும் பொழுது.
இடைபடல் _ இடையிற் சேர்தல்: இடையூறுபடுதல்: வருந்துதல்: தடைபடல்.
இடைப்படுதல் _ மையமாதல்: இடையில் நிகழ்தல்.



இடைப்பாட்டம் _ பழைய வரி வகை : இடைப்பூச்சி.
இடைப்பால் _ ஆடல் அரங்கிற்கு உரிய நிலம்.
இடைப்பிறவரல் _ எழுவாய் முதலியன கொண்டு முடியும் சொற்களின் இடையில் ஏற்ற பிற சொல் வருதல்.
இடைப் புணரளபெடை _ நடுவிரு சீர்க்கண்ணும் அளபெடை வருவது.
இடைப்புழுதி _ காய்ந்தும் காயாமலும் இடைப்பட்டுள்ள புழுதி நிலம்.


இடைப்போகம் _ இடைக்காலத்து விளைவு.
இடை மகன் _ இடையன்.
இடை மடக்கு _ பேச்சின் நடுவே தடுக்கை: மடக்கணி வகை.
இடை மருந்து _ திருவிடை மருதூர்.
இடை மிடைதல் _ நடுவே கலத்தல்.


இடை முள் _ கரப்பான் வகை: புண்ணில் தோன்றும் மறுமுள்.
இடைமை _ இடையின எழுத்து.
இடையல் _ தாழல் : பின்னிடல்: ஒதுங்குதல்: வருந்தல்.
இடையறவு _ இடைவிடுதல்: நடுவே தொடர்பு விட்டுப்போதல்.
இடையறாமை _ இடையீடின்றி இருத்தல்: இடைக்காலத்து அழியாமை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 3 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:17 am

இடையறுதல் _ நடுவே முடிந்து போதல் : தடைப்படுதல்.
இடையறுத்தல் _ படை முதலியவற்றை ஊடறுத்துப் பிரித்தல்.
இடையன் கால் வெள்ளி _ பரணி.
இடையா எதுகை _ அடிதோறும் முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றி வரத் தொடுக்கும் செய்யுள் உறுப்பு.
இடையாட்டம் _ செயல்.



இடையாந்தரம் _ இடைப்பட்ட காலம் நடு.
இடையாயர் _ மத்திமர் : நடுத்தரமானவர்.
இடையிடுதல் _ இடையில் நிகழ்தல்: இடையில் ஒழிதல்: நடுவில் இடுதல்: மறித்தல்.
இடையிடை _ நடு நடுவே.
இடையின மோனை _ இடையினத்துள் 'ய' கர 'வ' கரங்கள் ஒன்றிற் கொன்று மோனையாக வருதல்.




இடையின எதுகை _ இடையினத்துள் வந்த எழுத்தன்றி அவ்வினத்து வேறெழுத்து இரண்டாம் எழுத்தாய் நிற்க வரும் எதுகை.
இடையீட் டெடுகை _ ஒவ்வோரடி இடையிட்டு வரும் எதுகை.
இடை யுவா _ முழு மதி.
இடையெண் _ முச்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க வகை.
இடை யெழுஞ்சனி _ பூர நாள்.




இடை யொடு கடை மடக்கு _ ஓர் அணி அலங்காரம்.
இடையொத்து _ தாள வகை.
இடை வண்ணம் _ இசை வகை.
இடைவரி _ வரி வகை: நிறைக்காக வாங்கும் வரி.
இடை வழக்காளி _ வாதி : பிரதி வாதிகளுகளுக்கு இடையில் தனி வழக்குக் கொண்டு வருபவன்.




இடைவழி _ செல்லும் வழியின் நடுவிடம்: பாதிவழி.
இடைவிடாமல் _ எப்போதும் ஓயாமல்.
இடைவிடுதல் _ நடுவில் அழிதல்.
இடைவிலக்கல் _ நடுவில் வந்து தடுத்தல்.
இடை வீடு _ நடுவில் விட்டுவிடுதல்.




இடைவு _ தோல்வி : நீக்கம்: வெளி.
இடைவெட்டு _ தற் செயல்.
இடைவெட்டுப் பேச்சு _ பரிகாச மொழி: பழிப்பு.
இட்ட கந்தம் _ நறுமணம்.
இட்ட காமியம் _ விரும்பிய பொருளை அடையும் பொருட்டுச் செய்யும் செயல்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 3 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:18 am

இட்டசித்தி _ விரும்பியதை அடைகை.
இட்டடுக்கு _ காதணி வகை.
இட்டடை _ இட்டிடை: துன்பம்.
இட்ட போகம் _ விரும்பிய படி அநுபவித்தல்.



இட்டம் _ விருப்பம் :அன்பு :ஆமணக்கு : கோள் நிலையாலாகும்பலாபலன் : வேள்வி: வேள்விப்பலி.
இட்டலிங்கம் _ சீடனுக்கு ஆசாரியரால் கொடுக்கப்படும் நித்திய வழிபாட்டிற்குரிய ஆன் மார்த்த லிங்கம்.
இட்டளப்படுதல் _ சிறிய இடத்தில் திரண்டு தேங்குதல்.
இட்டளம் _ நெருக்கம் : வருத்தம் : பொன் : தளர்வு.



இட்டளர் _ மனவருத்தம் உடையவர்.
இட்டறுதி _ குறித்த எல்லை அல்லது காலம்: இக்கட்டான நிலை: வறுமை.
இட்டறை _ யானையை வீழ்த்தும் குழி.
இட்டன் _ விருப்பமானவன்: தலைவன் : நண்பன்.
இட்டி _ வேள்வி : விருப்பம் : பூசை: கொடை :ஈட்டி : செங்கல்.



இட்டிகை _ இடுக்கு வழி: செங்கல் : பலி பீடம்.
இட்டிகை வாய்ச்சி _ செங்கற்களைச் செதுக்கும் கருவி.
இட்டிடை _ சிறுகிய இடை: அற்பம் : இடையூறு : கடைசற் கருவின் ஓர் உறுப்பு.
இட்டிடைஞ்சல் _ துன்பம்: வறுமை.




இட்டிமை _ சிறுமை: ஒடுக்கம்.
இட்டிய _ சிறிய.
இட்டியம் _ வேள்வி.
இட்டீடு _ விவாதம்.
இட்டீறு _ செருக்கால் செய்யும் செயல்.



இட்டு _ ஓர் அசை: தொடங்கி : சிறுமை: காரணமாக: நுணுக்கம்.
இட்டுக்கட்டுதல் _ இல்லாததை ஏற்றிச் சொல்லுதல்: கற்பனை செய்தல்.
இட்டு நீர் _ தாரை வார்க்கும் நீர்.
இட்டுப்பிரிவு _ அண்மை இடத்தில் தலைவன் பிரியும் பிரிவு.
இட்டுரைத்தல் _ சிறப்பித்துரைத்தல்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 3 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:18 am

இட்டு வட்டி _ அன்ன வட்டி.
இட்டு வருதல் _ அழைத்து வருதல்.
இட்டுறுதி _ கண்டிப்பு ஆபத்து கால உதவி.
இட்டேற்றம் _ பொய்யாகக் குற்றம் சாட்டுதல் : கொடுமை.
இட்டேறி _ வயல்களின் இடையே செல்லும் வரப்புப் பாதை: வண்டிப்பாதை.



இட்டோடல் _ நீங்குதல்.
இட்டோடு _ ஒற்றுமையின்மை.
இட்டோட்டுதல் _ அலைக்கழித்தல்.
இணகு _ உவமை.
இணக்கு _ இசைவு: உடன் படச் செய்.



இணங்கர் _ ஒப்பு.
இணங்கல் _ உடன் படுதல் : பொருந்துதல்.
இணங்கார் _ பகைவர்.
இணங்கி _ தோழி.
இணங்கு _ இணக்கம் : ஒப்பு : பேய்.


இணர் _ பூவிதழ்: சுடர்: இதழ்: பூங்கொத்து: குலை: ஒழுங்கு: கிச்சிலி மரம்: மாமரம்: தளிர் : தொடர்ச்சி.
இணர்தல் _ நெருங்குதல் : விரிதல்.
இணரோங்குதல் _ வழி வழியாக உயர்தல்.
இணாட்டு _ ஓலைத்துண்டு : மீன் செதிள்.
இணாப்புதல் _ ஏய்த்தல்: ஏமாற்றுதல்.


இணி _ எல்லை: ஏணி: கண்ணாறு.
இணுக்கு _ கைப்பிடியளவு : வளார் : இலைக்கொத்து: கிளை தண்டின் இலைச்சந்து: அழுக்கு.
இணுக்குதல் _ பறித்தல்: உருவிப்பறித்தல்.
இணைக்கயல் _ மச்ச ரேகை: எட்டு மங்கலங்களுள் ஒன்று.



இணைக்கல்லை _ இரண்டு இலைகளால் தைக்கப்பட்ட உண்கலம்.
இணைக்குறள் ஆசிரியப்பா _ ஈற்றடியும் முதலடியும் அளவடியாக இடையில் உள்ள அடிகள் பல குறளடியானும் சிந்தடியானும் வரும் அகவற்பா.
இணைக்கை _ இரண்டு கைகளால் புரியும் அபிநயம்.
இணைக் கொடைப் பொருள் _ திருமண காலத்தில் மணமக்களுக்கு உற்றார் நண்பர் முதலியோர் கொடுக்கும் பரிசுப்பொருள்.
இணைக் கோணத்தடை _ மூக்கிரட்டை இலை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 3 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:21 am

இணைக்கோணம் _ மூக்கிரட்டை.
இணைதல் _ சேர்தல் : இசைதல் : ஒத்தல் : பொருந்துதல்.
இணைத்த கோதை _ இதழ் பறித்துக்கட்டிய பூமாலை.
இணைத்தல் _ தொடுத்தல்: சேர்த்தல் : கட்டுதல்.
இணைத் தொடை _ அளவடியுள் முதலிரு சீரிலும் மோனை முதலாயின வரத்தொடுக்கும் செய்யுள் உறுப்பு.




இணைப்படம் _ இரண்டு புறமும் ஒத்த படம்.
இணைப்பு _ சேர்ப்பு : இசைப்பு.
இணை பிரியாமை _ விட்டுப்பிரியாமை.
இணை மட்டப் பலகை _ இரட்டைக் கோடு காட்டும் கருவி.
இணை மணி மாலை _ பிரபந்த வகையுள் ஒன்று : வெண்பா அகவல் இணைந்தோ நூறு பாடல்கள் அந்தாதியாய் வரும் சிறு நூல் வகை.




இணை முகப்பறை _ இரண்டு முகங்களையுடைய ஒரு வகைப் பறை.
இணை முரண் _ பாடலின் ஓரடியின் முதல் இரு சீரும் முரண்பட இணைந்து வரும் தொடை.
இணை மோனை _ பாடலின் ஓரடியின் முதல் இரு சீரினும் மோனை இயைந்து வரும் தொடை.
இணையசை _ நிரையசை.
இணையடிகால் _ முட்டுக்கால் : மாட்டுக்குற்றம்.



இணையடித்தல் _ முட்டுக்கால் தட்டுதல்.
இணையல் _ இணைதல்: சேர்தல்.
இணையள பெடை _ பாடலின் முதல் இரு சீரினும் அளபெடை இயந்து வரும் தொடை.
இணையா வினைக்கை _ ஒரு கையால் புரியும் அபிநயம்.
இணையியைபு _ ஓரடியின் ஈற்றுச் சீர் இரண்டும் இணைந்து வரும் தொடை.




இணையீரோதி _ கடையொத்த நெய்ப்பினை உடைய கூந்தல்.
இணையெதுகை _ பாடலின் ஓரடியின் முதல் இரு சீரினும் எதுகை இயைந்து வரும் தொடை.
இணையெழுத்து _ போலியெழுத்து.
இணைவன் _ இணைந்திருப்பவன்.
இணை விழைச்சு _ இருவருக்கும் ஒத்த இன்பம். புணர்ச்சி.



இணைவு _ கலப்பு : ஒன்றுதல் : புணர்ச்சி.
இண்டஞ்செடி _ செடி வகை.
இண்டம் பொடி _ சவ்வரசி நொய்.
இண்டர் _ சுற்றம் : இடையர் : சண்டாளர்.
இண்டனம் _ ஊர்தி : விளையாட்டு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 3 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:21 am

இண்டிகன் _ சோதிடன் : சிறைச்சாலையின் வெளிப்புறம் காப்போன்.
இண்டிடுக்கு _ சந்து : பொந்து.
இண்டிறுக்கெனல் _ குறட்டை விடும் குறிப்பு.
இண்டு _ கொடி வகை: செடி வகை: தொட்டாற் சுருங்கி : புலி தொடக்கி.
இண்டை _ மாலை வகை: கொடி வகை: தாமரை ஆதொண்டை: புலி தொடக்கி : தொட்டாற் சுருங்கி.



இதக்கை _ பனங்காயின் தலையில் உள்ள தோடு : செவுள்.
இத சத்துரு _ வெளி நட்புக்காட்டும் பகைவன்.
இதஞ் சொல்லுதல் _ புத்தி கூறுதல்.
இதடி _ பெண்ணெருமை : நீர்.
இதணம் , இதண் _ தினைப்புனக் காவற் பரண்: பரண்.
இதமித்தல் _ இதம் செய்தல்: பற்றுச்செய்தல்.




இதமியம் _ இன்பம் : இதப்படுதல் : இனிமை: மன நிறைவு.
இதம் _ அன்பு : நன்மை : இதயம் : நெஞ்சம் : ஞானம் : இனிமை: இன் சொல்.
இதய கமலம் _ உள்ளத் தாமரை.
இதயம் _ இருதயம் : மனம் :மார்பு : நெஞ்சு.
இதரம் _ வேறு : பகை : கீழ்மை.



இதர விரதம் _ ஒரு வகை உவமை யணி.
இதரன் _ அன்னியன் : வேற்றாள்.
இதலை _ கொப்பூழ்.
இதல் _ கவுதாரி: காடை : சிவல்.
இதவிய _ நன்மையான.



இதவு _ நன்மை : இதவு : முகம் மன்.
இதழலர்தல் _ பேச வாய் திறத்தல்.
இதழி _ கொன்றை மாலை : கொன்றை மரம் : சரக் கொன்றை.
இதழ் _ உதடு : பூ விதழ் : கண்ணிமை : இமை : பனையேடு : மாலை : பாளை : புத்தகத்தின் தாள் : சாதி பத்திரி .
இதளை _ கொப்பூழ்.



இதள் _ பாதரசம்.
இதன் _நன்மையுள்ளவன்.
இதி _ இறுதி : பேய் : உறுதி : ஒளி.
இதிகாசம் _ பழங்காலத்துச் சரித்திரம், இராமயண மகா பாரதநூல்கள்.
இது _ இந்த : அஃறிணை ஒருமை அண்மைச்சுட்டுப் பெயர்.
இதை _ கப்பற் பாய் : தினை: காராமணி : புதுப்புனம் : கொல்லை: கலப்பை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 3 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum