ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - இ

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

தமிழ் அகராதி - இ - Page 2 Empty தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:08 am

First topic message reminder :

இ - தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; ஒரு சுட்டெழுத்து (எ.கா - இவன், இவ்வீடு); ஏவல்; வியங்கோள் ஒருமை வினைமுற்று விகுதி (எ.கா - செல்லுதி, வருதி); வினையெச்ச விகுதி (எ.கா - நாடிச் சென்றான்); பெண்பால் பெயர் விகுதி (எ.கா - மனைவி); தொழிற்பெயர் விகுதி (எ.கா - வெகுளி); பறவைகளுள் ஆந்தையைக் குறிப்பது; அண்மைச்சுட்டு.
இஃது - இது; அஃறிணை ஒருமைச்சுட்டு:அண்மைச்சுட்டு
இக்கட்டு - துன்பம்; நெருக்கடி; நிலை; இடுக்கண்; தடை; இடையூறு; வெல்லக்கட்டி
இக்கு - கரும்பு; சாராயபானம்; இடை: கரும்பு: .இடுக்கி: கள்: தேன்: சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு.
இக - தாண்டிச் செல்; கடந்து செல்; பிரிந்து செல்; நீங்கு; போ [இகத்தல்]

இகபரம் - இம்மையும் மறுமையும்
இகம் - இம்மை; இவ்வுலகம்
இகல் - பகை; விரோதம்; போர்; வலிமை; சிக்கல்; புலவி: அளவு
இகழ் - அவமதித்தல் செய்; மற; கவனக் குறைவகு [இகழ்தல், இகழ்ச்சி]; நிந்தை செய்
இகழ்வு - நிந்தை

இகுளை - தோழி; சுற்றம்; நட்பு; உறவு
இங்கண் - இவ்விடம்
இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு.
இங்கு - இவ்விடம்; இவ்விடத்தில்
இங்குலிகம் - (பாதரச -கந்தகக் கூட்டுப் பொருளான) சாதிலிங்கம்

இங்கே - இங்கு; இவ்விடத்தில்
இங்ஙன், இங்ஙனம் - இங்கு; இவ்வாறு
இச்சகம் - முகத்துதி; முகமன்: நேரில் புகழ்ந்துரைப்பது: பெறக் கருதிய தொகை.
இச்சாசத்தி (இச்சாசக்தி) - (சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி; விருப்பாற்றல்
இச்சை - விருப்பம்; ஆசை; தொண்டு; வினா: அறியாமை

இசி - ஒடித்தல்; உரித்தல்; சிரிப்பு; உரிக்கை: ஒடிக்கை
இசிப்பு - இழுத்தல்; நரம்பு; வலிப்பு; சிரிப்பு; இழுப்பு.
இசின் - செய்யுளில் வரும் ஓர் அசை நிலை; ஓர் இறந்தகால இடைநிலை; ஓர் அசைச் சொல்.
இசும்பு - ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கரடு முரடான வழி; செங்குத்துச் சரிவு
இசை - ஓசை; ஒலி; பாட்டு; புகழ்; சொல்; பொருத்தம்; இசைவு; இலாபம்; ஒலி செய்; பாட்டு பாடு; இசைக் கருவியை வாசி; சொல்லு; பேசு; பொருந்து; கிடைக்கப்பெறு; சக்திக்கு உட்பட்டிரு; உண்டுபண்ணு; போன்றிரு; தாராளமாக வழங்கு [இசைதல், இசைத்தல்]; பொன்: ஊதியம்: நரம்பில் பிறக்கும் ஓசை:இனிமை: இணக்கம்: பண்கூடி நிற்பது.

இசைகேடு - ஸ்வரத்தில் பிழை; அபகீர்த்தி; சீர்கேடான நிலை; இகழ்வு: பழியுண்டாதல்: இசை பாடுவதில் தவறு உண்டாதல்.
இசைத் தமிழ் - (முத்தமிழுள் ஒன்றான) பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப்பாட்டு
இசைவாணர் - பாடகர்; இசை வல்லோர்
இசைவு - பொருத்தம்; தகுதி; உடன்பாடு; பெருந்துகை; ஏற்றது
இஞ்சி - இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழ் அகராதி - இ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:11 am

இலையுதிர்வு - மரங்களிலிருந்து இலையுதிர்தல்
இவ்வீரண்டு - இரண்டிரண்டாக
இவண் - இவ்விடம்; இம்மை; இவ்வுலக வாழ்க்கை
இவர், இவர்கள் - 'இவன்' 'இவள்' என்ற சொற்களின் பன்மை; மரியாதையாக ஒருவரைக் குறிக்கும் சொல்; நெருக்கமாயிரு; முன்னேறிச் செல்; படர்ந்து செல்; பாய்ந்து செல்; உயர்ந்தெழு; ஏறிக் கொள்; ஒன்றாயிணைந்து பொருந்து; விரும்பு; ஒத்திரு [இவர்தல்]
இவள் - பெண்பால் சுட்டுப் பெயர்

இவறு - மிக விரும்பு; மற; உலோபஞ்செய்; மிகுதல் செய்; அலைபோல் மோது [இவறுதல், இவறல்]
இவன் - ஆண்பால் சுட்டுப் பெயர்
இவுளி - குதிரை; மாமரம்
இவை - பலவின் பால் சுட்டுப் பெயர்
இழ - தவற விடு; சாவினால் துயரடை [இழித்தல், இழப்பு]

இழவு - நஷ்டம்; சாவு; சாவுக்குப் பின் நடக்கும் ஈமக் கிரியை; கேடு
இழவோலை - சாவு அறிவிப்புக் கடிதம்
இழி - இறங்கு; இறக்கு; விழு; தாழ்வடை; வெளிப்படு; நுழை [இழிதல், இழித்தல்]
இழிசினன், இழியினன் - தாழ்ந்தவன்
இழி சொல் - குற்றமுள்ள (தகாத) சொல்; பழிச் சொல்

இழிபு - இழிவு; தாழ்வு
இழு - தன்னை நோக்கி ஈர்த்தல்; செய்; வசப்படுத்து; நீளச் செய்; வலிந்து; சம்பந்தப்படுத்து; வலிப்பு நோய் உண்டாகு; பெருமூச்சு வாங்கு; பின் வாங்கு [இழுத்தல், இழுப்பு]
இழுக்கடி - அலையவைத்து வருத்து [இழுக்கடித்தல்]
இழுக்கம் - பிழை; குற்றம்; அவமானம்; ஈனம்
இழுக்காறு - தீநெறி

இழுக்கு - நிந்தை; குற்றம்; குறைபாடு; கீழ்த்தரம்; மறதி; வழுக்கு நிலம்
இழுது - (வெண்ணெய், நெய் போன்ற) கொழுப்புப் பொருள்; தேன்; சேறு; குழம்பு
இழுப்பு - இழுத்தல்; சுவாச காசநோய்; வலிப்பு நோய்; தாமதம்
இழை - நூல்; ஆபரணம்; நூற்றல் செய்; அமைத்தல் செய்; பொடியாக்கு; மாவு போல் செய்; பதித்து வை; பூசு; விதித்தல் செய்; நிச்சயித்தல் செய்; நுட்பமாக ஆராய்தல் செய்; சிரமத்துடன் மூச்சு விடு; நூற்கப்படு; மனம் குழை; கூடியிரு; மனம் பொருந்து [இழைத்தல், இழைதல்]
இழைப்புளி - மரம் இழைக்கும் தச்சுக்கருவி

இழைபு - இனிய ஓசையையுடைய சொற்கள் மிகுந்து வருமாறு செய்யுள்நடை அமையும் அழகு; நூல் வனப்புகளில் ஒன்று
இளக்கம் - நெகிழ்தல்; மென்மை; தளர்ச்சி
இளக்காரம் - மன நெகிழ்ச்சி; தாட்சணியம்; தாழ்நிலை
இளகு - திரவமாகு; நெகிழ்வடை; களைப்புறு; அசைவுறு; மெல்ல மறைந்து போ; அழிந்து போ; புதிதாகத் தளிர்த்தல் செய் [இளகுதல்]
இளநீர் - முதிராத தேங்காய்; முதிராத தேங்காயின் நீர்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:11 am

இளப்பம் - தாழ்வு; இழிவு
இளம் பிள்ளை - குழந்தை
இளமை - சிசுப் பருவம்; வாலிபப் பருவம்; மென்மை; அறிவு; முதிரா நிலை; ஒன்றை மற்றொன்றாகக் கருதி மயங்குதல்
இளவட்டம் - இளமைப் பருவம்
இளவல் - தம்பி; சிறுவன்; மகன்; முதிரா நிலையுடையது

இளி - இகழ்ச்சி; குற்றம்; ஏளனம்; சிரிப்பு; (இசை) பஞ்சம் சுரம்; ஏளனஞ் செய்; பல்லைக்காட்டு [இளித்தல்]
இளிவரல் - இழிப்புச்சுவை
இளை - காவற்காடு; வேலி; தலைக்காவல்; மேகம்; பூமி; இளமை
இளைஞன் - வாலிபன்; தம்பி
இளைப்பு - சோர்வு; களைப்பு; துன்பம் [இளைப்பாறு, இளைப்பாற்று]

இளையர் - வாலிபர்; வேலைக்காரர்
இளையார் - பெண்கள்; சேடியர்
இளையாள் - இளைய மனைவி; தங்கை
இளையான் - தம்பி; வாலிபன்
இற்று - இத்தன்மையுடையது; ஒரு சாரியை (எ.கா - பதிற்றுப் பத்து)

இற்றுப்போ - நைந்து போ; அறுந்து போ [இற்றுப்போதல்]
இற்றை - இன்று
இற - கழிந்துபோ; கடந்து செல்; மேம்படு; மரணமடை; வழக்கொழி [இறத்தல்]
இறக்கம் - இறங்குதல்; சரிவு; காட்டு மிருகங்கள் செல்லும் பாதை
இறக்கு - இறங்கச் செய்; காய்ச்சி வடித்தல் செய்; புகழ்வது போல் பழித்தல் செய்; கொல்லு [இறக்குதல்]

இறக்குமதி - துறைமுகத்தில் சரக்கு இறங்குதல்
இறக்கை - சிறகு
இறகு, இறகர் - சிறகு; தனியிறகு
இறங்கு - மேலிருந்து கீழே செல்; இழிதல் செய்
இறந்துபடு - மரணமடை [இறந்துபடுதல், இறந்துபாடு]

இறப்பு - மரணம்; மிகுதி; எல்லை மீறல்; இறந்தகாலம்; வீட்டுக்கூரையின் கீழ்ப்பகுதி
இறவை - இறைகூடை; ஏணி
இறால், இறா - ஒருவகை மீன்; தேன் கூடு; எருது
இறு - முறித்தல் செய்;ழித்தல் செய்; முடிவுறச் செய்; விடைகொடு; வினாவு; (வரி) கொடு; தெளிய வை; வடித்தல் செய்; தங்கு; குத்தி நுழை [இறுத்தல்]
இறுக்கம் - நெருக்கம்; செட்டு; புழுக்கம்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:11 am

இறுக்கு - அழுத்தமாகக் கட்டு; ஒடுக்குதல் செய்; அடக்குதல் செய்; (திரவத்தைக்) கெட்டியாக்கு [இறுக்குதல், இறுக்கல்]
இறுகு - அழுத்தமாகு; உறுதியாகு; கெட்டியாகு; உறைதல் செய்; நெருங்கியிரு; மூர்ச்சையடை [இறுகுதல், இறுகல்]
இறுதி - வரையறை; எல்லை; முடிவு; அழிவு; சாவு
இறும்பி - எறும்பு
இறும்பு - புதர்க்காடு; குற்ங்காடு; தூறு; புதர்; குன்று; தாமரை; அதிசயம்

இறும்பூது - வியப்பு; பெருந்தன்மை; தகைமை; தாமரை; குன்று; மலை; புதர்ச் செடி; தூறு
இறுவாய் - மரணம்; முடிவு; ஈற்றிலுள்ளது
இறை - கடவுள்; அரசன்; உயர்ந்தவன்; தலைவன்; இறகு; சிறகு; தங்குதல்; நிலைத்தல்; ஆதனம்; வரி; கடமை; மறுமொழி; விடை; முன்கை; எலும்பு மூட்டு; அற்பம்; மூலை; வணங்கு; சிதறிப்போ [இறைதல்]; (நீர்) பாய்ச்சு; சிதறு; அதிகமாகச் செலவிடு [இறைத்தல், இறைப்பு]
இறைகாவல் - ஊர்க்காவல் வரி
இறைச்சி - மாமிசம்; ஐந்து வகை நிலங்களுக்கும் தனித்தனி உரிய கருப்பொருள்; மகிழ்ச்சி தருவது; பிரியமானது

இறைஞ்சு - வணங்கு; தாழ்ந்திரு [இறைஞ்சுதல், இறைஞ்சல்]
இறைமரம் - (கிணற்று) ஏற்றமரம்
இறையவன் - தலைவன்; கடவுள்
இறையிலி - வரி நீக்கப்பட்ட நிலம்
இறையோன் - கடவுள்; சிவன்

இறைவன் - தலவன்; அரசன்; கடவுள்; கணவன் (பெண்பால் - இறைவி)
இறைவை - இறை கூடை; ஏணி
இன் - இனிய; இனிமை
இன்பம் - இனிமை; மகிழ்ச்சி; காமவின்பம்; கலியாணம்
இன்புறவு, இன்புறல் - மகிழ்தல்

இன்மை - இல்லாமை; வறுமை
இன்றியமையாமை - இல்லாமல் முடியாமை
இன்றைக்கு - இன்று
இன்ன - இப்படியான; இத்தன்மையான; ஓர் உவம உருபு
இன்னணம் - இவ்வாறு; இந்நிலையில்

இன்னது - இது; இத்தன்மையுடையது
இன்னல் - துன்பம்; துயரம்
இன்னா - துன்பம்; துன்பந்தருபவை
இன்னாது, இன்னாமை - தீது; துன்பம்
இன்னார் - பகைவர்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:12 am

இன்னான், இன்னன் - இத்தன்மையுடையவன்
இன்னான் - துன்பஞ் செய்பவன்
இன்னினி - இப்பொழுதே; இக்கணமே
இன்னும் - மறுபடியும்; மேலும்; அன்றியும்; இத்துணைக்காலம் கடந்தும்
இன்னே - இப்பொழுதே; இவ்விடத்தே; இவ்விதமாகவே



இனம் - குலம்; வகுப்பு; சுற்றம்; சேர்ந்த கூட்டம்; நிரை; மந்தை; அமைச்சர் குழு; ஒப்பு
இனாம் - நன்கொடை; (அரசாங்கத்தினால்) ஏதேனும் ஊழியத்திற்காகவோ தர்மத்திற்காகவோ விடப்பட்ட இறையிலி நிலம்; மானியம்
இனாம்தார் - மானிய நிலத்துக்கு உரியவன்
இனி - தித்திப்பாயிரு; இன்பமாகு [இனித்தல், இனிப்பு]
இனிது - இன்பம் தருவது; நன்மையானது; நன்றாக



இனிமை - தித்திப்பு; இன்பம்; மகிழ்ச்சி
இனியர் - அன்புடையர்; மகளிர்
இனை - வருந்து; அழித்தல் செய்; கேடு செய்; இரங்கு; அஞ்சு; வருத்து [இனைதல், இனைத்தல், இனைவு]
இல்லம் - வீடு



இகசுக்கு_ நீர் முள்ளி.
இகணை _ ஒரு வகை மரம்.
இகத்தல் _ கைப்பற்றுதல்: கடத்தல்: நீங்குதல்:பிரிதல்: பழித்தல்: புடைத்தல்: பொறுத்தல்: போதல்.



இகத்தாளம் _ கிண்டல்: ஏளனம்.
இகந்து படுதல்_ விதியைக் கடத்தல்: பிறழ்தல்: தவறுதல்.
இகந்த _ நீங்கிய: எல்லை கடந்த.
இகபோகம் _ இவ்வுலக இன்பம்.



இக மலர் _ விரிமலர்.
இகரக் குறுக்கம் _ குற்றியலிகரம்.
இகலன் _ பகைவன்: படை வீரன்: நரி : கிழ நரி.
இகலாடல் _ போராடுதல்: முரண் கொள்ளுதல்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:12 am

இகலாட்டம் _ வாக்குவாதம்: மாறுபாடு: போட்டி.
இகலார் _ பகைவர்.
இகலி _ பெருமருந்து.
இகலுதல் _ மாறுபடுதல்: போட்டி போடுதல்: ஒத்தல்.
இகலோகம் _ இவ்வுலகம்.



இகலோன் _ பகைவன்.
இகவு _ தாழ்வு: இகழ்ச்சி: இழிவு.
இகழற் பாடு _ இகழ்ப்படுதல்.
இகழுநர் _ எள்ளி நகை செய்பவர்: பகைவர்.



இகழ்ச்சி _ ஈனம்: அவமதிப்பு: வெறுப்பு.
இகழ்தல் _ இழித்துக்கூறுதல்: அவ மதித்தல்: வெறுப்புக்காட்டுதல்.
இகழ்வார் _ அவமதிப்பவர்.
இகளை - வெண்ணெய்.



இகனி _ வெற்றிலை.
இகன் மகள் _ துர்க்கை.
இகன்றவர் _ பகைவர்.
இகா _ முன்னிலை அசை: தோழி.
இகு _ தாழ்வு : வீழ்: இறக்கம்: சரிவு.



இகுசு _ மூங்கில்.
இகுடி _ காற்றோட்டி.
இகுதல் _ சொரிதல்: கரைதல்: விழுதல்.
இகுத்தல் _ புறங்காட்டச் செய்தல்: கொல்லுதல்: ஈதல்:அறைதல்: வீழ்த்தல்: தாழ்த்தல்: சொரிதல்: ஒலித்தல்: விரித்தல்: யாழ் வாசித்தல்: அழைத்தல்: இரித்தல்: தாண்டுதல்: புடைத்தல்: துன்புறுத்தல்: துடைத்தல்.
இகுப்ப _ அறைய



இகுப்பம் _ தாழ்வு : திரட்சி.
இகுரி _ வழக்கு: மரக்கலம்.
இகுவை _ வழி.
இகுளி _ இடி: கொன்றை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:12 am

இகுள் _ இடி: ஆரல் மீன்: தோழி: வளர்ப்புத் தாய்.
இகூஉ_ இகுத்தி: வீழ்த்தி.
இகைத்தல் _ கொடுத்தல்: நடத்தல்.
இக்கணம் _ இந்த நேரம்: இப்பொழுது.



இக்கரை _ இந்தக்கரை: இந்துப்பு.
இக்கவம் _ கரும்பு.
இக்கன் _ கரும்பு வில்லையுடைய மன்மதன்.
இக்குக் கந்தை _ நெருஞ்சி: நீர் முள்ளி: நாணல்.




இக்குக் காட்டுதல் _ ஒலிக்குறிப்பினால் அறிவித்தல்.
இக்குதம் _ கருப்பஞ்சாற்றுக்கடல்.
இக்குரம் _ நீர் முள்ளி.
இக்கு விகாரம் _ சருக்கரை.
இக்கு வில்லி _ கரும்பு வில்லுடைய மன்மதன்.




இக்கெனல் _ விரைவுக்குறிப்பு.
இங்கம் _ அறிவு: அங்க சேட்டை: குறிப்பு.
இங்கலம் _ கரி.
இங்கிட்டு _ இங்கே: இங்கு.




இங்கிதக் களிப்பு _ காமக் குறிப்புடைய களிப்பு.
இங்கிதமாலை _ இராமலிங்க சுவாமிகள் அருளிச்செய்த பாமாலை.
இங்கிரி _ கத்தூரி: செடிவகை.
இங்கு _ பெருங்காயம் : இவ்விடம்.




இங்குசக் கண்டன் _நெருஞ்சி: நீர் முள்ளி.
இங்குடுமம் _ பெருங்காயம்.
இங்குதல் _ அழுந்துதல்: தங்குதல்.
இங்குத்தை _ இவ்விடம்.
இங்குராமம் _ பெருங்காயம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:13 am

இங்குலியம் _ சிவப்பு : சாதிலிங்கம்.
இங்குளி _ பெருங்காயம்.
இங்ஙனம் _ இவ்வாறு.
இசக்கி _ ஒரு தேவதை: இசக்கியம்மன்.

.


இசக்குதல் _ ஏமாற்றுதல்.
இசங்கு _ சங்கஞ் செடி.
இசங்குதல் _ போதல்.
இசடு _ பொருக்கு.
இசப்புதல் _ ஏமாற்றுதல்:வஞ்சித்தல்.




இசருகம் _ தும்பை.
இசலாட்டம் _ வாதிடுதல்.
இசலி _ பிணங்குபவள்.
இசலுதல் _ மாறு படுதல்: வாதாடுதல்.
இசவில் _ கொன்றை.




இசாபு _ கணக்கு.
இசிகப்படை _ ஒரு வகை அம்பு.
இசிகர் _ கடுகு.
இசித்தல் _ இழுத்தல் : முறித்தல்: நோவு உண்டாதல்: சிரித்தல்: நரம்பு இழுத்தல்.



இசி பலம் _ பேய்ப்புடல்.
இசிவு _ நரம்பிழுப்பு: வேதனை.
இசிவு நொப்பி _ சன்னியைத் தடுக்கும் மருந்து.



இசக்கு _ குற்றம்.
இசுதாரு _ கடம்பு.
இசுப்பு _ இழுப்பு.




இசைகடன் _ நேர்த்திக்கடன்.
இசைகாரர் _ பாணர்: பாடுவோர்.
இசை குடிமானம்_ நாட்டுக் கோட்டைச் செட்டிமார் திருமண காலத்தில் எழுதப்படும் உறுதி மொழிப் பத்திரம்.
இசைக்கருவி _ இசை உண்டாக்கும் உறுப்பு.
இகைச்சுவை _ நெய், ஏலம்,பால், தேன், கிழான், ( தயிர் ) ,வாழை, மாதுளங்கனி இவற்றின் சுவைகள்: ஏழிசைக்குரிய சுவை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:13 am

இசைதல் _ பொருந்துதல்: உடன் படுதல்.
இசைத்தல் _ இசை எழுமாறு ஒலித்தல்: சொல்லுதல்: அறிவித்தல்: கட்டுதல்: ஒத்தல்: கொடுத்தல்.
இசை நாள் _ உத்திரட்டாதி: பூரட்டாதி.
இசை நிறைவு _ செய்யுளில் ஓசை நிறையுமாறு வரும் சொல்.
இசைநூபுரம் _ யானையைக் கொன்ற வீரன் வலக்காலில் அணியும் சிலம்பு.



இசை நூல் _ இசைக்கலை பற்றிய புத்தகம்.
இசைப்பா _ இசையோடு சேர்ந்த பாக்களில் ஒரு வகை: இறைவன் புகழை ஓதும் பாடல்.
இசைப்பாடு _ மிகுந்த கீர்த்தி.
இசைப்பாணர் _ பாணர்களுள் ஒருவகையினர்.
இசைப்புள் _ அன்றிற் பறவை: குயில்.



இசைப் பொறி _ செவி.
இசை மகள், இசை மடந்தை _ கலை மகள்.
இசை மணி _ வீரகண்டை: பதினாயிரம் பேரைப் போரில் வெற்றி கொண்ட வேந்தர் காலில் அணியும் அணிகலம்.
இசை மறை _ சாம வேதம்.
இசை முட்டி _ செருந்தி.




இசைமை _ புகழ்: ஒலி: சீர்த்தி.
இசையறி பறவை _ அசுணம்: கேயப் புள்: கின்னர மிதுனங்கள்.
இசையாமை _ உடன் படாமை: பொருந்தாத தனமை: இணக்கம் இன்மை.
இசை யெச்சம் _ வாக்கியத்தில் சொற்கள் எஞ்சிய பொருள் உணர்த்தி வருவது.
இசை யெடுத்தல் _ பாடுதல்.




இசைவல்லோர் _ கந்தருவர்: பாடகர்.
இச்சகம் _ முகமன்: நேரில் புகழ்ந்துரைப்பது: பெறக் கருதிய தொகை.
இச்சம் _ விருப்பம்: பக்தியுடன் புரியும் தொண்டு, பொய் கூறுதல்: வினா: அறியாமை.
இச்சா பத்தியம் _ மருந்துண்ணும் காலத்தில் கடுகு, நல்லெண்ணெய் முதலியவற்றை நீக்கி உண்ணும் பத்திய வகை.





இச்சா போகம் _ விரும்பியபடி இன்பம் நுகர்தல்.
இச்சா ரோகம் _ போகம் விஞ்சியதால் உண்டாகும் நோய்.
இச்சாவசு _ குபேரன் : திக்குப் பாலகருள் ஒருவன்.
இச்சி _ ஒருவகை மரம்.
இச்சித்தல் _ விரும்புதல்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:13 am

இச்சியல் _ கடுகு ரோகிணி.
இச்சில் _ இத்தி மரம்.
இச்சியை _ கொடை: வேள்வி: பூசனை.
இஞ்சக்கம் _ கையூட்டு: லஞ்சம்: பரிதானம்.



இஞ்சம் _ வெண்காந்தள்.
இஞ்சல் _ இறுகல் : கவறல்: காய்தல்.
இஞ்சாகம் _ இறால் மீன்.
இஞ்சி வேர்ப்புல் _ சுக்கு நாறிப் புல்.
இஞ்சுதல் _ சுண்டுதல்: சுவறுதல்: இறுகுதல்: வற்றுதல்.



இஞ்சை _ தீங்கு: துன்பம்: கொலை.
இடகலை _ இடைகலை: சந்திர கலை.
இடக்கயம் _ கொடி.
இடக்கன் _ தாறு மாறு செய்பவன்: முரண்படுபவன்.




இடக்கியம் _ தேர்க் கொடி.
இடக்கு _ இழிசொல்: தடை : முரண்.
இடக்குதல் _ தடுமாறுதல்: விழுதல்.
இடக்கு மடக்கு _ தாறுமாறு: தொல்லை: சங்கடம்: குதர்க்கம்.
இடக்கை _ இடது பக்கத்தில் உள்ள கை: இடது கையால் கொட்டப்பெறும் தோற்கருவி: பெரு முரசு வகை.




இடங்கணம் _ வெண் காரம்.
இடங்கணி _ சங்கிலி: உளி : ஆந்தை.
இடங் கணிப் பொறி _ கோட்டை மதியில் வைக்கப்டும் இயந்திரங்களுள் ஒன்று: பகைவரைத் தடுத்து நிறுத்தும் பொறி.
இடங்கம் _ கல்லுளி: காசு் மண் தோண்டும் படை:செருக்கு: கணைக்கால்: வாளின் உறை: கற் சாணை: கோபம்.
இடங்கரம் _ மகளிர் விலக்கால் உண்டாகும் தீட்டு.




இடங்கர் _ கயவர்: முதலை: நீர்ச்சால்: சிறுவழி:இடம்.
இடங்கழியர் _ காமுகர்: கயவர்.
இடங்காரம் _ மத்தளத்தின் இடப்பக்கம்: வில்லின் நாண் ஒலி.
இடங் கெட்டவன் _ அலைபவன்: தீயவன்.
இடங்கேடு _ வறுமை: தாறுமாறு: நாடு கடத்துகை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:14 am

இடங்கை _ இடக்கை.
இடசாரி _ இடப்பக்கமாக வரும் நடை.
இடஞ்சுழி _ இடப்பக்கம் நோக்கி இருக்கும் சுழி.
இடது _ இடப்புறமான.
இடத்தல் _ தோண்டுதல் : பெயர்த்தல்: பிளத்தல்: உரித்தல்: குத்தியெடுத்தல்.




இடத்து மாடு, இடத்தை _ நகத் தடியின் இடப்பக்கத்தில் பூட்டப்படும் மாடு.
இட நாகம் _ அடை காக்கும் நல்ல பாம்பு.
இட நாள் _ உரோகிணி: மகம்: விசாசகம்: திருவோணம் முதலிய நட்சத்திரங்கள்.
இட நிலைப்பாலை _ பண் வகை.
இடந்துடித்தல் _ இடக்கண் : இடந்தோள் துடித்தல்: இது மகளிர்க்கு நன்னிமித்தமும், ஆடவர்க்குத் தீ நிமித்தமும் ஆம்.



இடப கிரி _ அழகர் மலை.
இடபக் கொடியோன் _ சிவபிரான்.
இடப வாகனன் _ சிவபிரான்.
இடபன் _ இடபசாதி மனிதன்: உருத்திரர்களுள் ஒருவர்.
இடபி _ பூனைக்காலி: ஆண் வடிவப் பெண்.




இடப்பு _ பெயர்த்த மண் கட்டி: பிளப்பு.
இடப்பெயர் _ இடத்தைக் குறிக்கும் சொல்.
இடப் பொருள் _ ஏழாம் வேற்றுமைப் பொருள்.
இட மலைவு _ ஓரிடத்தில் உள்ள பொருள் வேறொரு இடத்தில் இருப்பதாகச் சொல்லும் வழு.
இட மயக்கம் _ ஒரு திணைக்குரிய உரிப் பொருளை வேறு ஒரு திணைக்கு உரியதாகக் கூறும் இட மலைவு.



இட மன் _ இடப்புறம் : இடப்பக்கம்: இடபால்.
இட மானம் _ மாளிகை: பரப்பு: விசாலம்: பறை வகை.
இடம் பகம் _ பேய்.
இடம்படுதல் _ விரிவாதல்: மிகுதி யாதல்.
இடம் பாடு _ செல்வம் : பருமை: விரிவு.



இடம்புதல் _ விலகுதல்: வெறுத்தல்: ஒதுங்குதல்.
இடலம் _ அகலம்: விரிவு.
இடலை_ மரவகை: துன்பம்.
இடல் _ கொடுத்தல்.
இடவகம் _ இலவங்கம்: மரப்பிசின்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum