புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
8 Posts - 3%
prajai
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
தமிழ் அகராதி - இ I_vote_lcapதமிழ் அகராதி - இ I_voting_barதமிழ் அகராதி - இ I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - இ


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:08 am

இ - தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; ஒரு சுட்டெழுத்து (எ.கா - இவன், இவ்வீடு); ஏவல்; வியங்கோள் ஒருமை வினைமுற்று விகுதி (எ.கா - செல்லுதி, வருதி); வினையெச்ச விகுதி (எ.கா - நாடிச் சென்றான்); பெண்பால் பெயர் விகுதி (எ.கா - மனைவி); தொழிற்பெயர் விகுதி (எ.கா - வெகுளி); பறவைகளுள் ஆந்தையைக் குறிப்பது; அண்மைச்சுட்டு.
இஃது - இது; அஃறிணை ஒருமைச்சுட்டு:அண்மைச்சுட்டு
இக்கட்டு - துன்பம்; நெருக்கடி; நிலை; இடுக்கண்; தடை; இடையூறு; வெல்லக்கட்டி
இக்கு - கரும்பு; சாராயபானம்; இடை: கரும்பு: .இடுக்கி: கள்: தேன்: சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு.
இக - தாண்டிச் செல்; கடந்து செல்; பிரிந்து செல்; நீங்கு; போ [இகத்தல்]

இகபரம் - இம்மையும் மறுமையும்
இகம் - இம்மை; இவ்வுலகம்
இகல் - பகை; விரோதம்; போர்; வலிமை; சிக்கல்; புலவி: அளவு
இகழ் - அவமதித்தல் செய்; மற; கவனக் குறைவகு [இகழ்தல், இகழ்ச்சி]; நிந்தை செய்
இகழ்வு - நிந்தை

இகுளை - தோழி; சுற்றம்; நட்பு; உறவு
இங்கண் - இவ்விடம்
இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு.
இங்கு - இவ்விடம்; இவ்விடத்தில்
இங்குலிகம் - (பாதரச -கந்தகக் கூட்டுப் பொருளான) சாதிலிங்கம்

இங்கே - இங்கு; இவ்விடத்தில்
இங்ஙன், இங்ஙனம் - இங்கு; இவ்வாறு
இச்சகம் - முகத்துதி; முகமன்: நேரில் புகழ்ந்துரைப்பது: பெறக் கருதிய தொகை.
இச்சாசத்தி (இச்சாசக்தி) - (சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி; விருப்பாற்றல்
இச்சை - விருப்பம்; ஆசை; தொண்டு; வினா: அறியாமை

இசி - ஒடித்தல்; உரித்தல்; சிரிப்பு; உரிக்கை: ஒடிக்கை
இசிப்பு - இழுத்தல்; நரம்பு; வலிப்பு; சிரிப்பு; இழுப்பு.
இசின் - செய்யுளில் வரும் ஓர் அசை நிலை; ஓர் இறந்தகால இடைநிலை; ஓர் அசைச் சொல்.
இசும்பு - ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கரடு முரடான வழி; செங்குத்துச் சரிவு
இசை - ஓசை; ஒலி; பாட்டு; புகழ்; சொல்; பொருத்தம்; இசைவு; இலாபம்; ஒலி செய்; பாட்டு பாடு; இசைக் கருவியை வாசி; சொல்லு; பேசு; பொருந்து; கிடைக்கப்பெறு; சக்திக்கு உட்பட்டிரு; உண்டுபண்ணு; போன்றிரு; தாராளமாக வழங்கு [இசைதல், இசைத்தல்]; பொன்: ஊதியம்: நரம்பில் பிறக்கும் ஓசை:இனிமை: இணக்கம்: பண்கூடி நிற்பது.

இசைகேடு - ஸ்வரத்தில் பிழை; அபகீர்த்தி; சீர்கேடான நிலை; இகழ்வு: பழியுண்டாதல்: இசை பாடுவதில் தவறு உண்டாதல்.
இசைத் தமிழ் - (முத்தமிழுள் ஒன்றான) பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப்பாட்டு
இசைவாணர் - பாடகர்; இசை வல்லோர்
இசைவு - பொருத்தம்; தகுதி; உடன்பாடு; பெருந்துகை; ஏற்றது
இஞ்சி - இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:08 am

இட்டதேவதை - (இஷ்ட தேவதா) வழிபடு கடவுள்
இட்டலி - அரிசி மாவு; உளுந்து மாவு கலவையால் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை
இட்டிகை - செங்கல்; இடுக்கு வழி; பலி பீடம்
இட்டிது - சிறிது; ஒடுங்கியது; சமீபம்; அண்மை.
இட்டுக்கட்டு - கற்பனை செய்து அமை [இட்டுக்கட்டுதல்]

இட - பிள; தோண்டு; உரித்தல் செய்; பிளவுபடு; குத்த்யெடு [இடத்தல்]
இடக்கர் - அவையில் சொல்லத் தகாத சொல்; நீர்க்குடம்; தாறுமாறு செய்பவர்
இடக்கரடக்கல் - தகாத சொல்லை மறைத்து வேறுவிதமாகச் சொல்லும் வழக்கு; பலர் முன்னர்க் கூறத் தகாத வற்றை மறைத்துச் சொல்லுதல்.
இடக்கு - சொல்லத்தகாத சொல்; முரணான செயல் அல்லது பேச்சு
இடங்கழி - அளவு கடந்து போதல்; அளவு மீறிய காமம்; ஒரு பட்டணம் படி அளவு

இடங்கொடு - கண்டீப்பு இல்லாது நட [இடங்கொடுத்தல்]
இடப்பொருள் - வேற்றுமைப் பொருள்; ஏழாம் வேற்றுமைப் பொருள்
இடபம் - எருது; இடப ராசி; வைகாசி மாதம்; நந்தி: இரண்டாம் இராசி; ஏழு சுரங்களுள் ஒன்று: செவித்துளை: ஒரு பூண்டு: அரசர் சினத்துள் ஒன்று: மதயானை.
இடம் - தலம்; வீடு; ஆதாரம்; காரணம்; சந்தர்ப்பம்; விசாலம்; இடப்பக்கம்; பொழுது; தக்க சமயம்; செல்வம்; வளம்; (இலக்கணம்) தன்மை முன்னிலை படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்று; ஏழாம் வேற்றுமை உருபு
இடம்பம் - ஆடம்பரம்; பகட்டு [இடம்பன்]; தற்பெருமை

இடம்புரி - இடப்புறமாகச் சுழிந்துள்ள சங்கு; இடப்பக்கம் திரித்த கயிறு; பூடு வகை.
இடர் - துன்பம்; வறுமை
இடர்படு - துன்புறு; மிகு முயற்சி செய் [இடர்ப்படுதல், இடர்ப்பாடு]
இடவழு - (இலக்கணம்) தன்மை முதலிய மூவிடங்களில் ஒன்றுக்குப் பதில் மற்றொன்றை அமைக்கும் தவறு
இடவாகுபெயர் - (இலக்கணம்) ஓர் இடத்தின் பெயர் அங்குள்ள பொருளுக்கு ஆகிவருவது

இந்து - சைவசமயம், இந்து மதமுள்ள ஒருவன் அல்லது ஒருத்தி (hindu)சைவம்,வைணவம், சாக்தம் எல்லாம் இணைந்ததுதான் இந்து.
இட்டரை - இரு புறமும் வேலிகள் உடைய கறுகிய பாதை.
இதழ் - மனிதனின் முகத்திலுள்ள ஒரு உறுப்பு உதடு, பூவின் அல்லி, வாரப்பத்திரிக்கை, தினசரி நாளிதழ்.
இதிகாசம் - காவியம்.
இர - கெஞ்சிக்கேள் (beg)

இன்னா - துன்பம் , இன்னல்.
இவண் - இம்மை, இவ்விடம்
இருமை - நன்மை தீமை ஆகியன இரண்டும்.( good and bad )
இயம்பு ( இயம்புதல் ) - இனிமையாகக் கூறுதல்
இலக்கணம் - ஒரு மொழியின் பயன்பாட்டு விதியை இலக்கணம் எனக்கூறலாம். உ+ம்= தமிழிலக்கணம் ( grammar )



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:09 am

இடறல் - கால் தடுக்குதல்; தடை; தண்டனை: பழி: கால் தடுக்கை.
இடறு - கால் தடுக்கு; துன்புறு; எற்று; உதைத்துத் தள்ளு; எல்லை மீறு; தடுத்தல் செய்; புண்படுத்து [இடறுதல்]
இடி - இடியேறு; பேரொலி; இடித்துரைக்கும் சொல்; தாக்கு; இடித்த மாவு; கண்ணம்; நோவு; தகர்ந்து போ; உடைந்து போ; வருந்து; திகைப்புறு; செயலற்றிரு; முழங்கு; நோதல் செய்; தாக்குதல் செய்; தூளாக்கு; இடித்துக் கூறு; தோண்டு; கொலை செய்; அழித்தல் செய் [இடிதல், இடித்தல்]
இடித்துரை - கழறிக் கூறுதல்; தவறுகளை எடுத்துரைத்தல்
இடிதாங்கி - கட்டிடத்தின் மீது மின்னல் தாக்காமல் காக்கும் உலோகக் கம்பி

இடிப்பு - ஒலி; ஓசை; இடியேறு
இடிபடு - தாக்கப்படு; தள்ளப்படு; நொறுங்கு; துன்புறு [இடிபடுதல்]
இடியப்பம் - ஒருவகைச் சிற்றுண்டி
இடு - கொடு; வைத்தல் செய்; எறி; சாட்டிக்கூறு; உண்டாக்கு; பிறப்பி; புதை

இடுக்கி - குறடு; ஒருவகை இடுக்கிப் பொறி
இடுக்கு - மூலை; ஒடுங்கிய தெரு; ஒடுங்கிய பிளவு; சங்கட நிலை; உலோபகுணம்; அழுத்து; நெருக்கு; கையால் அணைத்தெடு [இடுக்குதல்]
இடுகாடு - பிணங்களைப் புதைக்கும் இடம்
இடுகுறி - பெற்றோரால் ஒருவருக்கு இடப்பெற்ற பெயர்; காரணம் கருதாது ஒரு பொருளுக்கு வழங்கிவரும் பெயர்
இடுப்பு - ஒக்கலை; இடை; அரை

இடும்பு - செருக்கு; குறும்புச் செயல்
இடும்பை - துன்பம்; தீங்கு; நோய்; வறுமை
இடை - நடுவிடம்; நடுவேளை; இடுப்பு; இடப்பக்கம்; இடம்; வழி; தொடர்பு; இடையர் குலம்; காரணம்; (இலக்கணம்) இடையெழுத்து ய,ர,ல,வ,ழ,ள; ஏழாம் வேற்றுமை உருபுகளில் ஒன்று (எ.கா - கானிடை மான் திரியும்); இடைவெளி; தடை; துன்பம்; மனச் சோர்வுறு; பின்வாங்கு
இடைகழி - ஒரு வீட்டின் வாயிற் கதவுக்கு அடுத்த கதவுக்கு இடையிலுள்ள பகுதி
இடைச்சி - முல்லை நிலப் பெண்; இடையர் இனப் பெண்

இடைச்செருகல் - ஒருவர் இயற்றிய நூலில் பிறர் இயற்றிய பகுதியைப் புகுத்தல்
இடைச்சொல் - (இலக்கணம்) பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் சார்ந்துவரும் சொல்வகை
இடைஞ்சல் - தொந்தரை; இடையூறு
இடை தெரிதல் - தக்க தருணம் அறிதல்
இடைநிலை - மையத்தில் நிற்றல்; (இலக்கணம்) ஒரு சொல்லில் பகுதி விகுதிகளுக்கு இடையில் நிற்கும் ஓர் உறுப்பு (எ.கா - செய்கின்றான்) அறிஞன்

இடையர் - ஆடு மாடு மேய்க்கும் தொழில் செய்யும் இனத்தார்; முல்லை நிலத்தவர்
இடையினம் - இடையின எழுத்துக்கள் (ய,ர,ல,வ,ழ,ள)
இடையீடு - தடை; இடையில் விட்டுப் போதல்; வித்தியாசம்; இடையில் நிகழ்வது
இடையூறு - தடை
இடையெழுத்து - இடையின எழுத்துக்கள் (ய,ர,ல,வ,ழ,ள)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:09 am

இடைவெளி - இடையேயுள்ள பரப்பு
இண்டர் - இடையர்; இழிகுலத்தவர்
இண்டை - பூமாலை; தாமரை; முல்லை
இணக்கம் - பொருந்துதல்; சம்மதம்; நட்பு
இணங்கல் - உடன்பாடு; பொருந்துதல்

இணர் - பூங்கொத்து; மலர்ந்த பூ; பூந்தாது; பழக்குலை; தீச்சுவாலை; வரிசை; ஒழுங்கு; கிச்சிலி
இணை - ஒப்பு; பொருத்தம்; ஒத்திருக்கும் இரட்டை; மாதர் கூந்தல்; துணை; பொருந்து; ஒத்திரு; பொருத்து; கட்டுதல் செய் [இணைதல், இணைத்தல், இணைப்பு]
இத்தனை - இவ்வளவு; சில
இத்துணை - இவ்வளவு; சிறிதளவு
இத்யாதி - என்ற, இவை முதலானவை

இதயம் - இருதயம்; மனம்; மார்பு
இதரன் - அன்னியன்
இதழ் - பூவின் இதழ்; அல்லி; உதடு; கண்ணிமை; பனையோலை; தென்னம் பாளை; புத்தகத்தின் தாள்; பூமாலை
இதழி - கொன்றை மரம்
இதிகாசம் - (இராமாயணம், மகாபாரதம் போன்ற) பண்டைக் கால வரலாற்றுக் காப்பியம்; ஐதிகப் பிரமாணம்; மேற்கோள்; உதாரணம்

இது - இப்பொருள்; இந்த
இதோ, இதா - 'இங்கே பார்!' என்ற பொருளுள்ள ஒரு வியப்புக் குறிப்பு மொழி
இந்த - அருகிலுள்ளதைச் சுட்டும் மொழி
இந்தனம் - விறகு
இந்தா - இதோ பார், இங்கே வா, இதை வாங்கிக் கொள் என்று பொருள்படும் குறிப்பு மொழி

இந்தியா - பாரத நாடு [இந்தியன்]
இந்திரகோபம் - (மழைக்குக் பிறகு வெளி வரும்) தம்பலப் பூச்சி
இந்திரசாலம் - மாயவித்தை
இந்திரர் - (இந்திரனுலகத்தவரான) தேவர்
இந்திரவில் - வானவில்

இந்திரன் - தேவர்க்கு அரசனான் இந்திரன்; அரசன்; தலைவன்
இந்திராணி - இந்திரன் தேவி
இந்திரியம் - புலனுறுப்பு; சுக்கிலம்
இந்து - சந்திரன்; கர்ப்பூரம்; இந்துப்பு; சிந்து நதி; ஹிந்து மதத்தான்
இந்துப்பு - பாறையுப்பு



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:09 am

இந்தோ - இதோ
இந்தோளம் - (மாலையில் பாடத்தக்க) ஓர் இராகம்
இப்படி - இவ்விதம்
இப்பர் - வணிகரில் ஒரு வகையார்; பசுக்களைப் பாதுகாக்கும் வைசியர் (கோவைசியர்)
இப்பால் - இவ்விடம்; பிறகு

இப்பி - சிப்பி
இம்மி - ஒரு சிறு துணுக்கு; ஒரு சிறு எடை; ஒரு சிறு பின்னம்
இம்மை - இப்பிறப்பு (எதிர்மொழி - மறுமை)
இமம் - பனி; இமயமலை; மந்தரமலை; மேருமலை; பொன்
இமாம் - தொழுகையை நடத்தும் தலைவர்

இமிசி - துபுறுத்து; தொந்தரை செய் [இமிசித்தல்]
இமிர் - ஒலி செய்; ஊது [இமிர்தல்]
இமில் - எருதின் திமில்
இமிழ் - ஒலி; இம்மெனும் ஓசை; கயிறு; பந்தம்
இமை - கண்ணின் இமை; கண்ணிமைத்தல் மயில்; கரடி; இமைத்தல் செய்; மின்மினி போல் ஒளி விடு; சுருங்கு [இமைத்தல்]

இமைப்பு - கண்ணிமைப் பொழுது; பிரகாசம்
இமையவர், இமையோர் - தேவர்
இமையார் - (கண்ணிமைத்தல் செய்யாத) தேவர்
இயக்கம் - இயங்குதல்; வழி; சுருதி; பெருமை; மலசலங்கழிதல்
இயக்கன் - இயக்கரில் ஒருவன்; இயக்கர் தலைவனான குபேரன் (பெண்பால் - இயக்கி)

இயக்கு - செலுத்து; இயங்கச் செய்; தொழிற்படுத்து [இயக்குதல்]
இயங்கு - செல்லுதல்
இயங்குதிணை - சரப் பொருள் (எதிர்மொழி - நிலைத்திணை)
இயந்திரம் - பொறி; தேர்
இயம்பு - ஒலித்தல் செய்; பேசு; சொல்லு [இயம்புதல்]

இயமன் -யமன்
இயமானன் - யாகத் தலைவன்; ஆன்மா
இயல் - தன்மை; தகுதி; ஒத்திருத்தல்; இயல் தமிழ்; நூலின் பகுதி; அத்தியாயம்
இயல்பு - தன்மை; சுபாவம்; நல்லொழுக்கம்; நற்குணம்; நடத்தை முறை
இயல்பு புணர்ச்சி - (இலக்கணம்) சொற்கள் விகாரமில்லாமல் புணர்தல்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:10 am

இயல்புளி - விதி முறைப்படி
இயலாமை - கூடாமை; செய்ய முடியாமை
இயவு - வழி; செல்லுதல்; காடு
இயவுள் - கடவுள்; இறைவன்; தலைமை; புகழ் பெற்றவன்; வழி
இயற்கை - தன்மை; சுபாவம்; வழக்கம்; நிலைமை

இயற்சொல் - எளிதில் பொருள் விளங்கும் சொல் (எதிர்மொழி - திரிசொல்)
இயற்பெயர் - ஒரு பொருளுக்கு இயல்பாக இடப்பட்டு வழங்கும் பெயர்
இயற்றமிழ் - முத்தமிழுள் ஒன்றான செய்யுள் அல்லது உரைநடை இலக்கியத் தமிழ்
இயற்று - உண்டாக்கு; சிருட்டித்தல் செய்; காரியம் செய்; நடத்து [இயற்றுதல், இயற்றல்]
இயன் மொழி - தலைவனைப் புகழ்ந்து கூறும் புறத் துறை

இயை - பொருந்து; நிரம்பு; இணைதல் செய் [இயைதல், இயைத்தல்]
இயைபு - சேர்க்கை; பொருத்தம்; இசைவு; செய்யுளடிகளில் ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
இர - பிச்சையெடு; யாசி; வேணுடு; கெஞ்சிக் கேள் [இரத்தல்]
இரக்கம் - தயை; மனவுருக்கம்; வருத்தம்; ஒலி; கதறல்
இரகசியம் - மறைபொருள்; அந்தரங்கம்

இரங்கு - தயை செய்; இரக்கம் கொள்; அழு; வருந்து; செய்தற்கு வருந்து; பேரொலி செய்; யாழ் போல் ஒலி செய் [இரங்குதல், இரங்கல்]
இரசதம், இரசிதம் - வெள்ளி
இரசம் - சாறு; சுவை; இலக்கியச் சுவை; பாதரசம்; இனிமை
இரசவாதம் - இழிந்த உலோகங்களைப் பொன்னாக்கும் வித்தை [இரசவாதி]
இரசாயனம் - பொருள்களின் இயல்பு அமைப்புகளை ஆராயும் நூல்; காயசித்தி மருந்து; பிணி மூப்பு முதலியன போக்கும் மருந்து

இரட்சை - பாதுகாப்பு; மந்திரக் கவசம்; திருநீறு
இரட்டல் - இரட்டித்தல்; ஒலித்தல்; கர்ச்சித்தல்
இரட்டி - இருமடங்காகு; திரும்பச் செய்; மாறுபட்டிரு [இரட்டித்தல், இரட்டிப்பு]
இரட்டு - இரண்டாகு; ஒலி செய்; மாறியொலி செய்; முன்னும் பின்னும் அசைதல் செய் [இரட்டுதல்]
இரட்டுறு - இரு பொருள் படு; ஐயுறு; மாறுபடு [இரட்டுறுதல், இரட்டுதல்]

இரட்டை - இரட்டையாயுள்ள பொருள்கள்; இரட்டைப் பிள்ளைகள்; தம்பதிகள்; இரட்டை எண்; மிதுனராசி
இரட்டைக் கிளவி - இரட்டையாக நின்றால் மட்டும் பொருள் தரும் சொல் (எ.கா - சலசலவென)
இரட்டை நாடி - பருத்த உடம்பு
இரண்டு - இரண்டு என்னும் என்; சில
இரண்டு படு - பிரிவு படுதல்; பிளவு படுதல் [இரண்டு படுதல்]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:10 am

இரணகளம் - போர்க்களம்; பெருங்குழப்பம்
இரண வைத்தியம் - கத்தியால் அறுத்துச் செய்யும் வைத்திய சிகிச்சை; சத்திர சிகிச்சை [இரண வைத்தியன்]
இரணியம் - பொன்; பணம்
இரத்தக் கலப்பு - நெருங்கிய உறவு
இரத்த சம்பந்தம் - இரத்தக் கலப்பு; நெருங்கிய உறவு

இரத்தப் பிரியன் - கொலை விருப்பமுடையவன்
இரத்தம் - உதிரம்; சிவப்பு பவளம்; குங்குமம்; கொம்பரக்கு
இரத்த மண்டலி - சிவப்புப் புள்ளிகளுள்ள ஒரு விஷப் பாம்பு
இரத்த மூலம் - ஆசனத் துவாரத்திலிருந்து இரத்தம் வடியும் நோய்
இரத்தின கம்பளம் - வர்ணச் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கம்பளம்

இரத்தினம் - மணி; விலையுயர்ந்த கல்
இரதம் - தேர்; பல்; புணர்ச்சி
இரதி - மன்மதன் மனைவி; விருப்பம்; புணர்ச்சி
இரப்பு - பிச்சையெடுத்தல் [இரப்பாளன்]
இரலை - ஒருவகை மான்; ஒரு வகை ஊதுகொம்பு

இரவல் - பிச்சையெடுத்தல்; கடனாக வாங்கும் பொருள்
இரவி - சூரியன்; மலை; மூக்கின் வலப்பக்கத் துவாரம்; வாணிகத் தொழில்
இரவிக்கை - மாதர் அணியும் சட்டை
இரவு - இராத்திரி; மஞ்சள்; பிச்சையெடுத்தல்
இரவுக்குறி - (அகப்பொருள்) இரவில் காதலர் கூடுவதற்குக் குறிக்கப்பட்ட இடம்

இரற்று - சத்தமிடு; (பறவை போல்) கத்துதல் செய் [இரற்றுதல்]
இரா - இராத்திரி
இராக்கதம் - பெண்ணை வலிதல் கொண்டுசென்று மணந்து கொள்ளல்
இராக் குருடு - மாலைக்கண்
இராகம் - இசை; ஆசை; நிறம்; சிவப்பு

இராகு - நவக்கிரகங்களில் ஒன்று
இராச்சியம் - (ராஜ்யம்) ஓர் அரசன் ஆளும் தேசம்; நாடு
இராசதந்திரம் - அரசியல்
இராசதானி - ஒரு நாட்டின் தலைநகரம்; ஒரு மாகாணம்
இராசபாட்டை - நெடுஞ்சாலை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:10 am

இராசபிளவை - முதுகில் தோன்றும் பிளவைக் கட்டி
இராசரிகம் - அரசாட்சி
இராசன் - மன்னன்; தலைவன்; சந்திரன்
இராசா - அரசன்
இராசாளி - வல்லூறு என்னும் பறவை

இராசி - குவியல்; கூட்டம்; இனம்; வகை; மொத்தம்; (வானசாஸ்திரம்) வானவீதியில் பன்னிரண்டு இராசிகளில் ஒன்று; பொருத்தம்; சமாதானம்; வரிசை
இராட்டினம் - (சக்கரமுள்ள) நூற்கும் கருவி; நூல் சுற்றும் கருவி; கிணற்றிலிருந்து நீர் இறைக்க உதவும் கப்பி; ஏறிச் சுழன்று விளையாட உதவும் சுழல் தேர்
இராணுவம் - சைனியம்
இராத்தல் - நாற்பது தோலா எடை
இராமபாணம் - இராமரின் அம்பு; புத்தகங்களைத் துளைக்கும் ஒரு பூச்சி வகை; ஒருவகை மல்லிகை

இராயசம் - எழுத்து வேலை; குமாஸ்தா
இராவணன் - கடவுள்; இலங்கை வேந்தன்
இராவுத்தன் - குதிரை வீரன்; தமிழ் முஸ்லிம்களில் ஒரு பிரிவினரின் பட்டப்பெயர்
இர் - பின்வாங்கி ஓடு; விலகி விழு; தோற்று ஓடச் செய்; கெடு; அச்சம் கொள் [இரிதல், இரித்தல்]
இரியல் - விரைந்தோடுதல்; அச்சத்தால் நிலை குலைதல்; அழுதல்

இரியல்போ - தோற்றோடு
இரு - பெரிய; கரிய; உளதாகு; உட்கார்; பிழைத்திரு; உள்ளிறங்கு; உத்தேசி; கருது; ஒரு துணை வினை (எ.கா - தடித்திருந்தான்) [இருத்தல்]
இருக்கு - ரிக்வேதம்; வேதமந்திரம்
இருக்கை - அமர்ந்திருத்தல்; ஆசனம்; வசிக்குமிடம்; ஊர்; கோயில்
இருசு - வண்டியச்சு; நேர்மை; மூங்கில்

இருட்சி, இருட்டு - ஒளியற்ற தன்மை; இருள்; அறியாமை
இருட்டு - இருளடை [இருட்டுதல்]
இருடி - (ரிஷி) முனிவன்
இருத்து - உட்காரச் செய்; நிலைபெறச் செய்; அழுத்து [இருத்துதல்]
இருதயம் - உடலில் இரத்த ஓட்டம் நடைபெறக் காரணமான உறுப்பு; மனம்; மையம்

இருதலை - இரண்டு தலைகள்; இருமுனை; இருபக்கம்
இருது - (ருது) பருவகாலம்; மகளிர் பூப்பு
இருப்பு - ஆசன்; வசிக்குமிடம்; கையிருப்பாகவுள்ள பணம் அல்லது பொருள்
இருப்புப்பாதை - இரயில்பாதை
இருப்பை - இலுப்பை மரம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:10 am

இருபான் - இருபது
இருபெயரொட்டு - இரு பெயர்கள் இணைந்து 'ஆகிய' என்னும் உருபுதொக்கு நிற்பது
இருபோகம், இருபூ - நிலத்தில் ஓர் ஆண்டில் இருமுறை பயிரிடல்
இரும்பு - இரும்பு உலோகம்; கரும்பொன்; ஆயுதம்; கருவி
இருமல் - இருமுதல்

இருமுதுகுரவர் - தாய்; தந்தையர்
இருவாட்சி, இருவாய்ச்சி - ஒரு வகை மல்லிகைச் செடி
இருவினை - நல்வினை தீவிணைகள்
இருள் - இருட்டு; கறுப்பு; அஞ்ஞானம்; குற்றம்; துன்பம்; ஒரு நரகம்; மரகதக் குற்றங்களில் ஒன்று; யானை; இருள் மரம்
இருளன் - ஒரு கிராம தெய்வம்

இரேகை - (ரேகா) கோடு; வரி; கைகால் முதலியவற்றிலுள்ள வரை; சந்திர கலை; எழுத்து
இரை - ஒலி; பிராணிகளின் உணவு; ஒலி செய்; ஓசையுண்டாக்கு; பெருமூச்சு விடு [இரைதல், இரைத்தல், இரைப்பு]
இரைச்சல் - ஓசை; சத்தம்
இரைப்பை - வயிற்றில் உணவு தங்கும்பை
இல் - வீடு; மனைவி; இல்லறம்; குடி; இன்மை; சாவு

இல்லக் கிழத்தி - மனைவி
இல்லம் - வீடு; தேற்றாமரம்
இல்லவள் - மனைவி
இல்லறம் - குடும்ப வாழ்க்கை; குடும்ப வாழ்க்கைக்குரிய கடமைகள்
இல்லாமை - இன்மை; வறுமை

இல்லாள் - மனைவி
இல்லான் - வறியவன்
இல்லை - உண்டு என்பதற்கு எதிர்மறை
இலக்கணம் - அழகு; இயல்பு; வரையறுத்துக் கூறுகை; மொழியிலக்கணம்
இலக்கம் - பிரகாசம்; நூறாயிரம்; எண்; குறி; இலக்கு

இலக்கியம் - குறி; இலக்கு; இலக்கண விதிகளுக்கு மேற்கோளாகக் காட்டப்படும் நூல் பகுதி; ஆன்றோர் நூல்
இலக்கினம் - சுப கரியம் செய்யக் குறிக்கப்படும் நேரம் (சுபமுகூர்த்தம்)
இலக்கு - அம்பு முதலியன் எய்யும் குறி; நாடும் பொருள்; அளவு; எல்லை
இலக்குமி - விஷ்ணுவின் தேவி; செல்வம்; செழிப்பு
இலகிமா - (அட்டசித்திகளின் ஒன்றான) பளுவின்மையாதல்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:11 am

இலகு - பளுவின்மை; இலேசு; எளிமை; தீவிரம்; குறைதல்; தணிதல்; குற்றெழுத்து; அகில் மரம்; பளபளப்பாயிரு; விளங்கு [இலகுதல்]
இலங்கணம் - பட்டினியிருத்தல்
இலங்கு - பிரகாசி; ஒளிவிடு [இலகுதல்]
இலங்கை - sriலங்கா; ஈழ நாடு
இலச்சினை - முத்திரை; முத்திரை மோதிரம்

இலச்சை - நாணம்; வெட்கம்
இலஞ்சி - குளம்; ஏரி; மதில்; குணம்; இயல்பு; கொப்பூழ்; சாரைப் பாம்பு
இலந்தை - சிறு கனிகளைத் தரும் ஒரு முள் மரம்; சூளம்
இலம் - வறுமை
இலம்பகம் - மாதர் நெற்றியிலணியும் ஓர் ஆபரணம்; பூமாலை; ஒரு காப்பிய நூலின் உட்பிரிவு

இலம்போதரன் - (பெரு வயிறுள்ள) விநாயகன்
இலவங்கம் - கிராம்பு; கருவா மரம்
இலவசம் - விலையின்றிப் பெறுதல்
இலவந்திகை - எந்திரத்தினால் நீரை நிரப்பவும் வெளியேற்றவும் ஏற்பட்டுள்ள ஒரு குளம்; எந்திர வாவி; வாவி சூழ் சோலை
இலவு, இலவம் - இலவ மரம்

இலாகா, இலாக்கா - அரசாங்கப் பிரிவு
இலாகிரி - மதுபான மயக்கம்; மதுபானக் களிப்பு
இலாஞ்சனை , இலாஞ்சனம் - அடையாளம்; முத்திரை
இலாடம் - நெற்றி; குதிரை லாடம்; புளிய மரம்
இலாபம் - ஆதாயம்; ஊதியம்; நற்பயன்

இலிங்கம் - அடையாளம்; குறி; சமஸ்கிருத மொழியில் பெயர்ச் சொல்லின் பால்; சிவலிங்கம்; சாதிலிங்கம்
இலுப்பை - இருப்பை
இலேகன் - எழுதுவோன்; சித்திரம் வரைவோன்; ஓவியன்
இலேகியம் - நக்கி உண்ணும்படி பக்குவப்படுத்தப்பட்ட மருந்து வகை
இலேசம் - நுட்பம்; அற்பம்

இலேசு - அற்பம்; நொய்மை
இலை - மரம் செடிகளின் இலை; வெற்றிலை; பூவிதழ்; தகட்டு வடிவப் பகுதி; சக்கரத்தின் ஆர்
இலைக்கறி - கீரைக்கறி
இலைமறை காய் - இலைகளால் மறைக்கப்பட்டுள்ள காய்போலிருக்கும் மறைபொருள்
இலையமுது - வெற்றிலை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக