ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - அ

+2
Dr.S.Soundarapandian
சிவா
6 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:08 pm

First topic message reminder :

அகிலம் - உலகம்
அகம் - உள்ளே
அருகே - பக்கத்தில்
அடுத்த - வேற


அரசர் - மன்னர்
அதிகாரி - வேலைப் பார்ப்பவர்
அதிகம் - நிறைய
அறிவிப்பு - சொல்லுதல்


அசைவு - நகருதல்
அபிப்ராயம் - தன் விருப்பத்தை கூறுதல்
அமருதல் - உட்காருதல்
அவசரம் - மிக வேகமாக


அடிப்படை - அத்தியாவசியமான
அஞ்சுதல் - பயப்படுதல்
அங்கீகாரம் - உரிமை
அழைத்தல் - கூப்பிடுதல்


அதிர்ச்சி - வியப்பு
அருள்வாக்கு - தெய்வவாக்கு
அலுவலகம் - வேலை பார்க்கும் இடம்
அனுப்புதல் - கொடுத்தல்


அழகு - பெண்
அமைப்பு - நிறுவனம்
அறிஞர் - திறமையானவர்
அலைகள் - காற்றால் கடலில் உருவாகும் நீரின் மோதல்கள்

அல்லிப்பூ - பூ வகைகளுள் ஒன்று


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:13 pm

அக்கினிமணி - சூரியகாந்தம்.
அக்கினி மரம் - காட்டுப்பலா.
அக்கினி முகம் - சேங்கொட்டை.
அக்கீம் - முகம்மதிய மருத்துவன்.
அக்கு - அகில் : கண் : உருத்திராக்கம் : எலும்பு : சங்குமணி : பலகறை :
எருத்துத் திமில் : ஒரு சாரியை : எட்டி மரம்.


அக்குசை - துறவு பூண்டு தவம்புரியும் சமணக் கைம்பெண்.
அக்குச்சரி - சங்குவளை.
அக்குத்து - ஐயம் : நிபந்தனை.
அக்குத்தொக்கு - ஒட்டுப்பற்று.
அக்குரு - விரல்.


அக்குரோணி - 21870 தேர் : 21870 யானை : 65610 குதிரை : 109350 காலாள் கொண்ட படை.
அக்குல்லி - ஒருவகைச் சிற்றுண்டி.
அக்குவடம் - சங்கு மணிமாலை.
அக்குளு - கூச்சம்.
அக்குளுத்தல் - கூச்சமுண்டாக்குதல்.


அக்குள் - கக்கம்.
அக்கை - தமக்கை : அக்காள்.
அங்க கணிதம் - எண் கணக்கியல் : நூல்.
அங்ககீனம் - உறுப்புக் குறைவு.
அங்கசங்கம் - பகட்டு : புணர்ச்சி.


அங்கசம் - குருதி : மயிர் : காமம் : நோய்.
அங்கசன் - காமன் : மகன் : மன்மதன்.
அங்கசாலைக்காரன் - கிராமப்பணி செய்வோன்.
அங்கசேட்டை - கால் கைகளால் குறும்பியற்றல்.
அங்கணம் - சலதாரை : சேறு : முற்றம் : இருதூண் : நடுவிடம் : உள்ளறை :
சுடுமரம் : பத்து முழத்தளவு : பரப்பு : பொரிகாரம் : வெண்காரம் : மதகு.


அங்கணன் - சிவபெருமான்.
அங்கணாளன் - கண்ணோட்டம் உடையவன் : சிவபிரான்.
அங்கணி - பார்வதி : கற்றாழை : அழகிய கண்ணையுடையவன்.
அங்கண் - அவ்விடம் : கண்ணோட்டம் : அப்பொழுது.
அங்கதச் செய்யுள் - வசைப்பாட்டு.


அங்கதம் - மார்பு : தோளணி : பழிச்சொல் : பொய் : பாம்பு : யானையுணவு.
அங்கதன் - இலக்குவனின் மகன் : வாலி மகன்.
அங்கதி - கொடை : தீ : நோய் : பார்ப்பான் : நான்முகன் : வாயு : திருமால் : தீக்கடவுள்.
அங்கதீ - கொடை : தீ : நோய் : பார்ப்பான் : வாயு.
அங்கதை - தென்திசை யானைக்குப் பெண்யானை.


அங்கநியாசம் - மந்திரத்தோடு உறுப்புகளைத் தொடுகை.
அங்கபடி - குதிரையேறும் படி : அங்கவடி.
அங்கப்பால் - முலைப்பால்.
அங்கப் பிராயச்சித்தம் - தேக சுத்திக்காகச் செய்யும் ஒரு பிராயச்சித்தம்.
அங்கமாலை - நூல் வகையில் ஒன்று : எலும்பு மாலை.


அங்கம் - உடல் : உறுப்பு : எலும்பு : அடையாளம் : அரசாங்கம் : ஒரு நாடு : நாடகவுறுப்பு : கட்டில்.
அங்கயோகம் - யோகம் : ஏட்டில் ஒன்று : உதயம் : கேந்திரம் : மூலத்திரிகோணம்.
அங்கரக்கா - நீண்ட சட்டை : மெய்ச் சட்டை.
அங்கரட்சிணி - போர்க்கவசம்.
அங்காரகம் - உடம்பில் பூசப்படும் பரிமளத் திரவியம்.


அங்கர் - அங்க நாட்டினர்.
அங்கலாய்ப்பு - கலக்கம் : அருவருப்புக் கொள்ளுகை : பேராசை.
அங்கலிங்கம் - வீர சைவர்கள் மார்பில் அணியும் லிங்கம்.
அங்கவிட்சேபம் - அபிநயம் : சாடை : குறி.
அங்கனை - பெண்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:14 pm

அங்கன் - புதல்வன்.
அங்களி - கற்றாழை : படரும் முட்செடி.
அங்கா - வாய் திறத்தல்.
அங்காகமம் - சைன ஆகம வேதங்கள் மூன்றனுள் ஒன்று.
அங்காங்கிபாவம் - அவயவ அவயவிகளது சம்பந்தம்.


அங்காடி - கடை : கடைத்தெரு.
அங்காடிக்கூலி - ஒருவகை வரி.
அங்காடிபாரித்தல் - மனக்கோட்டை கட்டுதல்.
அங்காத்தல் - வாய் திறத்தல்.
அங்காமினி - ஆகாசகாமினி என்னும் வித்தை.


அங்காரம் - மாத்துவர் நெற்றியிலணியுங் கரிக்கோடு.
அங்காரகன் - செவ்வாய் : செந்நீர் : முத்து : நெருப்பு.
அங்காரவல்லி - குறிஞ்சா : சிறு தேக்கு.
அங்காரி - வெண்காரம்.
அங்காரிகை - கரும்பு : நன்னாரி.


அங்கி - நெருப்பு : சட்டை : கார்த்திகை.
அங்கிகை - இரவிக்கை : கஞ்சுகம் : கச்சு.
அங்கிசம் - கூறு.
அங்கிடுதொடுப்பி - குறளை கூறுவோன்.
அங்கிதம் - அடையாளம் : உடற்றழும்பு.


அங்கிநாள் - கார்த்திகை : அத்தநாள்.
அங்கீகரி - ஏற்றுக் கொள் : உடன்பாடு.
அங்குசதாரி - விநாயகன்.
அங்குசம் - யானைத் தோட்டி : வாழை.
அங்குமிங்கும்பாடி - இரண்டு கட்சியையுஞ் சேர்ந்தவன் : நம்ப முடியாதவன்.


அங்குஸ்தான் - விரற்புட்டில் (தையற்கார்கள் விரலில் அணிவது).
அங்குசோரி - அறுகம்புல்.
அங்குடம் - திறவுகோல்.
அங்குட்டம் - பெருவிரல்.
அங்குரகம் - கூடு.


அங்குரம் - முளை : தளிர் : குருதி : நீர் : நங்கூரம் : மயிர்.
அங்குரார்ப்பணம் - பாலிகை : தெளிக்கை : முளையிடுதல்.
அங்குரி - அங்குலி.
அங்குலம் - கைவிரல் : விரலகல அளவு.
அங்குலி - மோதிரம் : விரல் : புருவ மத்தி : துதிக்கை : யானை மணி.


அங்கூடம் - அம்பு : கீரி : நகுலம் : அழகிய கூடம்.
அங்கையில்வட்டு - அடைவதற்கு மிகவும் எளியது.
அங்கை - அகங்கை.
அங்கோலம் - அழிஞ்சில் மரம்.
அங்ஙனம் - அவ்விதம் : அவ்விடம்.


அசகண்டா - தைவேளை.
அசகம் - மலையாடு.
அசகரம் - பெரும்பாம்பு.
அசகாயசூரன் - துணைவேண்டாப் பெரு வீரன்.
அசக்கல் - கட்டல் : அசைத்தல்.


அசங்கதம் - ஒழுங்கின்மை : பொய்.
அசங்கமம் - அசட்டை : இகழ்ச்சி : ஒவ்வாமை : கூடுதலின்மை: புலவி.
அசங்கம் - பற்றின்மை.
அசங்கன் - அறிவற்றவன் : ஒட்டாதவன் : அசடன்.
அசங்கியம் - எண் இறந்தது : அருவருப்பு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:14 pm

அசங்கை - பயமின்மை : மதிப்பின்மை : ஐயமின்மை.
அசஞ்சலன் - அசைவற்றவன் : சலியாதவன்.
அசடன் - சடம் அல்லாதவன் : மூடன் : கீழ்மகன் : பேதை.
அசடு - கீழ்மை : பேதைமை : மறுவுடைமை.
அசடுதட்டுதல் - பொலிவழிதல் : அறியாமை புலப்படுதல்.


அசட்டை - மதியாமை : பாராமுகம்.
அசதி - சடிதி : அயர்ச்சி : மறதி : கோவை பெற்ற இடையன் : கற்பில்லாதவள் : அசரீரி.
அசதியாடல் - நகைத்துப் பேசுதல்.
அசதிக்கிளவி - பரிகாசச் சொல்.
அசத்து - பொய் : மாயை : இல்லாதது.


அசத்யகதனம் - பொய் பேசுகை.
அசநவேதி - சீரகம்.
அசபை - அம்ச மந்திரம்.
அசப்பியம் - அவைக்கடாத பேச்சு.
அசப்பு - பராக்கு.


அசம் - ஆடு : ஆன்மா : ஈரவுள்ளி : சந்தனம் : மூன்றாண்டு நெல்.
அசம்பாவிதம் - பொருத்தமில்லாதது.
அசம்பி - அசம்பை : பிரயாணிகளின் தோட்பை.
அசம்பிரேட்சியம் - ஆராய்ச்சியின்மை.
அசரணை - புகலற்றவன்.


அசரம் - நிலைத்திணை.
அசரீரி - வானொலி : உருவிலிவாக்கு.
அசர்தல் - தாழ்த்தல்.
அசலகன்னிகை - உமாதேவி.
அசலக்கால் - தென்றல்.


அசலம் - மலை : அசையாதது.
அசலன் - கடவுள்.
அசலலிங்கம் - வழிபாட்டிற்குரிய கோபுரம் முதலியன.
அசலை - உமாதேவி : நிலம்.
அசல் - அருகு : கொசுகு : சீலை : நிலம் : முதற்படி : மூலம் : வேறு.


அசவல் - அசறு : சேறு : கொதுகு.
அசவாகனன் - அக்கினிதேவன்.
அசறு - தலைச்சுண்டு : பொடுகு : ஒரு வண்டு : சேறு : சொறி : புண் : அசடு.
அசறை - அழிவின்மை : தளர்வின்மை.
அசற்காரியவாதம் - உற்பத்திக்கு முன் இல்லாமலே காரியம் தோன்றும் என்னும் கொள்கை.


அசற்சரக்கு - முதல்தரமான பண்டம் : கலப்பற்ற பண்டம் : இயற்கை மருந்துச் சரக்கு.
அசற்சூத்திரர் - மாமிச பட்சணம் ஒழியாது சமயாசாரமின்றி இருக்கும் சூத்திரர்.
அசனம் - உணவு : சோறு : வெள்ளுள்ளி : வேங்கை மரம் : சிரிப்பு.
அசனி - இடி : வச்சிராயுதம் :சாம்பிராணியிலை.
அசனிபரதம் - இடியின் வீழ்ச்சி.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:15 pm

அசனியேறு - இடியேறு.
அசனிவேகம் - கட்டியங்காரனுடைய பட்டத்து யானை.
அசன் - திருமால் : சிவபிரான் : காமன் : இரகுவின் மகன்.
அசா - தளர்ச்சி : வருத்தம்.
அசாகசம் - அமைதி : பொய்.


அசாகளத்தனம் - ஆட்டின் கழுத்தில் தொங்கும் சதை.
அசாசி - கருஞ்சீரகம்.
அசாணிமூலி - வேலிப்பருத்தி.
அசாதகன் - பிறந்த நாட்குறிப்பு இல்லாதவன்.
அசாதசத்துரு - தருமபுத்திரன் : தனக்குப் பகையில்லாதவன் : தான் பிறருக்குப் பகையாகாதவன் :
வம்பு துன்பற்றவன் : புத்தர் காலத்திலிருந்த ஓர் அரசன்.

அசாரம் - சாரமற்றது : ஆமணக்கு மரம்.
அசாவாசி - வாயில் காப்பவன்.
அசாவிடுதல் - இளைப்பாறுதல்.
அசாவேரி - வசந்தகால இராகத்துள் ஒன்று.
அசி - படைக்கலம் : வாள் : ஏளனம் : நகைப்பு.


அசிதம் - கருமை.
அசிதன் - சிவன் : திருமால் : சனி புத்தன் : சகரன் தந்தை.
அசிதாரு - ஓர் அளறு.
அசிதை - அவுரி : பரை என்னும் சிவ சக்தியின் நால்வகைப் பிரிவுகளுள் ஒன்று.
அசிதோதம் - மேரு மலையின் சாரலில் உள்ள ஒரு வாவி.


அசித்தல் - உண்டல் : அழித்தல் : நசித்தல் : நகைத்தல் : இழித்தல்.
அசித்தன் - அழிக்கப்படாதவன் : கண்டிக்கப்படாதவன் : அகண்டிதவடிவமாயிருப்பவன்.
அசித்தி - கைகூடாமை.
அசித்து - சடப்பொருள்.
அசிந்தம் - கோடாகோடி : மரணம் : சிந்திக்கப்படாதது.


அசிந்தன் - மனத்துக்கெட்டாதவன்.
அசிபதம் - தத்துவமசி என்னும் மகா வாக்கியத்தின் மூன்றாம் பதம்.
அசியத்திரம் - கரும்பு : படையுறை : வாளலகு.
அசிப்பு - அவமதித்து நகைத்தல்.
அசிரம் - உடல் : அற்ப காலம் : காற்று : தவளை : மூன்றில் :
வெள்ளை வெட்டி வேர் : தலையற்றது : முண்டம்.


அசிரவணம் - செவிடு : காது மந்தம் : ஒலியின்மை.
அசிரி - ஆபாசமானவன்.
அசிதளம் - கருப்பூரம்.
அசினம் - தோல்.
அசீதி - எண்பது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:15 pm

அசீரணம் - செரியாமை.
அசீரியம் - அழியாதது : அழிவு படாதது.
அசு - சுவாசம் : பிராணவாயு : துக்கம்.
அசுகுசுத்தல் - அருவருத்தல் : சமுசயித்தல்.
அசுகை - அசூயை : எழில் : ஐயம் : அருவருப்பு.


அசுகுணி - ஒருவகைச் செடிபூச்சி : காதில் வரும் கரப்பான்.
அசுக்காட்டுதல் - பரிகசித்தல்.
அசுசி - தூய்மையின்மை.
அசுணம் - இசையறியும் ஒருவகைப் புள்.
அசுணன் - வெள்வெங்காயம்.


அசுத்தத்துவம் - தத்துவவகை மூன்றில் ஒன்று.
அசுத்தப்பிரபஞ்சம் - கலாதத்துவர் முதல் பிருதிவிதத்துவம் ஈறாகிய தத்துவம்.
அசுப்பு - விரைவு.
அசுமம் - இடியேறு : கல் : தீத்தட்டிக்கல் : முகில் : மணமற்ற மலர்.
அசுமரி - கல்லடைப்பு.


அசுமாரோபணம் - அம்மி மிதிக்கை.
அசுமாற்றம் - ஐயம் : சமுசயம் : சமிக்கினை : சாடை.
அசுமானகிரி - மேற்கட்டி.
அசுரகுஞ்சரம் - கயமுகாசுரன்.
அசும்பு - அசைவு : நீர்த்திவலை : ஊற்று : கிணறு : நீர்க்கசிவு : சேறு :
வழுக்கு நிலம் : ஒளிக்கசிவு : பற்று : குற்றம்.


அசுரசந்தி - இரணியவேளை : அந்தி நேரம்.
அசுரம் - வீரச்செயல் புரிந்து பெண் கொள்ளல்.
அசுரவத்தம் - அத்திமரம் : அரசமரம்.
அசுரை - இராசி : இருள் : வேசி : அரக்கியர்.
அசுவகதி - குதிரை நடை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:15 pm

அசுவகந்தி - அமுக்கிரா.
அசுவதாட்டி - தங்கு தடையின்மை.
அசுவத்தை - நெட்டிலிங்கம் : நெடுநாரை.
அசுவமேதம் - குதிரையைக் கொண்டு நடத்தும் வேள்வி.
அசுவம் - குதிரை : குதிரைப் பல் : பாஷாணம் : தூய்மையற்றது: அமுக்கிராக்கிழங்கு.


அசுவவாரியர் - குதிரை செலுத்துவோர்.
அசுவாமணக்கு - சிறுபூளை.
அசுவாரசியம் - இனிமையற்றது : பிரியமில்லாமை.
அசுவினி - அச்சுவினி : அசுவதி.
அசுழம் - நாய்.


அசூயை - பொறாமை : அவதூறு.
அசேதனம் - அழிவற்ற பொருள்.
அசேடம் - முழுவதும் : மிச்சம் இல்லாமை.
அசை - செய்யுளுறுப்புகளில் ஒன்று : மாடுகள் மீட்டு மெல்லும் இரை: தூக்குதல் : செயலுறவு : மெல்லப்போ.
அசைகொம்பு - கட்டுகொம்பு.


அசைச்சொல் - சார்ந்து வரும் இடைச்சொல்.
அசைதல் - ஆடுதல் : துடங்குதல் : தளர்தல் : சோம்பல் : இருத்தல் : தங்கல் : துவளல் : வருந்தல்.
அசைத்தல் - கட்டுதல் : இயக்குதல் : சொல்லுதல்.
அசைந்த - தங்கிய.
அசைப்பு - சொல் : இறுமாப்பு.


அசைவு - மடி : இளைப்பு : வருத்தம் : தோல்வி : தப்பு : உண்கை.
அசையும் பொருள் - சங்கமம்.
அசையாப்பொருள் - தாவரம்.
அசையாமணி - ஆராய்ச்சிமணி.
அசோகம் - நெட்டிலிங்கம் : மருது : பிண்டி : துக்கமின்மை : அசோகு.


அசோகன் - அருகன் : சோகமற்றவன் : காமன் : பீமன் : தேர்ப்பாகன்.
அசோகு - அசோகமரம் : அசோகவனம் : மருது : வாழை : அரம்பை : கதலி.
அசோண்டி - குறட்டை : அசோகவனம்.
அச்சகம் - நீர்முள்ளி : அச்சுக் கூடம்.
அச்சகாரம் - முன்பணம் : அச்சாரம்.


அச்சடிஓலை - முத்திரையிட்ட ஓலைப்பத்திரம்.
அச்சடையாளம் - உடலுறுப்பு : ஒப்புமை : அடிமை என்பதைக் காட்டுங்குறி : முத்திரையச்சு.
அச்சத்தி - கத்திரிப்பூண்டு.
அச்சந்தெளித்தல் - அறுகும் அரிசியும் இடல்.
அச்சபரம் - நாணல்.


அச்சபல்லம் - கரடி.
அச்சமாடல் - அச்சமுண்டாகப் பேசுதல்.
அச்சம் - பயம் : இலேசு : சரிசமானம் : அகத்தி : ஈரப்புல் : ஓர் அணி :
அச்சத்தில் ஈயுங்கடைப்படுதானம் : கரடி : கோரைப்புல் : தகடு : பளிங்கு : முன்புறம்.
அச்சரம் - நாவில் உண்டாகும் ஒரு நோய் : எழுத்து.
அச்சனம் - நெய்வார் கருவி வகையில் ஒன்று.


அச்சன் - தந்தை : கடவுள்.
அச்சாணி - கடையாணி.
அச்சாப்பொங்கா - மகளிர் ஆட்ட வகை.
அச்சாறு - ஊறுகாய்.
அச்சாணியம் - தீக்குறி முதலியவற்றால் நேரும் மனவிகற்பம் : அமங்கலம்.


அச்சி - நாயர் சாதிப் பெண் : ஒரு தேயம்.
அச்சியர் - ஆரியாங்கனைகள்.
அச்சிரம் - முன்பனிக்காலம்.
அச்சு - உருள்கோத்த மரம் : கட்டளைக் கருவி : எந்திரவச்சு : உடல் : அச்சம் : துன்பம் : உயிர் எழுத்து : வலி.
அச்சுக்கட்டி - ஆடையில் அச்சுவேலை செய்வோன் : நாட்டு ரண வைத்தியன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:15 pm

அச்சுக்கட்டு - வரம்புகட்டிய பெருவயல்.
அச்சுக்கம்பி - துப்பாக்கியில் மருந்து இடிக்கும் இரும்புக் கருவி.
அச்சுதம் - அறுகும் அரிசியும்.
அச்சுதன் - அழிவில்லாதவன் : திருமால்.
அச்சுதை - இறைவி.


அச்சுத்தாலி - காசுமாலை.
அச்சுத்திரட்டுதல் - வண்டியச்சு உருவாக்குதல்.
அச்சுரம் - நெருஞ்சில் குருங்கை.
அச்சுறுத்து - பயமுறுத்து.
அச்சோ - வியப்புக் குறிப்புச் சொல்.


அஞராட்டி - நோயுள்ளவன்.
அஞர் - சோம்பல் : துன்பம் : நோய் : வழுக்கு நிலம் : அறிவிலார்.
அஞலம் - கொசுகு : மின்மினி : துளம்பு.
அஞல் - கொசுகு.
அஞ்சதி - காற்று.


அஞ்சம் - அன்னப்புள் : அசபா மந்திரம்.
அஞ்சலர் - பகைவர்.
அஞ்சலளித்தல் - அபயங்கொடுத்தல்.
அஞ்சலி - கும்பிடுகை : வௌவால் : காட்டுப்பலா : மாவிலிங்கம்.
அஞ்சலினவர் - பாஞ்சராத்திரிகள்.


அஞ்சல் - பயப்படல் : கலங்கல் : தபால் : நிறுத்துமிடம்.
அஞ்சற்குளச்சி - குங்குமபாஷாணம்.
அஞ்சனக்கலிக்கம் - மறைபொருளைக் காட்டும் மந்திர மை.
அஞ்சனம் - கண்ணுக்கிடும் மை : கருமை : இருள் : நீக்கல்.
அஞ்சனவுருவன் - திருமால்.


அஞ்சனவெற்பு - திருவேங்கட மலை.
அஞ்சனாதார் - சாகுபடி மதிப்பிடுபவன்.
அஞ்சனி - காயா : நாணற்புல்.
அஞ்சனை - அனுமன்தாய்.
அஞ்சி - அதியமான் : தலைவன் : தபால் : அஞ்சிதம் : கண்.


அஞ்சிகம் - கண் : நாணயம் : விழி.
அஞ்சிதம் - உண்டாதல் : தலைசாய்த்தல் : நல்லறிவு : பூசித்தல் : பொருந்தல் : வணக்கம்.
அஞ்சுகம் - கிளி.
அஞ்சுதல் - பயப்படுதல்.
அஞ்செவி - உட்செவி.


அஞ்செழுத்து - பஞ்சாக்கரம்.
அஞ்ஞன் - அறிவற்றவன்.
அஞ்ஞாதசுகிர்தம் - தன்னை அறியாமல் வந்த புண்ணியம்.
அஞ்ஞாதம் - அறியப்படாதது.
அஞ்ஞானம் - அறியாமை.


அஞ்ஞை - அன்னை : அறிவிலான்.
அடகு - இலைக்கறி : கீரை : ஈடு : மகளிர் விளையாட்டுவகை.
அடக்கம் - மனமொழி மெய்கள் அடங்குகை : வரம்பு கடவா தடங்குகை : வாங்கினவிலை : ஒரு தோற் கருவி.
அடக்கல் - மறைத்தல் : பணியச் செய்தல்.
அடக்கியல்வாரம் - சுரிதகம்.


அடக்கு - அடங்கச் செய் : கீழ்ப்படுத்து : சுருக்கு.
அடக்குமுறை - கண்டித்தடக்குகை.
அடங்கக் கேள் - சுருங்கக் கேள்.
அடங்கலர் - மனவடக்கம் அற்றவர் : பகைவர்.
அடங்கல் - சுருங்கல் : விடுதல் : அடங்குகை : முழுதும் : தங்குமிடம் : சாகுபடிக் கணக்கு : நெருங்குதல்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:16 pm

அடங்கல் முறை - முதல் ஏழு தேவாரத் திருமுறைகள்.
அடங்காப்பிடாரி - எவர்க்கும் அடங்காதவள் : அடங்காமாரி.
அடங்கார் - பகைவர்.
அடங்காவாரிதி - கடல் உப்பு : மூத்திரம்.
அடசுதல் - செறித்தல் : சிறிது விலகுதல்.


அடஞ்சாதித்தல் - வன்மங்கொள்ளுதல்.
அடதாளம் - தாளவகை.
அடத்தி - வாசி : தரகு.
அடந்தை - திருவரங்கத்தில் உள்ள ஒரு துழாய் வனம்.
அடம்பம்விதை - வாதுமைப் பருப்பு.


அடப்பன் - கடப்பமரம் : பரவர் : பட்டப் பெயர்.
அடப்பான் - பைரிப்புள்
அடம் - பிடிவாதம் : வர்மம் : பொல்லாங்கு : சஞ்சாரம்.
அடம்பு - அடம்பங்கொடி.
அடயோகம் - நால்வகை யோகங்களில் ஒன்று.


அடரடிபடரடி - பெருங்குழப்பம்.
அடரார் - பகைவர்.
அடர் - நெருக்கம் : நொய்ம்மை : தகடு : இதழ் : ஐயம்.
அடர்த்தி - நெருக்கம்.
அடர்ந்தேற்றம் - கொடுமை : நெருக்கிடை.


அடலை - துன்பம் : போர் : நீறு : சுடுகாடு.
அடலைமுடலை - வீண்வார்த்தை.
அடல் - வலிமை : வெற்றி : கொல்லுதல் : மீன் வகை.
அடவி - காடு : மலை சேர்ந்த நாடு : மிகுதி.
அடவிச் சொல் - கோரோசனை.


அடவியன் - துடைப்ப வகை.
அடவியல் திருடி - சதுரக்கள்ளி.
அடளை - கடல் மீன் வகை.
அடா - இகழ்வு : வியப்புகளின் குறிப்பு : அடக்கி.
அடாசனி - புளியாரை.


அடாணா - ஓர் இராகம்.
அடாதது - தகாதது : சமைக்காதது.
அடாதுடி - தீம்பு : தீச்செயல்.
அடாத்தியம் - அடாதது : பொருந்தாதது.
அடாத்து - பலாத்காரம் : அவமதி : தகாதது : பொருந்தாதது.


அடாப்பழி - தகாத நிந்தை.
அடார் - விலங்குகளை யகப்படுத்தும் பொறி.
அடாவந்தி - இட்டேற்றம் : துன்பம் : அநியாயம்.
அடாற்காரம் - பலாத்காரம்.
அடி - களவு : காலடி : ஆதி : தாக்கு : கீழ் : மகடூஉ முன்னிலை : செருப்பு : செய்யுள் உறுப்பில் ஒன்று.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:16 pm

அடிகள் - ஆசாரியர் : முனிவர் : கடவுள்.
அடிகாற்று - பெருங்காற்று : சண்டமாருதம்.
அடிகோலுதல் - தொடங்குதல் : அடிப்படையிடுதல்.
அடிக்கடி - திரும்பத் திரும்ப.
அடிக்கணை - கணைக்கால்.


அடிக்கலம் - சிலம்பு : அடிக்க மாட்டோம் : காலணி : கப்பல்தளம்.
அடிக்கழஞ்சி பெறுதல் - பெருமதிப்புப் பெறுதல்.
அடிக்காயம் - அடியாலுண்டான ரணம்.
அடிக்கீழ் - அடியுறை மாக்கள் : வணக்கமொழி : அடியுறை : ஆதரவின் கீழ்.
அடிக்குச்சி - அளவுகோல்.


அடிக்குடில் - அடிமைக்குலம் : அடிச்சேரி : வேடர் இருக்கும் ஊர் : நகர்ப்புறம் : சிற்றூர்.
அடிக்கொருக்கால் - அடிக்கடி : அடிக்கொருக்க.
அடிக்கோலுதல் - தொடங்குதல் : அடிப்படையிடுதல் : அடி கோலுதல்.
அடிசாய்தல் - அடியின் நிழல் சாய்தல்.
அடிசில் - உணவு.


அடிசிற்சாலை - அன்னசத்திரம்.
அடிசிற்புறம் - உணவுக்காக விட்ட இறையிலி நிலம்.
அடிச்சிற்றளி - மடைப்பள்ளி.
அடிச்சால் - உழவின் முதற்சால்.
அடிச்சி - அடிமைப் பெண் : அடியவள்.


அடிச்சீப்பு - வாழைக் குலையின் அடிச்சீப்பு.
அடிச்சுவடு - காலடிச் சுவடு.
அடிசூடு - பாதத்தில் உறைக்கும் வெப்பம்.
அடிச்செருப்பாதல் - அடிமைப்பட்டு உழைத்தல்.
அடிச்சேரி - பணியாளர் குடியிருப்பு : நகர எல்லையில் இருக்கும் ஊர்.


அடிச்சேரியாள் - குச்சுக்காரி : ஒழுக்கம் பிழைத்தவள்.
அடிஞானம் - அருள் ஞானம் : சிவ ஞானம்.
அடிதடி - சண்டை : அடிதண்டம்.
அடிதண்டம், பிடிதண்டம் - முழுமையாக வசப்பட்ட பொருள்.
அடிதண்டா - மண்வெட்டி : கதவை இறுக்கும் நீண்ட தாழ்.


அடிதலை தடுமாற்றம் - முதல் முடிவு தெரியாது தடுமாறுதல் : முன் பின்னறியாது விழித்தல்.
அடிதிரும்புதல் - பொழுது சாய்தல்.
அடித்தடம் - அடிச்சுவடு.
அடித்தாறு - உள்ளங்கால் இரேகை.
அடித்தலம் - கீழிடம் : அத்திவாரம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:17 pm

அடித்தளம் - அடிவரிசை : அடிமட்டம்.
அடித்தி - வியாபாரப் பிரதிநிதி : அடியவள்.
அடித்திப்பை - ஆதாரம்.
அடித்தி வியாபாரம் - மொத்த வணிகம்.
அடித்துகளாற்றல் - காலைச் சுத்தஞ் செய்தல் : விருந்தோம்பும் முறையில் ஒன்று : கால் கழுவ நீர் உதவுதல் : துகளவித்தல்.


அடித்தாறு - மரத்தின் அடிக்கட்டை.
அடித்தொழில் - குற்றேவல்.
அடித்தோழி - தலைமைத் தோழி.
அடிநகர்த்தல் - இடம் விட்டுப் பெயர்தல்.
அடிநாள் - முதல் நாள் : ஆதிகாலம்.


அடிநிலை - மரவடி.
அடிநிழலார் - குடிகள்.
அடிநீறு - பாதத்தூளி.
அடிபடுதல் - பழமையாதல் : தாக்குண்ணுதல் : நீக்கப்படுதல் : வழங்குதல் : எட்டுதல்.
அடிபறிதல் - வேரோடு பெயர்தல்.


அடிபாடு - மாடு முதலியவற்றின் உழைப்பு.
அடிபார்த்தல் - நிழல் அளந்து பொழுது குறித்தல்.
அடிபிடி - சண்டை.
அடிபிழைத்தல் - நெறி தவறி நடத்தல் : பெரியோர்கட்குத் தவறு செய்தல்.
அடிபிறக்கிடுதல் - பின்வாங்குதல்.


அடிபுதையரணம் - செருப்பு : தொடுதோல்.
அடிபெயர்த்தல் - காலெடுத்து வைத்தல்.
அடிப்படுதல் - அடிச்சுவடுபடுதல் : கீழ்ப்படுதல் : பழகுதல்.
அடிப்படுத்தல் - நிலைபெறச் செய்தல்.
அடிப்படை - சுவரின் அடித்தளம் : ஆதாரம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum