புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_m10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10 
366 Posts - 49%
heezulia
வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_m10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_m10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_m10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_m10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10 
25 Posts - 3%
prajai
வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_m10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_m10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_m10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_m10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_m10வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 31, 2010 4:17 pm

கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்கள் லண்டன் தமிழ் மக்களின் அன்பு கருதி லண்டன் தமிழ்ச்சங்கத்துக்கு வருகை தந்து அவர்களுன் முறைசாரா முறையில் கலந்துரையடினார் (informal chat) .அவரின் உரை மற்றும் கலந்துரையாடலின் சாராம்சம்:

கடல் கடந்திருந்தாலும் கூட, இடம் மாறி இருந்தாலும் கூட தமிழ்ப்பெருமக்கள் தடம் மாறிப் போக மாட்டார்கள் என்பதற்கு நீஙகளெல்லாம் உதாரணம். உங்களைப்பார்க்கிறபோது எனக்கு நம்பிக்கை வருகிறது. நீங்களெல்லாம் வைரமுத்து ஒரு தமிழன்,தமிழ் கவிதைக்குப் பிரதிநிதி, தமிழ்க் கலாச்சாரத் தூதுவன் என்றெண்ணி உங்கள் நேரத்தைச் செலவழித்து இங்கு வந்ததற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இங்கு ஒரு சகோதரர் கேட்டதுபோல் ரஜினியும் ஒருமுறை என்னைக்கேட்டார் : 'நீங்கள் சிகரத்தில் ஏறி விட்டீர்கள்... வானத்தையும் அடைந்தாகிவிட்டது... அதன் பின் என்ன?'. அவருக்குச் சொன்ன அதே பதிலைத்தான் நான் உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்: 'சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு. சிகரம் கூர்மையானது. அதில் வசிக்கமுடியாது. அதனால் வானத்தில் ஏறு. வானத்தில் ஏறியபின் அதற்கு மேல் போய்விடாதே. மக்கள் இதயங்களுக்குள் போகவேண்டும். இறங்கி வா.' அதுபோல சிகரத்துக்குப் போனாலும், வானத்துக்குப் போனாலும் நிலாவிலே குடியேறினாலும் கூட தமிழ் மண்ணுக்குத் தமிழ் இதயங்களைத் தேடித்தான் நாங்கள் வருவோமே தவிர தமிழ் மண்ணைவிட்டு விலகிப் போய்விடவே மாட்டோம்.

இங்கு கவிதைபடித்த நண்பர்களின் கவிதைகள் மிகவும் நன்றாக இருந்தன.'வா' என்று சொன்னவுடன் உங்கள் வாசலுக்குத் தமிழ் வரக்கூடிய தூரத்தில் வைத்திருப்பதற்காக என்னுடைய வாழ்த்துக்கள்.

இன்று தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் கவிதைகள்தான். பெண் பார்க்கப்போனால் 'வீணைவாசிக்கத் தெரியுமா' என்று கேட்ட காலம் போய், 'பெண்ணுக்குப் புதுக்கவிதை தெரியுமா' 'பையனுக்கு கவிதை எழுதத்தெரியுமா' என்றுதான் கேட்கிறார்கள். ஆனாலும் எந்தப்பூவில் என்ன தேனோ என்று நான் பார்க்கவிழைவதுண்டு. சமீபத்தில் ஒரு கிராமத்து இளைஞனின் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது:

'இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களாம்
அதனால்தான் திரும்பிப்பார்க்கமுடியவில்லை...


எவ்வளவு நாசூக்கு! கவிதை என்பதென்ன...'உள்ளத்தில் கவிவது... நெஞ்சில் தைப்பது.'சிறந்த உத்திகளால் இங்கு கவிதை படைத்தீர்கள்,மிக்க மகிழ்ச்சி.

இங்கு இருக்கும் எத்தனை பேருக்குப் படைப்பாற்றல் உண்டோ அத்தனை பேரும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று தொடர்ச்சியாக எழுதிப்பழகுங்கள். உங்களுக்குக் கிட்டி இருக்கும் அனுபவம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குக் கிட்டி இருக்காது. கலாச்சார நெருக்கடியைப் பற்றியோ, கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க நீங்கள் கொடுக்கும் விலை பற்றியோ நாங்கள் எழுத முடியாது. இங்கிருக்கும் சிந்தனையாள்ர்களும் எழுத்தாளர்களும்தான் அதைப்பதிவு செய்யமுடியும். பதிவுசெய்வதன் மூலமாக, இந்தப் புதிய சிக்கல்களுக்கு எப்படித் தீர்வு காணமுடியும் என்பதையும் நீங்கள் பார்க்கவேண்டும்.

இந்த நாடு புறத்தில் சிறந்த நாடு - சிறந்த உடைகள், சிறந்த நாகரீகம், சிறந்த வாழ்க்கைமுறை, சிறந்த தோற்றம் இவை எல்லாமும் உண்டு. ஆனால் அகத்தில் சிறந்த நாடு இந்தியா என்பதில் எந்தத்தலைமுறையிலும் மாற்றமில்லை - பணபாட்டில் சிறந்த நாடு, உலகுக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய நாடு. இருபத்தோராம் நூற்றாண்டு நிறைவதற்குள் ஒரு புதிய கலாச்சாரத்தின் கலப்பு நடக்கத்தான் போகிறது. மேற்கத்திய நாகரீகம் என்கிற புறவடிவத்தையும் இந்தியப்பண்பாடு என்கிற அகவடிவத்தையும் ஒன்று சேர்க்கிறபோதுதான் இந்த பூமியில் ஒரு புதிய கலாச்சாரமும் ஒரு புதிய மனித குலமும் பிறக்கும் என நான் நம்புகிறேன். வெளி நாட்டில் வந்து குடி ஏறும்போது நாகரீகம் என்கிற புறம் மாறலாமே தவிர, பண்பாடு என்கிற அகம் மாறக்கூடாது.

பலபேருக்குத் திரைப்படப்பாட்டு இலக்கியமாகுமா, அவற்றை எழுத வைரமுத்து வேண்டுமா என்று ஒரு கேள்வி இருந்துகொண்டே இருக்கும். இதைப்ப்ற்றி ஆழமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். நம் நாடு கல்வியில் குறைந்த நாடு. கண் வழியாகப்படிப்பது என்பது குறைவாகவும் காது வழியாகக் கேட்பது என்பது மிகுதியாகவும் இருக்கிற நாட்டில் ஒரு கவிஞன் திரைப்படத்தைத் தவிர்த்துவிட்டு எழுத்தாளராக மட்டும் இருந்தால் அவன் ஒரு சமுதாயத்தையே நிராகரிக்கிறான் என்று அர்த்தம்.

திரைப்பாடல்களிலும்கூட சில வளமான கருத்துக்கள் வரத்தான் செய்கின்றன. 'உனக்குள் ஒரு சக்தியிருக்கு.அதை உசுப்பிட வழிபாரு' என்று நம்பிக்கை கொடுக்கும் பாடல்களும் வரத்தான் செய்கின்றன.

'எரிமலை எப்படி பொறுக்கும்
உன் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?'

'மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்
உலகம் விடியும்'


என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுத்து பிறந்தபோது தமிழகத்தில் ஒரு மெல்லிய மின்சாரம் பாய்ந்தது. இளைஞர் கூட்டம் திரும்பிப்பார்த்தது. இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு திரைப்படவாகனத்தைப் பயன்படுத்த ஆசைப்படுகிறேன்.

#தமிழ் #வைரமுத்து #தமிழ்_மொழி



வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 31, 2010 4:19 pm

இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு திரைப்படவாகனத்தைப் பயன்படுத்த ஆசைப்படுகிறேன். ஆனாலும் நான் நினைத்தபடி எழுத முடியாது. என்றைக்குத் தொழில் என்று ஆகி விடுகிறதோ அன்று கட்டுப்பாடும் வந்து விடுகிறது. திரைப்படம் என்பது தொழில். அதில் சமரசம் தேவைப்படுகிறது.இதையும் தாண்டி பல விஷயங்கள் நான் சொல்லத்தான் செய்கிறேன். உதாரணமாக, ஜீன்ஸ் படத்தில்,

இருதயம் துடிப்பது நின்றாலும் இரண்டொரு நிமிடம் உயிர் இருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கணம் என்னுயிர் தாங்காது


என்ற பாடலில் இதயம் நின்றால் மட்டும் மரணம் வாராது.மூளை மரணித்தால்தான் மரணம் என்பதை சொல்லி இருக்கிறேன். படிக்காத மக்கள் பாட்டுக்கேட்பதில் விருப்பமுள்ள மக்கள் இந்தக் கருத்தை வேறெப்படித்தெரிந்து கொள்ள முடியும்?பாடல் எங்கு போய்ச் சேருகிறது என்று தெரிந்துகொண்டுதான் அதை அஞ்சல் செய்கிறேன்.அதனால்தான் உங்கள் ரசனைகளுக்கேற்றார்போல் எழுத முடிகிறது.

எங்கு சென்றாலும் அசைவுகளை, வானத்தை, பூமியை, மனிதர்களை கவனித்துக்கொண்டே இருக்கிறேன். இப்படிச் சேர்த்து வைத்த விஷயங்களைத்தேவைப்படும்போது உடைத்துச் செலவளிக்கிறேன். நான் ரசித்ததின் மிச்சம்தான் பாட்டு.

ஒரு சிற்பத்தின் அழகு எதில் இருக்கிறது என்றதற்கு ஒரு சிற்பி 'சிற்பி சிற்பத்தின் அழகு அது நஷ்டப்பட்ட கல்லில் இருக்கிறது' என்றார். சிற்பி வேண்டாத பகுதிகளை விலக்கி கல்லுக்குள் உறங்கிக்கொண்டிருந்த சிற்பத்தை வெளிக்கொணர்ந்தார். வாழ்க்கையும் அப்படித்தான். நம்மைச் சுற்றி அவலங்கள், துயரங்கள் , அவநம்பிக்கைகள். நம் வாழ்க்கையிலும் தேவை இல்லாத அவநம்பிக்கை, மூடநம்பிக்கை, அதைரியம் இவற்றை எல்லாம் நீக்கி விட்டால், உள்ளே உள்ள வாழ்க்கை விளங்கும்.

தமிழ் நாட்டில் மிகவும் மலிவாகக் கிடைப்பது உப்பல்ல -உயிர். ஒரு உயிர் மண்ணுக்குச் செலுத்தவேண்டிய கடமையும், அந்த உயிருக்கு ஒரு அரசாங்கமும் சமூகமும் செலுத்தவேண்டிய கடமையும் இன்னும் நிர்ணயம் ஆகவில்லை. தற்கொலை என்பது ஒரு மனிதன் வாழ்க்கைக்குக் காட்டுகிற எதிர்ப்பு. இந்த அவநம்பிக்கை சமூகத்திலிருந்து வருகிறது. எந்த சமூகத்தில் தற்கொலை குறைவாக இருக்கிறதோ அது நல்ல சமூகம். எங்கு அடியோடு இல்லையோ அது நாகரீகமான சமூகம். இந்திராகாந்தி இறந்தபோது அதிகமாக தற்கொலை ¦சைதுகொண்டவர்கள் தமிழர்கள்தாம். இதற்குக் காரணம் என்ன? நாம் தன்னம்பிக்கையை வாழ்க்கையில் மறுதலித்து விட்டோம். தம்ழ்நாட்டிற்கு வெளியே வசிக்கும் தமிழ் பெருமக்களாகிய நீங்கள் சொந்த நம்பிக்கையையும் பெறுங்கள். தாய் மண்ணுக்கு தன்னம்பிக்கை என்ற இரத்ததானத்தையும் நீங்கள் வழங்குங்கள்.

தமிழர் முக்கனி, முத்த்மிழ், மூவேந்தர் என்று பிரித்ததுபோல் எங்கு சென்றாலும் தாமும் பிரிந்துவிடுகிறார்கள்.கருத்து இருந்தால்தானே கருத்துவேறுபாடு? வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே பெருமை. இதை நாமெல்லோரும் உணர வேண்டும்.

தன் உரையை முடித்தபின் தமிழ் நண்பர்களுடன் கவிஞர் உரையாடினார்:

ஏன் தமிழ் கற்கவேண்டும் என்று கேட்கும் எமது பிள்ளைகளுக்கு ஒரு பதில் சொல்லுங்களேன்!

ஆங்கிலம் என்பது இரப்பைக்கான மொழி. தமிழ் என்பது இதயத்துக்கான மொழி. இரப்பைக்காக இருதயம் இல்லாத உடம்பை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? இது தமிழுக்கு மட்டுமல்ல - எல்லத்தாய்மொழிக்கும்தான். தாய்மொழியைக்கற்றபின் உலகுக்காக ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள். ஆங்கிலம் நாகரீகத்துக்கான மொழி. தாய்மொழிதான் பண்பாட்டுக்கான மொழி.

ஒரு குழந்தை தாய் மொழியைத் தொலைக்கிறபோது தன் நாட்டையும் பண்பாட்டையும் தொலைத்துவிடுகிறது. தமிழ்ப் பண்பாடுதான் உலகிலேயே பாதுகாப்பான பண்பாடு. எனவே தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களைவிட அயல்நாட்டிலிருக்கும் தமிழர்களிடம் மொழி மற்றும் கலாச்சாரப்பற்று அதிகமாகக் காணப்படுகிறதே... அதைப்பற்றி...?

அது ஏக்கத்தின் வெளிப்பாடு என்றுதான் நான் நினைக்கிறேன். எதுவுமே நமக்குக் கிடைக்காதபோதுதானெ அதன் மேலுள்ள ஏக்கம் அதிகமாகிறது.

உங்களால் எப்படி இவ்வளவு விஷயங்களை சொல்லமுடிகிறது? உதாரணமாக தண்ணீர் தேசத்தில் நீங்கள் சொல்லியிருக்கிற புள்ளிவிபரங்கள் வியக்கவைக்கின்றன.

தண்ணீர் தேசத்துக்காக ஆறு மாதங்கள் உழைத்தேன்.

ரஜினிகாந்துக்கு மட்டும் சிறப்பாக எழுத எதேனும் காரணம் உண்டா?


எல்லோருக்கும் ஒரே மதிரிதான் பேட் விற்கிறேன். டெண்டுல்கர் மட்டும் சத்ம் அடிக்கிறார் என்கிற மாதிரிதான் இதுவும்.

எல்லாக் கவிஞர்களும் திரைப்படப்பாடல்கள் எழுத முடியுமா?

திரைப்பாடல்களின் தேவையே வேறு. அதற்குக் கவிஞனாக இருக்கவேண்டிய அவசியமே இல்லை.

- நிலா

#தமிழ் #வைரமுத்து #தமிழ்_மொழி



வைரமுத்து - தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 29, 2023 4:34 am

குறிச்சொல் இணைக்கப்பட்டது. அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக