ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்ணாவிரத அறிவியல்

5 posters

Go down

உண்ணாவிரத அறிவியல் Empty உண்ணாவிரத அறிவியல்

Post by சிவா Sun Jan 31, 2010 2:52 pm

இன்றைய தினம் போராட்ட வழிமுறைகளில் உண்ணாவிரதம் ஓர் உத்தியாக மலிந்து விட்டது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஏன் தனி நபர்களும் கூடத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ‘தொடர் உண்ணாவிரதங்களும்’ இத்தகைய போராட்டங்களுக்கு எதிரான ‘உண்ணும் விரதங்களும்’ இந்த சந்தர்ப்பங்களில் நகைச்சுவையைக் கூடுதல் போனஸாகத் தருகின்றன.

இத்தகைய போராட்டங்களை காந்திய வழியிலான அறப்போராட்டங்களாகக் கருதலாமா என்பதே கேள்வி. இது குறித்து அபிப்பிராயம் எதுவும் தெரிவிக்காமல், காந்திஜி வழியமைத்துக் கொடுத்த சத்தியாகிரஹ உண்ணாவிரதங்களின் இலக்கணங்களைத் தொகுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

உண்ணாவிரதம் ஓர் அறிவியல்

“என்னோடு சம காலத்தில் வாழ்பவர்கள் எவரும் என்னைப் போல உண்ணாவிரதத்தையும் பிரார்த்தனையையும் ஒரு துல்லியமான அறிவியலாக்கி செய்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” என்று காந்திஜி சொன்னார். உண்ணாவிரதத்தின் அடிப்படையே எடுத்துக் கொண்டுள்ள காரியத்திலும் மேற்கொண்டுள்ள வழிமுறையிலும் நம்பிக்கை தான்.

தூய்மையான உண்ணாவிரதத்தில் சுயநலம், கோபம், நம்பிக்கையின்மை, பொறுமையின்மை இவற்றுக்கு இடமே இல்லை. உண்ணாவிரதம் உடல், மனம், மற்றும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துகிறது. அது தசையினை (சிலுவையில் அறைந்தது போல) வதைக்கிறது. அதன் மூலம் ஆன்ம சக்தியை உருவாக்குகிறது. ஆன்மிக உண்ணாவிரதம் ஒரு தவமே. அது உண்ணாவிரதி, அவர் யார் சார்பில் விரதம் இருக்கிறாரோ அவர், இருவரையுமே தூய்மைப்படுத்துகிறது.

உண்ணாவிரதம் கொழுந்து விட்டெரியும் தீயினைப் போன்றதோர் ஆயுதமே. அதற்கென்று ஓர் அறிவியல் இருக்கிறது. அதனைக் குருட்டுப் போக்கில் கையாண்டால், அது உண்ணாவிரதிக்கும், எடுத்துக் கொண்ட காரியத்துக்கும் தீங்கே விளைவிக்கும்.

உண்ணாவிரதம் மேற்கொள்பவருக்கு வேண்டிய தகுதிகள்.....

சத்தியத் தேடலுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிராளிகளிடம் கூட அன்பு கொண்டவர்கள், மிருக இச்சைகளுக்கு இடம் கொடாதவர்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டு. இத்தனையும் ஒரு சேர ஒருவரிடம் இருப்பது கஷ்டம். எல்லையற்ற பொறுமை, திடமான தீர்மானம், மேற்கொண்ட காரியத்தில் ஒருமுக நோக்கு, பூரண அமைதி, கோபமின்மை ஆகியவை முக்கியத் தகுதிகளாகும்.

தமக்குத் தேவையான வலிமையைக் கடவுள் தருவார் என்ற நம்பிக்கை வேண்டும். துன்பத்தையும் பொருள் நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இருக்க வேண்டும். பலனை இறைவனிடம் விட்டு விட்டு, தமது நோக்கில் வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, விரதத்தில் உறுதியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உண்ணாவிரதத்தில் சிறிதளவு களங்கம் ஏற்பட்டால் கூட அதனைக் கைவிடத் தயங்கக் கூடாது. மற்றவர் யாரோ இருக்கிறார் என்பதற்காக அவரைப் பின்பற்றி உண்ணாவிரதம் இருக்கக் கூடாது. ஆன்ம பலம் இல்லாதவர்கள் உண்ணாவிரதம் இருக்கவே கூடாது!

உண்ணாவிரதத்தின் நோக்கங்கள்:

உண்ணாவிரதத்தின் நோக்கம் மற்றவர்களின் நன்மைக்காகவே இருக்க வேண்டும். சுயநல நோக்கம் கூடவே கூடாது. தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது, மற்றவர்களைத் தீய வழிகளிலிருந்து திருத்துவது ஆகியவை உண்ணாவிரத நோக்கங்களாக இருக்கலாம். சொந்த லாப நோக்குடன் உண்ணாவிரதம் இருப்பது சரியல்ல. வற்புறுத்திச் சலுகைகளைப் பெற முயல்வது கூடாது.

இறுதியாக, ஆனால், முக்கியமாக, உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு உண்ணாவிரதத்துக்கான நோக்கத்துடன் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும். ஓர் உதாரணத்தை காந்தி சொல்கிறார். பகத் புல் சிங் என்பவர் மாத் கிராமத்திலுள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அந்த இடத்திலுள்ள ஹரிஜனங்களுக்கு அவர் தொண்டு செய்துள்ளார். அந்த கிராமவாசிகள் ஹரிஜனங்களுக்குத் தவறு இழைத்து வந்தனர். அவர்களுக்கு நீதி கிடைக்கும்படி செய்வதற்கான எல்லா முறைகளையும் கைக்கொண்டு தோல்வி அடைந்த பிறகே புல்சிங்ஜி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். வெற்றியும் பெற்றார்.

யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கலாம்?

உங்களிடம் அன்பு கொண்டவர், பரிவு காட்டுபவர், நெருங்கியவர்களுக்கு எதிராக மட்டுமே உண்ணாவிரதம் இருக்கலாம். உதாரணமாக, மகன் தந்தைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால், அந்த உண்ணாவிரதம் அவரைத் தீய வழியிலிருந்து திருப்புவதற்காக இருக்கலாமே தவிர, சொத்தை எழுதி வாங்கிக் கொள்வது போன்ற காரணங்களுக்காக இருக்கக் கூடாது.

யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறோமோ, அவருக்கு உண்ணாவிரதத்துக்குக் காரணமான விஷயத்துடன் தொடர்பு இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

எப்போது உண்ணாவிரதம் இருக்கலாம்?

உண்ணாவிரதம் என்பது சத்யாகிரகப் போர்முனையின் கடைசி ஆயுதம். தீர்வு காணும் மற்ற அனைத்து முறைகளையும் மேற்கொண்டு, அவை அத்தனையும் பலனளிக்காமல் போனால் மட்டுமே உண்ணாவிரதம் இருக்கலாம்.

தவறான உண்ணாவிரதங்கள்:

நிறைய நேரங்களில் உண்ணாவிரதங்கள் பலவந்தப்படுத்துவனவாக அமைவதுண்டு. உண்ணாவிரதம் சுயநலக் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மசிய மறுத்து விட வேண்டும். உண்ணாவிரதத்தில் மரணம் அடைய நேர்ந்தாலும் பரவாயில்லை. நமது அபிப்பிராயத்தில் தகுதியற்ற காரணங்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று தோன்றினால் அந்த உண்ணாவிரதத்தைப் புறக்கணிக்க வேண்டியதே. இந்த வழக்கத்தை மக்கள் மேற்கொள்வார்களானால் உண்ணாவிரதங்கள் பலவந்தப்படுத்துதல் மற்றும் நியாயமற்ற செல்வாக்கு அடைவது ஆகிய கறைகள் நீங்கப் பெறும்.

என்ன செய்ய? அநேக உண்ணாவிரதங்கள் சத்யாகிரக உண்ணாவிரதங்கள் என்ற பிரிவில் அடங்குவதில்லை. அவை பட்டினிப் போர்களே! போதுமான சிந்தனையும், முன்கூட்டிய தயாரிப்பும் இல்லாத உண்ணாவிரதங்களை அடிக்கடி மேற்கொண்டால், அவற்றுக்கு ஓரளவு இருக்கக் கூடிய பலனும் போய் விடும்; கேலிக் கூத்தாகி விடும்!

தவறான காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதங்கள் சில நேரம் வெற்றியைத் தரலாம். ஆனால், அந்த வெற்றி சத்யாகிரகத்தின் வெற்றி அல்ல; துராக்ரஹத்தின் வெற்றியே ஆகும்!

டி.எஸ். வேங்கடரமணி


உண்ணாவிரத அறிவியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உண்ணாவிரத அறிவியல் Empty Re: உண்ணாவிரத அறிவியல்

Post by செந்தில் Sun Jan 31, 2010 2:58 pm

சத்தியத் தேடலுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிராளிகளிடம் கூட அன்பு கொண்டவர்கள், மிருக இச்சைகளுக்கு இடம் கொடாதவர்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டு.



அப்படின்னா நம்ம நாட்ல யாருக்குமே உண்ணாவிரதம்

இருக்க தகுதியே இல்லை அப்படிதானே சிவா அண்ணா
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உண்ணாவிரத அறிவியல் Empty Re: உண்ணாவிரத அறிவியல்

Post by தண்டாயுதபாணி Sun Jan 31, 2010 2:59 pm

குறிப்பா தமிழ்நாட்ல இருக்கறதா தெரியல ?


உண்ணாவிரத அறிவியல் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

உண்ணாவிரத அறிவியல் Empty Re: உண்ணாவிரத அறிவியல்

Post by Devappriya Sun Jan 31, 2010 3:01 pm

பயனுள்ள பதிவு.... உண்ணாவிரத அறிவியல் Icon_smile
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உண்ணாவிரத அறிவியல் Empty Re: உண்ணாவிரத அறிவியல்

Post by சிவா Sun Jan 31, 2010 3:14 pm

SENTHIL wrote:சத்தியத் தேடலுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிராளிகளிடம் கூட அன்பு கொண்டவர்கள், மிருக இச்சைகளுக்கு இடம் கொடாதவர்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டு.



அப்படின்னா நம்ம நாட்ல யாருக்குமே உண்ணாவிரதம்

இருக்க தகுதியே இல்லை அப்படிதானே சிவா அண்ணா

இத நாம் சொன்னால் ஏற்பார்களா?


உண்ணாவிரத அறிவியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உண்ணாவிரத அறிவியல் Empty Re: உண்ணாவிரத அறிவியல்

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sun Jan 31, 2010 3:15 pm

அதிர்ச்சி
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

உண்ணாவிரத அறிவியல் Empty Re: உண்ணாவிரத அறிவியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அறிவியல் வானின் விடிவெள்ளிபிப்ரவரி 28 சர்.சி.வி.ராமன்தேசிய அறிவியல்
» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
» கலாமின் விதைகள் குழுவின் பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum