புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
58 Posts - 63%
heezulia
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
19 Posts - 21%
mohamed nizamudeen
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
1 Post - 1%
Guna.D
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
53 Posts - 63%
heezulia
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
1 Post - 1%
Guna.D
எயிட்ஸ் - Aids Poll_c10எயிட்ஸ் - Aids Poll_m10எயிட்ஸ் - Aids Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எயிட்ஸ் - Aids


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:39 pm

எயிட்ஸ் என்றால் என்ன?


எயிட்ஸ் என்பது ஒரு தொற்றுநோய். இது ஒரு வகை வைரஸ் (Virus) கிருமியால் உண்டாகிறது. இதை ஒரு தனி நோய் என்பதை விட பல நோய்க் குணங்குறிகளின் தொகுப்பு (syndrome) என்று சொல்லலாம்.
எயிட்ஸ் என்பது AIDS என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடி ஒலிபெயர்ப்பு ஆகும். AIDS என்பது Acquired Immune Deficiency என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள நான்கு சொற்களின் முதல் எழுத்துக்களை இணைத்து ஏற்படுத்திய சொல்லாகும். இதனை ‘தேடிப்பெற்ற நிர்பீடனக் குறைபாட்டு நோய்த்தொகுதி’ என்று விஞ்ஞானத் தமிழில் கூறலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:40 pm

நோய்க்கிருமி:


எயிட்ஸ் நோய் HIV வைரஸினால் உண்டாகிறது. எச்.ஐ.வீ (HIV) என்பது Human Immunodeficiency Virus என்பதின் சுருக்கமாகும். இதனை ‘மனித நிர்பீடனக் குறைபாட்டு வைரஸ், என்று விஞ்ஞானத் தமிழில் கூறமுடியும். ஆயினும் சொற்சிக்கனத்திற்காகவும், இலகுவான உச்சரிப்பிற்காகவும் HIV வைரஸ் என்றே கூறலாம்.

மனித உடலுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி (நிர்பீடனத் தொகுதி - Immune System) இருக்கிறது. இதனால்தான் கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கவும், தொற்றிய கிருமிகளை அழித்து நோயிலிருந்து குணமடையவும் மனித உடலுக்கு முடிகிறது.

HIV வைரசோ மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்திகளையே தாக்கி அவற்றை அழித்து விடுகிறது. இதனால் மனிதஉடல் HIV வைரசுக்கு மாத்திரமன்றி, ஏனைய நோய்க்கிருமிகளுக்கு எதிராகவும் போராடும் சக்தியை இழந்துவிடுகிறது.

HIV வைரஸ் தொற்றுவதால் ஏற்படக்கூடிய குணங்குறிகளும், தொற்றுகின்ற ஏனைய நோய்களின் குணங்குறிகளும் ஒன்றாகவோ, தொடர்ச்சியாகவோ நோயாளிக்குத் தோன்றலாம். இதனால்தான் எயிட்சை பல நோய்க்குணங் குறிகளின் தொகுப்பு என ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம்.
கிருமிகளுக்கு எதிராகப் போராடும் சக்தியை இழப்பதாலேயே, பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாவது மாத்திரமின்றி, எயிட்ஸ் நோயாளி இறுதியில் நிச்சயம் இறக்க நேரிடுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:41 pm

ஏனைய வைரஸ் நோய்கள்

தடிமன் காய்ச்சல், சின்னமுத்து, ஜேர்மன் சின்னமுத்து கொப்புளிப்பான் (சின்னம்மை) பெரியம்மை, கூவைக்கட்டு, போலியோ, செய்கண்மாரி (ஈரல் அழற்சி - Heratitis), நீர் வெறுப்பு நோய் (விசர்நாய்க்கடி - Hydrophobia), ஹெர்பீஸ் (Herpes), சில வகை வயிற்றோட்டம் போன்றவை வைரஸ் கிருமிகளால் உண்டாகும் சில தொற்று நோய்கள் ஆகும்.

வைரஸ் நோய்களைக் குணப்படுத்தக்கூடிய நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics) எதுவும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. இதனால் இவற்றை வைத்தியர்களால் மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாது.

ஆனால் வைரசோ அன்றி ஏனைய கிருமிகளோ (உ-ம் பக்றீரியா. பங்கசு) தொற்றியவுடன் மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி விழிப்படைந்து போராடுகிறது. அக்கிருமிகளை அழிக்கக்கூடிய ‘பிறபொருள் எதிரிகளை’ (Antibodies) உடல் உற்பத்தி செய்கிறது.

இப் பிறபொருள் எதிரிகளே நோய்க் கிருமிகளுடன் போராடி கிருமிகளை அழித்து நோயைக் குணமாக்குகின்றன. முன்பு கூறிய வைரஸ் நோய்களில் பெரும்பாலானவை மருந்துகளின்றி தாமே குணமாவது இக்காரணத்தால்தான்.

எயிட்ஸ் நோய்க்கு எதிராகவும் சில பிறபொருள் எதிரிகள் உடலில் உற்பத்தியாகிறபோதும், அவை HIV வைரஸ் பெருகுவதைத் தடுக்கக்கூடியதாக இல்லை. இதனால் எயிட்ஸ் கிருமி இரத்தத்தின் மூலம் உடலின் பல்வேறு பாகங்களுக்கும் பரவுகிறது.

எயிட்ஸ் நோயைக் கண்டுபிடிப்பதற்கான இரத்தப் பரிசோதனைகள் HIV வைரசிற்கு எதிரான பிறபொருள் எதிரிகளை அடையாளம் காண்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

பெரும்பாலான வைரஸ் நோய்கள் தாமே குணமாகி விடலாம் என்றாலும் எயிட்சும், விசர்நாய்க்கடி நோயும் விதிவிலக்கு. இவ்விரு நோய்களும் தோன்றினால் மரணம் நிச்சயம். விசர்நாய்க்கடி நோயில், வைரஸ் மூளையையும் நரபுத் தொகுதிகளையும் தாக்குவதால் மரணம் ஏற்படுகிறது ஆனால் எயிட்ஸ், நோய் எதிர்ப்புச் சக்தியை அழிப்பதால் மரணம் நேர்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:41 pm

வைரஸ் என்றால் என்ன?

வைரஸ் என்பதை நோயை உண்டாக்கக்கூடிய மிக சிறிய நுண்ணுயிர் என்று சொல்லலாம். பக்றீரியா (Bacteria), பங்கசு (Fungus) போன்ற நுண்ணுயிர்களைச் சாதாரண நுணுக்குக்காட்டி (Microscope) மூலம் பார்க்கலாம். சாதாரண நுணுக்குக்காட்டி மூலம் காணமுடியாத அளவிற்கு வைரஸ் மிகச்சிறியது. இதனை மிகவும் சக்தி வாய்நத இலத்திரன் நுணுக்குக்காட்டி (Electron Microscope) மூலமே பார்க்கமுடியும்.

வைரஸ் கிருமிகள் விருத்தியடைந்து, பெருகுவதற்கு உயிருள்ள கலம் (Cell) தேவை. அது பெருகும் போது, தான் தங்கியிருக்கும் கலத்தை அழிக்கக்கூடும்; அல்லது செயற்திறனைப் பாதிக்கக்கூடும்.
எயிட்சை உண்டாக்கும் HIV வைரஸ் மனித உடலின் நிர்ப்பீடனத் தொகுதியையே தாக்குவதை அறிவீர்கள். நிர்பீடனத்தொகுதியில் உள்ள ரீஹெல்பர் கலங்ளையே (T-helper Cell) முக்கியமாகத் தாக்குகிறது.

HIV வைரஸ் தானிருக்கும் கலத்தில் பெருகிப். பின் அதை அழித்து வெளியேறுகிறது. வெளியேறிய வைரசுகள் மேலும் பல கலங்களைத் தாக்கி அழித்துப் பெருகுகின்றன. இவ்வாறு நோயாளியின் நிர்பீடனத் தொகுதி பெரிதும் பாதிக்கப்படும். இந்நிலையிலேயே நோய்க்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:42 pm

எயிட்ஸின் வரலாறு

எயிட்ஸ் நோய் 1981ம் ஆண்டிலேயே அறியப்பட்ட போதிலும், அதை உண்டாக்கும் வைரஸ் கிருமி 1983ம் ஆண்டிலேயே இனங்காணப்பட்டது. பிரான்ஸ் தேசத்தில் உள்ள பாஸ்டர் விஞ்ஞானக் கூடத்திலேயே (Institute Pasteur) முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது இது டுயுஏ வைரஸ் (Lymphadenopathy associated Virus) என்று சொல்லப்பட்டது.

1984ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள தேசிய புற்று நோய் நிறுவனம் இக்கிருமிதான் எயிட்ஸ் நோயை உண்டாக்குகிறது என்பதை உறுதிபப்டுத்தியது. அப்பொழுது இதற்கு ர்வுடுஏ ஐஐஐ வைரஸ் (Human T-Iymphotrophic Virus type III) என்று பெயரிடப்பட்டது.

யுசுஏ வைரஸ் (AIDS - related Virus) என்று சில தருணங்களில் கூறப்பட்டது.
1986 ம் ஆண்டில் தான் இப்பொழுது உபயோகிக்கப்படும் HIV வைரஸ் என்ற பெயர் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

HIV வைரசின் இரண்டு உப பிரிவுகள் இருப்பதாக இப்பொழுது நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் மேற்கத்தைய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. HIV ஐ என்று அழைக்கப்படுகிறது. பின்பு மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய உபபிரிவை HIV II என அழைக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:42 pm

நோய் காவிகள்

எயிட்ஸ் கிருமித் தொற்றுக்கு ஆளாகி, அதனைத் தனது உடலில் சுமக்கிற எவருமே, அதனை ஏனையவர்களுக்கும் பரப்பலாம். இவர்களே நோய் காவிகள் எனப்படுவார்கள்.

பெரும்பாலான நோய்காவிகள் தமக்கு அந்நோய் இருப்பதை அறிய மாட்டார்கள் ஏனெனில் வைரஸ் தொற்றினாலும் நோய்க்கான அறிகுறிகள் தோன்ற மிக நீண்ட காலம் எடுக்கலாம்.

ஒரு சிலருக்கு சில மாதங்களிலிலேயே நோய்க்கான அறிகுறிகள் தோன்றுகிறது வேறு சிலருக்கு ஒரு சில வருடங்கள் செல்லக்கூடும்.

வேறு பலர், கிருமித் தொற்றுக்காளான (Infection) போதும், 5 வருடங்கள் வரை கூட நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இன்றி சுகதேகிகளாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கிருமி தொற்றிய பலர். பல வருடங்களுக்குப் பின்னர் எயிட்ஸ் நோய் உண்டாகும் ஆபத்திலிருந்து முற்றுமுழுதாகத் தப்பி விட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது

நீண்ட காலத்திற்கு நோய்க்கான அறிகுறிகள் இல்லாமல், கிருமிகளைச் சுமப்பவர்களே மிகவம் ஆபத்தானவர்கள். இந்த நோய்க்காவிகள் தம்மை அறியாமலே பலருக்குக் கிருமியை பரப்பக்கூடும்.
நோய்க்கான அறிகுறிகள் இல்லாத நோய்க்காவிகளை இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம் ஆனால் கிருமி தொற்றிய 6 முதல் 12 வாரங்களின் பின்னரே இரத்தப் பரிசோதனைகள் நிச்சயமான முடிவைக் கொடுக்கும். அதற்கிடையில் அவர் பலருக்கு கிருமியைப் பரப்பியிருக்கக்கூடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:43 pm

நோய் எவற்றால் பரவுகிறது?

இந்நோயின் வைரஸ் கிருமிகள். நோயுற்ற மனிதரின் உடற் திரவங்களில் (Body Fluids) காணப்படுகின்றன. இரத்தம், இந்திரியம். எச்சில், சிறுநீர், கண்ணீர், பெண்பாலுறுப்பிலிருந்து சுரக்கும் திரவம் (Vaginal Secretions) தாய்ப் பால், போன்றவற்றில் காணப்படுகிறது, ஆனால் நோயைப் பரப்புவதில் இரத்தமும், இந்திரியமும் பெண்பாலுறுப்பில் இருந்து சுரக்கும் திரவமுமே முக்கியமானவை.

நோயுற்ற ஒருவரின் இரத்தம். (மாதவிடாய் இரத்தம் அடங்கலாக) இந்திரியம் அல்லது பெண் பாலுறுப்பிலிருந்து சுரக்கும் திரவம் ஆகியவற்றில் ஒன்று, சாதாரண மனிதனின் இரத்தம் அல்லது மென்சவ்வுடன் (Mucous Membrane) தொடர்புபடும் போதேகிருமி தொற்றுகிறது. வாய், மலவாசல், பாலுறுப்பு ஆகியவற்றில் உள்ள மிக மென்மையான தோலே மென்சவ்வு எனப்படுகிறது.

இந்த வைரஸ் மிகவும் வீரியமானது அல்ல முற்கூறிய திரவங்களில் வைரசின் செறிவு மிக இருந்தால்தான் தொற்றும். அல்லது தொற்றுவதற்கான சந்தர்ப்பத்தைப் பலமுறை கொடுத்தாலும் தொற்றலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:44 pm

எயிட்ஸ் எப்படி, எப்பொழுது தொற்றும்?

எயிட்சை உண்டாக்கும் HIV வைரஸ் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே தொற்றுகிறது. காற்றினாலோ, நீரினாலோ உணவாலோ பரவாது.

I) பாலுறவு:

எயிட்ஸ் நோய் முக்கியமாக ஒரு பாலியல் நோயே. பெரும்பாலும் உடலுறவின் போதே ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றுகிறது. பெண்ணிலிருந்து ஆணுக்கோ, அல்லது ஆணிலிருந்து பெண்ணுக்கோ, தொற்றலாம். ஆணிலிருந்து பெண்ணிற்குத் தொற்றுவதே அதிகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பெண்ணிலிருந்து ஆணுக்குத் தொற்றாது என்பது இதன் அர்த்தமல்ல.
உடலுறவு ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையேதான் இருக்கவேண்டும் என்பதல்ல. இயற்கைக்கு ஒவ்வாத தன்னினப் பாலுறவு (Homosexual Intercourse) எயிட்சைப் பரப்புவதில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தன்னினப் பாலுறவில் ஈடுபடும் ஆண்களையே இந்நோய் பெரும்பாலும் பீடிக்கிறது. அதிலும் முறைகேடான மலவாசலூடான உடலுறவு இந்நோயை மிக இலகுவில் பரப்புகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆபிரிக்க நாடுகளில் ஆண், பெண் இருபாலரிடமும் இந்நோய் கிட்டத்தட்ட ஒரே அளவு காணப்படுகிறது. இது ஆண், பெண் பாலுறவினாலும் இந்நோய் பரவுகிறது என்பதை நிச்சயமாக்குகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:45 pm

II) இரத்தம் ஏற்றல் (Blood transfusion):

எயிட்ஸ் நோயாளியோ, அல்லது நோய் காவியோ இரத்ததானம் செய்தால், அந்த இரத்தத்தைப் பெறுபவருக்கும் HIV வைரஸ் நிச்சயம் தொற்றும். ஹீமோபீலியா (haemophilia) என்ற நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு மேல்நாடுகளில் எயிட்ஸ் நோய் தொற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இரத்தம் அல்லது இரத்தத்தின் ஒரு பகுதியான காரணி VIII (Factor VIII) அடிக்கடி ஏற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே அவர்களுக்கு எயிட்ஸ் நோய்க்கிருமி இரத்தத்தினாலேயே தொற்றியிருக்கும் என்பது வெளிப்படை.

இரத்ததானம் செய்பவர்களுக்கு இந்நோய் இல்லை என்பதை நிச்சயப்படுத்துவது அவசியம். இதன் முதற்படியாக இரத்ததானம் செய்ய முன்வருபவர்களிடம் “உங்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றியிருப்பதற்கான சந்தர்ப்பம் சிறு அளவிலேனும் இருந்தாற் கூட இரத்ததானம் செய்வதைத் தவிருங்கள்” என அறிவுறுத்தப்படுகிறது. இதனால் அத்தகையோர் மூலம் நோய் பரவுவதை ஓரளவேனும் தடுக்க முடியும்.

மேற்கத்திய நாடுகளில் தானம் செய்யப்படும் இரத்தங்கள் யாவுமே. இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு எயிட்ஸ் கிரமி தொற்றுதலுக்கு ஆளாகாமல் இருப்பது நிச்சயப்படுத்தப்படுகிறது. இதனால் இரத்தம் ஏற்றுதல் மூலம் எயிட்ஸ் பரவுவது அங்கு பெருமளவில் குறைந்திருக்கிறது.

இதனால் இரத்தம் ஏற்றுவதால் நன்மைக்குப் பதில் தீமையே விளையக்கூடியதான நிலைமை சில சந்தர்ப்பங்களில் நேரலாம். இதைத் தடுப்பதற்கு இரத்ததானம் செய்பவர் மாத்திரமன்றி, இரத்தம் பெறுபவரின் உறவினர்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

உங்கள் உறவினர் ஒருவருக்கு இரத்தம் ஏற்றப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை ‘விலைக்கு வாங்கி விடலாம்’ எனத் தீர்மானிக்காதீர்கள். அறியாத ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கிய இரத்தம் எயிட்ஸ் நோயையும் கொண்டு வரலாம். எனவே நீங்களோ, நம்பிக்கைக்கு உரிய உறவினர் ஒருவரோ இரத்ததானம் செய்யுங்கள், இதன் மூலம் எயிட்ஸ் நோய் தொற்றுவதைத் தவிர்க்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:46 pm

III) கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளைப் பயன்படுத்தல்:

எயிட்ஸ் நோயாளிக்கு ஏற்றிய ஊசியையும் கண்ணாடிக் குழலையும் (Needle & Syringe) கிருமி நீக்கம் (Sterilisation) செய்யாமல் இன்னொருவருக்கு ஏற்றினால் அவருக்கும் இந் நோய் தொற்றலாம். இவ்வுபகரணங்களை உபயோகிக்கும் போது அதில் இரத்தம் சிறிதளவேனும் படவே செய்யும். இதன் காரணமாகவே வைரஸ் தொற்றுகிறது.

கிருமிநீக்கம் செய்யப்படாத ஊசிகள் மூலம் பரவலாம்.

தகுந்த மருத்துவக் கல்வியைப் பெற்ற, தனக்குள்ள சமூகப்பொறுப்பை உணர்ந்த எந்த வைத்தியனோ, தாதியோ ஏனைய சுகாதார உதவியாளர்களோ கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளை நோயாளிகளுக்கு ஒருபோதும் ஏற்ற மாட்டார்கள்.

தமது சட்டைப் பையினுள் ஊசியை அழுக்குடன் சுமந்து சென்று பலருக்கு அதை ஏற்றும் பொறுப்பற்றவர்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள். இத்தகையவர்களிடமிருந்து தப்புவது உங்களது பொறுப்பாகும்.

எனவே உங்களுக்கு ஊசி ஏற்றப்பட வேண்டிய அவசியம் நேர்ந்தால், அவற்றை கிருமி நீக்கம் செய்து உபயோகிக்கும் நம்பிக்கையான, பொறுப்பு வாய்ந்த மருத்துவ நிலையங்களிலேயே. ஏற்றிக்கொள்ளுங்கள். பொரளாதார வசதியுள்ளவர்கள், ஒரு முறை மட்டும் உபயோகித்துவிட்டு எறியக்கூடிய பிளாஸ்டிக் ஊசிகளைப் பயன்படுத்தலாம்.

போதை மருந்துகளை ஊசி மூலம் தங்களிடையே ஏற்றும் போதைவஸ்து அடிமைகளிடமும் எயிட்ஸ் நோய் பெருமளவு காணப்படுகிறது. கிருமிநீக்கம் செய்யப்படாத ஊசிகளை உபயோகிப்பதே இதற்குக் காரணம்.

ஒருவகைச் செய்கண்மாரியைப் பரப்பும் வைரஸ் கிருமியும் (Hepatitis B) இவ்விதம் ஊசிகள் மூலம் பரவலாம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக