ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர்

Go down

மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Empty மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர்

Post by யமுனாஸ் Fri Jan 29, 2010 4:24 pm

பின்னமடைந்த மூலவருக்கு பூஜைகள் நடக்கும் புகழ்பெற்ற திருத்தலம் ஒன்றுள்ளது உங்களுக்கு தெரியுமா/
மாகான மகரிஷியால் லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், கடுவெளிச் சித்தருக்கு இறைவன், இறைவி காட்சி தந்ததும், அத்திலி முனிவர் வழிபட்டு இறையாசி பெற்றதும், தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாதுமான, மறுபிறவி அறுக்கும் இரும்பை மாகாளம்தான் அது!
இறைவன் மாகானேசுவரர்; இறைவி குயில்மொழி அம்மை, இறைவனுக்கு மகாகாளர், மாகாளமுடையார் என்றும், இறைவிக்கு மதுசுந்தரநாயகி, தனிசன்னதியில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
முருகனிடம் உள்ள மயில் முகம் வடக்கு நோக்கி உள்ளதால் இது ஞானமயில் என்று குறிப்பிடப்படுகிறது. ஞானமயில் மீது சுப்பிரமணியர் தம்பதி சமேதராக அமர்ந்து ஆறுமுகங்களுடன் காட்சியளிக்கிறார். இவரை வழிபடுபவர்களுக்கு கல்வி, ஞானம், குடும்ப மகிழ்ச்சி கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.
ஜலம் ஈந்த விநாயகர், நந்திதேவர், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை, நவகிரகங்கள், பைரவர், சூரியன் சந்திரன் சன்னதிகள் உள்ளன.
இங்குள்ள மாகாளர் தீர்த்தத்தில் நீராடி தலவிருட்சமான புன்னைமரத்திற்கு பூஜை செய்தால் கல்வி, தொழில், செல்வம், மணப்பேறு, மகப்பெறு ஆயுள் விருத்தி போன்ற சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சோழ மன்னன் இப்பகுதியை ஆண்டபோது ஒரு சமயம், கடுவெளிச்சித்தர் இத்தலத்தில் தவம் செய்து வாழ்ந்தார். அப்போது இப்பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மன்னர் மாகாளேசுவரரை வேண்டினார். இறைவன் மன்னரின் கனவில் தோன்றி, ஆலயத்தின் எதிரே அரசமரத்தினடியில் தவம் செய்யும் கடுவெளிச் சித்தர் தவத்தால் உருவான வெப்பமே வறட்சிக்குக் காரணம். அவர் தவத்தைக் கலைத்தால் மழை பொழியும்; வளம் பெருகும் என்று கூறி மறைந்தார்.
கடுவெளிச் சித்தரின் தவத்தைக் கலைப்பது எப்படி? முனிவரின் கோபத்துக்கு ஆளானால் தன்னையே எரித்துவிடுவாரே என்று அஞ்சினார். மன்னர் கோயிலில் நடனமாடும் மாது சுந்தரவள்ளி என்பவனை அழைத்து கடுவெளிச் சித்தரின் தலத்தைக் கலைக்க வழி செய்யும்படி கூறினார், மன்னர்.
சுந்தரவள்ளி கடுவெளிச் சித்தரின் தவத்தை ஊன்றி கவனித்தாள். அரசமரத்தில் உள்ள இலை ஒன்று கடுவெளிச்சித்தரின் கையில் விழுந்தது. முனிவர் கண் திறவாமலே அதை உண்டார். அதைக் கண்ட சுந்தரவள்ளி மறுநாள் அரச இலை மாதிரி உப்பு காரம் சேர்ந்த அப்பளப் பூ செய்து எடுத்துவந்து முனிவர் கையில் போட்டாள். கடுவெளிச் சித்தர் அரச இலை என்றெண்ணி அதை உண்டார். வழக்கத்திற்கு மாறான ருசி, நாவில் பட்டதால் தவம் கலைந்து கண்விழித்தார். எதிரே நின்ற சுந்தரவள்ளி தன் தவறை மன்னித்தருளும்படி வேண்டினாள்.


கடுவெளிச் சித்தரின் தவம் கலைந்ததால் வானம் இருண்டு இடிமின்னலுடன் கூடிய பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு மாகாளேசுவரருக்கு பிரமோற்சவம் நடைபெற்றது.
அதில் ஐந்தாம் நாள் சுந்தரவள்ளியின் நாட்டியம் அரங்கேறியது. அப்போது அவளது கால்சலங்கை திடீரென கழன்று விழ, கடுவெளிச் சித்தர் சிறிதும் தாமதிக்காமல் சலங்கையை எடுத்து நடனமாது காலில் கட்டிவிட்டார். அதைக் கண்டு மன்னரும் மக்களும் சிரிக்க, எல்லாவற்றிற்கும் காரணம் இறைவன்தான் என்று தமது கோபக்கனலை அவர் மீது செலுத்தினார் சித்தர். அந்தக் கடுமையால் சிவலிங்கம் மூன்றாகப் பிளந்தது. அதிலிருந்து பார்வதி சமேதராய் பரமேஸ்வரன் தோன்றி கடுவெளிச் சித்தர், சோழமன்னன், சுந்தரவள்ளி ஆகியோருக்கு ஆசியளித்தார்.
இத்தலத்து இறைவனை திருஞானசம்பந்தர், பட்டினத்தார், கடுவெளிச் சித்தர் ஆகியோர் போற்றிப் பாடியுள்ளனர்.
இரும்பை மாகானேசனின் திருவடிகளை வணங்கி அவனது அருள்பெறுவோமானால் நமக்கு மறுபிறவி இல்லை என்பது ஆன்றோரும், சான்றோரும் வலியுறுத்திச் சொன்ன உண்மையாகும்.
புதுச்சேரிக்கு வடமேற்காக 12 கி.மீ.யில் சஞ்சீவி நகர் பேருந்து வழித்தடத்தில் இரும்பை மாகானம் உள்து.
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum