ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.

Go down

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி. Empty ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.

Post by ayyasamy ram Mon May 20, 2024 1:20 pm

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி. Ee15
--
தெஹ்ரான்:
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற விமானம் மலையில்
மோதி விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


யார் இந்த இப்ராஹிம் ரைசி.. இவரது பின்னணி என்ன என்பது
குறித்து நாம் பார்க்கலாம்.


ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு
அஜர்பைஜானில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.
வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்
உட்பட மூத்த அதிகாரிகள் சிலர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில்
சிக்கியுள்ளது.


விபத்து:
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில்
மோதி விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சுமார்
40 மீட்பு மீட்புப் படையினர் சம்பவம் நடந்த இடத்தில் மீட்புப்
பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டருக்கு என்ன
ஆனது என்பது குறித்த உடனடியாக தகவல்கள் எதுவும்
வெளியாகவில்லை.


மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த
இப்ராஹிம் ரைசி யார்.. இவர் எப்படி அதிபரானார் என்பது குறித்து
நாம் பார்க்கலாம்.


கடந்த 1960 டிசம்பர் 14ஆம் தேதி அங்குள்ள மஷாத்தின் நோகன்
மாவட்டத்தில் ஒரு மதகுரு குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த
இப்ராஹிம் ரைசி. பள்ளிப் படிப்பை முடித்த இவர், தொடர்ந்து சட்டப்
படிப்பை முடித்தார். ஈரானின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவராக
ரைசி வளம் வந்தார்.


தொடர்ந்து நீதிபதியாக பணியாற்றிய அவர் கடந்த 2019இல் ஈரான்
நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


எதிர்ப்புகள்:
இதற்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. ஏனென்றால்
ஈரான்- ஈராக் போருக்குப் பின் 1988ல் அரசியல் கைதிகள் பலர்
தூக்கிலிடப்பட்டதில் ரைசிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.


இதனால் அவரை தலைமை நீதிபதியாக நியமித்ததைப் பல சர்வதேச
அமைப்புகள் எதிர்த்தன. சுமார் 5,000 கைதிகளின் மரண
தண்டனைக்குக் காரணமாக நான்கு நீதிபதிகளில் ரைசியும் ஒருவர் எ
னக் கூறப்படுகிறது.


60 வயதான ரைசி தன்னை பற்றி ஊடகங்களில் பேசும் போது இதைக்
கவனமாகத் தவிர்த்துவிடுவார். ஊழலை எதிர்த்துப் போராடும் நபர்
என்றும் ஈரானின் நிதிப் பிரச்சினைகளைச் சமாளிக்கச் சரியான நபர்
என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார்.


அதிபர் தேர்தல்:
ரைசி முதலில் கடந்த 2017இல் அந்நாட்டின் அதிபர் தேர்தலில்
போட்டியிட்டார். இருப்பினும், அந்தத் தேர்தலில் அவர் ஹசன்
ரூஹானியிடம் தோல்வி அடைந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து
2021இல் ரைசி மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில்,
அவரது முக்கிய எதிரிகள் அனைவருக்கும் போட்டியிடத் தடை
விதிக்கப்பட்டன.


இதனால் வலுவான தலைவர்கள் யாரும் ரைசிக்கு எதிராகப்
போட்டியிடவில்லை. அந்த தேர்தலில் வாக்குப்பதிவும் வரலாறு
காணாத வகையில் குறைந்து.. இருந்த போதிலும் அவர் வெற்றி
பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


ஈரான் அதிபராக இவர் பதவியேற்ற உடனேயே கலாச்சார சட்டங்கள்
கடுமையாக்கப்பட்டன. மேலும், போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட்டன.
கடந்த 2022 முறையாக ஹிஜாப் அணியாததால் மஹ்ஸா அமினி என்ற
22 வயது இளம் பெண் அந்நாட்டின் கலாச்சார காவலர்களால்
கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மிக பெரியளவில் போராட்டங்கள்
நடந்தது.


போராட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு போலீசார் வன்முறையைப்
பயன்படுத்தினர். இந்த போராட்டங்களின் போது மட்டும் சுமார் 500 பேர்
கொல்லப்பட்டதாகவும் 22 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாகவும்
கூறப்படுகிறது.


உட்சபட்ச தலைவர்:
மேலும், ஈரான் நாட்டை பொறுத்தவரை அதிபரைக் காட்டிலும் கூடுதல்
அதிகாரம் உள்ளவர் என்றால் அது அந்நாட்டின் உட்சபட்ச தலைவர்
அயதுல்லா அலி கமேனி தான். இந்த உட்சபட்ச தலைவரின் வாரிசாகவே
ரைசி பார்க்கப்படுகிறார்.. 85 வயதான அய்துல்லா அலி கமேனிக்கு பிறகு
அந்த பதவிக்கு ரைசியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
-
-விக்னேஷ்குமார் - ஒன் இந்தியா.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி. Empty Re: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.

Post by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி. FB7LMuT
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  அருணாச்சல பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேர் பலி
»  ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த 2 விமானப்படை வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்
» ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பிய ஜேர்மன் பிரதமர்
»  ரியாலிட்டி ஷோ விபரீதம்: ஹெலிகாப்டர் விபத்தில் பிரபலங்கள் உட்பட10 பேர் பலி!
» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum