ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

+6
சபீர்
தண்டாயுதபாணி
யுவா
உதயசுதா
VIJAY
ரிபாஸ்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? - Page 2 Empty சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

Post by ரிபாஸ் Wed Jan 27, 2010 5:08 pm

First topic message reminder :

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? - Page 2 Kidney01அமெரிக்கா
நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக்
குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய
வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே
தெரியாமல் இருக்கின்றனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில்
இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக
வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.


ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி
வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு
டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும்
தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக
மாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய
வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள்
ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல
காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான
சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில்
நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.

ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.

1. சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது?

நான்
படித்த ஒரு கட்டுரையில் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75% குறையும் வரை
பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உணர மாட்டார் என்று
சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா?

இது முழுக்க உண்மை.
சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள
வேண்டும். ஒன்று சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும்
உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 70-80மூ அவற்றின்
வேலைத் திறனை இழக்கும் வரை நம் அடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக்
கொள்கின்றன. அதனால் ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர
முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான
மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில
அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு
ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான்
சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து
மிகவும் கடினமாக உள்ளது.

2. என்றாலும் சிறுநீரக
பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன என்று தெரிந்தால் அதை
வைத்து சிலரேனும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை அறிந்து பயன் பெற
உதவக் கூடுமல்லவா?

திடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும்
சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்)
நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக
பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால்
முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக களைப்பு, தோலில்
அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில்
இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி
(முக்கியமாக இரவில்) சிறுநீர் கழித்தல்.

உண்மையில் சொல்லப்
போனால் தங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய
பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின்
ஆரோக்யத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை,
இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு. இவைகளில் ஏதேனும்
கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும்.

3. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமா?

அப்படியல்ல.
அது வரை சரியான அளவு அதாவது பகலில் 3-4 முறை இரவில் படுக்கச் செல்லும்
முன் ஒரு முறை சிறுநீர் கழிப்பு என்று இருந்தவர்கள் திடீரென அடிக்கடி
சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முதல் காரணம் சிறுநீரக பையில்
கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை அழற்சி (புண்) பெண்களுக்கு ஆண்களை விட
இது இன்னும் அதிகம். இது எளிதில் குணபடுத்தக் கூடிய ஒரு சிறிய தொந்தரவு
தான்.

ஆண்களுக்கு முக்கியமாக வயதானவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி
(மூத்திரக்காய்) வீக்கம் சிறுநீர் அடைப்பு காரணமாகவும் அடிக்கடி சிறுநீர்
கழிக்கும் தொந்தரவு வரலாம். எதையும் நீங்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை
பெறுவதன் மூலம் இதை தெளிவு செய்து கொள்ள வேண்டும்.

அதே போல அது
வரை நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருந்த ஒருவர் காரணம் எதுவும் இல்லாமல்
அடிக்கடி சோர்ந்து போவது, எளிதில் களைத்து விடுவது, கவனக் குறைவு, அதீத
ஞாபக மறதி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அதற்கு சிறுநீரக செயலிழப்பு ஒரு
காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து முன்பே சொன்னபடி சில எளிய
பரிசோதனைகள் மூலம் அதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

இதே போல தோல்
உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச்சல், பசி
இல்லாமல் இருப்பது, சிறுநீரகங்கள் உள்ள இருபுற விலாஎலும்புகளின் கீழ் வலி.
கணுக்கால்களுக்கு கீழ் வீக்கம் (ஆரம்பத்தில்) போன்ற அறிகுறிகள்
இருந்தாலும் சிறுநீரகங்களை பரிசோதித்தல் தவறில்லை. மேலும் சிறுவயதில் (35
வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிறுநீரகங்களை
பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர சர்க்கரை வியாதி, உயர் இரத்த
அழுத்தம் (எந்த வயதினரும்), அடிக்கடி சிறுநீரில் கிருமித் தாக்குதல்
வருபவர்கள், சிறுநீரக கற்கள் வந்தவர்கள், குடும்பத்தில் வேறு யாருக்கேனும்
சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் சிறுநீர்கங்களை பரிசோதித்து பார்த்துக்
கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே
கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் இயலும்.

4. இந்த ஆரம்ப பரிசோதனைகளத் தவிர வேறு பரிசோதனைகளும் வேண்டி வருமா?

மேற்குறிப்பிட்ட
எளிய பரிசோதனைகளில் கோளாறு இருப்பதாக தெரிய வந்தால் அதை மேலும் உறுதி
செய்த கொள்ளவும் சிறுநீரக பாதிப்பின் தன்மை. கடுமை, சில சமயங்களில்
முன்னேறிய சிறுநீரக பாதிப்பினால் வேறு உறுப்புக்கள் (முக்கியமாக இதயம்)
பாதிப்பு என்பதை அறிய பல்வேறு சோதனைகள் தேவைப்படலாம்.

(சிறுநீரக
பாதிப்பு உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் பற்றி சிறுநீரகங்களுக்கான
பரிசோதனைகள் என்ற கையேட்டில் விரிவாகக் காணலாம்)

5. சரி
இந்த பரிசோதனைகளில் சிறுநீரக பாதிப்பூஃ- செயலிழப்பு உள்ளது உறுதி
செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இனி என்ன நடக்கும்.

வெறும்
சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு
(சிறுநீரக ஸ்கான் செய்யும் போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில
வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்களுக்கு (சிறுநீரக நுண்தமனி
அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற
ஒரு பரிசோதனை தேவைப்படலாம்.

இந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து
சில மருந்துகளை குறிப்பிட்ட காலம்வரை மருத்துவரின் கண்காணிப்பில்
எடுத்துக் கொள்வதன் மூலம் சிலவகை சிறுநீரக வியாதிகளை முழுவதும்
குணப்படுத்தவோ அல்லது நன்கு கட்டுப்படுத்தவோ முடியலாம். சிறுநீரக தாரையில்
கிருமி தாக்குதல், சிறுநீரக பாதையில் கற்கள் உள்ளவர்கள் அதற்குரிய
வைத்தியத்திற்கு பின்னரும் இவை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து அதற்குரிய
மருத்துவத்தை மேற்கொள்வதால் இத்தொந்தரவுகள் மீண்டும் மீண்டும் வராமலும்
அதனால் சிறுநீரகங்களின் செயல்திறன் பாதிக்கப்படாமலும் காப்பாற்றிக்
கொள்ளலாம். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தத்தால் சிறுநீரகங்கள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன்
மூலமும் சில பிரத்யேக மருந்துகளின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெருமளவு
குணப்படுத்தலாம்.

6. முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் செய்ய வேண்யது என்ன?

சிறுநீரக பாதிப்பு/செயலிழப்பு உள்ளவர்களின் சிறுநீரக பாதிப்பை பல்வேறு கட்டங்களாக பிரிக்கலாம்.

1.ஆரம்ப
கட்டம் (நிலை-1) சிறுநீரக பாதிப்பு மாத்திரம் (சிறுநீரக செயலிழப்பு இல்லை)
உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை, கால, உடல் வீக்கம்
ஆகிய தொந்தரவுகள் இருக்கலாம்.

2. லேசான சிறுநீரக செயலிழப்பு
(நிலை-2): இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு-2. மி.கி. புள்ளிக்கு கீழே).
இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, ஆகார, மாற்றம்,
சிறுநீரக பாதிப்பு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கும் சில மருந்துகளை
சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து
சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் மருந்துகள்,
காரணங்கள் (உதாரணமாக வலி மருந்துகள், நாட்டு மருந்துகள்) ஆகியவற்றை
தவிர்த்தல் ஆகிய செயல்களின் மூலம் சிறுநீரக பாதிப்பை பெருமளவு
சரிசெய்யலாம் அல்லது மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தி வைக்கலாம்.

3.
அதிக சிறுநீரக செயலிழப்பு (நிலை-3)- இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6
மி.கி. புள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த
விருத்திக்கான மருந்துகள், எள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள்
அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எலும்புகளுக்கான மருந்துகள்
இவைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில்
கிரியேட்டினின் அளவு 6 மி.கிக்கு மேல் ஆகும் போது அடுத்த கட்ட முற்றிய
சிறுநீரக செயலிழப்பில் மேற்கொள்ள சிகிச்சையான டயாலிசிஸ் சிகிச்சைக்கு
தேவையான சில முன்னேற்பாடுக்களை செய்து கொள்ள வேண்டும். அவையாவன தொடர்
டயாலிசிஸ் சிகிச்சைக்கு இரத்த குழாய்களிலிருந்து மீண்டும் மீண்டும்
இரத்தம் எடுப்பதை எளிதாகும். இரத்த நாள இணைப்பு அறுவை சிகிச்சை (@
பிஸ்டுலா ஆபரேஷன்) செய்து கொள்ள வேண்டும். அதை சரியான சமயத்தில் செய்து
கொள்ளுவதால் பின்வரும் காலத்தில் பலவித செலவுகளை வெகுவாக குறைக்கலாம்.
டயாலிசிஸ் சிகிச்சையில் மிக எளிதாகி விடுகின்றது. ஈரலைப் பாதிக்கும்
ஹெபடைடிஸ்-டீ என்ற வைரஸ் கிருமியிலிருந்து நம்மை பாதுகாக்கும்
தடுப்பூசியையும் மருத்துகள் உங்களுக்கு பரிந்துரைப்பார் இதனால் டயாலிசிஸ்
சிகிச்சையின் போது இந்த கிருமி வேறு யாரிடமிருந்தும் நமக்கு வராமல்
பாதுகாத்துக் கொள்ளலாம்.

4. முற்றிலும் சிறுநீரக செயலிழப்பு
(நிலை-4) இந்த கட்டத்தில் சிறுநீரகங்களின் மொத்த செயல் திறன் 10
சதவிகிதத்திற்கும் கீழே வந்து விடுகின்றது அப்போது இரத்தத்தில்
கிரியேட்டின் அளவு 6-7 மி.கி க்கு. மேலும் பெரும்பாலும் இரத்த அளவும்
மிகவும் குறைந்து விடும். அப்போது நமது உடலின் பல்வேறு உறுப்புக்களும்
பாதிக்கப்பட்டு பல்வேறு வித உபாதைகள் வரலாம். இந்த சமயத்தில் டயாலிசிஸ்
சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் மட்டுமே ஒருவர் தொடர்ந்து
ஆரோக்யத்துடன் உயிர் வாழ முடியும். எனவே முன்பு கூறியிருந்தது போல இதற்கான
ஏற்பாடுகளை தகுந்த நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும். அதற்குரிய
காலம் வந்தவுடன் டயாலிசிஸ் சிகிச்சையை தாமதமின்றி தொடங்கி முறையாக செய்து
வந்தால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த பின்னரும் கூட தொடர்ந்து நல்ல
ஆரோக்யத்துடன் வாழ்வை தொடர முடியும். சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து
கொள்ள தகுதி உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு பதில் அந்த சிகிச்சையை
முயற்சி செய்யலாம்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down


சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? - Page 2 Empty Re: சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

Post by சாந்தன் Thu Jan 28, 2010 2:06 pm

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? - Page 2 678642 சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? - Page 2 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? - Page 2 Empty Re: சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

Post by முபிஸ் Thu Jan 28, 2010 3:15 pm

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? - Page 2 677196 சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? - Page 2 677196
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? - Page 2 Empty Re: சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum