புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_m10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_m10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_m10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_m10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_m10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_m10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_m10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_m10ஸ்ரீ ராமநவமி -17-04-2024 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ராமநவமி -17-04-2024


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 17, 2024 10:09 am


ஸ்ரீ ராமநவமி -17-04-2024 11-93-

ஸ்ரீ ராம நவமி பற்றியும், ஸ்ரீ ராமபிரானைப் பற்றியும், ஸ்ரீ ராமாயணம்
தத்துவங்கள் பற்றியும் சில விஷயங்களை காண்போம்.

நால்வர் தவம் செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்

கிருஷ்ணாவதாரத்தில் நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப்
பெற்றார்கள். ராமாவதாரத்தில் ஒருவர் தவம் செய்து நான்கு
பிள்ளைகளைப் பெற்றார் என்று சுவாரஸ்யமாகச் சொல்லுவார்கள்.

யசோதை, நந்தகோபன், தேவகி, வசுதேவர் ஆகிய நால்வர்
தவம்செய்து, கண்ணன் அவதரித்தான். ஆனால் தசரதன்,
ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால், அவருக்கு நான்கு
குழந்தைகள் பிறந்தன.

நான்கு வகை தர்மங்கள்

தர்மத்தை காப்பதற்காக பகவானே தசரதனுக்குப் பிள்ளைகளாக அ
வதரித்தான். தர்மம் நான்கு வகைப்படும்.

1. சாமானிய தர்மம்,
2. சேஷ தர்மம்,
3. விசேஷ தர்மம்,
4. விசேஷதர தர்மம்.

இதில் தாய், தந்தையிடமும், குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
என்று சொல்லுகின்ற தர்மம் “சாமான்ய தர்மம்”. இதை ராமன்
அனுஷ்டித்துக் காட்டினான்.

இரண்டாவதாக, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா
அடிமை செய்கின்ற தொண்டுள்ளம் கொண்டவனாக, பதினான்கு
ஆண்டுகள் தூங்காமல் (துஞ்சமில் நயனத்தான்) பகவானுக்குக்
குற்றேவல் புரிந்தான் இலக்குவன். இது “சேஷ தர்மம்”.

எப்பொழுதும் பகவானையே நினைத்துக் கொண்டு, பகவான்
சொல்லியதை செய்தான் பரதன். இது “விசேஷ தர்மம்”. இறைவனுக்குத்
தொண்டு செய்வதைவிட இறை அடியார்களுக்குத் தொண்டு செய்வதே
முதன்மையானது என்று பாகவத சேஷத்வத்தைக் காட்டினான் சத்ருக்கனன்.
இது “விசேஷதர” தர்மம்.

இது சைவத்திலும் உண்டு. ‘‘கூடும் அன்பினில் கும்பிட அன்றி வீடும்
வேண்டா’’ என்று இருக்கும் நிலை அது.

‘‘உற்றதும் உன் அடியார்க்கு அடிமை’’ என்று இதை திருமங்கை ஆழ்வார்
வலியுறுத்துவார்.


சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 17, 2024 10:13 am

காயத்ரி மந்திரமும், ஸ்ரீ ராமாயணமும்
--
சகல வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரத்திற்கும்,
ஸ்ரீ ராமாயணத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு
24 அட்சரங்கள். ராமாயணத்திற்கு 24,000 ஸ்லோகங்கள். ஒவ்வொரு
அட்சரத்துக்கு 1000 ஸ்லோகங்கள் என்ற வகையில், 24 ஆயிரம்
ஸ்லோகங்களை வான்மீகி செய்தார்.

இதைப் போலவே, நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், ராமாயண
சாரத்தைச் சொல்வதால், அதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை,
ராமாயணத்திற்கு நிகராக 24000படி உரை எழுதினார்.
--
சீதையின் பெருமையா? ராமனின் பெருமையா?
--
ஸ்ரீ ராமாயணம் என்பது ராமரின் பெருமையைக் கூறுவதாகச் சொன்னாலும்,
அது சீதையின் பெருமையை பிரதானமாகச் சொல்ல ஏற்பட்ட காவியம் என்று
மகரிஷிகள் கருதுகின்றார்கள்.

“ஸீதாயாம் சரிதம் மகத்” (சீதையின் பெருங்கதை) என்றுதான்
ரிஷிகள் சொல்லுகின்றார்கள். ஆழ்வாரும் தேவ மாதர்கள் விடுதலை
அடைய வேண்டும் என்பதற்காக சீதை பத்து மாதம் சிறையில் இருந்தாள்.
அந்த சிறை இருந்தவளின் பெருமையைச் சொல்றதுதான் ராமாயணம்
என்று பாசுரம் பாடுகின்றார்.

“தளிர்நிறத்தால் குறையில்லாத் “தனிச்
சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள்” காரணமாக் கிளர்
அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்
முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால்
குறையிலமே’’

– என்பது திருவாய்மொழி.
-
தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப்
பேணாதே, அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’
என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல் என்பது உரையாசிரியர்கள்
கருத்து.
[/size]

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 17, 2024 10:16 am

முத்தி நகரங்களில் தலை அயோத்தி
--
ஸ்ரீ ராமர், முத்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான அயோத்தியில்
அவதரித்தார். எனவே அயோத்தியையும், ஸ்ரீ ராமரையும்
நினைத்தாலே புண்ணியம் வரும். முக்தி தரும் 7 ஸ்தலங்களுள்
முதல் க்ஷேத்திரம் இது. முக்கியமான க்ஷேத்திரமும்கூட.

‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி
அவந்திகா
புரி த்வாரவ திஶ்சைவ சப்த ஏகா
மோக்ஷ தாயகா’

-
என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி,
காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும்
முக்தி தரும் ஸ்தலங்களாகும்.

இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு,
காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ்,
காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

அயோத்தி ஏன் புனிதத்தலம்?


பகவான் நித்ய வாசம் செய்யும் வைகுண்டத்தின் ஒரு பகுதியே
அயோத்தி. (யுத்தங்களால் வெல்லப்படாத பூமி). மனு, இந்த ஊரை
சரையூ நதியின் தென் கரையில் நிறுவினார், என்பதை புராணங்கள்
மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும்,
அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும்,
மேற்கில் வக்த்ரனும், வடக்கில் வீபீஷணனும் வாழ்ந்துகொண்டு
இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்று ஐதீகம்.

ராமபிரான் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களின் அடிச்சுவடுகளை
இன்றும் நாம் அயோத்தியில் தரிசிக்க முடியும். அதனால்,
அயோத்தியை புனிதத் தலமாக இந்திய மக்கள் கருதுகிறார்கள்.

அயோத்தியில் தரிசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது.
அயோத்தியா ரயில் நிலையத்தினுள், சுவர்களில் “ஸ்ரீ ராம்சரித் மானஸ்’’
என்ற துளசிதாஸ் ராமாயணத்திலிருக்கும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

சரயு நதி
--
குழந்தைக்கு அமுதம் தரும் தாயின் மார்பகம் போல,
உயிர்களுக்கு அமுதம் தரும் வற்றாத நதி சரயு.

“இரவி தன்குலத் தெண்ணிபல வேந்தர்தம்
புரவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயு வென்பது தாய் முலையன்ன திவ்
வரவு நீர்நிலத்தோங்கு முயிர்க்கெல்லாம்’’.

(பால – ஆற்றுப்படலம் – 24) என்று நதியின் பெருமையை கம்பன்
வர்ணிப்பான். சரயு நதி அயோத்தியில் அற்புதமாக ஓடிக்
கொண்டிருக்கிறது. சரயு நதியின் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து
வருகிறது. அதன் பெயர் ஹரிருத் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த சரயு நதியுடன் இரண்டு நதிகள் கலக்கின்றன. கர்னால் மற்றும்
மகாகாளி என்பவை அவை. ராமரின் அவதார தினமான ராம நவமி
அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கி
நீராடுகிறார்கள்.

ராம்காட் என்னுமிடத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம்
செய்வதை இன்றும் காணலாம். ராமர் இந்த உலக வாழ்வை முடித்துத்
கொள்ளத் தீர்மானித்த போது, இந்த நதியில்தான் இறங்கினார் என
நம்பப்படுகிறது. இந்த இடம் குப்த காட் என்று அழைக்கப்படுகிறது.
---------------

ஏழு மராமரம்
--
ராமாயணத்தில் நம் கவனத்தை கவர்ந்தது மராமரம்.
“மரா” “மரா” என்ற உபதேசம் “ராம ராம” எனும் மந்திரம் ஆகி
வான்மீகியைப் பதப்படுத்தியது. ராமாயணத்தை எழுத வைத்தது.
-
“நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்
றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே
– என்பார் கம்பர்.
-
அது சரி மராமரம் என்பது என்ன?
-
இங்கே மராம் என்பது யா மரம் (=ஆச்சா/சாலம்).
மரா என்ற தமிழ்ச் சொல், ராம என்ற தெய்வப்பெயரை வால்மீகிக்குத்
தந்துள்ளது.

“ஏழுமா மரம் உருவிக் கீழுலகம் என்று
இசைக்கும்
ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடனடுத்து
இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது அவ்
இராகவன் பகழி
ஏழு கண்டபின் உருவுமால் ஒழிவது
அன்று இன்னும்.

ராமனால் செலுத்தப்பட்ட அம்பு, தனக்கு இலக்காகக் கொடுக்கப்பட்ட
ஏழு மராமரங்களையும் துளைத்து, ஏழு உலகங்களையும் துளைத்து,
ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்த எல்லாப் பொருட்களையும் துளைத்தது,
இனித்துளைப்பதற்கு ஏழாக எதுவும் இல்லை என்ற நிலையில் ராமனிடம்
திரும்பி வந்தது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக