புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
40 Posts - 63%
heezulia
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
2 Posts - 3%
viyasan
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
232 Posts - 42%
heezulia
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
21 Posts - 4%
prajai
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_m10மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்கள் - மனிதர்கள் - கடவுள்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Mar 08, 2024 3:47 pm

மரங்கள் - மனிதர்கள் - கடவுள்  KgCzfZO

அண்ணாமலை சுகுமாரன்
(மார்ச் மாத வையம் இலக்கிய இதழில் இடம்பெற்ற கட்டுரை)
மனிதர்களின் வாழ்க்கையும் காடுகளும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை சொல்லப்போனால் மரங்கள் இல்லாமல் மனிதர்கள் இல்லை எனலாம் அதேசமயம் காடுகளும் மரங்களும் தொல் தமிழர்களின் செல்வத்திற்கு செல்வ செழிப்பிற்கு முக்கிய ஒரு காரணிகள் ஆகவும் விளங்கியது . இந்திய காடுகளில் இருந்து தேக்கு மரங்களும் வேறு பல மூலிகைகளும் கிராம்பு போன்ற இயற்கை பொருட்களும்,நறுமண பொருள்களும் உலகெங்கும் தமிழர்களால் கொண்டு செல்லப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டது மொத்த உலகமே இத்தகைய இயற்கை பொருள்களுக்கு தமிழர்களை நம்பி இருந்த காலம் ஒன்று உண்டுமேற்குத் தொடர்ச்சி மலை நமக்கு அளித்த கொடைகள் இவை . .
பண்டைய நாகரிகங்கள் முதல் நவீன காலம் வரை மனிதகுலத்திற்கும் மரங்களுக்கும் இடையே உள்ள ஆழமான மற்றும் சிக்கலான தொடர்பை இந்த கட்டுரை ஆராய்கிறது. இது மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களில் மரங்களின் முக்கியத்துவத்தை ஆராய்கிறது, கலாச்சார வளர்ச்சியில் அவற்றின் பங்கு, கலை வெளிப்பாடு மற்றும் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கான காடுகளின் முக்கிய முக்கியத்துவம் ஆகியவற்றை ஆராய்கிறது. சூழ் நிலைகளுக்கும்காடுகளுக்கும் உள்ள முக்கிய தொடர்புகளை மனதில் கொள்கிறது .
மனிதனுக்கும் மரத்துக்கும் இடையிலான நீடித்த பிணைப்பை முன்னிலைப்படுத்துவதும், அதன் பண்டைய வரலாறு , காடுகளால் கிடைத்த பொருளாதார செழிப்பு ,எதிர்கால சந்ததியினருக்கு இந்த முக்கிய உறவைப் பாதுகாக்க நிலையான நடைமுறைகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதும் இதன் நோக்கமாகும்
பழங்காலத்திலிருந்தே, மனிதகுலத்தின் இருப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனித சமூகங்களில் மரங்களின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கலாச்சார, கலை மற்றும் சுற்றுச்சூழல் பரிமாணங்களில் அவற்றின் நீடித்த தாக்கத்தை கண்டுணரவேண்டும்
காடுகள், மரங்களின் பெரிய சுற்றுச்சூழல் அமைப்பாக,அமைந்து மனித குலத்தின் உயிர்வாழ்விற்கு இன்றியமையாததாக இருக்கிறது . அவை பல்லுயிர் பெருக்கத்திற்கு பங்களிக்கின்றன, காலநிலையை ஒழுங்குபடுத்துகின்றன மற்றும் மனித வாழ்க்கைக்கு முக்கியமான வளங்களை வழங்குகின்றன. பூமியில் உயிர்களை நிலைநிறுத்துவதில் காடுகளின் ஒருங்கிணைந்த பங்கு மிக முக்கியமானது .மழைகளின்றி மனிதர்கள் இல்லை .மரமின்றி மழையும் இல்லை .
இவை மனித உயிர்வாழ்த்தளுடன் பின்னிப்பிணைந்தவை .
பழங்கால நாகரிகங்கள் மரங்களை வாழ்க்கையின் வளர்ச்சி மற்றும் ஞானத்தின் அடையாளங்களாகப் போற்றுகின்றன. பண்டைய கிரேக்கத்தில் உள்ள புனித தோப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏதென்ஸின் பிளாட்டோனிக் அகாடமியின் தளம் ஆலிவ் மரங்களின் புனித தோப்பாக இருந்தது, இது இப்போதும் "அகாடமின் தோப்புகள்" என்று நினைவுகூரப்படுகிறது.
மேலும் பௌத்தத்தில் போதி மரத்தின் முக்கியத்துவம் பழங்காலத்தில் மனிதனுக்கும் மரத்திற்கும் இடையே உள்ள ஆழமான ஆன்மீக தொடர்பைஎடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவிலும் , குறிப்பாக தென்னகத்தில் மரத்தடிகள் என்பது கிராமத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கும் இடமாகவும் , வழிபடும் இடமாகவும் ,வணிகப் பொருள்களை சந்தைப்படுத்தும்விதமாக மக்கள் கூடும் இடமாகவே விளங்கிவந்தது . மரங்கள் புனிதமாகவும் , பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் இடமாகவும் ,தெய்வங்கள் உறையும் இடமாகவும் காலம்காலமாக ப்போற்றப்பட்டது .
மரங்கள் பெரும்பாலும் சந்திப்பு இடங்களாக செயல்பட்டன, அங்கு சமூகங்கள் விவாதங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு மக்கள் கூடினர்
கலை வெளிப்பாட்டில் கூட மரங்களின் தாக்கம் ஆழமானது. பண்டைய குகை ஓவியங்கள் முதல் நவீன கால தலைசிறந்த படைப்புகள் வரை, கலைஞர்கள் மரங்களின் அழகு மற்றும் அடையாளங்களில் இருந்து உத்வேகம் பெற்றுள்ளனர். மனிதனுக்கும் மரத்திற்கும் இடையிலான உறவு பல நூற்றாண்டுகளாக பரவி, மனித வாழ்வின் கலாச்சார, கலை மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை பாதிக்கிறது
தமிழர் பண்டு தொட்டு அரசமரம், ஆலமரம், வேப்பமரம், கடம்பமரம், வாகைமரம், வில்வமரம், கொன்றைமரம் முதலிய பல்வேறு மரங்களை வணங்கி வந்திருக்கின்றனர் - வணங்கியும் வருகின்றனர்.
அதே போல் கோயில்களில் உள்ள மரங்களையும் தலவிருட்சமாகக் கருதி வணங்குவர்.
முருகன் கடம்பன் எனவும், சிவன் கொன்றை மரத்தோன் எனவும் அழைக்கப்பெறுவர். திருமால் ஆலமர இலையிலிருந்து உதித்தார் என்றும் கூறுவர். நெய்தல் நில பரதவர் பனையை வழிபட்டனர். பலராமன் பனைக் கொடியோன் எனப்பெற்றான்.
சங்க இலக்கியங்களில் சில மரங்கள் கடவுள் மரங்களாகக் காட்டப்படுகின்றன. மிக நெடுங்காலமாகக் கடவுள் அடிமரத்தை உடைய பெண்ணை எனும் மரத்தில் உறைந்து வருவதாகவும் அம்மரத்தடியில் பொது மக்கள் கூடும் இடமே - மன்றம் எனவும் நற்றிணை (303) குறிப்பிடுகிறது.
ஆலமரம், கடவுள் மரம் (அகநா.270) எனப்பட்டது. கடவுள் ஆலம் என்றே புறநானூறும் (199), நற்றிணையும் (343) மொழிகின்றன.
சிவபெருமான் ஆலமரத்தின் கீழ் தெற்கு முகமாக அமர்ந்துள்ளதால் "தென்முகக் கடவுள்' என அழைக்கப்பட்டார். இதை "ஆலமர் செல்வர்' எனக் கலித்தொகை(83) கூறுகிறது.
கடம்ப மரத்துக் கடவுளை வழிபட்டால் அக்கடவுள் கொடியோரை விரட்டும்; விலக்கும் என்பது நம்பிக்கை. அத்தகு கடவுள் நிலை பெற்ற கடம்பமரம் மன்றத்தில் இருந்தது என்பதை,
"மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப' (87)
என வரும் குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது.
வேங்கை மரத்தையும், வயல்களை ஒட்டி வளர்ந்திருக்கும் வேங்கைமரக் கடவுளையும் வணங்கினால், வயல்கள் விளையும்; அவை காக்கப்பெறும் என்பதை,
"எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகார் கழனி' (216)
என நற்றிணைக் குறிப்பிடுகிறது.
வேப்பமரம், காளியம்மனின் மரமாகக் கருதப்படுகிறது. காளி கோயில் ,மாரியம்மன் கோயில்கள் அனைத்தும், வேப்ப மரத்தையே தலமரமாகப் பெற்றிருக்கும்.
பக்கத்து நாட்டின் மீது போரிடச் செல்வோர் வேப்பமரத்தை வணங்கிச் செல்வர். போரில் பங்கேற்ற மறவர்கள் சிலர் விழுப்புண் பெறுவர். அவ் விழுப்புண்ணோடு வீரரை இரவில் தனியே விட்டால் அவர்களைப் பேய் பற்றும்; புண்ணும் ஆறாது என்றும் மக்கள் நம்பினர். எனவே, வீரர்கள் உறையும் இடத்தில் பெண்டிர் நாகசம்பங்கி (இரவம்) இலையையும் வேப்பிலையையும் செருகி வைத்திருந்தனர் என்று புறநானூறு(28) கூறுகிறது.
தமிழகச் சிற்றூர்களில் அரசமரமும் வேப்பமரமும் சேர்ந்து வளர்ந்த இடங்கள் வழிபாட்டிற்குரிய இடங்களாகத் திகழ்கின்றன. அரசமரம் மணமகனாகவும், வேப்பமரம் மணமகளாகவும் உருவகிக்கப்பட்டு, அவ்விரு மரங்களுக்கும் திருமணமும் நடத்திவைப்பர். இம்மரத்தடியில் நாக உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும்.
நல்ல கணவனை ப் பெற நினைக்கும் பெண்டிர், இம்மரங்களைச் சுற்றிவந்து வழிபடுவர் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. வழிபடு மரத்தின் சுற்றுப்புறத்தை மகளிர் கூட்டிப் பெருக்கித் தூய்மையாக்குவர், மாலை சூட்டி அழகுபடுத்துவர் என்பதை,
"ஆல முற்றங் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழின்மனை மகளிர்'
(181)என்கிறது அகநானூறு.
ஊர் நடுவே இருந்த ஒரு கடவுள் மரத்தின் கிளையொன்றில் ஆண் பறவையும் பெண் பறவையும் பல்வேறு இடங்களுக்குச் சென்று முட்களையும் இன்னபிறவற்றையும் கொணர்ந்து வந்து சேர்ந்து கூடுகட்டின. எனினும், அது கடவுள் மரம் என்பதால் பெண்பறவை தன் துணையுடன் சேர்வதைத் தவிர்த்தது என்று,
"கடவுள் மரத்த முள்மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறுகரும் பேடை' (270)
என அகநானூற்றுப் பாடல் ஒன்றுவிவரிக்கிறது
.
ஒரு காலத்தில் மக்களால் வழிபட்ட வனங்களோ அல்லது மரங்களோ பிற்காலத்து ஊரின் பெயராகி, பின் கோயிலின் பெயராகியிருக்கும் எனக் கருதுவதற்கு இன்றைக்குப் பல ஊர்களே சான்றாகத் திகழ்கின்றன.
திருவலங்ககாடு ,திருமறைக்காடு என்று காடுகளின் பெயரிலும் , திருவிடைக்கழி போன்ற பெயர்களிலும் ஊர்கள் உண்டு .அங்கு ஆலயங்களும் உண்டு .
காலங்காலமாகத் தமிழர்களின் வாழ்வில் இரண்டறந் கலந்துவிட்ட இத்தகைய வணக்கத்திற்குரிய மரங்களை என்றும் போற்றுவோம் .
2,000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட பண்டைய சங்க இலக்கியங்களில், பல்வேறு கவிதைகள் இயற்கையின் அழகைக் கொண்டாடுகின்றன, பெரும்பாலும் மரங்களை காதல், அழகு மற்றும் நெகிழ்ச்சியின் அடையாளங்களாகக் கொண்டுள்ளன.
சான்றாக , குறுந்தொகையின் கவிதைகளில், 'குறிஞ்சி' பூ மற்றும் 'முல்லை' (மல்லிகை) மரங்களுடன் ஒப்பிடப்படுகிறது, இது நிலப்பரப்பு மற்றும் கவிஞர்களின் உணர்ச்சிகளைக் குறிக்கிறது.
பேராசிரியர் ஸ்ரீநிவாசன் எழுதிய சங்க இலக்கிய தாவரங்கள் என்ற நுாலில் அதிசயிக்கத் தக்க பல தகவல்களைக் காணலாம் என்று கூறி, சிலவற்றைப் பகிர்ந்தும் இருக்கிறார்.
தொல்காப்பியத் தாவரங்கள் 52
கங்க இலக்கிய தாவரங்கள் 207
சங்கம் மருவிய காலம் 185
பக்தி இலக்கியக் காலம் 238
இவை கி.பி 600க்கும் 1750க்கும் இடைப்பட்ட காலத்திற்குரிய கணக்கு என்கிறது இந்த புத்தகம் .
தொல்காப்பியத்தில் “எகின்“ என அறியப்பட்ட மரந்தான் நாமறிந்த புளி என்கிறார். தொல்காப்பிய காலத்திற்கு முன்பே தமிழகத்தை ஆலமரம் கண்டுவிட்டது என்றும், தென்னை என்ற சொல் முதன்முதலாக நாலடியில் காணப்பட்டது என்றும அவர் சொல்கிறார்.
19ஆம் நுாற்றாண்டில் மன்னர் திருவிதாங்கூர்
தெ. அமெரி்ககாவிலிருந்து மரவள்ளியைக் கொண்டுவந்த சரித்திரம் நமக்குத் தெரியும். அதையே மரச் சீனிக் கிழங்கு, குச்சிக் கிழங்கு என்ற பெயரில், பஞ்ச காலத்தில் உண்டிருக்கிறார்கள்.
அந்த கிழங்கு கப்பலில் வந்ததாலோ , அல்லது அதை நமது தொல் தமிழர்கள் தங்களின் தொலைதூர கடற்ப்பயணங்களில் உணவுக்காக எடுத்துப்போனதாலோ அவைகளுக்கு கப்பகிழங்கு என்று பெயர் வந்துவிட்டது .அதுவும் ஒரு மரம் தான் எனவே மரவள்ளிக்கிழங்கு .
.இன்னொரு அதிசயம் “மராஅம்“ எனப்படும் செங்கடம்பு. அதில் மஞ்சள்கடம்பு என்றொரு இனமும் உண்டு. கடம்ப மரக்கட்டில் உடல் வலியைப் போக்கி விடும். இதற்கோரு பழமொழியும் சொல்கிறார். “உடம்பை முறித்து கடம்பில் போடு“ என்பதுதான் அந்தப் பழமொழி.
வரலாற்றிலேயும் மரங்களின் பங்களிப்பு மிகவும் அதிகம் .
மனித குலத்தின் மரத்தின் பயன்பாட்டிற்கான ஆரம்பதொல்லியல் சான்றுகள்இப்போது கிடைக்கின்றன .
ஆப்ரிக்க ஜாம்பியாவில் உள்ள கலம்போ நீர்வீழ்ச்சியின் அருகில் கிடைத்த தொல் எச்சம் வரலாற்றுக்கு முந்தைய தளத்தில் குறைந்தது 4,76,000 ஆண்டுகளுக்கு முந்தையது
அதனை ஆண்டுகாலம் மரங்கள் அழிவின்றி நீடித்து இருந்து கிடைத்ததற்கு , நீர்வீழ்ச்சியின்அண்மையில் கிடைத்த இயற்கையின் விந்தை காரணமாக இருக்கலாம் .
4, 47,000 ஆண்டுகளுக்கும் மேலானதொடர்புகொள்ளும் ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாக கலம்போ நீர்வீழ்ச்சி கருதப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஹோமோ சேபியன்ஸுக்கு முந்தைய நீர்வீழ்ச்சியில் 476,000 ஆண்டுகள் பழமையான மர கட்டமைப்புகளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர். இது ஒரு முக்கிய கண்டுபிடிப்பு .
மரக் கலைப்பொருட்கள் ஆரம்பகால கற்காலத்திலிருந்து எப்போதாவது தான் இவ்வாறு கிடைக்கிறது , ஏனெனில் அவை பாதுகாக்க விதிவிலக்கான நிலைமைகள் தேவைப்படுகின்றன. அங்கே கிடைத்த ஒரு ஆப்பு, தோண்டும் குச்சி, வெட்டப்பட்ட மரக்கட்டை மற்றும் வெட்டப்பட்ட கிளை ஆகியவை அடங்கும்.. இந்த புதிய தரவு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மனிதர்களின் மரவேலைகளின் வயது வரம்பை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், ஆரம்பகால ஹோமினின்களின் தொழில்நுட்ப அறிவாற்றல் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்துகிறது, தொழில்நுட்ப வரலாற்றில் மரங்களின் பயன்பாட்டை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்துகிறது.
அதேப்போல் சிந்துவெளி பண்பாட்டின் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்புகளும் புதிய கற்கால-கல்கோலிதிக் கலாச்சாரத்தின் குடியிருப்பு பகுதியில் தோலாவிராவில் பிந்தைய மரத்துளைகளின் கூடிய சான்றுகள் கிடைத்துள்ளன .
தோலாவிரா (கிமு 3 முதல் கி ,.பி 3 நூற்றாண்டு வரை), இந்தியாவில் உள்ள ஹரப்பன் தளம் ஒரு பெரிய மர "குறியீட்டு பலகை".
கோட்டையின் வடக்கு நுழைவாயிலுக்கு வெளியே.கிடைத்தது . அங்கு
மொசைக் டைல்ஸ் போன்ற வெள்ளை ஜிப்சத்தால்செய்யப்பட்ட பேனலில் 10 சின்னங்கள், பெயர்பலகை போல் மரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
டோலாவிராவின் பலமுக்கிய கண்டுபிடிப்புகளில் மிகவும் அற்புதமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, கோட்டையின் வடக்கு நுழைவாயிலுக்கு வெளியே ஒரு பெரிய மர "குறியீட்டு பலகை" ஆகும்.
இது உண்மையில் அறியப்பட்ட சிந்து கல்வெட்டுகளில் ஒன்றாகும். பேனலில் 10 குறியீடுகள் உள்ளன, ஒவ்வொன்றும் சுமார் 37 சென்டிமீட்டர் உயரம் மற்றும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பலகை சுமார் 3 மீட்டர் நீளம் கொண்டதாகத் தெரிகிறது.
கோட்டையின் வாயிலுக்கு அருகில் உள்ள அதன் இருப்பிடத்தின் அடிப்படையில், இந்த பெரிய கல்வெட்டு "அடையாள பலகை" என்று அழைக்கப்படுகிறது, . இருப்பினும் சிந்து எழுத்துக்கள் புரிந்துகொள்ளப்படும் வரை, அந்த அடையாளம் என்ன சொல்கிறது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
சுமார் 500 BCE சமஸ்கிருத இலக்கணமான பாணினியின் அஷ்டாத்யாயி,இந்தியமரக்கலைபொருள்களைப்பற்றிவிவரிக்கிறது .
சோழர்கள் தென்னிந்தியாவில் 7 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த ஒரு முக்கிய வம்சத்தினர். இந்த காலத்தில் , சோழர்கள் கணிசமான அளவு மரக் கலைகளை உருவாக்கினர், அவற்றில் பெரும்பாலானவை அருங்காட்சியகங்கள் மற்றும் வரலாற்று தளங்களில் காணப்படுகின்றன. சோழர்களுடன் தொடர்புடைய சில மரக் கலைகளில் சிற்பம், சிற்பங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியவை அடங்கும். சோழர்கள் குமாரசம்பவ தந்திரிகள் என்று அழைக்கப்படும் ஒரு திறமையான கைவினைஞர் சங்கத்தைக் கொண்டிருந்தனர், அவர்கள் உளி செதுக்குதல் மற்றும் அரக்கு ஓவியம் போன்ற பாரம்பரிய நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த கலைப் படைப்புகளை உருவாக்கினர்இவைகளில் பல ஆலயங்களில் தேராகவும் , கலைப்பொருள்களாகவும் விளங்குகிறது .
பழங்காலத்திலிருந்தே இந்தியாவில் மர வணிகம் ஒரு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த ஹரப்பா நாகரிகம், வீடுகள் கட்டுவதற்கும், படகுகள் கட்டுவதற்கும், பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் மரங்களைப் பயன்படுத்தியதுதெரியவருகிறது .. கடந்த காலத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேக்கு, சந்தனம், செம்மரம் , கரும் மரம், மற்றும் கருங்காலி போன்ற மர வகைகளை "The_Role_of_Indian_Timber_Trade_in_the_S" is a comprehensive study on the historical context and contemporary scenario of the timber trade in India எனும் புத்தகம் விவரிக்கிறது.
பாரசீக வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாக வர்த்தகம் நடத்தப்பட்டது. மக்காவின் மஸ்ஜித் அல்-ஹராமில் இஸ்லாமிய நம்பிக்கையின் புனிதமான கட்டிடமான காபாவின் கட்டுமானத்தில் இந்தியாவில் இருந்து தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் அளவுக்கு ஏற்றுமதிகள் இருந்தன.
இன்னமும் ஈராக்கின் கல்தீஸ் நகரின் இடிபாடுகளில் இந்திய தேக்கு கண்டெடுக்கப்பட்டதை உறுதி செய்யப்பட்டுள்ளது .
பாபிலோனுக்கு இந்திய மரங்கள் மிகவும் முன்னதாகவே சென்றிருந்தன .தெனிந்தியாவில் ஐரோப்பியர்கள் இங்கு ஆட்சிக்கு வரும் வரை , இங்கிருந்த காட்டுமரங்களை மரங்களை பயன்படுத்தி , கட்டுமரங்கள் , கப்பல்கள் செய்வதில் தமிழர்கள் நெய்தல் நிலத்தில் கோலோச்சினர் .வெள்ளையர்கள் இந்த திறமை சாலிகளை அடக்கு முறையால் குறிபார்த்து ஒடுக்கினர் .அவர்கள் அனைவரும் கப்பல் செயும் திறன் படைத்தவர்கள் , தலை சிறந்த மாலுமிகள் மீன் பிடிக்கும் தொழிலாளியாக மாறிப்போயினர் .
பல ஆண்டுகளாக, இந்தியாவில் மரத்தொழில் ஒரு குறிப்பிடத்தக்க துறையாக மாறியுள்ளது, இது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கிறது.
நாட்டில் கிடைக்கும் முக்கிய மர வகைகளில் தேக்கு, சால், தேவதாரு மற்றும் யூகலிப்டஸ் ஆகியவை அடங்கும், அவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன.
இந்தியாவின் மிக அடர்ந்த காடுகளை அழித்து , மரங்களை கொள்ளை கொண்டதில் இந்தியாவில் நிலைபெற்றிருந்த கிழக்கிந்திய கம்பனிக்கும் , ஆங்கிலேய அரசிற்கும் பெரும் பங்கு உண்டு .அவர்கள் கொண்டுவந்த அவர்களின் காடுகள் அழிப்பிற்கு துணை செய்ய இயற்றிய கடுமையான வனப்பாதுகாப்பு சட்டங்கள் இன்னமும் நீடிக்கிறது . அதன் அதிகப்படியான சுரண்டல் மற்றும் கட்டுப்பாடற்ற வர்த்தகம் காடழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சேதத்திற்கு வழிவகுத்தது.
இப்போது புதிய மரங்களை நடுவதை ஊக்குவிப்பதற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்கும் சூழலியல் பாதுகாப்புக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவதற்காக காடுகளை மீண்டும் வளர்ப்பதற்கும் இந்திய அரசாங்கம் கொள்கைகளை வகுத்துள்ளது.
மர வணிகம் இந்தியாவில் ஒரு முக்கியமான தொழிலாக இருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையே ஒரு நுட்பமான சமநிலை தேவைப்படுகிறது.
அண்ணாமலை சுகுமாரன்
7/3/2024

rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக