Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கந்தன் திருத்திய காவியம்
2 posters
Page 1 of 1
கந்தன் திருத்திய காவியம்
#
நாம் என்றும் போற்றும் தமிழும் ,,என்றும் தொழும் இறையும் எத்தனை அளவு பிண்ணித்தொடர்புடன்ஒன்றோடிணைந்து இருந்தனர் என்பதை அறியும் போது வியப்பூட்டக்கூடியது முன்பே பலமுறை சிவனே தமிழ்ப்புலவர்களுக்கு கவிதைப்பாட முதலடி எடுத்துக்கொடுத்த பல கதைகள் நாம் அறிவோம் . அவ்வாறே தமிழக கடவுளான முருகனும்அப்படியே முதலடியெடுத்து கொடுத்து தமிழில் பாட செய்த ஒரு வரலாறை அண்மையில் படித்தபோது எனக்கு வியப்பும் மகிழ்வும் உண்டானது .
இன்று ஏதோதேடும்போது 1964 இல் கல்கியில் வெளிவந்த கிருபானந்த வாரியார் எழுதிய கந்தன் கருணை எனும் கல்கி இதழில் வெளிவந்தத் தொடரை மொத்தமாகச் சேர்த்த புத்தகம் கிடைத்தது .எப்போதுமே அத்தகைய இதழ்களில் கட்டுரையுடன் வெளிவரும் அன்றைய ஓவியர்களின் வண்ண ஓவியங்களும் என்னை ஈர்ப்பவையாகும் .இந்தத்தொடரில் வினு அற்புதமாக ஓவியம் வரைந்திருப்பார் . இடையில் எத்தனையோ முறை இதைப்படித்திருந்தாலும் எப்போதுமே புதிதாகப்படிப்பதுப்போல உணர்வேன் .இனிகதைப்பிறந்த கதைக்கு வருவோம் .
காஞ்சீபுரம்குமரக்கோட்டத்து குமரனை, கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் பூசகர் பூசித்து வந்தார். ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘வடமொழியில் அப்போது மிகவும் பிரசித்திப்பெற்றிருந்த கந்த புராணத்தின் ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவ ரகசியக் காண்டத்தில் உள்ள எமது வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் தமிழில் பாடுவாயாக! என்று கூறினார். மேலும் ‘திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என முதல் அடியையும் எடுத்துக் கொடுத்தார்.
புராணங்கள் தமிழில்பழமை என்றும் காலத்தால் முந்தையது என்றும் பொருள் தருவது தொன்மை, இத்தகைய தொன்மத்தைக் குறிப்பிடுகையில் தொல்காப்பியர்.
''தொன்மைதானே சொல்லுங்காலை
உரையோடு புணர்ந்த பழமை மேற்றே'' (தொல் - பொருள் : 528)என்பார்.
இத்தகைய தொன்மங்கள் சங்ககாலத்திலிருந்து பலவும் இருந்து வந்துள்ளன .கந்தபுராணம் என்பது கந்தனின் பண்டயப்பெருமைகளை முற்றிலும் எடுத்துரைப்பதாகும் .இந்த தொன்மத்தின் நோக்கில் கந்தன் என்றால் ஒன்றுசேர்க்கப்பட்டவன் என்று பொருள் .கந்தனின் திருக்கோலத்தை கந்து எனும் பண்டைய தமிழ் சொல்லுடன் தொடர்புபடுத்தி நோக்க இயலும் .கந்து என்ற சொல் அன் எனும் ஆண்பால் விகுதிபெற்று கந்தன் ஆயிரு போலும் .கந்துவட்டி எனும் சொல் கூட பொருளுடையதாகத் தோன்றுகிறது .
கந்தன் கனவில் உரைத்தபடி இதையடுத்து கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை எழுதத் தொடங்கினார். கந்தனே சொல்லும் போது தட்டவா முடியும் !காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாவடிக்குச் சென்று தினமும் 100 பாடல்களை அங்கிருந்து எழுதி, பின்பு தினமும் இரவு அன்று எழுதிய நூறு பாடல்களையும்ஒரு எழுத்தாணியுடன் சேர்த்து குமரக்கோட்டம் முருகன் கருவறையில் வைத்து அடைத்து விடுவார்.
மறுநாள் அதிகாலை, முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது, அப்பாடல் களில் தவறுகள் இருந்தால் குமரக்கோட்டம் குமரனே அதில் திருத்தம் செய்திருப்பாராம். இவ்வாறு தினம் தினம் இயற்றிய ஆறு பகுதியான 10,345 விருத்தப்பாக்களில் ஆனதை கந்தனாலேயே தினமும் திருத்தப்பெற்றதை ‘காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி’ என காப்புச் செய்யுளையும் இயற்றி, கந்தபுராணத்தை நிறைவு செய்தார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
இந்த நடப்புகள் அனைத்தும் கச்சியப்ப சிவாச்சாரியார் மட்டுமே அறிந்தது ,எனவே இந்த நூலின் பெருமையை உலகறியச்செய்ய கந்தன் உறுதிபூண்டான் .
எந்தக் காவியத்துக்கும் அக்காலத்தில் அரங்கேற்றம் எனும் ‘தேர்வு உண்டு. இப்போது முனைவர் பட்ட நிறைவு போல் பலர்கூடஅங்கே அதை அரங்கேற்றம் செய்யவேண்டும் .அதை யார் வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கலாம் .அதனாலேயே அக்காலத்தில் அவைகள் பொது இடமான கோயில்களில் நடைபெற்றது .
பல புலவர்களின் நடுவே இயற்றிய காவியத்தை அரங்கேற்ற வேண்டும். அதில் தேர்வு பெற்ற பிறகுதான் அந்த நூல் அங்கீகரிக்கப்படும்;பிறகே மக்களிடையே பரவும்.அவ்வாறே கந்த புராணத்தை குமரகோட்டத்தில் அரங்கேற்ற நாள் குறிக்கப்பட்டது.
உரிய நாளில் புலவர்கள் பொதுமக்கள் தத்தம் இடங்களில் அமர்ந்தனர். கச்சியப்பர் கந்த புராணத்தைப் படிக்கத் தொடங்கினார்.
திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்,
சகட சக்கரத் தாமரை நாயகன்,
அகட சக்கர இன்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
திகழ்கின்ற பத்து கரங்களையும் ஐந்து செம்முகங்களையும் உடையவன்,
சக்ராயுதத்தை உடையவன், தாமரைமேல் வீற்றிருப்பவன், எங்கும் நிறைந்திருப்பவன், விகட சக்கரனாகிய அந்த விநாயகனின் பாதங்களை வணங்குவோம்!
தொடக்கத்திலேயே வந்தது தடங்கல். “உங்கள் முதல் பாடல் ‘திகட சக்கர’ என்று தொடங்குகிறது. அதற்கான இலக்கண விதியையும் அதற்கான ஆதாரத்தையும் கூறுங்கள்” என்றார் ஒரு புலவர்
‘திகழ் தசக்கரம் என்று பொருள்.கொண்டதுமுதல் அடி ஆனால் திகழ் + தசக்கரம் என்ற சொற்கள் சேரும்போது திகட சக்கரம் என்றா அமையும்?’என்று சந்தேகமாகக் கேட்டார் புலவர், ‘அப்படித் தொல்காப்பியமோ மற்ற இலக்கண நூல்களோ கூறவில்லையே.? என்றும் கூறினார் .’‘உண்மைதான்’ என்றார் கச்சியப்பர். ஆனால், இந்த முதல் அடி எனக்கு இறைவன்முருகன் தந்தது, அதை அவ்வாறே வைத்து எழுதியுள்ளேன்.என்றார் .
ஆனாலும் திகட சக்கரம் என்பது இலக்கணப்படி சரியானது என்று நிரூபிக்கவேண்டியது உங்கள் பொறுப்புதான்‘ என்றார் திரும்பவும் அந்தப் புலவர். அவர் நக்கீரர் மரபில் வந்தவர் போலும் !மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே, கந்தபுராண அரங்கேற்றம் அப்படியே நின்றது. கச்சியப்பர் செய்வதறியாது தவித்தார்
அனைவரும் கலைய ,கச்சியப்பர் மட்டும் இரவும் குமரகோட்டத்திலேயே தங்கினார்.
"கந்தா உன் ஆணைப்படி, உன் அருளால் உருவானதுதான் இந்த காவியம். நான் வெறும் கருவி மட்டுமே. இந்த நிலையில், இந்தக் காவிய அரங்கேற்றம் தடைபட்டது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. தமிழ்க் கடவுள் எனப்படுபவன் நீ. நீ எடுத்துக் கொடுத்த சொற்தொகுப்பில் குற்றம் இருக்கிறது என்று பிறர் கூறலாமா? நிலையை நீதான் சரிசெய்ய வேண்டும்” " என்று தொடர்ந்து வருந்தி விம்மினார் .
அவரது கனவிலே கந்தன் தோன்றி அன்ப , சோழ தேயத்தில் வீர சோழியம் என்ற ஒரு இலக்கண நூல் உண்டு .அதில் திகழ் தசம் என்ற இரு சொற்கள் புணர்தற்கு விதி அந்நூலில் சந்திப்படலத்தில் 18 செய்யுளில் இருக்கிறது .நாளை சோழ தேயத்து புலவனொருவன் அதைக்கொண்டுவந்து உலகறிய செய்வான் அஞ்சற்க ! என்றார் .
அடுத்த நாள் குமர கோட்டத்தில் மீண்டும் புலவர்கள் கூடினார்கள். முதல்நாள் எழுப்ப ப்பட்ட ஐயங்களுக்கு மறுநாள் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத விதி.
இதுவரை திருத்திய கந்தனே , இப்போதும் துணைபுரிவார் என்று அமைதியாக இருந்தார் கச்சியப்பர் .
அப்போது ஆலயத்திலகூடியிருந்த கூட்டத்தில் . மாறாத இளமையும் வற்றாத ஞானமும் மிளிர்ந்த ஒரு புலவர் நுழைந்தார் தானும் கலந்துகொள்ள அனுமதி வேண்டினார் .அனைவரும் ஒப்பவே அவரும் அமர்ந்தார் .
கச்சியப்பர் தனது படைப்பின் தொடக்கமாக ‘திகட சக்கர’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். அதற்கான இலக்கண
விதிவேண்டும்” என்றார் நேற்று வினா எழுப்பிய புலவர்.
உடனே வந்த அந்த புதிய புலவர் வீர சோழியம் என்ற நூலை நீட்டினார் .அந்நூலில் சந்திப்படலத்தில் 18 செய்யுளில் இருக்கிறவிதியைக்காட்டினார் .அனைவரும் திகட சக்கரம் என்பதற்கு விதி இருப்பதை அறிந்து அதிசயத்தினர் .சபையோர் காண ஒளிக்காட்டி மறைந்தார் .
கந்தனின் திருவருளைக்கண்டு சபையோர் அனைவரும் மெய் சிலிர்த்தனர் கச்சியப்பர் ஆனந்தக்கண்ணீர் வடித்தார் .பின்பு மிகச் சிறப்பாக கந்த புராணத்தின் அரங்கேற்றம் ஓராண்டு தொடர்ந்து நடந்து நிறைவுற்றது .
கந்தன் தனது கதையை தானே எழுத்தக்கூறி , எழுதியதை அவ்வப்போதுதானே திருத்தியருளி ,பின்பு அவரே அதன் அரங்கேற்றத்திலும் வந்து ஐயம் தெளிவித்து சிறப்புற செய்த நூல் கந்தபுராணம் .இத்தனை சிறப்புடைய நூல் தமிழில் இருப்பது சிறப்புதானே !
#அண்ணாமலைசுகுமாரன் 3/3/2020 Repost 6/3/2024
படங்கள் அப்போதைய கல்கி இதழில் வெளிவந்தது .---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
இது வீர வீரசோழியம் பற்றி விக்கி தரும் விளக்கம் வீரசோழியம் சோழர் காலத்தில் தோன்றிய ஒரு தமிழ் இலக்கண நூலாகும். 11 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட வீரசோழன் காலத்தது. இக் காலத்தில் அதிகரித்து வந்த சமஸ்கிருதச் செல்வாக்கினால் தமிழில் சில புதிய இலக்கிய இலக்கண மரபுகள் உருவாயின. இதன் காரணமாக ஏற்பட்ட தேவைகளுக்கு இணங்கப் புதிய இலக்கண நூல்கள் தோன்றின. இவற்றுள் வீரசோழியமும் ஒன்று. புத்தமித்திரர் என்பார் இயற்றிய இந்நூலின் பெயர் வீர சோழன் என்னும் வீர ராசேந்திர சோழ மன்னனின் பெயரைத் தழுவியது எனக் கூறப்படுகிறது. இது தொல்காப்பியம் கூறும் பண்டைத் தமிழ் மரபுடன், சமஸ்கிருத இலக்கண மரபுகள் சிலவற்றையும் சேர்த்து எழுதப்பட்டதாகும்.எனினும் இந்நூல் இயற்றப்பட்ட சொற்ப காலத்திலேயே வழக்கிழந்து போய்விட்டதாகவும், தமிழ் மரபுக்கு மாறான வடமொழி இலக்கண விதிகளைப் புகுத்தியதனாலேயே இந்நிலை ஏற்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தை அரங்கேற்றும்போது அதன் காப்புச் செய்யுளின் முதற் சொல் தொல்காப்பியத்தின்படி இலக்கண வழுவுள்ளதாகக் கூறப்பட, வீரசோழியத்தை மேற்கோள் காட்டி இறைவன் அதனை நியாயப் படுத்தியதாகக் கதை உண்டு. ஆனால், தமிழ் இலக்கியங்கள் எதிலும் முன்னுதாரணம் இல்லாமல் தமிழ் மரபுக்கு மாறான புதிய இலக்கண விதிகள் வீரசோழியத்தில் புகுத்தப்பட்டிருப்பது குறித்துக் குற்றச்சாட்டுகள் உண்டு.-----------------------------------------------------------------------------------------------------------------------------

sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கந்தன் திருத்திய காவியம்
அண்ணாமலை சுகுமாரனின் தமிழ்ப்பணி உயர்வானது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» திருத்திய கிறுக்கல்கள்.
» திருத்திய பிரம்பு!
» நடிகர் பிரபுவை திருத்திய அமைச்சர் மு.க.அழகிரி
» மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் திருத்திய சம்பளம்
» கந்தன் வருவான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|