ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை – உன்னில் நீ!

2 posters

Go down

சிறுகதை – உன்னில் நீ! Empty சிறுகதை – உன்னில் நீ!

Post by ayyasamy ram Wed Feb 28, 2024 8:35 pm

சிறுகதை – உன்னில் நீ! Main-qimg-5e8557d82e96c0ae0fb2dbb108e625ec
-
ஓவியம்; ஜி.கே. மூர்த்தி

-கிருஷ்ணா

அலுவலகத் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தான் விஸ்வநாதன்.

படித்துக்கொண்டிருந்தான் என்பதைவிட புத்தகத்தை விரித்தபடி வெறித்துக்கொண்டிருந்தான் என்பதுதான் உண்மை.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் அதிகாரி பதவி கிடைக்கும். அதனால் சம்பளமும் கணிசமாக உயரும். அந்தஸ்தும் ஏற்படும்.

எல்லாம் தெரிந்தும் அவன் மனம் புத்தகத்தில் பதிய மறுத்தது. மனத்தில் இனம்புரியாத தளர்ச்சி. இன்று, நேற்று ஏற்பட்டதல்ல இது. சில காலமாகவே இப்படித்தான். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் தடங்கல். மனம் வெறுத்துப்போனது.

அலுவலகத் தேர்வு ஐந்து முறைதான் எழுத முடியும். அதற்குள் ‘பாஸ்’ செய்துவிட வேண்டும். இது விஸ்வநாதனுக்கு நாலாவது தடவை.

வெற்றி பெறுவோமா என்று மனம் சஞ்சலப்பட்டது. வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருந்தும் உள்ளத்தில் ஒரு பயம், தெளிவின்மை.

“என்னடா விஸ்வா, புத்தகம் கையிலே, புத்தியோ வேறு எங்கேயோ அலையற மாதிரி இருக்கு!” என்று கேட்டபடி அவன் அறைக்குள் நுழைந்தான் ஸ்ரீனிவாசன்.

உடன் வேலை பார்ப்பவன். போன வருடம் பதவி உயர்வு பெற்றவன் – இந்த பரீட்சையில் தேர்வு பெற்றதால். விஸ்வநாதன் சொன்னான் தன் தயக்கத்தை, பயத்தை, வாழ்க்கையின் பிடிப்பற்ற தன்மையை. அவனை ஒரு நிமிடம் பார்த்தபடி யோசித்தான்.

”எனக்கும் இதே மாதிரி பிரச்னை இருந்தது விஸ்வநாதன். ஆனால் இப்ப இல்லை.”

“எப்படி மனசுல புத்துணர்ச்சி வந்தது?” ஆவலாய்க் கேட்டான்.

”ம்… சரி. ஒரு வழி சொல்றேன். இன்னிக்கு மாலை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன். தயாராயிரு என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான்.

அவன் மாலை நாலு மணிக்கு வந்தபோது,

“எங்கடா போறோம்?” என்றான் விஸ்வநாதன் அடக்க முடியாமல்.

”எனக்குத் தெரிஞ்சவரிடம். அவர் சொன்னபடி செஞ்சா எல்லாமே வெற்றிதான்.”

“ஏதாவது தாயத்து கொடுப்பாரா?”

“பொறுமை வேணும் நண்பா” என்றான் சிரித்துக்கொண்டே.

“அந்த இடம் வீடு மாதிரியும் இருந்தது. கோயில் போலவும் இருந்தது.

நாற்காலி, முகம் பார்க்கும் கண்ணாடி, பாத்திரங்கள். இத்யாதிகள் ஒரு பக்கமாய். மறுபக்கம் கிருஷ்ணரின் விக்ரகம் கொண்ட கோயில் போன்ற அமைப்புடன் சிறிய பீடம் இருந்தது.

புல்லாங்குழல் கிருஷ்ணர் நீல நிறத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.

மடத்தில் இருப்பதுபோல ஓர் அமைதி அந்த அறையில்.

அறையின் மேற்குக் கோடியில் ஒரு வாசல்.

அதன் வழியே ஒரு முதியவர் வந்தார். கதர் வேட்டி மட்டும் இடுப்பில். நீண்ட தாடி. முடிச்சு விழுந்த தலைமுடி. தீர்க்கமான கண்கள், ஒல்லியான தேகம்.

அவர் கண்களை ஒரு விநாடிக்கு மேல் சந்திக்க முடியவில்லை.

“வணக்கம் சார்” என்றான் விஸ்வநாதன் அலுவலக தோரணையில்.

“சார் இல்லை; சாமி” என்று திருத்தினான் ஸ்ரீனிவாசன்.

”உட்காருங்க” என்றார்.

மூவரும் தரையில் அமர்ந்தனர்.

”சாமி இவன் என் நண்பன். அமைதி வேண்டி உங்களிடம் வந்திருக்கான்.”

“அப்படியா?” என்றார் சாதாரணமாய்.

விஸ்வநாதன் தன் மனநிலையைச் சொன்னான்.

“சில சமயம் எங்கேயாவது ஓடிப்போயிடலாமான்னு தோணாது சாமி.”

“போயேன்!”

“சாமி…?”

“அந்த கிருஷ்ணரைப் பார். என்ன தெரிகிறது?”

”கிருஷ்ணர் தெரிகிறார். அவர் உருவம் தெரிகிறது” என்றான் குழப்பம் விலகாமல்.

”அவரின் உருவம் தெரிவதைக் குழந்தை கூடச் சொல்லிவிடும். இன்னும் ஆழ்ந்து பார்.”

“நீலநிறம் தெரிகிறது. புல்லாங்குழல் தெரிகிறது.”

“இன்னும் ஆழ்ந்து பார்.”

”கிருஷ்ணரின் புன்னகை தெரிகிறது. புல்லாங்குழலை வாசிப்பது போன்ற பாவம் முகத்திலும், கையிலும் தெரிகிறது.”

“இன்னும் பார்… புல்லாங்குழலின் இனிமையான ஓசை கேட்கவில்லை? ஆஹா…” என்று கண்ணை மூடி ரசித்தார்.

விஸ்வநாதன் மனத்திலும் ஒரு நிமிடம் குழலோசை கேட்பது போன்ற பிரமை ஏற்பட்டது.

மனத்தினுள் சுகமான அமைதி நிலவியது.

சுவாமி கண்ணைத் திறந்து அவனைப் பார்த்துச் சிரித்தார்.

“இந்தா” என்று ஒரு பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து எதையோ கையிலெடுத்துக் கொடுத்தார்.

“இதில் ஏழு மாத்திரை இருக்கிறது. தினம் ஒன்றாய்ச் சாப்பிட்டு வா. உன் பிரச்னை தீரும்” என்று எண்ணிக் கொடுத்தார்.

அது வெள்ளையாய் வட்ட வடிவில் இருந்தது.

இருவரும் விடைபெற்று வெளியே வந்தனர்.

“ஸ்ரீனிவாசா, இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் என் பயம் விலகுமா?” என்றான் விஸ்வநாதன்.

“மாத்திரை இல்லை. சாமி கொடுத்த பிரசாதம். இனிமே நீ எதைச் செய்தாலும் ஜெயம்தான்” என்று முதுகில் தட்டிக் கொடுத்தான்.

ஒரு வாரத்தில் விஸ்வநாதனின் வாழ்க்கையே மாறிவிட்டது.

அலுவலகத் தேர்வை அமர்க்களமாக எழுதிவிட்டான். நாள் முழுதும் ஒரு புத்துணர்ச்சி அவன் உடலில். செயலில் உறுதியும், வேகமும் தெரிந்தன. அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது.

‘எல்லாம் சாமி கொடுத்த மாத்திரையின் சக்திதான்’ என்று நினைத்துக் கொண்டான்.

ஏழு மாத்திரையையும் சாப்பிட்ட பின்பு மீண்டும் ஸ்ரீனிவாசனுடன் சாமியைத் தேடிச்செல்ல நினைத்தான் – நன்றி சொல்ல.

அதற்குள் அலுவலக டூர் வேலை வந்துவிட, தன் சார்பாய் சுவாமிக்கு நன்றி சொல்லி விடும்படி ஸ்ரீனிவாசனிடம் கூறினான்.

”வாப்பா” ஸ்ரீனிவாசனை அன்புடன் வரவேற்றார் சுவாமி.

“சாமி, என் நண்பன் வாழ்க்கையிலே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திட்டீங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே …”

”அப்படியா? நல்லது” என்றார் சாதாரணமாய்.

”நீரிலிருக்கும் மீனும், ஓட்டிலிருக்கும் நத்தையும், மனசிலிருக்கும் நம்பிக்கையும் வெளியே போய்ட்டா கலக்கம்தான் நண்பனே” என்றார் கிருஷ்ணர் விக்ரஹத்தைப் பார்த்தபடி.

“உண்மைதான் சாமி. இப்ப விஸ்வநாதன் மனசுல எதையும் சாதிக்க முடியுங்கற நம்பிக்கை வந்திருச்சு,’ ஸ்ரீனிவாசன். என்றான்

“அப்படியா?”

“ஆமாம். எல்லாம் நீங்க கொடுத்த மாத்திரை… இல்லை.. பிரசாதத்தோட சக்திதான் சாமி” என்றதும் கடகடவென நகைத்தார்.

“சக்தி மாத்திரையில் இல்லை நண்பா. அவரவருக்குள்தான் இருக்கிறது.”

“என்ன சாமி சொல்றீங்க?”

“நான் கொடுத்த மாத்திரை வெறும் சர்க்கரை வில்லை” என்றவரை பிரமிப்புடன் பார்த்தான் ஸ்ரீனிவாசன்.

“போன வருஷம் உனக்குக் கொடுத்ததும் அதுவேதான். அதை இப்போது அவனிடம் சொல்லாதே – சமயம் வரும்போது சொல்லிக்கலாம். அதுவரைக்கும் அவனுக்குள் இருக்கும் அவன் வளரட்டும்… நீ வளர்ந்தது போல”

பரிவான புன்னகையுடன் அவர் சொன்னார்.

பின்குறிப்பு:-

கல்கி 04 அக்டோபர் 1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்… அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக… எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

– ஆசிரியர், கல்கி ஆன்லைன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிறுகதை – உன்னில் நீ! Empty Re: சிறுகதை – உன்னில் நீ!

Post by Dr.S.Soundarapandian Thu Mar 21, 2024 1:17 pm

சிறுகதை – உன்னில் நீ! 3838410834 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum