ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

2 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Empty ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

Post by krishnaamma Sun Feb 18, 2024 9:00 pm

First topic message reminder :

இந்தக் கட்டுரை ஜகத்குரு ராமானுஜரின் ஆயிரமாவது வருடத்தை முன்னிட்டு தினமலரில் வெளிவந்தது. இதை இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 HppFuRE


சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோயில்...சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப்பெருமாள்...அந்த ஊரில் வசித்தவர் ஆசூரிகேசவாசாரியார். இவர் வேள்விகள் செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். அதனால், இவருக்கு ஸர்வக்ரது என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர். இந்த சொல்லுக்கு எல்லா வேள்விகளையும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால், இவரை ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று மக்கள் அழைத்தனர்.  இந்த சமயத்தில் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் (யமுனைத்துறைவர்)என்பவர், தான் ஆட்சிசெய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி துறவியாக மாறிவிட்டார். அவரது சீடர் பெரியநம்பி. பெருமாள் மீது ஆளவந்தார் இயற்றிய துதிகள் அருமையானவை. நாத்திகர்கள் கூட அவரது பாடலைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்கு சென்று விடுவார்கள் என்றால், அதன் இனிமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரியதிருமலை நம்பி என்பவரும் ஆளவந்தாரின் சீடராக இருந்தார். இவர் ஆளவந்தாரை விட வயதில் மூத்தவர் என்றாலும், அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியதிருமலை நம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஆசூரி கேசவாசாரியார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். தீப்திமதியை, அகரம் என்ற கிராமத்தில் வசித்த கமலநயனப்பட்டர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தை நடத்திய பிறகு, நிம்மதியடைந்த பெரியதிருமலை நம்பி, எந்நேரமும் பெருமாளின் திருவடிகளையே எண்ணி தியானத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஆசூர் கேசவாசாரியாரும் காந்திமதியும் இல்லற வாழ்வை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதிகளுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்தது. தெய்வத்திவம் முறையிட்டால் குறைகள் தீரும். அதிலும் வேள்விகள் இயற்றுவதில் சிறந்த கேசவாசாரியாருக்கு எந்த தெய்வத்திடம் குறையைச் சொல்லலாம் என யோசித்த போது, விருந்தாரண்யம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பெருமாள் ஸ்தலம் நினைவில் வந்தது. திருவல்லிக்கேணி என்ற குளத்தின் கரையில் அது அமைந்திருந்தது.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Empty Re: ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

Post by krishnaamma Thu Feb 22, 2024 8:59 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 FWU8pJk

ராமானுஜர் தாயிடம் பொறுமையாக எல்லாவற்றையும் சொன்னார். அதைக்கேட்டு தாய் பதறிப் போனார். ராமானுஜா! என் செல்லமே! இத்தகைய சூழ்நிலையிலும் எம்பெருமான் பரந்தாமன் கைவிடவில்லையப்பா. அவனுடைய பேரருளால் நீ திரும்பி வந்தது கண்டு மகிழ்கிறேன், என்றவள் அவரை உச்சி முகந்தார். ராமானுஜர் சற்றே வெளியே போய் வருவதாகச் சொல்லி விட்டு கிளம்பினார். மகன் நீண்ட நாள் கழித்து வந்ததால், அன்று சிறப்பாக ஏதேனும் சமைக்க வேண்டும் என விரும்பினார் காந்திமதி அம்மையார். ராமானுஜரின் மனைவி ரக்ஷகாம்பாளும் பிறந்த வீட்டுக்கு போய் இருந்தார். வேலைக்காரிக்கும் விடுப்பு கொடுத்து விட்டார். இவர் பெருமாள் கோயிலில் இருந்து வீட்டுக்கு வரும் நைவேத்ய பழம், கிழங்கு என்று நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தார். மகன் காசி சென்றதிலிருந்து வீட்டிற்கு விறகு கூட வாங்கவில்லை. வேலைக்காரியை அழைத்து வர ஒருவரிடம் சொல்லி அனுப்பினார். இந்நேரத்தில் அவரது மருமகள் ரக்ஷகாம்பாளும், தங்கை தீப்திமதியும் வீட்டிற்கு வந்து விட்டனர். அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார் காந்திமதி அம்மையார். தீப்தி! என்னடி ஆச்சரியமா இருக்கு! ராமானுஜன் இப்போ தான் வந்தான். நீயும் வரே, மருமகளும் வரா, ரொம்ப சந்தோஷமா இருக்குடி, என்றவரை அவர்கள் ஆச்சரியமாய் பார்த்தனர். அக்கா! நீ என்ன சொல்றே! காசிக்கு போன ராமானுஜனும், கோவிந்தனும் ஊருக்கு திரும்ப குறைஞ்சது ஆறுமாசமாவது ஆகுமே! அதற்குள் எப்படி அவன் வந்தான்? கோவிந்தனும் வந்துட்டானா? என்றார் பதைபதைப்புடனும் ஆச்சரியத்துடனும்.

ரக்ஷாகாம்பாளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, கணவர் ஊர் திரும்பிய செய்திகேட்டு. நடந்த விஷயத்தை ஒன்று விடாமல் காந்திமதி அம்மையார் சொல்ல, அவர்கள் வெலவெலத்து போனார்கள். அக்கா! நமக்கு பெருமாள் தான் துணை. குழந்தை இந்த அளவோட தப்பிச்சானே! அந்த பெருமாளும், லட்சுமிதாயாரும் தான் அவனை வேடர் உருவம் தாங்கி, நம்மகிட்டே சேத்துட்டாங்க, என சந்தோஷப்பட்டார். ரக்ஷாகாம்பாள் தன் மாங்கல்ய பலம் குறித்து பெருமைப்பட்டார். இதற்குள் வெளியே சென்ற ராமானுஜர் வீடு திரும்ப, ரக்ஷகாம்பாள் ஓடோடிச் சென்று தன் கணவரின் பாதத்தில் வீழ்ந்து ஆசி பெற்றார். பெரும் ஆபத்திலிருந்து தப்பி வந்த அவரை கண்ணீர் மல்கவும், அதே நேரம் பெண்மைக்கே உரிய நாணத்துடனும் நோக்கினார். ராமானுஜர் அவரைத் தேற்றினார். சித்தியிடம் ஆசிர்வாதம் பெற்றார். ஒரு வழியாக வேலைக்காரி வந்து சேர பரந்தாமனுக்கு விசேஷ பூஜை நடத்த ஏற்பாடாயிற்று. அவருக்கு நைவேத்யம் செய்ய நெய் பட்சணங்கள் தயாராயின. வீடே களை கட்டியது. பூஜை முடிந்தது. அப்போது வாசலில் யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Empty Re: ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

Post by krishnaamma Thu Feb 22, 2024 9:00 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 ZN55ZhT


ராமானுஜர் வாசலை எட்டிப் பார்த்தார். அங்கே திருக்கச்சி நம்பி நின்று கொண்டிருந்தார். அவரை அன்புடன் வரவேற்றார் ராமானுஜர். தங்களைப் போன்ற மகாத்மா இந்நேரத்தில் என் வீட்டிற்கு எழுந்தருளியது நான் பெற்ற பேறு, என நெக்குருகி கூறினார். திருக்கச்சி நம்பிகள் வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர். குறைந்த கல்வியறிவே உடையவராயினும் கூட, ஜாதி வேற்றுமை பாராமல், அவரது பரம பக்திக்கு உரிய மரியாதை அளித்தார் ராமானுஜர். அவரது இல்லத்திலேயே சாப்பிடும்படி திருக்கச்சி நம்பியை வேண்ட, அனைவருமாய் அமர்ந்து உணவருந்தினர்.

இங்கே இப்படியிருக்க, யாதவப் பிரகாசரும், மாணவர்களும் காசியை அடைந்தனர். கோவிந்தர் எதுவுமே தெரியாதவர் போல் அவர்களிடம் நடந்து கொண்டார். ராமானுஜருக்காக வருத்தப்படுவதை மட்டும் சற்றும் குறைக்கவில்லை. எல்லாரும் கங்கையில் நீராடச் சென்றனர். கோவிந்தர் நீராடிக் கொண்டிருந்த போது, அவரது கை தண்ணீருக்குள் இருந்த ஒரு பாறையில் பட்டது போல் இருந்தது. அவர் அவ்விடத்தில் துழாவிப் பார்த்தார். அழகிய லிங்கம் ஒன்று அவர் கையில் கிடைத்தது. அதன் அழகு அவரைக் கவர்ந்தது. உமை மணாளா, என தன் மார்போடு அணைத்துக் கொண்டார். தனக்கு லிங்கம் கிடைத்த விபரத்தை யாதவப்பிரகாசரிடமும், சக மாணவர்களிடமும் சொன்னார். யாதவப்பிரகாசர் அவரிடம், மகனே! உன் மிதமிஞ்சிய இறை பக்தியால் இது கிடைத்துள்ளது. இதை நீ தொடர்ந்து பூஜித்து வா, என்றார். குருவின் உத்தரவுபடி, கோவிந்தர் அதை பூஜிக்கலானார். காசி யாத்திரை முடிந்து அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர். லிங்கத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு கோவிந்தர் வந்தார். காஞ்சிப் பயணத்தின் நடுவே அவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு வந்தனர். அத்தலம் தான் காளஹஸ்தி. அவ்விடத்தை பார்த்தவுடனேயே, கோவிந்தர் மனதில் ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட்டது. குடும்பப்பற்று, உலகப்பற்று எல்லாம் அறுந்தது. அவர் யாதவப்பிரகாசரிடம் ஓடினார். குருவே! இவ்விடத்தை விட்டு நகர என் மனம் ஏனோ மறுக்கிறது. நான் காஞ்சிபுரத்துக்கு வரவில்லை. இங்கேயே நான் தங்கப் போகிறேன். பாணலிங்கத்துக்கு பூஜை செய்து கொண்டு இங்கேயே என் காலத்தைக் கழிக்கப் போகிறேன். நீங்கள் என் அன்னையிடமும், பெரியம்மாவிடமும் இந்த தகவலைச் சொல்லி விடுங்கள், என்றார்.மாணவனின் உறுதியான பக்தி, அவரை மிகவும் கவர்ந்தது. அவரது கோரிக்கையை ஏற்றார். கோவிந்தரை அங்கேயே விட்டுவிட்டு மாணவர் படை காஞ்சிபுரம் வந்தடைந்தது. யாதவப்பிரகாசர் தீப்திமதியிடம் நடந்ததைச் சொன்னார். மகன் சிவ வழிபாட்டில் இறங்கியது குறித்து தீப்திமதி மகிழ்ச்சியே அடைந்தார். இருப்பினும், பெற்ற பாசத்தால் மகனை ஒருமுறை சென்று பார்த்து வர முடிவெடுத்தார். அக்காவிடம் சொல்லிவிட்டு காளஹஸ்தி புறப்பட்டார். தாயைக் கண்டு மகனுக்கு பெரும் மகிழ்ச்சி. சில நாட்கள் அங்கு தங்கி விட்டு, ஊர் திரும்பினார் தீப்திமதி. ராமானுஜன் தொலைந்தான், இனி எவ்வித தொல்லையும் இல்லாமல் பாடம் எடுக்கலாம் என யாதவப்பிரகாசர் மகிழ்வுடன் பாடங்களை ஆரம்பித்தார். அப்போது வாசலில், ஐயா, நான் உள்ளே வரலாமா? என கேட்டு வாசலில் ஒரு வாலிபன் நிற்பதைப் பார்த்ததும், அவருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Empty Re: ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

Post by krishnaamma Thu Feb 22, 2024 9:00 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 OrElOJu


அங்கே ராமானுஜர் நின்றிருந்தார். முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, அவரை உற்று நோக்கினார். அவரை அழைத்துக் கொண்டு நல்லவர் போல் அவரது தாயிடமே சென்றார். அம்மா! ராமானுஜனை விந்திய மலைக்காட்டில் விட்டு வந்து விட்டேனே என நான் வருந்தாத நாள் கிடையாது. பொறுப்பில்லாமல் நடந்து விட்டேனோ என கவலைப்பட்டேன். இப்போது அவன் வந்தது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது, என குழைந்தார். தாயும், மகனும் அவர் சொல்வதை நம்புவது போல் நடித்துக் கொண்டார்கள். ராமானுஜா! நீ இனி நம் பள்ளியிலேயே தொடர்ந்து படிக்கலாம், என அவர் கூறவும், தன்னைக் கொல்லத் துணிந்தவர் என்றும் பாராமல், இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளின் அடிப்படையில் ராமானுஜர் அவரது பாதங்களில் விழுந்து ஆசி பெற்றார். ராமானுஜரின் இச்செய்கையால், அந்த ஆசிரியர் கூனிக் குறுகிப் போனார். ராமானுஜரும் அதே பள்ளிக்கு படிக்கச் சென்றார். இந்நிலையில் தான் வைணவத்தலைவர் ஆளவந்தார் காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளினார். அவர் நூறுவயதை தாண்டிய பெரியவர். வரதராஜப் பெருமாளை சேவிக்க வேண்டுமென்பது அவரது நோக்கம். கோயிலில் சுவாமியை தரிசித்து விட்டு, வெளியே வந்தபோது, ஒரு இளைஞனின் தோள்பட்டையில் கையூன்றி, யாதவப்பிரகாசர் எதிரே வருவதைக் கண்டார்.
அந்த இளைஞர் ஒளிபொருந்தியவனாகக் காணப்பட்டார். அவரது தேஜஸ் கண்டு வியப்படைந்த அவர், ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம என்ற மந்திரத்துக்கு அருமையான விளக்கமளித்தவர் என்பதை விசாரித்து தெரிந்து கொண்டார்.

அத்வைதவாதியான யாதவப்பிரகாசரிடம் இவ்விளைஞனை சிக்க வைத்து விட்டாயே, என அவர் பெருமாளிடம் சொன்னார். இருப்பினும், ராமானுஜருடன் அவர் பேசவில்லை. பெருமாள் சித்தப்படி நடக்கட்டும் என அவர் மேல் பாரத்தை போட்டுவிட்டு ஸ்ரீரங்கம் போய்விட்டார். இந்நிலையில் காஞ்சிமன்னன் மகளுக்கு திடீரென நோய் கண்டது. வைத்தியத்திற்கு குணமாகாத வியாதிகளை மந்திரவாதிகளை அழைத்து பார்ப்பது நம்மவர் வழக்கம். காஞ்சி மன்னனும் அதற்கு விதிவிலக்கல்ல.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Empty Re: ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

Post by krishnaamma Thu Feb 22, 2024 9:01 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 H1P0QYq

மந்திரவாதிகளை அழைத்து பார்ப்பது நம்மவர் வழக்கம். காஞ்சி மன்னனும் அதற்கு விதிவிலக்கல்ல. மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற யாதவப் பிரகாசரை அழைத்து வர உத்தரவிட்டான். பிரகாசர் வந்தார். அப்பெண்ணின் உடலில் பிரம்மராட்சஷன் ஒருவன் இருப்பதைக் கண்டார். ஏ பிரம்மராட்சஷே! இப்பெண்ணின் உடலில் இருந்து மரியாதையாக ஓடிவிடு, என எச்சரித்தார்.அந்தப் பேய் அவரது எச்சரிக்கையை ஒருசிறிதும் பொருட்படுத்தவில்லை. அவர் பேயை விரட்ட பல மந்திரங்களைச் சொன்னார். எதற்கும் கட்டுப்படாத அந்தப் பேய் யாதவப்பிரகாசரிடம், நீர் என்னை விரட்ட முயன்றால் அது நடக்காது. உம் மந்திரத்தை விட நான் சக்திவாய்ந்தவன், என சவால் விடுத்தது. யாதவப்பிரகாசரின் உத்தி எதுவும் எடுபடாமல் போன வேளையில், என்ன செய்தால் நீ வெளியேறுவாய்? எனக் கேட்டார் பிரகாசர். அப்படி வாரும் வழிக்கு,என்ற அந்தப் பேய், பிரகாசரே! உமது மாணவர் ராமானுஜர் மீது நான் பக்தி கொண்டவன். அவரது உடலில் ஞானதேவியே வசிக்கிறாள். அவரது அகன்ற கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பரந்த நெற்றியுள்ள அவர், அன்று பூத்த புதுமலர் போல் காட்சி தருவார். அவர் என் முன் வந்தாலே நான் போய்விடுவேன், என்றது. உடனடியாக ராமானுஜர் அழைத்து வரப்பட்டார். அரசிளங்குமரியின் முன் அமர்ந்த அவர், பிரம்மராட்சஸே! இப்பெண்ணை விட்டு விலகிப்போ, என்றார்.

ராமானுஜரைக் கண்டு அகமகிழ்ந்த அந்த ராட்சஷன், ஐயனே! நான் இப்போதே விலகுகிறேன். ஆனால், தங்கள் திருவடியை என் மீது வைத்தருள வேண்டும்,என்றது. ராமானுஜர் அதன் ஆசையை நிறைவேற்றினார். ராஜகுமாரியின் தலையில் தன் திருப்பாதங்களை வைக்கவும், உங்கள் அடிமையான நான் இப்போதே விலகுகிறேன், என்றான் ராட்சஷன். நீ விலகியதற்கு என்ன சாட்சி? எனக் கேட்டார் ராமானுஜர். ஐயா! அதோ, அரண்மனைக்கு வெளியே நிற்கும் அரசமரத்தில் அமர்ந்து அதன் உச்சியிலுள்ள கிளையை ஒடித்து போடுவேன், என்றான் ராட்சஷன். அதன்படியே சற்று நேரத்தில் அரசமரக்கிளை முறிந்து விழுந்தது. அம்மட்டிலேயே இந்த இளம்பெண்ணின் முகமே பிரகாசமானது. அவள் பழையநிலையை அடைந்து, தன்னைச் சுற்றி இத்தனை பேர் அமர்ந்துள்ளது எதற்காக என மலங்க மலங்க விழித்தாள். பின்னர், தனக்கு ஏற்பட்டிருந்த இன்னல் பற்றி கேள்வியுற்று, ராமானுஜரை நன்றிப் பெருக்குடனும், மற்றவர்களை நாணத்துடனும் பார்த்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள். காஞ்சிமன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ராமானுஜரின் பாதத்தில் வயது வித்தியாசம் பாராமல் விழுந்து நன்றி கூறினான். இந்த தகவல் நாடெங்கும் பரவவே ராமானுஜருக்கு புகழ் பெருகியது. ராமானுஜரின் பெருமையை உணர்ந்தாலும் கூட, யாதவப்பிரகாசருக்கும், அவருக்கும் கருத்து மோதல் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது. ஒருமுறை வகுப்பறையில், வேதத்தில் வரும் மந்திரம் பற்றி இருவருக்கும் மாறுபட்ட கருத்து ஏற்பட்டது. தன் கருத்தை மறுத்துப் பேசிய ராமானுஜரை, இனி தனது பள்ளிக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக்கூடாது என யாதவப்பிரகாசர் அனுப்பி விட்டார்.
அப்போதும் குருவின் மீது கோபம் கொள்ளாத அவர், தங்கள் சித்தம் அதுவானால் அதன்படியே நடக்கிறேன், என்ற ராமானுஜர், அதன்பிறகு பள்ளிக்கு செல்லவில்லை. இதன்பின் தனது குருவாக யாரை ஏற்பது என அவர் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் பரமதயாளனான வரதராஜப் பெருமாள் அந்தப் பெரியவரை அனுப்பி வைத்தார்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Empty Re: ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

Post by krishnaamma Thu Feb 22, 2024 9:03 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 PKKQKUt

அவர் வேறு யாருமல்ல. திருக்கச்சி நம்பி தான். அவரைக் கண்டதும், ராமானுஜரின் உள்ளம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வரதராஜா! குருவின்றி தவித்துக் கொண்டிருந்த எனக்கு நல்ல குருவைக் காட்டி விட்டாய். இவரையே என் குருவாய் ஏற்பேன், என மனதிற்குள் சொல்லியபடியே, அவரை பணிவோடு வரவேற்றார். அவரை அமரச்சொன்னார். இவர் மரியாதை நிமித்தமாக நின்று கொண்டார். ஐயா! தாங்கள் என் வீடு தேடி வந்தது நான் செய்த பெரும்பாக்கியம். நான் அறிவில் மிகவும் குறைந்தவன். குழந்தையின் செயல்பாடுகளை ஒத்தே எனது செயல்களும் அமைந்திருக்கிறது, என்று தன்னடக்கத்துடன் ஆரம்பித்தார் ராமானுஜர். ராமானுஜரே! நீயா இப்படி சொல்வது? நீ பிராமணன். கல்வியில் உன்னை விட வல்லவர் யார் இருக்க முடியும்? குருவை மிஞ்சிய சிஷ்யனாய் ஆனதும், மன்னன் மகளிடம் ஒட்டியிருந்த தீய சக்தியை ஓட்டி, இம்மண்டலமெங்கும் உன் புகழ் விரிந்து கிடப்பதையும் தெரியாதவர் யார் இருக்கிறார்கள்? என்ன காரணத்தால் உன்னை நீயே குறைத்துப் பேச வேண்டும்? என்றார் திருக்கச்சி நம்பி. சுவாமி! தாங்கள் அப்படி சொல்லாதீர்கள். யாதவப்பிரகாச பண்டிதர் என்னை வகுப்பிலிருந்து நிறுத்தி விட்டதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். குருவின்றி தனி மரமாய் நிற்கும் எனக்கு ஒரு குரு வேண்டும். அது தாங்களாக இருக்க வேண்டும் என்பது என் அவா, என்றார் ராமானுஜர். ராமானுஜா! என்ன பேச்சு இது. நான் ஜாதியில் வேளாளன். படிப்பு என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. அரிச்சுவடியே அறியாத ஒருவன் எப்படி மற்றொருவனுக்கு குருவாக முடியும்? வயதில் பெரியவன் என்ற தகுதியைத் தவிர என்னிடம் என்ன இருக்கிறது? உன்னிடமிருக்கும் அறிவுக்கு நீயே பலருக்கு குருவாக இருக்கலாம். சாஸ்திர அறிவு எனக்கு இல்லவே இல்லை. பேரருள் புரியும் வரதராஜப்பெருமாளுக்கு தொண்டு செய்வதைத் தவிர வேறு எதுவும் அறியாதவன் நான்.

எம்பெருமான் கோடை காலத்தில் வெப்பத்தால் சிரமப்படுவார். அதற்காக வெட்டிவேர் பறித்து ஆலவட்டம் செய்து அவருக்கு விசிறுவேன். அன்று மலர்ந்த பூக்களை யாராவது வைத்திருந்தால், அதை பிச்சை எடுத்தோ, பணம் கொடுத்து பெற்றோ அவருக்கு அணிவிப்பேன். கனிவகைகளை வாங்கி அவருக்கு படைப்பேன். இதைத் தவிர வேறெதுவும் தெரியாத அப்பாவி நான். என்னைப் போய் உனக்கு குருவாக இருக்கச் சொல்கிறாயே. வேண்டுமானால் கல்வியில் உயர்ந்த உன்னிடம் நான் வேண்டுமானால் சிஷ்யனாக இருந்து கொள்கிறேன், என்றார் நம்பி உருக்கத்துடன். ராமானுஜர் அவ்வுரை கேட்டு நெகிழ்ந்தார். சுவாமி! இத்தகைய தகுதி போதாதா தங்களுக்கு. இறைவனிடம் யார் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறாரோ, அவரே குருவாக இருக்க தகுதி படைத்தவர்.

தொடரும்......


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Empty Re: ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

Post by krishnaamma Thu Feb 22, 2024 9:04 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 YSnwWah

அவ்வகையில் நீங்கள் என்னை சீடனாக ஏற்கத்தான் வேண்டும், என சற்று அடம்பிடிப்பது போலவே பேசினார் ராமானுஜர். யோசித்த திருக்கச்சிநம்பியின் கால்களில் தடாலென விழுந்தார் ராமானுஜர். அவரது கண்களில் இருந்து ஆறாய் நீர் பெருகி ஓடியது. திருக்கச்சிநம்பி அவரை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டார். ராமானுஜா! இறைவன் சித்தம் அதுவானால் அதைத் தடுக்க வல்லவர் யார்? இன்றுமுதல் நீ நம் ஊர் எல்லையிலுள்ள சாலக்கிணறுக்கு போ. அங்கிருந்து சுவாமியின் திருவாராதனத்துக்கு அபிஷேக நீர் கொண்டு வா. மற்றதை பின்னால் பார்ப்போம், என்றார். ராமானுஜரும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தார். இங்கே நிலைமை இப்படியிருக்க, ஸ்ரீரங்கம் சென்றடைந்த வைணவ மகாதலைவர் ஆளவந்தாருக்கு நோய் ஏற்பட்டது. அவரைச் சுற்றி சீடர்கள் வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். நோய் முற்றிப்போய் இருந்தாலும், நாராயணனின் நாமம் மட்டும் அவரது வாயிலிருந்து அகலவில்லை.

ஆளவந்தாரின் சீடர்களின் பெயரைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்து விடும். பெரியநம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி ஆகியோரெல்லாம் அவரது சீடர்கள் தான். அவர்கள் ஆளவந்தார் தன் உடலை விட்டு நீங்கப் போகிறார் என்பதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஆளவந்தாரைப் போலவே நூறுக்கு மேற்பட்ட வயதுடைய திருவரங்கப்பெருமாளரையரை அங்கே அழைத்து வந்தனர். அவரைக் கொண்டு ஆளவந்தாரிடம் சில கேள்விகள் கேட்டனர். அரையர் தன் கேள்விகளை ஆரம்பித்தார். சுவாமி! நாராயணப் பெருமானை நாம் கண்ணால் காண முடியாது. அப்படியிருக்க, அவனுக்கு எப்படி ஒருவன் தொண்டு செய்வது? என்றார். ஆளவந்தார் புன்னகை பூத்தார். அரையரே! இது மிகவும் எளிது. பெருமாளின் அடியவர்களுக்கு செய்யும் தொண்டு, பெருமாளுக்கு செய்யும் தொண்டாகும். இதில் ஜாதி, பேதமெல்லாம் பார்க்கக்கூடாது. திருப்பாணாழ்வார் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவராயினும் பெருமாளின் தீவிர தொண்டர். அந்த அடியவருக்கு நீங்கள் சேவை செய்யலாம். காஞ்சியில் திருக்கச்சி நம்பி வேளாளர் குலத்தவராயினும், பெருமாளே அவர் மூலம் தான் தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறார். அவர்களைப் போன்ற தொண்டருக்கு தொண்டராய் இருப்பதே இறைவனுக்கு செய்யும் பணியாகும். என்னைப் பொறுத்தவரை திருப்பாணாழ்வாரே என்னை இந்த உலக வாழ்விலிருந்து மீட்டுச் செல்பவராக இருப்பார், என்றார். அப்படியானால், தாங்கள் இவ்வுலக வாழ்வை விரைவில் நீத்து விட முடிவு செய்து விட்டீர்களா? என உருக்கத்துடன் கேட்டார் அரையர். ஐயா! தங்களைப் போன்ற பெரியவர்கள் இந்த அற்பக் காரணத்துக்காக வருந்தக்கூடாது, என்றார் ஆளவந்தார். ஆளவந்தார் உடலை நீக்கப்போகிறார் என்பதை அறிந்து பெரியநம்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியும் துடித்துப் போனார்கள். அவர் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக, ஆளவந்தாரின் உயிர் பிரிந்த அடுத்த கணமே தாங்களும் இறந்துவிடுவது என முடிவு செய்தார்கள். தற்கொலை செய்தாவது இறந்து விட வேண்டுமென்பது அவர்களின் திட்டம்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Empty Re: ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

Post by krishnaamma Thu Feb 22, 2024 9:07 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 WkutSpA


பெரியநம்பியும், திருக்கோட்டியூர் நம்பியும் மட்டுமல்ல, இன்னும் சில சீடர்களும் ஆளவந்தாரின் மறைவுக்கு பிறகு தற்கொலை செய்து விடுவதென முடிவெடுத்திருந்தனர். சில சீடர்கள் அவரிடம், தாங்கள் மறைந்த பிறகு எங்களை வழிநடத்திச் செல்ல யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு உபதேசம் செய்பவர் யார்? கலங்கரைவிளக்கை காணாத கப்பல் போல இவ்வுலகக் கடலில் நாங்கள் தத்தளிக்க இயலாதே, என புலம்பினர். ஆளவந்தார் அவர்களுக்கு அறிவுரை கூறினார். சீடர்களே! யாரும் மனம் உடையக்கூடாது. நம் ரங்கநாதன் எல்லாரையும் காப்பாற்றுவான். அவனுக்கு நீங்கள் தினமும் தொண்டு செய்யுங்கள். திருப்பதிக்கும், காஞ்சிபுரத்துக்கும் அவ்வப்போது சென்று வாருங்கள். ஸ்ரீரங்கம் அவனது சொந்தவீடு என்றால், திருப்பதி அவனது மலர்ப்பாதங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சிறந்த ஸ்லோகத்திற்கு ஈடானது. காஞ்சிபுரம் நமக்கு விடுதலையளிக்கும் மந்திரமாகும், என்றார். திருவரங்க பெருமாளரையர் வருத்தத்துடன் அவர் அருகில் சென்றார். சுவாமி! தங்கள் திருமேனியை அடக்கம் செய்ய வேண்டுமா, தகனம் செய்ய வேண்டுமா? என்றார். இதற்கு ஆளவந்தார் எந்தப்பதிலும் சொல்லவில்லை. மறுநாள் ரங்கநாதர் திருவீதி உலா வந்தார். ஆளவந்தாரின் சீடர்கள் ரங்கநாதனை தரிசிக்க சென்று விட்டனர். அப்போது ஒரு சீடருக்கு தெய்வ அருள் வந்தது. பெரியநம்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியும் எக்காரணம் கொண்டும் ஆளவந்தாருக்கு பின் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது, என அருள்வாக்கு தந்தார் அவர். இவ்விஷயம் ஆளவந்தாரின் காதுகளை எட்டியது. அவர் தன் சீடர்களிடம், தற்கொலை கொடிய பாவமல்லவா? இது இறைவனுக்கே பிடிக்கவில்லை. அதனால் தான் அவன் திருவீதி உலா வரும் போது, சீடன் மூலமாக பேசியிருக்கிறான். உங்கள் யார் வாயிலும் இனி தற்கொலை என்ற சொல்லே வரக்கூடாது. உங்கள் அகங்காரம் ஒழிய வேண்டும். பரமனின் அடியவர்களுக்கு தொண்டாற்ற வேண்டும். எம்பெருமான் ரங்கநாதனின் திருவடிகளில் மலர் சூட்டவேண்டும், என்றெல்லாம் அறிவுரை சொன்னார்.

சிலகாலம் இப்படியே நீடித்தது. உடல்நிலை சற்றே தேறிய நிலையில் ஒருநாள் இறைவனின் திருவீதி உலாவையும் ஆளவந்தார் பார்த்தார். தன் சீடர்களை எல்லாம் திருவரங்கப் பெருமாள் அரையரை கவனித்துக் கொள்ளும்படிச் செய்தார். இவர் சுகமில்லாமல் இருக்கும் செய்தி காஞ்சிபுரத்திலுள்ள இரண்டு அந்தணர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் ஆளவந்தாரைப் பார்க்க வந்தனர்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Empty Re: ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

Post by krishnaamma Thu Feb 22, 2024 9:07 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Nutt3rK

காஞ்சிபுரத்திலிருந்து இருவர் வந்திருக்கிறார்கள் எனத்தெரிந்தவுடனேயே ஆளவந்தார் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார். ராமானுஜரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவல் அவர் முகத்தையே பிரகாசமாக்கியது. அவர்களை வரவேற்ற அவர், ராமானுஜர் பற்றி விசாரித்தார். ராமானுஜர் யாதவப்பிரகாசரின் பள்ளியிலிருந்து விலகியதும், பின்னர் திருக்கச்சிநம்பியை குருவாக ஏற்க கேட்டதும், சாலக்கிணற்றில் இருந்து பெருமாளின் அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்து வருவதும் அறிந்து மகிழ்ச்சியடைந்தார். தன் சீடர் பெரியநம்பியை அழைத்தார். நம்பி! நீ உடனே காஞ்சிபுரம் போ. ராமானுஜனை அழைத்துக் கொண்டு விரைவில் வா,என்றார். குருவின் கட்டளைக்கு தலைவணங்கி பெரியநம்பி காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டார். ஆனால், என்ன செய்வது? அவர் திரும்புவதற்குள் ஆளவந்தாரின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இம்முறை பாதிப்பு மிகக்கடுமையாக இருந்தது. ஆனாலும், மனம் கலங்காத அவர், ரங்கநாதனை தரிசிக்க தினமும் கோயிலுக்கு சென்றார். ஒருநாள் கோயிலுக்கு சென்று திரும்பியதும் சீடர்களை அழைத்தார். அன்புச் சீடர்களே! நான் இதுநாள் வரையில் உங்களிடம் தவறாக நடந்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டும், என்றார். சீடர்கள் உருகிப் போனார்கள். தெய்வம் தவறு செய்யுமென்றால், தாங்களும் செய்திருப்பீர்கள், என்றபடியே கண்ணீர் உகுத்தனர்.

திருவரங்கப்பெருமாள் அரையர் அழைக்கப்பட்டார். எல்லாரும் ரங்கநாதனுக்கு சேவை செய்யுங்கள். உங்கள் குருவிடம் பக்தி கொள்ளுங்கள். இங்கு வரும் விருந்தினர்களுக்கு தொண்டு செய்யுங்கள், என்றார். பின்பு பத்மாசனத்தில் அமர்ந்தார். தன் மனத்தை அடக்கி பரமனிடம் நினைவைக் கொண்டு சென்றார். அவரது கபாலம் வழியே உயிரை செல்லவிட்டார். அவரைச் சுற்றிநின்று பாடிக் கொண்டிருந்த சீடர்கள் பாட்டை நிறுத்தினர். திருக்கோஷ்டியூர் நம்பியும், இன்னும் சில சீடர்களும் தங்கள் உயிருக்குயிரான குரு பரமனடி சேர்ந்தது கண்டு, மயங்கி விழுந்து விட்டனர். சிலர் ஆளவந்தார் துறவறத்துக்கு வரும் முன்பு அவரது மகனாக இருந்த பிள்ளைக்கரசு நம்பியை தேடிச் சென்றனர். அவரைக் கொண்டு அந்திமக்கிரியைகள் செய்ய முடிவெடுத்தனர். கொள்ளிடக்கரையில் அவரது அந்திமக்கிரியை நடந்தது. இதற்கிடையே, பெரியநம்பி காஞ்சிபுரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார். ஸ்ரீரங்கத்தில் இருந்து காஞ்சிபுரம் வெகு தூரத்தில் அல்லவா உள்ளது? நான்கு நாட்கள் நடந்து காஞ்சிபுரத்தை அடைந்த நம்பி, முதலில் வரதராஜப் பெருமாளைத் தரிசித்தார். பின்னர் திருக்கச்சிநம்பியை தேடிச் சென்று அவரைப் பணிந்தார். அவரது ஆஸ்ரமத்தில் இரவில் தங்கினார். மறுநாள் காலையில், ராமானுஜரைப் பார்க்க புறப்பட்டார். திருக்கச்சிநம்பி கோயிலுக்கு போய் விட்டார். சாலக்கிணற்றில் இருந்து ராமானுஜர் பெருமானின் அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தார். அவர் தூரத்தில் வருவதைப் பார்த்த பெரியநம்பி, அயர்ந்து நின்று விட்டார். அவரைக் குறித்து சில சுலோகங்களைப் பாடினார். இதற்குள் அருகில் வந்து விட்ட ராமானுஜர், அந்த ஸ்லோகங்களைக் கவனித்துக் கேட்டார்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Empty Re: ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

Post by krishnaamma Thu Feb 22, 2024 9:08 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 AfjZZ19

பெரியநம்பிக்கு அந்த இளைஞரின் தேஜஸான முகத்தைப் பார்த்து உடலில் வித்தியாசமான உணர்வுகளெல்லாம் ஏற்பட்டது. ராமானுஜர் அந்தப் பெரியவரைக் கவனித்தார். யார் இவர்? என மனதில் கேள்வி. அருகில் வந்தார். தாங்கள் யார்? நான் பெரியநம்பி. ஆளவந்தார் என்னை அனுப்பி வைத்தார்,. ஆளவந்தாரால் அனுப்பப்பட்டவரா? ஆச்சரிய மிகுதியால் ராமானுஜர், அப்படியா? அந்த மகானுபாவருக்கு உடல்நலம் சரியில்லை என கேள்விப்பட்டேன். தற்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என பணிவோடு கேட்டார். நான் புறப்படும் போது உடல்நலம் பரவாயில்லை, என்ற நம்பியிடம், தாங்கள் காஞ்சிபுரத்திற்கு வந்த காரணத்தை தெரிந்து கொள்ளலாமா? என்றார். ஐயனே! தங்களை அழைத்து வரும்படி ஆச்சாரியார் எனக்கு உத்தரவிட்டார். அதை நிறைவேற்றவே யான் வந்தேன், என்றதும், ராமானுஜரின் மகிழ்ச்சி எல்லை கடந்தது. கை, கால்கள் விறைத்தன. என்ன சொல்கிறீர்கள்? அந்த மகாபிரபுவா என்னை சந்திக்க வேண்டுமென்றார்கள். நான் பிறவிப்பயனை அடைந்தேன். அவர்களே என்னை சந்திக்க விரும்புகிறார்கள் என்றால்... இதற்கு மேல் ராமானுஜரால் பேச முடியவில்லை. வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி விட்டன. ஐயனே! சற்று பொறுத்திருங்கள். நான் பேரருளாளனான வரதராஜனின் அபிஷேகத்திற்கு இத்தீர்த்தத்தை சமர்ப்பித்து விட்டு வந்து விடுகிறேன், என்றவர் அவசர அவசரமாய் ஓடினார். மிக விரைவில் திரும்பி வந்த அவர், புறப்படுங்கள். ஆளவந்தார் பெருமானைக் காணச் செல்லலாம், என்றார். நம்பிக்கு ஆச்சரியம். ராமானுஜரே! தாங்கள் வீட்டுக்கு கூட செல்லவில்லை. இங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று திரும்ப பத்துநாட்களாவது ஆகுமே. வீட்டில் தேட மாட்டார்களா! இல்லத்தை யார் கவனிப்பார்கள்? அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து விட்டு வந்து விடுங்களேன், என்றார் நம்பி.

இதற்கிடையே ஒரு துயரச் சம்பவமும் ராமானுஜர் இல்லத்தில் நிகழ்ந்திருந்தது. ஆம்...ராமானுஜரின் அன்னை காந்திமதி அம்மையார் பரமபதம் சேர்ந்துவிட்டார். ராமானுஜர் இதற்காக வருத்தப்பட்டு மிகவும் சோர்ந்து போயிருந்தார். அன்னையின் பிரிவை எந்தக்குழந்தை தான் தாங்கும்? என்னதான் திருமணமாகி தாய்க்குப்பின் தாரமென அவளோடு வாழ்ந்தாலும், பெற்றவளின் பிரிவை மட்டும் ஒரு ஆண்மகனால் தாங்க முடிவதில்லை. தந்தையின் பிரிவை விட தாயின் பிரிவு ஒரு ஆண்மகனை காலம் முழுவதும் துன்புறச் செய்கிறது. தஞ்சமாம்பாள் மட்டுமே வீட்டில் தனித்திருந்தார். எனினும், ராமானுஜர் அதை பொருட்படுத்தவில்லை. நம்பிகளே! மனிதனாய் பிறந்தவன் பரமனை பணிய வேண்டும், அவனது அடியார்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். இதை முதலாவதாக முடித்து விட்டு, அடுத்ததாக இல்லறப் பிரச்னைகளை கவனிக்க வேண்டும். எனவே உடனே நாம் புறப்படுவோம், என்றார். அவர்கள் இருவரும் திருச்சி நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழியில், ஆங்காங்கே பிøக்ஷ வாங்கி சாப்பிட்டனர். எங்காவது படுத்து உறங்கி விட்டு, நடைப்பயணத்தை தொடர்ந்தார்கள்.
தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Empty Re: ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

Post by krishnaamma Thu Feb 22, 2024 9:09 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Ihldq2w

காஞ்சிபுரத்திலிருந்து காவிரிக்கரையில் ஸ்ரீரங்கநாதன் பள்ளிகொண்ட ஸ்ரீரங்கம் சென்றடைய நான்கு நாட்கள் பிடித்தது. அப்போதெல்லாம் ஸ்ரீரங்கம் செல்ல பாலம் ஏது? காவிரியை பரிசலில் கடந்து ஸ்ரீரங்கத்தை அடைந்து, திருமடத்துக்கு சென்றனர். திருமடத்தின் வாசலில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. அனைவர் முகத்திலும் சோகம் கப்பியிருந்தது. பெரியநம்பிக்கு வயிற்றையே புரட்டியது. ஏதோ விபரீதம் நடந்து விட்டதோ? அப்படியானால் ஆளவந்தார்.... அவர் நினைத்தது சரிதான். ஆளவந்தார் ரங்கநாதனின் இருப்பிடத்தில் நிரந்தரமாய் துயில் கொள்ள சென்று விட்டார். சுவாமி! என்ன இது, இந்த பாவி வருவதற்கு கூட காத்திருக்காமல் போய் விட்டீர்களா? ஐயோ! இனி தங்களை என்று காண்பேன்? என பாதங்களில் விழுந்து கண்ணீரால் நீராட்டினார்.

ஆளவந்தாரை பார்க்க வேண்டுமென ஆவலுடன் ஓடிவந்த ராமானுஜரோ திக்பிரமை பிடித்தவர் போலானார். சுவாமி! இதைக்காணவா என்னை அவசர அவசரமாய் வரச் சொன்னீர்கள். ரங்கநாதா! இதென்ன கொடுமை. என் சுவாமியை என்னிடமிருந்து பிரித்து கொடுமை செய்த உன்னை சேவிக்காமலே ஊர் திரும்புவேன், என்றவராய் மயங்கி விழுந்து விட்டார். அழைத்து வந்தவர் மயங்கிக் கிடக்க, சுதாரித்துக் கொண்ட பெரியநம்பி, அவருக்கு மயக்கம் தெளிவித்தார். பின்பு ஆளவந்தாரின் அருகில் சென்ற ராமானுஜர், அவரது வலதுகையில் வித்தியாசத்தைக் கண்டார். அங்குள்ள சீடர்களை அழைத்து, ஆச்சாரியரின் கையைக் கவனித்தீர்களா? இவரது மூன்று விரல்கள் மடங்கியிருக்கிறதே. அவருக்கு எப்போதுமே இப்படித்தான் இருக்குமா? என்றார். சீடர்கள், இல்லையே, சாதாரணமாகத்தான் அவரது கை இருக்கும். இப்போது தான் விரல்கள் மடங்கியுள்ளன, என்றார். ராமானுஜர், ஆளவந்தாரின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அழுதுகொண்டிருந்தவர்கள் கூட அழுகையை நிறுத்திவிட்டு, அவர் என்ன செய்யப் போகிறார் என கவனித்தனர். மடமே நிசப்தமாய் விட்டது. ஆளவந்தார் இறந்தவரைப் போன்றே தெரியவில்லை. அவரது முகம் பிரகாசமாக இருந்தது. ராமானுஜர் அந்த முகத்தைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தது போல, அனைவருக்கும் தோன்றியது. அப்போது ராமானுஜர் சத்தமாக பேச ஆரம்பித்தார். அவர் பேசப்பேச ஒரு பேரதிசயம் அங்கு நிகழ்ந்தது.
தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 2 Empty Re: ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum