by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
Page 1 of 2 • 1, 2
தந்தை: கிருஷ்ணசாமி சுப்பிரமணியம்
தாயார்: சுலோச்சனா சுப்பிரமணியம்
பிறந்த தேதி: 9 ஜனவரி 1955
மனைவி: க்யோக்கோ ஜெய்சங்கர் - ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்
குழந்தைகள்: துருவா ஜெய்சங்கர், அர்ஜுன் ஜெய்சங்கர், மேத்தா ஜெய்சங்கர்
கல்வி: B.Sc., M.A. (Political Science), M.Phil., Ph.D. (International Relations) Educated at University of Delhi, Delhi and Jawaharlal Nehru University, New Delhi
தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கர், 1955ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். இவரது தந்தை கே. சுப்பிரமணியம் சர்வதேச மூலோபாய விவகாரங்களின் ஆய்வாளராக இருந்தார்.
1977ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்த இவர், முதலில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார்.
1985ல் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1988ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது, இந்தியாவின் அமைதி காக்கும் படையின் செயலாளரகவும், அரசியல் ஆலோசகராகவும் ஜெய்சங்கர் செயல்பட்டார்.
2000ல் செக் குடியரசின் இந்திய தூதராக நியமிக்கப்படும் முன்பு, ஹங்கேரி மற்றும் ஜப்பான் நாட்டில் உள்ள இந்திய தூதரங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்திய அமெரிக்க அணுஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஜெய்சங்கர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
2009ஆம் ஆண்டு சீனாவுக்கான இந்திய தூதராக இவர் நியமிக்கப்பட்டார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்புக்காக ஜெய்சங்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு, இந்தியாவின் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார் ஜெய்சங்கர்.
டாடா குழுமத்தின் உலகளாவிய கார்ப்பரேட் விவகாரங்களின் தலைவராக பணியாற்றினார்.
மோதியின் அமைச்சரவையில் உள்ள அரசியல் சாராத ஒரே நபர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.
ஜெய்சங்கருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, ரஷ்யன், மேண்டரின் ஆகிய மொழிகள் தெரியும்.
#சுப்பிரமணியம்_ஜெய்சங்கர் #ஜெய்சங்கர்
ஜெய்சங்கரின் கல்விக் காலம் முழுவதும் டெல்லியில்தான். ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் பொலிட்டிகல் சயின்ஸ் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். டெல்லி ஜே.என்.யு-வில் பிஹெச்.டி பெற்ற இவர் 1977-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகத் தேர்வாகி பணியாற்றத் தொடங்கினார். பின்னர், பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.
அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளராக 1985 முதல் 1988 வரை பணிசெய்தார். அதன் பின்னர், இரண்டு ஆண்டுகள் இலங்கையில் பணியாற்றினார். அப்போது இந்திய அமைதிப்படைக்கு அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இது தவிர இந்தியாவின் வெளியுறவுத்துறை தொடர்பாக ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி இருக்கிறார். இந்தக் காலங்களில் இருநாடு உறவுகளில் அதிக கவனம் எடுத்துக்கொண்ட நபர் ஜெய்சங்கர். இவரது செயல்பாடு காரணமாக அவ்வப்போது இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் பட்டியலில் இவரது பெயர் அடிபடும்.
2007 முதல் 2009 வரை சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து ஜெய்சங்கர் சீனாவுக்கான இந்திய தூதர் ஆனார். தற்போதுவரை சீனாவுக்கான இந்தியத் தூதராக அதிக காலம் பணியாற்றிய நபர் ஜெய்சங்கர்தான். சுமார் நான்கரை ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார். இந்தியா, சீனா இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் இவரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. இந்தியா, சீனா எல்லைப் பிரச்னை வரும்போதெல்லாம் இவரது செயல்பாடு முக்கியத்துவம் பெறும். அதைச் சிறப்பாகவும் செய்திருக்கிறார்.
2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி பதவி வகித்தபோது, சீனாவுக்கு வணிகம், தொழில்கள் ஈர்ப்பது தொடர்பில் அதிகாரபூர்வ வருகை ஒன்றை மேற்கொண்டார்.
இந்திய அரசியலை அறிந்தவர்களுக்கு, இந்தியாவின் மாநில முதல்வர் ஒருவர் இன்னொரு நாட்டிற்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல என்பது தெரியும். அதிலும் அப்போது ஆட்சியில் இருந்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி!
மோடியின் சீனாவின் வருகையின் போது அப்போது சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்தவர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம். மோடியின் சீன வருகையை சிறப்பான முறையில் வடிவமைத்து, ஏற்பாடுகள் செய்து மோடியின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றார் ஜெய்சங்கர்.
காலச் சக்கரம் சுழன்றது!
2014-ஆம் ஆண்டில் அதே நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானபோது அமெரிக்காவுக்கான முதல் வருகையை மேற்கொண்டார். அப்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்தவர் இதே ஜெய்சங்கர்தான்! 2013-ஆம் ஆண்டில்தான் அமெரிக்காவின் தூதராக நியமனம் பெற்றிருந்தார் ஜெய்சங்கர்.
அதுவரையில் மோடிக்கு அமெரிக்காவில் நுழைவதற்கான குடிநுழைவு அனுமதியே (விசா) கிடையாது. மோடிக்கு விசா ஏற்பாடுகளை அதிகாரபூர்வமாக செய்து முடித்து, மோடியின் அமெரிக்க வருகையைச் சிறப்பாகக் கையாண்டு, மீண்டும் ஒருமுறை மோடியின் பாராட்டுகளுக்கு உள்ளானார் ஜெய்சங்கர்.
அதிலும், அமெரிக்காவில்தான் முதன் முறையாக இலட்சக்கணக்கான அயல்நாட்டு இந்தியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு இந்தியப் பிரதமராக மோடி உரையாற்றும் நடைமுறையை உருவாக்கி, வெளிநாட்டுப் பயணங்களில் ஒரு புதிய பாணி உருவாக மோடிக்கு துணை நின்றார் ஜெய்சங்கர். அதே பாணியிலான நடைமுறை பின்னர் மோடி, சென்ற மற்ற நாடுகளிலும் பின்பற்றப்பட்டது.
தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறைக்கு செயலாளராகப் பொறுப்பேற்றார் ஜெய்சங்கர். இந்த காலகட்டத்தில் பிரதமராக இருந்தவர் சொல்லத் தேவையில்லை – நரேந்திர மோடிதான்!
இந்திய வெளியுறவு அரசியல் சூட்சுமங்கள் அறிந்தவர்களுக்கு ஒன்று தெரிந்திருக்கும். யார் ஒருவர் பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தூதராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவரோ அவரே அநேகமாக இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படுவார். அந்த வகையில் சீனாவில் – சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு தூதராகப் பணியாற்றி – மிக நீண்ட காலமாக சீனாவில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜெய்சங்கர்.
மோடியின் முதல் தவணை ஆட்சியில் வெளியுறவுத் துறை செயலராகப் பணியாற்றி மோடியின் நன்மதிப்பைப் பெற்ற ஜெய்சங்கர், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் (ஜனவரி 2018-இல் ஓய்வு பெற்றார்) அரசாங்கப் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, டாட்டா நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார்.
அவரது திறமை, அயல்நாட்டுக் கொள்கைகளில் அவருக்கிருக்கும் அபார அறிவாற்றல் போன்ற காரணங்களுக்காக அவரைத் தனது அமைச்சரவையில் இணைத்திருக்கிறார் மோடி.
சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கும் பிரச்சனைகள், வங்காளதேசத்துடன் நிலவி வரும் எல்லைப்புறப் பிரச்சனைகள், அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்க்க வேண்டியக் கட்டாயம், அதே நேரத்தில் நீண்டகால நட்பு நாடான ரஷியாவுடன் நட்புறவை சமன்நிலைப்படுத்த வேண்டிய அத்தியாவசியம், புதிதாக முளைத்திருக்கும் அமெரிக்கா-சீனா வணிகப் போர் என பலமுனைகளில் வெளிநாட்டு உறவை பலப்படுத்த வேண்டிய சூழலில் இருக்கும் இந்தியாவுக்கு ஜெய்சங்கரின் பரந்த அனுபவம் கைகொடுத்து வருகிறது.
டில்லிப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற ஜெய்சங்கர் பின்னர் அரசியல் அறிவியலிலும், அனைத்துலக உறவுகள் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றார். அனைத்துலக உறவுகள் துறையில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். 1977-ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுத் துறையில் பணிக்கு சேர்ந்தார்.
ஜெய்சங்கரின் வெளியுறவுத் துறை பணிகளில் சில சர்ச்சைப் பக்கங்களும் உண்டு. 1988-ஆம் ஆண்டில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையில் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையின் அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டவரும் இதே ஜெய்சங்கர்தான்!
இடைப்பட்ட காலத்தில் இந்திய அதிபராக சங்கர் தயாள் சர்மா பதவி வகித்தபோது அவருக்குப் பத்திரிக்கைச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார் ஜெய்சங்கர்.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் கூட ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்தன. ஆனால் பின்னர் அவை அடங்கிப் போயின.
2013ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். அவர் அந்த பொறுப்பேற்றுக் கொண்டவுடன் சர்ச்சைக்குரிய தெய்வானி கோப்ரகடே வழக்கை இவர் கையாள வேண்டியிருந்தது. இந்திய வெளியுறவு அதிகாரியாக அமெரிக்காவில் பணியாற்றி வந்த தெய்வானி, விசா மோசடி குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டார். அவரை விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதில் ஜெய்சங்கருக்கு முக்கிய பங்குள்ளது.
சீனாவுக்கான இந்திய தூதராகப் பணியாற்றிய காலத்தில் இருநாடுகளின் உறவு மேம்படுவதற்கு முயற்சிகளை மேற்கொணார் ஜெய்சங்கர். குறிப்பாக 2013-ம் ஆண்டு லடாக்கில் சீனா ஊடுருவலை மேற்கொண்டது. அதே காலத்தில் சீனா அதிபர் இந்தியாவுக்கு வருகை தர இருந்தார். லடாக்கில் இருந்து சீனா படைகள் வெளியேறினால்தான் சீனா அதிபர் இந்தியாவுக்கு வர முடியும் என மிரட்டல் விடுத்து பணியவைத்தார் ஜெய்சங்கர்.
2015-ம் ஆண்டு மோடி ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத் துறை செயலராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. சீனாவுக்கு இடம் கொடுத்திருந்த நேபாளம், பெருவெள்ளத்தில் சிக்கிய போது ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவின் பக்கம் திருப்பியதில் ஜெய்சங்கரின் பணி முக்கியமானது.
டாகடர் ஜெய்சங்கர் இந்தியாவின் 'வலிமையான குரலாக' உருவெடுத்தது எப்படி?
யுக்ரேன் போர் உலகை மேலும் பிளவுபடுத்தியுள்ளது என்றும் மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட உலக முறைமையில் பெரிய மாற்றம் தேவை என்றும் இந்தியா நம்புகிறது.
ஆனால் அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த நாட்டிற்கு இந்த உண்மையை யாரால் புரிய வைக்க முடியும்?
இதை சீனா வெளிப்படையாக கூறி வருகிறது. வளரும் நாடுகளின் தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்தியாவும் இந்த பொறுப்பை ஏற்றுள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளின் சிந்தனையை எந்த தயக்கமும் இல்லாமல், கட்டுப்பாடான வார்த்தைகளில் வெளிப்படுத்தும் நபராக இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உருவெடுத்துள்ளார்.
இந்த பணியை #ஜெய்சங்கர் சிறப்பாக செய்து வருவதாக இந்திய தரப்பில் கூறப்படுகிறது. ரஷ்யாவுடனான உறவை முறித்துக் கொள்ளவும், மேற்கத்திய முகாமில் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபடவும், சக்திவாய்ந்த மேற்கத்திய கூட்டாளி நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு பெரும் அழுத்தம் உள்ளது, ஆனால் இந்தியா அவ்வாறு செய்யவில்லை.
இந்தப் போரில் எந்தத் தரப்பையும் தான் ஆதரிக்கப் போவதில்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. உலக நாடுகளின் அழுத்தத்தை எதிர்கொள்வதில் இந்தியா காட்டிய புதிய தன்னம்பிக்கையின் மிகப்பெரிய முகம் ஜெய்சங்கர்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் புகழ் இந்தியாவில் அதிகரித்து வருவதற்கு மிகப்பெரிய காரணம், அவர் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற உலகின் பெரும் வல்லரசுகளின் முன் உறுதியுடன் நிற்பதை மக்கள் பார்ப்பதுதான்.
ஜெய்சங்கரின் அறிக்கைகள் அச்சமற்றதாகவும், கூர்மையாகவும் சிலரின் பார்வையில் கேலிசெய்வதாகவும் உள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில், ஜனநாயகத்தை மதிப்பிடும் மேற்கத்திய நாடுகளின் முக்கிய அமைப்புகள், இந்தியாவில் ஜனநாயகத்தின் வீழ்ச்சி மற்றும் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றன. இந்த கவலைகள் குறித்த ஜெய்சங்கரின் நிலைப்பாடு மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது.
"இது கபட நாடகம். உலகில் சிலர் இதுபோன்ற சான்றிதழ்களை வழங்குவதற்கு உரிமை உள்ளவர்கள் என்று தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். இந்தியா அவர்கள் சம்மதத்தை நாடுவதில்லை என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை" என்று அவர் கூறினார்.
ஜெய்சங்கரின் இந்த அறிக்கையில் ஒரே ஒரு அதிர்ச்சியான விஷயம் இருந்தது. அவரது இந்த கூர்மையான அறிக்கை தூதாண்மை வாக்கியங்களின் சர்க்கரை பாகில் கலந்து கொடுக்கப்படவில்லை.
இந்தியாவின் சாமானிய மக்களும் தங்கள் நாட்டை யாராவது விமர்சித்தால் அதே மொழியில் பதிலளிப்பார்கள் என்பது ஜெய்சங்கருக்கு தெரியும். இத்தகைய அறிக்கைகள் ஜெய்சங்கரை சாமானிய இந்தியர்கள் மற்றும் குறிப்பாக தேசியவாதிகளின் பார்வையில் ஹீரோவாக ஆக்கியுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரியில், பாஜக தலைமையிலான அரசை 'இந்து தேசியவாத அரசு' என்று மேற்கத்திய ஊடகங்கள் கூறியபோது, ஜெய்சங்கர் அதற்கு கடுமையாக பதிலளித்தார்.
"வெளிநாட்டு செய்தித்தாள்களை படித்தால், இந்து தேசியவாத அரசு போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ கிறிஸ்தவ தேசியவாதிகள் என்று சொல்வதில்லை. குறிப்பாக நமக்காக இதுபோன்ற சொற்றொடர்களை அவர்கள் சேமித்து வைக்கின்றனர்" என்று அவர் கூறியிருந்தார்.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஜெய்சங்கரின் ஆக்ரோஷமான அணுகுமுறையை முழுமையாக ஆதரிப்பதாக அரசியல் மற்றும் வெளியுறவு நிபுணர் டாக்டர் சுவ்ரோக்மல் தத்தா கூறுகிறார்.
"உலக நாடுகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளை கையாளும் போது, ஜெய்சங்கரின் பார்வையில் இந்தியாவின் நலன்கள் முதன்மையாக உள்ளன. யுக்ரேனின் தற்போதைய நெருக்கடியின் போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு மேற்கத்திய நாடுகளை அவர் எதிர்த்த விதம் காரணமாக அவர் இந்தியாவில் மிகவும் பிரபலமாகிவிட்டார்,” என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், 'Modi's India: Hindu Nationalism and the Rise of Ethnic Democracy' என்ற நூலின் ஆசிரியரும், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியருமான கிரிஸ்டோஃப் ஜாஃபர்லோ, 'ஜெய்சங்கரின் பாணி ஒரு பிரபலமான தேசியவாதியின் பாணி' என்று வாதிடுகிறார். அவர் தனது நாட்டு மக்களின் இதயங்களை வெல்வதற்காக இவற்றை செய்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்.
"ஜெய்சங்கர் மேற்கத்திய நாடுகளைப் பற்றி பேசும் விதத்தின் உண்மையான நோக்கம், உள்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதே ஆகும். இதுவே அவரது ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு முக்கிய காரணம். ஆனால், இந்த அணுகுமுறை புதியதல்ல." என்று கிறிஸ்டோஃப் ஜாஃபர்லோ கூறுகிறார்,
"ஜெய்சங்கர் இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தராக மிகவும் கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும், ரிவர்ஸ் இஞ்சினியரிங்கை பயன்படுத்துகிறார்,” என்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக ஆய்வு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் நிதாஷா கெளல் கூறுகிறார்.
மேற்கத்திய காலனித்துவ வரலாற்றைப் பற்றிய ஜெய்சங்கரின் விமர்சனத்தை ஆதரிக்கும் பலர் மேற்கில் இருப்பதாக நிதாஷா கெளல் கூறுகிறார். ”ஆனால், மேற்கத்திய நாடுகளின் பழைய தவறான செயல்களை விமர்சிக்கும் தனது நாட்டு மக்களைக் கவரவும் அதே வாதங்களைப் அவர் பயன்படுத்துகிறார்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நட்பு மற்றும் எதிரி நாடுகள் எப்படிப் பார்க்கின்றன?
பேராசிரியர் ஹுவாங் யுன்சோங், சீனாவின் செங்டுவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுத்துறையின் இணை முதல்வர் ஆவார். ஜெய்சங்கர் சீனாவுக்கான இந்தியத் தூதராக நீண்ட காலம் பணியாற்றியவர்.
"சீனாவின் அறிவுசார் மற்றும் செயல் உத்தி வட்டாரங்களில் ஜெய்சங்கரை நன்கு அறிந்தவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் ஜெய்சங்கரை ஒரு யதார்த்த அரசியல்வாதியாக மதிக்கிறார்கள். அவர் கடினமானவர், தந்திரமானவர் மற்றும் தைரியமானவர்." என்று பேராசிரியர் ஹுவாங் கூறுகிறார்.
"அவரது தூதாண்மை திறமைகளில், அமைதியான குணமும், கூர்மையான அறிவும் அடங்கும். இந்தியாவின் அதிமுக்கியமான சுயாட்சியை எவ்வாறு பராமரிப்பது என்பதில் அவரது மனம் எப்போதும் விழிப்புடன் இருக்கும்,"என்றார் அவர்.
“மனித உரிமைகள் என்ற பெயரில் மற்ற நாடுகளில் தலையிட்டு, ஜனநாயகத்தை மேம்படுத்துவது என்ற பெயரில் மேற்கத்திய நாடுகள் பாசாங்குத்தனமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகின்றன என்பதை நிச்சயமாக நாம் மறுக்க முடியாது,” என்று பேராசிரியர் நிதாஷா கெளல் கூறினார்.
”ஜெய்சங்கரின் இந்த கூர்மையான பேச்சுகளை மேற்கத்திய நாடுகள் அறிந்திருக்கின்றன. ஆனால் சீனாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஜெய்சங்கரின் அறிக்கைகள் அத்தனை மோசமில்லை என்று கருதுகின்றன,” என்கிறார் பேராசிரியர் நிதாஷா கெளல்.
மறுபுறம், மேற்கத்திய நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் உலக முறைமை மாறிவருகிறது என்ற அவரது நம்பிக்கைதான், ஜெய்சங்கரின் துணிச்சலான அறிக்கைகள் மற்றும் பேச்சுகளின் வேர் என்று பேராசிரியர் கிறிஸ்டோஃப் ஜாஃபர்லோ கருதுகிறார்.
ஜெய்சங்கர் தனது 'தி இண்டியா வே: ஸ்டாடெர்ஜீஸ் ஃபார் என் அன்செர்டன் வேர்ல்ட்’ என்ற புத்தகத்தில் இதை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டியுள்ளார். இதுவரை நாம் கண்டிராத ஒரு மாற்றம் இன்று நம் முன் வந்து கொண்டிருக்கிறது” என்று அவர் எழுதியுள்ளார்.
ஜெய்சங்கரின் வளர்ச்சி
அமைச்சரவையில் ஜெய்சங்கரின் வளர்ச்சி ஏறுமுகமாக இருப்பதாக மோதி அரசிற்குள்ளேயே ஒரு சிந்தனை இருக்கிறது. குறிப்பாக யுக்ரேன் போர், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குதல் போன்ற பிரச்சனைகளை #ஜெய்சங்கர் கையாண்ட விதம் அவரது புகழை அதிகப்படுத்தியுள்ளது.
மோதியின் அமைச்சரவையில் அதிகம் விரும்பப்படும் அமைச்சர்களில் ஜெய்சங்கரும் ஒருவர் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
"ஒரு வெளியுறவு அமைச்சராக மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் அதே மட்டத்தில் அவரை நான் வைக்கிறேன். வெளியுறவு அமைச்சராக டாக்டர். எஸ். ஜெய்சங்கரின் சாதனைகள் பண்டிட் ஜவஹர்லால் நேருவை விட மிக அதிகம் என்று நான் கருதுகிறேன் "என்று டாக்டர் சுவ்ரோக்மல் தத்தா கூறுகிறார்.
இது நிச்சயமாக பெரிய வார்த்தைகள்தான். ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சராகும் வரையிலான ஜெய்சங்கரின் பயணம், ஒரு தொழில்முறை தூதாண்மை அதிகாரியின் வெற்றிக்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும்.
1955 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த ஜெய்சங்கர், அரசு அதிகாரிகளின் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கே. சுப்ரமணியம் நன்கு அறியப்பட்ட நிர்வாக அதிகாரி. ஜெய்சங்கர் டெல்லியின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து சர்வதேச உறவுகளில் முனைவர் பட்டம் பெற்றார்.
அவர் மேற்கத்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு திறந்த மனதுடைய தாராளவாத நபர் என்று அவரது அக்கால தோழர்கள் கருதுகிறார்கள்.
ஜெய்சங்கர் 1977ல் தூதாண்மை அதிகாரியாக தனது தொழில் வாழ்க்கை பயணத்தை தொடங்கி பல நாடுகளில் இந்தியாவின் தூதராக பணியாற்றினார்.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக (2013-2015) ஜெய்சங்கர், அமெரிக்காவுடனான இந்தியாவின் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தினார். அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றினார்.
இரு நாடுகளுக்கும் இடையே வலுவான செயல் உத்தி ஒத்துழைப்பை வளர்ப்பதில் அவர் மிக முக்கிய பங்கு வகித்தார்.
2009 மற்றும் 2013 க்கு இடையில் அவர் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்தபோது அவரது கருத்தியல் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது என்று வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் 2011 இல், அவர் முதல் முறையாக நரேந்திர மோதியை சந்தித்தார். அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் ஜெய்சங்கர் அந்த நாட்களை நினைவு கூர்ந்தார். "நான் அவரை (நரேந்திர மோதியை) முதன்முதலில் 2011-ம் ஆண்டு சீனாவில் சந்தித்தேன். அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் என் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார்,” என்று ஜெய்சங்கர் கூறினார்.
"2011 வரை பல முதல்வர்களை இதுபோன்ற சுற்றுப்பயணங்களின்போது நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு சிறப்பான தயாரிப்புடன் வருகை தந்தவர்களை நான் பார்த்ததில்லை," என்றார் அவர்.
ஜெய்சங்கரின் கருத்தியல்
2014-ம் ஆண்டு நரேந்திர மோதி பிரதமராக பதவியேற்ற நேரத்தில், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக #ஜெய்சங்கர் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தார்.
2014 செப்டம்பரில் நரேந்திர மோதி பிரதமராக முதல் முறையாக அமெரிக்கா சென்றபோது, ஜெய்சங்கருடனான அவரது சிறந்த உறவு வெளிப்பட்டது. இது ஜெய்சங்கரின் கருத்தியல் பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தால் நிகழ்ந்ததா என்று சொல்வது கடினம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நரேந்திர மோதியின் முதல் அமெரிக்கப் பயணத்தின் ஏற்பாடுகளில், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த ஜெய்சங்கர் முக்கியப் பங்காற்றினார்.
நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் 'ஹவுடி மோடி' வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது பரவலாக அனைவராலும் விவாதிக்கப்பட்டது.
"மேடிசன் ஸ்கொயர் நிகழ்ச்சியின் போது நான் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்தேன். அந்த நிகழ்ச்சி ஒரு வரலாற்று நிகழ்வு என்று பலர் நம்புகிறார்கள்,” என்று ஜெய்சங்கரே கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
நரேந்திர மோதி அவரை வெளியுறவு செயலராக நியமித்தபோது (2015-2018), இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் அவர் மிக முக்கிய பங்கு வகித்தார்.
குறிப்பாக, 'விதிகளின் அடிப்படையிலான உலக முறைமை' பற்றிய இந்தியாவின் பார்வையை வடிவமைப்பதில் அவரது முக்கிய பங்களிப்பு இருந்தது.
வெளியுறவுச்செயலராக இருந்தபோது, நரேந்திர மோதியுடன் பல வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்குச்சென்றதாக ஜெய்சங்கர் கூறுகிறார்.
இருப்பினும் ஜெய்சங்கர் ஒரு வெளிநாட்டு சேவை அதிகாரியின் வரம்பிற்குள் இருக்காமல், தனது அரசியல் எஜமானருக்கு அதிகமாக சேவை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றபிறகு பிரதமர் மோதி, வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கரை நியமித்தபோது, அவர் வெளியுறவுச்செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று புதிய வாழ்க்கைக்கு தயாராகிக்கொண்டிருந்தார்.
ஓய்வு பெற்ற வெளியுறவுச்செயலரை நேரடியாக கேபினட் அமைச்சராக்குவது மிகவும் அரிதானது என்று வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கூறுகின்றனர். தான் இதை எதிர்பார்க்கவில்லை என்று சமீபத்தில் ANI-க்கு அளித்த பேட்டியில், ஜெய்சங்கர் ஒப்புக்கொண்டார்.
இந்த யோசனையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு ஒரு மாதம் யோசித்ததாக ஜெய்சங்கர் ஒரு பேட்டியில் கூறினார். இறுதியாக, வெளியுறவு அமைச்சராவதற்கு முன் அவர் முறைப்படி ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராகச்சேர்ந்தார்.
அவர் வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றபோது ஒரு முக்கிய நாளிதழ், "மோதியின் பிரச்சனைகளை நீக்குபவர் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார்" என்ற தலைப்பை அளித்திருந்தது.
ஜெய்சங்கரின் வெளியுறவுக் கொள்கை தர்க்கரீதியானதா?
அவரது வெளியுறவுக் கொள்கை மூன்று சித்தாந்தங்களை அடிப்படையாக்கொண்டது என்று ஜெய்சங்கரின் புத்தகம் கூறுகிறது.
கூட்டணிகளைத் தவிர்த்தல்: அவர் கூட்டணிகளை விட ஒத்துழைப்பை நம்புகிறார். அவர் பன்மைத்துவம் அல்லது பலதரப்பு அரசியலை ஆதரிக்கிறார்.
அவர் பலமுனை உலகத்தை நம்புகிறார். இந்த உலக முறைமையில் உள்ளார்ந்த போராட்டங்களின் நன்மைகளை பெற விரும்புகிறார்.
இந்த இரண்டு விஷயங்களின் விளைவாக எழும் முரண்பாடுகளை அவர் ஏற்றுக்கொள்கிறார்.
ஜெய்சங்கரின் புத்தகம் 2020 இல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு நிறைய விஷயங்கள் மாறிவிட்டன.
”இந்தியா, சீனாவுடன் இணைந்து 21ம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக மாற்ற முடியும் என்று ஜெய்சங்கர் நம்புகிறார். அவர் தனது புத்தகத்திலும் இந்த யோசனையை முன்னெடுத்துச் செல்கிறார்.
ஜெய்சங்கரின் புத்தகத்தைப் படித்தவருக்கு அவர் சீனாவின் வேகமான முன்னேற்றத்தின் ரசிகர் என்பது தெரியும். சீனாவிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்,” என்று பேராசிரியர் ஜாஃபர்லோ கூறுகிறார்.
முரண்பாடுகள்
சீன அறிஞர், பேராசிரியர் ஹுவாங் யுன்சாங், "சீனாவும் இந்தியாவும் இணைந்து ஆசியாவின் நூற்றாண்டை உருவாக்க வேண்டும் என்ற ஜெய்சங்கரின் கருத்து, அவரது ஆக்கிரமிப்புக் கொள்கை மற்றும் சீனா மீதான அவரது அணுகுமுறையுடன் சிறிதும் பொருந்தவில்லை" என்று வாதிடுகிறார்.
அதற்கான காரணத்தை விளக்கிய பேராசிரியர் ஹுவாங், "சீனாவும் இந்தியாவும் இரண்டு வெவ்வேறு கிழக்கு நாகரிகங்கள். அவை முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரங்கள் மற்றும் புவியியல் பகுதிகளில் வளர்ந்துள்ளன.வரலாற்றில் மிகக் குறைந்த காலத்திற்கு மட்டுமே அவை தோற்கடிக்கப்பட்டுள்ளன," என்றார்.
"இன்று இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஒரு செயல் உத்தி கூட்டாண்மையிலிருந்து, எதிரி அண்டை நாடாக குறைக்கப்பட்டுள்ளது. நட்பு உறவுகளின் இடத்தை இப்போது பகை மற்றும் அலட்சியம் எடுத்துக்கொண்டுள்ளது,” என்று பேராசிரியர் ஹுவாங் கூறுகிறார்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்புடன் ஆசிய நூற்றாண்டை வடிவமைக்கும் ஜெய்சங்கரின் யோசனை நடக்கக்கூடியது என்று பேராசிரியர் ஜாஃபர்லோ கருதவில்லை. அப்படி நடப்பது மிகவும் அரிது என்கிறார் அவர்.
சீனாவும் இந்தியாவும் இணைந்து ஆசிய நூற்றாண்டை உருவாக்க முடியும் என்ற ஜெய்சங்கரின் கோட்பாட்டை டாக்டர் சுவ்ரோக்மல் தத்தா நம்புகிறார். ஆனால், 'சீனா முதலில் தன் வழியை சரிசெய்துகொள்ள வேண்டும்' என்று அவர் கூறுகிறார்.
"நிச்சயமாக இந்த இரண்டு மாபெரும் ஆசிய சக்திகளும் இணைந்து ஆசிய நூற்றாண்டின் கனவை நிஜமாக்க முடியும். இது சாத்தியம்தான். ஆனால், சீனா தனது இந்திய விரோத போக்கை கட்டுப்படுத்த வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் இந்தியாவின் நண்பர்கள் மற்றும் எதிரிகளை கையாள்வதில் நீண்ட அனுபவம் உள்ள ஒரு மூத்த அரசியல்வாதி, இந்தியாவின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக கருதுகிறார்.
ஜெய்சங்கரை விட சீனாவைப் புரிந்து கொண்ட தொழில்முறை தூதர் வேறு யாரும் இல்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேபோல வேறு எந்த ஒரு அரசியல்தலைவரும் மோதியைப்போல ஒன்பது முறை சீனாவுக்கு பயணம் மேற்கொண்டதில்லை. நான்கு முறை குஜராத்தின் முதல்வராகவும், ஐந்து முறை இந்தியப் பிரதமராகவும் அவர் அங்கு சென்றுள்ளார்.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் பதற்றத்தை குறைப்பார்கள் இந்த இருவர் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது போல காணப்படுகிறது. அமைதி ஒப்பந்தம் ஏற்படும் நம்பிக்கையும் தற்போது தென்படவில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மற்றவர்களுக்கு --முக்கியமாக இளைய சமுதாயத்திற்கு
மிகவும் உபயோகமாக இருக்கும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கனடா vs இந்தியா:
அரசியல் தேவைக்கேற்ப பயங்கரவாத எதிர்ப்பு மாறாது - ஐ.நா.வில் ஜெய்சங்கர் பதிலடி
ஐ.நா. சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம் என்றும் அதனை காலவரையின்றி தள்ளிப் போட முடியாது என்றும் ஐ.நா. பொதுச்சபையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது போன்றவை அரசியல் வசதிக்கேற்ப மாறிவிடும் என்று எண்ணக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். அவரது உரையில் ஐ.நா. சீர்திருத்தம், கனடாவுக்கு மறைமுக பதிலடி என்பன போன்றவை இடம் பெற்றிருந்தன.
பாரத் என்று குறிப்பிட்டு பேச்சை தொடங்கிய ஜெய்சங்கர்
நியூயார்க் நகரில் நடைபெற்ற 78-வது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். உரையின் தொடக்கத்தில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்று அவர் கூறிப்பிட்டார். , "பாரதத்தில் இருந்து நமஸ்தே " என்று உரையைத் தொடங்கிய அவர், ஐ.நா. சீர்திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
"ஐ.நா. பாதுகாப்பு அவையில் சீர்திருத்தம் அவசியம்"
மாறி வரும் உலகிற்கு ஏற்ப ஐ.நா.விலும் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்றும் அந்த விவகாரத்தை காலவரையின்றி தள்ளிப் போடவோ, பேசாமல் இருக்கவோ முடியாது என்றும் அவர் கூறினார்.
"ஜி20 அமைப்பில் ஆப்ரிக்க யூனியனை உறுப்பினராக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. அதன் மூலம், ஒட்டுமொத்த ஆப்ரிக்க கண்டத்திற்கும் குரலும் உலக அரங்கில் ஒலிக்கிறது. இது முன்பே தரப்பட்டிருக்க வேண்டிய ஒன்று.
சீர்திருத்தத்தின் பாதையில் இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கை, அதற்கும் முன்பே தொடங்கப்பட்ட ஒப்பீட்டளவில் மிகவும் பழைய அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, பாதுகாப்பு கவுன்சிலை சம காலத்திற்கேற்ப மாற்றுவதற்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, பரந்துபட்ட பிரதிநிதித்துவம் என்பது செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகிய இரண்டிற்கும் அவசியம்." என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
"சில நாடுகளே எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியாது"
உலக நடப்புகளில் ஆதிக்கம் செலுத்த முயலும் சில நாடுகளை மறைமுகமாக சாடிய ஜெய்சங்கர், "உலகம் விதிகளின் அடிப்படையில் இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று விவாதங்களில் நாங்கள் அடிக்கடி பரிந்துரைக்கிறோம். இன்றும் சில நாடுகள் நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கின்றன மற்றும் விதிமுறைகளை வரையறுக்க முயல்கின்றன. இது காலவரையின்றி தொடர முடியாது.
நாம் அனைவரும் ஒருமித்து செயல்பட்டால், ஒரு நியாயமான, சமமான மற்றும் ஜனநாயக ஒழுங்கு நிச்சயமாக வெளிப்படும். அதற்கான ஒரு தொடக்கமாக, விதிகளை உருவாக்குபவர்களை அதனை கையில் எடுப்பவர்களுக்கு அடிபணியச் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, விதிகள் அனைவருக்கும் சமமாக பொருந்தும் போது மட்டுமே செயல்படும்." என்று அவர் கூறினார்.
"அரசியல் தேவைக்கேற்ப பயங்கரவாத எதிர்ப்பு மாறாது"
மேலும் தொடர்ந்த ஜெய்சங்கர், "பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கான பதில்களை அரசியல் வசதிக்கேற்ப தீர்மானிக்கலாம் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. இதேபோல், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மரியாதை மற்றும் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாதது போன்ற விவகாரங்களில் தேர்ந்தெடுத்து சரி, தவறை தீர்மானிக்க முடியாது. உண்மையான ஒற்றுமை இல்லாமல், உண்மையான நம்பிக்கை இருக்க முடியாது என்பது குளோபல் தெற்கின் உணர்வு." என்று அவர் கூறினார்.
'இந்தியா அதாவது பாரத்' என்று உரையை முடித்த ஜெய்சங்கர்
"அடுத்த ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை எதிர்கால உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. பாதுகாப்பு சபை விரிவாக்கம் மட்டுமின்றி, மாற்றம், நேர்மை மற்றும் பலதரப்பு சீர்திருத்தம் ஆகியவற்றிற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நம்பிக்கையுடன் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்." என்றார் அவர்.
மேலும் தொடர்ந்த ஜெய்சங்கர், "ஜனநாயகத்தின் பண்டைய மரபுகள் ஆழமான நவீன வேர்களைத் தாக்கிய சமூகத்திற்காக நான் பேசுகிறேன். அதனால், எங்கள் சிந்தனை, அணுகுமுறைகள், செயல்கள் ஆகியவை உண்மையானவை.
இதன் விளைவாக, நமது சிந்தனை, அணுகுமுறைகள் மற்றும் செயல்கள் இப்போது மிகவும் அடிப்படை மற்றும் உண்மையானவை. நவீனத்தை தழுவிய நாகரீக சமூகமாக, பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் சமமாக நம்பிக்கையுடன் இங்கே எடுத்துரைக்கிறோம். இந்த இணைவுதான் இன்று இந்தியாவை, அதாவது பாரதத்தை வரையறுக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்