புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
52 Posts - 61%
heezulia
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
244 Posts - 43%
heezulia
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
13 Posts - 2%
prajai
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_m10புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 16, 2024 3:46 pm

புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Main-qimg-2e72065cc2f6a59a2b8401b2198d931f
-

திருமலை வையாவூர்

அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வான்வழியே வந்த
போது இத்தலத்தினால் கவரப்பட்டார். சஞ்சீவி மலையைச் சற்றே
கீழே வைத்துவிட்டு கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

பிறகு அங்கிருந்து புறப்பட முற்பட்டபோது அனுமனால் சஞ்சீவி
மலையை தூக்கமுடியவில்லை. ஏதோ ஒரு சக்தி அவரை நகரவிடாது
தடுத்தது. ‘ஐயனே நான் என்ன செய்ய?’ என்று நெஞ்சுருகி ராமனை
பிரார்த்தித்தார்.

அங்கே புன்னகையுடன் வெங்கடேசப் பெருமாள் காட்சியளித்தார்.
இன்றும் நம் பொருட்டு அலர்மேல் மங்கையோடு பிரசன்ன வெங்கடேசப்
பெருமாள் எனும் திருநாமத்தோடு இறைவன் சேவை சாதிக்கிறார்.

இத்தலம் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டு –
மதுராந்தகம் இடையே ஜி.எஸ்.டி. சாலையின் உட்பகுதியில் படாளம்
கூட்டுரோடிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கருங்குளம்

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி கரையோரமுள்ள தென்
திருப்பதிகளுள் ஒன்றாக கருங்குளம் வெங்கடாஜலபதி கோயில்
விளங்குகிறது. மூலவர் வெங்கடாஜலபதி தனித்தன்மை வாய்ந்தவர்.

அழகனான பெருமாள் இங்கு உருவமற்றவராக சந்தனக் கட்டையில்
அருவமாக அமர்ந்து ஆட்சிசெய்கிறார். இத்தலத்தைப் பொறுத்த
வரையில் மலையடிவாரத்திலுள்ள மார்த்தாண்டேஸ்வரரை வணங்கி
விட்டுத்தான் வெங்கடாஜலபதியை வணங்குகின்றனர்.

திருநெல்வேலி & திருச்செந்தூர் பிரதான சாலையில் 15வது கிலோ மீட்டரில்
கருங்குளம் அமைந்துள்ளது. நெல்லை டவுனிலிருந்து பஸ் வசதி உண்டு.

குணசீலம்

-
புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் Main-qimg-252d6def78068d14115393146a1b6285
குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்

திருச்சிக்கு அருகே குணசீலம் எனும் தலத்தில் மூலவராகவே பிரசன்ன
வெங்கடாஜலபதி அருள்கிறார். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால்
தாயார் சந்நதி இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயில் இது.

உற்சவரின் திருநாமம் ஸ்ரீநிவாசப் பெருமாள்.
பொதுவாக கோயில்களில் விழாவின்போது மட்டுமே கருடசேவை
சாதிப்பார்கள். ஆனால், இங்கு ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்
தினத்தன்றும் கருடசேவை சாதிக்கப்படுகிறது.

மனக்குறையுடன் வரும் பக்தர்கள் மட்டுமல்லாது, நீண்டநாள்
மன நோயாளிகளும் பூரண நிவர்த்தி பெற இத்தலத்திற்கு வந்து
வழிபடுகின்றனர். திருச்சி-சேலம் பாதையில் 24 கி.மீ. தொலைவில்
இத்தலம் அமைந்துள்ளது.

கும்பகோணம்

கும்பகோணம் குமரன் தெருவிலுள்ள திருக்குடந்தை திருப்பதி என்கிற
ஸ்ரீதேவி-பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயில் 600 வருடங்கள்
பழமையானது. இங்கு மூலவராக வெங்கடாஜலபதி அருள்கிறார்.

தனிச் சந்நதியில் பத்மாவதித் தாயார் பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும்
மகாவிஷ்ணுவின் தசாவதாரப் பெருமாள்களின் சந்நதிகள் கிழக்கு நோக்கி
அமைந்துள்ளன.

துறையூர்

துறையூரை அடுத்த கொல்லிமலை-பச்சை மலைத் தொடரில் பிரசித்தி பெற்ற
பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோயில்
ராஜராஜசோழன் பரம்பரையினரால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக
கூறுகின்றனர். இங்கு பெருமாள் திருமணக் கோலத்தில் கிழக்குநோக்கி
சேவை சாதிக்கிறார்.

அடிவாரத்திலிருந்து கோயிலுக்கு 1554 படிக்கட்டுகள் உள்ளன. வாகனங்கள்
செல்லவும் 5 கி.மீ. தொலைவிற்கு மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை திருப்பதி பெருமாள் தனக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக்
கடன்களை இங்கேயே செலுத்தலாம் என்று பிரசன்னமாகி எழுந்தருளிச்
சொன்னதாக தலவரலாறு கூறுகின்றது.
இத்தலம் திருச்சி, துறையூருக்கு அருகேயுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 16, 2024 3:59 pm

புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய வேங்கடவனின் தலங்கள் 13-164
-
சென்னை – சைதாப்பேட்டை

மேற்கு சைதாப்பேட்டையில் மிகப் பழமையான பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. தாயார் மற்றும் பெருமாளின் திருமேனி பூமியிலிருந்து கிடைத்ததாக கூறுகிறார்கள். மேலும், விஜயநகர மன்னர்களிடம் பணியாற்றிய தேசாய் எனும் பிரிவைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது.
வருடந்தோரும் தமிழ் வருடப் பிறப்பு அன்று பிரம்மோத்சவ விழா தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. பிரார்த்தனைகள் நிறைவேற பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தாயார் அலர்மேல்மங்கை எனும் திருப்பெயரிலேயே அருள்கிறார். செண்பக மரம் தலவிருட்சம்.

சின்ன திருப்பதி

தலத்தின் பெயரே சின்ன திருப்பதிதான். தர்மபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பாகலூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருமலை திருப்பதியில் பெருமாள் மலை மீதும் தாயார் திருச்சானூர் தலத்திலும் அருள்பாலிக்கிறார்கள். ஆனால், இத்தலத்தில் மகாலட்சுமி, பத்மாவதி தாயார்களோடு சேர்ந்து பெருமாள் சேவை சாதிக்கிறார். கரம் உயர்த்தி அருள்பாலிக்கும் தோரணை பெருமாளுக்கு. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

மதுரை

அப்பன் திருப்பதி கோவில் என்றே இக்கோயிலை அழைப்பர். மூலவர், ஸ்ரீநிவாசப் பெருமாள். தாயார், அலர்மேல் மங்கை. சித்திரை திருவிழாவின்போது அழகர்கோவிலிலிருந்து புறப்படும் கள்ளழகர் இத்தல மண்டபத்தில் ஓர் இரவு முழுவதும் தங்கிச் செல்லுவார். கருவறையில் ஸ்ரீநிவாசப்பெருமாள் தன் தேவியருடன் அருள்பாலிக்கிறார். மதுரையிலிருந்து அழகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் அப்பன் திருப்பதி தலம் அமைந்துள்ளது.

மோகனூர்

காவிரிக்கரையில் அமைந்துள்ள அழகிய தலம் இது. கருவறையில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். நவராத்திரியின்போது திருப்பதியில் ஒருநாள் எனும் உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஒருநாள் மட்டும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நடக்கும் அனைத்து பூஜைகளும் இங்கும் நடக்கும். அர்த்தநாரீஸ்வரர் போல கிருஷ்ணனும் ருக்மிணியும் இணைந்த அபூர்வ திருக்கோலத்தை இத்தலத்தில் தரிசிக்கலாம். இந்த அமைப்பை சம்மோஹன கிருஷ்ணன் என்பார்கள்.

மோகனூர் எனும் தலப்பெயர், இவரை வைத்துதான் வந்தது. புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ. தொலைவில் மோகனூர் அமைந்துள்ளது.

சென்னை – தரமணி

ஏழுமலையான் கோயில்கொண்ட பல்வேறு தலங்களுள் ஒன்று சென்னை தரமணியில் உள்ளது. சென்னை- வேளச்சேரியிலிருந்து திருவான்மியூர் செல்லும் பாதையில் பாரதி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், தரமணி பேருந்து நிலையத்திலிருந்தும் 2 கி.மீ தொலைவில், ராஜாஜி தெருவில் அமைந்துள்ளது இக்கோயில்.

ராகவபட்டாச்சாரியார் எனும் வைணவ பெரியவர் திருப்பதி திருமலையிலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்திலும் பல வருடங்களாக கைங்கரியம் புரிந்துவந்தார். வயதான காலத்தில் அவரால் திருப்பதிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட, ஏழுமலையானைத் தனது இருப்பிடத்திற்கே அழைத்துவர தீர்மானித்தார். உண்மையான பக்தனின் அழைப்பை வேங்கடவன் மறுப்பானா? பெரியவரின் விருப்பப்படியே தரமணியில் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம், 1976ம் ஆண்டு உருவாகியது.

ஆப்பூர்

சிங்கப் பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஆப்பூர் தலத்தில் மலைமீது வெங்கடேசப் பெருமாளின் கோயில் அமைந்துள்ளது. இந்தப் பெருமாளுக்கு பிரார்த்தனையாக புடவை செலுத்தப்படுவது வித்தியாசமான வழக்கமாக இருக்கிறது. திருமணமாகாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டால் உடனே திருமணம் நடந்து விடுகிறது. பௌர்ணமியன்று பல சித்தர்கள் சூட்சுமமாக இந்தப் பெருமாளை வழிபடுவதாக கூறுகின்றனர்.

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலிக்கு அருகேயுள்ள இத்தலம் உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றது. கலை நுணுக்கங்கள் வாய்ந்த உயிரோவியங்கள் நிறைந்த தலம். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலிலேயே நேர்த்திக் கடன் செலுத்தலாம். இங்குள்ள சில கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை ஒலிக்கும்.

பெருமாள் நின்ற கோலத்தில் வெங்கடாஜலபதியாகக் காட்சியளிக்கிறார். பத்மாவதி தாயாரும் அருள் பொழிகிறார். நெல்லையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

பாதூர்

ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் விழுப்புரம்&உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் வடபுறமாக பாதூர் கிராமத்தில் உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க வைணவ பஞ்ச (ஐந்து) கிருஷ்ணாரண்ய புண்ணிய பூமியில், புனிதம் நிறைந்த, மகோன்னதமான கருட நதி, சேஷ நதிகளின் தென்புறத்தில் அமைந்துள்ளது பாதூர்.

இந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலையும், பாதூர் கிராமத்தையும் ராஷ்டிரகூட மாமன்னனான மூன்றாவது கிருஷ்ணனால் கி.பி. 964ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, சரபோஜிராவிற்கு தரிசனம் தந்த, தன்னை நாடி வந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் இந்த பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கிழக்கு பார்த்த வண்ணம் அழகாய் காட்சி தருகிறார்.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்
நன்றி- தினகரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 16, 2024 9:47 pm

சைதாப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு பத்தாண்டுகளுக்கு முன் 
ஓர் வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனம் செய்தது உண்டு.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக