ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.

Go down

நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ. Empty நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.

Post by ayyasamy ram Sat Dec 09, 2023 10:23 am

நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ. Annapoorni-696x392
-
-விளம்பரம்-
தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருக்கும்
நயன்தாராவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம்
அன்னபூரணி. இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி
இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ்,
கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து இயக்குனர்
கொடுத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா?
இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் நடிகை நயன்தாரா பிராமண குடும்ப பெண்ணாக நடித்து
இருக்கிறார். இவர் திருச்சியை சேர்ந்தவர். இவருக்கு சின்ன வயதில்
இருந்தே உணவை ருசி பார்ப்பதில் நிறைய திறமை இருக்கும். இதனால்
இவரிடம் சமைத்து ருசி பார்க்க சொல்வார்கள். அதோடு இவருக்கு
சமையல் மீது அதிக ஆர்வம் வந்துவிடும்.

அதோடு கோயிலில் இவருடைய தந்தை பிரசாதம் சமைப்பவர்.
இதனால் இவருக்கு அசைவம் பிடிக்காது. பின் நயன்தாரா தன்னுடைய
கல்லூரியில் சமையல் கலை நிபுணராக சேர்ந்து கல்வி பயில்கிறார்.

இவருக்கு இந்தியாவின் தலைசிறந்த சமையல்கலை நிபுணராக
வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தன்னுடைய குடும்பத்தின்
எதிர்ப்பை மீறி தன்னுடைய லட்சியத்தை நயன்தாரா அடைந்தாரா?
இல்லையா? இதற்கிடையில் அவர் எதிர்கொண்ட சிக்கல்களை
எல்லாம் எப்படி சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் நயன்தாரா வழக்கமான தன்னுடைய நடிப்பை
கொடுத்திருக்கிறார். இருந்தாலும், இரண்டாம் பாதியில் அவருடைய
நடிப்பு பாராட்டைப் பெற்றிருக்கிறது.

வில்லனாக சத்யராஜ் வருகிறார். கதாநாயகன் வேண்டும்
என்பதற்காகவே ஜெய் இந்த படத்தில் வைத்திருக்கிறார்கள்.
கடைசி வரை அவர் என்ன செய்கிறார் என்று என்று ரசிகர்கள்
மத்தியில் கேள்வி எழுப்ப வைத்து இருக்கிறது. அவருக்கு காதல்
வசனங்களை ஆவது கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இவர்களுடன் படத்தில் கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி,
ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் தங்கள் கொடுத்த
வேலை செய்திருக்கிறார்கள்.

படத்தில் சைவம்- அசைவம் என்ற இரண்டு வகை உணவுகளை
இயக்குனர் மையப்படுத்தி கொடுத்து இருக்கிறார். அதோடு அதில்
சில முக்கிய விஷயங்களை காண்பிக்க முயற்சித்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் அசைவ உணவுகள் குறித்து வரும் காட்சிகளையும்
வசனங்களையும் இயக்குனர் கொஞ்சம் கவனமாக கையாண்டு
இருக்கலாம். படத்தில் நிறைய லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது.

தேவையற்ற நிறைய அரசியல் வசனங்கள் வருகிறது.
ஒரு சமையல் போட்டியை நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு
ஒரு முக்கிய பிரச்சினையாக இயக்குனர் கொண்டு செல்வது
கொஞ்சம் கடுப்பேற்றி இருக்கிறது.

ஆனால், சில வசனங்கள் பார்வையாளர்கள் மத்தியில் ஈர்ப்பை
பெற்று இருக்கிறது. ஒரு எதார்த்தமான காட்சியை கூட இயக்குனர்
செயற்கை தனமாக கொடுத்திருக்கிறார். கதைக்களம் நன்றாக
இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதம்தான்
சரியில்லை.

பின்னணி இசையும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.
ஒளிப்பதிவும் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக காண்பித்து
இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் அன்னப்பூரணி
சுமாரான படமாக தான் இருக்கிறது.

நிறை:
பெண்களுக்கான ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும் படம்
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக
செய்திருக்கிறார்கள்
ஒளிப்பதிவு ஓகே
சில வசனங்கள் ஓகே
மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படத்தில் ஒன்றுமில்லை

குறை:
இயக்குனர் கதைகளத்தை கொண்டு சென்ற விதத்தில் அதிக
கவனம் செலுத்தி இருக்கலாம்
பின்னணி இசை ஒர்க் அவுட் ஆகவில்லை
நிறைய லாஜிக் குறைபாடுகள்
தேவையில்லாத அரசியல் வசனங்கள்
முதல் பாதி பொறுமையாக செல்கிறது

கிளைமாக்ஸ் இல் கொஞ்சம் விறுவிறுப்பையும் சுவாரசியத்தையும்
கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

மொத்தத்தில் அன்னபூரணி- ருசி இல்லை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum