புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm
» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
gayathrichokkalingam | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
kavithasankar | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
Page 1 of 1 •
- bharathichandranssnபுதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020
-பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி
“
பாரதிசந்திரன்
(முனைவர் செ சு நா சந்திரசேகரன்)
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி
“
விழிப்பு நிலைக்கு அப்பால் நினைவற்ற மனச் செயல்பாடுகள் இருந்தாலும், அவை நம்மைப் பாதிக்கச் செய்கின்றன. சில பிரச்சனைக்கான தீர்வுகள் அல்லது படைப்பாக்கக் கருத்துக்கள் நம் மூளையில் முன் யோசனை செய்யாமலேயே திடுக்கென்று வருவதுண்டு” என உளம்சார் உணர்வு வெளிப்பாடுகுறித்து, ‘உளவியல்- மிகச் சுருக்கமான அறிமுகம் ‘ என்னும் நூலின் ஆசிரியர்களான கில்லியன் பட்லர், பிரிதா மெக்மனஸ் கூறுவர். உளம் சார்ந்த நுண்ணிய திறனை அறிந்து கூறிய உளவியல் கோட்பாட்டின்படி கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் பல கவிதைகள் அமைந்திருக்கின்றன. உளவியல்சார் திறனாய்வு அடிப்படையில் அவரின் கவிதைகளை அணுகும்பொழுது, மனதின் இயல்புகளைக் கவிஞர் எவ்வளவு தீவிரமாக ஆராய்ந்து கவித்துவத்தோடு எழுதி இருக்கிறார் என்பது அறிய வருகிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் இக்கட்டுரையில் காணலாம்.
“உணர்வுகள் நம் அனுபவத்தை வண்ணமயமாக்குவதில்லை. அவற்றின் வழியில் பயணிக்கும் நமக்கு, உணர்வுபூர்வமான சூழ்நிலையும் கொடுப்பதில்லை. ஏதோ ஒரு நோக்கத்தை மட்டும் அவை வழங்குகின்றன. மேலும், செயலுக்கான தூண்டு விசையைக் கூட வழங்குகின்றன. அந்தக் கணத்தில் நாம் உணர்ந்ததைக் கொண்டு, நமது செயல்களை விளக்குகின்றோம்.” என்ற உளவியல் கோட்பாட்டில், “ஏதோ ஒரு நோக்கம்” என்பது முக்கியமாகிறது. உணர்வுகள் அதன் அடிப்படையான அனுபவம் இவற்றை மீறிய ஏதோ ஒரு நோக்கம் நம்மை ஆள்கிறது. அதன்படி மனம் விளங்கியும், புரிந்தும், ஏற்றுக் கொண்டும் விடுகிறது என்பதாகிறது. இதனைக் கவிஞர் முத்தமிழ்விரும்பியின் ஒரு கவிதையில் காட்சி வெளிப்பாடாகவே விளக்கி இருப்பார். அக்கவிதையானது,
“திருச்சிராப்பள்ளி சந்திப்பில்
மலைக்கோட்டை தொடர்வண்டி
பிடிக்க
நடைமேடை எண் பார்க்க
நிமிர்ந்தால்,
சரி பாதியாய்
துண்டாடிய நிலா
வெளிச்சத்தில்
பொருள்வயிற்பிரிவு
மின்னணுயுகத்தில்
மின்னும்
சங்கப்பாடல்
பெய்த மழையால்
பட்டுத் தெறிக்கிறது
விட்டுப் பிரிந்து
செல்லும்
கண்ணீர்.”
இதுவாகும். ’துண்டாடிய நிலா’ ‘மின்னும் சங்கப்பாடல்’ ‘கண்ணீர்’ எனும் வார்த்தைகளின் பின்னணியில், கிளை கிளையாய் பிரியும், மாபெரும் பிரிவுத் துயர் கொண்ட கதை ஒன்று தன் வலியையும், வேதனையையும், படும் பாட்டையும், துடிதுடிப்பையும் உணர வைக்கின்றன. எவ்வளவு நுணுகி நுணுகிச் செல்ல முடியுமோ, அவ்வளவு நுணுகிய உணர்வு வெளிப்பாடுகளை இக்கவிதையாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் முத்தமிழ் விரும்பி.
‘நிலாத் துண்டாடிக் காணப்படுகிறது.’ இவ்வரியில், ஒரு உளவியல் கோட்பாடு உள் பதிந்துள்ளது. இதனைப் புலனறிவுத் தற்காப்பு (Intelligence self- defence) என்கின்றனர். “இன்பமற்ற தூண்டலின் மேல், பொருள்கள் துன்பமாய் அல்லது அவமதிப்பாய் தென்படுகின்றன” என்பார். நம் மனம் சந்தோஷமாக இருக்கிறபொழுது, உலகியல் செயல்பாடுகள், வெளிச்சம் மற்றும் அழகாகத் தோன்றுவதாகவும், துன்பமாக நாம் இருக்கும்பொழுது, உலகியல் செயல்பாடுகள் இருண்மைத் தன்மை மற்றும் அலங்கோலமாகவும் தென்படுவதாக அறிகிறோம். அதுபோல் கவிஞர், பொருள்வயிற்பிரிந்து செல்லும் பிரிவினால், நிலா கூடத் துண்டாகிக் கிடப்பதாகக் கூறுகிறார். இங்கு மனங்கள் வெட்டப்பட்டு பிரிக்கப்பட்டது போலிருக்கிறது. எனவே தான் துண்டாடிய நிலா என்று கவிஞரால் கற்பனை செய்ய முடிகிறது.
கவிதையின் ஒரு சொல்லுக்குள் இத்தனை பொருள் வெளிப்பாடுகள். கவிஞரின் கவித்திறத்தை இவ்விடத்தில் எண்ணி எண்ணிப் பேசக் கூடியதாக இருக்கிறது. பொருள்வயிற் பிரிவு என்பது பணம் சம்பாதிப்பதற்காகக் காதலியையோ அல்லது மனைவியையோ பிரிந்து செல்லும் ஒரு பிரிவாகும். அது வெளிப்படையான நிகழ்வு அல்ல. உள்ளத்தை வதைக்கும் ஒரு நிகழ்வு. வெளியே அது தெரியாது. இக்கவிதையில் பொருள் முரண் வெளிப்பாடாய், வெளிச்சத்தில் பொருள்வயிற்பிரிவு என்கிறார். வெளியே தெரியாத உள்ளுணர்வான பிரிவு நிலா வெளிச்சத்தில் அவ்வளவு பிரகாசமாகத் தெரிகிறதாம். பாருங்கள். இதுதான் கவித்துவத்தின் உச்சம். அழகு. சிறப்பு. கவிதைக்குள் கொண்டு வந்த நவீனமும் கூட.
ப
ழமைக்கும், புதுமைக்கும் பாலமாய் பொதுவாய் இருப்பது, மன உணர்வைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? அதைக் கவிதையில் கூறும்பொழுது, ‘மின்னணு யுகத்தில் மின்னும் சங்கப்பாடல்’ என்கிறார். பழங்காலத்தில் செய்யுள் எழுதும்பொழுது பிரிவுகுறித்து எவ்வாறு எழுத வேண்டும் என இலக்கணம் படைத்தனர். அதன்படி சங்கப் பாடல்களும் புனைந்தனர். சங்கப்பாடல்களில் பல நூறு பிரிவுப் பாடல்கள் காணப்படுகின்றன. அவை முழுவதும் உளவியல் சார்ந்த மன உணர்வுகளை, அவற்றை, அதன் உணர்வு மாறாமல், அனுபவங்களுடன் இணைத்து எழுதினார்கள் புலவர்கள். நானும் இப்பொழுது அதைத்தான் எழுதுகிறேன் அதே உணர்வை எழுதுகிறேன் என்பதற்காக இவ்வரிகளைக் கவிஞர் எழுதுகிறார். என்னதான் மின்னணு யுகமாக இருந்தாலும் பிரிவின் வலி அதே தானே?
மனைவியைப் பிரிந்து செல்லும் அப்பொழுதுகள் துன்பம் மிக்கதாக இருக்கிறன. இரயில் நிலையம் சோகக் காடாகத் தெரிகிறது. இரயில் ஏறப் போகிறார். மழை வருகிறது. அதில் ஒரு துளி பட்டுத் தெறிக்கிறது. இதைப் பார்க்கிற கவிஞர், அது விட்டுப் பிரிந்து செல்லும் பிரிவால் மனம் வாடிப் போய்க் கண்களிலிருந்து விடும் கண்ணீர் துளியாக இருக்கிறது என்கிறார். இந்தக் கண்ணீரை யார் விடுவது? கவிஞர் விடுகிறாரா? இல்லை மேகங்கள் கண்ணீர் விடுகின்றனவா? இல்லை காலம்தான் கண்ணீர் விடுகிறதா? தெறிக்கும் மழை நீர் எல்லாம் நாங்கள் விடும் கண்ணீர் துளிகளாக இருக்கிறது என்கிறார் கவிஞர். உள்ளார்ந்த பொருளோடு மேலே கூறிய உளவியல் கோட்பாட்டின்படி இதுவும் ஒரு புலனறித் தற்காப்பு என்கிற கோட்பாட்டு வெளிப்பாடாகும்.
நிலா ஒரு காட்சி.
புகைவண்டி நிலையம் ஒரு காட்சி.
பிரிந்து செல்லும் பயணி ஒரு காட்சி.
சங்கப் பாடலின் பொருள்கள் ஒரு காட்சி.
மழை ஒரு காட்சி.
அழுகையின் கண்ணீர் ஒரு காட்சி.
இத்தனை காட்சிகளையும் ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கி ஆழமான எண்ணவோட்டங்களின் உணர்வைக் கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் முத்தமிழ்விரும்பி அவர்கள். இதுதான் கவிதையில் அவர் எடுத்தாண்டிருக்கிற நவீனத்துவம். பல காட்சிகளை ஒரே கருதுகோளின் அடிப்படையில் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி ஒரு நீண்ட புனைவை வெளிப்படுத்தி இருக்கிற தன்மை அவரினுடைய சிறந்த கவித்திறனுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.
மற்றொரு கவிதையில் காதலியிடம் நேரடியாகப் பேசுவது போல் ஒரு கவிதை உள்ளது. பிரிவின் உளவியல் துன்பங்கள் மனதை நசுக்கி வார்த்தைகளை வெளியிட்டு இருக்கின்றன. கவிதையில் முரண் காட்சிகளும், விரக்தியும், வெறுப்பும் அவற்றின் மையமாக இருக்கின்றன. அக்கவிதையானது, ’இல்லாத வானம்’ எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
“ஆனால்
நீ தடுக்கிறாய்
தள்ளிப் போடுகிறாய்
பிரிவும் நோய்மையும்
சொல்லித் தீராது
அள்ளி எடுத்துப் போ
இல்லை கிள்ளி எறிய வா
இல்லாத வானம்
இருந்தென்ன
ஊசல்”
இதேபோல், பிரிவின் காரணமாகப் உளநோய்ப்பட்டுக் காட்சிகள் திரிதலைக் காட்சிப்படுத்தி எழுதிய கவிதையாக,
”ஒரு வழிப்பாதையாக
உரையாடல்
மாறினால்
இரவு என்பது
இயல்பின்றி
இருக்கலாம்
பகலில் எரியும்
நிலா
பாதையில்லா
ஊர்
பயணமிங்கே எப்பொழுது.”
இக்கவிதையைக் காணமுடிகிறது. மேற்காணும் இருகவிதைகளிலும் மனப்பிறழ்வு கொண்ட உளப்போராட்டத்தை உணர முடிகின்றது. நவீன கவிதை வடிவங்களில், உளவியல் கவிதையும் ஒன்றாக இருக்கின்றன. கவிதைகள், மனதினுடைய வெளிப்பாடான கவிதையாக ஒவ்வொரு அசைவுகளையும் உளம் சார்ந்த கோட்பாடுகளுடன் ஒப்புமைப்படுத்தி கூறுவது சிறப்பாகும். அவ்வகையில் இக்கவிதைகளில் பிரிவு ஏற்படுத்திய ஒழுங்கற்ற உளம் சார்ந்த முரண் வெளிப்பாடுகளைக் கவிதைகளில் எடுத்தாண்ட உவமைகள்மூலம் அறியலாம். பகலில் எங்குமே காண முடியாத நிலா எரிகிறது. ஊர் பாதையின்றி இருக்கிறது. இப்படிப்பட்ட முரண் வெளிப்பாடுகளால் உளவியல் தன்மையைக் கொண்டுள்ளது கவிஞர் முத்தமிழ் விரும்பியின் கவிதைகள்.
நவீன வெளிப்பாடுகளில், உளவியல் வெளிப்பாடுகளைப் பெரும்பாலும் தன் கவிதைகளில் எழுதி இருக்கிற கவிஞரின் எண்ணங்கள், மிகப்பெரும் உளவியலாளர்கள் கூறிய உளவியல் கோட்பாடுகளோடு இயைந்து செல்லுகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
நன்றி : தமிழணங்கு மாதமிதழ், மதுரை.“உணர்வுகள் நம் அனுபவத்தை வண்ணமயமாக்குவதில்லை. அவற்றின் வழியில் பயணிக்கும் நமக்கு, உணர்வுபூர்வமான சூழ்நிலையும் கொடுப்பதில்லை. ஏதோ ஒரு நோக்கத்தை மட்டும் அவை வழங்குகின்றன. மேலும், செயலுக்கான தூண்டு விசையைக் கூட வழங்குகின்றன. அந்தக் கணத்தில் நாம் உணர்ந்ததைக் கொண்டு, நமது செயல்களை விளக்குகின்றோம்.” என்ற உளவியல் கோட்பாட்டில், “ஏதோ ஒரு நோக்கம்” என்பது முக்கியமாகிறது. உணர்வுகள் அதன் அடிப்படையான அனுபவம் இவற்றை மீறிய ஏதோ ஒரு நோக்கம் நம்மை ஆள்கிறது. அதன்படி மனம் விளங்கியும், புரிந்தும், ஏற்றுக் கொண்டும் விடுகிறது என்பதாகிறது. இதனைக் கவிஞர் முத்தமிழ்விரும்பியின் ஒரு கவிதையில் காட்சி வெளிப்பாடாகவே விளக்கி இருப்பார். அக்கவிதையானது,
“திருச்சிராப்பள்ளி சந்திப்பில்
மலைக்கோட்டை தொடர்வண்டி
பிடிக்க
நடைமேடை எண் பார்க்க
நிமிர்ந்தால்,
சரி பாதியாய்
துண்டாடிய நிலா
வெளிச்சத்தில்
பொருள்வயிற்பிரிவு
மின்னணுயுகத்தில்
மின்னும்
சங்கப்பாடல்
பெய்த மழையால்
பட்டுத் தெறிக்கிறது
விட்டுப் பிரிந்து
செல்லும்
கண்ணீர்.”
இதுவாகும். ’துண்டாடிய நிலா’ ‘மின்னும் சங்கப்பாடல்’ ‘கண்ணீர்’ எனும் வார்த்தைகளின் பின்னணியில், கிளை கிளையாய் பிரியும், மாபெரும் பிரிவுத் துயர் கொண்ட கதை ஒன்று தன் வலியையும், வேதனையையும், படும் பாட்டையும், துடிதுடிப்பையும் உணர வைக்கின்றன. எவ்வளவு நுணுகி நுணுகிச் செல்ல முடியுமோ, அவ்வளவு நுணுகிய உணர்வு வெளிப்பாடுகளை இக்கவிதையாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் முத்தமிழ் விரும்பி.
‘நிலாத் துண்டாடிக் காணப்படுகிறது.’ இவ்வரியில், ஒரு உளவியல் கோட்பாடு உள் பதிந்துள்ளது. இதனைப் புலனறிவுத் தற்காப்பு (Intelligence self- defence) என்கின்றனர். “இன்பமற்ற தூண்டலின் மேல், பொருள்கள் துன்பமாய் அல்லது அவமதிப்பாய் தென்படுகின்றன” என்பார். நம் மனம் சந்தோஷமாக இருக்கிறபொழுது, உலகியல் செயல்பாடுகள், வெளிச்சம் மற்றும் அழகாகத் தோன்றுவதாகவும், துன்பமாக நாம் இருக்கும்பொழுது, உலகியல் செயல்பாடுகள் இருண்மைத் தன்மை மற்றும் அலங்கோலமாகவும் தென்படுவதாக அறிகிறோம். அதுபோல் கவிஞர், பொருள்வயிற்பிரிந்து செல்லும் பிரிவினால், நிலா கூடத் துண்டாகிக் கிடப்பதாகக் கூறுகிறார். இங்கு மனங்கள் வெட்டப்பட்டு பிரிக்கப்பட்டது போலிருக்கிறது. எனவே தான் துண்டாடிய நிலா என்று கவிஞரால் கற்பனை செய்ய முடிகிறது.
கவிதையின் ஒரு சொல்லுக்குள் இத்தனை பொருள் வெளிப்பாடுகள். கவிஞரின் கவித்திறத்தை இவ்விடத்தில் எண்ணி எண்ணிப் பேசக் கூடியதாக இருக்கிறது. பொருள்வயிற் பிரிவு என்பது பணம் சம்பாதிப்பதற்காகக் காதலியையோ அல்லது மனைவியையோ பிரிந்து செல்லும் ஒரு பிரிவாகும். அது வெளிப்படையான நிகழ்வு அல்ல. உள்ளத்தை வதைக்கும் ஒரு நிகழ்வு. வெளியே அது தெரியாது. இக்கவிதையில் பொருள் முரண் வெளிப்பாடாய், வெளிச்சத்தில் பொருள்வயிற்பிரிவு என்கிறார். வெளியே தெரியாத உள்ளுணர்வான பிரிவு நிலா வெளிச்சத்தில் அவ்வளவு பிரகாசமாகத் தெரிகிறதாம். பாருங்கள். இதுதான் கவித்துவத்தின் உச்சம். அழகு. சிறப்பு. கவிதைக்குள் கொண்டு வந்த நவீனமும் கூட.
ப
ழமைக்கும், புதுமைக்கும் பாலமாய் பொதுவாய் இருப்பது, மன உணர்வைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? அதைக் கவிதையில் கூறும்பொழுது, ‘மின்னணு யுகத்தில் மின்னும் சங்கப்பாடல்’ என்கிறார். பழங்காலத்தில் செய்யுள் எழுதும்பொழுது பிரிவுகுறித்து எவ்வாறு எழுத வேண்டும் என இலக்கணம் படைத்தனர். அதன்படி சங்கப் பாடல்களும் புனைந்தனர். சங்கப்பாடல்களில் பல நூறு பிரிவுப் பாடல்கள் காணப்படுகின்றன. அவை முழுவதும் உளவியல் சார்ந்த மன உணர்வுகளை, அவற்றை, அதன் உணர்வு மாறாமல், அனுபவங்களுடன் இணைத்து எழுதினார்கள் புலவர்கள். நானும் இப்பொழுது அதைத்தான் எழுதுகிறேன் அதே உணர்வை எழுதுகிறேன் என்பதற்காக இவ்வரிகளைக் கவிஞர் எழுதுகிறார். என்னதான் மின்னணு யுகமாக இருந்தாலும் பிரிவின் வலி அதே தானே?
மனைவியைப் பிரிந்து செல்லும் அப்பொழுதுகள் துன்பம் மிக்கதாக இருக்கிறன. இரயில் நிலையம் சோகக் காடாகத் தெரிகிறது. இரயில் ஏறப் போகிறார். மழை வருகிறது. அதில் ஒரு துளி பட்டுத் தெறிக்கிறது. இதைப் பார்க்கிற கவிஞர், அது விட்டுப் பிரிந்து செல்லும் பிரிவால் மனம் வாடிப் போய்க் கண்களிலிருந்து விடும் கண்ணீர் துளியாக இருக்கிறது என்கிறார். இந்தக் கண்ணீரை யார் விடுவது? கவிஞர் விடுகிறாரா? இல்லை மேகங்கள் கண்ணீர் விடுகின்றனவா? இல்லை காலம்தான் கண்ணீர் விடுகிறதா? தெறிக்கும் மழை நீர் எல்லாம் நாங்கள் விடும் கண்ணீர் துளிகளாக இருக்கிறது என்கிறார் கவிஞர். உள்ளார்ந்த பொருளோடு மேலே கூறிய உளவியல் கோட்பாட்டின்படி இதுவும் ஒரு புலனறித் தற்காப்பு என்கிற கோட்பாட்டு வெளிப்பாடாகும்.
நிலா ஒரு காட்சி.
புகைவண்டி நிலையம் ஒரு காட்சி.
பிரிந்து செல்லும் பயணி ஒரு காட்சி.
சங்கப் பாடலின் பொருள்கள் ஒரு காட்சி.
மழை ஒரு காட்சி.
அழுகையின் கண்ணீர் ஒரு காட்சி.
இத்தனை காட்சிகளையும் ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கி ஆழமான எண்ணவோட்டங்களின் உணர்வைக் கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் முத்தமிழ்விரும்பி அவர்கள். இதுதான் கவிதையில் அவர் எடுத்தாண்டிருக்கிற நவீனத்துவம். பல காட்சிகளை ஒரே கருதுகோளின் அடிப்படையில் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி ஒரு நீண்ட புனைவை வெளிப்படுத்தி இருக்கிற தன்மை அவரினுடைய சிறந்த கவித்திறனுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.
மற்றொரு கவிதையில் காதலியிடம் நேரடியாகப் பேசுவது போல் ஒரு கவிதை உள்ளது. பிரிவின் உளவியல் துன்பங்கள் மனதை நசுக்கி வார்த்தைகளை வெளியிட்டு இருக்கின்றன. கவிதையில் முரண் காட்சிகளும், விரக்தியும், வெறுப்பும் அவற்றின் மையமாக இருக்கின்றன. அக்கவிதையானது, ’இல்லாத வானம்’ எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
“ஆனால்
நீ தடுக்கிறாய்
தள்ளிப் போடுகிறாய்
பிரிவும் நோய்மையும்
சொல்லித் தீராது
அள்ளி எடுத்துப் போ
இல்லை கிள்ளி எறிய வா
இல்லாத வானம்
இருந்தென்ன
ஊசல்”
இதேபோல், பிரிவின் காரணமாகப் உளநோய்ப்பட்டுக் காட்சிகள் திரிதலைக் காட்சிப்படுத்தி எழுதிய கவிதையாக,
”ஒரு வழிப்பாதையாக
உரையாடல்
மாறினால்
இரவு என்பது
இயல்பின்றி
இருக்கலாம்
பகலில் எரியும்
நிலா
பாதையில்லா
ஊர்
பயணமிங்கே எப்பொழுது.”
இக்கவிதையைக் காணமுடிகிறது. மேற்காணும் இருகவிதைகளிலும் மனப்பிறழ்வு கொண்ட உளப்போராட்டத்தை உணர முடிகின்றது. நவீன கவிதை வடிவங்களில், உளவியல் கவிதையும் ஒன்றாக இருக்கின்றன. கவிதைகள், மனதினுடைய வெளிப்பாடான கவிதையாக ஒவ்வொரு அசைவுகளையும் உளம் சார்ந்த கோட்பாடுகளுடன் ஒப்புமைப்படுத்தி கூறுவது சிறப்பாகும். அவ்வகையில் இக்கவிதைகளில் பிரிவு ஏற்படுத்திய ஒழுங்கற்ற உளம் சார்ந்த முரண் வெளிப்பாடுகளைக் கவிதைகளில் எடுத்தாண்ட உவமைகள்மூலம் அறியலாம். பகலில் எங்குமே காண முடியாத நிலா எரிகிறது. ஊர் பாதையின்றி இருக்கிறது. இப்படிப்பட்ட முரண் வெளிப்பாடுகளால் உளவியல் தன்மையைக் கொண்டுள்ளது கவிஞர் முத்தமிழ் விரும்பியின் கவிதைகள்.
நவீன வெளிப்பாடுகளில், உளவியல் வெளிப்பாடுகளைப் பெரும்பாலும் தன் கவிதைகளில் எழுதி இருக்கிற கவிஞரின் எண்ணங்கள், மிகப்பெரும் உளவியலாளர்கள் கூறிய உளவியல் கோட்பாடுகளோடு இயைந்து செல்லுகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
பாரதிசந்திரன்
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|