ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி சிரிப்புகள் - 01

Go down

கடி சிரிப்புகள் - 01 Empty கடி சிரிப்புகள் - 01

Post by TI Buhari Fri Nov 10, 2023 7:35 pm


கோபு : அந்த ஆள்‌ ரொம்ப சிக்கனப்‌ பேர்வழி. எப்ப மார்க்கெட்டுக்குப்‌ போனாலும்‌ வாழைப்பழம்தான்‌ வாங்குவாரு…
பாபு : ஏன்‌?
கோபு : அதான்‌ சீப்பாக் கிடைக்குதாம்‌…

பெரியசாமி : எங்க தலைவர்‌ ஒரு திறந்த புத்தகம்‌ மாதிரி.
சின்னசாமி : ஓ! அதுதான்‌ நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப புரட்டி எடுத்தாங்களா?

ரமேஷ்‌ : எத்தனை பெரிய ஆபத்து வந்தாலும்‌ யானை, குதிரை எல்லாம்‌ கத்தாது.
சுரேஷ்‌ : ஏன்‌?
ரமேஷ்‌ : யானை பிளிறும்‌! குதிரை கனைக்குமே!

ஒருவர்‌ : திருநெல்வேலி வரன்‌ ஒண்ணு ஓங்க பொண்ணுக்கு வந்ததே, என்ன ஆச்சி?
மற்றொருவர்‌ : கடைசி நேரத்திலே அல்வா கொடுத்துட்டாங்க…

ரமணன்‌ : பாப்பா! இந்த டிரஸ்‌ தீபாவளிக்கு எடுத்ததா…
பாப்பா : இல்ல, எனக்கு எடுத்தது!
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

heezulia and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கடி சிரிப்புகள் - 01 Empty கடி சிரிப்புகள் - 02

Post by TI Buhari Fri Nov 10, 2023 8:10 pm

பாலு : படகுல ஏறி பார்க்கலாமா?
வேலு : முடியாதே! ஏரியிலதான்‌ படகைப்‌ பாக்கலாம்‌.

ரமணன்‌ : சர்வர்‌, நீங்க சாப்பிட்டாச்சா?
சர்வர்‌ : ஏன்‌ அக்கறையாக் கேட்கறீங்க?
ரமணன்‌ : எது ஆர்டர்‌ செஞ்சாலும்‌ பாதிதான்‌ வருது.

பாபு : டாக்டர்‌, எனக்குச் சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை!
டாக்டர்‌ : அப்‌ப ஆபரேஷன்‌ முடிஞ்சதும்,‌ பாடியை யார்‌ வாங்கிக்குவாங்க?

அரசன்‌ : புலவரே! என்ன துணிச்சல்‌? என்‌ எதிரே அமைச்சரைப்‌ புகழ்ந்து பாடுகிறீர்?
புலவர்‌ : மன்னிக்க வேண்டும்‌ அரசே! அண்மையில்‌ வெளியான பணக்காரர்கள்‌ பட்டியலில்‌ அமைச்சரின்‌ பெயர்‌தான்‌ முதலிடத்தில்‌ இருக்கிற
து!

நீதிபதி : ஏம்ப்பா ரெண்டு காலும்‌ ஊனமா இருக்கும் போதே இவ்வளவு திருட்டு வேல செஞ்சிருக்கியே? இன்னும்‌ கை காலல்லாம்‌ நல்லா இருந்தா என்னவெல்லாம் செஞ்சிருப்ப?
திருடன்‌ : இப்டி அனாவசியமா மாட்டிருக்க மாட்டேங்க…
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கடி சிரிப்புகள் - 01 Empty கடி சிரிப்புகள் - 03

Post by TI Buhari Fri Nov 10, 2023 8:34 pm

வக்கீல்‌ : மை லார்ட்‌!  என்‌ கட்சிக்காரர்‌ நல்ல மனிதர். ‌நேர்மையானவர்.‌ கொடூரமாக யாரிடமும்‌ நடந்து கொள்வதை வெறுப்பவர்‌. எல்லோரிடமும்‌ அன்பு செலுத்துவதில்‌ என்‌ கட்சிக்காரர் சிறந்தவர்‌. 
கட்சிக்காரர்‌ : (சத்தமாக) யோவ்‌ வக்கீல்!  என்ன விளையாடுறியா?  என்னைப்‌ பத்திச் சொல்றேன்னு காசு வாங்கிக்கிட்டு, வேற யாரைப்‌ பத்தியோ சொல்லிக்கிட்டு இருக்கியே… தொலைச்சிடுவேன்‌ தொலைச்சி…

கோபு : டாக்டருக்குப் படிக்கலாம்னு இருந்தேன்‌, பாதிலயே படிப்பை நிறுத்த வேண்டியதாப் போச்சி…
பாபு :  எப்படி?
கோபு : அஞ்சாங்‌ கிளாஸோட ஸ்கூல்‌ லைஃப்புக்கு முற்றுப்‌ புள்ளி வெச்சிட்டேன்‌.

நீதிபதி : வீட்டுக்கு ரெய்டுக்கு வந்தவங்க கிட்ட “ஈ”ன்னு உங்க பல்லைக்  காட்டினீங்களாமே?
குற்றவாளி : என்‌ சொத்தையெல்லாம்‌ காட்டச்‌ சொன்னாங்க… அதான்‌. 

மூடனும்‌ அவன்‌ மனைவியும்‌ விவாகரத்துக்கு மனு கொடுத்தனர்‌.
நீதிபதி : உங்களிடம்‌ மூணு குழந்தைகள்‌ உள்ளனர்‌. இப்போ பிரிச்சீங்கள்னா சிக்கல்‌ வருமே?.
மூட‌ன் : சரி, அப்ப அடுத்த வருசம்‌ நாங்க நாலாவது குழந்தை பெத்துக்கிட்டு வர்ரோம்‌ ஐயா.

மூட‌ன் இருபது ரூபாய்‌ கொடுத்து ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கினான்‌. பரிசு ஒரு கோடி விழுந்தது. கடைக்காரர்‌ வரிப் பிடித்தம்‌ போக 55 இலட்ச ரூபாய்‌ கொடுத்தார்‌. மூட‌ன்‌ கோபமாக “யாரை ஏமாத்தப்‌ பார்க்கறே? முழுப் பரிசு ஒரு கோடி ரூபாயையும்‌ தா. இல்லேன்னா என்‌ இருபது ரூபாயை
மரியாதையாத் திருப்பிக்‌ கொடு” என்றான்‌.
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

heezulia, ஆனந்திபழனியப்பன் and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கடி சிரிப்புகள் - 01 Empty கடி சிரிப்புகள் - 04

Post by TI Buhari Fri Nov 10, 2023 9:18 pm

மூட‌ன் :  (பணியாளிடம்‌) போயி செடிக்குத் தண்ணீர்‌ ஊத்து.
பணியாள் ‌: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளிஜி.
மூட‌ன் ‌: அதனாலென்ன? குடையை எடுத்துக்‌ கொண்டு போ.

டீச்சர்‌ : (மக்கள்‌ தொகை பற்றிய பாடம்‌ நடத்திய போது) இந்தியாவில்‌ ஒவ்வொரு பத்து விநாடிக்கும்‌ ஒரு பெண்‌ ஒரு குழந்தை
யைப்
 பெற்றெடுக்கிறாள்‌.
மூட‌ன் : (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர்‌! உடனடியாக அந்தப்‌ பெண்ணை நாம்‌ கண்டுபிடித்து, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் .

மூட‌ன் : (தன்‌ நண்பனிடம்‌) இரவு என்‌ வீட்டுக்கு வா. யாரும்‌ இருக்க மாட்டார்கள்‌.
நண்பன் அவ்வாறே மூட‌னின்‌ வீட்டுக்கு இரவு சென்றான்‌. உண்மையில்‌ மூட‌ன் உட்பட யாருமே அங்கு இல்லை.

மூட‌ன் பெருமையாகத் தன்‌ நண்பனிடம்‌ சொன்னான்‌. “என்‌ தாத்தா சாகும்‌ போது அமைதியாக எந்தச் சத்தமும்‌ போடாமல்‌ தூக்கத்திலிருக்கும் போது  பஸ்ஸில்‌ செத்தார்‌. ஆனால்‌ அவர்‌ ஓட்டிக் கொண்டிருந்த பஸ்ஸிலிருந்த‌ பயணிகள்தான்‌ அலறிக்‌ கொண்டே செத்தார்கள்.”

மூட‌ன் ‌: நேற்று ரயிலில்‌ சரியாத் தூங்க முடியலை.
நண்பன் ‌: ஏன்‌?
மூட‌ன் : மேல் பர்த்‌தான்‌ கிடைத்தது.
நண்பன் ‌: கீழுள்ளவருடன்‌ பேசி மாற்றிக்‌ கொண்டிருக்கலாமே?
மூட‌ன் ‌: செஞ்சிருக்கலாம்‌. ஆனா கீழே யாரும்‌ இல்லே.
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கடி சிரிப்புகள் - 01 Empty கடி சிரிப்புகள் - 05

Post by TI Buhari Fri Nov 10, 2023 10:51 pm

ஒரு மூடன்‌ டாக்டரிடம்‌ சென்றார்‌. அவர்‌ சிறுநீரைப் பரிசோதித்த டாக்டர்‌, சில மருந்துகளைக்‌ கொடுத்து, “இதை சாப்பிட்டு வாங்க, உங்களுக்குக் கொஞ்சம்‌ சர்க்கரை இருக்கு. எதுக்கும்‌ மூன்று மாதம்‌ கழித்து சிறுநீரை மறுபடியும்‌ கொண்டு வாங்க. பரிசோதித்துப்‌ பார்ப்போம்‌” என்றார்‌.
மூன்று மாதம்‌ கழித்து, மூடன் 10 பெரிய கேன்களைத்  தூக்க முடியாமல்‌ கஷ்டப்பட்டு,  தூக்கி வந்து டாக்டர்‌ முன்‌ வைத்தார்‌.
டாக்டர்‌ : என்ன இவை?
மூடன் : நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச் சொன்னீங்க

****

நோய் வாய்ப்பட்டு, கிட்டத்தட்ட மரணத்தின்‌ வாயிலுக்கே சென்று விட்ட நண்பரைப் பார்க்க மூடன்  ஹாஸ்பிடலுக்குச் சென்றிருந்தார்‌. நண்பரின்‌ அருகில்‌ போய்‌ நின்று‌ கொண்டிருந்த மூடன், நண்பரின்‌ நிலைமை திடீரென்று மிகவும்‌ மோசமாவதை உணர்ந்து, என்னவென்று கேட்டார்‌. அந்த நிலையில்‌ பேச முடியாத நண்பர்‌ செய்கையால்‌ ஒரு பேப்பரும்‌, பேனாவும்‌ வேண்டுமெனக் கேட்டார்‌. அவசரமாக ஏதோ எழுதிக் கொண்டிருக்கும்‌ போதே, நண்பரின்‌ உயிர்‌ பிரிந்தது. மூடன்,‌ அந்த பேப்பரில்‌ நண்பர் தம்‌ குடும்பத்துக்கு ஏதோ முக்கியமான தகவலை எழுதி விட்டுப் போயிருக்கலாம், அதை நாம்‌ படிக்கக்‌ கூடாது என நினைத்து அதை மடித்து, தம்‌ சட்டைப் பைக்குள்‌ வைத்துக்‌ கொண்டார்‌. சடங்குகள்‌ எல்லாம்‌ முடிந்து, மறுநாள்‌ மூடன்‌, நண்பர்‌ வீட்டுக்குப் போய்,‌ துண்டு பேப்பர்‌ விஷயத்தை நண்பர்‌ மனைவியிடம்‌ சொல்லி,   பேப்பரைக் கொடுத்தார். பேப்பரைப் பிரித்துப் படித்த நண்பரின்‌ மனைவி மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டார்‌. 

அந்த பேப்பரில்‌ என்ன எழுதியிருக்கிறது என்று மூடன்‌ பார்த்தார்‌. அதில்‌ “என்‌ ஆக்சிஜன்‌ குழாய்‌ மீது நீ நின்று கொண்டிருக்கிறாய்‌” என்று எழுதியிருந்தது.

****

ஒரு முறை மூடன்‌ தெருவில்‌ நடந்து வந்து‌ கொண்டிருந்தார்‌, அப்போது அவருடைய நண்பர்‌ ஒருவர்‌ சந்தைக்குப்‌ போய் விட்டு, கையில்‌ ஒரு பையுடன்‌ அவ்வழியே திரும்பிக்‌ கொண்டிருந்தார்‌.
மூடன் ‌: மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?
நண்பர் ‌: வேறொன்றுமில்லை. கோழிதான்.
மூடன் : அண்ணே பையில்‌ எத்தனை கோழிகள்‌ இருக்கின்றன என நான்‌ சரியாகச் சொன்னால்‌, எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா?
நண்பர் ‌: ஒண்ணு என்ன, இந்த இரண்டையுமே நீயே எடுத்துக்‌ கொள்.
மூடன் : அஞ்சு கோழி , சரியா?

****

ஒரு முறை மூட‌ன் சூப்பர்‌ மார்கெட்டுக்கு சன்‌ ஃப்ளவர்‌ ஆயில்‌ வாங்கச் சென்றிருந்தார். உயர்தர ஆயில்‌ பாட்டில்‌ ஒன்றை எடுத்துக் கொண்டு கடைக்காரரிடம்‌ வந்து காசைக் கொடுத்து விட்டு “கொலஸ்ட்ரால்‌ கொடுங்க” என்றார்‌. கடைக்காரருக்கு ஒன்றும்‌ புரியவில்லை.
“சாரி, கொலஸ்ட்ரால்‌ எல்லாம்‌ விற்பதில்லை” என்று கடைக்காரர்‌ சொன்னார்‌. உடனே மூடனுக்குக் கோபம்‌ வந்து விட்டது.  “நான்‌ என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்பவே கொலஸ்ட்ராலைக் கொடுக்கிறாயா இல்லையா?” என்று சத்தம்‌ போட ஆரம்பித்து விட்டார்‌.
உடனே கடைக்காரர்‌ ரொம்பப் பொறுமையாக மூடனிடம்‌,  “இங்க பாருங்க! இங்க மட்டும்‌ இல்லை, நீங்க எங்க போனாலும்‌ கொலஸ்ட்ராலை வாங்க முடியாது” என்றதற்கு, மூட‌ன்‌ உடனே சொன்னார்‌, “அப்ப ஏன்யா இந்த பாட்டிலில்‌ Cholestrol freeன்னு எழுதியிருக்கு…"

****

சோகமே உருவாக உட்கார்ந்திருந்த மூடனிடம்‌ அவருடைய நண்பர்‌ “ஏன்‌ சோகமாக இருக்கிறாய்”‌ எனக் கேட்டார்‌. அதற்கு மூட‌ன்‌, தாம்‌ பந்தயத்தில்‌ ரூ.800/- தோற்று விட்டதாகச் சொன்னார்‌. நண்பர்‌ “எப்படி 800 ரூபாயைத் தொலைத்தாய்‌” என்றதற்கு, மூட‌ன்‌ சொன்னார்‌ : “நேற்று நடந்த இந்திய-இலங்கை கிரிக்கெட்‌ மேட்சில்‌ இலங்கை ஜெயிக்கும்‌ என 400/- ரூபாய்‌ பந்தயம்‌ கட்டினேன்‌, ஆனால்‌ இலங்கை தோற்றுப் போய்‌ விட்டது” என்றார்‌. நண்பர்‌, “சரி! மீதி 400/-  ரூபாய் எப்படித் தொலைந்தது?” என்றதற்கு மூட‌ன்‌ சொன்னார்‌, “அன்றிரவு ஹை-லைட் போதும் பந்தயம்‌ கட்டினேனே!” என்றார்‌.
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

கடி சிரிப்புகள் - 01 Empty Re: கடி சிரிப்புகள் - 01

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum