ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில்

2 posters

Go down

உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில் Empty உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில்

Post by ayyasamy ram Sat Oct 14, 2023 12:53 pm

உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில் Image?url=https%3A%2F%2Fimages.hindustantimes.com%2Ftamil%2Fimg%2F2023%2F09%2F25%2F550x309%2Fakshardham_temple_US_new_jersey_1695618153933_1695621368064
--------
191 அடி உயர கோபுரம், 10,000 சிலைகள், 183 ஏக்கர் - அமெரிக்காவில்
உருவானது 2வது பெரிய இந்துக்கோயில்!
-
பாப்ஸ் சுவாமி நாராயண் அக்‌ஷர்தாம் கோயில் வளாகம்
183 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது நியூயார்க் நகரில் அமைந்துள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தைப்
போல நான்கு மடங்கு பெரியது.

உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில் என்னும் பெருமையை
உடையது கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கூர்வாட் விஷ்ணு
கோயில். சுமார் 402 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் பரந்து
விரிந்து காணப்படும்.

இரண்டாவது பெரிய இந்துக் கோயிலாக 156 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ள ஶ்ரீரங்கம் அரங்கநாதன் கோயில் திகழ்ந்தது. தற்போது
அந்தப் பெருமையை அமெரிக்காவில் அமைந்துள்ள நியூஜெர்சி
அக்‌ஷர்தாம் கோயில் தட்டிச் செல்கிறது. சுமார் 183 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயில் 'பாப்ஸ்' என்கிற ஆன்மிக
அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது.

பாப்ஸ் (BAPS) என்று அழைக்கப்படும் போச்சாசன்வாசி ஶ்ரீ அக்‌ஷர்
புருஷோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா என்கிற அமைப்பு
அமெரிக்காவில் ட்ரென்டன் மாநகரின் அருகில் மிகப்பெரிய கோயில்
ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

பாப்ஸ் சுவாமி நாராயண் அக்‌ஷர்தாம் கோயில் வளாகம் 183 ஏக்கர்
நிலப்பரப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது நியூயார்க்
நகரில் அமைந்துள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தைப்போல நான்கு மடங்கு
பெரியது. பளிங்குக் கற்கள் கொண்டு எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும்
இந்த ஆலயத்தில் 10 ஆயிரம் சிலைகள் உள்ளன.

இந்த வளாகத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.
இதன் கட்டுமானத்துக்காக உலகெங்கிலும் இருந்து 2 மில்லியன் கன அடி
உயர் ரகப் பளிங்குக் கற்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தியச் சிற்பிகள்
அவற்றைக் கலைநயத்துடன் சிற்பங்களாக தூண்களாக உருவாக்கி
இருக்கிறார்கள்.

இவற்றில் பிரதான கோயில் ஒன்றின் கோபுரம் 191 அடி உயரத்தில் கற்கள்
கொண்டே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயில் உருவாக்கத்தில் சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் கடந்த
12 ஆண்டுகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் கடின உழைப்பில்
உருவான இந்த ஆலயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் - 8) அன்று
தொடக்க விழா கண்டது.

இதையொட்டிப் பல சர்வதேசப் பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்தக் கோயில் வளாகத்தில் இந்துக்களின் சடங்குகள் மற்றும்
சம்பிரதாயங்கள் குறித்த ஆன்மிக அருங்காட்சியம் ஒன்றும் அமைக்கப்
பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் ஆன்மிகம் குறித்து அறிந்துகொள்ள
உதவும் பல அரங்குகள் இந்த வளாகத்தில் உள்ளன.
இது அமெரிக்க வாழும் இந்துக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்
என்கிறார்கள்.

இதுகுறித்துக் கோயில் நிர்வாகம் சார்பில் பேசும்போது, "இது சமகாலத்தில்
கட்டப்பட்ட இந்துக்கோயில்களில் மிகப்பெரியது. அமெரிக்க வாழ்
இந்துக்களுக்குப் பெருமை சேர்க்கும் மிக பிரமாண்டமான கட்டுமானம் இது"
என்கிறார்கள்.

சர்ச்சை

இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகளின் போது 2021-ம் ஆண்டு சில
பணியாளர்கள் அமெரிக்க நீதிமன்றத்தை நாடினர். கோயில் நிர்வாகம்
ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்குவதாகவும்
குறைந்தபட்ச சம்பள விதியைப் பின்பற்றாமலும் செயல்படுவதாகவும் புகார்
தெரிவித்தனர். இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் வளாகத்தில் சோதனை
நடத்தி வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் கோயில் வளாகம்
பக்தர்கள் பார்வைக்காக வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் திறக்கப்பட
உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நன்றி: இல.சைலபதி (விகடன்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில் Empty Re: உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில்

Post by Anthony raj Sun Oct 15, 2023 6:37 pm

உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில் என்னும் பெருமையை
உடையது கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கூர்வாட் விஷ்ணு
கோயில். சுமார் 402 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் பரந்து
விரிந்து காணப்படும்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 269
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum