புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய்கள் ஏன் மனிதர்களைக் கடிக்கின்றன? நாய்க்கடியை கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும்? Poll_c10நாய்கள் ஏன் மனிதர்களைக் கடிக்கின்றன? நாய்க்கடியை கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும்? Poll_m10நாய்கள் ஏன் மனிதர்களைக் கடிக்கின்றன? நாய்க்கடியை கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும்? Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
manikavi

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய்கள் ஏன் மனிதர்களைக் கடிக்கின்றன? நாய்க்கடியை கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 12:06 am

நாய்கள் ஏன் மனிதர்களைக் கடிக்கின்றன? நாய்க்கடியை கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும்? F10a4d0c44f27f51315a7fbcd15cd2f0361bd2dd-16x9-x0y163w5315h2990

சென்ற மாதம், உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத்தில் வசிக்கும் சபேஷ் என்ற 8-ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் பக்கத்து வீட்டுக்கு விளையாடச் சென்றான்.

சபேஷுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் விளையாடச் சென்ற இடத்தில் வழக்கம் போல ஒரு பொமரேனியன் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, அது சபேஷை காலில் கடித்துவிட்டது.

வீட்டில் சொன்னால் பெற்றோர் அடிப்பார்கள், திட்டுவார்கள் என்று பயம். அதனால் கொஞ்சம் மஞ்சள் பொடியை எடுத்து கடிபட்ட காயத்தில் வைத்துவிட்டு யாருக்கும் எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டார்.

ஒரு மாதம் கழித்து, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி சபேஷ் விநோதமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். அவர் சாப்பிட மறுத்துவிட்டார். மேலும் தண்ணீரைக் கண்டாலே அஞ்சி ஓடினார்.

என்ன நடந்தது என அவரது பெற்றோர் மிரட்டிக் கேட்டபோதுதான், ஒரு மாதத்துக்கு முன் நாய்க்கடிக்கு ஆளானதைச் சொல்லியிருக்கிறார். பின் அவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கின்றனர்.

ஆனாலும் பல நாட்கள் உயிருக்குப் போராடிய சிறுவன் சபேஷ், க்டைசியில் இறந்துவிட்டார்.

மூச்சிறைத்தபடி, தேம்பித் தேம்பி அழுதபடியே தாகத்தோடு உயிருக்குப் போராடிய சபேஷை, அவரது தந்தை மடியில் படுக்க வைத்தபடி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இச்சம்பவம், நாய்க்கடியையும் பாம்புக்கடி போல் ஆபத்தானதாகக் கருதி உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

பயங்கர தாகத்தால் அவதிப்படும் போதும்கூட ஒருவருக்குத் தண்ணீரைப் பார்த்தால் பயம் வருவது என்பது மிக மிகக் கொடுமையான விஷயம். எனவேதான் பரவக்கூடிய நோய்களிலேயே மிகவும் வலி மிகுந்த, அச்சமூட்டும் நோயாக ரேபீஸ் என்ற வெறிநாய்க்கடி நோய் பார்க்கப்படுகிறது.

நாய்கள் ஏன் மனிதர்களைக் கடிக்கின்றன?

நாய்கள் எப்போது, ஏன் மனிதர்களைக் கடிக்கின்றன? அவற்றின் நடத்தையில் ஏன் மாற்றம் வருகிறது? போன்றவற்றுக்கு விடை அறிய, கோவையைச் சேர்ந்த நாய்களுக்கான நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவியிடம் பிபிசி தமிழ் பேசியது.

ஒரு நாய் அச்சுறுத்தலுக்கு ஆளானாலோ, தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைத்தாலோ, அதிலிருந்த தன்னைக் காத்துக்கொள்ளக் கடிப்பதுதான் ஒரே வழி என முடிவெடுக்கலாம் எனவும், அந்தச் சூழலைச் சமாளிக்க அது வெறித்தனமாக மாறி தற்காத்துக் கொள்கிறது, எனவும் கூறுகிறார் ஸ்ரீதேவி.

“சில மனிதர்களும் கோபம் வந்தால், உணர்ச்சி வயப்பட்டால், சண்டை போட வேண்டும் என முடிவெடுத்தால் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள். ஒன்று கத்துவார்கள், இல்லாவிட்டால் அடிப்பார்கள். அதேபோல்தான் விலங்குகளும். முதலில் குரைக்கும். பின் கடிக்கும்,” என்கிறார் அவர்.

அதேபோல், நாய்களில் தெரு நாய், செல்லப் பிராணி என வித்தியாசம் இல்லை, அவை அனைத்தும் விலங்குகள்தான் என்கிறார் அவர்.

தெருநாய்களுக்கும் வளர்ப்பு நாய்களுக்கும் என்ன பிரச்னைகள் வரும்?

தெருநாய்களின் குணத்தைப் பற்றிப் பேசிய ஸ்ரீதேவி, அவற்றின் முக்கியமான குறிகோள், உயிர்வழ உணவு தேடுவது தான் என்கிறார். “அன்றைய நாளில் தானும் தனது குடும்பமும் பசியை வென்றால் போதும் என்று இருக்கும். அதற்காக அவை புத்திசாலித்தனமாகச் செயல்படும். தெரு நாய்களுக்குள் ஒரு கட்டமைப்பு இருக்கும். எல்லைகள் இருக்கும். அங்கு யாரேனும் வந்துவிட்டால், ஏதோ தனது சாம்ராஜ்யமே ஆபத்துக்கு ஆளானது போல் குரைக்கும். தன் கூட்டத்தைச் சேர்ந்த சக நாய்களையும் எச்சரிக்கும்,” என்கிறார் அவர்.

ஆனால் மனிதர்களால் வளர்க்கப்படும் நாய்களுக்கு, சரியான நேரத்தில் உணவு கிடைக்கும். ஆனாலும் அவற்றுக்கு உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பிரச்னைகள் இருக்கலாம்.

ஏதோ நடக்கப் போகிறது என்ற பய உணர்வு எதைப் பார்த்தாலும் அவற்றை எதிர்வினையாற்றச் செய்யும், என்கிறார் ஸ்ரீதேவி.

“வீட்டில் வளர்க்கும் நாய்களை நிறைய பேர் செல்லம் கொஞ்சுவார்கள். சில நேரம் அதன்மேல் கோபம் கொள்வார்கள். இது ஒரு நாயின் சமநிலையான மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத செயலாகக் கருதப்படும். அப்போது நாய்கள் மனிதர்கள் மீது நம்பிக்கையையும், மரியாதையும் இழந்துவிடும். ஒரு உறவில் இந்த இரண்டும் இழந்துவிட்டால் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,” என்கிறார் அவர்.

இதுதான் மனிதர்களுக்கும் – வளர்ப்பு நாய்களுக்கும் பிரச்னை எழ காரணம், என்கிறார் ஸ்ரீதேவி.

வளர்ப்பு நாய்கள் நம்பிக்கையிழந்ததை எப்படி அறிவது?

ஒரு மனிதரைத் தொந்தரவு செய்தால், முதலில் வேண்டாம் என எதிர்ப்பார். பின் குரலை உயர்த்திக் கத்துவார். திரும்ப தொந்தரவு செய்தால், கையை ஓங்குவார். ஏதேனும் பொருளை அந்நபர் மீது தூக்கி எறிவார். அதையும் மீறி தொடர்ந்தால், அடிப்பது தான் இதிலிருந்து விடுபட ஒரே வழி என நினைத்து அடிப்பார். அதுபோல்தான் நாய்களும்,” என்கிறார் ஸ்ரீதேவி.

மேலும் பேசிய அவர், என்ன மாதிரியான சூழலில் ஒரு நாய் அசௌகரியத்தை உணர்கிறது என்பதை அதன் உரிமையாளர் கவனித்து அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார். அதை மீண்டும் மீண்டும் அதே சூழலுக்கு உட்படுத்தும்போது, வெறித்தனமாக நடந்து கொண்டால் மட்டும்தான் மனிதர்கள் கேட்பார்கள் என அந்த நாய் நினைத்துக் கொள்ளலாம். அப்போது அது குரைக்கலாம், பிரண்டலாம், கடித்துக் கூட தன்னை அந்தச் சூழலில் இருந்து விடுவித்துக் கொள்ளலாம், என்கிறார் அவர்.

“பெரும்பாலும் நாய்களைப் புரிந்து கொள்ளாமல், அந்த நாய் கடிக்கிறது என்று அதை எங்கேனும் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அது இன்னும் மனிதர்கள் மீதான நம்பிக்கையை அந்த நாய்க்கு இழக்கச் செய்து, அது பிறரையும் கடிக்கும் சூழல் உருவாகக் கூடும்,” என்றார், ஸ்ரீதேவி.

ஒரு முறை கடித்த நாய் அந்த உரிமையாளர் மீதோ அல்லது ஒட்டுமொத்த மனிதர்கள் மீதோ நம்பிக்கை இழந்துவிடும். அதை மீட்டமைப்பது சிரமம், என்கிறார்.

நாய்களிலும் ‘இன்ட்ரோவர்ட்’, ‘எக்ஸ்ட்ராவர்ட்’

மனிதர்களைப் போலவே நாய்களுக்கும் இன்ட்ரோவர்ட், எக்ஸ்ட்ராவர்ட் குணங்கள் உள்ளன. எக்ஸ்ட்ராவெர்ட் ஆக இருந்தால் அந்த நாய் சகஜமாக பழகும். ஆனால், அதுவே பயம் கொண்ட இன்ட்ராவெர்ட் ஆக இருந்தால், அது கடித்துவிடும் வாய்ப்பு அதிகம் என விளக்கினார் நடத்தையியல் நிபுணர்.

“என்னதான் மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் விலங்குகள் அப்படி அல்ல. ஓநாய்களின் பரிணாம வளர்ச்சிதான் நாய்களுக்கு இருக்கிறது எனச் சொல்லக் கேள்வியுற்றிருப்போம். நாய்களும் மனிதர்கள் வளர்க்க ஆரம்பிக்கும் முன்பு வரை காட்டு விலங்குகளாகவே இருந்தன. எனவே அந்த மிருகத்தின் மரபணு இன்றளவும் அதனுள் இருக்கும்,” என்று கூறுகிறார் ஸ்ரீதேவி.

பிற விலங்குகளைப் போல் காட்டில் இருந்தபோது நாய்களும் கூட்டமாக வேட்டையாடி வந்ததாகக் கூறினார் அவர்.

அவர் நாய்களின் குணங்களை மூன்று வகையாகச் சொல்கிறார்:

முன் வரிசை நாய்கள் கூட்டத்தை வழிநடத்தும் திறன் பெற்றிருக்கும், சுதந்திரமாக செயல்படும், சவால்களைக் கண்டு பயப்படாது, துணிந்து நிற்கும். இவை எக்ஸ்ட்ரோவர்ட் நாய்கள்.

நடுவரிசையில் வரும் நாய்களுக்கு கூட்டத்தில் இருந்து தானும் பிரிந்து, தனக்குப் பின்னால் வருபவற்றின் வழியையும் மாற்றிவிடாதிருக்க சமநிலையான மனதுடன் சேர்ந்து செல்ல வேண்டும் என்ற பொறுப்பு இருக்கும். அவை எத்தனை அன்புத் தொல்லைகள் கொடுத்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விளையாடும்.

கடைசி வரிசையில் வரும் நாய்கள் தங்களுக்குப் பின்னால் வரும் நுண்ணிய சத்தங்களைக் கூட கவனித்து உடனடியாக தாக்கிவிடத் தயாராக இருக்கும். உணர்ச்சி மிக்கதாக இருக்கும். அது எப்போதும் விழிப்போடு இருக்கும் என்பதால் அது எளிதில் பிறரைத் தாக்கிவிடும். இந்த ரக நாய்கள் இன்ட்ரோவர்ட் பண்புடன் இருக்கும்.

“என்னதான் ஒரு நாயை நாம் செல்லப் பிராணியாக வளர்த்தாலும் அது ஒரு விலங்கு என்பதால் அதன் அடிப்படை குணம் அப்படியேதான் இருக்கும். அது எப்போது தூண்டப்படுகிறது என்பதைப் பொறுத்தே நமக்கான ஆபத்து வெளிப்படும்,” என்கிறார்.

‘வளர்ப்பு நாய் கடித்தால் உரிமையாளரே பொறுப்பு’

வளர்ப்பு நாய்களின் குணாதிசய வேறுபாடுகளைக் கவனிக்கத் தவறும் போதும், தடுப்பூசி போடாதபோதும், அதன் செயல்களுக்கு அதன் உரிமையளரே பொறுப்பாகிறார், என்கிறார் ஸ்ரீதேவி.

“வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்துச் செல்லும் போது, பிற ரேபீஸ் பாதித்த நாய்களின் எச்சில் பட்டாலும், கடி பட்டாலும் அந்த நாயும் ரேபீஸ் நோயால் பாதிக்கப்படக்கூடும். எனவே தடுப்பூசி போட்டிருந்தால் அதன் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் ரேபீஸ் பாதிப்பு வளர்ப்பு நாய்க்குத் தவிர்க்கப்படும். அதன் மூலம் பிறருக்கும் ரேபீஸ் தொற்று பரவாமல் தடுக்கப்படும்,” என்கிறார் ஸ்ரீதேவி.

மேலும், வீட்டில் சரியாக நாய்களுக்கு ஊசி போட்டு பராமரிக்காவிட்டாலோ, அல்லது அரசாங்கம் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத் தவறினாலோ, நாய்களின் எண்ணிக்கை பெருகப் பெருக ரேபீஸ் நோய் தாக்கும் அபாயமும் அதிகரிக்கும், என்று கூறுகிறார்.

அவர் மேலும், நாய்களின் உடல்மொழியை வைத்து அவை என்ன மனநிலையில் இருக்கின்றன என்பதை விளக்கினார்.

நாய் சாதாரண மனநிலையில் எப்படி நடந்துகொள்ளும்?

கொட்டாவி விடும், கண் இமைக்கும், தனது மூக்கை நாக்கால் துடைக்கும்.

கோபம் வந்தால் தலையைத் திருப்பிக்கொண்டு செல்லும்.

உடலைத் திருப்பிக் கொள்ளும்.

தரையில் அமர்ந்தபடி, தனது காலை நாக்கால் நக்கும்.

அருகில் சென்றால் விலகிச் செல்லும்.

நாயின் நடுத்தர மனநிலையின் அறிகுறிகள்

உடலை வளைத்து காதை பின்னால் நீட்டியிருக்கும்.

நின்றபடி, பின்னுடலை உயர்த்தி வளைத்து முன் உடலை குனிந்து நீட்டி, வாலை பின்பக்கமாக உள்ளடக்கி ஒளித்துக் கொள்ளும்.

மல்லாந்து படுத்தபடி காலைத் தூக்கிக் கொண்டிருக்கும்.

அபாயத்திற்கான அறிகுறிகள்

முறைத்தபடியே நின்று உற்றுப் பார்க்கும்.

பற்களை கோரமாகக் காட்டி உறுமும்.

சத்தமாகக் குரைக்கும்.

பாய்ந்து வந்து கடிக்கும்.

நாய்கள் மனிதர்களை ஏன் துரத்துகின்றன?

பல முறை துரத்தி துரத்தி கல்லால் அடித்த நபரை ஒருமுறை எதிர்த்து துரத்தினால் அவர் பயந்து ஓடி விடுகிறார் என ஒரு தெரு நாய் நினைக்கலாம். எனவே அதன் பாதுகாப்பு கருவி தன் மீதான பயம். எனவே, மனிதர்களை விரட்டினால்தான் நாம் பிழைக்க முடியும் என்ற மனப்பாங்கு வருவதால்தான் நாய்கள் பலரைத் துரத்துகின்றன, என்கிறார் ஸ்ரீதேவி.

நாய் நம்மைக் கடிக்க வந்தால் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது?

செய்ய வேண்டியவை:

நாய் கடிக்க வந்தால் கையில் கிடைத்த பொருட்களை வைத்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

நாய் உங்களது அந்தரங்கப் பகுதி அருகே வந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்யக் கூடாதவை:

கத்தக் கூடாது. கத்தினால் மனிதர்களுக்கு எப்படி பிடிக்காதோ, அதேமாதிரிதான் நாய்களுக்கு அது வெறியைத் தூண்டும்.

பயப்படாதது போல் நடிக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக நிற்க வேண்டும். ஏனெனில் பயந்துவிட்டால், உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது.

நாய் கடிக்கும்போது அதை அடிப்பது, உதைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டால் அது மிகவும் கோபமடையும். அதனால் பல் ஆழமாகப் பதியும். ரேபீஸ் கிருமித் தொற்றும் உடலில் ஆழமாக இறங்கும்.

நாய்களுடன் எப்படிப் பழக வேண்டும், பழகக் கூடாது?

பழகும் முறை:

நாய் வளர்ப்பவர்களில் வீட்டுக்குச் சென்றால், அந்த நாய் கடிக்குமா? என முதலில் உரிமையாளரிடம் கேட்க வேண்டும்.

உங்களிடம் பழகலாமா? வேண்டாமா? என்பதை நாய்தான் முடிவு செய்யும். அது வாலை ஆட்டிக் கொண்டு உங்களிடம் வரவேண்டும். உங்களை முகர்ந்து பார்க்கும். உங்கள் அருகில் வந்து அமர்ந்து கொள்ளும். இந்த அறிகுறிகள் தெரிந்தால்தான், அதனுடன் நீங்கள் பழகத் துணியலாம் என்கிறார் நாய்களின் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி.

செய்யக் கூடாதவை:

முன் பின் தெரியாத நபரை திடீரென சென்று கட்டியணைத்தால் அவர் தள்ளிவிடுவார். அடிப்பார். அதுபோல்தான் நாய்களையும் பாவிக்க வேண்டும். உங்களுக்கு நாய்கள் பிடிக்கலாம். அதற்காக, “How Cute!" எனக் கூறி அதன் அனுமதியின்றி தொடக்கூடாது. தூக்கக் கூடாது. அணைப்பதோ, முத்தம் கொடுப்பதோ, கை குலுக்க கைநீட்டுவதோ கூடாது.

நாய்க்கடி எவ்வளவு ஆபத்தானது?

ஒருவேளை நாய் நம்மைக் கடித்துவிட்டால் என்ன ஆகும் என்ற கேள்வி நமக்கு எழலாம்.

அதுபற்றி விளக்கினார் பொதுநல மருத்துவர் அமலோற்பவநாதன்.

ரேபீஸ் பாதித்த நாய் நம்மைக் கடித்தால் ரேபீஸ் வைரஸ், உடல் ரத்த ஓட்டத்தில் கலந்து நரம்புகளின் வழியே மூளையை அடைந்து பின் உயிரைப் பறிக்கும், என்கிறார் அவர்.

“ஒருமுறை இந்த வைரஸ் சென்று நரம்பில் ஒட்டிக் கொண்டால், அதை வெளியே எடுப்பதற்கான மருந்து இதுவரை இல்லை. ரேபீஸ் தொற்றுநோய் மனிதனுக்கு ஏற்பட்டால், குணமாகுவது மிகவும் கடினம்,” என்றார் அவர்.

நாய்கள், வௌவால்கள், பூனைகள், எலிகள் உள்ளிட்டவையும், காட்டில் வாழும் நரிகள் மூலமும் ரேபீஸ் பரவலாம். ஆனால், 97% நாய்கள்தான் இதை அதிகம் பரப்புகின்றன என்கிறார் அவர்.

ரேபீஸ் வந்த நாய்களை எப்படிக் கண்டறிவது?

ஒன்று மிக அமைதியாக இருக்கும். அல்லது மிக ஆக்ரோஷமாக இருக்கும், என்கிறார் அமலோற்பவநாதன்.

எனவே திடீரென ஒரு நாயின் நடத்தையில் மாறுபாடு தென்பட்டாலே அந்த நாயிடம் போகக் கூடாது என்கிறார் அவர்.

“ரேபீஸ் பாதித்த நாயை உரிய பாதுகாப்போடும், நாய் பிடிப்பவர்களின் உதவியோடும் வாய்க்கு கவசம் அணிவித்து கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்,” என்கிறார் அவர்.

எனவேதான் நாய் வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டால், முதலில் பரிசோதனை மூலம் அந்த நாய்க்கு ரேபீஸ் இருக்கிறதா என்று அதன் எச்சிலைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். பின்பு ஆண்டு தோறும் சரியாக அதே நாளில் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். ஒரு முறை போட்டுவிட்டோம் என விட்டுவிடக்கூடாது,” எனக் கூறினார்.

தடுப்பூசி போட்ட வீட்டு நாயாக இருந்தாலுமே அது கடித்து, அதன் பல் தோலைக் கிழித்து பதிந்துவிட்டால் மனிதர்களும் தடுப்பூசி போட வேண்டும், என்கிறார் அமலோற்பவநாதன்.

‘நாய்க்கடியையும் பாம்புக்கடி போல கருதவேண்டும்’

நாய்க்கடியின் அபாயத்தைப் பற்றி மேலும் பேசிய மருத்துவர் அமலோற்பவநாதன், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, தெருவில் போகும் போது தெரியாத நாய்களிடம் விளையாடக் கூடாது, குட்டியாக இருந்தாலும் தூக்கக் கூடாது என எச்சரிக்கவும், அதன் விளைவுகளையும் சொல்லித்தர வேண்டும், என்றார். “ஒரு வேளை நாய், பூனை கடித்துவிட்டாலோ, பிரண்டிவிட்டாலோ அம்மா-அப்பா திட்டுவார்கள் எனக் கருதி குழந்தைகள் அதை மறைக்கக் கூடாது என கண்டிப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என்கிறார்.

நாய் கடித்தால் அதை பாம்புக்கடி போன்றே ஆபத்தானதாகக் கருத வேண்டும் என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

“நாய் கடித்தவுடன் உடனடியாக சோப்பு போட்டுக் கழுவிவிட்டு, அடுத்த சில மணி நேரங்களுக்குள் தடுப்பூசி போட்டுவிட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதற்கான ஊசி இருக்கும். வெறிபிடித்தநாய்தான் கடித்தது என்றால் பெரிய மருத்துவமனைகளில் இம்யூனோகுளோபின் போட்டுக் கொள்ள வேண்டும். எனவேதான் பாம்பு கடித்தால் உடனடியாக சிகிச்சை பெறுவதுபோல கருதி நாய்க்கடிக்கும் சிகிச்சை பெற வேண்டும். பாம்பு விஷம் உடனே கொல்லும். ரேபீஸ் வைரஸ் மெல்லக் கொல்லும். ஆனால் இரண்டுமே கொல்லக்கூடியது,” என்கிறார் அவர்.

நாய்கடித்தால் அதற்குத் தேவையான அனைத்து தடுப்பூசிகளும் போட வேண்டும். ஒரு ஊசி போட்டுவிட்டோம், மூன்று ஊசிகள் போட்டுவிட்டோம், இன்று வேலை இருக்கிறது, நாளை பார்த்துக் கொள்ளலாம் என எக்காரணம் கொண்டும் தள்ளிப் போடக்கூடாது என்றும் மருத்துவர் அமலோற்பவநாதன் கூறுகிறார். இரவாக இருந்தாலும் என்ன வேலை இருந்தாலும் கடித்த உடன் தாமதிக்காமல் ஊசி போடவேண்டியது மிகமிக முக்கியம், என்கிறார் மருத்துவர்.

ரேபீஸ் பாதித்தவரை எப்படிக் கையாள வேண்டும்?

இதுபற்றிப் பேசிய மருத்துவர் அமலோற்பவநாதன், மனிதர்களுக்கு ரேபீஸ் பாதித்தால் அவர்களை நீங்களாகவே கையாளக் கூடாது, என்கிறார்.

“அவர்களின் எச்சிலில் ரேபீஸ் கிருமி இருக்கும். அவர்களை சங்கிலி போட்டு கட்டி வைப்பது, அடிப்பது எனத் தவறான முறையில் கையாளாமல் மருத்துவமனைக்கு அழைத்து, அங்கிருந்து ஆட்களை வரவழைத்துத்தான் கூட்டிச் செல்ல வேண்டும். நரம்பு மண்டலத்தில் வைரஸ் பாதித்திருப்பதால் தண்ணீர் குடிக்கும்போது புறையேறி இருமலாக வரும். தண்ணீர் மீது வெறுப்பும் பயமும் வரும். இந்த ஹைட்ரோஃபோபியா வந்துவிட்டால், உயிர் பிழைப்பது கடினம்,” எனக் குறிப்பிட்டார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

எனவே, நாய்களை வளர்ப்போரும், அதனோடு பழக முயல்வோரும் மிகவும் பொறுப்போடு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ரேபீஸ் வைரஸ் உடலில் புகுந்து 7 – 15 நாட்கள் முதல் இந்த அறிகுறி தென்படலாம். கடியின் ஆழம், நாயின் எச்சில் ரத்தத்தில் கலங்கியதன் அளவு குறித்து ஒரு மாதம் கழித்து கூட ஹைட்ரோஃபோபியா வரலாம். கடிபட்ட இடம் மூளையில் இருந்து தொலைவாக அதாவது கால் போன்ற இடத்தில் இருந்தால், வைரஸ் மூளையைத் தாக்கும் காலம் வேறுபடலாம் எனவும் மருத்துவர் அமலோற்பவநாதன் கூறுகிறார்.

இந்த வழிகளிலும் ரேபீஸ் வரலாம்

இந்திய அரசின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து ரேபீஸ் நோய்த் தடுப்பு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் நாய் மட்டுமல்ல, பூனை பிரண்டினாலும் கூட ரேபீஸ் பரவலாம் என எச்சரித்துள்ளது.

சிறிய காயம் உள்ள தோல் கொண்ட கைகளால் நாய்களுக்கு உணவளித்தாலும், நாய்கள் முகத்தில் நக்கி விளையாடும் போது அந்த எச்சிலில் உள்ள வைரஸ் காயம் பாதித்த தோல் மீது பட்டாலும், வைரஸ் உடலுக்குள் செல்லும். உதாரணத்துக்கு ஷேவிங்கால் ஏற்பட்ட காயம் கூட வைரஸ் உடலில் புக வழிவகுக்கலாம்.

நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

செய்ய வேண்டியவை:

நாய் பிரண்டினாலோ, கடித்தாலோ அந்த இடத்தில் ஓடும் நீரில் 15 நிமிடங்கள் வரை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். இது காயத்தில் இருந்து வைரஸை நீக்க வழிவகுக்கும்.

கடிபட்ட இடத்தில் கிருமி நாசினி பூச வேண்டும். இது ரசாயனம் மூலம் ரேபீஸ் வைரசை செயல் இழக்கச் செய்யும்.

காயத்தைச் சுற்றிலும், அதன் ஆழம் வரையிலும் இம்யூனோகுளோபின் ஊசி போட வேண்டும். இது அந்த வைரசை அழிக்க உதவும்.

நாய்க்கு என்ன ஆனது என 10 நாட்களாவது கண்காணிக்க வேண்டும். ரேபீஸ் பாதித்த நாயாக இருந்தால் 10 நாட்களில் இறந்துவிடும்.

0, 3, 7 மற்றும் 21 அல்லது 28 ஆகிய நாட்களில் தடுப்பூசிகளைத் தொடர்ந்து போட வேண்டும்.

கர்ப்பிணிகளை நாய்கடித்தால் உடனடியாக ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். தவறினால், கருவில் உள்ள குழந்தைக்கும் ரேபீஸ் பாதித்துவிடும்.

செய்யக் கூடாதவை:

காயத்தை வெறும் கைகளால் தொடக்கூடாது.

காயத்தின் மீது மண்ணை வைக்கக் கூடாது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போடக்கூடாது.

தேங்காய் எண்ணெய் வைக்கக் கூடாது, மூலிகைகள், சாக்பீஸ், வெற்றிலை வைக்கக் கூடாது.

காயம் பட்ட இடத்தில் எரிச்சல் இருந்தால், அந்த வைரஸ் எளிதில் நரம்புக்குள் நுழைய வழிவகுத்துவிடும்.

காயத்துக்குக் கட்டு போடவோ, தையல் போடவோ கூடாது.

யார் யாருக்கு தடுப்பூசி செயல்படாமல் போகலாம்?

ஹெச்ஐவி/எய்ட்ஸால் பாதித்த நபர், அதிக நாட்கள் ஸ்டீராய்ட் எடுத்துக் கொண்ட நபர், கேன்சருக்கு எதிரான மருந்து சாப்பிடுவோருக்கு ரேபீஸ் தாக்கப்பட்டால் அவர்களுக்கு தடுப்பூசி முழுமையாக வேலை செய்யாமல் போகலாம், என்று மருத்துவர் அமலோற்பவநாதன் கூறுகிறார்.

பிபிசி

நாய்கள் ஏன் மனிதர்களைக் கடிக்கின்றன? நாய்க்கடியை கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1664
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Sat Oct 07, 2023 9:27 am

நாய்களின் வகைகள் மற்றும் அவை மனிதர்களைக் கடிப்பதற்கான காரணங்களையும் கடித்துவிட்டால் மேற்கொள்ளவேண்டிய சிகிச்சை முறைகளையும் கட்டுரை விரிவாக விளக்கியது!
.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக