ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!

3 posters

Go down

'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Empty 'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!

Post by ayyasamy ram Fri Oct 13, 2023 11:59 am

'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Vikatan%2F2019-05%2F62cdae0d-2622-4c7d-94da-3857665c7cc2%2F111394_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1

ஒரு பெண்ணுக்கு வளையல் காப்பு நிகழ்ச்சி நடந்தது.
வளையல் போட்டு வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆசி வழங்கும்
பேரில் கணிசமான கூட்டம் அங்கே கூடியிருந்தது. எல்லாரும் அந்தப்
பெண்ணுக்கு வளையலை அணிந்துவிட்டு, வாயில் சர்க்கரையையும்
அள்ளிப் போட்டு விட்டு சொன்ன செய்தி சர்க்கரையைக் கூட
கசப்பாய் மாற்றிவிட்டது.

"இந்தா பாருமா! சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளையைப்
பெற்றுத்தரணும்!" ஏற்கெனவே அந்தப் பெண்ணின் கணவன்
"ஆண் பிள்ளை பிறந்தால்தான் என் வீட்டுக்கு வர வேண்டும் இல்லை
எனில், உன் அப்பா வீட்டோடவே இருந்து விடு!" என்று சொன்ன
வார்த்தைகள் அவளுக்குள் ஒரு பிரளயத்தை நடத்திக் கொண்டிருக்க
வந்தவர்கள் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சினார்கள்.

இந்த வார்த்தைகளைச் சொல்லிப் போனவர்கள் எல்லாம் ஊர்ப்பக்கம்
'கட்டுகளத்திகள்' என்று மரியதையோடு அழைக்கப்படும் வயதில்
முதிர்ந்த பெண்கள்! இது ஏதோ பெண்ணடிமை காலத்தில்
சொல்லப்பட்ட வார்த்தைகளும் அல்ல. நாகரிகம் மிகுந்த இந்தக்
காலத்திலும் ஒவ்வொரு பெண்ணிடமும் சொல்லப்படும் வலி மிகுந்த
வார்த்தைகள்.

குழந்தை பெறுவது ஆண் பெண் இருபாலரும் சம்பந்தப்பட்ட ஒரு
விஷயம் ! இதில் பெண்ணை மட்டும் சாடுவதும் அதுவும் பெண் குழந்தை
வேண்டாம், ஆண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று வேண்டுவதும்
எவ்வளவு பெரிய அறியாமை!

பொதுவாக, பெண்ணியம் பேசுபவர்கள் முன் வைக்கும் கருத்து
ஆண்களால்தாம் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்று!
ஆனால், இன்று பல பெண்கள் தாங்கள் அடிமையாய் இருப்பதுதாம்
தங்களின் கற்புக்கும், வாழ்க்கைக்கும் பாதுகாப்பு என்ற நினைப்பதுதான்
அவர்களை இன்னும் அடிமையாய் வைத்திருக்கிறது.

தங்களின் மீதான அடக்குமுறையையே இத்தனை யுகங்கள் அடிமையாய்
இருந்தும் பெரும்பாலான பெண்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.
இந்தச் சமூகமும், அவளைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அவளை,
அடிமைத் தளையைப் பூண்டு கொள்வதுதான் பெண்ணின் பிறவிப் பயன்
என்னும் மடமையைப் போதித்துக்கொண்டிருக்கிறது.

எப்பொழுது ஒரு பெண் பூப்படைகிறாளோ அன்றிலிருந்து அவளுக்குப்
படிப்பிக்கப்படும் வாழ்க்கை பாடம் என்ன தெரியுமா! திருமணம் செய்து
வைக்கப்படும் இடம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்களை
நீ சகித்துக்கொள்ள வேண்டும். கணவன் எப்படி இருந்தாலும் அங்குதான்
உன் வாழ்க்கை!

ஒரு வேளை நீ வாழாவெட்டியாகத் திரும்பி வந்தால் இந்தச் சமூகம் எங்கள்
வளர்ப்பைத்தான் குறை சொல்லும். இப்படியான படிப்பினைகளை
நேரடியாகச் சொல்லாவிட்டாலும் நீட்டி முழக்கி ஒவ்வொரு நாளும் அந்தப்
பெண்ணுக்குச் சொல்லிப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

அவளின் அம்மாவும் தன் அடிமை வாழ்க்கை மூலம் தன் மகளுக்கு
எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டும் அதே
சமயத்தில் அந்தக் குடும்பத்தின் தலைவராக இருக்கும் அப்பாவும் தன் ஆண்
பிள்ளைக்கு எப்படிப்பட்ட ஆணாதிக்கத்தைப் பெண்கள்மீது செலுத்த
வேண்டும் என்பதை தன் மனைவியை அடக்கி ஆள்வதன் மூலம் காட்டுகிறார்.

காலம் காலமாய் ஆண் பெண் வேறுபாட்டையும், பெண்ணடிமையையும்,
ஆணாதிக்கத்தையும் இன்றுவரை நிலைக்கச் செய்வது இந்த
போதனைகள்தாம். இதனை படிப்பு கொடுத்து மாற்றி விடலாம் என்று
பலபேர் நினைத்தனர். இன்று எத்தனையோ பெண்கள் படித்துவிட்டார்கள்.
வேலைக்குப் போகிறார்கள். ஆண் பெண் பாலின விகிதம் எவ்வளவோ
உயர்ந்திருக்கிறது. ஆனால், மாற்றத்தின் வேகம் திருப்தியாக இல்லையே!

மொத்தமாக எந்த ஒரு பெண்ணையும் இந்தச் சமூகம் அவளின் பிறப்பு
முதல் இறப்பு வரை அவளுக்கான வாழ்க்கையை வாழவிடுவதே இல்லை.
ஒருவேளை இதையெல்லாம் ஏன் என்று ஒருத்தி பகுத்தறிவுடன் கேள்வி
கேட்டால் அவளை திமிர் பிடித்தவள் ! வீட்டுக்கு அடங்காதவள் ! என்று
முத்திரை குத்த தயங்காத சமுகத்தில் தானே நாம் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.

இன்று பெண்ணடிமை வாதம் மாறிவிட்டது என்று யாராவது சொல்ல
முன்வந்தால் அவர்கள் கடைக்கோடி கிராமங்களை இன்னும் முழுமையாய்
படிக்கவில்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.

பெண்களுக்கு வெறும் பாலியல் கொடுமை மட்டும் பிரச்னையல்ல
உடலளவிலும் மனதளவிலும் இந்தச் சமூகம் நிதம் நிதம் ஏற்படுத்தும்
வலிகள் அதிகம்! ஆனால், அதையும் அமைதியோடு ஏற்பதே பெருமை
என்று போராடிக்கொண்டிருக்கிறது இந்தப் பெண் சமூகமும்!

இதிலிருந்து எல்லாம் வெளியே வர ஒரே வழி பெண்களே தங்களின்
பிரச்னையைப் புரிந்துகொண்டு சமூகம் என்ன நினைக்குமோ? என்று
பயந்து ஒடுங்கக் கூடாது. அதைவிட மிக முக்கியமானது பெண் என்பதில்
பெருமைகொள்ள வேண்டும்.

அந்த மனநிலைதான் பெண்ணியத்தின் முதல் படி.
இந்த வேலை பெண்ணான என்னாலும் செய்ய முடியும், தனக்குப் பெண்
குழந்தை பிறப்பதில் பெருமை, பெண் குழந்தை எனப் பேதம் பார்க்க
மாட்டேன் என்கிற மன உறுதிகளைப் பெற வேண்டும்.

இவ்வாறு நினைக்கும் சகப் பெண்களை மதித்து, அவர்களோடு இணைந்து
பணியாற்ற வேண்டும். அப்போதே சமூகத்தில் மாற்றத்தை எதிர்பார்க்க
முடியும்.
-
நன்றி-இர.ஏஞ்சலின் ரெனிட்டா (விகடன்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Empty Re: 'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!

Post by T.N.Balasubramanian Fri Oct 13, 2023 9:05 pm

ஒரு பெண் கர்பம் ஆவதற்கு எப்பிடி ஆன் முக்கியமோ
அதே போல் பிறக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ
அதுவும் ஆணின் விந்தணுக்களின் தன்மை பொறுத்தே.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Empty Re: 'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!

Post by Anthony raj Sun Oct 15, 2023 6:41 pm

அறியாமை என்ற இருள்.

Print out கடவுள் தான் உரிமையாளர்  சோகம்
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Empty Re: 'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!

Post by Anthony raj Sun Oct 15, 2023 6:46 pm

மொத்தமாக எந்த ஒரு பெண்ணையும் இந்தச் சமூகம் அவளின் பிறப்பு
முதல் இறப்பு வரை அவளுக்கான வாழ்க்கையை வாழவிடுவதே இல்லை.
ஒருவேளை இதையெல்லாம் ஏன் என்று ஒருத்தி பகுத்தறிவுடன் கேள்வி
கேட்டால் அவளை திமிர் பிடித்தவள் ! வீட்டுக்கு அடங்காதவள் ! என்று
முத்திரை குத்த தயங்காத சமுகத்தில் தானே நாம் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.

பெண் அல்லது ஆண் இருவரும் இப்படி பட்ட பிரச்சனை வருவது வழக்கம். சமுதாய சிந்தனை அறிவு கல்வி அன்பு பொது நல சிந்தனை இப்படி பல காரணங்கள்  'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  1757813334
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!  Empty Re: 'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...
» ஏழை வீட்டுப் பெண் மருமகளாக வந்ததில் பெருமை: நடிகர் வடிவேலு
» தமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.
» யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம்
» போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum