ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல்

Page 2 of 2 Previous  1, 2

Go down

20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 Empty 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல்

Post by சிவா Sat Oct 07, 2023 8:28 pm

First topic message reminder :


20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 8ee4560f57

Palestinian armed forces fired 5,000 rockets in 20 minutes


இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது.

ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரெல் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தற்போது தலைமறைவாக உள்ளனர்.

காஸா பகுதியில் உள்ள இலக்குகளை ஹமாஸ் ஆயுதக் குழு தாக்கி வருவதாகவும் அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை மதிப்பிட்டு வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. இதனால் நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை அறிவிக்கும் விதமாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.

இந்தத் தாக்குதலின்போது ஒருவர் கொல்லப்பட்டதுடன், டெல் அவிவ் மற்றும் காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அதன் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தும் பிரிவு 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவியதாக அறிவித்துள்ளது.

"காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது இஸ்ரேலிய ராக்கெட்டுகள் இலக்கு வைக்கப்பட்டன" என்றும் ஆயுதக் குழுவினர் "வெவ்வேறு இடங்களில்" இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேலின் பாதுகாப்புப் படை (IDF) கூறியுள்ளது.

இஸ்ரேலிய பொது ஊழியர்களின் தலைவர் "சூழ்நிலை மதிப்பீட்டை" நடத்தி வருவதாகவும், "இந்த நிகழ்வுகளுக்கான விளைவுகளையும் பொறுப்பையும் ஹமாஸ் எதிர்கொள்ளும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அதே நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் "தற்காலிக முகாம்களுக்கு அருகிலேயே இருக்க" அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

ஒருவர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலின் மேகன் டேவிட் ஆடோம் மீட்பு நிறுவனம் கூறியுள்ளது.

அஷ்கெலோன் நகரில் தீயை அணைக்கும் பணியில் இஸ்ரேலிய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காட்சிகள் காட்டுகின்றன. அதில் வாகனங்கள் எரிந்து கரும்புகை வெளியேறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக பாதுகாப்புத் துறையின் முக்கிய அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் "அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள்" ஊடுருவியுள்ளதாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேலின் தற்காப்புப் படைக் குழுவின் ஆரம்ப அறிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை "நாடு முழுவதும் உள்ள இஸ்ரேலியர்கள் - ஷபாத் மற்றும் சிம்சாட் தோராவின் விடுமுறை நாளில் சைரன்கள் ஒலிப்பதையும், ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் வீசும் சத்தத்தையும் கேட்டுக் கண் விழித்தனர். நம்மை நாமே காத்துக் கொள்வோம்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் வீசப்பட்டன: ஹமாஸ் அறிவிப்பு


இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைவரான முகமது டெய்ஃப், "ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம்" என்ற பெயரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலைத் தொடங்க சனிக்கிழமை அதிகாலை 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவப்பட்டதாகவும் கூறினார்.

"இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொறுத்தது போதும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று டெய்ஃப் கூறினார்.

“நாங்கள் ஏற்கெனவே எதிரியை எச்சரித்துள்ளோம். இஸ்ரேலிய ராணுவம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான படுகொலைகளை அரங்கேற்றியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக நேர்ந்த குற்றங்களால் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான தியாகிகள் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்."

"ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்மின் தொடக்கத்தை நாங்கள் அறிவிக்கிறோம். மேலும் எதிரிகளின் ராணுவ நிலைகள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ கோட்டைகளைக் குறிவைத்த முதல் தாக்குதலில் 5,000 ஏவுகணைகள் மற்றும் ஷெல்களை கொண்டு நாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளோம்."


"போருக்குத் தயார்நிலை" பிரகடனத்தை வெளியிட்ட இஸ்ரேல்


ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "போருக்கான தயார் நிலை" பிரகடனம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்களை அழைக்க பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது என்பதுடன் ஹமாஸ் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, தொடக்கத்தில் 5,000 ராக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு, மேலும் இரண்டாயிரம் ராக்கெட்டுகளை ஏவியதாக ஹமாஸ் தொலைக்காட்சி சேனல் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்த காட்சிகள் நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஹமாஸ் ஆயுதக் குழு மிக மோசமான தவற்றைச் செய்துள்ளது என இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

யோவ் காலன்ட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இன்று காலையில் மிக மோசமான செயலைச் செய்துள்ளனர். இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான ஒரு போரைத் தொடங்கியுள்ளது," எனத் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகள் இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது என்றும், இந்தப் போரில் இஸ்ரேல் ராணுவம் விரைவில் வெற்றிக்கொடி நாட்டும் என்றும் கூறியுள்ளார்.

ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் இந்த திடீர் தாக்குதலில் காயமடைந்த மற்றும் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிபிசி


20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 Empty Re: 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல்

Post by சிவா Sun Oct 08, 2023 4:28 am

காசாவை விட்டு இஸ்ரேல் வெளியேறிய பிறகு நடந்த மோதல்கள்


ஆகஸ்ட் 2005 - மத்திய கிழக்குப் போரில் எகிப்திடம் இருந்து காசாவைக் கைப்பற்றிய 38 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலியப் படைகள், அனைத்தையும் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு காசாவிலிருந்து வெளியேறின.

ஜன. 25, 2006 - பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை இடங்களை வென்றது. ஆயுத போராட்டத்தை கைவிடவும், இஸ்ரேலை அங்கீகரிக்கவும் ஹமாஸ் மறுத்ததால் பாலஸ்தீனர்களுக்கான உதவிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் நிறுத்தின.

ஜூன் 14, 2007 - மேற்குக் கரையில் இருக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு விசுவாசமான ஃபத்தா படைகளை வீழ்த்தி காசாவை ஹமாஸ் கைப்பற்றியது.

டிசம்பர் 27, 2008 - தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனர்கள் ராக்கெட்டுகள் வீசியதை அடுத்து, காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. 22 நாள் நடந்த தாக்குதலில் சுமார் 1,400 பாலஸ்தீனியர்கள் மற்றும் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

நவம்பர் 14, 2012 - ஹமாஸின் ராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் கொலை செய்தது.

ஜூலை-ஆகஸ்ட் 2014 - மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்தி ஹமாஸ் கொலை செய்தது. இதைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் நடந்த போரில் 2,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் 73 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

மார்ச் 2018 - பாலஸ்தீனிய அகதிகளை தங்கள் நிலங்களில் மீண்டும் குடியேற அனுமதிக்க வேண்டும் என பாலஸ்தீனியர்கள் காசாவில் உள்ள இஸ்ரேல் எல்லையில் போராட்டம் நடத்தினர். பல மாதங்கள் நடந்த போராட்டத்தில் 170க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியது.

மே 2021 - ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.

ஆகஸ்ட் 2022 - மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தளபதி தய்சீர் அல்-ஜபரியை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த மோதலில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர்.

ஜனவரி 2023 - இஸ்ரேலிய படைகள் ஒரு அகதிகள் முகாமைத் தாக்கி ஏழு பாலஸ்தீன ஆதரவு தாக்குதல்தாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்களையும் கொன்றதை அடுத்து இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இஸ்ரேலை நோக்கி இரண்டு ராக்கெட்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் பதில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

அக்டோபர் 2023 - தற்போது எல்லை தாண்டிச் சென்று மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியுள்ளது. தனது போராளிகளும் இந்தத் தாக்குதலில் இணைந்துள்ளதாக இசுலாமிய ஜிஹாத் அமைப்பு கூறியுள்ளது.


20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 Empty Re: 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல்

Post by சிவா Sun Oct 08, 2023 4:29 am

பாலத்தீன தாக்குதலுக்கு இரான் ஆதரவு


இரானின் தலைவர் அலி கமேனியின் ஆலோசகர், இஸ்ரேல் மீதான பாலத்தீனியர்களின் தாக்குதலை ஆதரிப்பதாக எங்களுக்குச் செய்திகள் வந்துள்ளன.

"பாலத்தீன போராளிகளை நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று ரஹீம் சஃபாவி கூறியுள்ளதாக ISNA செய்தி நிறுவனம் கூறுகிறது.

"பாலத்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை நாங்கள் பாலத்தீன போராளிகளுக்கு துணை நிற்போம்" என்று அவர் கூறினார்.

ஹமாஸ் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா ஆதரவு


லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, காஸாவின் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், "பாலத்தீன ஆயுதக் குழுவினரின் தலைமையுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும்" கூறியுள்ளது.

அது ஹமாஸ் தாக்குதல்களை "இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு தீர்க்கமான பதில் மற்றும் இஸ்ரேலுடன் இயல்புநிலைக்கு வர விரும்புவோருக்கான ஒரு செய்தி" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆயுதக் குழு இஸ்ரேலின் முக்கிய எதிர்ப்பாளராகத் திகழ்ந்து வருவதாகவும், 2006 இல் அந்நாட்டுடன் போருக்குச் சென்றது என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானின் இராணுவ மற்றும் நிதி உதவியை நம்பிச் செயல்பட்டு வருகிறது.


20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 Empty Re: 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல்

Post by சிவா Sun Oct 08, 2023 4:29 am

காசா மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்


"அத்துடன், இது ஒரு போர், இந்த போரில் நாங்கள் வெல்வோம். எங்கள் எதிரிகள் அவர்கள் இதுவரை அறிந்திராத பெரும் விலையை கொடுக்க நேரிடும்" என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, காசா பகுதியில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன், பல ஆயிரம் ரிசர்வ் படை வீரர்களையும் இஸ்ரேல் ராணுவம் பணிக்கு அழைத்துள்ளது.

இஸ்ரேல் விமானப்படையின் 12 போர் விமானங்கள் காசா பகுதியில் பறந்து குண்டு மழை பொழிந்தன. இதனால், காசா பகுதியில் பல கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்றன. ஹமாஸ் இயக்கத்தின் 17 ராணுவ முகாம்களையும், 4 மண்டல தலைமை அலுவலகங்களையும் குறிவைத்து குண்டுவீசியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

அதேவேளையில், காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் 161 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் ஆயிரம் பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு


இஸ்ரேல் மீது பாலத்தீன ஆயுதக் குழுவினர் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"இஸ்ரேல் குடிமக்களுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எந்த வித காரணமும் இன்றி நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது" என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறினார்.

"பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. நாங்கள் இஸ்ரேல் அரசு மற்றும் மக்களுடன் உறுதியாக நிற்கிறோம், இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்காக எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்."

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாச்சி ஹானெக்பியுடன் பேசியதாகவும், "எங்கள் இஸ்ரேலிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் உள்ளது" என்றும் அவர் கூறினார்.


20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 Empty Re: 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல்

Post by சிவா Sun Oct 08, 2023 4:43 am

பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் கண்டனம்


இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் வீசி நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்த நிலையில், துயரமான இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து உலக தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:

பிரதமர் மோடி


இஸ்ரேலில் பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்


இஸ்ரேல் மக்கள் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தன்னை தற்காத்து கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். இஸ்ரேலில் வசிக்கும் பிரிட்டன் நாட்டவர்கள், விதிமுறையை பின்பற்ற வேண்டும்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்


இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன்.

ஜெர்மன் சான்சிலர் ஓலப் ஸ்கால்ஜ்


இஸ்ரேலில் இருந்து துயர செய்தி வந்துள்ளது. காசாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் மற்றும் பதற்றம் அதிகரித்தது கவலையளிக்கிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு ஜெர்மனி கண்டனம் தெரிவிக்கிறது. இஸ்ரேலுக்கு துணை நிற்போம்.

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்


ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவுடன் பேசினேன். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தன்னை தற்காத்து கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட இஸ்ரேலுக்கு முழு உரிமை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

ஈரான் கருத்து


அதே நேரத்தில், தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினரை ஈரான் பாராட்டி உள்ளது. தாக்குதல் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது.

எகிப்து


எகிப்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் , இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பதற்றம் அதகரிப்பதால், மோசமான பின்விளைவுகள் ஏற்படும். அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதுடன், சாமானிய மக்கள் பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளது.

துருக்கி


துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் கூறுகையில், அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அத்துமீறும் நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது என்றார்.

ரஷ்யா


இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரிக்காத வகையில், இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் அரபு நாடுகளுடன் தொடர்பில் உள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.



20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 Empty Re: 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல்

Post by சிவா Tue Oct 10, 2023 11:19 pm

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் நிதியமைச்சர் உயிரிழப்பு


ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சர் ஜவாத் அபு ஷமாலா விமான தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (அக்.7) இஸ்ரேல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். வான் வழியிலும் தரைமார்க்கமாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதுவரை 900 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீனம் மீது போர் அறிவித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காஸா எல்லையில் தெற்குப் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

#காஸா பகுதியில் தாக்குதல் நடத்தியவாறு முன்னேறும் இஸ்ரேல் படையினர், ஹமாஸ் அமைப்பின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றனர்.

#ஹமாஸ் படையை முற்றிலும் அழிக்காமல் போர் முடிவுக்கு வராது என பிரதமர் பிஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் #இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சர் ஜவாத் அபு ஷமாலா உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த ஜவாத் அபு ஷமாலா, காஸா பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் ஹமாஸ் அமைப்புக்காக நிதி திரட்டிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் - Page 2 Empty Re: 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum