ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Empty உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Thu Oct 05, 2023 3:34 pm

First topic message reminder :

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 1pscShG

13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

அகமதாபாத் (நரேந்திர மோடி ஸ்டேடியம்), பெங்களூர் (எம். சின்னசாமி ஸ்டேடியம்), சென்னை (எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்), டெல்லி (அருண் ஜெட்லி ஸ்டேடியம்), தரம்ஷாலா (எச்.பி.சி.ஏ. ஸ்டேடியம்), ஹைதராபாத் (ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்), கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ்), லக்னோ (பிஆர்எஸ்ஏபிவி ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம்), மும்பை (வான்கடே ஸ்டேடியம்), புனே (மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்) உள்ளிட்ட 10 மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.

மும்பையின் வான்கடே மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 2 அரையிறுதிப் போட்டிகளும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டியும் அரங்கேறுகிறது.

​​ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 அட்டவணையின் விவரங்களை இங்கு ஆராயலாம்.

போட்டி கடந்த  2019 பதிப்பைப் பிரதிபலிக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளுக்கு மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றுடன் முழு அட்டவணை இங்கு வழங்கப்பட்டுள்ளது.

1 இங்கிலாந்து vs நியூசிலாந்து  5- அக்டோபர்  பிற்பகல் 2 மணி  அகமதாபாத்

2 பாகிஸ்தான் vs நெதர்லாந்து  6-அக்டோபர் பிற்பகல்  2 மணி ஐதராபாத்

3 வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான்  7-அக்டோபர் காலை  10:30 மணி   தர்மசாலா

4 தென் ஆப்பிரிக்கா vs இலங்கை  7-அக்டோபர் பிற்பகல்  2 மணி டெல்லி

5 இந்தியா vs ஆஸ்திரேலியா  8-அக்டோபர் பிற்பகல்  2 மணி சென்னை

6 நியூசிலாந்து vs நெதர்லாந்து  9-அக்டோபர் பிற்பகல்  2 மணி ஐதராபாத்

7 இங்கிலாந்து vs வங்கதேசம்  10-அக்டோபர் காலை  10:30 மணி தர்மசாலா

8 பாகிஸ்தான் vs இலங்கை  10-அக்டோபர் பிற்பகல்  2 மணி ஐதராபாத்

9 இந்தியா vs ஆப்கானிஸ்தான்   11-அக்டோபர் பிற்பகல்  2 மணி டெல்லி

10 ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா  12-அக்டோபர் பிற்பகல்  2 மணி லக்னோ

11 நியூசிலாந்து vs வங்கதேசம்  13-அக்டோபர் பிற்பகல்  2 மணி சென்னை

12 இந்தியா vs பாகிஸ்தான்  14-அக்டோபர் பிற்பகல்  2 மணி அகமதாபாத்

13 இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்  15-அக்டோபர் பிற்பகல்  2 மணி டெல்லி

14 ஆஸ்திரேலியா vs இலங்கை  16-அக்டோபர் பிற்பகல்  2 மணி லக்னோ

15 தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து  17-அக்டோபர் பிற்பகல்  2 மணி தர்மசாலா

16 நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்  18-அக்டோபர் பிற்பகல்  2 மணி சென்னை

17 இந்தியா vs வங்கதேசம்  19-அக்டோபர் பிற்பகல்  2 மணி புனே

18 ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்  20-அக்டோபர் பிற்பகல்  2 மணி பெங்களூரு

19 நெதர்லாந்து vs இலங்கை  21-அக்டோபர் காலை  10:30 மணி லக்னோ

20 இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா  21-அக்டோபர் பிற்பகல்  2 மணி மும்பை

21 இந்தியா vs நியூசிலாந்து  22-அக்டோபர் பிற்பகல்  2 மணி தர்மசாலா

22 பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்  23-அக்டோபர்   பிற்பகல்  2 மணி சென்னை

23 தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம்  24-அக்டோபர் பிற்பகல்  2 மணி மும்பை

24 ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து  25-அக்டோபர் பிற்பகல்  2 மணி டெல்லி

25 இங்கிலாந்து vs இலங்கை  26-அக்டோபர் பிற்பகல்  2 மணி பெங்களூரு

26 பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா  27-அக்டோபர் பிற்பகல்  2 மணி சென்னை

27 ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து  28-அக்டோபர் காலை  10:30 மணி தர்மசாலா

28 நெதர்லாந்து vs வங்கதேசம்   28-அக்டோபர் பிற்பகல்  2 மணி கொல்கத்தா

29 இந்தியா vs இங்கிலாந்து  29-அக்டோபர்   பிற்பகல்  2 மணி லக்னோ

30 ஆப்கானிஸ்தான் vs இலங்கை  30-அக்டோபர்   பிற்பகல்  2 மணி புனே

31 பாகிஸ்தான் vs வங்கதேசம்  31-அக்டோபர் பிற்பகல்  2 மணி கொல்கத்தா

32 நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா  1-நவம்பர் பிற்பகல்  2 மணி புனே

33 இந்தியா vs இலங்கை  2-நவம்பர் பிற்பகல்  2 மணி மும்பை

34 நெதர்லாந்து vs ஆப்கானிஸ்தான்  3-நவம்பர்   பிற்பகல்  2 மணி லக்னோ

35 நியூசிலாந்து vs பாகிஸ்தான்  4-நவம்பர்   காலை  10:30 மணி பெங்களூரு

36 இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா  4-நவம்பர் பிற்பகல்  2 மணி அகமதாபாத்

37 இந்தியா vs தென் ஆப்பிரிக்கா  5-நவம்பர் பிற்பகல்  2 மணி கொல்கத்தா

38 வங்கதேசம் vs இலங்கை  6-நவம்பர் பிற்பகல்  2 மணி டெல்லி

39 ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான்  7-நவம்பர் பிற்பகல்  2 மணி மும்பை

40 இங்கிலாந்து vs நெதர்லாந்து  8-நவம்பர் பிற்பகல்  2 மணி புனே

41 நியூசிலாந்து vs இலங்கை  9-நவம்பர் பிற்பகல்  2 மணி பெங்களூரு

42 தென் ஆப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான்   0-நவம்பர்   பிற்பகல்  2 மணி அகமதாபாத்

43 ஆஸ்திரேலியா vs வங்கதேசம்  11-நவம்பர்   காலை  10:30 மணி புனே

44 இங்கிலாந்து vs பாகிஸ்தான்  11-நவம்பர் பிற்பகல்  2 மணி கொல்கத்தா

45 இந்தியா vs நெதர்லாந்து  12-நவம்பர் பிற்பகல்  2 மணி பெங்களூரு

முதலாவது அரையிறுதி  டி.பி.சி vs டி.பி.சி  15-நவம்பர்   பிற்பகல்  2 மணி மும்பை

2வது அரையிறுதி  டி.பி.சி vs டி.பி.சி  16-நவம்பர்   பிற்பகல்  2 மணி கொல்கத்தா

இறுதிப்போட்டி  டி.பி.சி vs டி.பி.சி  9-நவம்பர் பிற்பகல்  2 மணி அகமதாபாத்


ICC Cricket world cup 2023 Live Cricket Streaming


https://mc6.crichd.com

https://me.webcric.com/watch-world-cup-live-cricket-streaming-1.htm


Last edited by சிவா on Thu Oct 05, 2023 5:46 pm; edited 1 time in total


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Tue Oct 10, 2023 8:32 pm

டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தி அறிமுகப் போட்டியிலேயே அசத்திய இங்கிலாந்து வீரர்


உலகக் கோப்பையில் களமிறங்கிய அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்ளே அசத்தியுள்ளார்.

உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான இன்றையப் போட்டியில் இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், தனது வெற்றிக் கணக்கையும் தொடங்கியது இங்கிலாந்து. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் அறிமுக வீரராக களமிறங்கிய ரீஸ் டாப்ளே அபாரமாக பந்துவீசி வங்கதேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார்.

இதனால், இங்கிலாந்து அணிக்கு வெற்றி என்பது மேலும் எளிமையானது. வங்கதேசத்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான தன்சித் ஹாசன் (1 ரன்), நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (0 ரன்) மற்றும் ஷகிப் அல் ஹசன் (1 ரன்) ஆட்டமிழக்கச் செய்து பெவிலியனுக்கு அனுப்பினார்.

சிறப்பாக பந்துவீசிய ரீஸ் டாப்ளே 10 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில் அசத்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள்


ஸ்டீவன் ஃபின் - 5/71 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2015
ஜேம்ஸ் ஆண்டர்சன் - 4/25 - நெதர்லாந்துக்கு எதிராக, 2003
ஆலன் முல்லாளி - 4/37 - இலங்கைக்கு எதிராக, 1999
ரீஸ் டாப்ளே - 4/43 - வங்கதேசத்துக்கு எதிராக, 2023
ஜேம்ஸ் டிரெட்வெல் - 4/48 - மே.இ.தீவுகளுக்கு எதிராக, 2011.


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Tue Oct 10, 2023 11:21 pm

இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்


13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் ஒரு லீக் ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் பெரேரா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதையடுத்து நிசாங்காவுடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அதிரடியாக ஆடிய நிசாங்கா 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து மெண்டிஸ் உடன் சமரவிக்ரமா ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெண்டிஸ் 77பந்தில் 122 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய அசலங்கா 1 ரன், டி சில்வா 25 ரன், தசுன் ஷனகா 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சமரவிக்ரமா சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது.

இலங்கை அணி தரப்பில் குசல் மெண்டிஸ் 122 ரன்னும், சதீரா சமரவிக்ரமா 108 ரன்னும் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் 48,2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பாற்றியது.


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Wed Oct 11, 2023 9:19 pm

ஒரே போட்டியில் 2 புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா


13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் ஹஷ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஜாய் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.ஹஷ்மதுல்லா ஷஹிதி 80 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்ஜாய் 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களை எடுத்தது.இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது

தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். தொடக்கம் முதல் ரோகித் அதிரடியாக ஆடினார். இஷான் கிஷன் மறுமுனையில் நிலைத்து ஆடினார் ,

ரோகித் சர்மா பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அரைசதம் அடித்தார்.அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் இதன்மூலம் உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் ஆனார் . பின்னர் ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

மேலும் இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் கெய்ல் 2வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த ரோஹித் சர்மா – ( 556 சிக்ஸர்கள்) முதல் இடத்திலும் , கிறிஸ் கெய்ல் (553 சிக்ஸர்கள்) 2வது இடத்திலும் , அப்ரிடி (476 சிக்ஸர்கள் ) 3வது இடத்திலும் உள்ளனர்.


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Wed Oct 11, 2023 9:27 pm


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 0CPdteE

பவுண்டரி மழை பொழிந்த ரோகித்; ஆப்கானை எளிதாக வீழ்த்தி இந்தியா அபார வெற்றி


டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்; இந்தியா பவுலிங்!

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆப்கானிஸ்தான் பேட்டிங்


இதனையடுத்து, அந்த அணியின் தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் சத்ரான் பேட்டிங் செய்ய களமிறங்கினார்கள். இந்த ஜோடியில் 4 பவுண்டரிகளை விரட்டிய இப்ராஹிம் சத்ரான் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

28 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸரை பறக்கவிட்ட மற்றொரு தொடக்க வீரரான குர்பாஸ் ஹர்திக் பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால், பவுண்டரி கோட்டிற்கு அருகில் இருந்து பந்தை ஜம் அடித்து கேட்ச் பிடித்த தாக்கூர், ஒரு காலை கோட்டிற்கு வெளியேயும் மற்றொன்றை உள்ளேயும் வைத்து இருந்தார். எனினும், பந்தை மேலே தூக்கி போட்ட பிறகு, பவுண்டரி கோட்டிற்கு வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்து சூப்பரான கேட்சை எடுத்தார். டி.வி அம்பயர் அவுட்டை உறுதிப்படுத்த குர்பாஸ் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் வந்த ரஹ்மத் ஷா 3 பவுண்டரிகளை விரட்டி 16 ரன்களுக்கு அவுட் ஆனார். களத்தில் இருந்த கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி - அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த ஜோடியில் ஒமர்சாய் 62 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஷாஹிதி உடன் முகமது நபி ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். ஆப்கானிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக ஆடிய ஷாஹிதி அரை சதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடி ரன் சேர்க்க முயன்றவர் 80 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நஜிபுல்லா 2 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக ரஷித் கான் களமிறங்கினார்.

சிறிதுநேரம் தாக்குப்பிடித்த நபி 19 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக முஜீப் களமிறங்கினார். ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்த ரஷித் கான் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நவீன் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முஜீப் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். அடுத்ததாக, பாண்டியா 2 விக்கெட்களையும், ஷர்துல் மற்றும் குல்தீப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா பேட்டிங்


இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ரோகித் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இஷான் கிஷன் மறுமுனையில் கம்பெனி கொடுக்க, ரோகித் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். ஆப்கான் பவுலர்களை வெளுத்து வாங்கிய ரோகித் 29 பந்துகளில் அரை சதம் விளாசினார். இந்தியா 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் எடுத்தது.

மறுமுனையில் ஆடிவந்த இஷான் கிஷனும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். சிறப்பாக ஆடி வந்த ரோகித் சதம் விளாசினார். ரோகித் 63 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம் உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்தியர் ஆனார் ரோகித்.

சிறிது நேரத்திலே இந்தியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. இஷான் கிஷன் 47 ரன்களில் அவுட் ஆனார். அவர் ரஷித் கான் பந்தில் இப்ராகிடம் கேட்ச் கொடுத்தார். இதனையடுத்து கோலி களமிறங்கினார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

கோலி ஒரு முனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ஆடிய ரோகித் அதிரடியை தொடர்ந்தார். இந்தியா 205 ரன்கள் எடுத்திருந்தப்போது ரோகித் அவுட் ஆனார். அவரை ரஷித் கான் போல்டாக்கினார். ரோகித் 84 பந்துகளில் 131 ரன்கள் விளாசினார். இதில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும்.

அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். சிறப்பாக ஆடிவந்த கோலி அரைசதம் அடித்தார். ஸ்ரேயாஸ் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற்றது. கோலி 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் மட்டும் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Thu Oct 19, 2023 11:47 pm


வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.


உலகக் கோப்பையின் இன்றயைப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷர்துல் தாக்குர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்த இணை அதிரடியாக விளையாடியது. இருப்பினும், ரோஹித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின், விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினார். ஷுப்மன் கில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன்பின், ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் ஆட்டமிழக்க கே.எல்.ராகுல், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய விராட் கோலி சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தார். இந்த சிக்ஸருடன் விராட் கோலி தனது 48-வது சதத்தை பூர்த்தி செய்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இறுதியில், 41.3 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தனது 4-வது வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by Anthony raj Fri Oct 20, 2023 12:11 am

சிறப்பாக விளையாடிய விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by ayyasamy ram Mon Oct 30, 2023 8:43 am

100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது இந்தியா..
-
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி
50 ஓவர்கள் முடிவில் 229 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து பேட்டிங் செய்த
இங்கிலாந்து அணியால் 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 100 ரன்கள்
வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும்
வெற்றி பெற்றுள்ள இந்திய அணி பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு
முன்னேறியுள்ளது.

தொடர் வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள இந்திய அணியின் ரசிகர்கள்
இந்த முறை உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக
இருப்பதாக கூறியுள்ளனர்.

இங்கிலாந்தை வென்றதன் மூலம் இதுவரை நடந்த 6 போட்டிகளிலும் வெற்றி
பெற்று 12 புள்ளிகளுடன் இந்தியா முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள்
நுழைந்துள்ளது. 2011, 2015, 2019ஐ தொடர்ந்து 2023லும் 4வது முறையாக
அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து
பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை
இழந்து 229 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா
87 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர்.

230 ரன்கள் என்ற எட்டக்கூடிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து
அணியால், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. 5 ஆவது ஓவரில்
இருந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன.
34.5 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணியால் அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3
விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி
பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியனான
இங்கிலாந்து அணி கடைசி இடத்திற்கு சென்றிருப்பது கவனிக்கத்தக்கது.
-
-நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82708
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by ayyasamy ram Sun Nov 12, 2023 7:52 am

மும்பையில் முதல் அரையிறுதி இந்தியா – நியூசிலாந்து பலப்பரீட்சை
-
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 59-1

கொல்கத்தா: ஐசிசி உலக கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுவது உறுதியாகி உள்ளது.ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்துவதுடன் மொத்த ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்தையும் முந்தினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன் குவித்தது. மலான் 31, பேர்ஸ்டோ 59 ரன் (61 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜோ ரூட் 60 ரன் (72 பந்து, 4 பவுண்டரி), ஸ்டோக்ஸ் 84 ரன் (76 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் பட்லர் 27, ஹாரி புரூக் 30, வில்லி 15 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ராவுப் 3, ஹாகீன் அப்ரிடி, முகமது வாசிம் தலா 2, இப்திகார் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான், 6.4 ஓவரிலேயே 338 ரன் என்ற இலக்கை எட்டினால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கனவிலும் சாதியமில்லாத ஒரு சவாலை சந்தித்தது. அந்த அணி 6.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன் மட்டுமே எடுத்ததால், முதல் அரையிறுதியில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியாவும் 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோதுவது உறுதியானது.

பரபரப்பான இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நவ. 15ல் நடைபெற உள்ளது.

நவ.16ல் கொல்கத்தாவில் நடக்க உள்ள 2வது அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலியா மோத உள்ளன.

சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நவ. 19ல் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும்.
-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82708
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by ayyasamy ram Mon Nov 13, 2023 6:17 am


- நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

-
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 0-35
-
உலகக்கோப்பையின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை
எட்டியுள்ள நிலையில் இன்று இந்தியா- நெதர்லாந்து அணிகள்
மோதின.

இந்த போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது
இந்திய அணி, முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்
முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்களை குவித்தது.

பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில்
250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி.

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் 128,
கே.எல்.ராகுல் 102, ரோஹித் சர்மா 61, விராட் கோலி 51,
சுப்மன் கில் 51 ரன் எடுத்தனர்.
-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82708
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by ayyasamy ram Mon Nov 13, 2023 6:33 am

''ஃபுல் பார்மில் இந்தியா''.. .உலகக் கோப்பை வரலாற்றின் கே.எல்.ராகுல் புதிய சாதனை
-


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 1694505249-8975
-
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று
வரும் நிலையில், பெங்களூரில் இன்றைய போட்டியில் இந்தியா
மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்
தேர்வு செய்தது. இதில், ரோஹித் சர்மா 61 ரன்னும், கில் 51 ரன்னும்,
விராட் கோலி 51 ரன்னும் அடித்தனர், ஸ்ரேயாஷ் அய்யர்
94 பந்துகளுக்கு 128 ரன்கள் அடித்து அசத்தினர். கே.எல்.ராகுல்
64 பந்துகளில் 102 ரன்கள் அடித்தார்.

எனவே 50 ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் எடுத்தனர்.

இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்
முறையாக முதல் 5 பேட்டர்கள் அரைசதம் அடித்து புதிய சாதனை
படைத்துள்ளனர்.

அதேபோல் மற்றொரு சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
அதாவது, இந்திய வீரர் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் சதம் விளாசி,
உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடுத்த வீரர் என்ற
சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னடதாக கடந்த 2007 ஆம் ஆண்டு 81 பந்துகளில் சதம்
அடித்திருந்தார். அதேபோல் கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு
எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 63 ரன்னில் சதம் அடித்தது
குறிப்பிடத்தக்கது.
-
-வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82708
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 3 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் - பங்கேற்கும் 10 அணிகள் எவை தெரியுமா?
» உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு!
» உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum