ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Empty உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Thu Oct 05, 2023 3:34 pm

First topic message reminder :

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 1pscShG

13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

அகமதாபாத் (நரேந்திர மோடி ஸ்டேடியம்), பெங்களூர் (எம். சின்னசாமி ஸ்டேடியம்), சென்னை (எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்), டெல்லி (அருண் ஜெட்லி ஸ்டேடியம்), தரம்ஷாலா (எச்.பி.சி.ஏ. ஸ்டேடியம்), ஹைதராபாத் (ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்), கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ்), லக்னோ (பிஆர்எஸ்ஏபிவி ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம்), மும்பை (வான்கடே ஸ்டேடியம்), புனே (மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்) உள்ளிட்ட 10 மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.

மும்பையின் வான்கடே மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 2 அரையிறுதிப் போட்டிகளும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டியும் அரங்கேறுகிறது.

​​ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 அட்டவணையின் விவரங்களை இங்கு ஆராயலாம்.

போட்டி கடந்த  2019 பதிப்பைப் பிரதிபலிக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளுக்கு மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றுடன் முழு அட்டவணை இங்கு வழங்கப்பட்டுள்ளது.

1 இங்கிலாந்து vs நியூசிலாந்து  5- அக்டோபர்  பிற்பகல் 2 மணி  அகமதாபாத்

2 பாகிஸ்தான் vs நெதர்லாந்து  6-அக்டோபர் பிற்பகல்  2 மணி ஐதராபாத்

3 வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான்  7-அக்டோபர் காலை  10:30 மணி   தர்மசாலா

4 தென் ஆப்பிரிக்கா vs இலங்கை  7-அக்டோபர் பிற்பகல்  2 மணி டெல்லி

5 இந்தியா vs ஆஸ்திரேலியா  8-அக்டோபர் பிற்பகல்  2 மணி சென்னை

6 நியூசிலாந்து vs நெதர்லாந்து  9-அக்டோபர் பிற்பகல்  2 மணி ஐதராபாத்

7 இங்கிலாந்து vs வங்கதேசம்  10-அக்டோபர் காலை  10:30 மணி தர்மசாலா

8 பாகிஸ்தான் vs இலங்கை  10-அக்டோபர் பிற்பகல்  2 மணி ஐதராபாத்

9 இந்தியா vs ஆப்கானிஸ்தான்   11-அக்டோபர் பிற்பகல்  2 மணி டெல்லி

10 ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா  12-அக்டோபர் பிற்பகல்  2 மணி லக்னோ

11 நியூசிலாந்து vs வங்கதேசம்  13-அக்டோபர் பிற்பகல்  2 மணி சென்னை

12 இந்தியா vs பாகிஸ்தான்  14-அக்டோபர் பிற்பகல்  2 மணி அகமதாபாத்

13 இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்  15-அக்டோபர் பிற்பகல்  2 மணி டெல்லி

14 ஆஸ்திரேலியா vs இலங்கை  16-அக்டோபர் பிற்பகல்  2 மணி லக்னோ

15 தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து  17-அக்டோபர் பிற்பகல்  2 மணி தர்மசாலா

16 நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்  18-அக்டோபர் பிற்பகல்  2 மணி சென்னை

17 இந்தியா vs வங்கதேசம்  19-அக்டோபர் பிற்பகல்  2 மணி புனே

18 ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்  20-அக்டோபர் பிற்பகல்  2 மணி பெங்களூரு

19 நெதர்லாந்து vs இலங்கை  21-அக்டோபர் காலை  10:30 மணி லக்னோ

20 இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா  21-அக்டோபர் பிற்பகல்  2 மணி மும்பை

21 இந்தியா vs நியூசிலாந்து  22-அக்டோபர் பிற்பகல்  2 மணி தர்மசாலா

22 பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்  23-அக்டோபர்   பிற்பகல்  2 மணி சென்னை

23 தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம்  24-அக்டோபர் பிற்பகல்  2 மணி மும்பை

24 ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து  25-அக்டோபர் பிற்பகல்  2 மணி டெல்லி

25 இங்கிலாந்து vs இலங்கை  26-அக்டோபர் பிற்பகல்  2 மணி பெங்களூரு

26 பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா  27-அக்டோபர் பிற்பகல்  2 மணி சென்னை

27 ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து  28-அக்டோபர் காலை  10:30 மணி தர்மசாலா

28 நெதர்லாந்து vs வங்கதேசம்   28-அக்டோபர் பிற்பகல்  2 மணி கொல்கத்தா

29 இந்தியா vs இங்கிலாந்து  29-அக்டோபர்   பிற்பகல்  2 மணி லக்னோ

30 ஆப்கானிஸ்தான் vs இலங்கை  30-அக்டோபர்   பிற்பகல்  2 மணி புனே

31 பாகிஸ்தான் vs வங்கதேசம்  31-அக்டோபர் பிற்பகல்  2 மணி கொல்கத்தா

32 நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா  1-நவம்பர் பிற்பகல்  2 மணி புனே

33 இந்தியா vs இலங்கை  2-நவம்பர் பிற்பகல்  2 மணி மும்பை

34 நெதர்லாந்து vs ஆப்கானிஸ்தான்  3-நவம்பர்   பிற்பகல்  2 மணி லக்னோ

35 நியூசிலாந்து vs பாகிஸ்தான்  4-நவம்பர்   காலை  10:30 மணி பெங்களூரு

36 இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா  4-நவம்பர் பிற்பகல்  2 மணி அகமதாபாத்

37 இந்தியா vs தென் ஆப்பிரிக்கா  5-நவம்பர் பிற்பகல்  2 மணி கொல்கத்தா

38 வங்கதேசம் vs இலங்கை  6-நவம்பர் பிற்பகல்  2 மணி டெல்லி

39 ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான்  7-நவம்பர் பிற்பகல்  2 மணி மும்பை

40 இங்கிலாந்து vs நெதர்லாந்து  8-நவம்பர் பிற்பகல்  2 மணி புனே

41 நியூசிலாந்து vs இலங்கை  9-நவம்பர் பிற்பகல்  2 மணி பெங்களூரு

42 தென் ஆப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான்   0-நவம்பர்   பிற்பகல்  2 மணி அகமதாபாத்

43 ஆஸ்திரேலியா vs வங்கதேசம்  11-நவம்பர்   காலை  10:30 மணி புனே

44 இங்கிலாந்து vs பாகிஸ்தான்  11-நவம்பர் பிற்பகல்  2 மணி கொல்கத்தா

45 இந்தியா vs நெதர்லாந்து  12-நவம்பர் பிற்பகல்  2 மணி பெங்களூரு

முதலாவது அரையிறுதி  டி.பி.சி vs டி.பி.சி  15-நவம்பர்   பிற்பகல்  2 மணி மும்பை

2வது அரையிறுதி  டி.பி.சி vs டி.பி.சி  16-நவம்பர்   பிற்பகல்  2 மணி கொல்கத்தா

இறுதிப்போட்டி  டி.பி.சி vs டி.பி.சி  9-நவம்பர் பிற்பகல்  2 மணி அகமதாபாத்


ICC Cricket world cup 2023 Live Cricket Streaming


https://mc6.crichd.com

https://me.webcric.com/watch-world-cup-live-cricket-streaming-1.htm


Last edited by சிவா on Thu Oct 05, 2023 5:46 pm; edited 1 time in total


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Fri Oct 06, 2023 9:46 pm

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Rachin-ravindra-1

ரச்சின் ரவீந்திரா


நியூசிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் களமிறங்கிய தனது முதல் போட்டியிலேயே ரச்சின் ரவீந்திரா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். உலகக் கோப்பையில் அறிமுகப் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அதிவேகமாக சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதே அதற்கு காரணம். இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 82 பந்துகளில் அவர் சதம் விளாசினார்.

யார் இந்த ரச்சின் ரவீந்திரா?


ரச்சின் ரவீந்திரா கடந்த 1999 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி வெல்லிங்டனில் பிறந்தார். இவரது தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி, பெங்களூருவில் மென்பொருள் துறை வல்லுநராக பணியாற்றியவர். ரவீந்திராவின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி அவரது இளமைக் காலத்தில் பெங்களூருவில் ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ரச்சின் ரவீந்திராவுக்கு சிறுவயது முதல் அவரது தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தியே பயிற்சியாளராக இருந்துள்ளார்.

ரச்சின் எனப் பெயர் வர காரணம்


கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவரான ரவி கிருஷ்ணமூர்த்தி அவரது சொந்த ஊரான பெங்களூருவில் கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிடின் மீது உள்ள அன்பினால் தனது மகனுக்கு ராகுல் டிராவிட்டில் இருந்து ’ர’ வையும் சச்சின் டெண்டுல்கரின் பெயரிலிருந்து ’ச்சின்’ இரண்டையும் சேர்த்து ரச்சின் எனப் பெயரிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா


கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியுடன் இணைந்தார் ரச்சின் ரவீந்திரா. 2016 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது அவருக்கு வயது வெறும் 16 ஆகும். 2018 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரிலும் ரவீந்திரா விளையாடினார். அதே ஆண்டில் நியூசிலாந்து அணியின் வளர்ந்து வரும் வீரராக ரச்சின் ரவீந்திராவை ஐசிசி அறிவித்தது. 2018 ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும், வங்கதேசத்துக்கு எதிராக டி20 போட்டியிலும் அறிமுகமானார். இந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியிலும் அவர் இடம் பிடித்தார். அணியில் இடம்பிடித்த அவர் உலகக் கோப்பையில் தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய முதல் சதமாகும்.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை


டெஸ்ட் - 3 போட்டிகள் (73 ரன்கள், 3 விக்கெட்டுகள், சிறந்த ஸ்கோர் 18)
ஒருநாள் - 13 போட்டிகள் (312 ரன்கள், 13 விக்கெட்டுகள், சிறந்த ஸ்கோர் 123*)
டி20 - 18 போட்டிகள் (145 ரன்கள், 11 விக்கெட்டுகள், சிறந்த ஸ்கோர் 26)

வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ரச்சின்


நியூசிலாந்தின் முக்கிய வீரர்களான கேன் வில்லியன்சன், டிம் சௌதி மற்றும் ஃபெர்க்யூசன் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை. முக்கிய வீரர்கள் இல்லாததால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்க தயாராக இருக்குமாறு இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட ரச்சின் ரவீந்திரா உலகக் கோப்பையின் அறிமுகப் போட்டியிலேயே பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

வளர்ந்து வரும் இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவுக்கு இந்த உலகக் கோப்பை தொடர் ஒரு மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அறிமுகப் போட்டியில் அசத்திய ரச்சின் இனிவரும் போட்டிகளில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Fri Oct 06, 2023 9:51 pm

நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்


உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் விளையாடின. ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் தலா 68 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி களம் கண்டது. அந்த அணியில் விக்ரமஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓதௌத் களமிறங்கினர். மேக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய காலின் அக்கர்மேன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், நிதானமாக விளையாடிய விக்ரமஜித் சிங் அரைசதம் எடுத்தார். அவர் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து வீரர்களில் பாஸ் டி லீட் தவிர யாரும் பெரிய அளவில் ஸ்கோர் எடுக்கவில்லை. சிறப்பாக விளையாடிய பாஸ்-டி-லீட் 68 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் 41 ஓவர்களில் 205 ரன்களுக்கு நெதர்லாந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பைத் தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்கியது.

பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹாரிஸ் ரௌஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹாசன் அலி 2 விக்கெட்டுகளையும், ஷகின் அஃப்ரிடி, இப்திகார் அகமது, முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Sat Oct 07, 2023 12:44 am

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 VAZgJC0


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by T.N.Balasubramanian Sat Oct 07, 2023 10:11 am

சிவா wrote:உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 VAZgJC0
[url=https://www.eegarai.net/t181240p10-2023#undefined]மேற்கோள் செய்த பதிவு: undefined[/url

இதற்கெல்லாம் BCCI இந்திய அரசிற்கு வரி ஏதாவது செலுத்துமா?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Sat Oct 07, 2023 11:28 am

T.N.Balasubramanian wrote:

இதற்கெல்லாம் BCCI இந்திய அரசிற்கு வரி ஏதாவது செலுத்துமா?


ஆமாம் செலுத்துகிறார்கள்...

அதிகமில்லை...

₹963 கோடிகள்

மட்டும்....


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Sat Oct 07, 2023 9:05 pm


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 28OUrLs

உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா!


ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் 428 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த வரலாற்றுச் சாதனையை தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் இமாலய இலக்கை குவித்ததன் மூலம் தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ள மேலும் சில சாதனைகளை பின்வருமாறு காணலாம்.

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த அணிகள் (ஒருநாள்)


428/5 - தென்னாப்பிரிக்கா - இலங்கைக்கு எதிராக, 2023
417/6 - ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2015
413/5 - இந்தியா - பெர்முடாவுக்கு எதிராக, 2007
411/4 - தென்னாப்பிரிக்கா - அயர்லாந்துக்கு எதிராக, 2015
408/5 - தென்னாப்பிரிக்கா - மே.இ.தீவுகளுக்கு எதிராக, 2015



உலகக் கோப்பையில் அதிக முறை 400 ரன்களைக் கடந்த அணிகள் (ஒருநாள்)


தென்னாப்பிரிக்கா - 3 முறை
இந்தியா - 1 முறை
ஆஸ்திரேலியா - 1 முறை



ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 400 ரன்களைக் கடந்த அணிகள்


தென்னாப்பிரிக்கா - 8 முறை
இந்தியா - 6 முறை
இங்கிலாந்து - 5 முறை
ஆஸ்திரேலியா - 2 முறை
இலங்கை - 2 முறை



ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் அதிகபட்ச ரன்கள்


439/2 - மே.இ.தீவுகளுக்கு எதிராக, 2015
438/9 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2006
438/4 - இந்தியாவுக்கு எதிராக, 2015
428/5 - இலங்கைக்கு எதிராக, 2023



தென்னாப்பிரிக்கா இலங்கைக்கு எதிராக இன்று குவித்துள்ள 428 ரன்கள் ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி இலங்கைக்கு எதிராக எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்திய அணி 414 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

தென்னாப்பிரிக்காவின் 428 ரன்கள் ஒருநாள் போட்டிகளில் இந்திய மண்ணில் ஒரு அணியால் எடுக்கப்படும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Sat Oct 07, 2023 9:07 pm



உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Kohli_-_conway.jpg?dpr=1

உலகக் கோப்பை: அறிமுகப் போட்டியில் சதம் விளாசி அசத்திய இளம், மூத்த வீரர்கள்


உலகக் கோப்பை வரலாற்றில் தங்களது அறிமுகப் போட்டியிலேயே இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் தனது உலகக் கோப்பை முதல் போட்டியில் அறிமுகமான நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அவர் இந்த சாதனையைப் படைத்தார்.

உலகக் கோப்பை வரலாற்றில் தங்களது அறிமுகப் போட்டியில் சதமடித்த இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்களின் விவரங்களை பின்வருமாறு காணலாம்.

அறிமுகப் போட்டியில் சதமடித்த இளம் வீரர்கள்


விராட் கோலி (இந்தியா) - வங்கதேசத்துக்கு எதிராக, 2011 - 22 வயது, 106 நாள்கள்
ஆண்டி ஃபிளவர் (ஜிம்பாப்வே) - இலங்கைக்கு எதிராக, 1992 - 23 வயது, 301 நாள்கள்
ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) - இங்கிலாந்துக்கு எதிராக, 2023 - 23 வயது, 321 நாள்கள்
நாதன் ஆஸ்ட்லே (நியூசிலாந்து) - இங்கிலாந்துக்கு எதிராக, 1996 - 24 வயது, 152 நாள்கள்
டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா) - ஜிம்பாப்வேக்கு எதிராக, 2015 - 25 வயது, 250 நாள்கள்



அறிமுகப் போட்டியில் சதமடித்த மூத்த வீரர்கள்


ஜெரெமி பிரே (அயர்லாந்து) - ஜிம்பாப்வேக்கு எதிராக, 2007 - 33 வயது, 105 நாள்கள்
டெவான் கான்வே (நியூசிலாந்து) - இங்கிலாந்துக்கு எதிராக, 2023 - 32 வயது, 89 நாள்கள்
டெனிஸ் அமிஸ் (இங்கிலாந்து) - இந்தியாவுக்கு எதிராக, 1975 - 32 வயது, 61 நாள்கள்
கிரைக் விஷார்ட் (ஜிம்பாப்வே) - நமீபியாவுக்கு எதிராக, 2003 - 29 வயது, 32 நாள்கள்.



உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Sun Oct 08, 2023 10:17 pm

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 HBjEh4j

அசைக்க முடியாத கே.எல்.ராகுல், விராட் கோலி பார்ட்னர்ஷிப்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!.


அழுத்தமான சூழலில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலின் அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின், ஹார்திக் பாண்டியா மற்றும் முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணிக்கு தொடக்கம் மிக மோசமானதாக அமைந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 0 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்த அழுத்தமான சூழலில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. சீரான இடைவெளிகளில் பவுண்டரிகள் வர இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 116 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின், ஹார்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். ஆட்டத்தினை அடுத்த கியருக்கு மாற்றி அதிரடியில் இறங்கினார் கே.எல்.ராகுல். மேக்ஸ்வெல் வீசிய 41-வது ஓவரில் தொடர்ச்சியாக சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்களைக் குறைத்தார்.

இறுதியில், 41.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி. ஹார்திக் பாண்டியா சிக்ஸர் விளாசி வெற்றி இலக்கை அடையச் செய்தார். கே.எல்.ராகுல் 97 ரன்களுடனும் , ஹார்திக் பாண்டியா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை தொடர் பயணத்தை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by T.N.Balasubramanian Mon Oct 09, 2023 12:19 pm

இந்திய ஆட்டத்தில் முதல் மூன்று தலைகள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்ததும்
தோல்வி நிச்சயமோ என்ற நிலையில் கோலியும் ராகுலும் நிலையாக ஆடி இந்திய வெற்றிக்கு
காரணமாயினர்.
ஜடேஜா எடுத்த 3 விக்கெட்களும் ஆஸ்தேரேலியா தோல்விக்கு காரணமானது


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by சிவா Tue Oct 10, 2023 8:30 pm

வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி


உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை இங்கிலாந்து வீழ்த்தியது.

உலகக் கோப்பைத் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மலன் 140 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் 82 ரன்கள் எடுத்தார்.

வங்கதேசம் தரப்பில் மஹேதி ஹாசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது மற்றும் ஷகிப் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்கியது. அந்த அணி 49 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் எடுத்தார். அவர் 66 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக முஸ்தபிக்குர் ரஹீம் 51 ரன்களும், தௌகித் ஹிரிடாய் 39 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.

இறுதியில் 48.2 ஓவர்களின் முடிவில் 227 ரன்களுக்கு வங்கதேசம் ஆட்டமிழந்தது. இதன்மூலம், இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்ளே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண், மார்க் வுட், அடில் ரஷீத் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து உலகக் கோப்பைத் தொடரில் தனது வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது.


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 - Page 2 Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் - பங்கேற்கும் 10 அணிகள் எவை தெரியுமா?
» உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு!
» உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum